ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142899 topics in this forum
-
பகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் யாழ்.பல்கலை கழகத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அட…
-
- 4 replies
- 1.3k views
-
-
புதிய சந்தைகளை உருவாக்கும் யுத்தங்கள் -சி.இதயச்சந்திரன்- பூகோள அரசியலில் புதியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் நிகழ்ந்த பனிப்போரில் ஈடுபட்ட இரு வல்லரசுகளும் புதிய தளமொன்றில் மோதத் தொடங்கிவிட்டன. சோவியத் யூனியனின் சிதைவோடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் துண்டாடப்பட்டு, அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ கூட்டமைப்புக்குள் இணையத் தொடங்கியவுடன் பெருங்காயடப்பாவாக விளங்கும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. ஜோர்ஜியா, உக்ரெனில் இருந்து ஆரம்பித்து கொசோவோ வரை அமெரிக்க ஆதிக்கம் வலுவடைகிறது. ரஷ்யாவை சூழவுள்ள நாடுகளில் ஏவுகணை எதிர்ப்பு நிலையம் அமைக்க மேற்குலகம் மேற்கொள்ளும் முயற்சிக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பினை தெரிவிப…
-
- 0 replies
- 1.3k views
-
-
முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார். அதன் பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்டணியாக அமையப் போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் எனக் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை. தற்போது விக்கினேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட்டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந்தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
மோதலுக்கு உண்மையான காரணம் தண்ணீர் அல்ல' [02 - August - 2006] [Font Size - A - A - A] திருகோணமலையில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதலிற்கான உண்மையான காரணம் நீராக இருக்காது என யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். வடகிழக்கில் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மோதல்களை சுட்டிக்காட்டியுள்ள ஹென்றிக்சன் நீரே உண்மையான காரணமாக இருந்தால் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது என குறிப்பிட்டுள்ளார். கடற் புலிகளின் இலக்கந்தை தளம் நீரிற்காக தாக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.thinakkural.com/news/2006/8/2/i...ws_page7655.htm
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் தாய்க்கு சிங்கள தலைவர் அஞ்சலி! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் மறைவுக்கு இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார் நவ சம சமாய கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண. இவரது இரங்கல் செய்தி வருமாறு:- "வாழ்நாள் முழுவதும் தமிழ் மக்களின் தாயக விடுதலைக்காக அளப்பரிய தியாகத்தை இத்தாயார் செய்துள்ளார். யுத்தகாலத்தில் பாரிய துன்பச் சூழ்நிலையில் வாழ்ந்து உள்ளார். பிள்ளை, மருமகள், பேரப் பிள்ளைகள் ஆகியோரை யுத்தத்தில் பறிகொடுத்துள்ளார். தமிழர் தாயக விடுதலைக்காகத் தியாகங்கள் பல புரிந்த ஆயிரம், ஆயிரம் தாய்மார்களுள் பார்வதியம்மாளும் உள்ளடங்கி உள்ளார். இவர் எம்மைவிட வேறான கருத்து…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்.குடாநாட்டிலும் மீண்டும் எம்.ஜி.ஆர்-சிவாஜி பாணியில் நடிகர் விஜய் இற்கும் ரசிகர் மன்றம் முளைத்துள்ளது. தற்போது விஜயின் துப்பாக்கி திரைப்படம் வெளிவந்துள்ள நிலையில் யாழ்.நகரின் குருநகர் பகுதியில் விஜய்க்கு ரசிகர் மன்றம் முளைத்துள்ளது.கை விடப்பட்ட தூபியொன்றை வர்ணம் பூசி அலங்கரித்துள்ள ரசிகபட்டாளங்கள் அப்பகுதிகளில் விஜயினை வாழ்த்தும் வகையிலான பேனர்களையும் தொங்கவிட்டுள்ளனர். முன்னதாக நேற்று தீபாவளிக்கு யாழ்ப்பாணத்திலும் விஜயின் துப்பாக்கி திரைப்படம் வெளியாகியிருந்தது.சுமார் ஏழு மில்லியனிற்கு அப்படம் வாங்கப்பட்ட போதும் முதல் நாளிலிலேயே கணிசமான வருவாயினை அப்படம் ஈட்டிக்கொடுத்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.முதல் நாள் காட்சிக்கான நுழைவு சீட்டுக்கள் கறுப்பு சந…
