நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கேரட் ரொட்டி தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் கேரட் துருவல் - 2 கப் கொத்துமல்லி இலை - 1 கப் ( நறுக்கியது ) மிளகாய்ப் பொடி - ஙூ தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - தேவையான அளவு தயிர் - 2 மேசைக்கரண்டி செய்முறை 1. கோதுமை மாவில் உப்பு, மிளகாய்ப்பொடி, கேரட் துருவல், மல்லிக்கீரை அனைத்தையும் சேர்க்கவும். 2. தண்ணீரையும், தயிரையும், சமையல் எண்ணெயும் சேர்த்து நன்கு பிசையவும். 3. மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். 4. உருட்டிய மாவை தேவைப்படும் அளவில் ரொட்டிகளாகத் தயாரித்து அதை நான்ஸ்டிக் டவாவில் போட்டு எடுக்கவும். 5. நன்றாக வெந்து பிரவுன் நிறமாகி விடும். 6. திர…
-
- 6 replies
- 2.8k views
-
-
இது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெரிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள். பெரியவேலை ஒன்றுமில்லை. ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும். தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள். கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம். சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும் மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை…
-
- 28 replies
- 2.8k views
- 1 follower
-
-
மீன் தலை கறி என்னென்ன தேவை? மீன் தலை - 4 நல்லெண்ணை - 5 டீஸ்பூன் கடுகு - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பில்லை - தேவையான அளவு சாம்பார் வெங்காயம் - 10 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தக்காளி - 1 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் - 1/2 கப், புளி - தேவையான அளவு எப்படிச் செய்வது? முதலில் சாம்பார் வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெந்தயம் சேர்க்க பின் அதில் கறிவேப்பிலை, சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்கு வ…
-
- 8 replies
- 2.8k views
-
-
-
- 5 replies
- 2.8k views
-
-
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10606491_831119306907126_7245413857358199100_n.jpg?oh=fa1b8fb23fb38271af95bdad8fb3e95b&oe=545DCE6A&__gda__=1416835420_d4df096cd7263ab06b9100288379c68a தேவையான சாமான்கள். --- வறுத்த உளுத்தம் மா _______________ அரை சுண்டு. --- சிவப்பு அரிசி மா ___________________ 1 சுண்டு. --- வறுத்த பயறு ______________________ காற் சுண்டு. --- தேங்காய்ப் பால் ____________________ அரை லிட்டர். --- சீனி _______________________________ 250 கிராம். --- உப்பு ______________________________ தேவையான அளவு. சுமாராக 6 , 8 . பேருக்கு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் உளுத்தம் மா , அரிசி ம…
-
- 12 replies
- 2.7k views
-
-
புதினாத் துவையல் தேவையானவை புதினா இலை - 2 கப் தேங்காய் - 1 துண்டு பச்சை மிளகாய் - 3 உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி புளி - பட்டாணி அளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - சிறிது கடுகு - தாளிக்க செய்யும் முறை புதினா இலையை ஆய்ந்தெடுத்து, ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை வில்லைகளாகப் போட்டு வதக்கி எடுத்து வைக்கவும். மிக்ஸி ஜாரில் தேங்காய் வில்லை, பருப்பு, புதினா இலை, பச்சை மிளகாய், சிறிது புளி, உப்பு போட்டு கொரகொரவென…
