ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 56 தூதுவர்கள், இராஜதந்திரிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வடக்கில் போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கவே இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர். யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மீள்குடியேற்றம், மிதிவெடி, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வீதி அபிவிருத்தி, நீர் விநியோகம், தொடருந்துசேவை, விவசாயத்து…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதற்காக வாக்களித்தாலும், எந்தவொரு அரசாங்கத்திலும் இடம்பெறாது என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சட்டரீதியற்ற முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்பதால், தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களித்தது. ஆனால், எந்தவொரு கூட்டணியிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேராது. அது தமிழ்க் கட்சிகளுடன் தனிக்கான கூட்டணியை வைத்திருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐதேக தலைமையிலான கூட்டணியில் கூட்டமைப்பு இணைந்து கொள்ளுமா என்று ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://www.pu…
-
- 1 reply
- 1.5k views
-
-
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட ஈ.பி.டி.பி. ஏகமனதாக தீர்மானித்துள்ளது..... தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22092
-
- 16 replies
- 1.5k views
-
-
நேற்று 25 ஆம் திகதி யூலை மாதம் 4 மணிக்கு இலண்டன் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் Trafalgar square எனும் இடத்தில் 50 வரையிலான இளையோர்கள் அகவணக்கத்துடன் தங்கள் 25 மணித்தியால உண்ணாவிரதபு போராட்டத்தை மகளிர் அமைப்புடன் இணைந்து ஆரம்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து சில இளையோர் மற்றும் மகளிர் அந்த வழியால் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கறுப்பு யூலை பற்றிய துண்டுபிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் போராட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள கூடாரத்தைச் சுற்றி கோசப் பதாதைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து தமிழ் இளையோர்களும் கறுப்பு யூலை என முன் பக்கத்திலும் 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் தமிழ் இன ஒழிப்பை நடாத்திக்கொண்டிருக்கின்றது என்று பின் பக்கத்திலும் ஆங்க…
-
- 9 replies
- 1.5k views
-
-
25மில்லியன் பொருட்கள் கொழும்பு காபரில் சிக்கின யாப்பானில் இருந்து மோட்டா் ஊா்திகளை இறங்குமதி செய்வதற்கு தயராக இருந்த கொண்டேனா் பெட்டி ஒன்று சுங்க திணைக்கள பிரிவால் கையகப் படுத்துள்ள.// மேலும் பார்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=932
-
- 1 reply
- 1.5k views
-
-
"மகிந்த ராஜபக்ச எனும் ஒரு இனவாத யுத்த விரும்பியை அம்பலப்படுத்திய அல்ஜசீரா" [திங்கட்கிழமை, 25 யூன் 2007, 16:49 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரச தலைவராக உள்ள மகிந்த ராஜபக்சவை நேர்காணல் செய்ததன் மூலம் ஒரு இனவாத யுத்த விரும்பியை அல்ஜசீரா தொலைக்காட்சி அம்லப்படுத்தியுள்ளதாக "நான்காம் உலகத்தின் அனைத்துலகக் குழு" இணையத்தளத்தின் செய்தி ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவின் அல்ஜசீரா தொலைக்காட்சி நேர்காணல் குறித்து எழுதப்பட்ட அந்த ஆய்வு: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கடந்த மாதம் மத்திய கிழக்கிற்கு சென்றிருந்த போது, அல்ஜசீராவிற்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்தை பாதுகாத…
-
- 0 replies
- 1.5k views
-
-
~இது அல்ல போர் தர்மம், ஆமாம் ஊடக தர்மமும் இதுவல்ல| -பரணி கிருஸ்ணரஜனி- கன்னியாகுமரி மீனவர்கள் கடத்தப்பட்ட விவகாரமும் பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமும் தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் தமிழ்த்திரைப்படங்களில் வரும் திரைக்கதையை விஞ்சும் அளவிற்கு திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கின்றன. ஏற்கனவே ஐந்து மீனவர்கள் படுகொலை, 'மரியா" என்ற படகில் வைத்து ஐந்து புலிகள் கைது செய்யப்பட்டமை, கடத்தப்பட்ட ஒரு மீனவர் மாலைதீவிற்கு அருகில் ஒரு மர்மக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டமை