ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
(ஆர்.யசி) கொரோனா வைரஸ் பரவலை அடுத்து எதிர்வரும் காலங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் ஆகவே தேசிய உணவு உற்பத்தியை அதிகரித்து அடுத்து வரும் காலங்களில் உணவுத் தேவையை பூர்த்திசெய்ய வேண்டியுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. அதற்கேற்ப தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாவும் கூறுகின்றது. உலகளாவிய ரீதியில் "கொவிட்-19" என அடையாளப்படுத்தப்படும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் இலங்கை உள்ளிட்ட சகல நாடுகளுக்கும் உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுகாதார பணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சகல நாடுகளும் தமக்கான உணவு சேமிப்பில் அதி…
-
- 1 reply
- 242 views
-
-
( எம்.நியூட்டன்) புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் அங்கு பணியாற்றிய கடற்படையைச் சேர்ந்த யுவதி ஒருவரை கடந்த மாதம் 25ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இந்நிலையில் இருவரையும் கைது செய்த புங்குடுதீவு கடற்படையின் உயர் அதிகாரிகள் கடற்படையின் வட பகுதி கட்டளை பணியகத்தின் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கு விசாரணைகள் நடைபெற்றதோடு அங்கு காணப்படும் கடற்படையின் வைத்தியசாலையில் கடற்படை யுவதிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் இருவ…
-
- 1 reply
- 197 views
-
-
குறைந்தது மேலும் ஒரு வருடத்திற்காவது யுத்த செலவீனங்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக திறைசேரியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர தெரிவித்தார். எனவே, வரவு-செலவுத்திட்ட தயாரிப்பின் போது பாதுகாப்புத் தவிர்ந்த ஏனைய அமைச்சுக்கள் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என அவர் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்தார். அடுத்த வருடத்துடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து 2010ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக யுத்தத்தின் பின்னரான புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிதியொதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக 2009ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சரவைக்கு விளக்கமளிக்கும் சந்திப்பில் ஜெயசுந்தர கூறினார். இந்தச் சந்திப்பில் வரவு-செலவுத்திட்டத்தைத…
-
- 0 replies
- 641 views
-
-
[size=4]கனடாவில் நவம்பர் மாதம் 3 ந்திகதி நடைபெறப்போகும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மாவீரர்களின் பெயரால் ஒரு கூட்டம் எதிர்த்து மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கிறது.[/size] [size=4]துயிலுமில்லப் பாடலை தனது கட்சியின் கொள்கை விளக்கப் பாடலாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மாற்றி மாவீர்களை அசிங்கப்படுத்தியபோது மௌனமாக இருந்த இவர்கள் மற்றும் இவர்கள் ஆதரவு இணையங்கள், நவம்பர் 3 ந்திகதி நடைபெறப்போகும் ஒரு நிகழ்ச்சிக்காக மாவீர்கள் பெயரைச் சொல்லி மாவீர்களை அவமதித்த நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து நின்று எதிர்ப்பது முரண்பாடாக உள்ளது. [/size] [size=4]உண்மையிலேயே கலைநிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டியது நவம்பர் மாதத்தில் அல்ல மாவீரர் வாரத்தில்தான் ( நவம்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
307,369 பேர் பாதிப்பு 6 பேர் உயிருடன் புதைந்தனர் 1919க்கு அழையுங்கள் பாடசாலைகள் 208 க்கு பூட்டு நாட்டையே உலுக்கிய தாழமுக்கம், இங்கிருந்து, இந்தியாவின் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்த நிலையில், நாட்டில் நிலவியிருந்த சீரற்ற வானிலையால், அரநாயக்கவில் உள்ள சாமசர மலை, மூன்று கிராமங்களுக்குள் சரிந்து, பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரநாயக்க, எலஹபிட்டியவில் உள்ள சாமசர என்ற மலையின் ஒரு பகுதி, மலைக்குக் கீழுள்ள சிறிபுர, எலஹபிட்டிய மற்றும் பல்லேபாகய ஆகிய மூன்று கிராமங்களில் ஆங்காங்கே, சரிந்து படுத்துக்கொண்டுள்ளது. அந்த மூன்று கிராமங்களுக்குள்ளும், 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மண்ப…
-
- 0 replies
- 633 views
-
-
வவுனியா கூட்டுப்படை தலைமையம் மீதான தாக்குதலில் பங்கேற்ற 10 கரும்புலிகளினதும் வெலிஓயாப் பகுதிச் சண்டையில் வீரமரணமடைந்த 4 போராளிகளினதுமாக 14 போராளிகளின் உடலங்களை அரசு விடுதலைப்புலிகளிடம் ஐ சி ஆர் சி ஊடாக கையளித்துள்ளது. இச்செய்தியை.. பிபிசி/தமிழ் பிரசுரித்துள்ளது. வீரகாவியமான வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.
