ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அண்மையில் நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகள் சம்பந்தமாக அதுசரி என்ற வகையில் வீராப்பாகப் பேசி கடுமையான இனவாத கருத்துக்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படர விட்டு வந்தார் இந்த மவுலவி. இவர் வெளிநாடு சென்று நாடு திரும்புகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடம் மேலதிக விசாரணைகளை செய்யும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் குறித்த மவ்லவிக்கு நான்கு மனைவிகள் 28 பிள்ளைகள் இருப்பதை அறிந்த போலீசார் கதிகலங்கிப் போய் நிற்கின்றனர். எனினும் குறித்த மவ்லவிக்கு நிரந்தர தொழில் எதுவும் இல்லை எனவும் இவர் விமான நிலையத்தில் தவறவிட்டு இருந்த கைப்பையில் குண்டுவெடிப்புகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்கும் ஆவணங்கள் கடிதங்கள் இருந்ததாக தெரிவிக்க…
-
- 8 replies
- 1.8k views
-
-
"மேற்கு நாடுகளும் இந்தியாவும் இலங்கை அரசபடையினரிடம் பாடம் கற்கவேண்டும்' சிறிலங்காத் தமிழர் பிரச்சினையைப் பெரிதுபடுத்தியும், யுத்தத்தை நிறுத்தி உடனே பேச்சுவார்த்தை நடத்தும்படியும் சிறிலங்கா தமிழர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உடனடியாக அரசியல்தீர்வை ஏற்படுத்தும்படியும் இவ்வாறு பல்வேறுவகையிலும் அழுத்தங்களை வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்குக்கு இடைவிடாது கொடுத்துவருவதற்கு காரணம் அந்தநாடுகளால் சாதிக்க முடியாத பயங்கரவாத ஒழிப்பை வீரமிக்க சிறிலங்கா அரசபடையினர் வெற்றிகரமாகச் செய்து முடித்திருப்பதும் தொடர்ந்து பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்காக வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுமே ஆகும். இவ்வாறு பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சிறிலங்கா ஈட்டிய, ஈட…
-
- 0 replies
- 1.8k views
-
-
18.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை http://www.yarl.com/videoclips/view_video....1b52d302e718133
-
- 0 replies
- 1.8k views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிக்க எந்தவித தேவையும் இல்லை. அவசியமிருப்பின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் விக்னேஸ்வரனை நியமிப்பதில் தவறில்லை. எனினும் பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரின் தேவையுள்ளது என்று ஜே.வி.பி. தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருத்தமானவர். இது குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் வினவிய போதே அக்கட்சிகளின் தலைவர்கள் மேற்…
-
- 24 replies
- 1.8k views
-
-
இலங்கையின் குற்றங்கள் குறித்த அமெரிக்க அறிக்கை அடுத்த வாரம் ; இறுதி மோதல் தொடர்பில் முக்கிய பல ஆவணங்களும் பகிரங்கமாகும் இலங்கையில் இறுதிநேர மோதலில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடு வதற்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவகிறது. இன்னும் ஒருவாரத்திற்குள் இந்த அறிக்கை வெளிவரும். அறிக்கையைப் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுமென அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார். இந்த அறிக்கை மார்ச் மாத முற்பகுதியில் வெளியிடப்படவிருந்தது. அதே காலத்தில் ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மான…
-
- 5 replies
- 1.8k views
-
-
புலிகளின் இராணுவப் பேச்சாளராக இளந்திரையன் நியமனம்! விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளராக இளந்திரையன் (மார்ஷல்) நி யமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாள ராக இருந்த இவர் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு அண்மையில் மாற்றப் பட்டிருந்தார். ஜெனீவா சென்ற விடுதலைப் புலிகளின் உயர்மட்டப் பேச்சுக் குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார். விடுதலைப் புலிகளின் தலைமையால் இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர், நேற்று தமது பொறுப்பை ஏற்றுக்கொண்டார் எனக் கிளிநொச்சி செய்திகள் தெரிவிப்பதாக தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அமைப்பு இராணுவப் பேச்சாளர் ஒருவரை நியமித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். -சங்கதி…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பொறுஜியா டொட்மென்ட் மற்றும் எப்சீ நியூரம்பேர்க் என்ற அணிகளுக்கிடையிலான போட்டியை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் அமைப்பும் பொறுஷியா டொட்மென்ட் ரசிகர்கள் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த கொடியினை அணைவகுப்பின் போது கொண்டு சென்றுள்ளனர். http://akkinikkunchu.com/new/index.php