என்று பல உதிரிக்கதைகளாலும் கிளைக்கதைகளாலும் பல திருப்புக் காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைக்கதையின் சிருஸ்டிகர்த்தாக்களான சிங்கள அரச புலனாய்வுத்துறையினருக்கும் இந்திய மத்திய புலனாய்வுத்துறையினருக்கும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் மக்களது உணர்வுகளுக்கு எவ்வளவு தூரம் இலங்கை அரசாங்கம் முக்கியத்தும் அளித்து செயற்படுகின்றது என்பதனை அடிப்படையாக வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் என தெற்காசிய பாதுகாப்பு ஆய்வாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பூரணமாக பெற்றுக்கொள்ள கொழும்பு அரசாங்கம் காட்டும் முனைப்பைப் பொருத்து புலிகளின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான தமிழர்கள் பாதுகாப்பற்ற தன்மையையே தற்போது உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். மரபு ரீதியான இராணுவப் படைப் பிரிவொன்றையும், மரபு சாரா போரட்டக் குழுவொன்றினையும் ஒப்பீடு செய்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்…
-
- 3 replies
- 1.5k views
-
-
எதிர்காலத்தில் சிங்கள மக்கள் பாதுகாப்பு தேடி மேல் மாகாணத்துக்கு வரும் நிலை ஏற்படும் ஐ.தே.க. எம்.பி. ஜோன் அமரதுங்க வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பூர்வீக பூமிக்கு அருகில் யால வனத்துக்குள் ஊடுருவி புலிகள் தாக்குதலை நடத்துகின்றனர். எதிர்காலத்தில் தென் பகுதியிலுள்ள சிங்களவர்கள் பாதுகாப்புக்காக மேல் மாகாணத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. ஜோன் அமரதுங்க தெரிவித்தார். இலங்கை நிவாரண நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் யுனிசெப் நிறுவனம் புலிகளுக்கு உதவி வழங்கியமையானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் யுனிசெப் மீதான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். எத…
-
- 0 replies
- 1.5k views
-
-
நான் செத்தாவது ஏனையோரை..! பிரித்தானியச் சிறையிலிருந்து சுதாகரன் சற்றுமுன் ஜீரீவீ யில் வெளிச்சம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இதிலே பிரித்தானியாவில் அகதித் தஞ்சம்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் திருப்பியனுப்பவது தொடர்பான விடயம் பேசப்பட்டது. இதில் திருப்பியனுப்புவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திரு சுதாகரன் என்பவருடன் உரையாடியிருந்தார்கள். அந்த உரையாடல் நெஞ்சைப்பிழிவதாக உள்ளது. தமிழினம் தொடர்ந்தும் இழக்கும் இனமாகவே இருக்கிறதே என்ற ஆதங்கமே எழுகின்றது. ஏன் எமக்கு இப்படி? எப்படி இதைத் தடுக்கலாம்? சுதாகரன் சொல்லிய கருத்தின் சாராம்சம்……..(இவர் ஒருமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்) அதாவது தன்னையர்பணித்தாவது திருப்பியனுப்பப்படவிருக்கும் ஏனையோரைக் காப்பதே …
-
- 7 replies
- 1.5k views
-
-
போர்நிறுத்தத்தை விட்டு விலகவேண்டி விசேட ஆராதனைப் போராட்டம். கண்டி தலதாமாளிகையில் சிறீலங்கா அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி 22ம் திகதிக்கு முன் அதாவது போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன் அதனைகைவிட வேண்டும் எனகோரி பெருமளவிலான பௌத்த பிக்குமார் இணைந்து ஆராதனை போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார்கள். தேசிய பிக்குகள் முன்னணி இவ்விசேட ஆராதனையை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை என்.ஐ.யு, ஜே.வி.பி ஆகியன இணைந்து எதிர்வரும் 22ம் திகதி போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடன் கைவிடவேண்டி கொழும்பு கைட்பாக் பகுதியில் பொதுகூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்கள் -Pathivu-
-
- 5 replies
- 1.5k views
-
-
-
ஓநாய்களும் ஆடுகளும் கூட்டணி வைக்க முடியாது. பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாக பெரிய எடுப்பில் பத்துத் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து "தமிழ்க் கட்சிகளின் அரங்கு" என்ற அலங்காரப் பெயரோடு தொடக்கப்பட்ட கூட்டணி அற்ப ஆயுளில் உயிரை விட்டுள்ளது. ஆட்சித்தலைவர் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கட்டுக்காசை இழந்த அண்ணர் சிவாஜிலிங்கம் அவர்கள்தான் இந்த அரங்கு மேடையேற உழைத்தவர். அவருக்கு போக்கிடம் இல்லாததால் ஒரு கடிதத் தலைப்புக் கட்சி ஒன்றைப் பதிவு செய்து அரசியல் வியாபாரம் செய்து வருகிறார். அந்தக் கட்சிக்குப் பெயர் தமிழ்த் தேசிய விடுலைக் கூட்டமைப்பு. சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம். தலைவர் சிறீகாந்தா. ஆனால் சிறீகாந்தாவின் சத்தத்தைக் காணோம். எங்கேயாவது கு…
