நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சுவையான வெஜ் பிரியாணி தேவையானபொருட்கள் பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 2 தக்காளி – 2 பச்சை மிளகாய் – ஒன்று கேரட், பீன்ஸ், உருளை – கால் கிலோ மீல் மேக்கர் – சிறிது தனி மிளகாய்த் தூள் – 1 1/2 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி இஞ்சி பூண்டு பேஸ்ட் (இஞ்சி அதிகமாக) – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி நெய் – ஒரு தேக்கரண்டி பட்டை – சிறு துண்டு கிராம்பு – 2 ஏலக்காய் – ஒன்று பிரிஞ்சி இலை – ஒன்று பொடிக்கு: மிளகு – 10 சீரகம் – அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி செய்முறை அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவு…
-
- 6 replies
- 4k views
-
-
வித்தியாசமான மீன் பொரியல் நேற்று மனிசிக்கு சுகமில்லை, வேலைக்கும் ஆள் போகவில்லை. நான் அலுவலகத்தால வந்து பார்த்தா பூனை மாதிரி சுருண்டு படுத்திருந்தாள். எனக்கு வேற நல்ல பசி. இண்டைக்கு கிச்சன் டிபாட்மன்ட் என்ட கையில தான் எண்ட வெறியுடன் பிரிஜை கிண்டினேன். இலகுவாக அம்பிட்டது கீழே உள்ள விஷயம். Dori மீன் fillets உடனேயே மீன் பொரியல் செய்வது என முடிவு செய்தேன். தேவையான பொருட்கள் டோரி மீன் fillets - 1kg முட்டை - 3 தேசிக்காய் - 2 உப்பு, மிளகு, தூள், மஞ்சள் தூள், bread crumbs (இதுக்கு என்ன தான் தமிழ்) , கோதுமை மா, பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை சுடு நீரில் மீனை நன்கு கழுவவும். (மீன் fillets என்பதால் முள்ளு, தோல் ஒன்றுமே இருக்காது இலக…
-
- 27 replies
- 4k views
-
-
அரிசிமாத் தோசை – யாழ்ப்பாணம் முறை: தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி – 2 சுண்டு பச்சரிசி – 2 சுண்டு முழு உளுத்தம் பருப்பு – 1 சுண்டு (தோல் நீக்கியது) வெந்தயம் – 2 – 3 மேசைக் கறண்டி மிளகு, சீரகம் - 1 தேக் கறண்டி (தூள்) மஞ்சள் தூள் - கொஞ்சம் உப்பு – தேவையான அளவு தாளிதப் பொருட்கள்: (கடுகு, பெருஞ்சீரகம், கருவேப்பிலை, நறுக்கிய வெண்காயம், 2-3 செத்தல் மிளகாய் சிறிதாக நறுக்கியவை) எண்ணை – தேவையான அளவு (அரிசிகளின் அளவை தேவைக் கேற்ப கூட்டியும் குறைத்தும் செய்யும் போது மற்றைய பொருட்களின் அளவையும் கூட்டியும் குறைதும் தயாரிக்கவும்-இவை பொதுவான அளவுகள்) செய்முறை: தோசை வகைகளில் மாக்கலவை எல்லாவற்றிக்கும் பொதுவானவை. ஆனால்…
-
- 17 replies
- 4k views
-
-
வணக்கம், ரெண்டு நாளைக்கு முன்னம் ஒரு சின்னப்பிரச்சனை. என்ன எண்டால் வீட்டில இரவு சாப்பிடும்போது சோற்றுக்கு நல்ல கறி ஒண்டும் இருக்க இல்லை. வயிற்றில சரியான பசி. என்ன செய்வது எண்டு யோசிச்சுபோட்டு கடைசியாக ஒரு போத்தலுக்க இருந்த கடையில வாங்கி வச்சு இருந்த மிக்ஸரை (அந்த முறுக்கு, கச்சான், பருப்பு, கஜு, மிளகாய்த்தூள், உப்பு இந்தக்கலவை) சோற்றுக்க போட்டு கலந்து சாப்பிட்டன். பசியுக்கு நிறைவாக இருந்திச்சிது. இதுமாதிரி சிலவேளைகளில தயிர், ஊறுகாய், வேண்டுமானால் ketchup இதுகளையும் ஊத்தி வேற கறி ஒண்டும் போடாமல் சோற்றோட, புட்டு, பாணோட கலந்து சாப்பிடுறது. இப்பிடி வித்தியாசமான சாப்பாட்டு கலவைகளை நீங்களும் சாப்பிட்டு இருக்கக்கூடும். சின்னனில புட்டும், சம்பலும், சீனியும் கலந்து சாப்பிடுறத…
-
- 12 replies
- 4k views
-
-
