Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளின் நெத்தலிகளை பிடிப்பதில் அர்த்தமில்லை – சரத் பொன்சேகா: குளோபல் தமிழ் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதில் சிக்கல் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநான் சுதந்திரமாக இருக்க முடியுமானால் ஏன் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நெத்தலிகளை பிடிப்பதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனவே அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்…

    • 1 reply
    • 851 views
  2. இலங்கையினால் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தொடர்பில் சீனா அதிருப்தியடைந்திருப்பதாக தெரிவித்த சீனத் தூதுவர் செங் சீயுவான், அது இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வருகின்ற சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருடாந்தம் சுமார் 3 இலட்சத்தை எட்டியிருக்கிறது. இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளில் அதிகூடிய எண்ணிக்கையானவர்கள் சீனர்களே. ஆனால் தாய்லாந்தினால் கவரப்படும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு வந்திருக்கக்கூடிய சீன சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சொற்பமே. எனவே தாய்லாந்து போன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான சௌகரியங்களை வழங்குவதில் இலங்கை கவனத்தைக் குவிக்க வே…

    • 3 replies
    • 988 views
  3. வன்னி மீதான படை நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படா இராணுவத் தளபதி சொல்கிறார் விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் வன்னி மீதான படை நடவடிக்கை கைவிடப்படமாட்டாது என்று தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, வன்னியை விரைவில் மீட்டே தீருவோம் என்றும் சூளுரைத்துள்ளார். தென்பகுதியில் நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ளவை வருமாறு வடக்கில் வன்னிப் பகுதியில் உள்ள மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்ற

    • 7 replies
    • 2.6k views
  4. அமெரிக்காவின் தீர்மானம் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளுக்கு அப்பால் போகவில்லை: மனோ அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம், இலங்கை அரசாங்கத்தினால் கதை, திரைகதை, வசனம் எழுதி தயாரிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, ஐநா செயலாளர் நாயகத்தின் தருஷ்மன் அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக இல்லை. இதில் இலங்கை அரச தலைவர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் பற்றியோ அல்லது யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இறந்துபோன ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார…

    • 0 replies
    • 556 views
  5. கடந்த வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – இன்று வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் தனியார் காணியில் பாரிய பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. இதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டுகொள்ளாது மௌனம் சாதித்து …

  6. சனல் – 4 ஐ போர்க்குற்ற ஆவணமாக பாவிப்பது எப்படி? சனல் – 4 ஐ போர்க்குற்ற ஆவணமாக பாவிப்பது எப்படி.. இதுவே அதன் மீதான சரியான பார்வைக் கோணம். இன்றிரவு பிரிட்டன் நேரம் 10.55 ற்கு சனல் – 4 தனது கொலைக்களம் – 2 ஐ உலகத்தின் முன் வைக்கப்போகிறது. அதில் என்ன இருக்கும்.. பல விடயங்கள் கசிந்துள்ளன.. அதைப்பார்த்தால் என்ன வரப்போகிறது என்பது தெரிகிறது.. சனல் – 4 ல் வெளிவரப்போகும் விடயங்கள் வாடைக்காற்று வந்தது போல செவிவழி செய்திகளாக வந்து போய் நீண்ட காலமாகிவிட்டது. ஆனால் இப்போது நிபுணர்களும், காணொளிகளும் இணைந்து மறுபடியும் போர்க்குற்ற விசாரணைக்கான ஆவணமாக, கண்களுக்கு ஒளிப்படமாக வருகிறது. முன்னர் ஒலியில் வந்தது இப்போது ஒளியில் வருகிறது.. இதை சரியான போர்க்குற்ற ஆவணமாக பாவித்…

    • 4 replies
    • 956 views
  7. 87ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளில் பங்கேற்கும் டக்ளஸ் 1987ம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பான வழ்கு விசாரணைகளில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்க உள்ளார். வீடியோ கான்பிரன்ஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையிலிருந்தே இந்த வழக்கு விசாரணைகளில் டக்ளஸ் பங்கேற்க உள்ளார். சென்னை நீதிமன்றில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1987ம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று சென்னை சோலைமேடு பகுதியில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றில் விசாரணைகளுக்கு பங்கேற்காத கா…

    • 3 replies
    • 866 views
  8. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். கொடிகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை நிலத்தினுள் புதையுண்டிருந்த வெடி பொருள் வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/196213

  9. http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

  10. இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க பிரதான உதவியாளர் கிடைத்துவிட்டார் - மகிழ்ச்சியில் அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்த தமக்கு பிரதான உதவியாளர் ஒருவர் கிடைத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதற்கான பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவின் மனித உரிமை கவுன்ஸில் ஜெனீவா தூதுவர் ஈலின் டொனஹோ தெரிவித்துள்ளார். "நாங்கள் ஒரு குறியீட்டு வாக்காக இதனை யோசிக்க கூடாது," என இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என…

    • 0 replies
    • 2.1k views
  11. ஜனாதிபதி மீதான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான வழக்கொன்றை சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவும் விசாரிக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியுமென பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஓர் அமைச்சர் என்கிற முறையில் ஜனாதிபதிக்கு எதிராகச் சமர்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை முன்னெடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ப…

  12. தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைய முயற்சிக்கக் கூடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இதனால் படையினரை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஜாதிக ஹெல உறுமய கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. நாட்டை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவா தீர்மானம் தமிழ் புலம்பெயர் மக்களுக்கு புதிய உத்தேகத்தை அளித்துள…

    • 4 replies
    • 1.1k views
  13. யாழ். சாவக்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார். வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். இதன் தொடராக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி உதவியினால் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி…

