கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
கொடை வீட்டில் ஒரு வாரமாகவே அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டது ரகுதான். "" பாருங்கப்பா இந்தம்மாவை, புரியவே மாட்டேங்குது. நான் எதைச் செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிச்சி திட்றாங்க'' எனக் குற்றப்பத்திரிகை வாசித்தாள் திவ்யா. ""அம்மாதானே சொல்றாங்க... விடும்மா. நான் பேசிக்கிறேன்'' என்றான். ஆனால், மனைவியிடம் பேசி எளிதாகச் சம்மதிக்க வைக்க முடியாது என்பது அவனுக்குத்தான் தெரியும். ""நீங்க ஒவ்வொரு விஷயத்திலும் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்றீங்க, ரொம்ப மாறீட்டா. சரியில்லை. அவ செய்ய நினைக்கிறதை சாதிச்சிடுறா, அதுக்…
-
- 0 replies
- 901 views
-
-
-
- 0 replies
- 900 views
-
-
வாசனை – அனோஜன் பாலகிருஷ்ணன் இத்தனை காலம் கடந்து அவனை சந்திப்பேன் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் மட்டுமே எனக்கு மங்கலாக நினைவில் இருந்தது. ஜெயந்தனை கண்டவுடன் புதையுண்டிருந்த அவனின் முகம் ஞாபக அடுக்களில் இருந்து ஓர் அலைபோல் எழுந்து வந்து என் காலடியில் மோதி பொடிப்பொடியாக உதிர்ந்தது. அவன் தன் மனைவியை விட்டுவிட்டு என்னை மட்டும் தனியாக அழைப்பது மெலிதான சஞ்சலத்தைத் தந்தது. அவன் மனைவி தன் உறவினர் ஒருவரைப் பார்க்கப்போய்விட்டதாக நான் கேட்காமலே தொலைபேசியில் சொன்னான். ஹரிக்குச் சொல்லலாமா என்று யோசிக்கச் சங்கடமாகவிருந்தது. ஜெயந்தனைக் காதலித்து கடைசியில் ஹரியை கல்யாணம் செய்துகொண்டபோதும் ஜெயந்தனைப் பற்றி நான் ஹரியிடம் வாயே திறந்தது இல்லை. ஜெயந்தனை சந்தித்தது…
-
- 8 replies
- 1.3k views
-
-
எல்லாரும் கதை எழுதீனம் (ஜம்மு கூட எழுதுற மாதிரி தெறியுது) சில பேர் கொப்பி பேஸ்ட் பண்ணிணம்..............நானும் என்ட பங்கிற்கு ஒன்றை எழுதி பார்தேன்,தொடர்கதை ஒன்றும் இல்லை ஒருநிமிச கதை,இந்த கதையையும் ஒருக்கா வாசித்து பாருங்கோ..நல்லம் என்று சொன்னீங்கள் என்றா தொடர்ந்து அறுப்பன்(எழுதுவன்). கவிதாவுக்கு நம்ப முடியவில்லை பாஸ்கரன் இப்படி செய்வான் என்று.பாஸ்கரன் கவிதாவின் அண்ணணுடன் ஒன்றாக படித்தவன்,ஒரு நாள் பாஸ்கரனும் சுதனும் உரையாடி கொண்டிருந்தது கவிதாவின் காதில் விழுந்தது.போராட்டங்கள், ஆயுதங்கள் மற்று இயக்கங்களை வளர்ப்பது எப்படி மற்றும் சோசலிசம், கம்னியூசம் என்று எல்லாம் கதைப்பதை கேட்ட கவிதா மெல்லமாக சென்று தந்தையிடம் சொல்லிவிட்டாள். தந்தையும் சுதனிடம் விசாரித்த போது சுதனு…
-
- 20 replies
- 3.6k views
-
-
கொஞ்சம் இறுக்கி போடடா ..உரக்க கத்தினான் என்னை சைக்கிளில் வைத்து உழக்கியவன் .இயலுமட்டும் எதிர் காற்றுக்கு போராடி என்னடா இவன் போடுற டபிள் பெடல் அவ்வளவு காணதே என்று சலித்து இயலாப்பாட்டில் கூவிய குரல் அது..எங்கோ யோசித்து கொண்டிருந்தபடியால் என் உதைப்பின் வேகம் குறைந்திருக்க வேண்டும்.இந்த கணத்தை விட்டு ஏதோ ஒரு காலத்தில் யோசிப்பதில் ஒரு சுகம்.அது மட்டுமே எங்களுக்கு இப்ப வாழும் வாழ்க்கையில் இருக்கு .என்ன நான் சுகம் காண நினைத்தால் அவன் வேதனை அனுபவிக்க இருக்கு அவ்வளவு தான். டே உழக்கடா ஊண்டி என மீண்டும் சத்தம் போட்டான், ,அவனிலும் பிழையில்லை ஒரு பத்து நிமிசம் பிந்தி போனாலும் அந்த எருமை தலையன் ஒரு மணித்தியால காசை வெட்டி போடுவான் .அதுவும் நாலு கில்டன் இலங்கை காசுக்கு பத்தினொ…