-
- 5 replies
- 2.7k views
-
-
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
வரகு போண்டா வாய்க்கு ருசியைத் தரும் வரகில், வற்றாத சத்துகள் உள்ளன. வரகின் தோலில் ஏழு அடுக்குகள் உள்ளன. கிராமங்களில் உரலில் போட்டு, வெகு நேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது. பலன்கள் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சீக்கிரத்தில் செரிக்கக்கூடியது. அரிசிக்குப் பதிலாக வரகில் இட்லி, தோசை செய்யலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். வரகு போண்டா 300 கிராம் வரகு அரிசி மாவு, 200 கிராம் கடலை மாவு, 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூ…
-
- 11 replies
- 2.7k views
-
-
தென்னிந்திய மீன் கறி என்னென்ன தேவை? மீன் - 500 கிராம், கத்தரிக்காய் - 100 கிராம், முருங்கைக்காய் - 1, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/2 கப், சோம்பு - 1 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2, தக்காளி - 2, கொத்தமல்லித்தழை - சிறிது. தாளிக்க... நறுக்கிய சின்ன வெங்காயம் - 10, பூண்டு பல் - 5, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், சோம்பு - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நறுக்கிய தக்காளி - 1…
-
- 15 replies
- 2.7k views
-
-
தமிழனுக்கு என்றொரு தனி குணமுண்டு அது // மற்றவன் வயிறு புகையிறதை பார்த்து சந்தோசப்படுவது நான் சுத்த தமிழனடா
-
- 25 replies
- 2.7k views
-
-
சிக்கன் கடாய் செய்வது எப்படி? தேவையான பொருள்கள்: சிக்கன் – கால் கிலோ பச்சை மிளகாய் – 7 தக்காளி – 2 எண்ணெய் – தேவையான அளவு இஞ்சி – 2 துண்டு பூண்டு – 10 பல் கொத்தமல்லி தழை – சிறிதளவு வெங்காயம் – 2 சாம்பார் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் செய்முறை-1: சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை இவை இரண்டையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வானலியில் எண்ணெய் ஊற்றி பூண்டை அதில் போட்டு பொன்னிறமாக வதக்கவும். செய்முறை-2: பின்பு தக்காளியையும் போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி ஒர…
-
- 6 replies
- 2.7k views
-
-
அரைத்த ஆட்டிறைச்சி கறி செய்யத் தேவையான பொருட்கள்; அரைத்த ஆட்டிறைச்சி வெங்காயம் உள்ளி,இஞ்சி தூள்,உப்பு,மஞ்சல் தேவையான அளவு பச்சை மிளகாய் தக்காளிப் பழம் கருவேப்பிலை,ரம்பை[இருந்தால் போடவும்] வழமையாக இறைச்சி தாளிக்க தேவையான பொருட்கள் எண்ணெய் தேசிக்காய் கொத்தமல்லி இலை செய்முறை; இறைச்சியை வடிவாய்க் கழுவி வடி கட்டி தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்[வெள்ளைத் துணி இருந்தால் அதன் மூலம் பிழியலாம், வடியைப் பாவிக்கலாம் அல்லது கையால் பிழியவும். கழுவிய இறைச்சிக்குள் மஞ்சல்,உப்பு போட்டு புரட்டவும். அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் முதலில் வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு எண்ணெயை விடவும். வெங்காயம் சற்று பொன்னிறமாய் வதங்க…
-
- 13 replies
- 2.7k views
-
-