    • 2 replies
    • 659 views
  14. எரிமலை போன்ற வாழ்க்கை செலவை ஜெனீவா தண்ணீரால் அணைக்க அரசு முயற்சிக்கிறது:ரணில் வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய பொது ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை கண்டி மத்திய சந்தைக்கு முன்னால் இடம்பெற்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்;ன, ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரிய, புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி ஜயவிக்கிரம பெரேரா, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய, கயன்ந்த கருணாதிலக்க, ரவி கருணாநயக்க, லக்ஷ்மன் கிரியல்ல, …

    • 1 reply
    • 499 views
  15. மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு கட்சியன் தலைவரும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றினார். கட்சியன் உறுப்பினர்கள் பொது ஆதரவாளர்கள் மலர் வணக்கம் செலுத்தினர். இன்று பிற்பகல் 4.00 மணியளவில் மணல்தரை வீதி, கந்தர்டம் என்னுமிடத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமைதாங்கினார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125934/language/ta-IN/article.aspx

  16. (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யவேண்டும் என்றால் நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம். அதன் மூலம் சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்தலாம் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் பல ஆட்சித்தலைவர்களின் காலம் இருந்தது. ஆனால் எதிர்வரும் காலம் மக்களின், விவசாயிகளின் காலமாக ஏற்படுத்தவேண்டும். அதற்கான சந்தரப்பம் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலின் மூலம் கிடைக்கின்றது. அதற…

    • 0 replies
    • 321 views
  17. ஊடகப் பணியும் ஊடகப் பயங்கரவாதமும்? -சண். தவராஜா- ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரி ஒருவரைச் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு ஒன்று அண்மையில் கிட்டியது. கதைக்கும் போது கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யா பற்றியும் அங்கு தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் அக்கறை பற்றியும் விவாதித்தோம். 'மூன்று தசாப்த காலமாக தமிழர் தாயகத்தில் நடக்கும் யுத்தம், அதில் சுமார் ஒரு இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டமை, தமிழ் இனத்தின் மொத்தச் சனத்தொகையில் மூன்றிலொரு வீதத்தினர் அகதிகளாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்பது, இந்நிலையில், ஈழத்தமிழர் விவகாரத்தில் காட்டாத கரிசனையை சர்வதேச சமூகம் கென்யா விவகாரத்தில் காட்டுகின்றது. அங்கு இதுவரை சுமார் 700 வரையான பொதுமக்கள…

  18. பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. …

  19. அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டுமாயின் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதனால் ஈழக் கோட்பாட்டாளர்களின் கரங்கள் வலுப்பெரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா வாக்களித…

  20. 'நபி' 'நரி'யானார், 'தாய்' 'நாய்' ஆனார்! - வடக்கு மாகாணத்தில் தமிழ் படும் பாடு [Wednesday 2015-11-25 07:00] முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் பாரிய எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் பாரிய எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்கள…

    • 1 reply
    • 1.6k views
  21. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் இருகின்ற போதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இன்னமும் பலம் பொறுந்தியதாகவே விளங்குகின்றது என்றும் அதன் அதிகாரங்களை முறையாக பயன்படுத்தி நாட்டுக்கு வழிமையான தலைமைத்துவத்தை வழங்க கூடிய ஒருவரையே தாங்கள் வேட்பாளராக தெரிவு செய்திருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். தேயிலை , இறப்பர் சிறு பயிர்ச்செய்கையாளர்கள், ஏற்றுமதியாளர்களுடனான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனான சந்திப்பு கொழும்பு இலங்கை கண்காட்சி மகாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போது அதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இதனை தெரிவித்தார். அரசியலமைப்…

  22. இலங்கை இராணுவ விவகாரத்திற்குள் சர்வதேசத்தின் திடீர் தலையீடு காரணமாக புதிய நெருக்கடிகள் பல்வேறு வடிவங்களில் ஏற்படுமா என்னும் கேள்வி அரசியல் வட்டாரங்களில் காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பாதுகாப்பு படைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவீனங்களை குறைப்பதற்கான கட்டாயத்தை ஜெனீவா முதலில் இருந்தே வலியுறுத்தியுள்ளது என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் குறிப்பிட்டுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கான செலவீனங்களை குறைப்பதன் பின்புலத்தில் சர்வதேசங்களின் அழுத்தங்கள் உள்ளன. இலங்கையின் பாதுகாப்பு செலவீன குறைப்பையும், மறுசீரமைப்புக்களையும் அவர்கள் வேண்டி நிற்கின்றார்கள். இ…

  23. சகோதரச் சண்டைக்கு யார் காரணம்? - பழ.நெடுமாறன் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்தி ரமாகக் கொண்டுஇருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்! ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றி யுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சி…

  24. மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட தனியார் பஸ் நிலையம் ஒரு சிறிய மழைக்கே இவ்வாறு வெள்ளத்தில் மிதக்கும் காட்சி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டு நகரில் அமைக்கப்பட்ட தனியார்பஸ் நிலையம் 65மில்லியன் ரூபாயில் நிர்மாணிக்கப்பட்டு இன்று காலை 10.00மணிக்கு மாநகரமற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணியின் பெயரில் இந்த தனியார் பஸ்தரிப்பு நிலையம் சகல வசதிகளுடன் கூடியதாக இரண்டு மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ரணில்விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவரின் தவீர்க்க முடியாத காரணத்தினால் அமைச்சரும் அதிகாரிகளும்தான்…

  25. சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர், தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும், சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது தொடர்பாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், “நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு சிறிலங்கா அரசு கொடுக்கும் முன்னுரிமை பற்றி அவர்களுக்கு விளக்கினோம். இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.