கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
கண்ணாடி ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைமை உதவி ஆசிரியரும், சினிமா ஆர்வலருமான `கே.கே.எம்’ என்று அழைக்கப்படும் கவுண்டனூர் கே.மூர்த்தி (55), முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை இன்று காலை உடைத்துவிட்டார். ஆனால், அவரோ இதை மறுக்கிறார். அதை அவர் உடைக்கவில்லை என்றும், கண்ணாடியே தானாகக் கீழே விழுந்து உடைந்துவிட்டதாகவும் சொல்கிறார். வீட்டில் யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. அவர் பத்திரிகையாளர் என்றாலும் இந்தச் சின்ன விஷயத்தில் பொய் சொல்ல மாட்டார் என்றே நம்பப்படுகிறது. சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி சுதா. இவர்களது உறவினர்தான் மூர்…
-
- 1 reply
- 3.9k views
-
-
ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப் பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வீரப்புகழ் பாட, உறையூரை…
-
- 4 replies
- 3.7k views
-
-
எனக்கு அப்போது ஏழு வயதிருக்கும். என்னவென்று சொல்லத்தெரியாத ஓர் கனமான, பீதி நிறைந்த அமைதிக்குள் மூழ்கிக்கிடந்தந்தது எனது தேசம். மேலே நீறு மூடிக்கிடந்தாலும் முழு வீச்சுடன் வெடித்தெரியத் தயாராகிக் கொண்ட்ருந்த விடுதலை வேட்கைத்தீயின் வெப்பம் அவ்வப்போது ஆங்காங்கே தலை காட்டி, உயிரின் ஆழம் வரை சிலிர்க்கச் செய்து விட்டு மறைந்தாலும், அதை இன்னதென்று கிரகித்துக் கொள்ளும் பரிபக்குவமோ அறிவாற்றலோ முதிர்ச்சி அடையாத வயது. ஆகவே தென்றலாகத்தன் வீசிக் கொண்டிருந்தது எனது பட்டாம் பூச்சிப் பருவம். அன்று பாடசாலை விடுமுறை நாள். வறுத்த அரிசிமாவுடன் தேங்காய்ப்பூவும் சேர்ந்து வேகும் வசனை, புதிதாய்ப்புலர்ந்த காலைப்பொழுதின் உற்சாகத்திற்கு உரம் கூட்டிக்கொண்டிருந்தது. அம்மா சுடவைத்துத் த…
-
- 16 replies
- 2.4k views
-
-
குருவின் சதி! … தாழையடி சபாரத்தினம். September 23, 2018 சிறப்புச் சிறுகதைகள் (12) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – தாழையடி க.சபாரத்தினம் எழுதிய ‘குருவின் சதி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். அடர்ந்த காட்டினூடே நடந்து கொண்டிருந்தான் அந்த வாலிபன். அவன் செல்வதற்கு வழி செய்துகொண்டு முன்னால் இருவர் சென்றனர். பின்னாலும் வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். தாரகைகள் புடைசூழப் பவனி செல்லும் வான்மதி போல் வீரர்கள் மத்தியில் ஏறுநடை போட்டு நடந்து கொண்டிருந்தான் அவன். திரண்ட புயங்களும், பரந்த மார்பும், பால் வடியும் முகமும் – அவன் வீரன் மட்டுமல்ல;…
-
- 2 replies
- 1.3k views
-
-
மரையாம் மொக்கு! .. மருதூர்க்கொத்தன். November 18, 2018 சிறப்புச் சிறுகதைகள் (19) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – வீ.எம்.இஸ்மாயில் (மருதூர்க்கொத்தன்) எழுதிய ‘மரையாம் மொக்கு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். சுமக்க முடியாமல் சுமந்து வந்த கயிற்று வலைப்பந்தை கீழே போட்ட காத்துமுத்துவின் உடலெல்லாம் சொர்க்க சுகம் பரவியது. வருஷக்கணக்காய் கடல் நீரில் குளித்து ஆனமட்டுக்கும் உப்பை உறுஞ்சிய கொண்டடி வலைக்காலொன்றின் தும்புக்கயிற்று வலையைச் சுற்றிய பெரும்பந்து அதைத் தோளில் சுமந்து தொத்தல் உடம்பு இறால் கருவாடாய் வளைய, கடற்கரைக் கொதிமணலில் கால்கள் புதைய, காய்ச்சிய இர…
