நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பால் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அத்தகைய பால் பொருட்களை வைத்து எந்த ஒரு ரெசிபி செய்தாலும், சுவையாக இருக்கும். இப்போது அதில் பன்னீரை வைத்து குழந்தைக்கு பிடித்த வகையில் ஒரு ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவர். அந்த பன்னீர் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 2 கப் (துருவியது) மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து மசித்தது) கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மை…
-
- 0 replies
- 913 views
-
-
தேவையான பொருட்கள் பன்றி இறச்சி – 1 கிலோ மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி நல்ல மிளகு தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு மசாலாவுக்கு வெங்காயம் – 2 கப் உப்பு – தேவையான அளவு பூண்டு – 3 தேக்கரண்டி இஞ்சி – 2 தேக்கரண்டி கரமசாலா தூள் – 2 தேக்கரண்டி மல்லித் தூள் – 2 தேக்கரண்ட…
-
- 2 replies
- 9.5k views
-
-
-
ஊரிலிருந்து காட்டு பன்றி வத்தல் வந்திருக்கிறது .எப்படி சமைக்கிறதென யாருக்காவது ஏதும் ஐடியா இருக்கிறதா ?
-
- 14 replies
- 3.8k views
-
-
-
பப்பாளிக்காய் பொரியல் என்னென்ன தேவை? பப்பாளிக்காய் (துருவியது) - 1 கப் குடமிளகாய் 3 ( பச்சை, சிவப்பு, மஞ்சள்) நறுக்கிய பச்சை மிளகாய் 2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் 2 தேங்காய்த் துருவல் - அரை மூடி கடலைப் பருப்பு 2 டீஸ்பூன் கடுகு, உளுந்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு எப்படிச் செய்வது? பப்பாளிக்காயை சேமியாபோல் துருவிக் கொள்ளவும். மூன்று நிற குடமிளகாயையும் நீளவாக்கில் துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்கவும். அதில் கடலை பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய வெங்கா…
-
- 1 reply
- 810 views
-
-
தேவையான பொருட்கள்- காஸ் அடுப்பு இல்லாவிடில் விறகு அடுப்பு,பப்படம் ஒரு பைக்கற்,எண்ணேய் தேவையான அளவு,தாச்சி,கண் கரண்டி. செய்முறை-தாச்சியை முதலில் நன்கு கழுவி அடுப்பில் வைக்கவும் பின் அடுப்பை பற்ற வைக்கவும் சிறிது நேரத்தின் பின் எண்ணேய் போத்தல் மூடியை களற்றி எண்ணேயை கவிட்டு தாச்சிக்குள் ஊற்றவும்.ஊற்றிய பிறகு எண்ணேய் போத்தலை நன்றாக மூடி இருந்த இடத்தில் வைக்கவும்.எண்ணேய் நன்றாக கொதித்தவுடன் பப்பட பையை வாயால் பிக்காமல் கத்தியால் வெட்டி ஒவ்வொரு பப்படமாக தாச்சியுள் போடவும்.நன்றாக பொங்கி வந்தவுடன் பப்படத்தை கண் கரண்டியால் எடுத்து ஒரு பழைய பேப்பரில் போடவும்.பத்திரிகையில் எண்ணேய் ஊறியவுடன் மரக்கறி சோற்றோடு சேர்த்து உண்ணவும்........
