கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
நிலமை.(நிமிடக்கதை) அசோவனச் சிங்கங்கள் முயல்களையும் மான்களையும் அழைத்து நாமெவரும் மாமிசம் உண்ணக்கூடாது. அது பாவமான செயலென்று, இரத்தம் காயாத வாய்களோடு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றன.
-
- 2 replies
- 1.1k views
-
-
❤️ அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார். ரவீந்தர், அங்கு …
-
- 0 replies
- 579 views
-
-
"அன்பின் வெகுமதி" இலங்கை திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர் பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட, பண்டைய நூல்கள் சிலவற்றில் 'கோகண்ண' எனவும் [தீபவம்சம், மகாவம்சம்], திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சில தேவாரப் பாடல்களில் 'கோணமாமலை' ["குரைகட லோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"] எனவும் அழைக்கப்பட்ட இடம் ஆகும். இந்த அழகிய கடற்கரை நகரத்தில், அடர்ந்த நீல நிறமுடைய அலைகள் தங்கக் கடற் கரை மேல் நடனமாடியபோது, அதன் ஆழத்தைத் தழுவத் துணிந்தவன் போல், ஆனால் பணிவான மீனவனாக ரவி, தன் சிறிய படகில் இருந்தபடி கடல் அன்னையைத் இரசித்துக்கொண்டு, புத்தி கூர்மையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற, சூரியன் தினம் முத்தமிட்ட முறுக்கேறிய தோல் மற்றும் நீலக்கல் …
-
- 0 replies
- 328 views
-
-
"பாகப்பிரிவினை" குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும் அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி 4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக …
-
- 0 replies
- 437 views
-
-
வணக்கம், நலமாக இருக்கிறீர்களா? வாழ்க்கை எப்படி போகின்றது? "அட என்னத்த இங்க வந்து கண்டோம்" என அலுத்துக்கொள்கிறீர்கள் போல? இருங்கோ தேத்தண்ணி போட்டு கொண்டு வாறன். சரி இப்ப நாங்கள், என்னை போல, உங்களை போல, நம்மை போல சில மனிதர்களை பார்ப்போமா? இஞ்ச பாருங்கோ இப்பவே சொல்லி போட்டன். இது முற்றிலும் ஒரு கற்பனை கதை என்ன. இடங்களின் பெயர்கள் மட்டும் நிஜ வாழ்வில் உள்ள இடங்கள். சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனை. பிறகு அங்க அவுஸ்திரேலியாவில இருக்கிறவ கோவ பட கூடாது. சரியோ?? சரி இனி உங்களுக்காக புலத்தில் இருந்து ஓர் புலம்பல்... புலத்தில் இருந்து ஓர் புலம்பல் ஈழத்தில் வடமராட்சியில் காலம் காலமாக வாழ்ந்த ஓர் குடும்பம், நாட்டு நிலமையால் அவுஸ…
-
- 244 replies
- 31.3k views
-
-
வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம் மூலமே அறிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அவர்கள் அம்மா வீட்டில் பிரசவம் ஆனதால் பெயர்சூட்டு விழாவும் அங்கேயே நடக்க இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தாத்தா லபக்கென ‘மோகன சுந்தரம்' என்ற மொக்கை டைட்டிலை தேர்வு செய்துவிட்டிருக்கிறார். முருகபக்தரான அப்பாவோ முருகன் பெயரை சூட்டவேண்டும் என்ற கொலைவெற…
