Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பஸ்ஸில் பயணிக்க முயன்ற 10, 11 வயதை உடைய சிறுவர்கள் மூவர் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் முற்றவெளியில் உள்ள யாழ்.தனியார் பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பெற்றோருக்குத் தெரியாமலே இந்தச் சிறுவர்கள் மூவரும் இந்தச் செயலில் ஈடுபட்டதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது: வண்ணார்பண்ணையைச் சேர்ந்த இந்த மூன்று சிறுவர்களும் அந்தப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கின்றனர். இவர்களில் இருவர் சகோதரர்கள், மற்றவர் அயல் வீட்டைச் சேர்ந்தவர். …

  2. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? : ஆதரவளிக்க முடியாத நிலைப்பாட்டில் கட்சிகள் (ஆர்.யசி) எதிர்க் கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எந்தவித முன்னறிவித்தலும் இல்லை. சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்தாலும் ஆதரிப்பது தொடர்பில் கட்சிக்குள் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் தெரிவித்தன. பாராளுமன்றத்தில் தனிக் கட்சியாக அங்கீகாரம் பெறாத நபர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் கட்சிகள் தெரிவித்தன. எதிர்க் கட்சி…

  3. நாட்டுக்கு வருகைதரும் விமானங்கள் இன்று நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தம் கொரோனா என்னும் கொவிட் 19 வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக இலங்கைக்கு விமானங்கள் வருவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த தீர்மானம் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு செயலணியுடன் நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இ…

    • 1 reply
    • 331 views
  4. Published By: Vishnu 12 Sep, 2025 | 06:25 PM (எம்.மனோசித்ரா) இந்திய அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முன்னணி நிறுவனமான, மத்திய கடலோரப் பொறியியல் மற்றும் மீன்வள நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர், கடந்த 8 முதல் 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்தனர். இந்த விஜயம், வடக்கு மாகாணத்தில் முன்மொழியப்பட்ட பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்த குழுவினர், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரைச் சந்தித்து, அமைச்சின் அதிகாரிகளுடனும் கலந்…

  5. திருகோணமலையில் விறகு வெட்டச் சென்றுகொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 689 views
  6. வவுனியாவில் இருமுனை முன்நகர்வு முறியடிப்பு: 7 படையினர் பலி; 17 பேர் படுகாயம் [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 08:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை மற்றும் குஞ்சுக்குளம் பகுதிகள் ஊடாக சிறிலங்காப் படையினர் இரு முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாலமோட்டை மற்றும் குஞ்சுக்குளம் பகுதிகள் ஊடாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் தமது பின்தளங்களில் இருந்து செறிவான எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தீவிர …

  7. இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில், இங்கிலாந்தை வென்ற சந்தோசத்தில் நாட்டு மக்கள் திளைத்திருந்த ஆரவாரத்தை பயன்படுத்துக்கொண்டு இந்த அரசாங்கம், இரவோடு இரவாக டீசல் விலையை உயர்த்தி விட்டது. இனி, அடுத்து நாம் இந்தியாவை வென்றால், பெட்ரோல் விலையையும், உலக கிண்ணத்தை வென்றால், மண்ணெண்ணெய், பால்மா, காஸ், சீனி விலைகளையும் இந்த அரசாங்கம் உயர்த்தலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். டீசல் விலையுயர்வு தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, கிரிக்கட் போட்டியில் பெற்ற வெற்றி ஆரவாரத்தில் மக்கள் மூழ்கி இருக்கும் போது இந்த அரசாங்கம் சந்தடி சாக்கில் இந்த விலையுயர்வுகளை செய்கிறது. இது தேரோட்டங்களின் போது சங்கிலி அறுப்பதை போன்ற திருட்டு செயலாகும். கொழும்…

  8. மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் - சந்திரிக்கா மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற கால மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்று வரும் விசேட கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் சமாதானத்தை வென்றெடுக்க கடந்த அரசாங்…

  9. திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினை நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வியாழக்கிழமை (2) அளித்தார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய கு…

  10. 'எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடல் அன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறேன்' என வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக, நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன், இன்று காலை இதனைக் கூறினார். http://www.tamilmirror.lk/172498/%E0%AE%A8%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9E-%E0%AE%9A%E0%AE%B2-#sth…

