ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
Published By: VISHNU 11 APR, 2023 | 05:09 PM கிராமத்திற்கு செல்லும் பாதையை மறித்து அனுராதபுரம் - வவுனியா புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைக்கு விஜயபாகு கம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருத்த வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்று (11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈரப்பெரியகுளம், விஜயபாகு கம கிராமத்தில் 50 வரையிலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் கடந்த 32 வருடங்களாக பயன்படுத்தி வந்த வீதியை மறித்து புகையிரதப் பாதை நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த கிராம மக்களை அப் பாதையில் இருந்து சுமா…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
கொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார் மகிந்த [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:43 GMT ] [ தா.அருணாசலம் ] தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை சிறிலங்காவுக்கு வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அவரது தனிப்பட்ட அழைப்பை நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் கையளித்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார். அலரிமாளிகையில் நேற்றுக்காலை ‘இந்து‘ நாளிதழின் ஆசிரியர் என்.ராம், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன், இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேசியது குறித்து இந்து ஆச…
-
- 5 replies
- 544 views
-
-
சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி சாதனை ! மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர் பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற தமிழ்செல்வன் அக்ஷதா சர்வதேச மனக்கணக்கு போட்டியில் தெரிவு செய்யப்பட்டார். சர்வதேச போட்டி கடந்த 3ஆம் திகதி மலேசியாவில் 80இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்து கொண்டனர…
-
- 5 replies
- 353 views
-
-
சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்! சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலா் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை எதிர்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றாரகள். சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொத…
-
-
- 5 replies
- 462 views
- 1 follower
-
-
தாய்மண்ணின் விடிவிற்காக இன்னுயிர்களை ஈந்த போராளிகளின் விபரங்கள் [sunday January 13 2008 11:57:15 PM GMT] [யாழ் வாணன்] தாய்மண்ணின் விடிவிற்காக இன்னுயிர்களை ஈந்த போராளிகளின் விபரங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மணலாறு சிலோன் தியேட்டர் களமுனையில், நேற்று சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த நேரடி மோதல்களின் பொழுது, மேஜர் இளமகள் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஏரம்பு சிவகலை என்ற போராளி களப்பலியாகியுள்ளார். மன்னார் பெரியபண்டிவிரிச்சான் களமுனையில் கடந்த 11ஆம் நாளன்று இடம்பெற்ற மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் அணியிசை என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஸ்ணன் சுரேதா, லெப்ரினன்ட் ஈழமலர் என்றழைக்கப்படும், ய…
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழ் தலைமைகளுக்கு பிரதமர் மஹிந்த எச்சரிக்கை..! இந்திய ஊடுருவலை ஊக்குவிக்கவேண்டாம். தீர்வு எங்களிடமே உள்ளது.! வட கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியா தீர்க்கும் என தமிழ் தலைமைகள் கூறுவதை பற்றி கேள்வி பட்டுள்ளேன். அந்த முயற்சியை நிறுத்துங்கள். தீர்வு எங்களிடமே இருக்கின்றது. தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை பிரதமர் இன்று காலை அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.‘தமிழ் மக்களுக்கான தீர்வை இந்தியா பெற்றுத்தரும் என்ற சிந்தனையைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்யும் செயலை தமிழர் பிரதிநிதிகள் மாற்றிக்கொண்டு எம்மூடாகத் தீர்வைப் பெற முயலவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார். htt…
-
- 5 replies
- 3.1k views
- 1 follower
-
-
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரை பதவி விலகவில்லை: ரோஹித்த போகொல்லாகம: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவி விலகல் கடிதங்களை கையளித்துள்ள போதிலும் எவரும் இதுவரை பதவியில் இருந்து விலகவில்லை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். பயங்கரவாத்தை ஒடுக்குவது தொடர்பில், இலங்கை, இந்தியாவுடன் மிக நெருங்கிய செயற்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத்தை ஒழிப்பது அவசியம் என்பது குறித்தும், இலங்கையின் சகல பகுதிகளிலும் ஜனநாயகத்தை ஏற்படுததும் தேவை பற்றியும், முழுச் சர்வதேசத்திற்கும் தெளிவுப்படுத்தியுள்ளதாக போகொல்லாகம கூறியுள்ளார். ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையில் பயங்கரவாதம…
