ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசியலுக்கு என்னை அழைத்து என் அமைதியை கெடுத்தவர் மனோகணேசன்! நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து கொண்டு இருந்த என்னை அரசியலுக்கு அழைத்து என் அமைதியை கெடுத்தவர் அமைச்சர் மனோகணேசன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர்களால் அமைக்கப்படவுள்ள மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1875களில் தென்னிந்திய திருச்சபையினால் சாவகச்சேர…
-
- 1 reply
- 690 views
-
-
சிறிலங்கா காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் பலரும் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் நாட்டம் காட்டி வருகின்றனர். படைத்துறை அதிகாரிகளுக்கு தூதரகங்களிலும் அமைச்சுக்களிலும் அரசு உயர் பதவிகளை வழங்கி வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் அரசியலில் குதித்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 510 views
-
-
அரசியலுக்கு புதியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியில்லை, சீறும் மாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியையும் வடகிழக்கு இணைப்பையும் கைவிட்டுள்ளதாக இந்த மண்ணுக்கு புதியவர்கள், அரசியலுக்கு புதியவர்கள் விமர்சிக்கிறார்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா விசனம் வெளியிட்டுள்ளார். கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58 ஆவது நினைவு தினம் நேற்று மாலை கோப்பாயில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் பல சந்தர்ப்பங்களில் பல இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ…
-
- 2 replies
- 784 views
-
-
அரசியலுக்கு பொருத்தமற்றவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த் தலைவர்களின் பொறுப்பற்ற கருத்துக்களின் காணரமாகவே, சிங்கள மக்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் தீர்வை எதிர்ப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவின் கட்டமைப்பின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இந்த முறைமையிலான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கும் தரப்பினருக்கு தாம் ஆதரவளிப்பதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விக…
-
- 0 replies
- 400 views
-
-
அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு பிரதிநிதித்துவ அரசியல் முறையிலிருந்து ஒதுங்குவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை (20) விடுத்துள்ள அறிக்கையில், '1981ஆம் ஆண்டு தொடங்கிய எனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளதாகவும் எதிர்காலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற, மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. பிரதிநிதித்துவ அரசியல் முறையிலிருந்து விலகுவதுடன், இனி எந்தவொரு கட்சியிலும் தேசியப்பட்டியலின் மூலமோ, எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது வேறு ஏதேனும் முறையில் நாடாளுமன்றத்துக்கோ, மாகாண சபைக்கோ மக்கள் பிரதிநிதியாகச் செல்லப்போவதில்லை' என்றார். 'சமகால அர…
-
- 0 replies
- 389 views
-
-
அரசியலுக்கு வரத் தயார்! - கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு [Friday 2016-01-22 07:00] மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டுக்…
-
- 8 replies
- 695 views
-
-
அரசியலுக்கு வரமாட்டேன்! - என்கிறார் கோத்தபாய [sunday 2015-06-14 07:00] அரசியலில் ஈடுபடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாதுக்க உடுமுல்ல கல்லென் மஹா விஹாரையில் நடைபெற்ற போதி பூஜை வழிபாடுகளின் பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த போது நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர் எனக்குத் தகவல்களை வழங்குவதில்லை, இதனால் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து எனக்குத் தெரியாது. எனது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நாட்டுக்கு சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தே…
-
- 0 replies
- 468 views
-
-
அரசியலுக்கு வரவே மாட்டேன் - வேலன் சுவாமிகள் April 16, 2021 நான் ஒருபோதும் கட்சி அரசியலுக்கோ, தேர்தல் அரசியலுக்கோ வரமாட்டேன் என்று வேலன் சுவாமிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் கொள்கைக்கு அமைய அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கலாம் என்ற கருத்து முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பிலேயே வேலன் சுவாமிகள் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். “பொத்துவில் …
-
- 3 replies
- 988 views
-
-
அரசியலுக்கு வருகிறார் விமுக்தி குமாரதுங்க;புதிய கட்சியில் இணையவும் தீர்மானம் -சி.எல்.சிசில்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்குக் கொண்டுவருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா கட்சியின் கீழ் இது இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது. புதிய கட்சி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சர்களுடனும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கலந்துரையாடியுள்ளார். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன…