-
- 13 replies
- 3.3k views
-
-
மழையை பதுக்கி வைத்திருந்த கடவுளை நிதிமோசடி ஆணைக்குழுவுக்கு அழைக்க வேண்டும்: மஹிந்த நாட்டில் பல அழிவுகளை ஏற்படுத்திய இந்தளவு மழையை பதுக்கிவைத்திருந்த குற்றத்திற்காக கடவுளை பாரிய நிதிமோசடி குற்றப் பிரிவுக்கு அழைக்க வேண்டும் என பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றைய நல்லாட்சியின் செயற்பாடுகள் மேற்குறிப்பிட்டவாறே அமைந்துள்ளன எனவும் தெரிவித்தார். கெலிஓயா கரமட ஸ்ரீ வேலுவனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவ வீரர்களை நினைவு கூர்வதை இன்று தடுத்து நிறுத்தியுள்ளார்கள். கடந்த காலங்களில் ய…
-
- 2 replies
- 302 views
-
-
Published By: Digital Desk 3 26 Oct, 2025 | 05:16 PM புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். தனது வருகை தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில், இன்று யாழ்ப்பாணம் செல்கிறேன் என் நண்பர் பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும் மில்லர் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைக்கிறேன் நல்லிலக்கியங்களும் நவகலைகளும் ஒரு போர்ச்சமூகத்திலிருந்துதான் பூத்துவர முடியும் மனதின் வலியும் மார்பின் தழும்பும் கலையின் கச்சாப் பொருள்களாகும் ஈழத்தில் நல்ல கலைவடிவங்கள் மலர்வதற்கான காலச்சூடு உண்டு ஈழத் தமிழர் வெல்லட்டும்; தொட்டது துலங்கட்டும் என் நண்பரின் வளர்ச்சிக்கு வாழ்த்துச் சொல்லச் செல்கிறேன்; நாள…
-
-
- 21 replies
- 2.8k views
- 3 followers
-
-
இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மாஷல் ரொஷான் குணதிலக நேற்று முன்தினம் வவுனியா விமானப் படைத் தளத்துக்கு விஜயம் செய்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.விமானப் படைத் தளத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அவர் ஆராய்ந்ததுடன் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடந்த 9ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிட்ட அவர் படை அதிகாரிகளையும் சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். http://www.tamilseythi.com/srilanka/Airfor...2008-09-17.html
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்று வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் சந்தித்து கலந்துரையாடினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 953 views
-
-
மாவீரர் தின நிகழ்வில் பங்கேற்க லண்டன் செல்கிறார் வைகோ. சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 11:49 அடுத்த மாதம், நடக்கவுள்ள, மாவீரர் தின கூட்டத்தில் பங்கேற்க, ம.தி.மு.க பொதுச்செயலர், வைகோ லண்டன் செல்கிறார். இம்முறை லண்டனில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வில் உரை நிகழ்த்துவதற்கு, தமிழகத்திலிருந்து, இரு தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் ஒருவர், வைகோ . இதற்காக, நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம், அவர் ஏற்கனவே தனது பாஸ்போட்டை பெற்றுள்ளார். லண்டன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, வைகோ அடுத்த மாதம் லண்டன் செல்வார் எனதெரிவிக்கின்றன. http://thaaitamil.com/?p=36382
-
- 4 replies
- 695 views
-
-
17 Nov, 2025 | 04:19 PM வடக்கு மாகாணத்தில் நீடித்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் 'கழிவிலிருந்து மின்சார உற்பத்தி' (Waste-to-Energy) திட்டத்தை நிறுவுவதற்கான உதவியை இலங்கைக்கான கொரியக் குடியரசுத் தூதுவர் லீ மியோனிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்துள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (17) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கொரியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கான திட்டம் ஒன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக நிதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆ…
-
-
- 9 replies
- 721 views
- 1 follower
-
-
இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்து ஜப்பானில் அகதிகளாக புகலிடம்கோரி விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அகதிகளுக்கு உதவிவரும் தன்னார்வ நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரையான காலப்பகுதியில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,015ஐ அடைந்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. “மியன்மார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்தே கூடுதலானவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனைவிட இலங்கை, நேபாளம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் காணப்படும்ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த நாடுகளிலிருந்து புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என டோக்கியோவைத் தளமாகக் கொண்டியங்கும் அகதிகளுக்கான ஜப்பான் நிலையம் தெரிவித்துள்ளது. ஜப்பா…
-
- 1 reply
- 1.3k views
-
-
சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்! 27 Nov, 2025 | 11:54 AM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, மின்சாரத்தடை ஏற்பட்டால் இலங்கை மின்சார சபையின் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும். இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 03:06 PM நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/232771
-
-
- 22 replies
- 1.5k views
- 1 follower
-
-
விசா விண்ணப்பங்களைக் கையாள்வதில் தனது பொறுப்பைச் சரிவரச் செய்யாத காரணத்தால் கொழும்பிலுள்ள கனடிய தூதரகத்தின் முதலாவது செயலாளரை திருப்பியழைக்குமாறு கோரி கனடாவின் வெளிநாட்டு அமைச்சருக்கு மனு ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. தெற்காசிய சமாதானத்திற்கான நிறுவனத்தினால் இம்மனு தயாரிக்கப்பட்டுள்ளது. நவசமசமாஜக்கட்சியின் தலைவரை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று கனடிய அரசாங்கம் தெரிவித்த கூற்றினால் தாங்கள் உண்மையில் ஆச்சரியமடைந்ததாகவும் கனடியத் தூதரகத்தின் முதலாவது செயலாளர் மக்கென்னி , விக்ரமபாகு கருணாரத்னவின் பாஸ்போர்ட்டைச் சரியாக அவதானித்திருப்பாரேயானால் உண்மையைக் கண்டு பிடித்திருக்க முடியும் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லாமல் விக்ரமபாகு கருணாரட்ணவ…
-
- 0 replies
- 741 views
-
-
காணாமல் போன மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டுபிடிப்பு மாத்தளை நாவுல பகுதியில் காணமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தரம் 8 மற்றும் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணமல் போயுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி குறித்த இருவரும் காணமல் போயுள்ள நிலையில் 15 ஆம் திகதி குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனடிப்படையில் குறித்த மாணவர்கள் யாழ்பாணத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மாணவர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் பெ…
-
- 0 replies
- 323 views
-
-
வட மாகாணம் தொடர்ச்சியாக கல்வியில் வீழ்ச்சியடைவதற்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடே காரணம்- தவராசா (தி.சோபிதன்) வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ச்சியாக வீழ்ச்சியான நிலையில் காணப்படுவதற்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடே காரணம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது வெளியாகியுள்ள சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது வடக்கு மாகாணசபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடு. இதனை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது கல்வி கொள்கையில் மாற்ற…
-
- 5 replies
- 828 views
-
-
(செ. சுபதர்ஷனி) "இந்தியாவின் 'மான் பார்மசூட்டிகல்' நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 10 மருந்துகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அதே நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது. குறித்த நிறுவனத்திடம் மிருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சங்க ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் சஞ்ஜீவ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்: "பொதுமக்களுக்குத் தரமான மருந்துகளை விநியோகிப்பது அரசாங்கத்தி…
-
- 0 replies
