நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
நெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்! பெங்களூரில் வசிக்கும் சுகுணா வினோத், `www.kannammacooks.com’ என்ற வலைதளத்தை நிர்வகிக்கும் தமிழ்ப் பெண். கொங்குநாட்டு ஸ்பெஷல் சமையல் குறிப்புகளைப் பதிவிட்டு இரண்டாண்டுகளுக்குள் எக்கச்சக்கமானவர்களின் கவனத்தை ஈர்த்தவர். ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இவரது வலைதளத்தைப் பார்வையிடுகிறார்கள். தன் சமையல் ஆர்வம் பற்றி பேசுகிறார் சுகுணா... ``கொங்கு நாட்டுக்கே உரிய பாரம்பர்ய சமையலில் கைதேர்ந்தவர் என் அம்மா. என் அப்பா, அலுவலக வேலை காரணமாக பல நாடுகளுக்கும் பயணம் செய்வது வழக்கம். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வித்தியாசமான ரெசிப்பிகளை அறிந்து அவற்றை வீட்டில் செய்து பரிமாறுவார…
-
- 0 replies
- 1k views
-
-
-
புதினா சாதம் என்ற மெந்தாபாத் தேவையான பொருட்கள்: கொத்தமல்லி இலைகள் - 1 கட்டு புதினா இலைகள் - 1 கட்டு சின்ன வெங்காயம் -8 நாட்டு தக்காளி - 3 இஞ்சி பூண்டு பேஸ்டு - 1 பாக்கெட். பச்சை மிளகாய் - 2 (அரைத்தது) மசாலா பொருட்கள்(பட்டை லவங்கம் பிரியாணி இலை) கடலை எண்ணை(மணிலா எண்ணை) - 3 டீஸ்பூன் டால்டா(வன்ஸ்பதி ஆயில்) - 2 டீஸ்பூன் பொன்னி அரிசி (அ) ஐ.ஆர் 50 அரிசி -கால் கிலோவுக்கும் கொஞ்சம் கூடுதல் (செஞ்சி ராஜா தேசிங்கு பிராண்டு.. பொன்னி அரிசி என்றால் கொஞ்சம் சுவை கூடுதலாக இருக்கும் என்று பல்வேறு ஆராய்ச்சி நிபுணர்களால் ஆராய்ந்து தெரிவிக்கபட்டுள்ளது ) உப்பு - தேவையான அளவு செய்முறை: …
-
- 1 reply
- 2.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
சொக்லெட் கேக் (Chocolate Cake) இது முட்டை இல்லாமல் செய்யக்கூடிய சொக்லெட் கேக். தேவையானப் பொருட்கள் கோதுமை மா (மைதா)- 1 1/2 கப் சீனி - 3/4 கப் பால் - 1 கப் (அல்லது பால் 3/4 கப் தண்ணீர் 1/4 கப் சேர்த்து) கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி பொடித்த கஜு - 1/4 கப் (விரும்பினால்) ரெய்சின் - 25 (விரும்பினால்) பட்டர் - 1/2கப் பேகிங் சோடா - 1 1/2தேக்கரண்டி உப்பு - 1/4 டீஸ்பூன் 8" கேக் பான் - 1 பேகிங் ஸ்பிரே செய்முறை கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும். அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும். கோதுமை மா, கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 - 4 தடவை அரிக்கவும் (சலிக்கவும்) சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவ…
-
- 17 replies
- 7.7k views
-
-
தேவையான பொருட்கள் : மைதா-ஒரு கோப்பை கோதுமை மாவு-ஒரு கோப்பை எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி உப்புத்துள்- ஒரு சிட்டிகை துருவிய பனீர்- முக்கால் கோப்பை துருவிய தேங்காய்- அரைகோப்பை வெல்லம்-1/2 கோப்பை ஏலக்காய்-நான்கு பொடித்த முந்திரி -காலக் கோப்பை நெய்/எண்ணெய்- தேவைக்கேற்ப செய்முறை : 1.மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்திக்கு பிசைவதுப் போல் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும். 2.மிக்ஸியில் வெல்லதுடம் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும் 3.வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னிரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும் . 4.பின்பு அதே வாணலியில்…
-
- 23 replies
- 2k views
-
-
அதிசய உணவுகள் 1 தாய்வான் தலைநகர் டைபியில் உள்ள ‘ஷிலின்’ இரவு உணவுச் சந்தை இந்த உலகத்தில் வாழ்கிற ஒவ்வோர் உயிருக்கும் உண்ணுவதும் இனவிருத்தி செய்வதுமே முக்கியத் தொழில். வயிறே பிரதானம் என்றும் நம் முன்னோர் சொல்லியுள்ளனர். ‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்/ இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்/என்நோ(வு) அறியாய் இடும்பை கூர் என் வயிறே/ உன்னோடு வாழ்தல் அரிது’ - இது வயிற்றுப் பசியின் கொடுமையைப் பற்றி ஒளவையார் சொன்னது. வயிற்றுப் பசிக்கு உணவு கிடைத்துவிட்டால் போதுமா? நாக்கு ருசிக்கு மனிதர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள்தானே! ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். என் கணவரின் கிளினிக்கிற்கு, …
-
- 1 reply
- 1.2k views
-
-
