ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
இலங்கையில் அமைதி நிலவ அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படைக்கு நன்றி செலுத்து முகமாக அதில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கான நினைவுச் சின்னம் அடுத்த மாதம் நிறுவப்படவுள்ளது என்று மஹிந்த தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக இந்தி அமைதிப்படை அனுப்பட்டது. அதன் மக்தான சேவைக்கு நாங்கள் இன்னும் நன்றி செலுத்த வில்லை. அமைதிப் படையில் உயிர்நீத்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவுச் சின்னம் இலங்கை பாராளுமன்ற கட்டிடம் அருகே தயாரகி வருகிறது. அடுத்த மாதம் திறக்கப்படும். எனக்கு முன் பதவியில் இருந்த அரச தலைவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க மறந்து விட்டனர். நான் பதவிக்கு வந்ததும் இத குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். அடுத்த மாதம் 4ம் திகதி நினைவுச் சின்ன…
-
- 2 replies
- 1.7k views
-
-
தனது மொழிக்கும், தனது உரிமைகளுக்குமான ஒரு ஆதிக் குடியின் போர் வல்லாதிக்க சிங்கள அரசியலால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மனித உயிர்களைக் காவு வாங்கி மூன்று ஆண்டுகள் முடியப் போகிறது, போர் முடிந்து விட்டதா? அல்லது இந்தப் போராட்டம் இனி உயிர் பெற்று எழுமா? என்கிற பலரது கேள்விக்குள் ஈழமும், அதற்கான போராட்டமும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை ஜெனீவா மாநாடு பன்னாட்டு சமூகத்திற்கு உரக்கச் சொல்லி இருக்கிறது. ஆனாலும், உண்மையிலேயே இந்த மாநாடும், பன்னாட்டு சமூகங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் நீதி தான் என்ன? என்பது குறித்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. அமெரிக்காவுக்கு உண்மையில் ஆதிக் குடியான தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் உரிமைகள் …
-
- 20 replies
- 1.7k views
-
-
________________________________________________________________________________ _____
-
- 0 replies
- 1.7k views
-
-
மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிஇ நாகைஇ கரூர்இ பெரம்பலூர்இ அரியலூர்இ தஞ்சாவூர்இ திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்இ எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கருத்துக் கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்ட அவர் இரவு கோவை புறப்பட்டுச் சென்றார். இந்தக் கூட்டம் ரகசியமான முறையில் காஜாமலை பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டது. இதில்இ செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சியுடன் கூட்டணி என முடிவு செய்யப்…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஜே.வி.பியின் பரப்புரை செயலாளரர் விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜே.வி.பியில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறிய விமல் வீரவங்சவிற்கும் அவருடைய சகாக்களுக்கும் ஜே.வி.பியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இதனை அடுத்தே விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்; இதேவேளை விமல் வீரவங்சவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்கானதுடன் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது pathivu.com
-
- 8 replies
- 1.7k views
-
-
இது செஞ்சோலை படுகொலை நடந்த நான்காவது ஆண்டின் நினைவு வாரமாகும். இந்த நினைவு வாரத்தில்;,பல்வேறு நாடுகளில் நாங்கள் நினைவு நிகழ்வுகளை நடத்துகிறோம். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நினைவுக் குறிப்புகள் நினைவு மீட்டல்களை பதிவேற்றுகிறோம். ஆனால் இதுவரை புலத்திலுள்ள நாங்கள் அதாவது தனிநபர்களாகவோ அல்லது அமைப்புக்களோ கடந்த வருடம் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் பின்னர் இந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலை சிறார்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்களை யார் பராமரிக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ந்து அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது தொடர்பாக உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இதன் விளைவுதான் ஜெயந்தி அல…
-
- 10 replies
- 1.7k views
-
-
வன்னி நிலப்பரப்பிலிருந்து இடம்பெயர்ந்து. சிறிலங்கா படையினரால் வவுனியா வதை முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் தினம் தோறும் சிறிலங்கா படையினராலும், ஈ.பி.டி.பி, புளொட் ஒட்டுக்கும்பல்களினால் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்பட்டிருப்பதாக, வவுனியா வதை முகாமில் பணியாற்றி விட்டு விடுமுறையில் திரும்பிய முஸ்லீம் பொலிஸார் ஒருவர் தெரிவித்திருக்கிறார். http://www.orunews.com/?p=3542