-
- 12 replies
- 1.3k views
-
-
எத்தகைய சவால்களுக்கும் முகம்கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ்க் குடிமக்கள் மீது கருணா வரிகள் விதிக்கிறார்.! - கோதுமைத்திருடன் கே.ரீ.றாஜசிங்கம் அம்பலப்படுத்துகிறார். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 24 யூன் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில், சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழ்கின்ற மீனவர்கள் மீது வரிகளை விதிப்பதன் மூலம், இப்பொழுது கருணா குழு நிதியைத் திரட்டி வருகிறது. இந்த இரண்டு மாவட்டங்ளில் உள்ள கிராம சேவை அதிகாரிகள் மூலமாக, அங்குள்ள தனியார்கள் மற்றும் குடும்பங்களின் வருவாய்களைப் பற்றிய விவரங்களைக் கருணா குழு திரட்டி வருவதாகவும் தகவல் அறிய முடிகிறது. வரிகளை விதிக்கும் நோக்கத்துடன், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருக்கும் கடைக்காரர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பற்றிய ஒரு பட்டியலைய…
-
- 0 replies
- 1.3k views
-
-
பொறுப்புக்கூறவும், மனிதஉரிமைகள் குறித்த கடப்பாட்டை நிறைவேற்றவும், சிறிலங்கா முன்வர வேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று முன்தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போதே கனேடிய வெளிவிவகார அமைச்சர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்ட கூட்டத்தில் வைத்து, சிறிலங்கா குறித்து உரத்த குரலில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் காட்டமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தை முடித்து வெளியே வந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர், “ சிறிலங்காவின…
-
- 2 replies
- 1.3k views
-
-
சர்வதேச புத்தக கண்காட்சியில் ஓவியர் புகழேந்தியின் தமிழீழம்! Tuesday, April 19, 2011, 5:17 25ஆவது சர்வதேச புத்தக கண்காட்சியும் விற்பனை விழாவும் இம்மாதம் 29ஆம் திகதி முதல் மே 3ஆம் திகதிவரை ஜெனிவா பலெக்போ Palexpo – Geneva சர்வதேச மண்டபத்தில் நடைபெற உள்ளது.1987ஆண்டிலிருந்து வருடாந்தம் நடைபெறும் சர்வதேச புத்தகவிழாவில் இம்முறை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வெளியீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அனைவரையும் இணைத்து நடத்தப்படும் இவ்விழாவில் உலகில் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்க்கப்படுகிறது. திறமையான எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தல், ஊக்குவித்தல், பரிமாறுதல், பரப்புதல் நோ…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறீலங்காவின் கொடிய பேரினவாதியும் அந்நாட்டின் பிரதம மந்திரியுமான ரட்னசிறி விக்கிரமநாயக்கா இஸ்ரேலில் படைத்துறை மற்றும் இராணுவ தொழில்நுட்ப உதவிகள் கேட்டல் உட்பட்ட பேச்சுக்கள் நடத்தச் சென்றுள்ளார்..! படத்தில் ரட்னசிறி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் Ehud Olmert. இஸ்ரேல் சிறீலங்கா படையினருக்கு நீண்டகாலமாகவே பயிற்சி மற்றும் உளவுத்தகவல்கள் வழங்குவதுடன் அமெரிக்காவின் அனுமதியோடு அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் கடற்படைக் கலங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் பரம எதிரியான ஈரானுடன் சிறீலங்காவின் நெருக்கம் தொடர்பில் அமெரிக்கா அதிர்ப்தி கொண்டிக்கும் நிலையில் இவ்விஜயம் நிகழ்ந்துள்ளது. அண்மையில் சிறீலங்கா சிரியாவில் தனது தூதரகத்தை திறந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
