கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
அவள் என் பார்வையில் பட்டிருக்ககூடாது. ச்சே. ஏன் அவள் என் பார்வையில் விழுந்தாள் என்பது இன்றுமட்டும் புதிராகவே உள்ளது. அவளை காண்பதற்கு முன்னர் அவளை விட அழகான எத்தனையோ பெண்களை கண்டிருக்கிறேன். ஏன் கதைத்தும் இருக்கிறேன். இருந்தாலும் அவள் என்னை என்னவோ செய்தாள். திரும்ப திரும்ப பார்க்க வைத்தாள். காயத்திரி.. பெயரை போலவே அழகானவள். வட்ட முகம் எடுப்பான உயரம். சுடிதாரில் மிக அழகாக தெரிந்தாள். முதல் சந்திப்பே பல்கலைகல்லூரியில், எனக்கு கனிஷ்ட மாணவியாக... பகிடிவதையில், கம்பன் சொன்ன ராவணன் நிராயுதபாணியாக நின்றதை போல, எனக்கு முன்னால் நிலத்தை பெருவிரலால் கீறியபடி, தமிழ் பெண்களுக்கே உரித்தான நாணத்துடன்... நான் பாதி குடித்துவிட்டு கொடுத்த அந்த தேநீரை பருகவேண்டும் இத…
-
- 9 replies
- 1.5k views
-
-
நண்பர்களே, வருடங்கள் பல தாண்டி வீடு வருதல் என்பது ஒரு துன்பகரமான அனுபவம். பிறந்த வீடு மட்டுமே வீடு என எண்ணும் ஒரு உணர்வு என்னுடன் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது. பல வீடுகளைக் கடந்து போக வாழ்க்கை எம்மைத் தண்டிக்கிறது என்பது உண்மைதான். இருப்பினும் இளமையும், பெற்றார் அரவணைப்பும் சகோதரர்துவ வாழ்க்கையும் கனவுகளும் எனச் செறிந்த குழந்தை பருவம் எமது வாழ்வின் தலைநகரம். நாம் எங்கு சென்ற போதும் எம்மைத் தொடருவதும் அதுதான். "நான் பயணிப்பதற்கு ஏறி அமர்ந்த எல்லாத் தொடரூந்து வண்டியுடனுடம் சமாந்தரமாக யாழ்தேவியும் ஓடிக்கொண்டிருக்கிறது" என ஒரு கவிதையில் நான் எழுதியிருக்கிறேன். இவ்வகையில் மிகப்பிந்திய காலங்கடந்து நான் எனது நாட்டுக்கும் வீட்டுக்கும் செல்ல நேர்ந்த அனுபவத்தை தங்களு…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரு பிச்சைக்காரன் ரயில் நிலையத்தின் முன்நின்று கொண்டிருந்தான். அவனை வழக்கமாக அங்கே பார்க்கிற ஒருவர் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவ நினைத்தார். இவன் வாழ்க்கையில் அதிகபட்சம் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான் பிச்சையாகப் பெற்றிருப்பான். நாம் 100 ரூபாய் கொடுப்போம். இவன் ஏதாவது தொழில் செய்து பிச்சை எடுப்பதில் இருந்து விடுபட உதவியாய் இருக்கும் என்று நினைத்து அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தார். கொடுத்துவிட்டு கேட்டார். ""ஒரு சின்ன சந்தேகம். இந்த 100 ரூபாயை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?'' கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன் சொன்னானாம். ""என் பிச்சைப் பாத்திரம் பழசாய்ப் போச்சு. புதிய பிச்சைப் பாத்திரம் வாங்குவேன்'' என்று. இதுதான் அவனுடைய பதில். …
-
- 1 reply
- 960 views
-
-
[size=3]ஒரு மிகச்சிறந்த சிறுகதை எழுதுவது எப்படி என்பதற்கு இக்கதை மிகச்சிறந்த உதாரணம்.[/size] எஸ்தர் - வண்ண நிலவன் [size=3] [size=5]முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இட…
-
- 1 reply
- 733 views
-
-
