Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் ரூபா. (4 வது இணைப்பு) ஜனாதிபதியின் தமிழ் உரையினை இங்கு கேட்கலாம் ) நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் 2009 ஆண்டில் அரசாங்கத்தின் முழு வருமானம்,855 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 779 பில்லியன் ரூபா வரி அறவீடுகள் மூலம் பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் முழு செலவு ஆயிரத்து 191.67 பில்லியன் ரூபாவாகும், இதனடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. துண்டு விழும் தொகையை ஈடு செய்ய 123.02 பில்லியன் ரூபா வெளிநாடுகளில் இருந்தும் 183.13 பில்லியன் …

  2. தொடர்கிறது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் : 5 பேர் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மயக்கம் நல்லாட்சி அரசு தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் நான்கு கைதிகள் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு நேற்று மயக்கமடைந்தனர். இதனையடுத்து மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலையை நேற்றைய தினம் சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதித்தனர். உடல்நிலை மோசமாகி மயக்கமடைந்திருந்த நான்கு கைதிகளையும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்…

  3. இரு கனேடிய தமிழர்களுக்கு கடும் சிறைத்தண்டனை ஆயுதக் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நியூயோர்க் மாநிலத்தின் கிழக்கு மாவட்ட நீதவான் ரெய்மன்ட் ஜே. டியாரியினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான சதாஜன் சராசந்திரன் மற்றும் 50 வயதான நடராசா யோகராஜா ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, சராசந்திரனுக்கு 26 ஆண்டுகால சிறைத்தண்டனையும், யோகராஜாவிற்கு 14 ஆண்டுகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனரக ஆயுதங்களை விடுதலைப் புலிகளின் சார்பில் கொள்வனவு முயற்சி மேற்கொண்ட குற்றத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்ட…

  4. நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரட்ணம், தாம் நிர்மாணித்த காலியன் குழுமத்தை மூடுவதற்குத் திட்டமிட்டுள்ளார். தமது நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இது குறித்த கடிதம் ஒன்றை அவர் நேற்று புதன்கிழமை எழுதியுள்ளார். அக்கடிதத்தின் பிரகாரம் முதலீட்டாளர்களும், பணியாளர்களும் வன்முறைகள் ஏதுமின்றி தமது பணத்தைச் சுமுகமாக பெற்று மீட்சியடைவதிலேயே அதிக அக்கறை காட்டுவதால், அவர்களின் பணம் வருகின்ற ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை தமது நிறுவனம் மற்றும் சில சொத்துக்களை வாங்க குறைந்தது ஒரு முக்கிய உத்தரவு குறித்தும் ராஜ் ராஜரட்ணம் கருத்தில் எடுத்துள்ளதா…

  5. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இந்தியாவின் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் பல என இந்தியாவிற்கு முரனான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. எனினும், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத நிலையில் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் பிராந்தியத்தின் தலைமைத்துவத்திற்கான தகுதியை இந்தியா இழந்து வருவதாகவும் இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை, இந்தியாவிற்கு பாதக விளைவுகளை ஏற்ப…

    • 6 replies
    • 1.5k views
  6. இலங்கை - இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா - லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

  7. பெரும் வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி "சார்க்' திரு விழா கொழும்பில் நடந்து முடிந்துவிட்டது. பாதுகாப்பு என்ற பெயரில் ஏகக் கெடுபிடி, நெருக்கடி களைத் தலைநகரத்து மக்கள் சார்க்கின் பெயரால் அனுப விக்க வேண்டியதாயிற்று. சுமார் முந்நூறு கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையை சுளையாக விழுங்கி, ஏப்பம் விட்டதோடு ஒருவாரகால "சார்க்' ஆரவாரம் முடிவுக்கு வந்திருக்கின்றது. "சார்க்' ஏற்பாடுகள் மற்றும் தடல்புடல் ஒழுங்குகளைப் பார்க்கும்போது உண்மைச் செலவினம் மேற்படி உத்தேசச் செலவினத்தைத் தாண்டி மேலும் பல கோடி ரூபாவை எட்டலாம் என்று கருதப்படுகின்றது. "சார்க்'கின் பெயரால் வாரி இறைக்கப்பட்டு, வீண் விரயம் செய்யப்பட்ட நாட்டின் நிதி மற்றும் பொருளாதார வளம் என்னவென்பது இனித்தான் மெல்ல மெல்ல அறிய தெரிய …

    • 0 replies
    • 1.5k views
  8. தமிழக அனைத்து கட்சிக்கூட்டத் தீர்மானம் பற்றி இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கருத்து [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 07:00 பி.ப ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து புதுடில்லியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் மன்மோகன்சிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மன்மோகன்சிங் அளித்துள்ள பதில்: இலங்கை சம்பவங்கள் வேதனையளிக்கிறது. டில்லியில் உள்ள சிறிலங்கா தூதர அதிகாரியை அழைத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் நிலவரங்களைக் கேட்டறிந்தார். இலங்கைத் த…

  9. 15 வயதுடைய சிறுவயது பிக்கு ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18339