-
- 0 replies
- 204 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ எதிர்காலத்தில் செயற்பாட்டு அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா மிரர் இணையத்தள பிரதம செய்தியாளர் நேற்று (06) நேர்காணலின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அரசியல் ஈடுபடுவதற்கு அடிப்படையில் தமக்கு எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை என்ற போதிலும், தற்போது அரசியலுக்கு வரவேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். பல்வேறு காரணங்களையும், ஏராளமானோரின் வேண்டுகோள்களையும் கருத்திற்கொண்டு இறுதித் தீர்மானம் ஒன்றை தான் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எந்தக் கட்சியின் ஊடாக தான் அரசியலில் ஈடுபடுவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்ட…
-
- 1 reply
- 347 views
-
-
இலங்கை அரசியலில் சில தரப்பினரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகா, அரசியல் செயற்பாடுகளுக்கு விடைகொடுத்து விட்டு அமெரிக்கா சென்று குடியேறவுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. தனது விடுதலை என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளதன் காரணமாக தனது மனைவியை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்த சரத் பொன்சேகா விரும்பியிருந்தும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலானோர் இதற்கு இணக்கம் தெரிவிக்காமையே அனோமாவின் அரசியல் துறவறத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி சரத் பொன்சேகாவின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றில் அனோமா பொன்சேகாவையும் கலந்து கொள்ளச் செய்யவுள்ள சரத் பொன்சேகாவின் தீர்மானத்து…
-
- 1 reply
- 779 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். 2010 மற்றும் 2015 ஆம் வருடங்களில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பெரும்பான்மையானவர்களின்…
-
- 7 replies
- 955 views
-
-
அரசியலுக்குள் கால் பதித்தார் ஆதிவாசிப் பெண் இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக ஆதிவாசிப் பெண் ஒருவர் அரசியலுக்குள் உள்நுழைந்துள்ளார் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தெஹியத்தக்கண்டிய- ஹேனாநிகல தெற்கு மற்றும் வடக்கில் போட்டியிட்ட 37 வயதான டபிள்யு. எம். ஷிரோமாலா என்றப் பெண்ணே வெற்றிப்பெற்று உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்வி பொதுதராதர சாதாரணதரம் வரை கல்வி பயின்றுள்ள இவர், 1369 வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். தான் பெற்ற வெற்றிப் பெற்றமைத் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ” தன்னுடைய மக்களுக்காகவும், அழிந்து செல்லும் …
-
- 0 replies
- 479 views
-
-
அரசியலுக்குள் பிரவேசிக்கும் உத்தேசம் இல்லை! - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதியரசர் விக்னேஸ்வரன்!! 'தற்போதைக்கு அரசியலுக்குள் பிரவேசிக்கும் உத்தேசம் எனக்கு இல்லை. வடக்கில் முதலமைச்சர் பதவியை விரும்பியதுமில்லை. சமூகப் பணிகளில் ஈடுபடவே நான் விரும்புகின்றேன். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேண்டிய அறிவுரைகளை வெளியிலிருந்து நான் வழங்கிக்கொண்டிருப்பேன்' என முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அரசியலுக்குள் பிரவேசிக்கவுள்ளார் எனவும், அவரை வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசித்து வருகின்றது எனவும் அண்மை நாட்களாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நி…
-
- 4 replies
- 802 views
-
-
அரசியலுக்குள் மீண்டும் வரமாட்டேன், சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிப்பேன் – சந்திரிகா அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ஆனால் இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிக்கத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து புதிய தலைவருடன் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்து, ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சுதந்திரக் கட்சியின் முடிவையும் அவர் கண்டித்தார். அத்தோடு ராஜபக்ஷர்கள் பின்பற்றும் அரசியலை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் இருப்பினும் பிரத…
-
- 3 replies
- 687 views
-
-
'நான் அரசியலுக்கென வளர்க்கப்பட்டவனோ அல்லது அதற்கு பழக்கபட்வனோ அல்ல கரடுமுரடான 15 வருட ஆயுத போராட்டத்தில் என்னை அர்ப்பணித்து அப்போராட்டத் தலைமையின் தவறான வழி நடத்தலை உணர்ந்து, காலகாலமாக அல்லல்பட்ட அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியலில் பிவேசம் செய்ததவன். முதலமைச்ர் பதவியானது நான் விரும்பிய ஒன்றல்ல. ஆனாலும் மாகாணத்தின் சகோதரத்துவம். இன ஐக்கியம், அபிவிருத்தி போன்றவற்றிற்காக மக்கள் தந்த ஆணை' பதுளை ஊவா முகாமைத்துவ வள நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற முதலலைச்சர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு பிள்ளையான் தெரிவித்துள்ளான். அவன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் : கௌரவம் மிக்க முதலமைச்சர்களின் இந்தச் சந்திப்பை எம் மக்களின் அரசியல…
-
- 7 replies
- 1.6k views
-
-
யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவருவது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைதூதுவராலய அதிகாரிகளான நட்ராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் நேரடியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் இம்மிரட்டலை விடுத்துள்ளனர். இந்தியா புலிகள் எவ்வகையிலும் மீளெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென மிரட்டலில் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப் போராடிய நாங்கள், ஆயுதமின்றி ஜனநாயக ரீதியில், நடைபெறறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீள்பிரவேசம…
-
- 3 replies
- 1.5k views
-
-
சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றிரவு ஜெனீவாவிற்கு பயணமாகியுள்ளார் என அறியப்படுகிறது. பல்வேறு நாடுகளின் அரச பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் இந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஒருவராக கலந்து கொள்ளும் அதே வேளையில் தமிழ் பேசும் மக்களால் அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு எமது மக்கள் அடைய வேண்டிய அரசியலுரிமை சுதந்திரம் குறித்து பன்னாட்டு அரச பிரதிந…
-
- 7 replies
- 978 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிக…
-
- 108 replies
- 13k views
- 1 follower
-
-
அரசியலை விட்டு விலகமாட்டேன் – விஜயகலா திட்டவட்டம் அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன். விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற வேண்டும் என்று ஏன் கூறினீர்கள் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “இந்தவிடயம் தொடர்பான விசாரணைகள் முடியும் போது இதற்கான பதில் கிடைத்து விடும். எனினும், இனவெறுப்பை தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிடவில்லை. நான் அமைச்சர் பதவியை இழந்திருக்கக் கூடும், ஆனாலும், அரசியலை விட்டு விலக மாட்டேன். தொடர்ந்து மக்களைப் பிரதிநிதித்துவ…
-
- 0 replies
- 211 views
-
-
அரசியலைக் கைவிட்டார் பசில்- சிறிலங்காவுக்கு இனித் திரும்பி வரமாட்டாராம் MAR 05, 2015 | 0:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும், எனவே, அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு கோரமாட்டார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவே கடந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்குப் பெர்றுப்பாளராக இருந்தவர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், கம்பகா மாவட்ட அமைப்பாளராகவும் இரு…
-
- 1 reply
- 547 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் – சுமந்திரனிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கோமகன் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.. சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவுமாறு கோரி அனை…
-
- 3 replies
- 324 views
-
-
அரசியல் - இராணுவ வழிகள் இரண்டும் கலந்தே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் இந்தியாவும் இந்த அணுகுமுறையை ஆதரிப்பதாகப் புதுடில்லியில் போகொல்லாகம புதுடில்லி,ஏப்ரல் 3 எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு, அரசியல் மற்றும் இராணுவ வழிகள் கலந்த அணுகுமுறையைக் கைக்கொண்டே தீர்வு காண்பதற்கு முடிவுசெய்துள்ளோம். மேற்படி அணுகுமுறை மூலமான எமது முயற்சியை இந்தியாவும் ஆதரிக்கிறது. இவ்வாறு இங்கு தெரிவித்தார் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம. நாளை ஆரம்பமாகும் "சார்க்' நாடுகளின் 14ஆவது உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் நேற்றுச் சந்தித்துப் பேசினர். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே இலங்கை அமைச்சர் முன்கண்டவாறு தெரிவித்தார்.…
-
- 1 reply
- 757 views
-
-
அரசியல் – பொருளாதார, நிலைமையை தீர்க்க... இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து, முன்மொழிவு! தேசிய கொள்கைக்கான தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் குழு, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய சுருக்கமான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்தே இந்த முன்மொழிவுகள் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு நட்பான புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வ…
-
- 0 replies
- 137 views
-
-
அரசியல் ‘வெடிப்பு’களுக்கும் விடுதலைப்புலிகள் காரணமா? எந்தவொரு சம்பவம் இடம்பெற்றாலும் அதை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டுவது இலங்கை அரசியலில் ஒரு மரபாகவே மாறிவிட்டது. ஜ.தே.க ஆட்சியின் போது சரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின் போதும் சரி இதுதான் வழக்கம். மங்கள சமரவீர, அநுரா பண்டாரநாயக்க அணியின் நடவடிக்கையின் பின்னணியில் புலிகளே இருப்பதாகவும் அவர்களின் திட்டப்படியே இவர்கள் செயற்படுகின்றார்கள் என்பது அரச தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும். கடந்த மாதம் வரை வெளிவிவகார அமைச்சராக எந்த அரசில் மங்களசமரவீர அங்கம் வகித்து சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தாரே – அதே அரசுதான் இப்படியொரு குற்றச்சாட்டை முன்…
-
- 9 replies
- 3.3k views
-