நஞ்சு - ஜெயமோகன் நேரில் சந்தித்தால் அக்கணமே கையில் கிடைத்த பொருளால் அடித்து அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று நினைத்திருக்கும் ஒரு பெண். அவளை ஓடும் பஸ்ஸில் இருந்து எதிரே செல்லும் பஸ்ஸில் பார்த்தேன். ஊட்டி சென்றுகொண்டிருந்தேன். இறங்கிய பஸ் ஒன்று வளைந்து ஒதுங்கி என் பஸ்ஸுக்கு இடம் கொடுத்தது. அந்த பஸ் என்னை கடந்துசென்றபோது ஒரு கணம் மிக அருகே அவள் வந்து அப்பால் சென்றாள். என் மனம் படபடத்தது. செத்தவன்போல கைதளர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டேன். பஸ் மேலேறிச் சென்றது. என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ எண்ணங்களுடன் இருந்தேன். பின்னர் எண்ணியபோது அந்த எண்ணங்களெல்லாமே விசித்திரமாக இருந்தன. நான் எழுந்து சன்னல்வழியாக வெளியேறி அந்த பஸ்ஸை துரத்திக்கொண்டு பறந்து, ஆம் பறந்து, அதை…
-
- 1 reply
- 750 views
-
-
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!' - யாரோ ஒருவன். அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கி…
-
- 5 replies
- 3.2k views
-
-
பென்னாம் பெரிய டிரக் வண்டி, மெதுவாக வந்து ‘Cul-de-sac’இல் நின்றது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் ‘பெரிசை’க் கணம் பண்ணும் பவ்வியத்தில் நடைபாதையில் ஏறிக்கொண்டார்கள். ஆஸ்திரேய குடியிருப்புக்களின் உள்வீதிகள் சில ‘Cul-de-sac’ எனப்படும் முட்டுச் சந்தாக முடிவடையும். அது அரிசி மூட்டையொன்றின் அடிப்பாகம் போல வளைந்தும் பெருத்தும் காணப்படுவதால் இப்பெயர் வந்திருக்கலாம். இத்தகைய வீதிகளின் அந்தலையில் வாகன நடமாட்டம் குறைவு. இதனால் அப்பகுதியில் வாழும் சிறார்கள், அதனை விளையாட்டு மைதான மாகப் பாவிப்பார்கள். சாரதியின் இருக்கைப் பகுதிக்கும் பின் பெட்டிக்குமிடையில் செங்குத்தாக, வானை எட்டிப்பார்த்து நிமிர்ந்து நிற்கும் இரும்புக் குழாய், புகையை வளையங்களாகக் கக்கிக் கொண்டிருந்தது…
-
- 2 replies
- 1.2k views
-
-
மொழி உணர்ச்சி இல்லாதவனுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்பட செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். நன்றி: கொளத்தூர் மணி - பெரியாரும் தனித் தமிழ்நாடும்
-
- 1 reply
- 1.7k views
-
-
கெளரி -இளங்கோ 'ஒரு துரோகிக்கு பாடங் கற்பிக்கும்போது நாங்கள் ஓராயிரம் துரோகிகள் வளர்வதைத் தடுக்கின்றோம்' என்ற குரல் எல்லாவற்றையும் கலைத்துப் போனது. அதுவரை, சாணி மெழுகிய குசினிக்குள் அம்மா கம்பிக்குழாயால் அடுப்பை ஊதிக்கொண்டிருகக, இவன் கள்ளிச்செடிகளுக்குள் நுழைந்து கோழிகளைத் துரத்திக்கொண்டிருந்தான். அடர்த்தியாய் வளர்ந்திருந்த எக்ஸோராவில் சிறு குருவிகள் வந்து அமர்ந்திருக்க, முற்றத்து மல்லிகைப் பந்தலில் மல்லிகை வாசமும் வந்துகொண்டிருந்தது. திடீரென்று சிவப்பும் வெள்ளையுமான Half Saree அணிந்த பெண், 'ஒரு துரோகிக்கு பாடங்கற்பித்தல்....' என்கின்ற வாக்கியத்தை நடுக்கத்துடன் சொன்ன கணத்தில்தான் அதுவரை இவன் கண்டுகொண்டிருந்த அழகிய ஊர்க்கனவு சட்டென மறைந்து போனது. அன்று பாடசாலை …
-
- 1 reply
- 658 views
-
-