-
- 14 replies
- 1.8k views
-
-
மறைந்த மணிவண்ணன் உடல் சென்னை போரூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த மணிவண்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். இயக்குனர் பாரதிராஜாவின் பிரதான சீடர்களில், மணிவண்ணனும் ஒருவர். கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனர் ஆனார். நூறாவது நாள், அமைதிப்படை போன்ற பல, வெள்ளி விழா படங்களை இயக்கியவர். பாரதிராஜா இயக்கத்தில், ரஜினி நடித்த, கொடி பறக்குது படத்தில், வில்லனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, வில்லன், குணசித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராக, 400க்கும் மேற்பட்ட படங்களில், மணிவண்ணன் நடித்துள்ளார். இதய அறுவை ச…
-
- 5 replies
- 1.8k views
-
-
குமுதம் 23.11.2008ல் 'தேர்தலுக்கு தயாரான கலைஞர்' என்ற தலைப்பில் சுவாமி வம்பானந்தா பகுதியில் வந்த ஆக்கத்தில் ஈழம் பற்றிய செய்திகள் ``என்ன சுவாமி, இவ்வளவு மும்முரமாக எதைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்?'' - ஆர்வமாக விசாரித்துக்கொண்டே ஆசிரமத்துக்குள் நுழைந்தார் சிஷ்யை. ``வாக்காளர் அடையாள அட்டையைத்தான் தேடுகிறேன் பெண்ணே. கலைஞரே தேர்தலுக்குத் தயாராகிறார் போலத் தெரிகிறதே'' என்றவாறே வரவேற்றார் சுவாமி. ``ஆமாம், சுவாமி. `மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?' என்று கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, `எல்லாவற்றுக்கும் தயாராகித்தான் வருகிறோம்' என்று பதில் கூறியிருக்கிறார் கலைஞர். இலங்கைத் தமிழர் பிரச்னையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸே கடுமையான …
-
- 0 replies
- 1.8k views
-
-
திரிவட பலய" இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு சந்தியில் டென்சில் கொப்பேக்கடுவவின் பின்னால் கோத்தபாய சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய தளபதியாக இருந்து அராலி இறங்குதுறைப் பகுதியில் நடைபெற்ற அமுக்கவெடியில் கொல்லப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவவின் கட்டளையின் கீழ் அதிக இராணுவ நடவடிக்கைகளில் பங்காற்றியிருந்தவர் இவர். இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சம தகுதியில் கோத்தபாய ராஜபக்சவுடன் செயலாற்றியிருந்தார். 1990 ஆம் ஆண்டு மண்டைதீவை இராணுவம் ஆக்கிரமித்த "திரிவிட பலய" இராணுவ நடவடிக்கையில் அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்தமை மற்றும் காணாமல் போகச் செய்த நடவடிக்கையில் நேரடியாக சரத் பொன்சேகாவும் கோத்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
வெளிநாட்டுப் பயணங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிற்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகளவு செலவு செய்துள்ளதாக ஆங்கில வார இதழொன்று தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக வருடாந்தம் 30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம குறித்த நிதி ஒதுக்கீட்டை ஏற்கனவே செலவழித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செலவுகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிவிவகார அமைச்சரின் பயண செலவுகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்காக இதுவரையில் இவ்வளவு தொகை செலவிடப்படவில்லை என அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரி…
-
- 0 replies
- 1.8k views
-
-
பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 50 ஆண்டுகள் பூர்த்தி வாழ்வியல் உரிமைகளுக்காகவும், நீதி, நியாயம், சமத்துவம் வேண்டியும் ஈழத் தமிழர்கள் கடந்த ஆறு தசாப்த காலமாக நடத்திவரும் பல்பரிமாணப் போராட்டங்களை நோக்குபவர்கள் அவை இரண்டு தடங்களில் விரிந்து செல்வதைக் காண்பர். ஒருபுறம் அஹிம்சை வழியிலும், பின்னர் ஆயுத முனையி லும் வெடித்த போராட்டக் களங்களாகவும், மறுபுறம் அமைதி முயற்சிகள் என்ற பெயரில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற சமாதான அரங் குகளாகவும் இரு முனைகளில் அந்த வரலாற்றுத்தடம் நகர்ந்து சென்றிருக்கின்றது. அவ்வப்போது ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசுகளோடு தமிழர் நடத்திய அமைதிப் பேச்சுகள், சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினர் நம்ப வைத்து ஏமாற்றிய நம்பிக்கைத்துரோக நாட…
-
- 10 replies
- 1.8k views
-
-
புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனைக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை நேற்று புதன்கிழமை சென்று பார்வையிட்டது. சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர், மறவன் குலவு சச்சிதானந்தம், மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், சட்ட மாணவர் யசோதரன் உள்ளிட்ட குழுவினரே தாக்குதலுக்குள்ளான ஆலயத்தைப் பார்வையிட்டதுடன், தாக்குதலுக்கு இலக்கான நபர் மற்றும் குடும்பத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவ்விஜயத்தின் போது அப்பகுதிக்குப் பொறுப்பான அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி ஆகியோரையும் இக்குழு சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தது. …
-
- 22 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதே வை.கோ.வின் நோக்கம் - இலங்கை அரசாங்கம் Wednesday, 23 April 2008 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 60 நாட்கள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு வை.கோ. கோரியிருப்பது புலிகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே என இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் உள்ள தமிழ் மக்கள் உணவுப் பொருட்கள் இல்லை எனக்கூறி 60 நாட்கள் யுத்த நிறுத்தத்தை முன்னெடுக்குமாறு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசியல்வாதி வை.கோ. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிடம் கோரியுள்ளார். வை.கோவிற்கு தேவையான வகையில் இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளாது எனவும், இலங்கையின் …
-
- 2 replies
- 1.8k views
-
-
ஏற்கனவே மன்னாரில் சில இடங்களில் இராணுவம் போரைத் தொடங்கி விட்டாலும், நேற்றைய தினக்குரல் இதழில் விதுரன் எழுதிய ஆக்கத்தை இங்கே இணைக்கிறேன் எங்கே போரைத் தொடங்குவது? -விதுரன் - தெற்கில் அரசுக்கெதிராக தோன்றிவரும் புதிய அரசியல் நிலைமைகளை சமாளிக்க வடக்கில் பாரிய படை நடவடிக்கையை ஆரம்பிக்க அரசு முயல்கிறது. கிழக்கை கைப்பற்றியது போல், வடக்கையும் மிக விரைவில் கைப்பற்றுவோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சூளுரைத்ததன் மூலம் அவசர இராணுவ வெற்றிக்காக அரசு காத்திருப்பது தெளிவாகிறது. கிழக்கைப் போன்று, வடக்கின் கள நிலையில்லையென்பது நன்கு தெரிந்தும் கிழக்கைப் போன்று வடக்கையும் கைப்பற்றுவோமென அரசு கூறிவருவதன் மூலம் இராணுவ வெற்றியின் மூலம் அரசியல் வெற்றியைப…
-
- 2 replies
- 1.8k views
-
-
தற்போதைய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கை பிரச்னையில் தமிழருக்கு எதிராக செயல்பட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் புதியவரது வருகை எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கிறது. பஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் பாதுகாப்புத்துறை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் அஜித் தோவல் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனரான அஜித் தோவல், 1968ம் ஆண்டு கேரள பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக கடமையாற்றியிருந்தார். 2005ம் ஆண்டு ஜனவரி 31ம்தேதியுடன் ஐபிஎஸ் சேவையில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். தற்போது விவேகானந்தா சர்வதேச பவுண்டேசனின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தான் ந…
-
- 19 replies
- 1.8k views
-
-
Apr 24, 2011 / பகுதி: செய்தி / விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு - பான் கீ மூனின் அறிக்கை : கோத்தபாய சீற்றம் பிரபாகரனின் தேவைதான் பான் – கீ – மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் உள்ளது. அத்துடன், விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது என இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார். பான் – கீ – மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர், நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என இரிதா லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான் நினைத்ததை செய்பவர் எனவும் எவரும் கூறும் வரை…
-
- 0 replies
- 1.8k views
-
-
மகாணசபையை ஏற்க மறுத்த புலிகள் இறுதியில் எதைச் சாதித்தனர்? – பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கேள்வி மாகாணசபையை ஏற்க மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதியில் எதைச் சாதித்தார்கள் என்று பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே பேராசிரியர் இப்படிக் கேள்வி எழுப்பினார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் கலந்துரையாடல் அறையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வீரகேசரிப் பத்திரிகையின் ஆசிரியர் வீ. தேவராசா கலந்து கொண்டு உரையாற்றினார். மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தம…
