ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் நாடு பேரழிவையே சந்திக்க நேரிடுமென எச்சரித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, யுத்த இழப்புகள் பற்றிய புள்ளிவிபரங்களை அரசு மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சமாதானப் பேச்சுகளை அரசு முறித்துக் கொண்டதன் பிரதி பலன், இரண்டரை வருடங்களில் படைத்தரப்பிலிருந்து 9 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் ..............., முகமாலைத் தாக்குதலை நடத்தினர் . அதன் பயன் பெருந்தொகையான படையினரை இழக்க வேண்டியேற்பட்டது. சுமார் 200 படைவீரர்கள் பலியானதாகவும் 600 பேரளவில் காயமடைந்ததாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ............... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு வன்னியை நோக்கிய பார்வை அதிகரித்துள்ளது.( வாராந்த ஆய்வு) லங்கையில் வசிக்கும் தமிழர்களும் சர்வதேச தமிழர்களும் ஏன் சர்வதேசமும் இன்று வன்னிப் பெருநிலப் பரப்பின் மீதே தமது பார்வையைச் செலுத்துகின்றன. இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று வருகின்றபோதிலும் இந்த யுத்தமானது தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதனைவிடச் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்கான யுத்தமாகும். எனவே இந்த யுத்தத்தைத் தமிழர்களும் சர்வதேசமும் விழிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. வன்னியில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது அங்கு இலங்கை அரசாங்கதினால் …
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞரும், தேசத்தின் குரல் என்று தமிழீழ தேசியத்தலைவரால் கொளரவப்படுத்தப்பட்டுள்ள கலாநிதி. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் திறப்பும் அஞ்சலிக்கூட்டமும் கோயம்புத்தூர் பெரியார் படிப்பகத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும்திரளான மக்கள் இங்கு திரண்டு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்திற்கு தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இந்த இரங்கல் நிகழ்வில், கலாநிதி. அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்தை பெரியார் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அஞ்சலிக் கூட்;டம் நிகழ்ந்தது. தலைமை இரங்கலுரையினை கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருஸ்ணன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து இங்கு, கோவை ஞானி …
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்கா வெளியேறிய பின் அடுத்தது என்ன?: திட்டத்தை சொல்கிறார் சுமந்திரன்! June 21, 2018 ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது எமக்குப் பாதிப்பானது. இருப்பினும், அடுத்த கட்டத் தலைமைத்துவம் வழங்கிய, உறுதியான தலைமைத்துவம் வழங்கக் கூடிய தரப்புக்களுடன் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். அமெரிக்கா உறுப்புரிமையிலிருந்து வெளியேறினாலும், வெளியிலிருந்து கையாளக்கூடிய வகையில் அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் பேச்சு நடத்துவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை விவக…
-
- 1 reply
- 1.4k views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தமது பிள்ளைகளின் நிர்வாண படத்தை வைத்து உழைக்கும் நிலைக்கு சமூக நிலை பலவீனமடைந்துள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும். இந்த அரசாங்கத்துடன் பேசி பயனில்லை. பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களினால் மக்களுக்கு பயனேதுமில்லை,ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…
-
- 11 replies
- 1.4k views
-
-
-
பர்மாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை குரல் கொடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. பர்மாவின் அராகன் மாநிலத்தில் ரொகின்கியா முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது, குறித்த முஸ்லிம்கள் இன ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை இலங்கை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குறித்த முஸ்லிம்களுக்கு இலங்கை கடற்படையினர் அடைக்கலம் வழங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 2012 ஜூன் மாதம் முதல் பர்மா அதிகாரிகள் குறித்த முஸ்லிம்களுக்கு எதிராக…
-
- 8 replies
- 1.4k views
-
-
நானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன்; விக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.அப்போது ஆட்சியாளர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை நல்க முற்பட்டதனூடாக அரசின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டது. தமது அரசியல் தீர்வு விடயங்களை சுமூகமாக கையாளமுடியும் என்ற எதிர்ப்பை எமது தலைவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் அது கை கூடவில்லை.எமது அப்போதைய தலைவர்களின் தூரநோக்கற்ற செயல்போல அதே பிழையை தற்போது எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளும் செய்துவருகின்றவென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 1.4k views
-
-
வடக்கில் காணிகள் வழங்கப்பட்டு அந்தக் கிராமத்திற்கு நாமல் கம என பெயரிடப்படுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் லாபத்தைக் கருத்திற் கொண்டு ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த மக்கள் வடக்கில் குடியமர்த்தப்படுவதாகவும் ஒவ்வொரு ஏக்கர் காணியை வழங்கி அந்தக் கிராமத்திற்கு நாமல் கம என அரசாங்கம் பெயர் சூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் சுதந்திரம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் பத்திரிகை நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் சுதந்திரம் இருந்தால் அறை இராணுவ ஆட்சி நடத்தப்பட வே…
-
- 0 replies
- 1.4k views
-
-