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என ‘நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு’என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்பில் ‘இறுதி எச்சரிக்கை’என்ற தலைப்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழகம் என்பது வெறும் கல்வி கற்கும் இடமல்ல. அது யாழ் சமூகம். அதில் உள்ள சிலர் அழிவடைந்து இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் பயங்கரவாத நாசகார புலிகள் அமைப்பை பாதுகாத்து நாட்டையும் தமிழ் மக்களையும் அழிவடைய செய்து வருகின்றார்கள். இது தொடர்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் விபரம்…
-
- 5 replies
- 2.3k views
-
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வயதில் முதிர்ச்சி வந்த போதிலும் அரசியலில் முதிர்ச்சி வரவில்லை என பிள்ளையான் தெரிவித்திருக்கிறார். பொதுத் தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு யாழ்ப்பாணம் வந்திருந்த பிள்ளையான் நிருபர்களிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து தாம் சம்பந்தனுடனும் பேசியதாகவும் எனினும் தமக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கொள்கை ரீதியாக மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருந்ததாகவும் பிள்ளையான் குறிப்பிட்டார். அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் பிள்ளையான் தெரிவித்தார் SOURCE : http://www.eelamweb.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
ஊடக – அரசியல்வாதி வித்தியாதரன் சொல்ல மறந்த கதை ஹாய் வித்தி அண்ணா, நீங்கள் சுவிஸ் நாட்டில் ஆற்றிய உரை என ஒரு வசைபாடலை பல ஊடகங்கள் பிரசுரம் செய்திருந்தன. அதில் வேடிக்கை என்னவெனில் புலம்பெயர் தமிழ் சமூகத்தை வசைபாடி நீங்கள் வாய்க்கு வந்தபடி ஆற்றிய உரையை (வாய்க்கு ஏதும் ஆகிவிடாதோ) சில புலம்பெயர் ஊடகங்கள் பிரசுரம் செய்தது தான். இதனை நடிகர் சத்தியராஜ் இன் பாணியில் சொல்வதானால், மல்லாக்க படுத்திருந்து காறித் துப்பியிருக்கின்றன இந்த ஊடகங்கள். எனது ஊடக நண்பர் ஒருவரிடம் கேட்டேன், உங்களை பற்றி வசைபாடிய உரையை ஏன்டா பிரசுரம் செய்திருக்கிறீர்கள் என்று, அப்படியா? என அவன் திருப்பி கேட்டபோது தான் எனக்கு விளங்கியது அந்த செய்தியை வாசிக்காது பதிவேற்றியிருக்கிறார்கள் என்று. எமத…
-
- 5 replies
- 1.7k views
-
-
யாழ். மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரேரா தெரிவித்தார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கோப்பாய் பொலிஸ் பிரிவில் 15வயது சிறுமியொருவர் உறவினர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என பெற்றோரால் கடந்த 6 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதனா…
-
- 5 replies
- 653 views
-
-
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் நடைபெறவுள்ள விவாதம் குறித்த அறிவிப்பில், அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னணி குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோக…
-
- 5 replies
- 1.4k views
-
-
16 MAR, 2024 | 10:05 AM வெடுக்குநாறி மலையில் மஹாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி, நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து இன்று சனிக்கிழமை (16) காலை 7.45 மணியளவில் ஆரம்பமாகியது. இப் பேரணியானது காலை 10 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை அடைந்து, வெடுக்குநாறி மலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி மாபெரும் போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார். இப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட ஆசிரிய சங்க தலைவர், உறுப…
-
- 5 replies
- 372 views
- 1 follower
-
-
டெல்லி: மத்திய அரசின் செயலற்ற வெளியுறவுக் கொள்கையால் இலங்கையின் யாழ். பலாலி விமான நிலையம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றி விமானப் படை மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேபாள விவகாரத்தில் ஏற்கனவே இந்திய வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவியது. பல ஆண்டுகளாக இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்த நேபாளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தது முதலே அங்கே சீனா ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டது. இந் நிலையில் சர்வதேச அரசியலில் இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்கிற பெரும் போட்டி நடைபெற்று வருகிறது. அதிலும் இலங்கை திருகோணமலை துறைமுகம் யார் ஆதிக்கத்தில் இருக்கிறதோ அவர்களே தென்னாசியாவை ஆட்டிப் படைத்து ஆள…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்கள் இராணுவத்தினரிடம் பிடிபடமால் விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை பயன்படுத்தி இந்த நாட்டை விட்டு செல்ல எத்தனிக்கலாம், அந்த வேளையில் மேற்படி விமானங்களை அழிப்பதற்கும் தயாராகவே இராணுவத்தினர் உள்ளதாக சிறி லங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மாவிலாறு பகுதிகளில் இராணுவத்தினர் தற்போது தமது நிலைகளை பலப்படுத்தி மிகப் பலமான நிலையிலேயே உள்ளனர். இப்பகுதிகளில் இருந்து பெருந்தொகையான விடுதலைப்புலிகள் தப்பித்து பின்வாங்கியுள்ளனர். எனினும் இ…
