Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து உத்தரவாதமளிக்கப்பட்டால் 48 மணிநேர போர் நிறுத்தமொன்றை அறிவிக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சை ஆதராம் காட்டி சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் நாச வேலைகளில் ஈடுபட மாட்டார்கள் என உத்தரவாதமளிக்கப்பட்டால் 48 மணிநேர போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முடியும் என தூதுவராலயங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் வெளியேற குறைந்தபட்சம் ஒரு வார கால போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு மேற்குலக நாடுகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. http://tamilwin.com/view.php?2adgE99Fe0bdf...G7Dcd0ebPh2gCae

    • 2 replies
    • 1.4k views
  2. வெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.! சம்பந்தன் சுட்டிக்காட்டு.! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு, அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்கக்கூடியவாறு புதிதாக - பக்கச்சார்பில்லாமல் சமாந்தரமான கொள்கைகளை வகுத்துக் கருமங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தக் கடமையிலிருந்து தவறினால் பாரிய பின்விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டி வரும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியா, 'நிலையான வளர்ச்சியுடன் இலங்கை மக்களுக்கு இறையாண்மையும் சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும…

  3. - இளம் ஆசிய தொலைக்காட்சி YATV, இதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன ? Young Asia Television, or YATV , is a pioneering, multi media organization where young people use the latest, as well as more traditional, communication methods to inform, educate and empower. Young Asia Television productions focus on issues relating to sustainable development, environmental conservation, human rights and conflict resolution. The programmes are designed to encourage discussion and dialogue, and are a catalyst for positive change. YATV was initiated in 1995 in order to harness the potential of the young, giving them the tools, training, space and g…

  4. இன்று காலை 6.30 மணியளவில் உரும்பிராய் ஞான வைரவர் கோவில் அருகில் அளவுக்கதிகமான மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். வீதி அகலிப்பு வேலைகளுக்காக அளவுக்கதிகமான மணலை ஏற்றிக் கொண்டு வந்த மேற்படி டிப்பர் வாகனம் வீதியின் குறுக்கே மோட்டார் சைக்கிள் வந்ததில் தடுமாறி மரத்தில் மோதியதாகத் தெரியவருகின்றது. வீதி அகலிப்பு வேலை செய்யும் நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறு அளவுக்கதிகமான மண் ஏற்றி வருவதால் தெருவினால் போவோர் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. thx http://newjaffna.com/index.php

  5. கரடி விடுவது யார்? முருக பூபதியா அல்லது சிவத்தம்பியா??!!! வருகிற தை மாதம் கொழும்பில் நடக்கவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாடு பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் அவுஸ்த்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள், இந்த மாநாடு சில தனிப்பட்ட நபர்களால் நடத்தப்படப்போகும் நிகழ்வு அல்ல, மாறாக உலகத் தமிழ் எழுத்தாள்ர் அனைவராலும் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வு என்று காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார். இதற்காக தான் தற்போதுஅ டிக்கடி எழுதிவரும் வேண்டுகோள் மடல்களில் சில பிரபலங்களின் பெயர்களையும் இணைக்கத் தவறுவதில்லை. ஆவ்வாறு முருகபூபதி அண்மையில் தனது கெஞ்சல்க் கடிதத்தில் இணைத்துக்கொண்ட ஒரு பிரபலம்தான் பேராசிரியர் சிவத்தம்பி.…

  6. புதன்கிழமை, டிசம்பர் 1, 2010 சர்வதேச பொலிஸாரால் விக்கிலீக்ஸ் உரிமையாளர் ஜூலியன் அசாஞ்சே மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 274 இற்கும் அதிகமான உலக நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருந்த இராஜதந்திர இரகசியங்கள் தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது. அவற்றுள் 220 ஆவணங்களை இவ்விணையதளம் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர இரகசியங்கள் அடங்கிய 3325 ஆவணங்கள் கூட விக்கிலீக்ஸின் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்காவிற்கு எதிரான நாடுகள் இவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க முன்வந்துள்ளனர். Eelanatham