    • 0 replies
    • 356 views
  11. (எம்.மனோசித்ரா) உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை 3A என்ற கட்டத்திலுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அதாவது இம் மாத நடுப்பகுதிக்குள் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறு அபாய கட்டத்திற்கு செல்லாமலிப்பதற்கு 3 காரணிகளை அரசாங்கத்திடம் முன்மொழிந்திருக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் , கொரோனா பரவலைக் குறைக்கும் வழிமுறையாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமெனின் அதனை 80 - 90 வீதமாகப் பேணுதல் அத்தியாவசியமாகும். எனினும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிக்கட…

  12. 4 Oct, 2025 | 01:04 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது என சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும். அந்த கட்டிடம் குறித்து நேற்று திங்கட்கிழமை (13) தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் குறிப்பிடும் போது அதில் எனது பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். அந்த கட்டிடம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித…

  13. சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லை : ஏற்றுக்கொண்டுள்ளார் அமைச்சர் இங்கே மார்ட்டே டோர்கெல்சன். நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளைப் பராமரிப்பது தொடர்பில் தமது நாட்டு சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லாதிருப்பதாக நோர்வே சிறுவர் நல விவகார அமைச்சர் (Inge Marte Torkelsen) இங்கே மார்ட்டே டோர்கெல்சன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து வெளிவருகின்ற அப்டன் போஸ்ட் (Aften Post) என்ற பத்திரிகை நேற்று 10ஆம் திகதி புதன்கிழமை வெளியிட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரம் இலங்கை ஊடகங்களின் வாயிலாக சர்வதேச மட்டத்திற்கு வந்துள…

  14. (எம்.எப்.எம்.பஸீர்) வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள சுய தனிமைப்படுதலுக்கு உள்ளாகுமாறு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். 14 நாள் தனிமைபப்டுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பிய நிலையில் 7 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தொற்றாளர்கள் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 ஆம் திகதி 8 பேரும், 4 ஆம் திகதி மூன்று…

    • 0 replies
    • 262 views
  15. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 லிருந்து 6 ஆகக் குறைந்துள்ளது. 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில், 24 வாக்காளர்களின் குறைவினாலேயே இந்த நிலைமைஏற்பட்டுள்ளது என்று தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. 2016ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கான பதிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த ஆண்டு தகுதியுடைய சகலரையும் பதிவு செய்ய வைப்பதன்மூலம், இந்த எண்ணிக்கை மாற்றத்தைச் சரி செய்ய முடியும் என்றும் தேர்தல்கள் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் (யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நிர்…

    • 3 replies
    • 531 views
  16. வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம்! வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தல் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவச உத்தரவை செயற்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் வாகனங்களில் பயணிப்போர் உட்பட …

  17. [size=4][/size] [size=4]தெவிநுவரவுக்கு அப்பால் நடுக்கடலில் இடம்பெற்ற திகில் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.[/size] [size=4] [/size] [size=4]இந்த சம்பவத்தின் போது மூன்று மீனவர்கள் காணாமல் போனதுடன் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்;றின் மீது தோணியொன்றில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இம்மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.[/size] [size=4]ரோலர் படகில் இருந்தவர்களை தோணியில் வந்தவர்கள் தாக்கியபோது, ரோலர் படகில் தலைவரும் அவர்களுடன் சேர்ந்து ரோலரில் இர…

  18. கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெர்சிண்டா ஆர்டன் முதலிடம் பிடித்துள்ளார். சிங்கப்பூர் , ஐஸ்லாந்து ,ஒஸ்ரியா , பின்லாந்து ,நோர்வே கனடா ,தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் முதல் ஏழு இடங்களை பிடித்துள்ள அதேவேளை எட்டாம் இடத்தை ஹொங்கொங் நாட்டின் தலைவரும் 9 வது இடத்தை இலங்கையின் தலைவரும் பிடித்துள்ளனர். அவுஸ்ரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் ஐ சி எம் ஏ நிறுவனம் வெளியிட்டுள்ள தரப்பட்டியலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமருக்கு 38 வது இடமும் அமெரிக்க அதிபருக்கு 70 வது இடமும் பிரிட்டன் பிரதமருக்கு 88 வது இடமும் இந்த பட்டியலில் கிடைத்துள்ளது. https://www.madawalaenews.com/2020/04/9…