வெண்டைக்காய் காரகுழம்பு தேவையானப் பொருட்கள்: வெண்டைக்காய் -250 கிராம் பூண்டு -5 பற்கள் கார குழம்பு சாம்பார் பொடி -- 2 ஸ்பூன் புளி -- 1 உருண்டை வெங்காயம் -- 10 தக்காளி -- 1 நல்லெண்ணைய் -- 3 ஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன் வெந்தயம் -- 1/2 டீஸ்பூன் பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை -- அரைத்த தேங்காய் -- 3 ஸ்பூன் சீரகம்,மிளகு -- 1 1/2 டீஸ்பூன் செய்முறை: * தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும் தேங்காய்,சீரகம்,மிளகை நைசாக அரைக்கவும் * வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயம்,பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை ,போட்டுதாளிக்கவும் * வெங்காயம் போட்டு வத…
-
- 3 replies
- 4k views
-
-
மூக்கறுந்த சூர்ப்பனகைகளையும், ரொக்கற்லோஞ்சர்க் குண்டையும் சேர்த்து வைத்த கமகமக்கும் கறி. ரொக்கற் லோஞ்சர் குண்டு (வாழைப்பூ) 1 மூக்கு நறுக்கிய சூர்ப்பனகை (சுத்தம் செய்த இறால்) 10 சின்ன அழுகுணி (வெங்காயம்) 5 பசுமை உறைப்பு (பச்சை மிளகாய்) 2 மாநல அகம் (பெருஞ்சீரகம்) அரைத் தேக்கரண்டி தே.பா.ப (தேங்காய்பால் பவுடர்) 2 தேக்கரண்டி வாசவேம்பு இலை (கருவேப்பிலை) சிறிதளவு சூரியக்கிழங்கு (மஞ்சள்) சிறிதளவு கடல்த்தண்ணீ (உப்பு) தேவையான அளவு பச்சைப் புளி (எலுமிச்சை) …
-
- 15 replies
- 4k views
-
-
நான் சில மணமில்லாத பெரிய மீன்களையும்(அறக்குளா,கும்பிளா,பாரை,விளை போன்றன),நெத்தலி போன்ற சின்னமீன்கலையும்(நெத்தலி மீன்குழம்பென்றால் அன்று ஒரு வெட்டு வெட்டுவேன்..ரொம்ப பிடிக்கும்) ரின் மீனையும்(ரின் மீன் என்றால் அலாதிப்பிரியம்) தவிர பெரிதாக மீன் சாப்பிடுவதில்லை..ஆனால் மீன் பிரியர்களுக்காக இது... __________________________________________________________________________________ மீன் - என்றதும் அம்மச்சியின் நினைவு கிளர்ந்தெழுகிறது. மீன் சுவையை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது பாட்டி தான். மண் சட்டியில் வேக வைத்த மீன் குழம்பை சட்டியோடு ஒரு கை பார்ப்பது அலாதியான இன்பம். எந்த மீனை எந்த அளவுக்கு வேக வைக்க வேண்டும் என்பது ஒரு கலை ! அந்தக் கலை எப்படியோ பெண்களுக்கு வாய்த…
-
- 11 replies
- 4k views
-
-
குளிர்சாதனப் பெட்டியில் வைத்த அசைவ உணவா? - சாப்பிடாதீங்க! உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார…
-
- 9 replies
- 3.9k views
-
-
30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி! மலேசியர் மட்டுமின்றி இந்தியர், சீனர் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய முக்கியமான உணவுகளின் தொகுப்பு இது. இந்தியாவில் கிடைக்காத பொருட்கள் மற்றும் முட்டைக்கு மாற்றாகச் சேர்க்கப்பட வேண்டியவை பற்றியும் குறிப்புகள் உள்ளன. அசைவம் இல்லாமலே, மலேசிய - சிங்கப்பூர் உணவுகளை வெஜிடேரியன்களும் ருசிக்கும் வகையில் ரெசிப்பிகளை அளித்திருக்கிறார் சிங்கப்பூர் சமையல் கலைஞர் அப்ஸரா ஃபரீஜ். புத்தாண்டில் புதுச் சுவை அறிவோம்! பேக்ட் குயே தேவையானவை: பாண்டன் இலை - 5, மைதா மாவு - ஒரு கப், முட்டை - ஒன்று (விரும்பாதவர்கள் கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம்), சர்க்கரை - 1/2 கப், கெட்டியான தேங்காய்ப்பால் - 150 மில்லி, எண்ணெ…
-
- 2 replies
- 3.9k views
-
-
இப்போ என்னோட சமையல் வரலாறை [வல்லாரைன்னு எழுதிட்டேன்] எடுத்து கொண்டால் இன மொழி சாதி மத வேறுபாடு அற்று செய்முறைகள் அமைந்திருக்கும். அதில் குறிப்பாக கடலுணவை எடுத்து கொண்டால், எந்த நாட்டு செய்முறை என்றாலும் சமைப்பதுண்டு. பார்க்க நன்றாக இருந்து, சுவையும் நல்லாயிருக்கும் என காதுவழி கதைகள் வந்தால் சமைப்பதுண்டு. ஆனால் மீனை/நண்டை/இறாலை வெட்டுவதோ, சுத்தம் பண்ணுவதோ என் வேலையில்லை. அதுக்கு ஒரு காரணம் இருக்கு......ஒரு சின்ன ப்ளாஸ்பக் டொய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்