-
- 2 replies
- 1.5k views
-
-
கிழக்கு மாகாணத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மீட்பு வெற்றி விழாவில் வைத்து அறிவிப்பாராம் கிழக்கு மாகாணத்தை முற்றாக புலி களின் பிடியிலிருந்து விடுவித்தமை தொடர் பான அரசின் வெற்றி விழா நாளை மறு தினம் வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும். அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள் ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பை விடுப்பார். பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல் கள் அமைச்சர் கரு ஜயசூரிய இத்தகவ லைத் தெரிவித்தார். மீட்கப்பட்ட கிழக்கு மாகாணம் பல பகுதிகளாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவின் அபிவிருத்திக்கும் பொறுப்பாக ஒவ்வொரு அமைச்சர் நியமிக்கப்படுவார் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். நேற்று கொழும்பில் அரச தக…
-
- 3 replies
- 1.5k views
-
-
Mar 27, 2011 / பகுதி: செய்தி / ரணிலுக்கு சந்திரிக்கா கொடுத்த முத்தம் கடந்த வியாழக்கிழமை (24) தனது 62 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடிய ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்க குமாரணதுங்கா கட்டியணைத்து முத்தமிட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த புதன்கிழமை (23) கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஐ.தே.கவின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருநதார். அதற்கு மறுதினம் அவரின் 62 ஆவது பிறந்ததினம். பிறந்ததினத்தன்று ரணிலின் நெருங்கிய நண்பர் மலிக் சமரவிக்கிரம சினமன் கிரான்ட் ஆடம்பரவிடுதியின் கடல் உணவு உணவகத்தில் இரவு விருந்து ஒன்றை ரணில…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் சிவப்பு மழை.. விருத்தாசலத்தில் மஞ்சள் மழை- மக்கள் பீதி Posted by: Mathi Published: Tuesday, December 18, 2012, 10:04 [iST] விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிகுப்பத்தில் திடீரென மஞ்சள் மழை பெய்ததால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர். புதுவிருத்தகிரிகுப்பம் கிராமத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் திடீரென வானம் இருண்டது. பின்னர் 15 நிமிடம் கழித்து மழை கொட்டியது. ஆனால் மழையின் நிறத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மஞ்சள் நிறத்தில் மாவு போல் மழை பெய்ததால் அமில மழை என நினைத்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 'அமில மழை' பெய்வதாக பக்கத்து கிராமங்களுக்கும் தகவல் பரவ பரபரப்பு பற்றிக் கொண்டது. ஏற்கனவே இலங்கையில் சிவப்பு மழ…
-
- 7 replies
- 1.5k views
-
-
பிரித்தானியாவில் பரபரப்பு... இலங்கையரிகளின் உறுப்புக்கள் விற்பனை அம்பலம்..... (படம் இணைப்பு) மனித உடலில் சிறுநீரகம் மற்றும் உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல் என பிரித்தானிய பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சட்ட வல்லுநர் சார்லாட் எல்வேஸ் அத தெரணவிடம் தெரிவித்தார். இலங்கையில் நபர்களிடம் இருந்து உடல் உறுப்புக்களை விலைக்கு கொள்வனவு செய்யும் மர்ம திட்டமொன்றில் பிரித்தானிய பிரஜைகள் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. முகப்புத்தகத்தை (facebook) பயன்படுத்தி இந்த திட்டம் மிகவும் சூட்சமமாக முன்னெடுக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாற்று சுற்றுலா என்ற திட்டத்தின் கீழ் உடல் உறுப்புக்கள் 75,000 டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது சர்வதேச ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