    • 1 reply
    • 461 views
  19. 17 Nov, 2025 | 12:27 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு - குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நயினாதீவில் இருந்து இறுதி படகு சேவை மாலை 05 மணிக்கும், குறிகாட்டுவானில் இருந்து இறுதி படகு சேவை மாலை 5.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது. அதேநேரம் வழமையான ஏனைய சேவை நேரங்களில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/230551

  20. சட்டமும் நீதியும் தப்பிக்கொள்ளுமா? 02.10.2008 ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து... பின்னர் மனிதனைக் கடித்ததாம் என்று பேச்சு வழக்கில் ஒரு வாசகம். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அதன் ஆழம் புலப்படுவதில்லை. ஆனால் நடைமுறையில் நோக்கினால் அது மெத்தவும் அர்த்தம் உள்ளது. முதலில் ஒரு தீய பழக்கத்தைச் செய்பவன், அதற் கான தண்டனையைப் பெறாவிட்டால், அல்லது தட்டிக்கேட்க எவருமில்லை என்றால் அதனைக் கட்டுப்பாடு இன்றி, தங்கு தடையின்றிச் செய்யத் தூண்டப்படுவான்; செய்வான். தட்டிக்கேட்க எவருமில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்பதும் அதனையே வெளிப்படுத்தி நிற்கிறது. நாடுகளின் ஆட்சிக் கட்டிலில் இருப்போரும் அவர்களின் ஆதரவாளர்கள், அடியாள்களும் இந்த வகையைச் சார்ந்தவர்களே என்பதனை எடுத்துக…

  21. மகிந்தவின் நாமத்தை உச்சரித்தால் சகல பிரச்சினைகளும் தீரும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் சபையில் சொன்னாலும் சொன்னார். அவர் சொல்லி வாய் மூடும் முன் அநுராதபுரம் மல்வத்து ஓய பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்றிற்கு இனவாதிகள் தீ வைத்து விட்டார்கள். அதிலும் இஸ்லாமிய சகோதர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கால கட்டத்தில் பெருநாள் பரிசு என இதை செய்து தந்துள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் அவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.அனுராதபுரம் மல்வத்து ஓய மத்ரஸா கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நா…

  22. வன்னிப் பகுதியில் அதிகரித்திருக்கும் மோதல்களால் கிளிநொச்சி நகரப் பகுதியிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் தலைமையாகக் கொண்ட மனித நேய அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கிய அரசாங்கப் படைகளின் வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்பொழுது முல்லைத்தீவை நோக்கி இடம்பெயர்ந்திருப்பதாக மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. “பெரும்பாலும் கிளிநொச்சியில் தங்கியிருந்த அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்” என அந்த ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு…

    • 3 replies
    • 2.2k views
  23. தமிழர் தாயகத்தை அழிக்க ஒருபோதும் இடமளியோம்! - பேரினவாதப் பிடியிலிருந்து எமது நிலத்தை மீட்டே தீருவோம்!! - இராஜேஸ்வரன் 'தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது வளங்களை அபகரித்து, சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இதனூடாக தமிழர் தாயகத்தை இல்லாதொழித்து சிங்கள மயமாக்கப்பட்ட பகுதிகளாக எமது மாகாணங்களை சித்திரிக்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுகின்றது. இதற்கு தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இடமளிக்காது.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்முள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து …

  24. 1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, மேலிடத்து அரச உத்தரவின் பேரில் ஆயுதங்கள் தம்வசமிருந்தும் விடுதலைப்புலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடமிருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைத்து விட்டு, சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் தமிழ் பேசும் சமூகத்தைச்சார்ந்த முஸ்லிம்களாவார்கள். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி, ஒரு வாரத்தில், கிழக்கு விடுதலைப்புலிகளின் கட்டளைத்தலைமைகளான கருணா அம்மான் மற்றும் கரிகாலன் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்க, 800 பொலிஸ் பாதுகாப்புப் படையினரின் உயிர் தாரை வார்க்கப்பட்டது. சரணடைந்தவர்கள் திருக்கோவில் பகு…

    • 0 replies
    • 346 views
  25. அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு! 08 Dec, 2025 | 03:33 PM நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான நிலைமைகள் காரணமாக மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் மாரடைப்பு , ஏனைய இதய நோய்கள், மனநல பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படுவதற்கான ஆபத்து காணப்படுவதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232773

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.