ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
ஸ்ரீகாந்தா ஓர் புலி உளவாளி முடியை வளர்த்துக்கொண்டு சிரட்டையுடன் புறக்கோட்டைக்கு சென்றால் நன்றாக பிச்சை எடுக்கலாம் பாராளுமன்றில் அமைச்சர்கள் காடைத்தனம் உரை ஹன்சாட்டில் இருந்து நீக்கம்: அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலுள்ள புதமாத்தளன் பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்த கருத்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் இல்லாவிடின் அவரை வெளியே துரத்துவோம் என்றும் ஆளுந்தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் நேற்று நாடாளுமன்றில் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் 10 நிமிடங்களுக்கு மேலாக சபையில் பெரிதும் அமளி துமளி ஏற்பட்டது. ஆளும் கட்சி …
-
- 5 replies
- 1.7k views
-
-
திங்கள் 05-11-2007 03:30 மணி தமிழீழம் [சிறீதரன்] அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை04.11.2007 அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழம் தேசியத்தலைவர் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அரசியற்றுறைப்பொறுப்பாளரும் பெரும் படைத்துறைத் தளபதியும் அனைத்துலகமட்ட இராஐதந்திரியுமாகிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இழந்துவிட்டோம். நயம்பட உரைத்த நா ஓய்ந்துவிட்டது. புன்னகை குன்றா சிரிப்பின் செல்வன் இன்று வரலாறாகிவிட்டார். எமது ரணத்திற்கு நாமே மருந்தாவோம், குறி தவறோம். நாம் நலிந்து விட்டோம் என்று எண்ணக்கூடாது. நாம் வீழமாட்டோம், துணிவை இழக்கமாட்டோம், இலட்சியப் பாதையிலிருந்து விலகமாட்டோம். எமது போராட்டம் வலிமையானது. மலை போன்ற எம்மவர் மறைந்துவிட்டார் என்பதற்காக நாம்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இறுதி நேரத்தில் தமது கட்டளை மையத்தை தாக்கியழித்த விடுதலைப் புலிகள்! [ பிரசுரித்த திகதி : 2011-03-13 06:24:21 AM GMT ] கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற சமரில் விடுதலைப்புலிகள் தமது கட்டளை மையமாக பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத இரும்புத்தகடுகள் பொருத்தப்பட்ட மிகப்பெரும் பாரஊர்தியை இறுதி நேரம் அவர்கள் தகர்த்துவிட்டு சென்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னிச் சமரில் விடுதலைப்புலிகள் நடமாடும் கட்டளை மையத்தையே தமது பிரதான கட்டளை தளமாகக் கொண்டிருந்தனர். எனவே தான் சிறீலங்கா வான்படையினராலும், ஆழ ஊடுருவும் படையினராலும் அவர்களின் பிரதம கட்டளை மையத்தை தகர்த்து போரை விரைவாக முடிக்க முடி…
-
- 0 replies
- 1.7k views
-
-
2003 இன் பிற்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு வெற்றியளிக்காத முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது ஆக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சை பிரிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கில் இராணுவ விவகாரங்களில் செயல்திறன் வாய்ந்த கட்டுப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க கொண்டிருக்க முடியும் எனவும் ஸ்தம்பிதமடைந்த சமாதான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் இருக்க முடியும் எனவும் இந்தியா யோசனை தெரிவித்திருந்தது. அச்சமயம் இந்தியத் தூதுவராக இருந்த நிருபம் சென்னின் யோசனையானது ரணில் விக்கிரமசிங்கவுக…
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted by சோபிதா on 02/06/2011 in செய்தி கொழும்பில் நடைபெறும் போர்க்கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் டேவிட் கில்குலேன் வெளியிட்ட கருத்துக்களை சிறிலங்கா ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளன. நேற்று கொழும்பில் ஆரம்பமான சிறிலங்கா இராணுவத்தின் போர் அனுபவக் கருத்தரங்கில் உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரும், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராயசின் சிறப்பு ஆலோசகருமான- அவுஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் லெப்.கேணலான டேவிட் கில்குலேன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். அவர் நேற்று தனது உரையில் போர்க்குற்றங்களை ஒருபோதும் மூடி மறைத்து விட முடியாது என்று கூறியுள்ளதாக ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா…
-