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்பார்ந்த தமிழீழ மக்களே அருளினியன் [சற்றே பெரிய சிறுகதை இது தயவு செய்து பொறுமையாக வாசியுங்கள்] நான் சின்னப்பிள்ளையா முதலாம் ஆண்டு படிக்கேக்க எங்கட ஊருக்கு பக்கத்து ஊரில ஒரு ஐயா இருந்தவர் நெட்டையா ஒற்றை பனை மரம் போல இருக்கும் அவரோட ஒரிஜினல் பெயர் வந்து பரமேஸ்வரன்,ஆனா பரமேஸ்வரன் எண்டு சொன்னா யாருக்கும் தெரியாது.நெட்டை பரமர் எண்டோ அல்லது,நெட்டை ஐயா எண்டா யாழ்ப்பாணத்திற்கே தெரியும்,ஏன் ஐயா எண்டா எங்கட ஊரச் சுத்தி இருக்கிற பெரும்பாலான ஊருக்கு தெரியும். மனிசன் பழைய கம்யூனிசக்காரன் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை போட்டு அவர் நடந்து வாரத பார்த்தா அச் சொட்டா MGR மாதிரி இருக்கும்,எம் சி ஆர் போல மனிசனும் சும்மா தகதக எண்டு பொன் நிறத்தில மின்னுவார்,ஆளிண்ட தோற்றமே பாக்கி…
-
- 2 replies
- 1.3k views
-
-
"சாதகப் பறவைகள்" அத்தியடி, யாழில் எங்கள் வீட்டுக்கு அருகில் இரு வயது போன தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இருவரும் மாலை நேரத்தில் படலைக்கு அருகில் வீற்றிருந்து வருவோரையும் போவோரையும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் இருவரும், வாயில் பற்கள் இல்லாத, பொக்கு வாய் என்பதால், பொதுவாக கஞ்சி குடிப்பதே தமது உணவாக கொண்டும் இருந்தார்கள். எனக்கு அவர்களை காணும் போதெல்லாம் 'சாதகப் பறவைகள்' ஞாபகம் தான் வரும். ஏன் என்றால் புராண, இதிகாசங்களில் இந்தப் பறவையை மழை நீரை மட்டுமே அருந்தும் என்றும் [இங்கு கஞ்சி நீர்] மேகத்தை நோக்கிக் வாயைப் பிளந்து காத்திருக்கும் [இங்கு மக்களை பார்த்து] என்றும் வர்ணிப்பதை பார்த்து இருக்கிறேன். …
-
- 0 replies
- 354 views
-
-
படிச்சன் பிடிச்சிருந்தது பாட்டி வடை சுட்ட கதை( 2020) 1.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள்.கார்ப்பரேஷன் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினவன் " தா கெய்வீ .. ஒனக்கு இன்னியோட 60 வயசு முடியுது. உன்னை சாம்பலாக்கி உன் சொந்தக்காரவுங்களுக்கு கூரியர் அனுப்பனும் கெளம்பு கெளம்பு "என்றான் 2.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரம் கருகிக்கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள். வேடிக்கை பார்க்கும் சோம்பேறி ஒருவனை கேட்டாள் " இன்னாச்சு நைனா ..மரம் இப்டி கருகி கிடக்குது?" .அவன் சொன்னான் "எனுக்கு இன்னா தெரியும்மே.. நேத்து கருப்பா மழை பேஞ்சுச்சாம். இந்த ஏரியால எல்லா மரமும் இப்படித்தான் ஆயிருச்சு. 3.பாட்டி வழக்கம்போல் கடை போட…
-
- 4 replies
- 1.7k views
-
-