    • 2 replies
    • 1.4k views
  7. குருந்தூர்மலை விவகாரம் : யாழில் சிவசேனை – தேரர்கள் இரகசிய சந்திப்பு! குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாக விகாரையில் இன்று காலை மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த கலந்துரையாடல் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல், இரகசியமாக நடைபெற்றது. குருந்தூர் மலையில் நாளை வெள்ளிக்கிழமை பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http…

  8. போர்க்குற்ற ஆதாரங்களைக் காட்டி இலங்கையை மிரட்டும் புதுடில்லி ”கிரவுண்ட் றிப்போர்ட்”என்ற இணையத் தளத்தில் விசுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின்தமிழாக்கம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் புதுடில்லியின் தென்தொகுதியின் (South Block) ஈடுபாடு தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. இங்கு தென்தொகுதி என்பது வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றையே குறிக்கிறது. தற்போது காத்திரமான போர்க் குற்ற ஆதாரங்கள் வெளிவருவதானது புதுடில்லிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புகளை தடுத்து நிறுத்திய சோனியாவின் அதிகாரம் பெற்ற புதுடில்லி முகவரது செயற்பாடுகளை இந்த ஆதாரங்கள் சீர்குலைத்து…

  9. லண்டன் பாராளுமன்ற போராட்டம், 73 நாட்களின் பின், இன்றுடன் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் காணாத இப்பொராட்டம் இன்றுடன் நிறுத்தபட்டுள்ளாத தெரியாவருகிரது... http://internationalnewsforum.com/european...73-days-t94.htm

  10. கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இன்றும் தொடரும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜே.கே.எச. சிறிலங்கா ரெலிகொம், டயலொக் போன்ற கம்பனிகளின் பங்கு விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பொதுவாகவே பங்குச் சந்தையில் பங்குகள் வீழ்ச்சி அடைந்து செல்வதாகவும் சொல்லப்படுகிறது. மலிங்கவும் 18.71 புள்ளிகளால் வீழ்;ச்சி அடைநதுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வன்னிக் களமுனையில் விடுதலைப் புலிகள் பலம் ஓங்கிவருவதும் இலங்கைப் படையினர் எதிர்கொள்ளும் பாரிய இழப்புகளினதும் தாக்கமே பங்குச் சந்தையின் இந்த திடீர் சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என பங்குச் சந்தை அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். http://www.tamilskynews…

  11. அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ் பொறியியலாளர்! புதன், 29 டிசம்பர் 2010 17:47 .இலங்கையைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதான அமரசிங்கம் சுஜன் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவர் என அறிவிக்கப்படுகிறது. இவர் பணி புரியும் அலுவலகத்துக்குள் நுழைந்த சிலரே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையிடும் நோக்கில் வந்தவர்களே இவரைக் கொலை செய்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. tamil cnn.com

    • 1 reply
    • 1.4k views
  12. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான போர் தற்போது உச்சகட்டத்தை எட்டி யிருக்கிறது.இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே? ``புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் …

    • 0 replies
    • 1.4k views
  13. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் யாழ்ப்பாணத்தில் கலை நிகழ்வுகள் புரட்சிக்கவி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்த தின கலை நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துர்க்காதேவி மணி மண்டபத்தில் இன்று (11) மாலை இடம்பெற்றன. யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு துணைத் தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பாரதியார் புகழ்பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்தால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் சான்றி…

  14. வணக்கம், தங்கள் நாடுகளில் இந்த முயற்சியை உடன் செய்யவும் - குறைந்த கால அவகாசத்திற்கு மன்னிக்கவும்.! ஓழுங்கமைப்பாளர் சிறிலங்கா அரசின் இனப்படுகொலையைக் கண்டித்தும் , எமக்காக உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரத்தை ஆதரித்தும் ,புலம் பெயர்ந்த நாடுகளில் ஜ. நாடுகள் சபைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் 20ம் திகதி முதல் 27ம் திகதிவரை ஒரே நேரத்தில் இவ்வுண்ணாவிரதம் நடாத்தப்படுகிறது. உங்கள் உங்கள் நாடுகளில் உண்ணாவிரதம் நடத்த விரும்புவோரும், பின்வரும் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். SriLankaItsGenocide.EndIt@gmail.com Genocide against Tamils has passed the ‘ZERO HOUR’. It is time now we all act …