-
- 14 replies
- 1.9k views
-
-
நல்ல வெயில் எறித்த சனிக்கிழமை காலை நேரம். லிஃப்டில் இருந்து இறங்கிக் கீழே வர, வழக்கம்போல் அந்த நிலமட்டத்தில் இருந்த சீமெந்துக் கதிரை மேசைகளில் சீனக் கிழவர்கள் கடதாசி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு மலேக் கிழவர்கள் பிளாஸ்ரிக் பையில் இருந்த 'ரெக் எவே' தேனீரை ஸ்ரோ (straw) வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். இப்பதான் அரை றாத்தல் பாணை நேற்று இரவு தின்றும் மிஞ்சின கோழிக்கறியுடன் கலந்து அடித்தது, என்றாலும் நிறையற் ரின் பாலும் கடும் தேயிலைச் சாயமும் கலந்து 75 சென்ற் இற்கு விற்கும் பிளாஸ்ரிக் பை தேனீரைக் குடிக்கவேணும்போல் இருந்தது. இப்பதான் அவனைப் பார்த்தேன். இந்திய அல்லது இலங்கையனாக இருக்கவேண்டும் எனக்கு மிகக் கிட்ட நின்றான். என்னை விடச் சற்று உயரம். கொஞ்சம் மெலிந்த உடல…
-
- 8 replies
- 1.8k views
-
-
தீவாளி ஒரு பேப்பரிற்காக தீபாவளியை தீவாளி என்றுதான் பேச்சு வழக்கில் ஊரில் சொல்லுவோம்.வருசா வருசம் தீபாவளி வரும்போதெல்லாம் இப்பொழுது தீபாவளி தமிழருடையதா??தீபாவளியை கொண்டாடலாமா? கூடாதா??என்று சர்ச்சைகளும் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பிக்கும். தீபாவளி ஏன் கொண்டாட வேணும் எண்டு எப்பவோ யாரோ சொல்லிவிட்டு போன நரகாசுரன் கதையிலை கொலைசெய்யப்பட்ட நரகாசுரனுக்கு வாழ்த்து சொல்லுற அளவுக்கு இப்ப நிலைமை வந்திட்டிது. ஏன் எதுக்கு எண்டு சரியான விபரம் தெரியாமலேயோ தமிழர் கொண்டாடுற பல பெருநாளிலை இதுவும் ஒண்டு. அதையெல்லாம் ஒரு கரையிலை வைச்சிட்டு ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். தீபாவளியை பலபேர் பல மாதிரி கெ…
-
- 20 replies
- 4.6k views
-
-
படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந…
-
- 0 replies
- 444 views
-
-
மதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி எம்.டி.முத்துக்குமாரசாமி மாதவன் அந்தக் கண்ணாடியை மதுக்கூடத்தில் கொண்டு வந்து வைத்த நாளிலிருந்துதான் அங்கே வியாபாரம் செழிக்கத் தொடங்கியது என்பது ஹோட்டலில் ஒரு பரவலான நம்பிக்கை. மாதவன் அந்த ஆளுயரக்கண்ணாடியை பழம்பொருள்கள் அங்காடியிலிருந்து வாங்கிவந்திருந்தான். தேக்கு மர ஃபிரேமுக்கு வார்னீஷ் அடித்தவுடன் அதற்கு ஒரு புதுப் பொலிவு வந்து விட்டது. ஆங்காங்கே ரசம் போய் சிறு சிறு வெள்ளைப்புள்ளிகள் கண்ணாடியெங்கும் விரவியிருந்ததை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நீங்கள் அந்த ஆளுயரக் கண்ணாடியில் உங்களைப்பார்க்கும்போது ரசம் போன புள்ளிகள் வேறொரு கோலத்தினை உங்கள் மேல் வரைந்தன. கோலத்தினை பார்ப்பவர்கள் தங்களைப் பார்க்க இயலுவதில்லை; தங்களைப் …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒட்டகத்தைத் தேடி நேரம் 15.20 பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. 