-
- 24 replies
- 6.4k views
-
-
பயத்தங்காய் பலாக் கொட்டைப் பிரட்டல் இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் இக் கறியும் சமைக்கப்படும். திவசம், அமாவாசை, பௌர்ணமி போன்ற பிதுருக்கு படைக்க வேண்டிய படையலில் நிச்சயமாக இக் கறியும் இடம் பெறுவது வழக்கம். பீன்ஸ் இனத்தைச் சேர்ந்த இது புரொட்டின் சத்தும் கூடியது. விரத நாட்களில் மட்டுமின்றி வீடுகளில் சாதாரண நாட்களிலும் இது சமையலில் இடம் பிடிக்கும். நீண்ட முற்றல் இல்லாத ஊர்ப் பயிற்றங்காயாக இருப்பது சுவையைக் கூட்டும். இக்காயுடன் வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு சேர்த்து குழம்பு செய்வதுண்டு. இத்துடன் தேங்காய்ப்பால் வெள்ளைக்கறியும் சமைக்கலாம். பொரியல், கூட்டு செய்வதும் வழக்கம். முற்றிய விதைகளைப் பொரித்தெடுத்து சிப்ஸ்சும் செய்து கொள்வார்கள். …
-
- 1 reply
- 3.6k views
-
-
பயத்தம் பருப்பு தோசை.. வழக்கமான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் மாறுதலுக்கான பயத்தம் பருப்பு தோசை செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறை இதோ. தேவையானவை: பச்சரிசி - 1/2 ஆழாக்கு பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 2 பெருங்காயம் - சிறிது வெங்காயம் - 1 (பெரியது) தேங்காய் - 1 மூடி (துருவியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, பருப்பை தனியே ஊறப் போடவும். இரண்டையும் அரைத்து, மிளகாய், பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து அரைக்கவும். அரிந்த வெங்காயத்தையும் போட்டுக் கலந்து, மாவைக் கரைத்து, தோசைப் பதமாகச் சுடவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போ…
-
- 4 replies
- 3.7k views
-
-
பயத்தம் லட்டு (பணியாரம் அல்ல) தேவையான பொருள்கள்: பாசிப் பயறு 500 கிராம் சீனி 500 கிராம் ஏலக்காய் தூள் சிறிதளவு முந்திரிப் பருப்பு தேவையானது நெய் 100 கிராம் உப்பு சிறிதளவு செய்முறை: முதலில் பயறை நல்ல வாசம் வரும் வரை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும் பின் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக பொரித்து வைக்கவும் அதன் பின் பாத்திரம் ஒன்றில் அரைத்த பயத்தம் மா உப்பு சீனி முந்திரி பருப்பு ஏலக்காய் தூள் அத்துடன் மிகுதியாக உள்ள சுhடாக்கிய நெய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்த பின் உருண்டைகளாக பிடித்து பின் உண்ணவும் இல்லையேல் பரிமாறவும்........ நான் தளத்தில சுட்டு கொடுக்க அவா தயாரிச்சு தந்தவா...... சுப்பர் தான் நான்…
-
- 22 replies
- 8.8k views
-
-
பயனுள்ள சமையல் குறிப்புகள்! 1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும். 2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம். 3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும். 4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும். 5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்ச…
-
- 1 reply
- 1k views
-
-
யாழ்ப்பாணத்து மக்கள் புட்டுக்கு பொரித்து இடித்த தேங்காய்ச் சம்பல், வெந்தயக்குழம்பு, மீன் குழம்பு, கோழி இறைச்சிக்கறி, ஆட்டு இறைச்சிக்கறி, பயற்றங்காய்க்கறி, மரவள்ளிக் கிழங்குக்கறி போன்ற பல கறிகளைச் சேர்த்து உண்பார்கள். பொதுவாக பயற்றங்காய்க் கறி என்றால் குரங்குவால் பயற்றங்காய்க் கறியைக் குறிக்கும். இக்குரங்குவால் பயற்றங்காய்க் கறியை விசேட வைபவங்களிலும் கோவில்களிலும் பரிமாறுவார்கள். கிராமப்புற மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் பயற்றங்கொட்டைக்கறிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. இந்த பயற்றங்கொட்டைகளை கீரைப் புட்டுக்கும் பயன்படுத்துவார்கள். மேலதிக கட்டுரைக்கு http://www.yarlmann.lk/head_view.asp?key_c=356
-
- 7 replies
- 1.3k views
-
-
