Jump to content

நான் செத்தாவது ஏனையோரை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் செத்தாவது ஏனையோரை..! பிரித்தானியச் சிறையிலிருந்து சுதாகரன்

சற்றுமுன் ஜீரீவீ யில் வெளிச்சம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இதிலே பிரித்தானியாவில் அகதித் தஞ்சம்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் திருப்பியனுப்பவது தொடர்பான விடயம் பேசப்பட்டது. இதில் திருப்பியனுப்புவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திரு சுதாகரன் என்பவருடன் உரையாடியிருந்தார்கள். அந்த உரையாடல் நெஞ்சைப்பிழிவதாக உள்ளது. தமிழினம் தொடர்ந்தும் இழக்கும் இனமாகவே இருக்கிறதே என்ற ஆதங்கமே எழுகின்றது. ஏன் எமக்கு இப்படி? எப்படி இதைத் தடுக்கலாம்? சுதாகரன் சொல்லிய கருத்தின் சாராம்சம்……..(இவர் ஒருமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்) அதாவது தன்னையர்பணித்தாவது திருப்பியனுப்பப்படவிருக்கும் ஏனையோரைக் காப்பதே தனது எண்ணம் எனத் தெரிவித்துள்ளார். ஏனெனில் திருப்பி அனுப்பவதற்காகப் பல பெண்பிள்ளைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களாம். பிரித்தானியாவில் இருந்து செல்வோர் காணமற்போகும் சம்பவங்கள் சிறிலங்காவில் நடைபெறும் சூழலில் இப்படியனுப்பப்படுவோரின் நிலை கவலைக்குரியதாகும். எனவே மற்றையோருக்காகத் தன்னையர்பணிக்கத் துணிந்த இந்த இளைஞனது நாடுகடத்தலைத் தடுக்க நாம் ஏதாவது செய்யாவிடின் நாங்கள்.....?

எனவே யாராவது ஒரு மனுவை ஆங்கிலத்தில் தயாரித்து இணைப்பீர்களாயின் நாம் அதனை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்து ஒரு அழுத்தத்தைக் கொடுக்கலாம். அதேவேளை பிரித்தானியா வாழ் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதூடாக இவர்களைப் பாதுகாக்க முயலலாம். ஊடகங்கள் உட்பட அனைவருக்கும் அனுப்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்திக்கு இப்படியான கருத்தெழுதுவதையிட்டு மன்னிக்கவும். கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கப் புலம்பெயர்ந்து வருபவர்கள் அனேகமாக இலண்டன் மாநகரத்தை நோக்கியே வருகின்றனர் அது இலாதுவிடின் பிரான்ஸ் யேர்மனி பேன்ற நாடுகள் இரண்டாம் பட்சமாக அமைகின்றது. மாறாக இவை தவிர்ந்த ஏனைய நல்ல நாடுகளும் இருக்கின்றன என்பதை யாரும் ஒப்புக்கொள்வதில்லை இலண்டனிலோ அன்றேல் ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய இடங்களிலோ அகதிஅந்தஸ்துக்கான விண்ணப்பம் நிராகிக்கப்பட்ட அனேகருக்கு, கடந்த காலங்களில் வேறு மாற்று யோசனைகளை நான் கூறியிருந்தேன் ஆனால் ஒரு காதில் வாங்கிவிட்டு மற்றக்காதால வெளிவிட்டு விடுவினம் நான் ஏதாவது சொன்னால் நக்கலாகவும் பாப்பினம். தயவுசெய்து தவறாக நினைக்கவேண்டாம் இலண்டன் தவிர நிம்மதியாக வாழ்வதற்கு உலகில் எத்தனையோ நாடுகள் இருக்கின்றன அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டோர் அந்நாடுகளைநோக்கிப் போவதே நல்லது. ஆனால் இப்போது காலம்கடந்துவிட்டது கைவிரல் அடையாளம் காட்டிக்கொடுத்துவிடும்.

Link to comment
Share on other sites

எந்தொரு தமிழனையும் நாடுகடத்துவது சரியா என இன்றிரவு ஏழு மணி செய்தியில் ஜொனதன் மிலர் வினவுவார் !

Jonathan Miller will be reporting on C4 news tonight at 7pm on the fresh evidence of war crimes and crimes against humanity which will form part of the documentary 'the killing fields of Sri Lanka' at 11.05pm.

He will also be asking the question whether it is right for the British Government to deport even a single Tamil when these conditions still prevail in Sri Lanka. Pl watch the news at 7pm and the documentary at 11.05pm tonight. Please share this with friends and family.

Link to comment
Share on other sites

--------------------------------------------------------------------------------------

Please take 30 seconds to send an email to Damian Green MP, Minister for Immigration, asking him to halt the deportations. His email address and a suggested email is below:

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Email: Privateoffice.external@homeoffice.gsi.gov.uk

FAO: Damian Green MP, Minister of State (Immigration)

Re: Sri Lanka - Stop the Deportations!

Dear Mr Green,

Human Rights abuses and political violence are widespread in Sri Lanka. This is an opinion shared by the US State Department, the British Foreign Office, Amnesty International, Human Rights Watch and countless other organisations. Sri Lanka is not a safe place, especially if you are identified as being an opponent of the current regime by your attempt to claim asylum in another country.

Yet this Thursday, June 16th, the British Government will send 300 asylum seekers back to Sri Lanka on a charter plane. Every passenger on that plane will be identifiable to the Sri Lankan Government as an asylum seeker. This is a government which "committed arbitrary and unlawful killings" (US State Department), and about which the World Organisation against Torture has "“received credible testimonies of torture from across the country" (FCO).

The Home Office's own operational guideline states that "applicants perceived to be active or influential in opposition to the Sri Lankan Government may be at risk of persecution by the state." But this does not go far enough, the endemic cases of disappearance and torture show that all people perceived as opponents of the Sri Lankan government are at risk.

Please use your power of Ministerial Discretion to halt mass deportations to Sri Lanka until you and your Foreign Office colleagues can be fully confident that they will not become yet further victims of the Sri Lankan government. If you fail to do this you will be making yourself responsible for their fate.

Yours sincerely,

Your Name

Your Address

Link to comment
Share on other sites

தஞ்சம் கோரும் விடயங்களில் சரியான தெளிவின்மையும் கவனமின்மையும்தான் இந்த விடயங்களுக்குக் காரணமாக அமைகின்றது. இங்கு நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான காரணங்களை முன்வைக்கும் போதும் அல்லது தஞ்சம் கோரும்போதும் அந் நாட்டின் சட்டங்களிடம் மோதாமல் மனிதாபிமானசட்டங்களிடம் சரணடைதலே பொருத்தமானது. இதனையும் நாடு கடத்தப்படும் தமிழருக்கான சட்டத்தரணிகள் கவனத்தில் எடுப்பார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.