விகடனில் வெளியான இந்த கதை எனக்கு பிடிச்சிருந்தது.. ஆறாவது அறிவு கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்த தாடியையும், கொஞ்சமாக முன் பக்கம் வெற்று மண்டையைக் காட்டிவிட்டுச் சரிந்த கேசத்தையும் வாஞ்சையாகத் தடவினார். மூப்பின் அடையாளங்கள் துவங்கிய, ஆராய்ச்சி, பரிசோதனை என்று கழிந்த சுவாரஸ்யமற்ற வாழ்க்கைச் சுழற்சியில், எந்தப் பெண்ணும் ஆர்வம் காட்டாத அந்த முகத்தின் மேல் திடீரென்று பிரியம் வந்தவர் போல் பராமரித்தார். இன்னும் அரை மணியில் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செய்தி நிறுவனங்கள் என மொய்த்து புகைப்படம் எடுத்துத் தள்…
-
- 5 replies
- 2k views
-
-
[size=2][size=4]ரயில் வண்டி கோப்பன்கேகன் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது..[/size][/size] [size=2][size=4]ஐ.சி 4 வண்டி… பிரேக்கட்டையில் பழுதிருப்பதோ, நடு வழியில் எகிறிவிடுமென்றோ அந்த இருவருக்கும் தெரியாது… குடித்திருப்பார்கள் போலிருந்தது..[/size][/size] [size=2][size=4]” நாட்டின் பிரதமர் பெயர் தெரியுமோ உனக்கு..? ”[/size][/size] [size=2][size=4]” அவ்வளவுக்கு நான் முட்டாள் இல்லை கெல தொனிங் சிமித்..”[/size][/size] [size=2][size=4]” இப்ப அவ எங்கே…? ”[/size][/size] [size=2][size=4]” கோடை விடுமுறை… உல்லாசப் பயணத்தில இருக்கலாம்..”[/size][/size] [size=2][size=4]” வருசத்தில எத்தினை தடவை உல்லாசப் பயணம் போறா.. நாலு தடவைகள்..? ”[/size][/size] [size…
-
- 6 replies
- 798 views
-
-
அம்மாவின் சின்ன கோபம் ......... அந்த புலம் பெயர் நாட்டின் பாடசாலைகளும் கலாசாலைகளும் ஆரம்பமாக போகும் முதல் வார இறுதி . அன்று ஜமுனன் முதல் தடவையாக கலாசாலை போக போகிறான் ,அவர்களது வீடிலிருந்து மூன்று மணி நேர கார் சவாரியில் செல்ல வேண்டும் ,படுக்கைக்கான ஆயத்தங்கள் ,உடுப்புகள் ,தேவைப்படும் கொப்பி பேனா வகைகள் யாவும் பார்சல் செய்ய பட்டு ,செல்ல்வத்ர்கான வாகனமும் வந்து விட்டது . சென்ற வாரம் முழுக்க அம்மாவின் ,ஆயத்தங்கள் .தங்கை நீலுவும் இனி அண்ணாவின் சண்டை சச்சரவு இல்லை என்றாலும் முதல் தடவையாக தன்னை விட்டு போகிறான் என்ற ஏக்கம் . ஜமுனன் ,நீலு அப்பா அம்மா வான் கார சுப்பண்ணா எல்லோரும் ஏறிக்கொண்டார்கள் / கடவுள் வேண்டுதலுடன் அவர்கள் பயணம் .ஆரம்பமாகியது .ஜமுனன…
-
- 8 replies
- 2k views
-
-
இஞ்சாருங்கோ கெதியா வெளிக்கிடுங்கோ கல்யாணத்துக்கு நேரம் போகிறது நான் என்ன சீலையோ உடுக்கிறதோ இல்ல முகத்துக்கு பெயிண்டா அடிக்கிறது உனக்குத்தான் நேரம் போகும் எனக்கு வேட்டிய சுத்தி கட்டினனா ஒரு சேட்டை போட்டனா வேலை முடிஞ்சுது நீ தான் வெளிக்கிட மூணு மணித்தியாலம் எடுக்கும் இந்த பேச்சுக்கு ஒன்றும் கொறைச்சல் இல்ல நான் இன்னும் கொஞ்ச நேரத்தில வாரன் புள்ளய பார்த்துக்கங்க சரி நீ கெதியா வா. ம்கும் கெதியா வாரதுகளா என்று ஒரு படத்தை பார்த்து முடிக்கலாம் இவள் வார வரைக்கும் என்று டீவியை தொறந்தால் விஜய் டீவில ஒரு புறோக்கிரம் கோபிநாத் குட்டையை குழப்பி கொண்டிருக்கிறார் ஒரு புள்ள கெலிகொப்ட்ர கேட்கிறது இன்னொன்று 50 பவுண் கேட்கிறது இன்னொன்று நல்ல வீடு கேட்கிறது இதுகளை ஏன் பெத்து இருக்கு என்று ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