-
- 4 replies
- 2.2k views
-
-
-
. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை .............பிறக்கும். டிரிங் .........டிரிங் .......என்ற மணியோசை அவள் தூக்கத்தை கலைக்க ........எழுந்து தெலிபோனை எடுத்தால் .மறுமுனையில் அவள் தங்கை சாந்தி .........அக்கா என்ன இன்று இவ்வளவு நேரம் படுகிறாயா .............இல்லையாடியம்மா .நேற்று அம்மாவை கனாக்கண்டேன் அது தான் ....இரவு முழுக்க நித்திரையில்லை விடிந்தது தெரியாமல் தூங்கி விடேன் . இப்போது எத்தனை மணி உங்க நாடில்.? .காலை எட்டு மணியாகிறது . அக்கா வார ஞாயிறு ஆவணி இருபத்திநாலு ........அம்மாவின் இறந்த நாள் .........என்று அவர்கள் சம்பாஷனை போனது .........அத்தொலைபேசி உரையாடல் முடிந்தாலும் அவள் நினைவு மட்டும் தாயகதை நோக்கி பறந்தது ........ தமிழ் ஈழத்தின் தீவக பகுதியில் அவள் வா…
-
- 8 replies
- 4.1k views
-
-
அந்த வீடு ....உறவினர்களின் கூட்டமாய் நிறைந்து காணப்பட்டது .....மாடியிலும் நடை பாதை ..வழிகளிலும் ஓரங்களிலும் மங்கல பொருட்களால் நிறைந்து இருந்தது. ..மதிமாறன் என்னும் மாறன் எப்போது உறங்கினான் என்று, அவனுக்கே தெரியாது. விடிந்தால் திருமணம் . உறவுகளும் ..பெரியவர்களுமாய் வீடு, நிறைந்து இருக்கிறது ....தன் தங்கைகளை எண்ணும் போது அவனுக்கு பெருமிதமாய் இருக்கிறது...தாயாய் தந்தையாய் வளர்த்தவன் அவன் அல்லவா.... அவனது குடும்பமும் ....மற்றவர்களை போல தாய் தந்தை ஆசைக்கு ஒரு தங்கை என்று அமைதியாக் தான் போய் கொண்டு இருந்தது. மூன்றாவதாய் ஒரு தங்கை வரு மட்டும். அவள் பிறந்த வீட்டிலேயே தாயார் ...காலமாகி விட்டார் . வைத்தியர்களின் கவன மின்மையோ .. தங்கை சுஜிதாவின் கெட்ட பலனோ ...மாறனு…
-
- 8 replies
- 2.2k views
-
-
நாட்டின் தலை நகரில் ஒரு பிரபல் மருத்துவமனை . அந்த மருத்துவ மனைக்குரிய தோற்று நீக்கி நெடி ......மருத்துவமனையின் நடை பாதையில் மனிதர்களின் நடமாட்டம். ..எல்லோரும் பரப்பரபாக் ஓடிக்கொண்டும் நடந்து கொண்டும் இருந்தனர் ....வைத்தியர்கள் .. தாதியர்கள். நோயாளர் காவு வண்டிகள். சக்கர நாற்காலியில் சிலர். ..நோயாளரைக் காண வரும் உறவுகள் பலர் . பார்வையாளர் நேரத்தில் வரும் சிலரை வேடிக்கை பார்த்த வண்ணம் அவர் இருந்தார். .ஞானரட்ணம் ஐயாவுக்கு மட்டும் யாரும் பார்க்க வருவதாயில்லை . அவரது நினைவலைகள் பின்னோக்கி சென்றன. அவர் தலை நகரில் ஆடை தைத்து கொடுக்கும் ஒரு நிறுவன் மேர்பார்வையாளராக் இருந்தார். காலக்கிரமத்தில் அவர்க்கும் திருமணம் நடந்தது . மனைவி இரு குழந்தைகள். இவர் விடுப்பு கிடைக்கும…
-
- 6 replies
- 2.8k views
-
-