15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான். எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால், ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது. குட்டிபோட்ட பு}னைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ் ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப் பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன். நேரம் 15.27 கொஞ்சம் எட்டி நடந்தால் எப்படியும் நேரத்திற்குப் போடுவன். ஒட்டகத்துக்கு முதல் போட்டனென்றால் நல்லது, இல்லையென்றால் அறுத்தே ஆளைக் கொண்டுபோடும் பாவி. நடை மெல்ல ஓட்டமாக மாறியது. நேரம் 15.33 மூச்சிரைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தன் ஆளைக்காணவில்லை. மக்டொனால்ஸ் வாச…
-
- 3 replies
- 1.2k views
-
-
வரட்டுச்சித்தாந்த வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலும்! இதற்கு சபா நாவலன் ஒரு குறியீடு!…. கால் வைத்து நிற்பதற்கு கடுகு நிலம் கூட இல்லை. உலகப்புரட்சி பற்றி கனவு காண்கிறார்கள் வரட்டுச்சித்தாந்த வாதிகள். ஆளுக்கொரு கணணியும் இணையத்தளமும் இருந்தால் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு எதையும் எவரும் எழுதலாம். இது சுலபமான அரசியல். திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் கேள்வியைப்போல் பாட்டெழுதிப்புகழ் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். கேள்வி கேட்டு புகழ் வாங்க முயற்சிக்கும் புலவர்களும் இருக்கின்றார்கள். இதில் சபா நாவலன் போன்றவர்கள் எந்த ரகம் என்பதை யாரும் இனங்கண்டு கொள்ள முடியும். கடந்த சனியன்று ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் டான் தமிழலை வானொலியில் செவ்வி வழ…
-
- 9 replies
- 2.5k views
-
-
துணிச்சல் நாங்கள் நான்கு பேர்... மூர்த்தி, வாசு, ராஜேந்திரன் மற்றும் நான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். தினம் மாலை கடற்கரையில் சந்திப்போம். மூர்த்தி நான்கு நாட்களாக வரவில்லை. அவருடைய அண்ணன் மகன் மரணத்துக்குப் போயிருந்தவர் இன்றுதான் வந்தார்.‘‘ப்ச்... 35 வயசுதான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. உடம்பு சரியில்லைன்னு படுத்ததும் இல்லை. ஆனாலும் திடீர் ஹார்ட் அட்டாக். பாவம், மூணு பொட்டப் புள்ளைங்க, பொண்டாட்டி எல்லாரையும் அம்போனு விட்டுட்டுப் போயிட்டான்!’’ - அவர் சொன்னதும் சாவின் நிதர்சனம் எங்களுக்கும் உறைக்க, நிசப்தம் நிலவியது. நான் மௌனம் கலைத்து, ‘‘ஓகே... என்னுடைய எல்லா கடமைகளும் முடிஞ்சுடுச்சு. நான் ரெடியாயிட்டேன். எ…
-
- 2 replies
- 1.5k views
-
-
அலாரச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தேன். அசதியுடன் எழுந்து நேரத்தைப் பார்த்தேன். மணி ஐந்தரை என்றது கடிகாரம். எழும்ப மனமில்லை. எரிச்சலாய் உணர்ந்தேன். உலகமே இருட்டுப் போர்வைக்குள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. எப்படியும் எழும்பித்தானாக வேண்டும். வேறு வழியில்லை. மெதுவாக எழுந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைக்கு விழுந்தடித்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடத்தேவையில்லை. அண்ணாவுடன் வாகனத்தில் செல்லலாம். சற்றே நிம்மதியாக உணர்ந்தேன். அப்படியே பல் தேய்த்து முகம் கழுவி தயாரானபோதும், அண்ணா எழுந்திருக்கவில்லை. நேரம் போய்விட்டது. இனி அண்ணாவை எழுப்ப வேண்டியதுதான். ஏனோ தெரியவில்லை..!! வழமைக்கு மாறாக, இன்று அண்ணாவை எழுப்புவது அவ்வளவு சுலபமாயில்லை. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு …
-
- 15 replies
- 2.1k views
-
-
வேலைக்காரி – சிறுகதை அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது. `உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன் `கோகிலம்` என்றாள் `கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன். `இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன். `எந்த ஊர…
-
- 2 replies
- 15.8k views
-
-
இவன் - அகரமுதல்வன் ஓவியங்கள் : செந்தில் இவனுக்குச் சொந்தவூர் யாழ்ப்பாணம். இரண்டு காதுகளும் கேட்காது. இயக்கம் அடிச்சுத்தான் காது கேட்காமல் போனது. இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு நாட்டிலயிருந்து வெளியேறி சென்னையில இருந்திருக்கிறான். அடுத்த ரெண்டு வருஷம் கழிச்சு களவாய்க் கனடாவிற்குப் போய்த் திரும்ப ஒரு மாத லீவில இப்ப சென்னைக்கு வந்திருக்கிறான். இன்னும் பத்து நாளில கலியாணம். இது இவனுக்கு இரண்டாவது கலியாணம்தான். முதல் மனிசியும் பிள்ளையும் முள்ளிவாய்க்காலில செத்துப்போயிட்டினம். இந்தக் கதையை நான் முடித்துக்கொள்ள சரியாக ஏழரை நிமிடங்கள் ஆகும். கதை நிகழத் தொடங்கிற்று. பத்து நாள்களில் கலியாணப் பந்தலில் மாப்பிளை வேஷத்தோடு இருக்கப்போகிற இவன் சிறைச்சாலையில்தான் என…
-
- 1 reply
- 1.4k views
-
-
யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா? http://1.bp.blogspot.com/-hwxRhe7cuPY/UHsusAruoRI/AAAAAAAABDs/fcpPGEWU2bE/s320/Jesus.jpg என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில் நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன். மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும், நான் யார் யாரை எழுப்பி பர…
-
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
சுரேன் முற்றத்தில் இருந்து சட்டி பானைகளை கழுவிக் கொண்டிருந்;தான். அந்த சட்டி பானைகள் அழகை இழந்து போயிருந்தன. கறுத்து ஊத்தை பிடித்திருந்தது. தம்பி அந்தத் தாச்சிய எடுக்குக் கொண்டு வாடா கழுவுறதுக்கு... என்று தன் தம்பியை அழைத்துக் கொண்டிருந்தான் சுரேன். இதே முற்றத்தில் வசந்தாக்கா இருந்து கொண்டு சட்டி பானைகைள அழகாக கழுவும் காட்சிகள் என் கண்ணுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தன. கிழிந்த பாதிச் சரத்தைக் கட்டிக் கொண்டு குனித்திருந்தபடி கழுவிக் கொண்டிருந்தான். அவனின் தம்பி விதுசாந்தன் கூரையில்லாத வீட்டுக்குள் இருந்தான். வசந்தாக்காவின் சொந்த இடம் பழைய முறிகண்டி. றோசா அண்ணன் அவரை திருமணம் முடிந்த காலத்தில் சிறுவனாக இருந்த என்னை தன் சைக்கிளில் ஏற்றி பழைய முறிண்டிக்கு கூட்டிக் கொண்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