உருளைக்கிழங்கு கத்திரிக்காய் குருமா தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 4 (1/4 கிலோ) கத்தரிக்காய் சிறியது - 5 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 தேங்காய்த் துறுவல் - 1 கோப்பை பட்டை - 2 (1 இஞ்ச் அளவு) கிராம்பு - 5 ஏலக்காய் - 1 அன்னாசிப்பூ - 1 சோம்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி கசகச - 1/2 தேக்கரண்டி நிலக்கடலை - 15 கறிவேப்பிலை - 2 கொத்து கொத்துமல்லித்தழை - 1 தேக்கரண்டி (நறுக்கியது) மல்லித்தூள் - 3 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பூண்டு - 5 பல் சின்ன வெங்காயம் - 5 உப்பு - தேவையான அளவு செய்முறை 1. பெரிய வ…
-
- 4 replies
- 2.7k views
-
-
பால் றொட்டி மற்றும் சீனி அரியதரம் செய்முறை இருந்தால் தாருங்கள்
-
- 3 replies
- 2.7k views
-
-
-
எண்ணைய் கத்திரிக்காய் குழம்பு தேவையான பொருட்கள்:- கத்தரிக்காய் -4 புளி -ஒரு எலுமிச்சை அளவு எண்ணைய் -2 டேபிள்ஸ்பூன் மிளகாய்வத்தல் -2 கடுகு -1 டேஸ்பூன் பெருங்காயம் -சிறிது மஞ்சள்தூள் -1/4டேஸ்பூன் பொடிதயாரிக்க:- கடலைபருப்பு -1டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு -1 டேஸ்பூன் தனியா -1 டேஸ்பூன் மிளகாய்வத்தல் …
-
- 2 replies
- 2.7k views
-
-
அதென்ன கத்தரி சாம்பார் என்று கேட்பிங்களே? நீங்க கேட்காட்டியும் நான் சொல்லிதான் தீருவேன். வீடுகளில் பொதுவாக வெங்காய சாம்பார் அடிக்கடி வைப்பார்கள். அதே செய்முறையில் வெங்காயத்திற்கு பதில் கத்தரிக்கயை போட்டால் எப்படி இருக்கும் என ஒரு கேள்வி என்னுள்ளே. உடனே அதை பரிசோதித்து தான் பார்த்திடுவமே என ஆரம்பித்தேன். [நீ சமைப்பதே ஒரு பரிசோதனை தானே என்ற கேள்வியெல்லாம் இங்கே வேலைக்காகாது] தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் 1 துவரம் பருப்பு 1/2 கப் மிளகாய் வத்தல் 5 துருவிய தேங்காய் 2 மே.க வெந்தயம் 1/2 மே.க மல்லி 1 மே.க கடலை பருப்பு 1 மே.க மஞ்சள்தூள் 1/2 தே.க புளிகரைசல் 1 மே.க கடுகு 1/2 தே.க கறிவேப்பிலை 1கெட்டு எண்ணெய் 1/2 மே.க பெருங்காயம் - கொஞ்சமா உப்பு [தேவ…
-
- 2 replies
- 2.7k views
-
-
தமிழர்களின், கலாச்சாரத்தோடு கலந்துவிட்ட பிரியாணி.. பாரம்பரியத்தை மறந்த, பிள்ளைகளாகி விட்டோமா? தமிழர்கள் கலாசார, வாழ்வியல் அங்கமாக பிரியாணி மாறிக்கொண்டு வருகிறது. தமிழர்கள் தங்கள் கலாசாரத்தை எளிதில் பறிகொடுப்பார்கள் என்பதற்கு பிரியாணி தற்போதைய உதாரணமாகிவிட்டது வேதனையான உண்மை. கலாச்சாரம், பண்பாடு என்பது யாரும் ரூம் போட்டு யோசித்து உருவாக்கி வைத்துவிட்டு போனது கிடையாது. அந்தந்த மண்ணின் தன்மைக்கும், தட்பவெப்பத்துக்கும் ஏற்ப உருவாகுவதே வாழ்க்கை முறை. இயற்கையே அதைத்தான் விரும்புகிறது. குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் உடலில் இயல்பிலேயே ரோமங்கள் அதிகம் முளைப்பதையும், நம்மூர் போன்ற வெப்ப மண்டலங்களில் உள்ள விலங்குகள் அவ்வாறு இல்லாமல் இருப்பதையும் இயற்கையின் கல…
-
- 4 replies
- 2.7k views
-
-
இலங்கையில் மிகவும் பிரபலமானது கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டி தான். இந்த ரொட்டி கோதுமை மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவைாயன உணவாகும். அந்தவகையில் தற்போது இந்த ரொட்டியை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள் மைதா மாவு – அரை கப் கோதுமை மாவு – அரை கப் பச்சை மிளகாய் – ஒன்று தேங்காய்த் துருவல் – அரை கப் தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், மைதா மாவு, கோதுமை மாவு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிச…
-
- 9 replies
- 2.7k views
-
-