தலை முடி போனாதால் மணமகனை வேண்டாம் என்று சொன்ன பெண்.. இந்த கதைக்கு உரியவங்கள் இதை படித்தால்...என்னை மண்ணிக்கவும்...யாரயும் கவலை படுத்த வேணும் என்று எழுத வில்லை... இதை படித்தாவது எனி வரும் நம்ம பெண்கள் திரிந்தட்டும்... நான் எல்லராயும் சொல்ல வில்லை.. பூஜா அவளின் பெயர்...பெயர் எவ்வளவு அழாய் இருக்கு..அவளும் அழகனா பெண்தான்..பூஜா அப்பா உனக்கு மாப்பிளை பார்த்து இருக்குறார் லண்டனில்... போடோ அனுப்பி வக்குறாராம் உன்னை பார்த்து விட்டு முடிவை சொல்ல சொன்னார்.. போடோவும் வந்தது பூஜா எனக்கு புடித்து இருக்கு அம்மா என்றாள் ... இரண்டு வீடும் சம்மதம் சொல்லி கால்யாணம் இந்த தேதி என்று முடிவு பண்ணினார்கள். ரவி போன் பண்ணினான்..பூஜா உனக்கு உண்மையிலே புடித்து இருக்கா? …
-
- 21 replies
- 5.1k views
-
-
"உச்சிதனை முகர்ந்தால்" என்கிற மயிலிறகால் மனதை வருடுகிற பெயரில் திரைப்படம். ஆனால் திரையரங்கைவிட்டு வெளியே வருகின்ற போது துக்கமும் வேதனையும் நெஞ்சை அடைக்கிறது. மனம் வெதும்பி இயலாமையை எண்ணி கண்களில் கண்ணீர் வழியத்தான் ஒவ்வொருவரும் வெளியேறினார்கள். கண்கூடாக பார்த்தேன். என்னைப் போன்ற பெண் பிள்ளையைப் பெற்றவர்களை இந்த திரைப்படம் குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்காவது தூக்கத்தை கெடுத்துவிடும். கதை என்கிற பெயரில் கற்பனைகளை மட்டுமே கட்டவிழ்த்துவிட்டு 'காசு' பார்க்க துடிக்கிறவர்கள் மத்தியில்... மனிதநேய வரலாற்றிலேயே மறக்க முடியாத, மறைக்க முடியாத கொடுமைக்குள்ளான ஈழத்துச் சொந்தங்களின் துயர வரலாற்றில் ஒரு துளியை, அதுவும் உண்மையில் நடந்ததை எடுத்துக்கொண்டுள்ளார். அதையே குடும்பப்பாங்கோ…
-
- 3 replies
- 1.9k views
-
-
தாய் மனம் - வனிதா "டேய் கணேசா... இன்னும் வேலைக்கு கிளம்பல? உனக்கு சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன், எடுத்துட்டு போடா. வேல முடிஞ்சதும் ஊர சுத்தாம வீடு வந்து சேரு. சரி... நான் கிளம்பறேன் நேரமாச்சு, கொஞ்சம் நேரமானாலும் அந்தம்மா கத்தும்." என்று அவசர அவசரமாக கிளம்பினாள் ரேவதி. "அம்மா..." "என்னடா..." "இன்னைக்கு தான் அண்ணனுக்கு கல்யாணம்... அண்ணன் துபாயில் இருந்து வந்திருக்குமில்லம்மா...." "நீ வேலைக்கு கிளம்பு. நேரமாச்சு" என்று சொல்லி வாசலுக்கு வந்தாள். செருப்பை போட போகும் போது தான் நினைவுக்கு வந்தது, நேற்றே அது அறுந்து போனது. "அட... இதை தெச்சு வாங்க நினைச்சேன், மறந்து போச்சு. செருப்பில்லாமலே நடக்க ஆரம்பித்தாள். நினைவுகள் பல மனதில் ஓடியது.…
-
- 2 replies
- 3.7k views
- 1 follower
-
-
இன்ஜினீயரம்மா!' ஒரு வைராக்கிய தாயின் வெற்றிக் கதை 'இந்தக் குடும்பத்தோட பாரத்தை முழுக்க நான் என் தலையில சுமக்கிறேன்’ - இது காலங்காலமாக நம்மூர் ஆண்கள் வாடிக்கையாக உச்சரிக்கும் வார்த்தை. இந்த வார்த்தைக்கு வலுசேர்க்கும் விதத்தில் 28 வருடங்களாக சித்தாளாக 'கல்லையும் மண்ணையும்’ தன் தலையில் சுமந்து, பிள்ளைகளை இன்ஜினீயராகவும், பார்மசிஸ்டாகவும் ஆக்கும் முயற்சியில் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறார் வைராக்கிய தாய் ஒருவர். சென்னை பூந்தமல்லியில் வசித்துவரும் 38 வயதான 'சித்தாள்’ ஜெயந்தி, தான் கடந்துவந்த முள்பாதையை தானே விவரித்தார். ''அஞ்சாவது படிக்கும்போதே படிப்பை ஏறக்கட்டிட்டு பாண்டு (சிமென்ட் சட்டி) தூக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு அப்பவே என் குடும்பம் கூ…