பருத்தித்துறை வடை. உழுந்து – 1/2 சுண்டு, அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு செ.மிள. பொடி – 2 தே. க பெருஞ்சீரகம் – 1 மே.க உப்பு – தே.அளவு கறிவேப்பிலை – சிறிது ( பொடியாக வெட்டி) எண்ணெய் – தே.அளவு செய்முறை :- * உழுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். * உழுந்து ஊறியதும் அத்துடன் மற்றைய பொருட்களை சேர்த்து 3 மே.கரண்டி எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும். * சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி வட்டமாக்கி ( மெல்லியதாக) கொள்ளவும். * அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். ** (அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்க்கவும்)
-
- 9 replies
- 6.1k views
-
-
-
- 0 replies
- 796 views
-
-
தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 250 கிராம் கடலைப் பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 4 தேங்காய்த் துருவல் - 1/2 கப் பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 6 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 6 தேக்கரண்டி புளி - எலுமிச்சம் பழ அளவு மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை : பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கழுவி தண்ணீரை வடிய வைக்கவும். வடித்ததும் உப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் சேர்த்து உசிலிக்கு அரைப்பது போல் அரைக்கவும். புளியைத் தண்ணீர் அதிகம் விட்டுக் கரைத்து உபபு, மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைக்கவும். இண்டாலியம் சட்டி அல்லது இருப்புச்சட்டியில் 3 தேக்கரண்டி எண்ணெய…
-
- 4 replies
- 3.7k views
-
-
பருப்பு கீரை கூட்டு தேவையான பொருட்கள் 1 1/2 கோப்பை கடலைப் பருப்பு 1 கொத்து கீரை (பசலை, ஸ்பினாச், அரை கீரை போன்றது) 2 சிவப்பு தக்காளிகள் 15 பல் பூண்டு 1 தேக்கரண்டி மஞ்சள் உப்பு தேவைக்கேற்ப 1 தேக்கரண்டி ஜீரகம் 1 தேக்கரண்டி கடுகு 2 சிவப்பு மிளகாய்கள் காய்ந்தது செய்முறை கீரையை கழுவி சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைத்துக்கொள்ளவும். இதே நேரத்தில் கடலைப்பருப்பை பிரஷர் குக்கரில், மஞ்சள், உப்பு, 7 பல் பூண்டு போட்டு வேகவைத்துக்கொள்ளவும். பருப்பு வெந்ததும், இதனை கீரையோடு சேர்த்து, தக்காளியை வெட்டி இதனோடு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், கடுகு சேர்த்து, வெடிக்கும்போத…
-
- 2 replies
- 10.4k views
-
-
தேவையானவை: கடலைப்பருப்பு & அரை கப் துவரம்பருப்பு & அரை கப் உளுத்தம்பருப்பு & கால் கப் பாசிப்பருப்பு & கால் கப் பெரிய வெங்காயம் & 1 பச்சை மிளகாய் & 2 மல்லித்தழை & சிறிது கறிவேப்பிலை & சிறிது தேங்காய் துருவல் & கால் கப் உப்பு & ருசிக்கேற்ப எண்ணெய் & தேவைக்கு பூண்டு & 5 பல் அரைக்க: சோம்பு & அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் & 2 செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாக…
-
- 0 replies
- 605 views
-
-
-
பருப்பு முள்ளங்கி வறுவல் தேவையானப் பொருள்கள் முள்ளங்கி - 2 கடலைப்பருப்பு - அரை கப் கொத்துமல்லி, கறிவேப்பிலை -பொடியாக நறுக்கியது மிளகாய், தனியா, மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி சர்க்கரை - அரை தேக்கரண்டி புளி - தேவையான அளவு எண்ணெய், பெருங்காயம், கடுகு, சீரகம் - தாளிக்க உப்பு - தேவையாள அளவு செய்முறை 1.முதலில் கடலைப் பருப்பை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் முள்ளங்கியை தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்கவும். மேலும் வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உப்பு, மஞ்சள், தனியா, மிளகாய் பொடிகளை சேர்க்கவும். 3.த…
-
- 1 reply
- 1.9k views
-
-
பருப்பு ரசம் மதிய வேளையில் பலருக்கு ரசம் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் எப்போதும் ஒரே மாதிரி ரசம் செய்து சாப்பிடாமல், அவ்வப்போது வித்தியாசமான ரசத்தையும் செய்து சுவைக்கலாம். அதில் ஒன்று தான் பருப்பு ரசம். இந்த பருப்பு ரசம் செய்வது மிகவும் ஈஸி. மேலும் சுவையானதாகவும் இருக்கும். சரி, இப்போது பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தக்காளி - 1 (பெரியது மற்றும் நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்து லேசாக மசித்தது) புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 5 பற்கள் ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தாளிப்பதற்…