20 கிலோ மீற்றர் தூர இலக்கை தாக்கும் பல்குழல் பீரங்கிகளை தயாரிக்கின்றது இலங்கை! இலங்கையில் இராணுவத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால், 10 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்குழல் பீரங்கி நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் நடைபெற்ற சுதந்திர தின இராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பல்குழல் பீரங்கியின் மூலம், 20 கிலோ மீற்றர் வரையுள்ள இலக்குகளைத் தாக்க முடியும். இந்த பல்குழல் பீரங்கிக்கான குண்டுகளும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், பிரிகேடியர் திரான் டி சில்வா தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 1.3k views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்- அங்குள்ள ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இந்துக்கள் எனப் பலரின் வழிபாட்டுத்தலமாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோவிலில், ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கென ஒரு நினைவுத் தூணும் அமைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன்கோவில் லண்டனில் தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகவே இங்கிலாந்துவாசிகளால் பார்க்கப்படுகிறது. தற்போது லண்டனில் இலங்கைத் தூதரகத்தில் உயர்அதிகாரியாக இருப்பவர் அம்சா. இவர்தான், நான்காம் ஈழப்போரின்போது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியாக இருந்தவர். அப்போது, தமிழினத்திற்கு எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
"நாம் என்னதான் விட்டுக்கொடுப்புகளை செய்தாலும் அரசின் போர் முனைப்பு ஒருபோதும் அடங்காது' இந்த அவசரகாலச் சட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பு பிரகடனம் என்று கூறப்பட்டாலும் இது பொதுமக்களை பாதுகாக்கின்ற சட்டமல்ல. மாறாக, அரசையும் அரச அடிவருடிகளையும் பாதுகாக்கின்ற சட்டமாகவும் குறிப்பாக இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களின் குரல்களை நசுக்கின்ற, உரிமைப் போராட்டங்களை அழிக்கின்ற பயங்கரமான சட்டமாகவேயுள்ளது. இந்த அவசரகாலச் சட்டப் பிரேரணையை இச்சபையிலே சமர்ப்பித்து பிரதமர் பேசும்போது உண்மைக்கு மாறான கருத்துகளை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சபையில் உரையாற்றிய அரசசார்பு உறுப்பினர்களும் உரையாற்றும்போது ஒத்த கருத்துக்களையே வரிபிசகாது கூறுகிறார்கள். இவற்றில் இருந்து நாம் ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பாதுகாப்பை என்றுமில்லாதவாறு அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
Nov 21, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நிலை கொள்ளும் - காசி ஆனந்தன் இனிய தமிழீழ நெஞ்சங்களே கனடாவில் மொன்றியலில் தமிழீழ மாவீரர்களின் பெற்றோர்களை போற்றும் மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்குத் தெரியும் தமிழீழ விடுதலைக் களத்தின் தலை நிமிர்ந்த மாவீரர்கள் உலக விடுதலையாளர்களின் வரலாற்றிலேயே தன்னிகர் அற்றவர்கள் கழுத்தில் நஞ்சுகட்டிய ஒரே ஒரு விடுதலைப் படையாய் களத்தில் நின்று உலக வரலாறு படைத்தவர்கள் தமிழீழ நிலத்தில் விளைந்த புலிகள் அஞ்சுதலும் கெஞ்சுதலும் அறியாராய் நெஞ்சுரம் கொண்டு விஞ்சமர் கண்ட விடுதலையாளர்கள் ஈடினை அற்ற அந்த விடுதலையாளர்களை போற்றும் இவ் வேளையில் அவர்களை ஈன்று தமிழீழ ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. நான் சொல்வது, வெளியே போகும் போது, கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான் உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ளும் புதிய அரசமைப்பு நிறைவேறலாம். அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றனவெனவும் அவர் கூறி…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நினைவு நாள் இன்று Posted by: on Nov 2, 2010 தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த எமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவை அணைத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழினத்தின் இருப்புக்காக, அதன் மூச்சுக்காக உழைத்த அந்த உத்தமன் இன்று எம்மத்தியில் இல்லாவிட்டாலும், அனைவரினதும் மனங்களில் குடிகொண்டுள்ளான். இவனது நினைவுடன் நாம் ஒன்றுபட்டு இறுதிவரை விடுதலைக்காக உழைப்போம். அதுவே விடுதலைக்காக போராடி களத்தில் வீழ்ந்த மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும். பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் வீரமரணம் குறித்து தம…