மீன் - உருளைக்கிழங்கு குருமா இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - 500 கிராம் உருளைக்கிழங்கு - 2 சிறியது பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவைக்கு சோம்பு - அரை டீஸ்பூன் பட்டை - மிகச் சிறிய…
-
- 0 replies
- 534 views
-
-
-
இது நான் வாசித்த ஒரு சமையல். விரியும் சிறகுகள் என்ற இணையத்தில் வி.ஜெ. சந்திரன் (canada)அவர்கள் படத்துடன் தந்த செய்முறை.நன்றி சந்திரன் நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள். சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல் தேவையான பொருட்கள் ஒன்று/ இரண்டு பேருக்கு 4 - மேசைக்கரண்டி தயிர் 1 - பெரிய கத்தரிக்காய் * சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும். * வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன். நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய …
-
- 11 replies
- 7.1k views
-
-
ஹாங்காங் சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ, சோள மாவு - 1/4 கப், வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், அஜினோமோட்டோ - சிறிது, மிளகுத்தூள் - சிறிது, குடைமிளகாய், கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் - சிறிது, எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, சோள மாவு சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் 2…
-
- 0 replies
- 456 views
-
-
-
கச கசா ..இதனை எப்படி பாவிக்க வேண்டும் ? கச கசா ..இதன் பயன்கள் பற்றி கூற முடியுமா நண்பர்களே ? சர்பத் தயாரிக்கும் பொழுது கச கசா இதனை பாவிக்கின்றார்கள் இதனை சுடு நீரில் அவித்து பாவிப்பதா ,,அல்லது தண்ணீரில் ஊறவைக்க வேண்டுமா.. எப்படி என்ற தகவல்கள் அறியத்தாருங்கள் கச கசா ITHIL பலவகை உண்டா..அல்லது ? தயவு செய்து பதில் தாருங்கள்
-
- 7 replies
- 7k views
-
-
நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு காய்கறிகளின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்துகிற பலரும் பழங்களின் தோலைத் தூக்கிஎறிந்துவிடுவார்கள். ஆனால், அவற்றில் தேர்ந்தெடுத்த சில பழங்களின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. ஆரஞ்சுப் பழத் தோலில் தொக்கு செய்யக் கற்றுத்தரும் இவர், வேறு சில சுவையான உணவு வகைகளையும் செய்யக் கற்றுத் தருகிறார். ஆரஞ்சுப் பழத் தோல் தொக்கு என்னென்ன தேவை? ஆரஞ்சுப் பழத் தோல் (பொடியாக நறுக்கியது) - 2 கப் இஞ்சி (பொடியாக நறுக்கியது) - அரை கப் வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடி …
-
- 0 replies
- 527 views
-
-
கோழி வறுத்த கறி தேவையான பொருட்கள் கோழிக்கறி ஒன்றரை கிலோ இஞ்சி விழுது 7 தேக்கரண்டி பூண்டு விழுது 5 தேக்கரண்டி மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி எண்ணெய் 120 மி.லி. வெங்காயம் ஒரு கப் தக்காளி அரை கப் மல்லித்தூள் அரைத்தேக்கரண்டி மிளகாய்த்தூள் அரைத்தேக்கரண்டி ஏலப்பொடி அரைத்தேக்கரண்டி கிராம்பு 2 பட்டை சிறுதுண்டு புளி சிறுநெல்லிக்காய் அளவு மிளகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லித்தழை சிறிது கறிவேப்பிலை சிறிது உப்பு தேவையான அளவு செய்முறை கோழிக்கறியினைச் சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதில் பாதிப் பாதி எடுத்துக்…
-
- 5 replies
- 4.9k views
-
-
சிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட் சிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட் millets-Sprout-moong-dal-salad தினமும் சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வரகு - 2 தேக்கரண்டி பனி வரகு - 2 தேக்கரண்டி தினை - 2 தேக்கரண்டி முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி துருவிய கேரட் - 2 தேக்கரண்டி உப்பு - 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி …
-
- 0 replies
- 663 views
-
-
அப்பம் எண்டா கூட எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் பால் அப்பம் எண்டா ருசியே தனி. ஊரில அப்பத்துக்கு போட போறம் எண்டா காலேலயே போய் ஒரு டம்ளரில உடன் கள்ளு வாங்கி வந்து மணக்க மணக்க விட்டு குழைச்சு செய்வம். இங்க எங்க பனைமரமா நிக்குது. இல்லை கடையில எங்காச்சும் வாங்க முடியுமா என்ன...அதுக்காக ஒரு வழி சமீபத்தில அறிஞ்சன். (ஆமா இது எப்பவோ எனக்கு தெரியும் எண்டு தெரிஞ்சவை பேசாதைங்கோ) இது தெரியாதவைக்கு மட்டும். செய்முறை: ஒரு டம்ளரில இளஞ் சூடான தண்ணியை தேவையான அளவு விடவும். அப்புறம் ஈஸ்ட் , சீனி தண்ணி அளவுக்கேற்ப போட்டு...கொஞ்ச நேரம் கலக்கி ஊற விடவும். கொஞ்ச நேரத்தால மெல்லிய கள்ளு வாசம் வீசும். அப்புறம் எடுத்து அப்பத்துக்கு பயன்படுத்தலாம். கூட எல்லாருக்கும் அளவுகள் கொ…
