ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
நாம் தமிழர் அமைப்பில் உள்ள இளைஞர்கள் சீருடை அணியாத ராணுவத்தினர் என தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் தெரிவித்தார். தூத்துக்குடியில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாலவிநாயகர் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் சீமான், என்னை யாரும் தலைவர் என்று அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் திரும்பவும் படம் எடுக்கச் சென்றுவிடுவேன். நம்முடைய நோக்கத்திற்காக நாம் தமிழர் ஆக ஒன்றிணைந்து போராடுவோம். அரசியல் சாக்கடைகளைப் பற்றி நாம் ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
மீள்குடியேற்ற அமைச்சருடன் கேப்பாப்பிலவு மக்கள் கலந்துரையாடல் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர். கேப்பாப்பிலவில் படையினர் வசமிருந்த 189 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக கடந்த 19 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்திருந்தது. எனினும், இந்த காணி வௌிமாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு நடுத்தர தொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் அதில் உள்வாங்கப்படவில்லை எனவும் மக்கள் தமது எதிர்ப்பினை வௌியிட்டிருந்தனர். குறித்த தினம் காணி விடுவிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந…
-
- 4 replies
- 369 views
-
-
காணாமல்போன மகனைத் தேடிய தாய் மரணம் - தொடரும் துயரம் வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார். வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த 78 வயதான கருப்பையா ராமாயி என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பி…
-
- 4 replies
- 428 views
-
-
இந்தியாவிலிருந்து எந்தத் தூதரும் வரத் தேவையில்லை: இலங்கை அமைச்சர் பேச்சு திங்கள்கிழமை, ஜூலை 19, 2010, 18:09[iST] கொழும்பு: இலங்கை அரசு தனது வேலையையும், பொறுப்பையும் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது. எனவே இந்தியாவிலிருந்து எந்த சிறப்புத் தூதரும் இங்கு வர வேண்டிய தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டல்லாஸ் அழகப்பெருமா பேசியுள்ளார். தமிழர் மறு நிவாரணப் பணிகளில் இலங்கை அரசு சரிவர செயல்படாமல் உள்ளது. எனவே அங்கு சிறப்புத் தூதரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அழகப்பெருமா மூலம் இலங்கை பதிலளித்துள்ளது. இதுகுறித்து அழகப்பெருமா கூறுகையில், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் சிறந்த புரிந்துணர்வும், …
-
- 4 replies
- 887 views
-
-
உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு சமகால காலத்தில் கொழும்பு அரசியல் களத்தில் பரபரப்பான நிலையே காணப்படுகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பில் அடுத்த கட்ட நகர்வு குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது. மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை நீக்கி விட்டு மஹிந்தவின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட ஆட்சியை அமைப்பதற்கு சுதந்திரக் கட்சி நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக ஏற்றுக் கொள…
-
- 4 replies
- 758 views
-
-
துரோகி ப(ட்)டத்திற்கு சீமான், சிம்பு தெரிவு! ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர தாகம் அகில உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இலங்கையில் யுத்தகாலங்களில் ஏற்பட்டிருந்த மாறுபட்ட அபிப்பிராயங்களும், கருத்துக்களும் தற்பொழுது மாறுதலடைந்து வருகிறது. இதனிடையே சில சக்திகள் ஊடுருவி மக்களின் தாகத்தை வேறு திசைக்கு திருப்ப முயற்சிப்பதும் தெளிவாகிறது. ஒரு நாட்டுப்பழமொழி நினைவுக்கு வருகிறது. 'கூத்தாடிக் கூத்தாடி கூட்டத்தைக் கலைக்கும் அண்ணாவிபோல' உள்ளுக்குள் நின்று நஞ்சை விதைப்பவர்கள் அதிகரித்துக்கொண்டு வருபவதை காணக்கூடியதாக இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் தேசவிடுதலையை தளமாகக் கொண்டு உடல் வருத்தப்படாமல் 'பிறர் உழைப்பில்' சுகம் கண்டகார்கள் ஏராளம். இப்பொழுது இலங்கையில் யுத்தமென்ற ச…
-
- 4 replies
- 2.3k views
-
-
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொள்ள தென் கொரிய இடர் உதவிகள் நிதியத்தின் தலைவர் நேற்று சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு சென்றுள்ளார். ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் 30 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக தென் கொரிய இடர் உதவி நிதியத்தின் தலைவர் சூ சோ லீ, ராஜாங்க அமைச்சர் உட்பட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது. தாமதம் என்பது வெட்பட வேண்டிய விடயம் இந்த கூட்டம் 30 நிமிடங்கள் தாமதமானமை குறித்து வெட்கப்பட வேண்டும் எனவும் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இதனை விட மிக பொறுப்புடன் வேலை செய்ய வேண்டும் எனவும் சூ…
-
- 4 replies
- 1.1k views
-
-
கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகங்களும் அரசியல் இராணுவ யதார்த்த நிலைகளும்(சிறப்பு அரசியல் பார்வை) எழுதியவர் நமது செய்தியாளர் Thursday, 18 January 2007 இணைந்திருந்த வடகிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரித்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்திய கையோடு கிழக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை தனியாகவும் திருகோணமலை மாவட்டத்தை தனியாகவும் பிரித்த போது கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பலைகள் எழாதவாறு மரண அச்சுறுத்தல்களுக்குள் தள்ளி மௌனிகளாக்கி விட்டு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக ஸ்ர…