  15. பக்தர்சிகான் றெட்அரோ எனப்படும் ஏவுகணைகளையும் கடற்கரைகளில் நிறுவியுள்ளது முல்லைத்தீவு கடல் பகுதிகளின் பாதுகாப்புக்காக ஏவுகணை தொகுதிகளை சிறிலங்கா படைஇந்திய கோமாண்டோ படைபிரிவின் பாதுகாப்பிலேயெ நிறுவியுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: முல்லைத்தீவு கடற்பகுதிகளின் பாதுகாப்புக்கு என பாகிஸ்தானில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பக்தர்சிகான் என்னும் ஏவுகணைகளையும், சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட றெட்அரோ எனப்படும் ஏவுகணைகளையும் கடற்கரைகளில் நிறுவியுள்ளது. கடற்புலிகளின் தாக்குதலை முறியடிக்கும் நோக்கத்துடன் இந்த ஏவுகணை தொகுதிகள் நிறுவப்பட்டுள்ளதாக படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கடற்பரப்பில் கடந்த வாரம் காணப்பட்ட படகு ஒன்றின் மீ…

  16. விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும். இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இ…

    • 12 replies
    • 1.4k views
  17. சீனா மீதான இலங்கையின் நம்பிக்கை வீண் போகிறதா?! 24/03/2013 at 6:22 pm நாட்டில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சீனா வலிறுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அத்துடன் இந்தியாவுடன் முரண்பாட்டினை வளர்த்துக் கொள்ளாது நல்லுறவை பேணுமாறும் சீனா இலங்கையை வலியுறுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இலங்கைக்கு சீனா தொடர்சியாக ஆதரவை வெளியிட்டு வந்த நிலையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை, சீனாவின் புதிய ஜனாதிபதியாக க்சீ ஜின்பின் நியமனம் பெற்றதன் பின்னர், இலங்கை தொடர்பில் அந்த நாட்டின் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்ப…

    • 5 replies
    • 1.4k views
  18. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகிய சகோதரர்களின் உயிர்களைக் காக்குமாறு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களைக் கோரும் மடல் இங்கே தரப்பட்டுள்ளது. அவரால் மட்டுமே இந்த நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு வரையப்பட்டுள்ள இந்த மடலைப் பிரதியெடுத்து கையொப்பமிட்டு மின்னஞ்சல் மூலமாகவோ தொலைமடல் மூலமாகவோ அனுப்பி வைத்து பெறுமதியான அந்த மூன்று உயிர்களையும் காக்கும் செயற்பாட்டில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். http://www.z9web.com/pdf/appeal-hanging-%20PDF.pdf thanks tamil win

    • 1 reply
    • 1.4k views
  19. கண்ணீரும் புலம்பலும் விட்டு காரியமாற்றத் துணிந்து எழுக! இலங்கையில் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தவறான கண்கொண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை "பயங்கரவாதமாக" சித்திரித்து நோக்கிய இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இப்போது மெல்ல மெல்ல உண்மை புரியத் தொடங்கியிருக்கின்றது போலும். இலங்கையின் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவும் சர்வதேச சமூகமும் காட்டும் பிரதிபலிப்புகள் அதனை வெளிப்படுத்துகின்றன. வாகரையில் கடந்த எட்டாம் திகதி ஐம்பதுக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களின் அகதிகளின் உயிர் குடிக்கக் காரணமான இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல், பீரங் கித் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசுத் தலைமை கூறிய சமா தானங்கள் சமாளிப்புகள் ஏற்கவே முடியாதவை என்பதை…