- 107 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நான்காம் தலைமுறை யுத்த உபாயங்களைப் பயன்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக லக்பிம நாளேட்டின் ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவம் மூன்றாம் தலைமுறை யுத்த தந்திரோபாயங்களை பயன்படுத்தி களத்தில் வெற்றிகளை ஈட்டி வருகின்ற போதிலும், யுத்தம் தவிர்ந்த ஏனைய விடயங்களில் அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வான்,தரை மற்றும் கடல்வழி மூலமாக முழுப்படைப்பலத்தையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குல்களை மேற்கொள்வதே மூன்றாம் தலைமுறை யுத்த உபாயமாகும். யுத்த நடவடிக்கைகளுடன், சமய, கலாச்சார அரசியல் சக்திகளை இணைத்துக் கொண்டு இராஜதந்திர ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்படுப்பது நா…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெள்ளவத்தையில் ஹெரோய்ன்: மூவர் கைது ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருடன், மூவரை வெள்ளவத்தையில் வைத்து இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அந்த போதைப்பொருளை கடத்திய அதிசொகுசு கார்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து 7 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளின் பெறுமதி ஒருகோடி ரூபாவாகும் என்றும் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/175277/வ-ள-ளவத-த-ய-ல-ஹ-ர-ய-ன-ம-வர-க-த-#sthash.BZyI0nPb.dpuf
-
- 6 replies
- 477 views
-
-
இலங்கையில் போரில் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்டுள்ளோம். ஆனால் அதற்காக இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தமுடியாது. இலங்கையோடு நட்புறவை பேணிவருகின்றோம். இந்தியாவின் பிராந்திய நலனிற்கு இலங்கை தீவின் நட்புறவு அவசியமாகின்றது. நாங்கள் இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இப் பிராந்தியத்தில் காலூன்ற வழிவகுத்துவிடும். எனவே உங்கள் பாதுகாப்பு தேவைகளுக்கு எங்கும் அலையவேண்டிய அவசியம் இல்லை நாங்கள் இருக்கின்றோம் என இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றோம் ( He said Colombo had been told that India would "look after your security requirements, provided you do not look around. ) எங்கள் முற்றத்தை சர்வதேச நாடுகளின் விளையாட்டு ம…
-
- 2 replies
- 1.5k views
-
-
புத்தளம் பாலாவிப் பிரதேசத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைக்க சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விமானநிலையக் கட்டுமானப் பணிகளுக்கு 750 மில்லியன் ரூபா செலவிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. புதிய விமானநிலையக் கட்டுமானத்துக்கு 26 ஹெக்டயர் நிலம் அபகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் விமானநிலையங்களை புனரமைப்புச் செய்யும் நிதித் திட்டத்தின்கீழ் இந்தப் புதிய விமானநிலையம் அமைக்கப்படவுள்ளது. இதன்படி மட்டக்களப்பில் அமைந்துள்ள விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் புத்தளம் பாலாவியில் சிறிய விமானநிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனையே தற்போ…
-
- 0 replies
- 274 views
-
-
மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு வெவ்வேறு மின்பட்டியல் அனைத்து பாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனங்களுக்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபையினால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக ஒரே மின்சார கட்டணப…
-
- 0 replies
- 627 views
-
-
கொழும்பு வெள்ளவத்தை காவல்நிலைய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறீலங்காவின் பயங்காரவாத தடுப்புப் பிரிவினரால் திருகோணமலையில் கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட இளைஞன் வெள்ளவத்தை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். குறிப்பிட்ட இளைஞன் திருகோணமலையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், கொழும்பில் கைது செய்யப்பட்டதாக மற்றொரு தகவல் கூறுகின்றது. இவர் சயனைட் அருந்தியே உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், வதைகளின்போது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்வதற்கு சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர…
-
- 0 replies
- 1.6k views
-