Three dead in Sri Lanka bus blast At least three people have been killed and 35 injured by a bomb that hit a passenger bus in northern Sri Lanka, the country's defence ministry says. The attack, in Vavuniya district, about 250km (155 miles) north of the capital, Colombo, happened late on Monday night. Vavuniya is the last government-held garrison town before territory held by the separatist Tamil Tigers, blamed for the attack by Sri Lankan officials. It is the third bombing of a civilian bus so far in April. Military officials said the blast was probably caused by a mine planted by the side of the road to target the bus, which was travelling …
-
- 3 replies
- 1.4k views
-
-
எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் சுப.வீ. வலியுறுத்தல் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் "ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். நிகழ்…
-
- 3 replies
- 1.4k views
-
-
கொழும்பு வந்தார் தமிழிசை! - சிறிதரன்,சிறிநேசன் வரவேற்பு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவி வைத்திய கலாநிதி தமிழிசை சௌந்தர்ராஜன், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டு, இன்று காலை கொழும்பு வந்தடைந்தார். அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிவஞானம் சிறிதரன், ஞா.சிறிநேசன் ஆகியோர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர். தமிழிசை தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/listAllNews.php?newsID=185784&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: கோட்டா ஓடி ஒழியமுடியாது என்கின்றார் சுமந்திரன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை அரசியல் மயப்படுத்தப்பட்டது என கூறி தப்பிக்க முடியாது என்றும் அதற்கு தாங்கள் அனுமதிக்கபோவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்திற்கு நிச்சயம் ஜனாதிபதி பதில் சொல்லியே ஆக வேண்டும் என வலியுறுத்தினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு செயலாராக இருந்த போது, யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய முழு பொறுப்பும் அவரையே சாரும். யுத்த …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒட்டுப்படை மீது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் - மூவர் பலி - ஒருவர் கைது - பாண்டியன் - Tuesday, 18 April 2006 12:42 மட்டக்களப்பு மாவட்டம், கிரான் மேற்கு, பெண்டுகள் சேனைப் பகுதிக்குள் ஊடுருவி தாக் குதல் நடத்த முற்பட்ட ஒட்டுப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் ஒட்டுப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொருவர்; கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டுப்படையினரிடமிருந்து கிளைமோர் கண்ணிவெடிகள், கைக்குண்டுகள் மற்றும் தானியங்கித் துப்பாக்கிகள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒட்டுப்படையி னரின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதா…
-
- 4 replies
- 1.4k views
-
-
மத்திய அரசின் ஆதரவை திரும்ப பெற்றால் இலங்கை பிரச்சனை தீர்ந்து விடுமா : கலைஞர் இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று வியாழக்கிழமை பிரதமரை சந்திப்பதாக சட்ட மன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் இன்று நடைபெறும் பிரதமர் சந்திப்பிற்காக நேற்று புதன்கிழமை முதல்வர் கருணாநிதியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ், மற்றும் கி.வீரமணி ஆகியோரும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். விமானம் மூலம் டெல்லிக்கு வந்த முதல்வர்,விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு புதிய இல்லமான சாணக்கியாபுரி வந்தார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கேள்வி: இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி அளிக்கி…
-
- 4 replies
- 1.4k views
-
-
சின்னக்குட்டிகளின் மரதனோட்டம்...! முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் மிரட்ச்சியுமாக நம்பிக்கையுடன் ஓடும் இவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....! சலோம் சிறுவர் முன்பள்ளியின் மாணவர்களுக்கிடயேயான குறுந்தூர மரதனோட்டப்போட்டி தென்னிந்திய திருச்சபை குரு ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது..! 4 வயதுக்குட்பட்ட ஆண் பெண் சின்னகுட்டான்களின் ஓட்டம் தாயகத்தில் நடப்பது இதுதான் முதற்தடவை...! நண்றி சங்கதி
-
- 2 replies
- 1.3k views
-
-
பாக்கு நீரிணையில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை கையாள்வதற்கும் மீனவர் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவும் இலங்கையும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனை கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவின் புதுடில்லி விஜயத்தின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ரம்புக்வெல குறிப்பிட்டிருக்கிறார். பாக்கு நீரிணையில் இந்திய, இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ரோந்து செல்வதற்கு இந்த இணக்கப்பாடு வழி வகுக்குமா? என்று கேட்கப்பட்டபோது, இந்த நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் இன…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஒலிம்பிக் போட்டியில் 6 இலங்கையரே பங்கேற்பு ஆரம்ப வைபவத்திற்கு 35 பேர் பயணம் * பணத்தை அரசு விரயமாக்குவதாக விசனம் சீனாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையிலிருந்து ஆறு வீரர்களே கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்தில் பங்கேற்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 35 பேர்களுடன் பீஜிங் சென்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நிலையில் ஜனாதிபதியும் அவரது அரசும் கோடிக்கணக்கான பணத்தை வீண்விரயம் செய்து வருவதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசி…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கைப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும் எதிர்ப்புணர்வுக்கிடையே அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையைத் தொடங்கியிருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவிவருவதால், பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திரமாகவே வானொலி சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. 