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழீழ மக்களின் அரசியல் வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009. தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - மிக உச்சத் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது. http://www.puthinappalakai.com/view.php?2bd4A4OXvd04a40amA45BPde4a43AYAQ6e2ce2acpdZBPZe2cd2eZPdnBdcae0dce60MmYA4ce0edPdZAAma0cd20dvlmAK4d0
-
- 15 replies
- 1.3k views
-
-
தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை பி.கே. பாலசந்திரன் கொழும்பு, மே 11: இலங்கையில் தமிழர்களை இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை அதிபர் மகிந்த ராஜபட்ச தொடங்கியிருக்கிறார் என்றும் இந்த முயற்சியின் தொடர்ச்சியாக செய்யப்படும் திருத்தங்கள் தங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இலங்கையில் இப்போது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அந்தந்த அரசியல் கட்சிக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் வடக்கிலும் க…
-
- 3 replies
- 1.3k views
-
-
தற்போது யுத்தக் குற்றங்கள் தொடர்பான நிறுவனமொன்றில் பணியாற்றும் புலிகளுக்கு ஆதரவான பெண் அதிகாரியொருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாகத் திவயின செய்தி வெளியிட்டுள்ளது. ஆணையாளர் பதவியை வகிக்கும் லூயிஸ் ஆர்பர் பதவி விலகியதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள சில சிரேஷ்ட அதிகாரிகளினால் குறித்த பெண் அதிகாரியின் பெயர் முன்மொழியப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் அதிகாரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டால் இலங்கை அரசாங்கத்திற்குப் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டு…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் - ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன் :வண. பிதா ஜெகத் கஸ்பார் வானம் அளந்தது அனைத்தும் அளந்து, வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து, வளர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் மொழியின் வரலாறு எத்தனையோ மிகப் பெரிய வீரர்களைக் கண்டிருக்கின்றது. வீரர்களின் வீரத்தைப் போற்றுகின்றோம்;. போர்களை நாங்கள் விரும்புகிறவர்கள் அல்ல. போர்கள் இல்லாத எவ்வித சச்சரவுகள் இல்லாத சமாதான உலகமே எம் அனைவருடைய கனவாகவும் இருக்கின்றது. ஆனால், அந்த உலகம் வருகின்ற வரை, நீதி வருகின்ற வரை, நீதிக்காக, மனித உரிமைகளுக்கான, மனித இருப்புக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அக்கிரமங்களை, ஆக்கிரமிப்புக்களைச் செய்தவர்களை நாங்கள் வாழ்த்துவதும் இல்லை. வணங்குவதும் இல்லை. ஆனால், ஒடுக்கப்படுகின்ற மக…
-
- 0 replies
- 1.3k views
-
-
GCE O/L பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 69% மானவர்கள் ஆங்கிலத்திலும்,55 %மானோர் விஞ்ஞானத்திலும், 49%மானோர் கணித பாடத்திலும் failed . 69% of students who sat for the GCE O/L examination last year had failed in English.49% had failed mathematics and 55% had failed science. Sources said that 145,140 and 163,725 candidates had failed to obtain at least a simple pass in mathematics and Science, respectively. About 56,000 had failed Sinhala; it’s 19% as a percentage. 203,845 had failed to obtain a simple pass in English. According to the Examination Department, 295,000 sat the examination conducted last December. When compared with the previous year’s GCE…
-
- 10 replies
- 1.3k views
-
-
Published By: DIGITAL DESK 7 16 JUL, 2024 | 04:59 PM தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அண்மையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) திறந்துவைக்கப்பட்டது. கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உருவச்சிலையினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். அதனைத்தொடர்ந்து அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழீ்ழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்து…
-
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ். முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-