Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள் ; இதுவரை 11 பேர் கைது கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று இரவு முற்படுத்தப்பட்டனர். அவர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், அவர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் அறிவுறுத்தினார். அத்துடன், கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தனுரொக் என்ற இளைஞர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரையும் எதிர்வரும் வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்க…

  2. மட்டக்களப்பில் இந்திய உயஸ்தானிகர் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியினருடனான முக்கிய சந்திப்பு ! kugenAugust 23, 2024 இன்று இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்குமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அத்துடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாநகர சபை முதல்வர், இளைஞர் அணித் தலைவர், மகளிர் அணியினுடைய உப தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் திருகோணமலை அங்கத்துவப் பிரதிநிதிகள் தவிர்க்கமுடியாத கார…

  3. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆரப்பாட்டம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான சகாதேவனின் மரணத்திற்கு விசாரணை வேண்டும் எனக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்கக் கோரியும் யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், மாநகர சபை உறுப்பினர்கள், பொதும்மக்கள் உடப்படப் பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல் …

  4. தமிழ் பொது வேட்பாளருக்கு முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் கூறியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் யாழ்.வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக வருகைதந்தவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அதற்கு பதில் வழங்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீங்க…

  5. பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்தமையினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஐ.நா. மனித உரிமை அமர்வில் இலங்கையின் பக்கம் நியாயத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க போதுமான ஆவணங்கள் இருக்கின்றன என்று கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இலங்கை குழுவின் பிரதிநிதியாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று புதன்கிழமை காலை 9.50 மணியளவில் ஜெனீவா நோக்கிப் பயணமானார். இலங்கையிலிருந்து ஜெனீவாவுக்கு புறப்படும் முன்னர் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…

    • 8 replies
    • 1.2k views
  6. கலாபூஷணம் பரீட் இக்பால் கிளிநொச்சியில் பறிபோகும் நிலையில் 50 வருடம் வாழ்ந்த இடம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக விடுதலை புலிகளினால் ஒட்டுமொத்த வடமாகாண முஸ்லிம்களும் குறுகிய மணித்துளியில் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் உலகம் அறிந்த விடயம். . 34 வருடங்கள் கடந்தும் விரட்டி அடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் சிலரால் அபகரிக்கப்பட்டதால் கிளிநொச்சி பிரதான வீதி கந்தசாமி கோயில் முன்பாக இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமான முறையில் அவர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 34 வருடம் கடந்தும் அவர்கள் புத்தளம் போன்ற பகுதிகளில் அகதிகளாக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் பல தடவை மாவட்டச் செயலகம் …

  7. பொதுமக்களை கடத்தியது துணை ஆயுதக் குழுக்களே! படைகளுக்கோ புலிகளுக்கோ தொடர்பில்லை!- ரஜீவ சமாதான காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இராணுவத்தினருக்கோ, விடுதலைப்புலிகளுக்கோ எதுவித தொடர்பும் இல்லை. மாறாக துணை ஆயுதக்குழுக்களே பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக இத்தகைய கடத்தல்களில் ஈடுபட்டன. இவ்வாறு பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்றுத் தெரிவித்தார். அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மீளிணக்கக் கருத்துக்கான குழுவின் ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க நேற்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்ற மீளிணக்கத்துக்கான கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலி…

  8. 18 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை ஏன்? - ஜனாதிபதியின் செயலர் விளக்கம்.[Thursday 2015-10-08 07:00] பழைமையான இரண்டு வாசஸ்தலங்களை இணைத்து ஜனாதிபதியின் பாவனைக்கு தேவையான விதத்தில் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர். இவ் விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பாகவும் தேசிய பத்திரிகைகளில் வெளியான செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு முன்வைத்த குறைநிரப்பு பிரேரணையில் ஜனாதிபதி அலுவலகம் தொடர்பான செலவுகள் மற்றும் பிரதமரின் அலுவலகம், வ…