-
- 8 replies
- 3.9k views
-
-
வெஜிடபிள் குருமா பட்டாணி 200 கிராம் பீன்ஸ் 200 கிராம் காலிஃப்ளவர் 100 கிராம் உருளைக் கிழங்கு 200 கிராம் காரட் 200 கிராம் பூண்டு 5 பல் இஞ்சி ஒரு சிறு துண்டு பெரிய வெங்காயம் 2 பச்சைமிளகாய் 6 கசகசா அரைத் தேக்கரண்டி முந்திரிப்பருப்பு 6 பொட்டுக்கடலை ஒரு மேசைக்கரண்டி தேங்காய் அரை மூடி பட்டை ஒரு அங்குல துண்டு கிராம்பு 4 எண்ணெய் 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம் 1 உப்பு தேவையான அளவு 1)பட்டாணியை 5 அல்லது 6 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். 2)பீன்ஸ்இ உருளைக்கிழங்குஇ காரட்இ காலிஃப்ளவர் ஆகியவற்றை அலசிஇ பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3)பூண்டுஇ இஞ்சிஇ பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாய் அம்மியில் அல்லது மிக்…
-
- 16 replies
- 3.9k views
-
-
நண்டு குழம்பு, நண்டு குருமா என்று வைத்திருப்பீர்கள். இது நண்டு ரசம், புதிதாக இருக்கும். செய்து பார்த்து ருசியுங்கள். நீங்கள் காசு கொடுத்து வாங்கும் நண்டின் கால்களும் வீணாகப்போகாது. எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை நண்டு கால்கள் – 10புளி – எலுமிச்சை அளவுஒரு முழு பூண்டுரசப் பொடி – 3 தேக்கரண்டிமஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் – 4கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவுகடுகு, எண்ணெய் – தாளிக்க செய்யும் முறை நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்து அம்மிக் குழவி அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ரசத்த…
-
- 1 reply
- 3.9k views
-
-
-
- 3 replies
- 3.9k views
-
-
[size=4]ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்றாலே வீட்டில் வடை, பாயாசத்துடன் ஒரு விருந்து போல் வீட்டில் சமைத்து உண்போம். அப்படி வீட்டில் சாம்பார், பொரியல் என்று செய்யும் போது, அந்த பொரியலில் பூசணிக்காய் பொரியலையும் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அந்த பூசணிக்காய் பொரியல் செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]மஞ்சள் பூசணிக்காய் - 1/2 கிலோ வெங்காயம் - 1 நாட்டு தக்காளி - 2 பச்சைமிளகாய் - 4 கடுகு - 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் - 1/4 மூடி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலில் பூசணிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பி…
-
- 9 replies
- 3.9k views
-
-
வாழைத்தண்டு கூட்டு வாழைத்தண்டு கூட்டு இது மிகவும் சுவையாகவும் சத்துதானதாகவும் இருக்கும். உடல் நலத்தில் அக்கறையுடன் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்தில் ஒரு முறை உண்டால் உடம்புக்கு மிகவும் நல்லது! குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என்று என் பாட்டி கூறினார்கள். வாழைத்தண்டு உடம்பில் சேரும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் உண்டாகும் கல்லினைக் கரைக்கக்கூடிய வலிமை வாய்ந்தது சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த கூட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். தேவையான பொருள்கள்: வாழைத் தண்டு – 1 பாசிப்பருப்பு – 200 பச்சை மிளகாய் – 5 வர மிளகாய் - 2 தக்காளி – 1 (நறுக்கியது) சின்ன வெங்காயம் - 100 (நறுக்கியது) பூண்டு…
