ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது! – சர்வதேச சமூகத்தைக் கோருகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித். [Thursday, 2014-03-06 07:55:13] நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சர்வதேச சமூகம் செயற்படக் கூடாது என கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையில் மனிதஉரிமை மீறல் இடம்பெற்றதாகத் தெரிவித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோருவது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகவே கருதப்பட வேண்டும்.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றே வழங்கப்பட வேண்டும். உள்நாட்டு பிரச்சினைகளை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதும், வெளிநாட்டுப் பிரச்சினைகளை உள்நாட்டுக்கு எடுத்துச் செல்வதும் ஆர…
-
- 6 replies
- 491 views
-
-
கண்டியில் கிளைமோர் தாக்குதல் - சிறப்பு அதிரடிப் படையின் உயர் அதிகாரி உபுல் செனிவிரத்தின பலி சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் உபுல் செனிவிரத்தின இன்று அதிகாலை 4.00 மணியளவில் கண்டியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பணிக்காக அவர் சென்று கொண்டிந்தவேளை அவரது ஊர்தி கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. நன்றி : சங்கதி
-
- 6 replies
- 2.2k views
-
-
கொழும்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடக்கு முதல்வருக்கு இடையில் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சீ.வி.விக்னேஸ்வரன் அவதானம் செலுத்தி வருவதாக அண்மைக்காலமாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், அவ்வாறான நடவடிக்கையில் தற்போது வரை ஈடுபடவில்லை என முதலமைச்சர் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தோல்வி கண்டுவிட்டதாக தமிழ் மக்கள் பேரவையின் அ…
-
- 6 replies
- 950 views
-
-
புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும்: பௌச்சரிடம் மகிந்த. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும் என்று அமெரிக்கப் பிரதிநிதி பௌச்சரிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பௌச்சருடனான சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை விட்டுவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடுகிற போதும் பேச்சு நடத்த அரசாங்கம் விரும்புகிறது என்றும் மகிந்த கூறியுள்ளார். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திர மறுப்பு, ஊடகவியலாளர்களுக்கான கொலை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பிலான அமெரிக்காவின் கவலையை மகிந்தவிடம் பௌச்சர் தெரிவித்தார். சிறிலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக…
-
- 6 replies
- 1.8k views
-
-
மன்னாரில் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் தாக்கியழிப்பு: 5 இராணுவத்தினர் பலி புதன்கிழமை 27 யூன் 2007 05:53 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் தள்ளாடியில் இருந்து மன்னார் நோக்கிய பகுதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 5 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தள்ளாடி படைத்தளத்தில் இருந்து மன்னார்ப் பக்கமான இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் மீது அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அக்காவலரண்களை அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் 5 இராணுவத்தினர் கொல்லப்படஇ இழப்புக்களுடன் இராணுவ…
-
- 6 replies
- 2.3k views
-
-
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த அமைதிப் பேச்சும் புலிகளோடு நாடாளுமன்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அனைத்து கட்சிகளை இணைத்துக் கொண்டே நடைபெறும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது இலங்கை அரசு. அரசின் இந்த நிலைப்பாட்டை அரசின் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கெல நேற்று வெளியிட்டார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு தமிழ் தலைவர்களும் தீர்வு யோசனைகளை முன் வைத்திருக்கின்றனர். இதன் மூலம் புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும், புலிகளுடன் மாத்திரம் பேச்சு நடத்துவது என்பது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப்…
-
- 6 replies
- 2.2k views
-
-
ப.தெய்வீகன் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் மகிந்த ராஜபக்ச அரசின்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அவர்கள் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்கள் பல தளங்களில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் - குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் - ஏற்படுத்தியிருக்கின்றன.நேர்காணலை பார்த்த ஓவ்வொருவரும் - அதன் உள்ளடக்கங்களை ஒவ்வொன்றாக உருவி எடுத்து - தமக்கு தமக்கு தேவையான விடயங்களை பொதுவெளியில் செய்தியாக முன்வைக்கும்போது எது சுவாரஸ்யம்மிக்கது என்ற அடிப்படையிலும் எது ஜனரஞ்சகசுவை மிக்கது என்ற கோதாவிலும் எடைபோட்டு அவற்றை மட்டும் தனி அலைவரிசையில் தாங்கி சென்று அவற்றுக்கு வியாக்கியானம் கொ…
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியி…
-
-
- 6 replies
- 398 views
-
-
