ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் சிங்களப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
''இது கொதிநிலையா? இல்லை உறைநிலையா?''' "சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இன அழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவ, பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேச சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்குமென எமது மக்கள் இன்றைய புனித நாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்''. தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர், தனது மாவீரர் தின உரையில் சர்வதேசத்திற்கு விடுத்த வேண்டுகோள் இதுவாகும். சர்வதேச நாடுகளின் பிராந்திய, பூகோள நலனைப் புரிவதாக ஏற்றுக் கொண்டு, இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ வேண்டுமாயின் தமிழ் ம…
-
- 0 replies
- 1.6k views
-
-
Joint New Year Message from World-wide Tamil Organizations and Entities: A Solemn Pledge to Work for Justice, Protection, and Freedom of the Tamil People January 01, 2015 On this New Year’s Day, January 1, 2015, Tamil organizations and entities around the world pledge our renewed commitment to bring dignity, freedom, justice, and peace to our Tamil brethren living in the occupied NorthEast region constituting the Tamil Nation in the island of Sri Lanka. We are united in our quest for freedom for our people who have been oppressed by successive Sri Lankan regimes. We thank the International Community for leading and supporting the Resolution at the March 2014 Sessi…
-
- 1 reply
- 1.6k views
-
-
தென்பகுதி மக்களே நல்லது நடந்துள்ளது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-23 10:17:58| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேறியுள்ளது. இவ்வாறு நிறைவேறிய தீர்மானம் எத்தரப்புக்கு வெற்றியென்று யாரேனும் கேட்பார்களாயின் அது அறியாமையின் பாற்பட்டதாகும். ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நேற்றுவாக்கெடுப்பில் நிறைவேறி உள்ளது என்ற செய்தியால், சிங்கள மக்கள் கவலை கொள்வதோ அல்லது அரசாங்கம் வேதனைப்படுவதோ அர்த்தமற்றவை. உண்மையில் தீர்மானம் நிறைவேறியதையிட்டு இலங்கை மக்கள் அனைவரும் ஆனந்த மடையவேண்டும். ஏனெனில் இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வதேசம் ஒரு ம…
-
- 15 replies
- 1.6k views
-
-
சரத் பொன்சேகாவின் அராஜகத்தனம் கொழும்பு இராணுவத் தலைமையகத்துக்குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த சரத் பொன்சேகா மீண்டும் இராணுவ அதிகாரியாகப் பொறுப்பெடுத்திருக்கிறார். மிக உயிராபத்தான கட்டத்தில் இருந்து தப்பி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சரத் பொன்சேகா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் நாடு திரும்பினார். அடுத்த கட்டமாக அவர் கடமையைப் பொறுப்பெடுத்துள்ளார். இராணுவத் தளபதியாக மீளவும் பொறுப்பெடுத்த நிலையில் தமிழர் தாயகம் மீதான விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. சரத் பொன்சேகா தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த போது சிங்களப் படைகளிடையே ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்புக்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவுத்தளமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரி தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்க அரச துறை துணை உதவிச் செயலாளரான டொனால்ட் கேம்ப் இந்தச் செய்தியை கொழும்பில் விட்டிருக்கின்றார். இதன் மூலம் தென்னிலங்கை இனவாத சக்திகள் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றன. ஏற்கனவே இந்தியா விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்தது. இந்தியா தடை செய்த போது கொழும்பு அரசியல் விமர்சகர்கள் இனி விடுதலைப்புலிகளால் தலைநிமிர முடியாது எனக் கூறி வந்தனர். ஆனால் இந்தியாவின…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தீவில் நடைபெறும் நம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால், தமிழீழம் மீதான தனது இறுதித் தாக்குதலை இந்தியா ஆரம்பித்து விட்டதாகவே தெரிகின்றது. இதை மேலோட்டமாகப் பார்த்தால், கேலிக்குரியதாகத் தோன்றலாம். நம்ப முடியாததாகக் கருதலாம். ஆனாலும், கள யதார்த்தம் இதையே எடுத்துரைக்கின்றது. தமிழீழம் மீதான இறுதித் தாக்குதல் என்பதால், விமானங்கள் குண்டு வீசுகின்றன, பீரங்கிகள் குண்டுகளைப் பொழிகின்றன, கிளாஸ்ரர் குண்டுகள் வீழ்ந்து வெடிக்கின்றன, எரி குண்டுகள் வீழ்ந்து அனைத்தையும் பஸ்பமாக்குகின்றன என்ற முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு இதனைப் பார்க்க முற்படாதீர்கள். தற்போது, ஆயுதம் எடுத்துத்தான் தமிழர்களை அழிக்கவேண்டும், சிதைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியாவுக்கும் கிடையாது. ஆயுதம் எது…
-
- 3 replies
- 1.6k views
-
-
இருநாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு கத்தோலிக்க தேவாலயங்கள் அழைப்பு சிறீலங்கா கத்தோலிக்க தேவாலயங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவையும் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் 48 மணித்தியாலங்களுக்கு போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்காவில் கிறீஸ்தவர்கள் கொண்டாடும் கிறீஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 11 replies