    • 17 replies
    • 1.5k views
  10. யாழ் குடாநாட்டில் நீச்சல் தடாகம் இல்லாத குறையை போக்குவதற்கு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக அவரின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவினால் இயக்கப்படும் இளைஞர்களுக்கான நாளை எனப்படும் அமைப்பினால் இந்த திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக சமய நிகழ்ச்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நகரின் மத்தியில் உள்ள மத்திய கல்லு10ரியில் இந்த நீச்சல் தடாகம் அமைக்கப்படவுள்ளது. கடுமையான உயர் பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த வைபவத்தில் யாழ் நகர தளபதி பிரிகேடியர் குலதுங்க, மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக கல்விப் பணிப்பாளர், மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், புளுவோற்றர் சிஸ்ரம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். யாழ் குடாநாட்டில் நீச்சல்…

  11. இலங்கையில் காணாமல் போயுள்ள சுவீடன் பெண்! தான் கடத்தப்படலாம் என முன்னரே பேஸ்புக்கில் தெரிவிப்பு திங்கட்கிழமை, 21 மார்ச் 2011 17:51 சுவிடன் நாட்டு பெண் ஒருவர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாத முற்பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் 28 வயதான மேரி ஜோன்ஸன் சிலேன் எனும் இப்பெண் சுவீடனின் மத்திய பகுதியான வெஸ்டர்கொட்லன்ட்டின் வார்கார்டா நகரை சேர்ந்தவர். விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வந்த இப் பெண் தான் தாக்கப்பட்டதாகவும் தன்னிடம் கொள்ளையடிக்கப்பட்டாகவும் கடந்த 5 ஆம் திகதி பேஸ்புக் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் கடத்தப்படலாம் என அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவர் காணாமல் போனமை குறித்து கடந்த 16 ஆம…

  12. சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கெதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை இந்து சம்மேளனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகின்றோம். இந்து சம்மேளன செயற்பாட்டு காரியாலயம், இல 153/3.யூனியன் பிளேஸ், கொழும்பு-02. Operation Office, Hindu Federation Of Srilanka, …

    • 5 replies
    • 1.5k views
  13. கொலைகாரனுக்கும், கொலைகாரிக்கும் பிறந்த புத்திரி பாக்கியம் ஈழத்தமிழர்கள் நிலைபற்றி கண்ணீர் வடிக்கின்றது.

  14. தீபாவளி தத்துவமும் இரகசியமும்! – சித்திரன் புத்திரன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! வளவன் – சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே. ராம் – சரி கேள். வளவன் – வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் சரிதான்? ராம் – சரி. வளவன் – இது இரண்டும் எப்படி கலவி புரியும்? எப்படி கருத்தரிக்கும்? ராம் – பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என…

    • 6 replies
    • 1.5k views
  15. வேலுடன் முருகன் இருக்கையில் அரச மரத்துடன் புத்தர் எதற்கு? - சீ.யோகேஸ்வரன் அம்பாறை - உகந்தை முருகன் ஆலயத்தில் கட்டப்படவுள்ள பௌத்த விகாரையை உடன் நிறுத்துமாறு கோரி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அம்பாறை மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவசர கடிதமொன்றை தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,, இலங்கை இந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக பல ஆயிரம் ஆண்டு காலமாக விளங்கும் அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் உள்ள உகந்தை முருகன் ஆலய சூழலில் சில பௌத்த துறவிகளினது ஆலோசனையில் திட்டமிட்ட வகையில் தாபிக்க திட்டமிட்டுள்ள பௌத்த விகா…

    • 5 replies
    • 1.5k views
  16. சிறிலங்கா வெளிவிவகாரச் செயலரின் பதவி பறிபோகிறது – சீனாவில் இருந்து வருகிறார் புதியவர் [ புதன்கிழமை, 09 மார்ச் 2011, 01:07 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் றொமேஸ் ஜெயசிங்க நிதியமைச்சுக்கு மாற்றப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர் சிறிலங்கா நிதி அமைச்சின் மேலதிக செயலராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் சிறிலங்காவின் தூதுவராகக் கடமையாற்றிய கருணாதிலக அமுனுகம வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக நியமிக்கப்படவுள்ளார். இவர் அடுத்த மாதம் முதலாம் திகதி புதிய பதவியைப் பொறுப்பேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கருணாதிலக அமுனுகம சிறிலங்காவுக்கும் சீனாவுக…

    • 0 replies
    • 1.5k views
  17. இராணுவப்படையினரால் வடக்குப் பிரதேசத்தில் இதுவரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு ஒப்பீட்டளவில் குறைந்தளவானதே என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றி தொடர்பான அரசாங்கத்தின் காலக்கெடு அடிக்கடி மாறும் தன்மையினை பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான எதிர்கால யுத்தம் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதே யதார்த்த நிலை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் உக்கிரமடைந்துள்ள நிலையில் வன்னிப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான சிவிலியன்கள் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பொதும…