  20. Share0 “யாழ்ப்பாணம் நூலகத்தை ஐக்கிய தேசிய கட்சியினர் அழித்தார்கள். தற்போதைய பிரதமர் அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவை அமைச்சர்களின் வழிகாட்டலில் தான் நூலகம் எரிக்கப்பட்டது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழில் இன்று (07) நடைபெற்ற மாநகர சபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் முன்பாக உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் மாநகர சபை கட்டடத்தை ய…

  21. கொடுத்த வாக்குறுதியை மறுத்தவர் ரணில்..! [ வெள்ளிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2015, 09:53.03 PM GMT ] இலங்கை முழுவதும் சிங்களவர் நாடு. தமிழர் இரண்டாம் தர குடிகளே என்ற கண்ணோட்டம், 1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கித் தலைமை வகித்தவர் பொன்னம்பலம் அருணாசலம். யாழ்ப்பாணத் தமிழரோடு இலங்கைத் தேசிய காங்கிரஸார் ஒப்பந்தம் செய்து ஆதரவை பெற்றனர். மேற்கு யாழ்ப்பாணத்தில் தமிழர் ஒருவர் சட்டசபை உறுப்பினர் ஆவார் என்பதே உடன்பாடு. தேர்தலில் வென்ற உடனேயே உடன்பாட்டை மீறிய சிங்களவர்களை விட்டு, 1920ல் அருணாசலம் அகன்றார். சிங்களவர்களை நம்பமுடியாது என்ற கருத்தை அப்பொழுதே எழுதி வைத்தவர் அவரே. 2002ல் நோர்வே நாட்டு ஒஸ்லோ நகரில் விடுதலைப்புலிகளோடு பேசிய பின், 20 நாடுகளின் முன்னிலையில் தமிழர்…

  22. சிறிலங்கா அரசின் தெளிவான போர் முகம் மட்டக்களப்பு மாவட்டம் பனிச்சங்கேணி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சி சிறிலங்கா அரசின் போர் முகத்தை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. சமாதான முன்னெடுப்புகளுக்கு இவ்வாறான வலிந்த தாக்குதல் என்பது ஒரு போதும் நம்பிக்கையை ஏற்படுத்தமாட்டாது. எதிர்வரும் 28ம் 29ம் திகதிகளில் பேச்சுவார்த்தைக்குத் தயார் என சிறிலங்கா அரசு இணக்கம் தெரிவித்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்துக்குள் பாரிய படை நகர்வை மேற்கொண்டமையால் போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் சர்வதேச சமூகத்தை சிங்களப் பேரினவாத அரசு ஏமாற்றுகிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்…

    • 1 reply
    • 1.4k views
  23. மகா ஓயா வாவியில் படகு கவிழ்ந்து இரு படையினர் பலி - பண்டார வன்னியன்- அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான மகா ஓயா பிரதேச வாவி ஒன்றில் மூழ்கி இரு சிறிலங்கா படையினர் பலியாகியுள்ளதாக அம்பாறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இருவரில் ஒருவர் விசேட அதிரடிப் படையைச்சேர்ந்தவர் என்றும் மற்றையவர் ஊர்காவல்படையினைச்சேர்ந்தவர

    • 4 replies
    • 1.4k views
  24. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சவாரிக்குப் பயன்படுத்திய குதிரை முல்லைத்தீவு வனப்பகுதியில் காணப்படுகிறதாம்! [Monday, 2011-04-04 14:26:31] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் கருங்குதிரையொன்று முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்குதிரை தன்னந் தனியாக வனாந்திரப் பிரதேசத்தில் சுற்றி வருவதைப் பலரும் கண்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர் மொபைல் போன் ஊடாக குதிரையைப் படம் பிடித்துள்ளார்.ஆயினும் குதிரையை நெருங்கிப் போய் தெளிவாகப் படமெடுக்க முனைந்த போது அது மிரண்டு ஓடியுள்ளது. இதற்கிடையே முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்பட்ட பிரஸ்தாப குதிரை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலை…

    • 1 reply
    • 1.4k views
  25. போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி போராட்டம் September 28, 2018 கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி, இன்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://globaltamilnews.net/2018/97512/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.