-
- 2 replies
- 3.9k views
-
-
தேவையான பொருட்கள் கோதுமை – 1 கப் மெல்லிய ரவை – 1/2 கப் எண்ணெய் – 1/4 தேக்கரண்டி உப்பு – 1/2 தேக்கரண்டி மசாலா செய்வதற்கு உருளைக்கிழங்கு – 1/4 கிலோ வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 3 மேசைக்கரண்டி மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – 2 தேக்கரண்டி இஞ்சி, பச்சைமிளகாய் விழுது – 2 தேக்கரண்டி உலர்ந்த மாங்காய்த்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி கறிமசாலாத்தூள் – 3/4 தேக்கரண்டி எண்ணெய் – பொரிப்பதற்கு உப்பு – தேவையான அளவு மைதா பசை செய்வதற்கு தண்ணீர் – 2 பங்கு மைதா – 3 பங்கு செய்முறை கோதுமை, ரவை, எண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு தண்ணீர் ச…
-
- 23 replies
- 3.9k views
-
-
தேவையான பொருள்கள் உருளைக்கிழங்கு - 250 கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 3 பச்சைமிளகாய் - 8 கசகசா - 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி தேங்காய்ச் சொட்டு - 2 துண்டு கறுவா பட்டை - 1 துண்டு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம் - 1/2 மூடி மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை கசகசா, பெருஞ்சீரகம், தேங்காய்ச் சொட்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்ககை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கறுவா பட்டை, வெட்டிய வெங்காயம், மிளகாய் என்பனவற்றைப் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் பொடி மற்றும் அரைத்த மசாலாவைப…
-
- 12 replies
- 3.9k views
-
-
தேவையான பொருட்கள் ரவை - 2 கப் தயிர் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 1 இஞ்சி - 1 துண்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க உப்பு - சிறிது பெருங்காயம் - 1 சிட்டிகை எண்ணை - சிறிது செய்யும் முறை ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையைக் கொட்டி அதில் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணைய் ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும். இதனை ரவையில் கொட்டவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கரைத்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். ஊ…
-
- 24 replies
- 3.9k views
-
-
தாய்லன்ட் கார்லிக் சிக்கன் (தாய்லாந்து முறையில் உள்ளியுடனான கோழி) தேவையானப் பொருட்கள் சிக்கன் லெக்ஸ்- பத்து வெங்காயம்-இரண்டு பூண்டு-ஆறு பற்கள் காய்ந்தமிளகாய்-நான்கு லெமன் கிராஸ்- ஒன்று எண்ணெய்-கால்க்கோபை கொத்தமல்லி-ஒரு பிடி சின்னமன் பவுடர்-கால் தேக்கரண்டி சிக்கன் ஸ்டாக்-ஒன்றரை கோப்பை உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி மிளகுத்தூள்-ஒரு தேக்கரண்டி புளி பேஸ்ட்-இரண்டு தேக்கரண்டி மீன் சாஸ்-இரண்டு மேசைக்கரண்டி வறுத்த வேர்க்கடலை-கால்க்கோப்பை பீனட் பட்டர்-ஒரு மேசைக்கரண்டி செய்முறை சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும். காய்ந்தமிளகாயை சுடுதண்ணீரில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும். லெமன் கிராஸ்ஸை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்…
-
- 15 replies
- 3.9k views
-
-