ஒரு நிமிடக் கதை தங்கக் கோடாலி! தங்கக் கோடாலி! ஏ ழை விறகுவெட்டி ஒருவன் காட்டுக்குச் சென்று, ஒரு மரத்தை வெட்டிக்கொண்டு இருந்தபோது, அவன் கையிலிருந்த கோடாலி கை நழுவிப் பக்கத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது. ‘‘கடவுளே! இனி நான் பிழைப்புக்கு என்ன செய்வேன்? என் கோடாலி எனக்குத் திரும்பக் கிடைக்கும்படி செய் யுங்கள்’’ என்று கண்ணீர் மல்க வேண்டினான். ஒரு தேவதை அவன் முன் தோன்றி, ‘‘கவலைப் படாதே! நான் எடுத்துத் தருகிறேன்’’ என்று அந்தக் கிணற்றில் மூழ்கி, ஒரு தங்கக் கோடாலியுடன் வெளியே வந்து, அவனிடம் நீ…
-
- 3 replies
- 2.8k views
-
-
செயல்! அந்தக் காட்சி கீதாவின் மனசை உருக்கியது. சின்னஞ்சிறு பிஞ்சு, ஒரு வேளை உணவுக்காக எப்படியெல்லாம் தன் உடலை வில்லைப் போல் வளைக் கிறது. கணவன் விஷாலைப் பார்த்தாள். அவள் பார்வையைப் புரிந்துகொண்டு பக்கத்தில் இருந்த கடையில் பத்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் வாங்கினான். மனம் முழுதும் சந்தோஷமாக இருந்தது கீதாவுக்கு. திருமணமான ஆறு நாட்களுக்குள்ளே நம்மைப் புரிந்துகொண்டானே. ஆனால், அடுத்து அவன் செய்த செயல் அருவருப் பாக இருந்தது. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, இரண்டு பிஸ்கட்டுகளைத் தான் எடுத்துக்கொண்டு, பிரித்த பாக்கெட்டை அந்தச் சிறுமியிடம் கொடுக்கும்படி கீதாவிடம் நீட்டினான். …
-
- 0 replies
- 1.1k views
-
-
தாயகத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றது. நான் தாயகத்தை விட்டு வெளியேறும் போது அங்கு இருந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களில் பலர் உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் சிதறிப் போய் இருக்கிறார்கள். சிலர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாது. சிலர் உயிருடன் இல்லை. இப்பொழுது பலர் தாயகத்துக்கு சென்று வருகிறார்கள். ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்கள் ஒரு செவ்வியில் நல்லூர் திருவிழாவுக்கு ஐம்பதினாயிரம் வெளினாட்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். தாயகத்துக்கு தற்பொழுது செல்பவர்களில் சிலருக்கு அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். பல வருடங்களா…
-
- 65 replies
- 12.8k views
- 1 follower
-
-
அமைதியாக ஒரு நாள்! ம னசு அபூர்வமாக ஒரு தினம் அமைதியாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அன்றைய தினம் மனைவி வீட்டில்தான் இருந்தாள். வீடும் பழைய வீடுதான். சமையலும் மாமூல் சமையல்தான். டெலிபோனிலோ தபாலிலோ வாய்வழிச் செய்தியாகவோ செய்தித்தாளிலோ என் சம்பந்தப்பட்ட எந்த மகிழ்ச்சித் தகவலும் கிடையாது. பின், எதனால் அந்த மகிழ்ச்சி என்று தெரியவில்லை. ஊமைக்காயம் என்பது போல் ஊமை மகிழ்ச்சி. இத்தனைக்கும் ஞாயிற்றுக்கிழமையோ வேறு லீவு நாளோ இல்…
-
- 0 replies
- 712 views
-
-