மீள் வருகை வெகுகாலம் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கமாவு மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகு… கண்ணுக்கெட்டாத் தொலைவில் பிரதான வீதியின் எல்லை. முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவனுக்குப் பின்னால் கோபத்தோடு எழுந்து வரும் புழுதி மேகம். அவன் தொலைவில் செல்லச் செல்ல புழுதி மண்டலமும் படிப்படியாக அடங்கிப் போனது என்றாலும், புகை போன்ற மென்மேகங்களால் வெற்று ஆகாயம் மூடப்பட்டிருந்தது. புழுதியைக் குறித்தோ, தான் பயணித்துக் கொண்டிருக்கும் பூமியைக் குறித்தோ எவ்வித உணர்வுமற்று அவன் முன்னே நடந்தான். பெருந்தெரு அவனுக்கெதிராக எழுந்து வருமொரு எதிரியைப் போன்றிருந்தது. முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் கடினமாக இருந்தது. பழக்கப்பட்ட எதையேனும் காணுவதைக…
-
- 1 reply
- 1.3k views
-
-
புரட்டாதி 30 எனது பிறந்தநாள். முதல் நாள் இரவு 10 மணியளவில் நானும் எனது இரண்டாவது மகனும் கடையைப்பூட்டிவிட்டு காரில் புறப்படுகின்றோம். அவர் தொலைபேசியில் குறும் செய்தி அனுப்பியபடி வருகின்றார். இடையில் அப்பா வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி என்னை இறக்கிவிடமுடியுமா என்று கேட்கின்றார். எதற்கு? அதுவும் இந்த நேரத்தில்?? இது நான். எனது நண்பர் ஒருவரை சந்திக்கணும் சில நிமிடங்கள் மட்டுமே. சரி கெதியாக வா என்ற படி பயணம் தொடர்கிறது. இடையில் யாரிடம் போறாய்? என்ற கேள்விக்கு தன்னுடன் படித்த பெண் வீட்டுக்கு என்று பெயரையும் சொல்கின்றார். அந்தப்பிள்ளை பற்றி முன்பும் கேள்விப்பட்டிருக்கின்றேன். வகுப்பில் எப்பொழுதும் முதலிடம். உயர் தரத்திலும் எல்லா பாடத்திலும் திறமைச்சித்தி பெற்றவர…
-
- 77 replies
- 6.6k views
-
-
விக்டர்ஹியூகோ சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன் | கனலி http://kanali.in/wp-content/uploads/2021/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B-1-1300x769.jpg “ரஷோந்தி மூசு” என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை நடத்திக் கொண்டிருப்பவர். நிமிர்ந்த உருவம். பழுப்பு நிறம். கல்லூரிக்கால குத்துச்சண்டை சாம்பியன். நடக்கும்போது ஒரு துள்ளல் எப்போதும் இருக்கும். சிரிக்கும்போது கண்களிலொன்று இறுக மூடியும், மற்றையது அரைவா…
-
- 2 replies
- 687 views
-
-
கடைசிக்கடிதமும் காயாத கண்ணீரும். அவன் இருக்கிறானா ? எங்கே….? வதைமுகாமிலா அல்லது வவுனியா முகாமிலா பத்தாயிரத்துக்கும் மேல் சரண்புகுந்த தோழ தோழியருள் அவனும் தப்பியிருக்கிறானா ? அக்கா அக்கா என அவன் ஸ்கைபியில் கூப்பிடும் குரலும் மறைந்து…ஸ்கைபியில் அவன் பெயர் இப்போது சிவப்பாகிக் கிடக்கிறது…. ஏதோ எனது வீட்டில் என்கூடப்பிறந்த ஓர் இரத்த உறவு போல அவன் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். தனக்குள்ளான துயரங்களை வெற்றிகளையென எல்லாவற்றையும் கடிதமெழுதி இளைப்பாறிக்கொள்ள “அன்பின் அக்கா” என்று ஆரம்பித்து அனைத்தையும் எழுதியனுப்புவான். எத்தனையோ தோழதோழியரின் எழுத்துக்கள் ஞாபகங்கள் போல இவனும் எனக்கு எழுதிய கடிதங்கள் பேசிய வார்த்தைகளென இவன் ஞாபகமாய் ஏராளம் நினைவுகள்…… யார…
-
- 4 replies
- 2.5k views
-
-