- 3 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சுக்களை நடத்தாது: பிரதமர் ரட்னசிறீ விக்கிரநாயக்க [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 22:08 ஈழம்] [காவலூர் கவிதன்] நாளை பேச்சை ஆரம்பிக்கவும் அரசு தயாராக இருக்கிறது என்று சிறீலங்கா வெளிநாட்டமைச்சர் ரோஹித போகல்லகம தெரிவித்த மறுநாள், சிறீலங்கா பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்க, அந்த அறிவிப்பை மறுதலிக்கும் வகையில், கருத்து வெளியிட்டுள்ளார். உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரி எழுதிய கடிதத்திற்குப் பதலளித்துள்ள பிரதமர், பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் இணக்கம் காண சிறீலங்கா அரசு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார். போர் முனையில் படைகள் பெற்றுள்ள வெற்றிகளை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்…
-
- 9 replies
- 1.7k views
-
-
இலங்கைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய விடுதலை தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டினை இலங்கையில் நடாத்த கூடாது என வலியுறுத்தி கடந்த முதலாம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் இவர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது, இலங்கைக்கு இந்தியா யுத்தக்கப்பல்களை வழங்கக்கூடாது, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கக்கூடாது மற்றும் இலங்கைக்கு எதிராக இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளையும் இவர் முன்வைத்திருந்தார். இவரது உண்ணாவிரத…
-
- 3 replies
- 1.7k views
-
-
எரியும் நினைவுகள் - நூலக நினைவுகள்
-
- 4 replies
- 1.7k views
-
-
முதலமைச்சராக கடமையாற்றக் கூடிய தகுதிகள் பிள்ளையானிடம் காணப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணர் தெரிவித்துள்ளார். வால் ஸ்ரீட் சஞ்சிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இன்னமும் தமது பயங்கரவாதப் பண்புகளை முழுமையாக கைவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிக்கும் அளவிற்கு பிள்ளையான் தகுதியானவரல்ல என கருணா தெரிவித்துள்ளார். இதேவேளை, கருணா நாட்டைவிட்டு தப்பிச் சென்ற இக்கட்டான சூழ்நிலையில் கட்சியை தாமே கட்டிக்காத்ததாக பிள்ளையான் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள விடாது மத்…
-
- 4 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணாவை அவரது குடும்பத்துடன் இணைய விடாது பிரித்தானியா தடுப்பது மனித உரிமை மீறலாகும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.7k views
-
-
ஓயாத அலைகள் 5 !!!!???? .......மாவிலாறு மற்றும் அதை அண்டியுள்ள ஈச்சிலம்பற்று போன்ற பகுதிகளை சிறிலங்கா அரசு கைப்பற்ற விரும்புவதற்கு வேறு காரணங்களும் உண்டு. வெருகல் பகுதியில் உள்ள இந்த இடங்களை கைப்பற்றி தக்க வைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்கும் திருகோணமலையில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்குமான தரைவழித் தொடர்பை துண்டாட முடியும். இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் உள்ள விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்த முடியும். ஆகவே தற்பொழுது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது மாவிலாறு அணை சம்பந்தப்பட்ட விடயமாக மட்டும் கருத முடியாது......... .......சிறிலங்கா இராணுவம் வடக்கில் இருந்து படையினரையும் கனரக ஆயுதங்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
சங்கர் புரம் கண்ணகி அம்மன் கோவிலில் ஆயுத வேட்டை! December 19, 2020 மட்டக்களப்பு வெல்லாவெளி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் கோவில் வளாகத்தில், காவற்துறைனர் நேற்று (18.12.20) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். யுத்தக் காலத்தில் அந்தக் கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே காவற்துறைனர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரையில் ஆயுதங்கள் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், எந்தவிதமான ஆயுதங்களும் காவற்துறைனரால் மீட்கப்படவில்லை. https://globaltamilnews.net/2020/154571/
-
- 11 replies
- 1.7k views
-
-