என் மகளும் நானும் இணைந்து இன்று செய்த உணவு இது தேவையானவை: பாரை மீன் (முழு மீன், அல்லது தலை மட்டும் அகற்றப்பட்ட முக்கால் மீன்) வெங்காயத்தூள் - Onion powder மிளகுத் தூள் உள்ளித் தூள் - Garlic powder மஞ்சள் தூள் சோழ மாவு மிளகாய்த் தூள் (ஊர் முறைப்படி தயாரிக்கப்பட்டது) உப்பு ஒலிவ் ஒயில் லெமன் சமைக்கும் முறை 1. மீனை நன்கு குளிப்பாட்டி (சோப் போடக் கூடாது) கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும். 2. மீன் மீது கத்தியால் சிறு கீறல்கள் போடவும் 3. மிளகுத்தூள், மிளகாய்த் தூள், உள்ளித் தூள், வெங்காயத்தூள், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் தேவையான அளவு இட்டு, சற்று சூடான தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலக்கவும். 4. ஒன்றாக கலக்கிய பின் கலவை க…
-
- 16 replies
- 2.7k views
-
-
ஆட்டிறைச்சி அரை கிலோ மைசுhர் பருப்பு அரை கிலோ சுக்கினி( பிக்கினி அல்ல)அரை கிலோ வெங்காயம் 2 பெரியது பச்சைமிளகாய் உங்கள் உறைப்புக்கு எற்றால் போல உள்ளி 5 இஞ்சி ஒரு துண்டு உப்பு கறுவா பட்டை ஏலக்காய் தக்காளிபழம் 5பெரியது மல்லி இலை சிறிதாக வெட்டியது தேசிக்காய் 1 எண்ணை கொஞ்சம் செய்முறை: முதலில் வெங்காயம் ப.மிளகாய் உள்ளி இஞ்சி இவற்ரை அரைக்கவும் இறைச்சியை ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டவும் சக்கினியையும் அப்படியே வெட்டவும் தக்காளியையும் வெட்டி வைக்கவும் அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணை ஊற்றி கறுவா ஏலக்காய் போடவும் பின் அரைத்த விழுதை போடவும் அதன் பச்சை மணம் போகும் வரை சமைக்கவும் பின் இறைச்சியை போடவும் பின் பருப்பு அதன் பின் சுக…
-
- 7 replies
- 2.7k views
-
-
சைனீஸ் இறால் தேவையான பொருட்கள் உரித்த இறால் -500g தக்காளி சோஸ் .- 2 மேசைக்கரண்டி பச்சைமிளகாய் - 2 (நறுக்கியது) கோன்பிளவர் - 4 மேசைக்கரண்டி இஞ்சி , பூண்டு - 2 மேசைக்கரண்டி ( நசித்தது ) முட்டை வெள்ளைக்கரு - 1 உப்பு , எண்ணெய்- தேவையான அளவு தண்ணீர் - சிறிதளவு செய்முறை முட்டை வெள்ளைக்கரு , 3 தேக்கரண்டி கோன்பிளவர் , உப்பு , தண்ணீர் என்பவற்றை ஒரு கலவையாக தயாரிக்கவும். அக்கலவையில் இறாலை 20 நிமிடங்கள் ஊற விடவும். தக்காளி சோஸ் ,கோன்பிளவர் , இஞ்சி , பூண்டு , மிளகாய் என்பவற்றை ஒன்றாக கலக்கவும். தேவையான அளவு எண்ணெயில் ஊற வைத்த இறாலை பொரிக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி தக்காளி சோஸ் கலவையினை ஒரு நிமிடம் வதக்க…
-
- 1 reply
- 2.7k views
-
-
எமது உணவு வகைகள் மற்றும் சிற்றுன்டி வகைகளுக்கு வெள்ளைகள் மத்தியில் வரவேற்ப்பு எப்படி குறிப்பாக எவை எவை பிடிக்கும் என்று யாராவது அனுபவம் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.உதவியாக இருக்கும்.
-
- 20 replies
- 2.7k views
-
-
ஹோட்டல் சாம்பார் நானும் பல வழிகளில் செய்து பார்த்துவிட்டேன். இட்லிக்குத் தொட்டுக்குக்கொள்ள ஹோட்டலில் வைக்கும் சாம்பார் போல வருவதேயில்லை. வீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி? - எம். கலை, திருச்சி. ரேவதி சண்முகம், சமையல்கலை நிபுணர், சென்னை. துவரம் பருப்புடன் பரங்கிக்காய் துண்டுகளைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் சின்ன வெங்கயாம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கொஞ்சம் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். …
-
- 4 replies
- 2.6k views
-
-
-
- 20 replies
- 2.6k views
-