உயிர் சோறு - சிறுகதை சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ஸ்யாம் சரவணனிடம் தலையசைத்து விடைபெற்று வீதியில் இறங்கினேன். நல்ல வெயில். இப்படிப் பெரு வெளிச்சமாய் மட்டும் வந்து நம் உடல் முழுவதும் தழுவும் வெயிலை நல்ல வெயில் என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் சுள்ளென்று தோல் சுட்டு எரிக்கும் வெயிலுக்கும் நாம் நல்ல வெயில் என்றுதான் சொல்கிறோம். நல்ல என்ற சொல்லுக்குத் தரும் அழுத்தத்தில் அர்த்தமே மாறிப்போய்விடுகிறதுதானே. வெயிலில் ஏது கெட்ட வெயில். கையில் விஜி கொடுத்தனுப்பிய நகைகள் அடங்கிய பை அப்படியே எந்த மாற்றமும் இன்றி இருந்தது. நான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி சரவணனுக்குத் தெரியும். நகைகளை என்னிடமே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டான். பணம் தருகிறேன்; பின்பு உனக…
-
- 0 replies
- 3.8k views
-
-
காதலில் விழுவது. [நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவரது மகன் தோம் உறைவிட பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது புதிய காதலைப் பற்றி தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். அந்தக் கடிதத்திற்கு ஜான் ஸ்டீன்பெக் எழுதியுள்ள பதில் கடிதம் காதலின் அழகை, மேன்மைகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. உலகப்புகழ் பெற்ற அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது.] நியூயார்க் நவம்பர் 10,1958 அன்புள்ள தோம்: உன் கடிதம் இன்று எங்கள் கைவசம் கிடைத்தது. நான் என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன் நிச்சயம் எலைன் அவள் பார்வையிலிருந்து எழுதுவாள். John steinback with his son முதலில் நீ காதலிக்கிறாய் என…
-
- 0 replies
- 834 views
-
-
அவன் ஓடி கொண்டிருந்தான். அவர்கள் துரத்தி கொண்டிருந்தார்கள். அதிகாலை மூன்று மணியை தாண்டி இருந்தது. வீதியில் ஆளரவமே இல்லாத அந்த வேளையில்.. இவர்களின் ஆடு புலி ஆட்டம். அவர்கள் மூன்று பிரிவாக வந்திருந்தார்கள். அவனும் சளைக்கவில்லை.. அவர்களுக்கு தண்ணி காட்டி ஓடி கொண்டே இருந்தான். தலைநகரில் அந்த வேளையில் அவர்களின் அலைபேசிகள் விட்டாமல் கத்தி கொண்டிருக்க... இவன் ஓடி கொண்டே இருந்தான். இவர்களிடம் உயிரோட பிடிபடக்கூடாது. இது மட்டும் தான் இப்போ அவன் நினைக்கும் ஒரே எண்ணம். இவனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. இவன் உடலை, ஆக குறைந்தது இவன் முகத்தையாவது சேதமில்லாமல் எடுக்கவேண்டும் இது அவர்களுக்கான ஒரே கட்டளை. என்னை வைத்து, என…
-
- 18 replies
- 3.7k views
-
-
ஒரு நிமிடக் கதை: அவரவர் கவலை! ''கலா.. கிளம்பறேன்" என தன் மனைவியிடம் கூறிவிட்டு கிளம்பினான் ராஜா. "என்னங்க.. இன்னைக்காவது ஸ்கேன் எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்." கர்ப்பிணியான மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், "கண்டிப்பா முதலாளிக்கிட்ட அட்வான்ஸ் கேட்கிறேன் கலா" என்று சொல்லிவிட்டு கிளம்பினான். இரண்டு அடி எடுத்து வைத்தவன், திரும்பி தயங்கியபடி "கலா.. ஒரு நூறு ரூபாய் இருந்தால் கொடேன். செலவுக்கு கையில் பணமே இல்லை" என்றான். தனக்கு மாத்திரை வாங்க வைத்திருந்த பணத்தை கணவனிடம் கொடுத்தாள் கலா. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு கார் டிர…
-
- 0 replies
- 1.3k views
-