-
- 4 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் அறிவித்திருந்தார். இதையடுத்து. மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து, மரணதண்டனைக்கு எதிரான ச…
-
- 4 replies
- 633 views
-
-
அல்லைப்பிட்டி பகுதியில் கோரவிபத்து – இரு பெண்கள் சம்பவ இடத்தில உயிரிழப்பு !! யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்களின் பின்னால் வந்த வாகனம் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. https://athavannews.com/2023/1331213
-
- 4 replies
- 560 views
-
-
அரசிற்கும் கருணா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளன: புலனாய்வுத்துறை அதிகாரியின் மனைவி சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு சென்று கருணாவை சந்தித்து வருமாறு தனது கணவரை அரசாங்கம் அனுப்பியதாக சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகேயின் மனைவி ராசிக பிரியதர்சினி நேற்று தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி சிறிலங்கா கடற்படையின் புலனாய்வுத்துறையின் அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகே கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அ…
-
- 4 replies
- 1.9k views
-
-
கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்துக்கு விருப்பமில்லை: பிரித்தானிய தூதுவர் குற்றச்சாட்டு. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா இராணுவத்துக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொனினிக் சில்காட் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையேயான மோதலினால் வடக்கு கிழக்கு நிலைமையில் எதுவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. கிழக்கில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டனர். அங்கு விடுதலைப் புலிகள் இல்லை. கருணா குழுவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை போதுமானது அல்ல. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்தினரின் விருப்பமாக இல்ல…
-
- 4 replies
- 2.1k views
-
-
மனித உரிமைகள் விவகாரம்: மேற்குலகின் மீது மகிந்த கடும் பாய்ச்சல் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் மேற்குலக நாடுகள் கடுமையாக நடந்து கொள்வதாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலிலின் போது அல்ஜசீரா தொலைக்காட்சி கேட்ட கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்ச சிங்களத்தில் பதிலளித்தார். அதனை ஊடக இயக்குநர் லூசியன் ராஜ கருணாநாயக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்குலக…
-
- 4 replies
- 1.4k views
-
-
17 NOV, 2023 | 10:59 AM யாழ்ப்பாண நகரில் நின்ற நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை (16) முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே முறிந்து விழுந்துள்ளது. பாடசாலை முன்னால் இருந்த நிலையில் மரம் வீதிக்கு குறுக்காக விழாது வெற்றுக் காணிக்குள் விழுந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதியோரமாக உள்ள மரங்கள் முறிந்து விழுகின்ற நிலையில் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்துவது பாரிய அசம்பாவிதங்களை தவிர்க்கும். …
-
- 4 replies
- 503 views
- 1 follower
-
-
சீனாவின் உதவியில் கட்டப்பட்ட நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் போதியளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாததால், சிறிலங்கா அரசுக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா மின்சாரசபை அதிகாரிகள் கூறியுள்ளனர். 300 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின்நிலையம் முழுமையாக இயங்கினால் நாளொன்றுக்கு ஆறு மில்லியன் அலகுகளுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் 2011ம் ஆண்டின் பெரும்பாலான காலத்தில் இந்த மின்நிலையம் பாதியளவிலேயே இயங்கியுள்ளது. இதனால் சிறிலங்கா அரசுக்கு மில்லியன் கணக்கிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளினால், இந்த மின்நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
அகதிகளை வரவேற்பதில் யாழ் மக்கள் உறுதி-சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் மன்றத்தின் அறிக்கை அகதிகளையும் தஞ்சம் தேடுவோரையும் வரவேற்பதில் யாழ்ப்பாண மக்கள் உறுதியாக உள்ளனர் என சகவாழ்வுக்கான யாழ் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தஞ்சம் தேடி வந்த ஒரு அகதிக் குடும்பம், அவர்களின் பாதுகாப்புக்கு இங்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற பொலிசாரின் எச்சரிக்கை காரணமாக, மீண்டும் வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதை இட்டு யாழ்ப்பாணத்தில் வாழும் பல்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் என்ற வகையில் எங்கள் கவலையையும் வெட்கத்தையும் வெளிப்படுத்துகிறோம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
லண்டனிலிருந்து கொழும்பு திரும்ப சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா ஏயர்லைன்சில் இடம் மறுக்கப்பட்டமை தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் பீற்றர் ஹில்லை நீக்க மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.4k views
-
-
இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த விமானதாங்கி யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு செல்லவுள்ளது: 19 ஜனவரி 2016 இந்தியாவின் மிகவும்சக்திவாய்ந்த விமானதாங்கி யுத்தக்கப்பல் இந்த வாரம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. 44.500 தொன் ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதை உறுதிசெய்துள்ள அதிகாரிகள் இதன் மூலம் இந்திய இலங்கை உறவுகளில் ஓரு புது அத்தியாயம்ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கை துறைமுகத்திற்கு கடந்தஇரண்டுதசாப்த காலபகுதியில் விமானந்தாங்கி கப்பல் எதுவும்வருகைதராததை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அதிகாரிகள்,இந்திய கப்பலிற்கு இலங்கை கடற்படையினர் விசேட வரவேற்பை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.அமெரிக்காவின் விமானத…
-
- 4 replies
- 707 views
-
-
விடுதலைப்புலிகளின் விமான ரகசியங்கள்! - அதிர்ச்சியில் இலங்கை ராணுவம் ஏப்ரல் 25, 2008. நள்ளிரவு நேரம். மணி 1.25 ஆகியிருந்தது. இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் இருந்து இரண்டு சிறிய ரக போர் விமானங்கள் புறப்பட்டு, வானத்தில் மிதக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இரணமேடு என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வானத்தை நோக்கிக் கிளம்பியது. சரியாக 1.32 ஆனபோது மணலாறு பகுதியை ஒரு விமானம் நெருங்கியிருந்தது. சில நொடிகள் இடைவெளியில் இரண்டு குண்டுகள் விமானத்தில் இருந்து தரையை நோக்கி வீசப்பட்டன. குண்டுகள் தாக்கிய இடம், இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான மணலாறு முன்னரங்கு நிலையம் (யீஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ பீமீயீமீஸீநீமீ றீவீஸீமீ). அதற்குள் இன்னொரு வ…
-
- 4 replies
- 3.2k views
-
-
[size=2][size=4]கிளிநொச்சிவரை சக்திவாய்ந்த மின்பரிவர்த்தனை நிலையம்;[/size][/size] [size=2][size=4]25ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு[/size][/size] [size=2][size=4]வடமாகாண மின்விநியோக நஷ்டத்தை தவிர்க்க நடவடிக்கை[/size][/size] [size=2][size=4]மின்சாரத்தை சீர்குலைத்தோருக்கும் பாகுபாடின்றி மின்சாரம்[/size][/size] [size=3][size=4]அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் வடக்கிற்கு தேசிய மின் கட்டமைப்பினூடாக முழுமையான மின்சார வசதி அளிக்கப்படும். இதனூடாக யாழ். குடா அடங்கலாக வடக்கு பிரதேசத்தில் காணப்படும் மின்சார சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு ஏற்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]வவுனியாவில் இருந்து கி…
-
- 4 replies
- 765 views
-
-
[size=3]முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரியிடம் முறையிட்டுள்ளார்.[/size] [size=3]கொழும்பில் உள்ள உயர் அதிகாரிகள் சிலரின் உத்தரவுக்கு ஏற்ப மட்டக்களப்பு செயலக அதிகாரிகள் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விருப்பு வாக்குகளை 22ஆயிரமாக அதிகரித்ததாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.[/size] [size=3]விருப்பு வாக்குகள் அதிகரிக்கப்பட்ட விடயத்தை ஊடகவியளலாளர்களிடம் கூற வேண்டாம் என தனக்கு நெருக்கமான அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியதாக இராஜதந்திரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழ…
-
- 4 replies
- 508 views
-
-
கொழும்பில் இருக்கும் வெளிமாவட்டத்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பம்! by : Litharsan கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக் காரர்கள் பேருந்து, ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறையை இவ்வாரம் முதல் ஆரம்பிக்க கொழும்பு மாவட்ட ஒருகிணைப்பு குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கொழும்பில் வாழும் வெளிமாவட்ட மக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் …
-
- 4 replies
- 398 views
-
-
தமிழக தீர்மானம்- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது: சுப.வீரபாண்டியன் [செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 10:50 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமானது- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய தீர்மானம் என்று அக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தாயக உறவுகளுக்காக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக முதலமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை கூட்டிய அனைத்து கட்சிக்கூட்டத்தில் ஒரு அதிச்சித் தரத்தக்க- தமிழ் மக்களின் உ…
-
- 4 replies
- 1.2k views
-
-
போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்?: குமுதம் கேள்வி [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 01:14 பி.ப ஈழம்] [க.நித்தியா] போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்? என்று குமுதம் வார இதழ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் கேள்வி - பதில் பகுதியில் ஒரு வாசகர் எழுப்பியுள்ள கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்: "இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொ…
-
- 4 replies
- 1.8k views
-
-
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அதிநவீன ஆயுதங்களை இந்தியா வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனை இந்திய மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி மறுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.1k views
-