-
- 2 replies
- 1.9k views
-
-
'எதுவும் தெரியாது!' உள்ளே எட்டிப் பார்த்தார் ராகவன். சமையலில் மும்முரமாக இருந்தாள் ஜானகி. அவர் கோபம் இன்னும் குறையவில்லை. இளைய தலைமுறை இப்போதெல்லாம் பெரியவங்களை மதிப்பதில்லை. கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்ந்து, விரல் நுனியில் எல்லா தகவல்களை வைத்திருந்தாலும், பெரியவர்களின் அனுபவத்திற்கு ஈடாகுமா? மகனுக்கும், அப்பாவுக்குமான சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருந்தது. கையில் காபியுடன் வந்தாள் ஜானகி. ''எனக்கு வேண்டாம்; எடுத்துட்டு போ...'' ''நீங்க என்ன சின்ன குழந்தையா... எதுக்கு தேவையில்லாமல் கோபப்படறீங்க?'' ''ஆமாம்... எனக்கு எதுவும் தெரியாது. இந்த குடும…
-
- 1 reply
- 1.3k views
-
-
'என் ஞாபகப்பதிவிலிருந்து - தியாகி திலீபன்' ஒரு பேப்பருக்காக சுதந்திரா எழுதிய பதிவு http://www.orupaper.com/issue55/pages_K__34.pdf
-
- 6 replies
- 2.3k views
-
-
'தனிமை' [ஒரே தலைப்பில் இரண்டாம் கதை] தனிமை என்பது, 'நான் தனித்து இருக்கிறேன் என்ற உணர்வு' என்று சொல்லலாம், உங்கள் பல சமூக தொடர்புகளின் அளவை இது சார்ந்தது அல்ல. நீங்க அந்த தொடர்புகளில் இருந்தாலும் மனது அதில் முழுதாக எடுபடாமல் தனித்து இருக்கலாம் என்பதே இதன் அர்த்தம்! நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, இலங்கை கடற்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில் எந்திரவியல் விரிவுரையாளராக பதவி பெற்று கொழும்பில் கடமையாற்ற தொடங்கிய நேரம் இது. நான் கொழும்பில் வேலை செய்யும் அண்ணாவின் குடும்பத்துடன் தங்கி இருந்து, வேலைக்கு போகத் தொடங்கினேன். கொழும்பு எனக்கு புதிது என்றாலும், அண்ணாவின் குடும்பம் …
-
- 0 replies
- 429 views
-
-
(பள்ளிநாட்களில் துணைப்பாட நூலில் படித்த இந்தக் கதை மனதில் பதிந்துவிட்டது. என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.) 'தழும்புள்ள மனிதன் ' சாமர்செட் மாம் தமிழில்: வெ.சந்திரமோகன் பெரிய பிறைப் போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடிய பெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் செய்தது. கடுமையான காயம் ஒன்று தான் இந்தத் தழும்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு பட்டாக் கத்தி அல்லது செல்லின் ஒரு துண்டாக இருக்கக்கூடும். வட்டவடிவமான, பெருத்த, நல்ல சிரிப்புடன் கூடிய முகத்துக்கு அது பொருத்தமாயில்லை. சிறிய, கவனம் ஈர்க்காத தன்மைகளுடன் அவன் இருந்தான். கபடமில்லாத முகக் குறிப்பு. அவனது பெருத்த உடலுக்கு அந்த முகம் பொருந்தாமல் தோன்றியது. நல்ல வலு…
-
- 0 replies
- 965 views
-
-
