ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
நேவி சம்பத் கைது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினை சேர்ந்த பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி என அழைக்கப்படும் நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் தலைமறைவாகியிருந்ததை தொடர்ந்து நீதிமன்றம் அவரிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்…
-
- 5 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 19,204 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1983ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் தொடக்கம் 2007ம் ஆண்டு மே 15ம் நாள் வரையில் 19,204 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. மாவீரர்களின் மொத்த எண்ணிக்கை மாவட்டம் தொகை யாழ்ப்பாணம் 6929 மட்டக்களப்பு - அம்பாறை 4894 வன்னி 2809 திருமலை …
-
- 5 replies
- 1.9k views
-
-
[06 - April - 2008] விதுரன் * மடுவிலிருந்து திருச்சொரூபத்தைக் கொண்டு சென்றமை அரசுக்கு கொடுத்துள்ள பெரும் ஏமாற்றம் வடக்கே அடைமழை நின்று விட்டதால் மீண்டும் கடும் சமர் ஆரம்பமாகியுள்ளது. மடுவைக் கைப்பற்றி விடும் முயற்சியில் அரசும் படையினரும் தீவிரம் காட்டினர். ஆனால் மடுதேவாலயத்திலிருந்து திருச்சொரூபம் வேறிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் அரசு மடுவைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மடுவைக் கைப்பற்றுவதென்பது இராணுவ இலக்காக இருக்கவில்லை. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காகவே மடுதேவாலயத்தை கைப்பற்றிவிட வேண்டுமென அரசு தீவிர அக்கறை காட்டியது. இராணுவ ரீதியில் மடுவோ அல்லது தேவாலயப் பகுதியோ கேந்திர முக்கிய பகுதிகளல்ல. ஆனால் மடுத் தேவாலயத்த…
-
- 5 replies
- 2.1k views
-
-
சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். படையினருக்கான தொழிற்சார் பயிற்சிகள், மற்றும் இலங்கையின் கோரிக்கையின் பேரில் இராணுவ உதவிகளை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்களில் அவர் பங்குபற்றுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலார் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரை அவர் சந்தித்து கலந்துரையாடுவார். இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த வருடம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார். அவருடன் சீன மக்கள் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் விஜயம் செய்யவுள்ளனர். பாதுகாப்ப…
-
- 5 replies
- 702 views
-
-
450 ஆபாச படங்களுடன் சிக்கிய பிக்கு. ஆபாச படங்களை தனது மடிக்கணனியில் வைத்திருந்த பிக்கு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பதிகொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெலிஓய பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து கடந்த 6 ஆம் திகதி குறித்த பிக்கு வெலிஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இவருடைய மடிக்கணனியில் பல ஆபாச படங்கள் இருந்துள்ளன. மேலும் இவருடன் இருந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிக்கு தன்னை ரத்மலான பாலித தேரர் என அடையாளம் காண்பித்த போதிலும் அவருடைய அடையாள அட்டையில் மித்தெனிய உதித்த என பெயர் குறிப்பிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் சில வருடங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்துள்ளதுடன் அப்பிரதேச மக்களிடம் தன்னை வௌ;வே…
-
- 5 replies
- 970 views
-
-
1918ம் ஆண்டுக்குப் பின்னர் நிசா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பலமாக பாதிப்பை வட தமிழீழம் கண்டுள்ள நிலையில் குறிப்பாக வன்னி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைக் கூட அனுப்ப விடாது சிறீலங்கா அரசு தடுத்து வருவதை சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துச் சாடியுள்ளது. Flood-hit Sri Lankans 'need help' Tens of thousands of people in flooded areas of northern Sri Lanka are without adequate shelter and need help now, the Human Rights Watch campaign group says. It has called on the government to immediately lift a ban imposed in September which stops humanitarian agencies from going to conflict areas. But the authorities say that flood …
-
- 5 replies
- 1.9k views
-
-
பலஸ்தீன பூமியில் சட்ட விரோத யூதக் குடியிருப்புகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டு மக்களுக்கான அனைத்து உரிமைகளும், அங்கீகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென்றும் இஸ்லாத்தின் முதலாவது கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா இஸ்ரேலர்களிடமிருந்து மீட்கப்படுவது அவசியமென்றும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் ஹப்பாஷிடம் வேண்டுகோள் விடுத்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன அமைச்சருக்கும், இலங்கையின் நீதியமைச்சருக்கும் இடையிலான உரையாடல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விட…
-
- 5 replies
- 507 views
-
-
நேற்று இராமனாதன் தடுப்பு முகாமிலிருந்த மக்கள் ஒரு 700 மீற்றர் தூரத்தில் இருந்த ஆனந்த குமாரசாமி முகாமுக்குள் கிட்டதட்ட 07 முட்கம்பி வேலிகளை ஊடறுத்து சென்று தமக்கான சில பொருட்களை பெற சென்றனர். அதன் போது சிங்களப்படை அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தது அதாவது முகாம் விட்டு யாரும் சென்றால் சுடப்படுவீர்கள் என்று ஆனால் அவர்கள் அதனையும் மீறி சென்றார்கள். இராணுவத்துடன் மோதினார்கள்.இராணுவத்தை நோக்கி கற்களாலும்,செருப்புக்களாலும
-