  9. இறைமைக்காக மரணிப்பதற்கு மக்கள் தயாராகவுள்ளனர் அகாசியிடம் ஜே.வி.பி.தெரிவிப்பு இலங்கை நாட்டு மக்களை யாரும் பொருளாதாரத்தின் கீழ் அடிபணிய வை க்க முடியாது, எனினும் சர்வதேச சமூகங்களின் தலையீடுகளினால் நாம் அதிருப்தியடைந் துள்ளளோம் நாட்டின் இறைமை மற்றும் கௌரவத்தை காட்டிக்கொடுப்பதற்கு பதிலாக மக்கள் மரணிப்பதற்கும் தயாராக இருக்கின்றனர். அந்த மக்களுக்கு பின்னாலே மக்கள் விடுதலை முன்னணியும் இருக்கின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமர சிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவை விடவும் இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய சோமவங்ச பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே ஜனநாயகம் நிலைநாட்டப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ம…

    • 5 replies
    • 1.5k views
  10. வடக்கு கிழக்கில் இருந்து படையினரின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும் திட்டம் ஏதும் தம்மிடம் இல்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஅராய்ச்சி தெரிவித்துள்ளார். இருந்தும் விரைவில் இராணுவக் கட்டமைப்பு மீளமைப்புச் செய்யப்படும் போது அங்குள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படக் கூடும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். போருக்குப் பின்னர் சில பற்றாலியன்கள் வெறிதாகி முற்றாகச் செயற்படாமல் உள்ளன. இந்த பற்றாலியன்களை வலுப்படுத்தும் வகையில், சிறிலங்கா இராணுவத்தில் அரை மீளமைப்புச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது இயல்பாகவே பல பகுதிகளில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவடையும், வேறு சில பகுதிகளில் அதிகரிக்கும். இந்த மீளமைப்பு வடக்கு,கிழக்கு பகு…

  11. ரணில் – சஜித் கூட்டணி முயற்சி இழுபறி நிலை! எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையை எட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதுவரையில் சுமார் எட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதான நிபந்தனைகள் காரணமா…

  12. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டவரவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கமாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. குறிப்பாக யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை, தீர்மானம் பாதிக்கும் என பாகிஸதான் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.eeladhesa...lle-nachrichten

    • 3 replies
    • 1.2k views
  13. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அநுராதபுரம் (Anuradhapura) வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெறுவதற்காக விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயமானது நேற்றைதினம் (06.10.2024) இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம் விசாரித்துள்ளார். தேசிய கொள்கை அதனையடுத்து உடமலுவ விகாரைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அடஸ்தானாதிபதி தலைமையிலான மகா சங்கத்தினரால் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டுக்கு தேசிய கொள்கையொன்று அவசியம் என்றும…

  14. தனது ஐந்து அமைச்சர்களையும் விலக்க உள்ளதாக அறிவித்துள்ளது தி.மு.க. வார இறுதியளவில் தனது ஐந்து மந்திரிகளையும் தி.மு.க. விலக்குவதாக ஆளும் கூட்டணி காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான அழகிரி, பழனிமாணிக்கம், இராதாகிருஸ்ணன், நெப்போலியன் மற்றும் காந்தி செல்வன் ஆகியோர் கட்சி தலைவரிடம் தமது இராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Sri Lanka war crimes: DMK to withdraw five Union ministers The Dravida Munnettra Kazhagam is all set to withdraw its five Union ministers from the United Progressive Alliance-2 by the weekend to express solidarity with the Sri Lankan Tamil issue. The step is expected to be taken to put UPA-2 on notice i…

  15. விமான நிலையத்தின் வழிநடத்தல் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் ஊடாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அழிவடையும் என அந்த சங்கத்தின் சுதந்திர சேவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கட்டுநாயக்கவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அந்த சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபதிரன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். http://www.hirunews.lk/tamil/221401/ஸ்ரீலங்கன்-விமான-சேவை-நிறுவனம்-ஆபத்தில் Govt. reduces airline costs at BIA Sri Lankan authorities have initiated measures to reduce costs of airline operations and also reduce airfares to the country for a period of six months from August 1. In addition, SriLankan Airlines has been asked to reduce th…

  16. வடக்கு ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க நடவடிக்கை மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால் அந்தப் பகுதி ரயில்களின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ். முதலி மற்றும் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் தலைமையில் ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பாதையை எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கவும், முழுமையடையாத பழுதுகளை மீளமைக…