    • 0 replies
    • 1.5k views
  18. விமலின் வியாபார இரகசியங்கள் வெளியிடப்படும்: மகிந்த Sunday, 27 May 2007 சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பாக 10 மில்லியன் டொலர்களை அரசின் உயர் அதிகாரி ஒருவர் கையாடியுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால், அவரது வியாபார நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்படும் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. பங்கு விற்பனை இரு நிறுவனங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை அதில் அரசு ஒன்றும் செய்ய முடியாது. வனஸ்ப்பதி வர்த்தகம் தொடர்பாக விமல் என்னை சந்த…

    • 2 replies
    • 1.5k views
  19. Oct 3, 2010 / பகுதி: செய்தி / யாழில் வெளிவருகின்றது – துணைஇராணுவக்குழுவின் பத்திரிகை சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் தினமுரசு என்ற வாரஏட்டை வெளியிட்டுவரும் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி கட்சி அதனை யாழில் தினசரியாக வெளியிடத் தீர்மானித்துள்ளது. அதன் முதல் பிரதியை துணை இராணுவக்குழுவின் தலைவரும், சிறீலங்கா அரசின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் யாழில் வெளியிட்டு வைத்துள்ளார். யாழில் இருந்து உதயன், வலம்புரி, யாழ் தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் தற்போது வெளிவருகின்றன. இதனிடையே, முன்னர் வெளிவந்த நமது ஈழநாடு பத்திரிகையின் பணியாளர்களை பயமுறுத்தி தனது தினசரியில் பணிபுரிய தேவானந்தா நிர்ப்பந்தித்துள்ளதாகவும் யாழ் தக…

  20. வவுனியாவில் புளொட் அமைப்பினர் வசமுள்ள விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற கொலைப்பட்டியலில் தற்போது வெளிநாட்டில் வசிப்பவர்களும் அடங்குகின்றார்கள்.அண்மையில் வவுனியாவில் கொலைப்பட்டியலுடன் இரவு வேளை சென்ற புளொட்டின் கொலையாளிகள் இரண்டுவருடத்துக்கு முன்பு வெளிநாடு சென்ற ஒரு சிலரை தேடியதாக அங்கிருந்து கிடைக்கும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 3 replies
    • 1.5k views
  21. முடங்கியது கண்டி ! ஆதரவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர் ! உண்ணாவிரதமிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கண்டியில் இன்று கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கண்டியில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டி நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது கண்டியிலுள்ள தலதா மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாக…

  22. சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் சிக்கினாரா ? விடுதலைப் புலிகளின் கடல் தளபதி சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிக்கினார் என்ற செய்தியை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி இலங்கை வான்படைகள் கிளிநொச்சியில் உள்ள இரகசிய இடம் ஒன்றைத் தாக்கினர். அங்கே அதிகாலை 6 மணியளவில் இருந்த சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்டார். இருப்பினும் தாம் வேறு ஒரு நபரையே தாக்க முற்பட்டதாக இராணுவ பேச்சாளராக இருந்த பிரிகேடியர் நாணயகார அமெரிக்கத் தூதுவருக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிவித்துள்ளார். தாம் கடற்படைத் தளபதி சூசை அவ…

  23. விடுதலைப் புலிகளை ஒடுக்க அரசு உறுதி "தரகர்கள்' விடயத்திலும் தீர்க்கமான முடிவு. நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிப்பு விடுதலைப் புலி களைப் பூண்டோடு அழிக்கவும், சமா தானத் தூதர்கள் எனக் கூறிக்கொண்டு ஒரு தரப்புக்கு மட் டும் சார்பாகச் செயற்படும் வெளிநாட்டுத் தரகர்கள் விடயத்தில் தீர்க்கமான நடவடிக் கைகளை எடுக்கவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பிரதமரும், பிரதிப் பாதுகாப்பு அமைச் சருமான ரட்ணசிறி விக்கிரம நாயக்க, நேற்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் நிதியொதுக் கீட்டு விவாதத்தில் பேசும்போது இவ் வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது கூறிய தாவது: ""அரசு பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்கிப் பயங்கரவாதிகள…

    • 2 replies
    • 1.5k views
  24. புலிகளை அழித்து இலங்கையினை சீனாவுக்கு கொடுத்துவிட்டது இந்தியா - இந்திய ஊடகவியலாளர் மலேசிய நிருபர் திங்கட்கிழமை, மே 10, 2010 விடுதலைபுலிகளை அழிக்க உதவியதன் மூலம் அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டார்கள். இதன் பின்னர் இலங்கை முற்றாக சீனா ஆக்கிரமித்துள்ளது. இனி இந்தியாவிற்கு அங்கு சாதகமான சூழல் எதுவும் இல்லை இவ்வாறு கூறியுள்ளார் ஊடகவியலாளர் பகவான் சிங். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது குடியேற்றங்கள் நடக்கின்றன அந்த நாடு முழுவதும் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87…

  25. அமெரிக்காவை அடுத்து பிரித்தானியாவும், சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வோர், வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்குப் பொறுப்பான ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயுதக்குழுக்கள் சிறிலங்காவில் செயற்படுவதை மனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் அரிதாகவே இடம்பெறுகின்ற போதிலும், அங்கு சிறார்கள் உள்ளிட்டவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே குறிப்பாக பெண்கள், தனியாகவோ சிறிய குழுவாகவோ பயணம் செய்யும் போது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.