1925-ல் "கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்நிலையம் 1972-ம் ஆண்டிலிருந்து "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில் ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டு வந்தது. இதில், கடந்த கால் நூற்றாண்டாக மத்திய அலையில் ஒலிப்பரப்பாகிவந்த "கொழும்பு சர்வதேச நிலைய அலைவரிசை' கடந்த மே 31-ம் தேதியுடன் நிறுத்தப்பட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
யுத்தம் ஒரு வருடத்திற்குள் முடிவடைந்துவிடுமென இராணுவ தளபதி சரத் பொன்சேகா கருதுகிறார். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண லேவண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் தேசிய தலைமைத்துவம் உள்ளது. எமக்கு வழங்கபட்ட இலக்கு பயங்கரவாதத்தை அழிப்பதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். கனடாவின் 'நாஷனல் போஸ்ட்' பத்திரிகையாளர் ஸ்ரெவார்ட் பெல்லிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியிலேயே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார். 'இலங்கையின் உட்புறம் யுத்தத்துக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வு' எனும் தலைப்பில் ஸ்;ரெவாட் பெல் போர் முன்னரங்க நிலைகளுக்கு தான் சென்று வந்த அனுபவங்களையும் பேட்டிகளையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய ஆறு பகுதி தொடர் கட்டுரையின் 5 ஆவது அங்கத்தில் சரத் பொன்சேகாவின் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. …
-
- 1 reply
- 1.3k views
-
-
வடமாகாணசபையினை எமது ஈ.பி.ஆர்.டில்.எப். கட்சி புறக்கணிக்கவில்லை. மாறாக, இன்று நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தினையே நாங்கள் புறக்கணித்தோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இன்று யாழில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் மாகாணசபைக்கான பதவியேற்பு வைபவத்தில், மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பங்குபற்றாமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்... “கூட்டமைப்பு என்பதன் பதம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எப்படி அமையவேண்டும் என்பது …
-
- 22 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை, 13, டிசம்பர் 2010 (17:53 IST) ராஜபக்சே கோழை: இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம்: பொன்சேகா இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயல்பாடுகள் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகும் வகையில் அமைந்துள்ளது என, அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அந்நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது, தனக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத் துறையினரை அடக்கி ஒடுக்கும் ராஜபக்சேவின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது. என்னையும், என் குடும்பத்தையும் முன்னிறுத்தியதான அவரது அரசியல் செயற்பாடுகள் இலங்கை மக்க…
-
- 18 replies
- 1.3k views
-
-
அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கிறது இந்திய அரசு. கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை, வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததன் மூலம். அகிம்சை... அணி சேராக் கொள்கை... பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை... என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது. சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 17 நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், ஈழ மக்களைக் ] கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அள்னக்கையாக இருந்து அதனை ஆதரித்ததன் மூலம் மொத்த தமிழ் இனத்தின் முகத்திலே கரியை அல்ல மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு. மாபெரும் மனிதப் பேரவலம் நடந்தேறியது கண…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு அசுர வேகத்தில் குறைவு – அரசு உதவி கோரல் சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு வெகு விரைவாக குறைந்து செல்வதால், அச்சமடைந்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக நாணய நிதியத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் உதவி புரியுமாறு கோர ஆரம்பித்துள்ளது. சிறீலங்காவிற்கு பிரதான அன்னியச் செலாவணி வருவாயைப் பெற்றுக்கொடுக்கும் சுற்றுலாத்துறை மற்றும் பெருந்தோட்டத் தொழில் என்பனவற்றின் ன்னியச் செலாவணி வருமானம் முன்னரைவிட குறைவடைந்துள்ளன. இதேவேளை, சிறீலங்கா அரசு மிகப்பெரும் பாதீட்டை ஒதுக்கீட்டுடன் தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்துள்ளதாலும், அதற்காக முற்று முழுதாக நாட்டின் உள்நாட்டு இருப்புக்களை பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ள…
-
- 5 replies
- 1.3k views
-
-
திங்கள் 03-03-2008 19:47 மணி தமிழீழம் [மயூரன்] ஒட்டுசுட்டானில் வான்வழித் தாக்குதல்கள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறீலங்கா வான்படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று திங்கட்கிழமை மதியம் 12.45 மணியளவில் ஒட்டுசுட்டான் குளமுறிப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளன. குண்டு வீச்சில் ஏற்பட்ட சேதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-