  17. அமைச்சர் சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினைகள் செய்து வருகிறார் சாமியின் அடுத்த குண்டு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினை செய்து வருவதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பற்றி இஷ்டத்துக்கு எதையாவது எழுதுவதே வேலை எனும் அளவுக்கு செயற்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிதம்பரம் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார் என்று தெரியுமா என்று டுவிட்டரில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் அதற்கு ஒரு ஆதாரமும் தரவில்லை. இப்போது சிதம்பரம் பற்றி டுவிட்டரில் மீண்டும் ஒரு புரளியைக்…

    • 5 replies
    • 1.6k views
  18. வல்வெட்டித்துறையில் ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைப்பு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள் 2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீ…

  19. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றும் வாகனங்களும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (21) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பியூலன்ஸ் ஒன்றும், வேன் ஒன்றும், கெப் வாகனம் ஒன்றுமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு | Virakesari.lk

  20. ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்…

  21. ஜெனிவா தீர்மானம்: அமெரிக்காவின் சதியா? ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது இலங்கைக்கு எதிரானது - நாட்டின் இறைமைக்கு எதிரானது என்கிறது அரசாங்கம். அதேவேளை, இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்காவோ, ஆதரித்த நாடுகளோ அல்லது சரத் பொன்சேகாவோ ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற எதிர்க்கட்சிகளோ இது இலங்கைக்கு எதிரானது அல்ல என்கின்றன. இந்தத் தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில், 24 நாடுகள் தான் ஆதரித்துள்ளன கிட்டத்தட்ட அதற்குச் சமமான (23) நாடுகள் இதனை எதிர்த்துள்ளன என்று நடுநிலை வகித்த நாடுகளையும் தன்பக்கம் சேர்த்…

    • 0 replies
    • 1.2k views
  22. டெலிபோன் அணிக்குள் விருப்பு வாக்கு போட்டி: தமிழ் மக்களுக்கு மனோ விடுத்த அறிவிப்பு! டெலிபோன் அணிக்குள் இன்று நிகழும் விருப்பு வாக்கு போட்டியை தமிழ் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். விசேட தெளிவூட்டல் அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள், தமிழ் வாக்காளர்களின் விருப்பு வாக்குகளை தேடி அலைகிறார்கள். தமது தொகுதி சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அங்கே …

  23. ஈழத்தமிழனத்தின் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்திற்க்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்று பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், தற்போதையை நிழல் அமைச்சருமாகிய Stephen Timmes அவர்கள் தெரிவித்துள்ளார். லண்டன் ஈஸ்காமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01-04-2012), நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள்,சிறுவர் முதியோர், விவகார‌ங்களுக்கானஅமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே Stephen Timmes அவர்கள் இதனை வலியுறுத்தினார். மேலும் அவர் தெரிவிக்கையில், சர்வதேச நெருக்கடிகளுக்கான மூலாய்வமைப்பு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, மற்றும் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட ஐ…

  24. Live Blog - தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம் 02.00 PM - தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றது. 02.02 PM - சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய மன்றுக்கு வருகை 02.03 PM - 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்டத்தை நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமர்ப்பிக்கின்றார். 02.0…

  25. கதிரேசன் வீதி விடுதியிலிருந்து சிங்கப்பூர் பிரஜை கடத்தல் வெள்ளை வானில் வந்தோர் கைவரிசை 2/25/2008 6:56:56 PM வீரகேசரி இணையம் - கதிரேசன் வீதியில் அமைந்துள்ள தற்காலிக விடுதி ஒன்றிலிருந்து சிங்கப்பூர் பிரஜையொருவர் இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் இன்று கடத்தப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 12.00 மணிக்கும் 1.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளை வானில் வந்த சிலரே இவரை கடத்திச்சென்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான என்.கே. இலங்ககோன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் சீருடைக்கு சமனான ஆடையணிந்த மூவர் மற்றும் சிவில் ஆடையுடன் கூடிய மூவர் அடங்கிய குழுவினாலேயே இவர் கடத்தப்பட்டுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.