நேற்று பார்க் ஒன்றின் அருகில் இருக்கும் மர நிழழின் கீழ் அமைதியாக படுத்து கண்கள் மூடிய போது.....கல்யாண வயசின் கற்பனைகளினூடு என் எதிர்கால உறவை நினைத்தபோது.....இதோ....நீங்களே பாருங்கள்.....என்ன தோன்றியது என்மனதில் என்று..... அவள்....... கண்கள் ஆயிரம் கவிதை சொல்லும்...... ஆனந்த கூத்தாடி மின்னும்....... புருவம் வேலை வெல்லும்..... புன்னகை என்மனதை கொல்லும்.... ஆறடிக் கூந்தல் தழுவ........ ஆசையில் விரல்கள் துடிக்கும்..... அவளை கொள்ளை கொள்ள என் உயிரே இன்று தகிக்க தினமும் அவளின் நினைவில்.... விடியும் எந்தன் நாட்கள்.... என் விடலை பருவ உணர்வை.... தீண்டி விட்டு இரசிக்கும்.... விழியாலே கொள்ளும் என்.... கிளியே...... உன்னை எந்தன் விழிக்குள்ளே மெதுவாய் …
-
- 8 replies
- 1.9k views
-
-
வேதியின் விளையாட்டு (சிறுகதை) ‘ அது சரிவராது போலத்தான் இருக்கு…,’ என்ற மனைவியின் பதிலால், பென்னம்பலம் மனமுடைந்து போனார். இந்த அளவுக்குச் சிக்கலாய் விஷயம் இருக்குமென்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அவர் சம்பாதித்துள்ள குடும்ப செல்வாக்கிற்கும் கௌரவத்துக்கும், இது வெகு சுலபமாக நடக்க வேண்டியது. ஆனால் காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது! பொன்னம்பலத்தார், வாழ்கையை எப்படியும் வாழலாமென்று வாழ்பவரல்ல. அவருடைய வாழ்க்கையில் எப்போதும் ஓர் ஒழுங்கு முறை இருக்கும். வளவிலுள்ள மரங்கள் தொடக்கம் வீட்டிலுள்ள மனிதர்கள்வரை ஒருவகைக் கட்டுப்பாட்டுக்குள் வளரவேண்டுமென்று எதிர்பார்ப்பார். தனது குடும்பத்தில் பத்து வருஷங்களுக்குப் பின்னர் நடக்கப்போகும் விஷயங்களையும் இப்போதே தீர…
-
- 0 replies
- 996 views
-
-
பொன் ஐங்கரநேசன் வேளாண் விஞ்ஞானி ஆவரங்கால். ஒட்டியிருந்த தகரத்தில் கைவைத்து தள்ளிக்கொண்டே படலையை திறந்தேன். முற்றத்தில் மாமி விளக்குமாற்றால் கூட்டிக்கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு செம்பரத்தை மரம் பூராக பல வகைகளில் பூக்கள் பூத்து தொங்கின. கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு இருந்தது. அருகில் நின்ற எலுமிச்சையின் கிளைகளில் ஆங்காங்க பொச்சுமட்டை சுற்றிக்கட்டப்பட்டிருந்த பதியத்தில் தண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. வாழைமரங்களில் ரோசா மல்லிகை என்று குத்தப்பட்டு குறுக்கும் மறுக்கும் நீட்டிக்கொண்டு இருந்தன. ஒன்றில் மஞ்சள் நிறத்தில் பூத்தும் இருந்தது. “அந்த வாழைத்தண்டில குத்தின ரோசா பூத்திருக்கு மாமி” மாமி நிமிரவில்லை. கூட்டின புழுதி நாசியில் அடித்தது. …
-
- 16 replies
- 1.9k views
-
-