-
- 0 replies
- 817 views
-
-
பருப்பு ரசம்.. தேவையானவை.. முழு பூண்டு - 1 வெங்காயம் - 2 தக்காளி - 1 மிளகுதூள்- 3 ஸ்பூன் (காரம் தேவைபடுபவர்கள் கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்) காய்ந்த மிளகாய் - 5 பருப்பு - 1 டம்பளர்.. தாளிக்க; கடுகு - 1 ஸ்பூன்.. உளுந்து - 1 ஸ்பூன் கறி வேப்பிலை சிறிதளவு. செய்யும் முறை: பருப்பை ஒருபாத்திரத்தில் நீர் விட்டு.. நன்றாக குக்கரில் வேகவைத்து .. சூடு ஆறியதும் மிக்ஸியில் அடித்து கூழானதும்.. தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.. ஒரு வாணலில் எண்ணை விட்டு கடுகு போட்டு தாளித்து அதனுடன் வெட்டிய வெங்காயம்.. தக்காளி.. நசுக்கிய பூண்டு..கிள்ளிய காய்ந்த மிளகாய்.. மற்றும் மிளகுதூளை இட்டு நனறாக வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.. பிறகு பருப்பு கடையலை…
-
- 1 reply
- 2.5k views
-
-
பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி? பருப்பு வடை மோர்க்குழம்பு சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மோர் - 2 கோப்பை பருப்பு வடை - 7 துருவிய தேங்காய் - 1/4 கோப்பை துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி பச்சரிசி - 1 மேசைக்கரண்டி கொத்துமல்லி விதை (தனியா)- 2 மேசைக்கரண்டி இஞ்சி - 1 சிறிய துண்டு பச்சை மிளகாய் - 10 வற்றல் மிளகாய்…
-
- 0 replies
- 749 views
-
-
மாலையில் வடை சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டால், அப்போது உடனே கடைக்கு சென்று வாங்கி வந்து சாப்பிடாமல், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். அவ்வளவு பணம் செலவழித்து கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால், எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா. மேலும் வடை செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. இப்போது வடையில் பருப்பு வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்... தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 3/4 கப் துவரம் பருப்பு - 1/4 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 வரமிளகாய் - 3 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: கடலை பருப்பு மற்றும் துவ…
-
- 5 replies
- 1.5k views
-
-
பரோட்டா தேவையான பொருள்கள் மைதா மாவு உப்பு எண்ணெய் செய்முறை: முதலில் மைதா மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிர் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். கொஞ்சம் தளதளவென்று இருக்க வேண்டும். பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவை உருண்டைகளாகப் பிடித்து சப்பாத்திக்கு திரட்டுவது போல் பெரிய அளவில் அனைத்து ஊருண்டைகளையும் எண்ணெய் விட்டு திரட்டிக் கொள்ளவும். பிறகு கொஞ்சமாக மைதா மாவை எடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி பசைப்போல் செய்து கொள்ளவும். திரட்டி வைத்துள்ள மாவை ஒன்றன் மீது ஒன்று பசைத்தடவி அடுக்க வேண்டும். பிறகு அனைத்தையும் …
-
- 4 replies
- 24.6k views
-
-
இந்த சிக்கன் சால்னா கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் மிகவும் பிரசித்தம். சைவ சால்னாவுக்கு சிக்கனை தவிர்த்து காய்கறிகள் சேர்த்து கொள்ளவும், கொஞ்சம் அண்ணாச்சி பூ, மராட்டிய மொக்கு சேர்த்து கொள்ளவும். நமது நண்பர்கள் சிலர் தேங்காய் துருவலை தவிர்க்க விரும்புபவர்கள் முந்திரி பருப்பை, கசகசா மற்றும் பொட்டுக்கடலையை வைத்து அரைக்க சேர்த்து கொள்ளவேண்டும். தேவையான பொருட்கள் வெங்காயம் 1 பெரியது ( பொடியாக நறுக்கியது ) தக்காளி 1 பெரியது ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி சிக்கன் 500 கிராம் சிக்கன் தோல் 200 கிராம் ( கறி கடையில் கேட்டால் கொடுப்பா…
-
- 0 replies
- 2.2k views
-