- 1.6k views
-
-
களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள். சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. வன்னிக்களம் இன்று மிகச்சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு விட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது எ…
-
- 4 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா! October 15, 2018 நடிகர் பாக்கியராஜூம் கலந்து கொண்டார்!! கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள இயக்குநர் இமயம் பாரதிராஜா மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்காக தமிழகத்தை சேர்ந…
-
- 23 replies
- 1.6k views
-
-
எலிஸபெத் மகாராணி முடி சூடி 60 ஆண்டுகள் பூர்த்தி விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன், பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மாவுடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக்களின் போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirr...6-09-02-47.html
-
- 0 replies
- 1.6k views
-
-
வடமராட்சியில் ஒரே இரவில் 5 வீடுகளில் கொள்ளை வடமராட்சி நெல்லியடி மற்றும் வதிரிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் கொள்ளைச் சம்பவத்தின் போது பொதுமக்கள் மீது வாள் வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நேற்றிரவு சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் சிறீலங்காப் படைப்புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவினரும் 5 வீடுகளில் இவ்வாறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளன. 15 பேரளவில் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள வீடு ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட கொள்ளைச் சம்பவம் வதிரிச் சந்தி வரை …
-
- 7 replies
- 1.6k views
-
-
ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடுகளில் வசித்து வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து, கொழும்பில் உள்ள பொருளாதார கேந்திர நிலையங்கள் மீது புலிகள் தாக்கல் நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் வசித்து வரும் விடுதலைப்புலிகள் பெருமளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு சென்ற வண்ணம் உள்ளதாகவும் புலனாய்வு துறையினர் கூறியுள்ளனர். இவர்களில் அதிகமானோர் சிங்கபூர், மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தே சென்றுள்ளதாகவும் இவ்வாறு இலங்கை சென்றுள்ள இவர்கள் புலிகளின் ஆலோசனை கிடைக்கும் வரை கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கியு…
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக நேற்றுமுன்தினம் மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு முன்னால் இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்தியா தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை உலக அரங்கில் தக்கவைத்துக் கொள்வதற்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள பெரிய, சிறிய நாடுகளையெல்லாம் தங்களுடைய (இந்தியா) கண்பார்வையில் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளையெல்லாம் தொடர்ந்து தங்களுடைய (இந்தியா) கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதற்…
-
- 7 replies
- 1.6k views
-
-
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மேற்கு மாந்தை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று காலையும் பாரிய எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
சிறீலங்காவுக்கு பிரித்தானியா காலக்கெடு Monday, June 20, 2011, 11:22 உலகம் சிறீலங்காவில் காணப்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இந்த வருடத்தின் முடிவுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவலக அமைச்சர் அலிஸ்ரர் பேட் இந்த காலக்கெடுவை விதித்துள்ளார். சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக சுயாதீன விசாரணைகள் அவசியம் என தெரிவித்துள்ள பேட், இது தொடர்பில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை தாம் இந்த வருட …
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
நேற்றிரவு பொலிஸாரின் யாழ்ப்பானத்தில் முற்றுக்கு உள்ளான சுமங்கலி என்ற விபசார விடுதியின் உரிமையாளர் பிரபல தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நேற்றிரவு (13) நடத்திய சுற்றி வளைப்பின் போது முற்றுகைக்கு உள்ளான விபசார விடுதி ஒன்றிலிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே..யாழ் நகரப் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்த விடுதி முற்றுகையிடப்பட்டது.. இந்த முற்றுகையின் போது விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஐந்து பெண்களையும் அவர்களுடன் எட்டு ஆண்களையும் யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறிப்பிட்ட இந்த விடுதி நீண்ட காலமாக விபச்சார …