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ் குடாநாடடில் இதுவரை காலமும் கடத்தப்பட்வர்கள் எங்கே? தினமும் இடம்பெற்று வரும் கொலைகளுக்கெதிராக படையினர் மேற்கொண்ட நடவடிக்ககைள் என்னவென யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியிடம் கேள்வியெழுப்பயுள்ள யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் அராஜகங்கள் முடிவுக்கு வராவிட்டால் புதிய ஆண்டுத் தொடக்கத்திலிருந்து போரட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ்.மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 'யாழ் குடாநாட்டில் இடம் பெற்று வரும் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கும் படையினரும் அவர்களுடன் சோந்தியங்கும் ஆயுதக்குழுக்களுமே காரணம் என்பதை அனைவரும் நன்கற…
-
- 1 reply
- 1.7k views
-
-
யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற மூவர் காணாமல் போய் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி ஆளுநரின் மனைவி! திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூனித்தீவு கிராம சேவகர் பிரிவுள்ள மத்தளமலை ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அச்சுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையிலேயே மத்தளமலையில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் இருந்த பெண்கள் உட்பட தமிழர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து அனைவரையும் அழித்துவிடுவதாகவும் அச்சுறுத்தி இருக்கின்றார். மூதூர் பிரதேச செயல…
-
- 27 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை – சரவணபவன் தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் தெரியாத விக்னேஸ்வரனை முதல்வராக்கியமையே கூட்டமைப்பின் முதல் பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அவர், அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் 100 வீதம் எங்கள் முடிவுகளை சரியாகச் செய்துள்ளோம். ஆனால், அரசு வழங்க வேண்டியவற்றை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மாற்றுக் கட்சிகளை …
-
- 20 replies
- 1.7k views
-
-
அண்மையில் வவுனியா படைத்தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியர் எவருமே காயமடையவில்லை என்று இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்திருக்கிறார். பி.பி.ஸி. செய்திச் சேவையில் நேற்று முன்தினம் கேட்டகேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே இராணுவப் பேச்சாளர் இப்படிக் கூறியிருந்தார். உதயநாணக்கார அந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு: இந்தத் தாக்குதலில் இந்தியர் எவரும் காயமடையவில்லை என உறுதியாகக் கூறுகின்றேன். அந்த இடத்தில் இந்தியர் யாரும் இல்லை. இந்தியர்கள் காயமடைந்தனர் என்று உங்களுக்கு இந்தியத் தூதரகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டால் நீங்கள் அவர்களிடமே மேலதிக விவரங்க ளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார். uthayan.com
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்! June 10, 2018 தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை முக்கியஸ்தராக செயற்பட்ட போராளியொருவர் இன்று காலை மாரடைப்பினால் மரணமாகியுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளராக கடமையாற்றிய ஐங்கரன், இன்று அதிகாலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். http://www.pagetamil.com/7871/
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஆறுமுகன் தொண்டமான் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்றுமாலை சமர்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவித்தன. எனினும் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இந்த ராஜினாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38335-2012-03-26-15-12-57.html
-
- 10 replies
- 1.7k views
-
-
நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரடஸ்கர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம். இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரடஸ்கர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாற்றத்துடன் தனது தூதுவர் நிலையில் இருந்து பணி மாற்றம் பெறவுள்ள ஹன்ஸ் பிரஸ்கரின் கிளிநொச்சி விஜயமானது பிரியாவிடை பெறும் நோக்கிலானது என்று இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன நேற்று நோர்வே தூதுவர் தனது கிளிநொச்சி விஜயம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதனை அடுத்து வெளிவிவாகர அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன அவருடைய பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்க சமாதான செயலகம் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார் -Pathivu-