-
- 24 replies
- 1.8k views
-
-
பெருமளவிலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர்- நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்! Published on March 25, 2012-9:07 am · யுத்தத்தின் போது பெரும்பாலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். புலிகளை நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது புலிகளும், இராணுவமும் பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இரு தரப்பும் போர்க்குற்றங்களை புர…
-
- 13 replies
- 1.8k views
-
-
உயிர் அச்சுறுத்தல் நீங்கவில்லை நீதிமன்றத்தை நம்பி நாடு திரும்பினேன் - மனோ கணேசன் எம்.பி. கூறுகிறார் [Tuesday February 12 2008 08:24:03 PM GMT] [யாழினி] எனக்கு ஏற்பட்டுள்ள பாரிய உயிர் அச்சுறுத்தல் இன்னமும் நீங்கவில்லை. இருந்த போதிலும் நீதிமன்றத்தை நம்பியே நான் நாடு திரும்பியுள்ளேன் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழு ஏற்பாட்டாளரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் மரணம் துர்ப்பாக்கியமானதும் துரதிஷ்டவசமானதுமாகும். ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருக்கின்றது. இது குறித்து சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். …
-
- 2 replies
- 1.8k views
-
-
ஜெனீவா அமர்வை இடியப்ப சிக்கலாக்கிய மகிந்த – கொந்தளிக்கும் பீரிஸ்! எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதி மகிந்தவின் திட்டமிடாத செயற்பாடுகளே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு இலங்கைத் தூரக அலுவலகமொன்றில் அதிகாரிகளைச் சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனை மிகவும் வெறுப்புடன் தெரிவித்துள்ளார். தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜ…
-
- 12 replies
- 1.8k views
-
-
நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கூட்டமைப்பு அறிவிப்பு தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என கூறப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் அரசாங்கம் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதவினை கூட்டமைப்பு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே சர்வதேசமும் விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்க…
-
- 12 replies
- 1.8k views
-
-
தற்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மிக விரைவில் கவிழும் அறிகுறி தென்படுவதாக சிறீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் கருத்து வெளியிட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் எதிர்ப்புக்களினால் தத்தமது தேர்தல் தொகுதிகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் அந்த அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். ராஜபக்ஷ குடும்ப சகிதம் மேற்கொண்டுவரும் பாரியளவிலான ஊழல், மோசடிகளைக் குறைந்தபட்சமாக குறைத்துக் கொண்டாலும், எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். http://www.eeladhesa...ndex.php?opti…
-
- 8 replies
- 1.8k views
-
-
இதன் விளைவாக உலகின் மிகப்பெரும் போர்க் குற்றவாளியான சிங்கள இராஜபக்ஷே அரசிற்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை தோற்கடித்து, சிங்கள அரசின் தீர்மானத்திற்கு சீனாவுடன் சேர்ந்து வாக்களிக்கும் நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்திய -சீன வல்லரசு கனவுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டனர் இன்றைய ஈழ மற்றும் தமிழக மக்கள். தொடர்ந்து வாசிக்க: http://inioru.com/?p=5103
-
- 15 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் மரணமான விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானின், மூத்த சகோதரரின் சடலம், ஜேர்மனி தூதரகத்தின் தலையீட்டின் பேரிலேயே, சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு, ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக, ஜேர்மனியில் வாழ்ந்து வந்த பொட்டு அம்மானின் மூத்த சகோதரர், சண்முகலிங்கம் சிவஞானகுமார், இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரகசியமாக யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார். நல்லூர் கந்தசுமாமி கோவிலுக்கு அண்மையில் கடந்த ஓகஸ்ட் 21ம் நாள், அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போதே அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானதாக, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்…
-
- 8 replies
- 1.8k views
-