- 5 replies
- 1.6k views
-
-
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எந்த அரசாங்கத்தோடும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்காக கதவுகளை மூடியதில்லை என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த காலங்களில் கூட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில்…
-
- 5 replies
- 397 views
-
-
குமரன் பத்மநாதன் விரைவில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொள்வார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வாரமளவில் குமரன் பத்மநாதன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்வார் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் தடவையாக இவ்வாறான ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்டவிதம், கப்பம் கோரப்பட்ட விதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் அம்ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாண பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இன்றைய தினம் தமிழத்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய இரு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரு தரப்புகளினதும் முரண்பாடுகள், தேர்தலின் பின்னர் அவற்றின் நிலைப்பாடுகள் தொடர்பாக குடாநாட்டு மக்களிடையே உள்ள சந்தேகங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் வேட்பாளர்கள் அனைவரும் இந்த சந்திப்பின் போது பிரசன்னமாகியிருந்தனர். இந்த சந்திப்பின் பிரகாரமே அடுத்து வருகின்ற தேர்தலில் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய மற்றும் பல்…
-
- 5 replies
- 1.1k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய படடியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு தேசிய பட்டியல் மூலமான உத்தேசிக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகளின் பெயர்களை மூன்று பிரதான கட்சிகள் இன்று வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்டுள்ளவர்களின் பெயர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப் பட்டியலில், 1. ஏ.எச்.எம்.பௌசி 2. ஜீ.எல்.பீரிஸ் 3. டி.யூ. குணசேகர 4. திஸ்ஸ விதாரண 5. மொஹமட் குஷேன் ரிஸ்வி ஷெரீப் 6. சரத் அமுணுகம 7. திஸ்ஸ அத்தநாயக்க 8. டிலான் பெரேரா 9. ஜெயரத்னம் ஶ்ரீரங்கா 10.…
-
- 5 replies
- 563 views
-
-
கதிர் காமரைகொன்றது-பிரபா.பொட்டு.சாள்ஸ்மாஸ்ரா்-மன்றில் மனு இலங்கையின் முன்னாள் வௌிவிவகார அமைச்சரை திட்டமிட்டு கொன்றவா்கள் என்ற நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவரை கொன்றது தமிழீழ விடுதலைப்புலிகள்ன் தலைவா் பிரபாகரன் பலனாய்வு தலைவா் பொட்டம்மான். சாளஸ் மாஸ்ரா் மீது இந்த கொலை குற்றம் சுமத்தப்பட்டள்ளது சட்டு கொல்லப்பட்ட கதிர்காமரின் நீதிமன்ற விசாரணையின் போதே இவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1275#1275
-
- 5 replies
- 1.7k views
-
-
வட போர்முனையான முகமாலை ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.6k views
-
-
இரண்டு தசாப்த காலமாக வடக்கு கிழக்கில் ஆயுதமேந்தியவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளை வழங்குவதே பிரதான இலக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிற்பயிற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். www.tamilwin.com
-
- 5 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின்; உயரதிகாரி விஜய் நம்பியார் இன்று இலங்கை வருகிறார் அவர் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரி விஜய் நம்பியாரை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக நேற்று ஐக்கிய நாடுகள் சபை செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது விஜய் நம்பியார் ஒரு இந்திய பிரஜையாக இருக்கும் போது அவரை இலங்கைக்கு அனுப்புவது எவ்வாறு என இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் விஜய் நம்பியார் ஒரு சர்வதேச பொதுசேவையாளர் என்றும் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்கு விதிகளுக்கு ஏற்பவே சேவையாற்றுபவர் என்றும் தெரிவித்துள்ளார் .இந்தநிலையில் அவரின் நாடு…
-
- 5 replies
- 1k views
-
-
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க... 20 ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு! காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20 ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு தமிழில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான விண்ணப்பம், காணாமல் போனவரின் தேசிய அடையாள அட்டை, வாகனச்சாரதி அனுமதிப்பத்திரம், பிறப்பு அத்தாட்சி பத்திரம் உட்பட 20 ஆவணங்களை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் கோரியுள்ளது. காணாமல்போனவர்கள் குறித்த முறைப்பாடு கிடைத்துள்ளதை உறுதிசெய்வத…
-
- 5 replies
- 443 views
-
-
இன்று சென்னையில் தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழர் முன்னேற்ற கழகம் மற்றும் முகநூல் நண்பர்கள் ஏற்பாடு செய்த மாவீரர் நாள் நிகழ்வு எளிமையான முறையில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நடைபெற்றது . சென்னையில் பல இடங்களில் தமிழக அரசு தீவிர கண்காணிப்பில் பல மாவீரர் நகழ்ச்சியை ரத்து செய்தது இருந்தும் சில இடங்ககளில் உள் அரங்கங்களில் மாவீரர் நாள் தமிழ் உணர்வாளர் களினால் உணர்வோடு அனுசரிக்கப்பட்டது . மாவீரர் கையேட்டில் கொடுத்துள்ளபடி அகவணக்கம் மலர் வணக்கம் உறுதி மொழி மற்றும் வீரவணக்க உரைகள் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட தோழர்களுக்கு நம் வாழ்த்துக்கள். - முகநூல் ஊடாக கடலூரில் ......