சார்க் அங்கத்துவ நாடுகளின் அங்கீகாரத்துடன் 'சார்க் உணவு வங்கி' விரைவில் இயங்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளில் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன. அதேவேளை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏனைய உறுப்புநாடுகளின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாகவும், உணவு வங்கி ஸ்தாபிக்கும் பிரகடனத்திற்கு அவை அங்கீகாரம் வழங்கியதுடன் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 2007 ஏப்ரல் 3ஆம் திகதி இந்தியாவில் கடைசியாக இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டில் சார்க் உணவு வங்கியை உருவாக்குவதற்கான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப…
-
- 6 replies
- 1.2k views
-
-
புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானித்து ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா உட்பட அனைத்துச் சாவதேச முன்னணி நாடுகளின் அரசாங்கங்களும் அதனைச் சட்டவிரோத அமைப்பாக அறிவித்து விட்ட நிலையில் தற்போது உலகமெங்கும் புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாதத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இவ்வாறு அண்மைக்காலங்களில் பிரிட்டன் உற்பட ஐரோபிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் லண்டன் டவுனிஸ் வீதி 10ம் இலக்கத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன் புலிகள் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி…
-
- 6 replies
- 2.5k views
-
-
பிறையன் செனவிரட்ன சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். “An 81-year-old Brisbane doctor was locked in a small cell without food, water or toilet access for more than five hours yesterday before being deported back to Australia from Singapore. Dr Brian Senewiratne, a Sri Lankan-born Australian who has been a long-time critic of the Sri Lankan Government over its treatment of Tamils, was on his way to Malaysia and Indonesia to speak at forums on the Tamil refugee issue.” says Tamil Refugee Council. Brian_Senewiratne_ colombotelegraph Dr. Brian Senewiratne He said yesterday he was locked up during his Singapore airport stop-over after being told he was not…
-
- 6 replies
- 778 views
-
-
"பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பிய முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது. "பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்…
-
- 6 replies
- 740 views
-
-
வன்னியில் ஈழத்தமிழர், ஒரு மனிதப் பேரவலத்தை எதிர் கொண்டிருக்கின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (All Party Parliamentary Group for Tamils (APPG-T);; உதவியுடன் பிரித்தானிய தமிழர் பேரவையால் ஒழுங்குசெய்யப்பட்ட “உலகத் தமிழர் பேரவை” என்ற சர்வதேச மாநாட்டின் இறுதி நாள் வியாழக்கிழமை 26ம் திகதி மார்ச் மாதம் இலண்டனிலுள்ள Crown Plaza விடுதியில் நடைபெற்றது. நியூசிலாந்து அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா கனடா வரையான 22 நாடுகளிலிருந்து 45 தமிழ் அறிவாளிகள், துறைசார் வல்லுனர்கள் மற்றும் இளையோர் இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையில் தமிழர் எதிர்நோக்கிவரும் மனித அவலம், அரசின் இன அழிப்பை அம்பலப்படுத்தல், பேச்சுவார…
-
- 6 replies
- 909 views
-
-
விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம் அம்பலமாகியுள்ளது - அனந்தி சசிதரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் இடப்படவில்லை என்பதே எனது கருத்தாகும் என தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம் அம்பலமாகியுள்ளதாக குறிபப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் எம்மை மேடையில் ஏற்றவில்லை மாறாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே த…
-
- 6 replies
- 1.4k views
-
-
அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள் -நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய ஒருவரை, பணத்தைக் கட்ட தகுதியில்லை என்றால், பிச்சை எடுத்துக் கட்டுமாறு, உரத்த குரலில் தெரிவித்துள்ளார். இது மாத்திரமன்றி பல கிராமங்களில் அலுவலக நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் செல்லும் நிதி நிறுவன ஊழியர்கள் ம…
-
- 6 replies
- 723 views
-
-
கடற்புலிகள் தளபதிகளில் ஒரவரான விநாயகம் நலமாக இருக்கிறார்: கொழும்பு ஊடகம் பரபரப்பு தகவல். [sunday, 2010-11-14 04:47:53] கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதமளவில் சாலை பகுதியில் நிலைகொண்டிருந்த 55 ஆவது படையணியினர் மீதான ஊடறுப்பு தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கடற்புலிகளின் துணைத்தளபதி கேணல் விநாயகம் தற்போது வெளிநாடு ஒன்றில் நலமாக இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடற்புலிகள் தளபதிகளில் ஒரவரான விநாயகம் கொல்லப்பட்டதாக சிறீலங்கா படைத்தரப்பு பல தடவைகள் உறுதிப்படுத்தியபோதும், அவரின் சடலம் கைப்பற்றப்படவில்லை. கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தமது கொல்லப்பட்ட தளபதிகளையோ அல்லது போரளிகளையோ விடுதலைப்புலிக…
-
- 6 replies
- 2.1k views
-
-