வீதியோரச் சிறுவர்கள் உலகில் 246 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், அடக்குமுறைகளுக்கு உள்ளாகிய நிலையிலும் சிறுவர் தொழிலாளர்களாக சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் நாளை செவ்வாய்க்கிழமை உலகெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் 5 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீதியோரச் சிறுவர்கள் உள்ளனர். 30 வருட காலத்துக்கு மேல் நீடித்த யுத்தம் மற்றும் 2004 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட சுனாமி போன்ற காரணிகளே இலங்கையில் வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பிரதான காரணியாக விளங்குகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரை வீதியோரச் …
-
- 1 reply
- 1.7k views
-
-
புத்தூர் நிலாவரையில் திடீரென தோன்றிய புத்தர் சிலை; எதிர்ப்பினால் அகற்றம் புத்தூர், நிலாவரையில் திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. நேற்று இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பகுதியில் நின்ற இராணுவத்தினரே இதை அமைத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்று பகல் அகற்றப்பட்டது. இந்தப் பிரதேசம் அதிகளவில் தென் பகுதி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/241981
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
. யாழில் அட்டகாசம் ஆரம்பம்: பிபிசி யாழ் செய்தியாளர் தடுத்துவைப்பு பி.பி.சி தமிழோசையின் யாழ்.குடாநாட்டிற்கான ஊடகவியலாளரான என். பரமேஸ்வரன் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினரிடம் முறையிட்டுள்ளார். நேற்றுக்காலை யாழ் வேம்படி வீதியில் அமைந்துள்ள சிறீலங்கா மக்கள் கட்சி அலுவலகத்தில் தான் பலாத்காரமாக பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னாள் அரச தலைவர் சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரணதுங்கவின் சிறீலங்கா மக்கள் கட்சியின் அமைப்பாளராக இருப்பவர் மகிந்த திலக் குமார உடுகம. இவர் வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தின் அமைப்பாளராக இருக்கின்றார். அரச தலைவரினதும் அரச தலைவர் பாரியாரினதும் நெருங்கிய ந…
-
- 0 replies
- 1.7k views
-
-
மஹிந்த இராஜபக்ஷவிற்கும் அவரது அரசிற்கும் புலிகள் பற்றி பேசாதுவிட்டால் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்பதனை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருப்பார்கள். இன்று புத்தாண்டு புரளியாக மஹிந்த அரசு ஒரு செய்தியினை வெளியிட்டிருந்தார்கள். அதாவது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய பிரமுகர்கள் பதினான்கு பேரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியவரும் பலரைக் கொலை செய்தவருமான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் உட்பட ஐவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்ட போது புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் சயனைட் அருந்தினார் என்றும் என…
-
- 7 replies
- 1.7k views
-
-
தேர்தல் மேடையொன்றில் உரையாற்றும் மேர்வின் சில்வா தான் மனைவிக்கு ஓய்வு வழங்குவதற்காக தான் அயல் வீடுகளில் செய்த வேலைகளையும் அதன் காரணமாக உருவான தனது வாரிசுகளைப் பற்றியும் தேவையேற்பட்டால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ‘இந்த விடயத்தில்’ உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பௌத்தம் பௌத்தம் என வாய் கிழியப் பேசும் இன்றைய சிறிலங்கா அமைச்சர்களில் பெரும்பாலானொரின் நிலை இது தான் என்ற போதிலும் இதனை மேடை போட்டுப் பேச ஒரு அமைச்சர் துணிந்திருக்கிறார் என்பதும் இதனைக் கேட்டு கரகோசம் செய்து மகிழ மக்கள் இருக்கிறார்கள் என்பதும் பௌத்தத்தை கட்டிக் காக்கும் தேசத்தின் அழகை உணர்த்துகிறது. அநாகரீகத்தின் உச்சமான இந்த வீடீயோவைப் பார்க்க….. http://funnycric.blogspot.com/2010/…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஈழத் தமிழர் ஆதரவாளரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டேனி டேவிசுக்கு 87 விழுக்காடு வாக்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான இல்லினாய்ஸ் 7 ஆம் மாவட்ட தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் டேனி டேவிஸ் 87 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர், டேனி டேவிசின் கிளிநொச்சி பயணம் தொடர்பில் விமர்சனம் செய்து பரப்புரை மேற்கொண்டார். கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் உறுப்பினர்களான டேனி டேவிஸ், டேனி எப்.கன்ட்ரெல் ஆகியோர் கிளிநொச்சிக்கு சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். -புதினம்- அவரின் வெற்றிக்கு எம் மக்களின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
-
- 1 reply
- 1.7k views
-
-
புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம் JUN 09, 2015 | 2:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.என்.குகநாதன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்பிட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் இணைந்து சட்டவிரோதமான வகையில் நிதியை திரட்டியதாக, டான் தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணி…
-
- 11 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் 7000 படையினர் திகதி: 27.12.2008 ஃஃ தமிழீழம் ஃஃ ஜவன்னியன்ஸ சிறிலங்காப் படைத்தரப்பின் கிளிநொச்சி மீதான படை நடவடிக்கை புலிவாலைப் பிடித்த கதையாகி விட்டது என ஈழநாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஜெயராஜ் இன்று வெளியான அதன் வார இதழில் எழுதியுள்ள பத்தியில் குறிப்பட்டுள்ளார். கிளிநொச்சிக்கென கொடுககப்பட்ட விலையானது - ஒருபுறத்தில் சிறிலங்கா சனாதிபதிக்குச் சீற்றத்தை ஏற்பபடுத்தும் அளவிற்கு அதிகரித்ததொன்றாகவும்இ மற்றொரு புறத்தில் படைத்தரப்பின் இழப்பை எவ்வாறு குறைத்தல் என்பது குறித்து ஆராய வேண்டியதான நிர்ப்பந்தத்தை சிறிலங்காப்படைத்தரப்பிற்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் அப்பத்தியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 16ம் திகதி படையினர் கிளிநொ…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதிகள் 110 பேர்… August 31, 2020 வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், அண்மையில் இந்த விபரத்தை ஐநா வெளியிட்டிருந்தது. அத்துடன் மே மாதம் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் சரணடைய ஒப்புக்கொண்டபோதும் “வெள்ளைக் கொடி” சம்பவத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்றும் இந்த உண்மை மறுக்க முடியாதது என அண்மையில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் .. ஆதவா ( செயற்…
-
- 18 replies
- 1.7k views
-
-
இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, நான் தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பத்திரிகை சந்திப்பில் எப்போது தமிழகம் வருவீர்கள் என்று கேட்டார்கள். விரைவில் வருவேன் என்று சொன்னேன். வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் தமிழக மக்கள்தான். எங்கள் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. எனது தந்தை இறந்தது தமிழகத்தில்தான். தமிழகத்தில் உள்ள தமிழகர்கள் மட்டுமல்ல. உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள…
-
- 10 replies
- 1.7k views
-
-
வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தேசியத் தலைவர் அகவணக்கம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 01:15 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று அகவணக்கம் செலுத்தினார். வன்னியில் இன்று வியாழக்கிழமை (25.10.07) சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் திருஉருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்மாலை அணிவித்தார். http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e
-
- 2 replies
- 1.7k views
-
-
(காங்கேயனோடை நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் பெண்களுக்கான முதலாவது பள்ளிவாயல் திறந்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இப்பெண்கள் பள்ளிவாயலை திறந்து வைத்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் ஐக்கிய அரபு ராஜ்யத்திலுள்ள தனவந்தர் ஒருவரின் நிதியுதவியுடன் காங்கேயனோடை மஸ்ஜிதுர் ரசூல் பள்ளிவாயலுக்கு அருகில் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த பெண்கள் பள்ளிவாயலில் பெண்கள் ஐந்து வேளை தொழுகைகளையும் நிறைவேற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாயல் திறந்து வைக்கப்பட்ட வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் உட்பட முக்கியஸ்த்தர்கள் பிரமுகர்கள் கலந்து…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை துறையில் விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் என்று நம்பப்படுகின்ற ஒரு தொகுதி ஆவணங்களை தாம் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் அத்துல சேனாரத்ன குறிப்பிட்டுளார். இன்றுகாலை கடற்படையினரின் புலனாய்வு பிரிவால் கடற்கரையில் மெழுகு சீலைகளால் சுற்றி பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.parantan.com/
-
- 0 replies
- 1.7k views
-