-
- 5 replies
- 1.5k views
-
-
'பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மார்ச், 2012 - 14:49 ஜிஎம்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி 'சர்வதேச தலையீடு இன்றி எதுவும் நடக்காது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க…
-
- 5 replies
- 1.3k views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது எமது பிரச்சினை அல்ல, உங்களில் யார் களமிறங்குவீர்கள் என்பதை விட நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு முன்வைக்கு தீர்வு என்ன? அரசியல் அமைப்பை நிறைவுசெய்வீர்களா என்பதை கூறுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இரா. சம்பந்தன் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் ஆதரவு திரட்டும் நோக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமை சந்திக்க முன்னர் இன்று காலையில் தமிழ் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூ…
-
- 5 replies
- 438 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதக் குழுக்களில் ஒன்று என கனடா முத்திரை குத்தியுள்ளமையைக் கனடாவின் பெரும்பாலான தமிழர்கள் எதிர்ப்பதாக ஸி நியூஸ் தெரிவித்துள்ளது. கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டொக்வெல் டே கனடாவில் இயங்கிவரும் உலகத் தமிழ் அமைப்பு நிதி சேகரிக்க முடியாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார். இந்தநிலையில் ஒட்டாவாவின் இந்த முடிவு குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள கனேடியன் தமிழ் காங்கிரஸின் பிரதிநிதி டேவிட் பூபாலபிள்ளை சில தனிப்பட்டவர்களுக்காகக் கனேடிய அரசாங்கம் முழு அமைப்பையும் தண்டித்துள்ளதாகக் குற்றஞ் சுமத்தியுள்ளார். உலகத் தமிழ் அமைப்பின் சிலர் செய்த குற்றத்திற்காக முழு அமைப்பையும் கனேடிய அரசாங்கம் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.?? …
-
- 5 replies
- 2.5k views
-
-
வன்னியில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் மோதல்கள் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், எதிர்பார்த்தளவுக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வரவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர், பாராளுமன்ற உறுப்பினர் பேசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை தங்கவைத்துப் பராமரிக்கக்கூடிய வசதிகள் வவுனியாவில் செய்யப்பட்டுள்ளபோதிலும், மிகக் குறைந்தளவு தொகையினரே இதுவரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவுக்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கு, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக்…
-
- 5 replies
- 2.4k views
-
-
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் ஏழு வார காலமாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மீள ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பங்குப்பரிவர்த்தனையின் செயற்பாடுகள் தொடர்பான விதிமுறைகளின் பிரகாரம், S&P SL 20 சுட்டி 196.93 புள்ளிகளால் அல்லது 10.11% இனால் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இன்றைய தினத்துக்கு மூடப்பட்டது. இன்றைய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் புரள்வு பெறுமதி ரூ. 24 மில்லியனாக பதிவாகியிருந்தது. சந்தை செயற்பாடுகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்ட போது அபவிசு 179.…
-
- 5 replies
- 1.2k views
-
-
கடந்தகால தவறுகளை உணர்ந்து கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – டக்ளஸ் கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைதினம் வடமாராட்சி பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுடனான சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் தம்பசிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார ரீதியிலான செயற்பாட்டாளர்களுடன் நடத்திய சந்திப்பிலேயே குறித்த கருத்தினை வெளிப்படுத்தி இருக்கின்றார். https://newuthayan.com/கடந்தகால-தவறுகளை…
-
- 5 replies
- 792 views
-
-
"எப்போதெல்லாம் நாங்கள் அரசியலில் இறங்கும் நோக்குடன் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு அடி வைக்கிறோமோ, அப்போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி போபர்ஸ் பீரங்கி பேர வழக்கைப் பற்றிப் பேசுவது வாடிக்கையாகிவிட்டது" என்று ராகுல் காந்தி ஒருமுறையல்ல பலமுறை கூறியுள்ளார். அப்படி பாரதிய ஜனதா கட்சி போபர்ஸ் ஆயதத்தை எடுத்தபோதெல்லாம் அவர்களும் பின்வாங்கிக் கொண்டு, தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டத்தை பலமுறை தள்ளிப்போட்டார்கள் என்பதும், ஒரு வழியாக போபர்ஸ் ஒழிந்த பின்னரே அவர்கள் தீவிர அரசியலில் இறங்கினார்கள் என்பதும் இந்திய அரசியலை கூர்ந்து கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும். இதேபோன்று, எப்போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக தமிழ்நாட்டில் ஆதரவுக் குரல் எழுகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டுக் காங…
-
- 5 replies
- 2k views
-