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சீன தூதரக அதிகாரிகளின் விஜயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனால் அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் அச்சமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான மக்கள் தொகையில் தமிழர்களும் முஸ்லிம்களுமே உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. சீனத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஹ வெய் தலைமையிலான உயர்மட்டக் குழு ஜனவரி மாதம் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. அங்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல், பாடசாலை உபகரணங்களை வழங்குதல் மற்றும் இப்பகுதி முழுவதும் உள்ள தொலைதூர கிராமங்களில் குடிநீர் ஆலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை ச…
-
- 6 replies
- 1.1k views
-
-
இறுதிப் போரில் ஐ.நா நடந்து கொண்டவிதம் சரியானதா? – மீளாய்வு செய்ய அதிகாரி நியமனம்! Published on September 14, 2011-9:33 am இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அதிகாரி ஒருவரை பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ளார். ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா அகமட் ஓபெய்ட் என்ற அதிகாரியே இதற்கென நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. செயலகம் அறிவித்துள்ளது. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையின் போரில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக ஐ.நா. போது வலயத்தில் …
-
- 6 replies
- 778 views
-
-
முருக பக்தர்களுக்கு மிருக அடி (கத்தறாகம - ஸிரி லன்கா) http://www.tamilnation.org/tamileelam/demo...kathirgamam.htm
-
- 6 replies
- 4.6k views
-
-
அரசியல் தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே தருணம் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் கூறுகிறார் வீரகேசரி நாளேடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவமும் நீதியும் கிடைக்க இந்தியா உதவ வேண்டும். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவுகளை கண்டுள்ளனர். எனவே, அரசியல் ரீதியிலான தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே சரியான தருணமாகும் என்று "இந்து' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராம் தெரிவித்தார். இலங்கையில் இந்திய சமூகத்தினரால் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இரவு விருந்துபசாரமொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ராம் இவ்வாறு தெரிவித்தார். அ…
-
- 6 replies
- 2.4k views
-
-
இலங்கை தனித்து பெளத்த சிங்கள நாடு என்ற மமதைத்தனம் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது. நாட்டின் வர்த்தக முயற்சிகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதிலும் குறிப்பாக சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியானது பல்வேறு துறைகளிலும் பாதிப்பை விளைவித்துள்ளது. இவை ஒருபுறமிருக்க, உயிர்த்தஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக் குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை என்பதாக இப்போது கதை விடப்படுகிறது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து குறித்த குண்டுத்தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத…
-
- 6 replies
- 876 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சில கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய குறுஞ் செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/222311/ஜனாதிபதி-தேர்தலில்-போட்டியிடுமாறு-கோரிக்கை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது- சி.வி வெறும் வாய் மூல உறுதிப்பாட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டு இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது என்று வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்…
-
- 6 replies
- 1.3k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று தேர் த…
-
-
- 6 replies
- 486 views
-
-
கோத்தபாய – பசில் இன்று இந்தியா பயணமாகின்றனர் - புதுடெல்லியில் அவசர சந்திப்புகள் ஏற்பாடு - இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை அழைப்பு: ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் இன்று இந்தியா பயணமாகின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதுடன் இதன் போது, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் பிரச்சினைகள் குறித்து, நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில், பசில், மற்றும் கோத்தபாய ஆகியோர் புதுடெல்லி செல்கின…
-
- 6 replies
- 1.9k views
-
-
வீரகேசரி இணையம் - பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடனும் சமத்துவத்துடனும் தமிழ் மக்கள் வாழ வேண்டும். இதற்காக நாம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றோம். ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டாலும் அரசியல் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிந்துவிட்டன எனக் கூறி வரும் அரசாங்கத்தின் கூற்றைப் பொய்ப்பித்து உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டத்தக்க வகையில் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம், வவுனியா நகர சபைகளுக்கான தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன…
-
- 6 replies
- 946 views
-