'பிரேம' அத்தியாயங்கள் ஓய்வதில்லை! அகிலன் செல்போனில் அழைத்தான். ஹலோ என்றதும், ஒரு குட் நியூஸ் என்று குழந்தைக்கே உரிய குதூகலத்தோடு சொன்னான். ''எதிர்பார்த்த மாதிரி வேலை கிடைச்சிடுச்சா அகிலா?'' ''இல்லை அண்ணாத்த. வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. எனக்கும், திவ்யாவுக்கும் ஒரு வருஷத்துல கல்யாணம்.'' ''சூப்பர் டா. அஞ்சு வருஷம் போராடி ஜெயிச்சுட்டே.'' ''திவ்யா ஹேப்பி அண்ணாத்த. 'சீக்கிரம் வேலை தேடு. ஆறு மாசத்துல நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்'னு சொல்றா. ரெண்டு மூணு இடத்துல வேலைக்கு சொல்லியிருக்கேன். எப்படியும் இந்த மாசமே சேர்ந்திடுவேன்.'' ''சந்தோஷமா இருக்குடா. ட்ரீட் கிடையாதா?'' …
-
- 0 replies
- 996 views
-
-
அவனுக்குக் குழப்பமா இருந்தது, ஒருவகை பயம் கலந்த ,எண்ணங்கள் மாறி மாறி வந்தன.கிராமத்தின் புதிய சூழல், முதல் முதலாக தனியாக ஒரு வீட்டுக்குள், எவரது கண்காணிக்கும் பார்வைகள் அற்ற நிலையில்.அவனுக்கு, எழும் உணர்வுகளை அதன் சூழலை அலசுவது அதன் பின்னரே நிதானமாக செயற்படுவது என வயசுக்கு மீறிய சிந்தனைகள் அந்த விடலைப் பருவத்திலும்.விடலைப் பருவத்திற்கே உரிய உணர்வுகள் எழுந்த போதெல்லாம் அதே அலசல் அதே நிதானம்.ஆனால் இப்போ அந்த நிதானத்தை ,இவள் விழுங்கி விடுவாளோ என்று மனசு படபடத்தது. அவள் பக்கத்து வளவுக்குள் இருந்து பனை ஓலையினால் வேயப்பட்ட கதியால் வேலிக்குள்ளால் மறைந்திருந்து இவன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விடுவது.ஒவ்வோரு நாள் காலையிலும் இவன் பக்கத்து வீட்டு அண்ணையிடம் இருந்து அன்றைய ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
சின்ன வயது ஞாபகங்கள் என்பது நம் எல்லோருக்கும் ரசனையானது. அந்த வரிசையில் தன் சிறு வயது ஞாபகங்களை, நமக்காக தவழ விடுகிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். '' 1955- ஆண்டு வாக்கில் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு நாஞ்சில் நாடு இணைந்து இருந்தது. மொழிவாரியாக ராஜ்ஜியங்கள் பிரிக்கப்படாத காலம். என் அம்மா சரஸ்வதிக்கு 18-வயதில் திருமணமாகி 19-வயதில் நான் பிறந்ததாகச் சொல்வார்கள். சொந்த ஊர், ஆர்யநாடுக்கு அருகிலுள்ள குன்றின் மேல் இருக்கும் நெடுங்காடு. எனக்கு ஏழுவயசு இருக்கும்போது அம்மா, தன் ஊருக்கு அழைத்துப் போனார்கள். அழகிய வயல்வெளி, அடர்ந்த மரங்கள், தென்னை, வாழை, மா, பலா தோப்புகள் கொண்ட நிலம், நூறு அடியில் அழகிய சிறு குட்டை என சாலை வசதிகள் இல்லாத கிராமம். வீடுகள் கூட நூறு அடிக்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
" ஹலோ, ஆர் யூ ரமிழ்?" பின்னால இருந்து வந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தன். அதே தமிழ் ஆண்டி பொட்டு வைச்சு, நம்ம ஊரில் தலை பின்னுவது போல பின்னிக்கட்டி, கையில 2 உடுப்போட நிண்டா. " நே" எண்டு அவா இங்கிலீசில கேட்ட கேள்விக்கு டச்சில "இல்லை" எண்டு பொருத்தமில்லாம பதிலை சொல்லிட்டு சட்டெண்டு முன்னுக்கு திரும்பிட்டன். பொய் சொல்லேக்கையும் பொருத்தமா சொல்லணும் எண்டுவாங்க. அது பேசி வைச்ச பொய் அதைதான் பொருத்தமா சொல்லணும். இது திடீரெண்டு நினைச்சு வைக்காம சொன்ன பொய். சரி பொய் பொய் தானே இதில பிறகென்ன நியாயப்படுத்த வேண்டி இருக்கு எண்டு நெச்சன். திரும்பியே பாக்காமல் எனது நேரம் வர காசை குடுத்து உடுப்பையும் எடுத்துக்கொண்டு நண்பிகளோட அந்த ஆண்டி பக்கமே பாக்காம ஓடி வந்தன். என்னவோ மனசுக்க நெர…