-
- 5 replies
- 1.7k views
-
-
(ஆர்.யசி) கொரோனா தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடுக்கவேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்த இஸ்லாமிய நபரின் உடலை தகனம் செய்ததை அடுத்து அதற்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் எதிர்ப்புக் கருத்துக்கள் எழுந்த நிலையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த காரணம் பிரதான காரணியாக பேசப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளான ரவுப் ஹகீம், ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தப்பா உள்ளிட்ட பிரதிநிதிகளே இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உ…
-
- 5 replies
- 466 views
-
-
கடலில் படகுப் பேரணி நடத்தப் போவதாக அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒரு மாதகாலத்துக்குள் எடுக்கத் தவறினால், தான் கடலில் படகுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். இலங்கை - இந்திய மீனவர்களிடையே காணப்படுகின்ற எல்லை தாண்டி மீன் பிடித்தல் குறித்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களையும் நேரே சந்திக்க வைத்து பேச்சு நடத்துவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சந்திப்புக்கான நடவடிக்கைகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கச்சதீவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூ…
-
- 5 replies
- 420 views
-
-
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கை வீரர்களுக்கு இந்திய கடற்படை சிறப்பு பயிற்சி! கொழும்பு: இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்திய கடற்படை கப்பல் திரிகோணமலை துறைமுகம் சென்றடைந்துள்ளது. இந்திய கடற்படை கப்பலான 'ஐஎன்எஸ் மகர்' என்ற இந்த கப்பலுக்கு கடந்த வாரம் சனிக்கிழமை அன்று இலங்கை கடற்படை வீரர்கள் திரிகோணமலையில் சம்பிரதாய வழக்கப்படி வரவேற்பு அளித்தனர். கடல் பகுதியில் பேரழிவுகளை எதிர்கொள்வது, பேரிடர் தடுப்பு முறைகள், கடலில் துப்பாக்கிச் சூடு, கடலில் தொலைத்தொடர்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நடைமுறை விளக்கம் இலங்கை கடற்படையினருக்கு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், மாலுமிகள் பயிற்சிக்காக இந்திய…
-
- 5 replies
- 685 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர் ஐ.நா. அதிகாரிகள் By DIGITAL DESK 5 20 AUG, 2022 | 01:39 PM ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன் - கார் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (19) சிவில் சமூக தரப்பினரை யாழ்ப்பாணம் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார். இந்த சந்தி…
-
- 5 replies
- 722 views
-
-
Oct 26, 2010 / பகுதி: செய்தி / விடுதலைப்புலிகளின் தடையை நீக்க பலர் சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனார் - பி.பி.சி இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் நோக்கில் அரசியல் தலைவர்கள் பலர் சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதன் அடிப்படையில் இந்தியாவின் நீதிபதி விக்ரமஜித் தலைமையிலான மக்கள் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீது கடந்த 1991ம் ஆண்டு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை நீக்குவதற்க…
-
- 5 replies
- 792 views
-
-
London நகரில் நடைபெறும் போராட்டம் http://ibctamil.fm/raddio.html
-
- 5 replies
- 2.3k views
-
-
கோத்தாவைத் தோற்கடிக்க ‘றோ’ திட்டம் – கூட்டு எதிரணிக்குள் ஊடுருவல் கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய கலந்துரையாடல் நிகழ்ச்சியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்காக, கூட்டு எதிரணியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் ‘றோ’ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுகிறார்கள். இடதுசாரி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகளைக் குழப்பும் நோக்கிலும், ரணில் விக்கி…
-
- 5 replies
- 642 views
-
-
இலங்கையின் பிரஜைகளுக்கு எதிராக வழக்கு தொடரவே தண்டனை கொடுக்கவோ வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்று நிறுவப்படுமாக இருந்தால், அது தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனை; தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் 3ல்இரண்டு அறுதிப் பெரும்பான்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141158&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 665 views
- 1 follower
-