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 05:56 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வருமாறு: சிறீலங்காவின் தென்மேற்கு கரையோர வீதியால் நாம் தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தோம். அதன் பிரதான சுற்றுலாத்துறை மையமான ஹிக்கடுவ பகுதியில் எம்மை இடைமறித்த சிறீ…
-
- 9 replies
- 1.7k views
-
-
http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/397042_239435646131387_189745421100410_549640_1522608388_n.jpg கிளம்பிட்டாருய்யா கைப்புள்ள! ‘தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில் மத்திய அரசின் தாமத்தை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது’ என தி.மு.க. தலைவர் கருணாநிதி பொங்கி எழுந்திருக்கிறார். 'ஆகா... கைப்புள்ள கிளம்பிட்டாருய்யா...' என்பதைத் தவிர வேறு எதையும் சொல்லத் தோன்றவில்லை. பின்னே... ஆட்சியில் இருக்கும்போது கடிதம் எழுதுவது... கீழே இறங்கிவிட்டால் இப்படி பொங்குவது... இதைத்தானே காலகாலமாக செய்து கொண்டிருக்கிறார்! பின் குறிப்பு: ஏற்கெனவே பொங்கிக் கொண்டிருந்த, ஜெயலலிதா... தற்போது ஆட்சியில் அமர்ந்த இந்த ஆறு மாத காலத்தில் இரண்டு மூன்று கடிதங்களை அனுப்பிவிட்…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை என்பது மிக நீண்டதொரு பட்டியலை கொண்டது .எந்த அலுவலுக்கு எந்த அமைச்சுக்கு போவதென்பது சாதாரண மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது . ''தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு '' செயற்பாடுகள் நடைபெறுகிறதோ இல்லையோ இப்படியும் ஒரு அமைச்சு இயங்குகிறது .இடதுசாரி என்ற முகமூடியுடன் இந்த அரசாங்கத்தோடு கலந்து கொண்ட திரு .வாசுதேவ நாணயக்கார இதற்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார் . கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த அமைச்சினால் ''இன விவகாரம் தொடர்பான அலகு'' என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது .அமைச்சின் மேலதிக செயலாளர் திரு …
-
- 10 replies
- 1.7k views
-
-
என்ன நடந்தது தமிழ்நெற்றுக்கு????... நேற்றிலிருந்து படுத்து விட்டது!!! உந்த ஆங்கில இணையத்தளம் மட்டுமல்ல, மட்டுஈழநாதம், புதினம், பதிவு, நிதர்சனம், .. சங்கதி எல்லாம் நல்லா நித்திரையடிக்கினம் போல!! ஈழ்பதீஸானே! அடியேன் நித்திரையை குழப்பி செய்தி பாம்பமென்டாம் டென்ஸனைக் கிளப்புகிறான்கள்!!
-
- 0 replies
- 1.7k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சகோதரர் பரமு சிவா ஆற்றிய உருக்கமான உரை
-
- 0 replies
- 1.7k views
-
-
(ஊடகப்பிரிவு) வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ…
-
- 9 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் தமிழீழ புலனாய்வுப் பிரிவின் சார்பில் நெருடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை. தளபதி ராம் மற்றும் நகுலனால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர் தமிழீழத்தை, தெளிவுபடுத்தும் அறிக்கையாகவே தமிழீழ புலனாய்வுப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ்பேசும் மக்களே, எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம்.…
-
- 4 replies
- 1.7k views
-
-
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை ஒழித்துக்கட்ட எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது. ! ஞானசார தேரர் சூளுரை ! 780adad1beb27f0c54647e4de568fd26
-
- 25 replies
- 1.7k views
-
-
சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில் புரட்சிகர இளைஞர் முன்னணி ,புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ,புரட்சிகர மாணவர் முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் தழுவியஅளவில் இந்தி கொடூரன் எரிப்பு போராட்டம் நடத்தினர். தமிழ் தேசத்தின் மொழியும் , அரசுரிமையையும் , மண்ணையும் ,வளத்தையும் , பண்பாட்டையும் நசுக்கி இந்திய தரகுமுதலாளிய – பார்ப்பனியஏகாதிபத்தியம் நம்மை அடிமைப்படுத்தி உள்ளது. தமிழக மக்கள் அடிமைதனத்தில்உள்ளதால் நமது தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழினத்திற்கு குரல்கொடுக்கமுடியாத அவலநிலை உள்ளது. நமது மொழியும் , அரசுரிமையையும் ,மண்ணையும் , வளத்தையும் , பண்பாட்டையும் , தேசத்தையும் விடுதலை செய்வதேதமிழ்மீட்சி ஈகியர்களுக்கு செலுத்தும் வீரவணக்கம் ஆகு…
-
- 0 replies
- 1.7k views
-
-
பிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்! போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என நேற்று(20) நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார். இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் பெர்னாண்டோ மீதான தங்களுடைய விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு, https://newuthayan.com/பிரசாத்-பெர்னாண்டோவை-பிட/
-
- 15 replies
- 1.7k views
-