-
- 37 replies
- 6.3k views
-
-
‘அவனை அழிக்கிறேன் பார்’ சூழுரைத்தல், சபதமேற்றல் எல்லோருக்கும் ஏற்புடையதல்ல; நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவேன் எனச் சபதமேற்பவர்களை விட, “அவனை அழிக்கிறேன் பார்” என எதிரிகளை அழிக்கச் செய்ய, சபதம் எடுப்போர் தொகைதான் அதிகம். உலகம் அழுக்காகி வருகின்றமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இன்று உலக நாடுகள்கூட, மக்களை அழித்து, உரிமைகளை அடக்கும் செய்யும் வண்ணம், வெளிப்படையாக சூழுரைகளும் மறைமுகமாகச் செய்யும் கழுத்துறுப்புகளையும் மக்கள் பார்த்து, இரசிக்கின்றார்கள். வலு இழந்த மக்கள் போராட்டம் செய்ய, எந்த அரசுமே அனுமதிப்பதில்லை. நீதியைக் காப்பாற்று வதைவிட, தங்கள் ஆணவ அதிகாரத்துக்கு வலுச் சேர்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். போலியான ஒரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
‘என் பெயர் அகதி!’ - வலிகளைச் சுமந்தலையும் தமிழ்நதியின் சிறுகதை #WorldRefugeeDay வி.எஸ்.சரவணன் ஜூன் 20: உலக அகதிகள் நாள். ஆப்பிரிக்காவில் ஜூன் 20 அன்று அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, அந்த நாளையே ஐ.நா அவை உலக அகதிகள் தினமாக அறிவித்தது. தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு ஒருவர் வலுகட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு ஒப்பான துயர் வேறில்லை. அதுவும் போரால் தம் உறவுகளைப் பிரிந்து, கிடைக்கும் இடத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டிய சூழல் கொடுமையானது. ஆனால், உலகின் பல்லாயிரக்கணக்கில் மனிதர்கள் இந்தக் கொடுமையை அனுபவித்து வருகின்றனர். அந்த வலியை மற்றவர்களால் உணர்ந்துகொள்ள வைக்கச் செய்பவை கலைப் படைப்புக…
-
- 0 replies
- 1.4k views
-
-
‘சாத்தானின் மைந்தன்’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்) 29.04.1945 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும் பயப்படுத்திவிட்டது. வெளியில் ஓடியாடித்திரிந்த அந்த அல்ஸேஸியன் நாய் கடந்த சில மாதங்களாக இந்த பங்கரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இயற்கை வெளிச்சத்தைக் கண்டே எத்தனையோ மாதங்களாகி விட்டன. பங்கரின் குறுகிய பாதைகளில் அங்குமிங்குமாகத்தெரியும் சின்ன வெளிச்சங்கள் ஏதோ ஒரு குகையில் இருட்டில் அகப்பட்ட உணர்வையே கொடுப்பதால் அந்த அல்ஸேஸியன் நாய் என்னேரமும் ஏதோ ஒரு பயத்தில் மனமுடைந்து போயிருக்கிறது. வெளிச்சமற்ற சவப்பெட்டியில் வாழ்வது போலிருப்பதாக அந்த நாய் உணர்கிறது. வெள…
-
- 2 replies
- 1.4k views
-