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:- யாழ்ப்பாண மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளதாக காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களின் 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குழுவொன்றினால் இந்த ஆட்கடத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசாங்கமும், காவற்துறையினரும் கூறுகின்றனர். சுமார் 6 லட்சத்து, 70 ஆயிரம் மக்கள் வாழும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 13 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு ப…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் முன்னோடியாக செயற்பட்டு வந்தமையினாலேயே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை செய்யப்பட்டார் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாராளுமன்றம் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. வழமையான தின பணிகள் முடிவடைந்ததும் மேற்படி பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவித்ததாவது : தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் ஒரு பயங்கரவாதி. அவரது செயற்பாடுகளை தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை…
-
- 4 replies
- 1.6k views
-
-
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளையே மக்கள் ஆதரிக்க வேண்டும்! - பொங்குதமிழுக்கு மனோ கணேசன் செவ்வி!! வடக்குக் கிழக்கிலே இருந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டிக் கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கும், இரு தேசம் ஒரு நாடு என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கும் நியாயமான அடிப்படைகள் இருக்கின்றன. இதனை யாரும் நிராகரிக்க முடியாது. வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசிய வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும். அது கட்டாயமானது. கூட்டமைப்பா அல்லது மக்கள் முன்னணியா என்பதை மக்கள் முடிவு செய்வர். வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எந்தவொரு பெருந்தேசிய வாதக்கட்சிக்கும் வாக்களிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லைஎன கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ …
-
- 7 replies
- 1.6k views
-
-
ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக றட்ணா: ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். விடுதலைப்புலிகளையும் தமிழர்களையும் வேறுபடுத்தி விட்டோம் என்று கருதிக் கொள்ளும் சிங்களப் பேரினவாத அரசியல், இராணுவக் கூத்தாடிகளுக்கு இப்பொழுது பெரும் கொண்டாட்டம். சிங்கள வார இறுதிப் பத்திரிகையான லங்காதீபவில் கோத்தாபயவின் முழு பக்க செவ்வி இன்று (31‐5‐09) வெளியாகியுள்ளது. இதனை வாசிக்கத் தலைப்படும் எந்தவொரு தன்மானமுள்ள தமிழரும் ஆவேசம் கொள்ளாமல் இருக்கவே மாட்டார்கள். தமிழர் பேராட்டத்தினைக் கொச்சைப்படுத்தி அவர் கூறியிருக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது வேதனையும், புலிகளின் மௌனம் மீதான எரிச்சலினையுமே ஏற்படுத்துகின்றன. சில ஊடகங்கள் செவ…
-
- 1 reply
- 1.6k views
-
-
உண்ணாவிரதம்… கல்லூரிப் புறக்கணிப்பு… ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் ஈழ விவகாரத்தில் விடிவு வேண்டி எத்தனையோ போராட்டங்கள் அனுதினமும் நடந்து கொண்டி ருக்கின்றன. அதற்கெல்லாம் கொஞ்சமும் பலனில்லாமல் போனதாலோ என்னவோ… உணர்வைப் பிளிற வைக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை இந்த சமூகத்தின் முன்னால் எழுதி வைத்துவிட்டு, தீக்குளித்து உயிரை விட்டிருக்கிறார் முத்துக்குமார் என்ற இளைஞர். p42 ஜனவரி 29-ம் தேதி, சென்னை சாஸ்திரி பவனில் ஏதேதோ வேலைகளோடு பலரும் காத்திருக்க, அவர்களின் கைகளில் ஒளியச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு, முத்துக்குமார் தன் உடலில் தீவைத்துக்கொள்ள… அதன் பிறகே நிகழும் கொடூரம் பலருக்கும் தெரிந்து அலறி இருக்கிறார்கள். தின்றது போதுமென நினைத்து, தீ கரிக்கட்டைய…
-
- 6 replies
- 1.6k views
-
-
எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வெருவருடைய தனிப்பட்ட சுதந்திரம். ஆனால், மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை இன்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என முன்னாள் மூத்த போராளி காக்கா அண்ணா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், https://www.ibctamil.com/srilanka/80/146274
-
- 10 replies
- 1.6k views
-
-
இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகள் தொடர்பாக சவேந்திர சில்வாவே பொறுப்புக்கூற வேண்டுமென தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், போர்க்குற்றவாளியாக முன்னிறுத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் …
-
- 8 replies
- 1.6k views
-
-
மும்பையின் தாக்குதலுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அலட்சியம்தான் காரணம் என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 'மும்பை தாக்குதல் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் அளித்தும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சிறீலங்கா அரசுத் தலைவர் ராஜபக்சவுடன் கைகோர்த்துக்கொண்டு அவருக்கு படைத்துறை உதவிகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தினார் எனவும் வைகோ கூறினார். சிறீலங்கா படையினர் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிறீலங்கா வழியாக இந்தியாவின் தெற்கு பகுதியில் நுழைந்து தாக்கும் ஆபத்து உள்ளதாகவும் கூறிய வைகோ, இந்திய அரசு இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். http://www.tami…
-
- 6 replies
- 1.6k views
-