நெத்திலி மீன் குருமா தேவையானவை : நெத்திலி : அரை கிலோ எண்ணெய் : 4 மே.கரண்டி கடுகு : அரை தே.கரண்டி வெந்தயம் : அரை தே.கரண்டி கறிவேப்பிலை : 2 கொத்து ப.மிளகாய் கீறியது : 2 பெ.வெங்காயம் : 2 சி.வெங்காயம் : 2 தக்காளி : 3 மஞ்சள் பொடி : அரை தே.கரண்டி மி.தூள் : 1 தே.கரண்டி தேங்காய் துருவல் : 1 கப் சோம்பு : 1 தே.கரண்டி அரைக்க : தேங்காய், மஞ்சள் தூள், சி.வெங்காயம் மற்றும் சோம்பு இவற்றை நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை இவற்றைச் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பெரிய வெங்காயத்ததை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி மிளகாய் த…
-
- 16 replies
- 3.9k views
-
-
பிரியாணி வகைகளில் நிறைய உள்ளன. அவற்றில் ஒருசில பிரியாணிகளுக்கு என்று பிரியர்கள் இருப்பார்கள். இப்போது அந்த பிரியாணி வகைகளில் ஒன்றான ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1கிலோ பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) கொத்தமல்லி - 1 கப் (நறுக்கியது) புதினா - 1 கப் குங்குமப்பூ - 1 டீஸ்பூன் பால் - 1/2 கப் நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் சிக்கன் ஊற வைப்பதற்கு... பச்சை மிளகாய் - 4 (அரைத்தது) இஞ்சி பூண்டூ பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் தயிர் . 1/2 கப் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு..…
-
- 4 replies
- 3.9k views
-
-
தேவையான பொருட்கள்: மட்டனுக்கு... மட்டன் - 1 கிலோ வெங்காய பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் தயிர் - 1/2 கப் புதினா - 1 கட்டு (நறுக்கியது) தேங்காய் பால் - 1/2 கப் மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 2 கப் சாதத்திற்கு... பாசுமதி அரிசி - 2 கப் ஏலக்காய் - 4 கிராம்பு - 4 பட்டை - 2 உப்பு - தேவையான அளவு நெய் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 4 கப் செய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த ம…
-
- 8 replies
- 3.9k views
-
-
சிறுதானிய லஞ்ச் ஸ்பெஷல் * பனிவரகு மஷ்ரூம் புலாவ் * வரகு வெஜ் பனீர் ஊத்தப்பம் * தினை பனீர் காட்டி ரோல்ஸ் * சென்னா-முட்டைகோஸ் புலாவ் * முள்ளங்கி-பட்டாணி பாத் * ராகி சேவை-வெஜ் சாலட் * குதிரைவாலி மசாலா இட்லி * கேப்சிகம் பாத் * மேத்தி-தேங்காய்ப்பால் புலாவ் * சிவப்பு அவல் வெஜ் உப்புமா சிறுதானியத்தில் செய்யக்கூடிய லஞ்ச் ரெசிப்பிக்களை நமக்காக செய்து காண்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி. பனிவரகு மஷ்ரூம் புலாவ் தேவையானவை: பனிவரகு - 200 கிராம் பட்டன் மஷ்ரூம் - 200 கிராம் பட்டை - சிறிய துண்டு கிராம்பு - ஒன்று ஏலக்காய் - ஒன்று பிரிஞ்சி இலை - ஒன்று சோம்பு - கால் டீஸ்பூன் இஞ்சி-பூண…
-
- 5 replies
- 3.9k views
-
-
-
- 1 reply
- 3.8k views
-
-
சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி - 400 கிராம். பாசிப்பருப்பு - 50 கிராம் பால் - 250 மி.லி தேங்காய் - பாதி வெல்லம் - 1 கிலோ முந்திரிப்பருப்பு -15 கிராம் கிஸ்மிஸ் பழம் - 15 கிராம் ஏலக்காய் - 5 கிராம் நெய் - 50 மி.லி செய்முறை: 1. பாசிப்பருப்பை இலேசாக வறுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பாலைக் கலந்து அடுப்பில் வைக்கவும். 3. வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைத் தட்டிப்போட்டு சிறிது தண்ணீர் கலந்து இளம் பாகாய்க் காய்ச்சி கல் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். 4. நெய்யைக் காய வைத்து முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடிதாக நறுக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும். 5.…
-
- 14 replies
- 3.8k views
-