யார் இந்த பிரபாகரன்…? Posted by: on Dec 3, 2010 தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன் தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் . இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை அரசாங்கப் படையினர் தமிழ் மக்களை சித்திரவதை செய்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவப் படைவீரர்கள் போன்று சீருடை அணிந்த நபர்கள் இரண்டு பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக வீடியோ காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இயங்கி வரும் செனல் ‐ 4 தொலைக்காட்சி சேவை இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. நிர்வாண நிலையில் கண்கள் கட்டப்பட்ட இரண்டு பேரை இராணுவ சீருடையணிந்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுகொலை செய்வதாக வீடியோ காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த காட்சி கையடக்கத் தொலைபேசி கமரா மூலம் ஒளிப்பதிவு செய்ததாக குறிப்பிடப்படுகிறது. எவ்…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
வாட்டர் ஷெட் இராணுவ நடவடிக்கையும் பின்னணியும் கே.பி. அறிவன்- "எல்லா சண்டைகளும் நிலத்திற்காக பிடிக்கும் சண்டைகளாகவே இருக்கின்றன. இந்த சிங்கள குடியேற்றங்களான யான் ஓயா, மல்வத்து ஓயா, மதுரு ஓயா ஆகியன நிலத்தினை பிடிப்பதற்காகவே பொலநறுவை மாவட்டத்தில் 45,000 குடும்பங்களை குடியேற்றியுள்ளோம். அதேபோல் யான் ஓயாவிலும் குடியேற்றியுள்ளோம். மூன்றாவதாக மல்வத்து ஓயவில் குடியேற்றம் செய்து கொண்டிருக்கின்றோம். இது ஈழத்தினை எதிர்ப்பதற்காக அந்தத் தாயக கோட்பாட்டிற்கு எதிராக செய்கின்றோம். யான் ஓயாவில் சிங்கள மக்களை குடியேற்றுகின்றோம். அத்துடன் மேலும் 50000 மக்களை குடியேற்றுவதன் மூலம் சிங்கள மக்களின் சனத்தொகையினை அதிகரித்து திருகோணமலையினை தமிழர்களிடம் இருந்து காப்பாற்றமுடியும்" - இது 1990 …
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை வழக்கு விசாரணை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கானது இன்றையதினம் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்குத்தாக்கலானது மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கனது கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது பெப்ரவரி 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கனது இன்றைய தினம் யாழ் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்…
-
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
என்கிறார் வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச சமூகம் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது. அதேவேளை விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு சர்வதேச சமூகம் பாரியளவில் அழுத்தம் கொடுக்கவேண்டும். இலங்கையின் வரைபடத்தில் புலிகள் வலயம் என்று ஒன்று இல்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இனிவரும் காலங்களில் வெளிநாட்டு தூதுவர்கள் கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என்ற சம்பிரதாயபூர்வமான விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும். எந்தவொரு இக்கட்டான நிலைமையிலும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
இந்திய உள்துறை அமைச்சரான பழனியப்பன் சிதம்பரம், சீனா குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார். இலங்கையின் தென் கடலோரப் பகுதியில், உலகின் மிகவும் சுறு சுறுப்பான கடற்பாதையிலிருந்து பத்து மைல்கள் மட்டுமே தொலைவிலுள்ள உறக்கமடைந்து கிடந்த மீன்பிடி நகரான அம்பாந்தோட்டை பாரிய கட்டட வேலைகளில் அமிழ்ந்து போயுள்ளது. இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான வட கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இடம்பெறும் போரில் ஈடுபாடுள்ள ஒருவரின் மன நிலையிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் 21 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டது இக்கிராமம். எது எவ்வாறோ, சிறீலங்கா இராணுவம் துணிவுற்று எழுந்தமைக்கும், மேற்குலக அரசுகள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கூட அதிகாரமற்று…
-
- 4 replies
- 1.5k views
-
-
கொழும்பு: தமிழர் பிரச்சினை குறித்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இனி அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன் வைத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முயற்சி மீண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச சக்திகளை தலையீடு செய்ய முயற்சியாக உள்ளது. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசு விளக்கமளித்துள்ளது. http://thatstamil.oneindia.in/news/2011/05/05/sri-lanka-rejects-tna-s-demand-us-indian-official-aid0136.ht…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-