சித்தப்பா சித்தப்பா என் விடுமுறைப் பயணம் முடிந்து என் வேலைப் பளுக்களும் சற்று ஓய்ந்து மீண்டும் உங்களுடன்......... சென்ற ஆனி மாத இறுதியில் ஒரு வெளிநாட்டுப் பயணம் போய் இருந்தேன். நான் சந்தித்தத் சிறு சம்பவம். எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அந்த நாளும் வந்தது . நான் கணவர் இரு மகன் களுடன் சென்று இருந்தேன் சற்று ஆர்வமாக அடுத்து என்ன என்ற ஆவலோடு விமானத்தினுள் அதற்கான் கடமைகளை முடித்து கொண்டு எங்கள் ஆசன பதிவு தேடி அமாந்தோம். சில நிமிடங்க ளில் விமானம் நிறைந்து புறப்பட ஆரம்பம் . எல்லோரும் மெளனமாய் கடவுளை நினத்துக் கொண்டு இருந்ததனர் .அருகில் உள்ள சாளரத்தினூடே எட்டிப்பார்த்தேன் கிண் என்ற காது இரைச்சலுடன் மீது மெதுவாக விமானம் கிளம்பியது. சிலர் வாசிப்பதும்…
-
- 11 replies
- 3.7k views
-
-
ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது. எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது. சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் க…
-
- 3 replies
- 5.2k views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்..(உறக்கத்தை தொலைத்த காதல்)..ஜம்மு பேபியின் "மெளனித்த சந்திப்பு"..(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது)..கவுஸ்புல
-
- 53 replies
- 6.3k views
- 1 follower
-
-
முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்தத் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும…
-
- 4 replies
- 1.1k views
-
-
ராணி மஹால் - ஷோபாசக்தி அப்போது நேரம் அதிகாலை அய்ந்து மணியாகிவிட்டது. வசந்தகாலம் பிறந்திருந்தது என்றாலும், ‘செய்ன்’ நதியிலிருந்து எழுந்துவந்த ஈரலிப்பான காற்றில் குளிரிருந்தது. நதிக்கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் அன்னராணி நடந்துவந்தார். கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல், அவர் இந்தப் பாதையில் நடக்கிறார். அன்னராணி ஒற்றையடிப் பாதையின் முடிவிலிருந்த சிறிய தார் வீதியில் ஏறி, உயரமான முன் ‘கேட்’டைத் திறந்துகொண்டு சிறிய புல்வெளியைத் தாண்டி நடந்தார். புல்வெளியில் அலங்கார மின் விளக்குகள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அவரின் எதிரே கம்பீரமாக ராணி மஹால் நின்றிருந்தது. ‘மந்த் லா ஜொலி’ என்ற இந்தச் சிற்றூர் புகழான வரலாற்றுப் பின்னணிகொண்டது. பிரஞ்சு அரசன் இரண்டாம் பில…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு பொம்மி கேட்டைப் பிடித்துக்கொண்டு நின்றாள். உடையில் மிகக் குறைவாக மூன்று நான்கு சிறிய மற்றும் சற்றே பெரிய கிழிசல்கள் மிக நேர்த்தியாகப் 'பின்' போட்டு மூடப்பட்டிருந்தது . எண்ணெய் சீப்பைக் காணாத முடி, சிக்குப்பிடித்து உருட்டையாக மேலே தூக்கி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தக் கோலத்தில் கூட அழகான உருண்டைக் கண்கள் பளிச்சிட்டு ஏதோ ஒரு வசீகரத்தைச் சொன்னது. "பாப்பா....யாரு ரத்தினத்தோடு பொண்ணா? வா, கிட்ட வந்து குந்து....தாத்தா புல் புடிங்கித்தாரேன்...ஓரமா எடுத்துப் போடு...வா...." முண்டாசு கட்டிய தோட்டக்காரக் கிழவன் வேலைக்கு ஆள் தேடினான். …
-
- 1 reply
- 1k views
-
-
செவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை ஏக்நாத் - ஓவியங்கள்: ரமணன் மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில். சோறு தண்ணீர் சரியாக இறங்கவில்லை. எதையோ பறிகொடுத்தவர்போல அல்லாடுகிறார், அங்கும் இங்கும். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போதுகூட பாப்பான்குளத்தில் தேடிவிட்டு வந்துகொண்டிருக்கிறார். களைப்போடு கவலையும் சேர்ந்துகொள்ள அவருக்கு அசதியாக இருக்கிறது. செவலையை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று துடிதுடிக்கிறது மனசு. `எங்க கெடந்து என்ன பாடுபடுதுன்னு தெரியலயே’ என்று நினைத்துக்கொண்டார். தூரத்…
-
- 1 reply
- 2.7k views
-
-
'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்..... அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர், ’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்? உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!! மிருதுளன் மீண்டும் அபையோர் வணக்கம் சொல்லி, காதல் எனும் தலைப்பில் பேச வந்திருப்பதாகத் தொடர்ந்தான். காதல், கேட்கும் போதே உணர்வுகளைக் கட்டிப் போடக் கூடிய சொல். பசிக்கும் …
-
- 1 reply
- 1.3k views
-
-
"அன்பின் வெகுமதி" இலங்கை திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர் பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட, பண்டைய நூல்கள் சிலவற்றில் 'கோகண்ண' எனவும் [தீபவம்சம், மகாவம்சம்], திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சில தேவாரப் பாடல்களில் 'கோணமாமலை' ["குரைகட லோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"] எனவும் அழைக்கப்பட்ட இடம் ஆகும். இந்த அழகிய கடற்கரை நகரத்தில், அடர்ந்த நீல நிறமுடைய அலைகள் தங்கக் கடற் கரை மேல் நடனமாடியபோது, அதன் ஆழத்தைத் தழுவத் துணிந்தவன் போல், ஆனால் பணிவான மீனவனாக ரவி, தன் சிறிய படகில் இருந்தபடி கடல் அன்னையைத் இரசித்துக்கொண்டு, புத்தி கூர்மையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற, சூரியன் தினம் முத்தமிட்ட முறுக்கேறிய தோல் மற்றும் நீலக்கல் …
-
- 0 replies
- 336 views
-
-
யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும் பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல அமைப்புகளும் நாடுகளும் இணைந்து தமிழ் இனத்தை அழிப்பதில் கூட்டுச் சேர்ந்து மிகப்பெரிய அதிகார சக…
-
- 1 reply
- 1.2k views
-
-
போராளிக் கணவனோடு மகளையும் பிரிந்த அவலம் **பிரபாஅன்பு** அக்கா என்ன சொன்னாலும் ஓம் என்று கேட்டு மறுப்பு சொல்லாது கேட்டுக்கொண்டிருப்பவள்தான் நான்,போராட்டமும் அழிஞ்சு போச்சுது கட்டிய கணவனும் இல்லை. சிறு பிள்ளைகளோடு நான் கஸ்ரப்படுகிறேன் என்றுதான் அக்கா இப்படியொரு முடிவெடுத்தா என்பது புரிகிறது.ஆனால் பெண் பிள்ளைகள் இருவரை வைச்சிருக்கிற நான் இப்படிஒரு முடிவெடுத்தது சரியா..? பிழையா என்பதற்கு அப்பால் என் கணவனோடு நான்வாழ்ந்த நினைவுகள் இன்னும் ஈரம் உலராமலே பசுந்தளிராக இருக்கும்போது எப்படி இன்னொரு வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியும்..? உடலும் உள்ளமும் ஒருவனுக்கு என்று மட்டும் நினைத்து வாழ்பவள்தான் நான்,அதுவும் போராடப்போய் மண்ணின் விடிவிற்காக இலட்சியத்தோடு இறுத…
-
- 2 replies
- 1.5k views
-
-