-
- 147 replies
- 25.7k views
-
-
தேவையான பொருள்கள்: மில்க்மெய்ட் - 3/4 டின் பால் - 1/2 லிட்டர் பால் க்ரீம் - 1 1/2 கப் வெனிலா எசன்ஸ் செய்முறை: பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். க்ரீமை லேசாக மிக்ஸியில் அடித்துக் கலந்து கொள்ளவும். க்ரீமுடன் மில்க்மெயிட், பால் மற்றும் சில சொட்டுகள் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான அலுமினியம் டப்பா அல்லது வேறு உறைய வைக்கும் கண்டெய்னரில் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். கலவை டப்பாவில் முக்கால் அளவு மட்டும் இருக்குமாறு கண்டெயினர் பெரிதாக இருக்கட்டும். பாதி உறைந்ததை எடுத்து மீண்டும் மிக்ஸியில் மிக மிக மென்மையாக ஆகும்வரை அடித்துக் கலக்கவும். மீண்டும் அதே கண்டெயினரில் ஊற்றி ப்ரீசரில் நன்கு உறைய வைத்து (4 மணி நேர…
-
- 3 replies
- 3.1k views
-
-
சிறுதானிய கார அடை (தினம் ஒரு சிறுதானியம்-5) குழந்தைள்கள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசிச் சோறு, தினை உருண்டை, சோள கொழுக்கட்டை, கேப்பை களி என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்…
-
- 0 replies
- 905 views
-
-
வரகு போண்டா வாய்க்கு ருசியைத் தரும் வரகில், வற்றாத சத்துகள் உள்ளன. வரகின் தோலில் ஏழு அடுக்குகள் உள்ளன. கிராமங்களில் உரலில் போட்டு, வெகு நேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது. பலன்கள் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சீக்கிரத்தில் செரிக்கக்கூடியது. அரிசிக்குப் பதிலாக வரகில் இட்லி, தோசை செய்யலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். வரகு போண்டா 300 கிராம் வரகு அரிசி மாவு, 200 கிராம் கடலை மாவு, 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூ…
-
- 11 replies
- 2.7k views
-
-
சுவையான நண்டு கட்லெட் குழந்தைகளுக்கு நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட தெரியாது. இப்படி கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 2 பெரிய வெங்காயம் - ஒன்று கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி பிரெட் தூள் - ஒரு கப் மைதா மாவு - அரை கப் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - சிறிது செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * நண்ட…
-
- 0 replies
- 558 views
-
-
கமகமக்கும் கடாய் சிக்கன்! #WeekendRecipes வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கடாய் சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறையின் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 100 கிராம்(வேகவைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்தது) தக்காளி - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய்(கீறியது) - 4 கசூரி மேத்தி(காய்ந்த வெந்தயக…
-
- 0 replies
- 545 views
-
-
https://youtu.be/I72Z3StedXc Please subscribe to my Channel to support me. Thanks
-
- 9 replies
- 1k views
-
-
இதுவரை எத்தனையோ பருப்புக்களை கொண்டு வடை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குழம்பு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் வெள்ளைக் காராமணியைக் கொண்டு வடை செய்து சாப்பிட்டிக்கிறீர்களா? இந்த வடை மற்ற வடைகளை விட மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் மாலையில் டீ/காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு அந்த வெள்ளைக் காராமணி வடையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளைக் காராமணி - 1 கப் …
-
- 3 replies
- 1k views
-
-
கே.எஃப்.சி. சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..? பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று ஆசை. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும். சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்) இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - 1…
-
- 12 replies
- 8.1k views
-