புகார் தெருவில் தையல் மெஷினோடு சென்றவனை உரக்க அழைத்தாள் ராதா. சில புதிய புடவைகளுக்கு பார்டர் தைக்க வேண்டியிருந்தது. கொண்டுவந்து கொடுத்தாள். வாசலிலேயே மெஷினைப் போட்டு அவனும் தைக்க ஆரம்பித்தான். அப்போது ராதாவின் மாமியார் பூரணி, சில நைந்த புடவைகளோடு வந்தாள். அதிலுள்ள கிழிசல்களை தைத்துத் தரச் சொல்லி அவள் கேட்க, ராதா குறுக்கிட்டாள். ‘‘அதல்லாம் ஒண்ணும் தைக்க வேணாம். ஏம்பா, உன்னை நான்தானே கூப்பிட்டேன். அவங்க புடவைகளை திருப்பிக் கொடுத்துடு!’’ என்றாள் கோபமாக. பூரணிக்கு மருமகள் மேல் கோபம். ‘ஆபீஸ் விட்டு என் மகன் கணேஷ் வரட்டும்... சொல்றேன்!’ என முணுமுணுத்துக் கொண்டாள்.மாலை மணி ஆறு. வீடு திரும்பிய கணேஷ் கையில் ஒரு பார்சல் இருந்தது. நேராக அம்மாவிடம் சென்றான். மக…
-
- 0 replies
- 1.2k views
-
-
சில வித்தியாசங்கள்... - சுஜாதா 1969-ல் ஆனந்தவிகடனில் வெளியான சிறுகதை நான் ராஜாராமன். டில்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாத தாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத் தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ் ஸில் தேறாமல், மத்திய சர்க்கார் செக்ரடேரியட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டென்ட்டாக 210-10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க் கார் என்னும் மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். படித் தது எம்.ஏ. வாங்குகிற சம்பளத்தில் வீட்டு வாடகைக்கும், சித்தார்த்தன் என்கிற என் ஒன்றரை வயதுக் குழந் தைக்கு பால், விடமின் சொட்டுக்கள், 'ஃபாரெக்ஸ்' வாங்குவதற்கும், என் புத்தகச் செலவுகளுக்கும்..…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆடு இல்லை ஆடுவேன்.. ஒரு விவசாயின் கண்காணிப்பில் வளர்ந்த ஆடு ஒன்று வழிதவறி அருகில் இருந்த காட்டுக்குள் நெடுந்தொலைவு சென்றுவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைபசேலன தாவரங்களும்,புல் பூண்டுகளும் செழித்து கிடந்தன.ஆனால் ஆவலாய் உண்பதற்கான மனநிலையில் ஆடு இல்லை.பயத்தோடு பதறியபடி ஓடி ஓடி ஓய்ந்து போனதுதான் பலன். ஏற்கனவே பதறிபோன நெஞ்சை பதறவைக்கும் விதமாக புதருக்குள் இருந்து பாய்ந்து வந்தான் எமன் சிறுத்தை.திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஆடு நிலைகுலைந்துதான் போய்விட்டது.பாய்ந்தது கிழட்டு சிறுத்தை போல் கழுத்துக்கு வைத்த குறி தவறி போய் அருகில் இருந்த மரத்தில் முட்டிக்கொண்டது.இந்த சிலவினாடி புலியின் தடுமாற்றத்தை சாதகமாக்கி சிட்டாக பறந்தது ஆடு.ஓடியது…
-
- 0 replies
- 666 views
-
-
அப்பா எங்கே? எனது அப்பா எங்களுடன் இல்லையே என்ற கவலை என் மனதை எப்போதும் வாட்டிக்கொண்டிருந்த போதும் இன்று எனது நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று வந்ததிலிருந்து எனக்கு அப்பாவை உடனே காணவேண்டும்போல இருந்தது. எனது மனவாட்டத்தைக்கண்ட அம்மாவின் முகத்திலும் சோகத்தில் சாயல் பரவத்தொடங்கியது. "அம்மா, எனக்கு அப்பாவைப் பாரக்கவேண்டும்போல் இருக்கிறது" என்று கூறினேன். அம்மா பதில் எதுவும் சொல்லாமல் தனது வேலைகளிலேயே கவனமாக இருந்தார். மீண்டும் நானே அம்மாவின் அருகில் சென்று "இன்று எனக்கு அப்பாவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது என்றேன்" என்றேன். "அப்படிப்பார்க்க முடியாது என்று உனக்குத் தெரியும்தானே, பிறகு ஏன் என்னைக்கேட்கிறாய்?" என்றார். அம்மா கூறியது சரிதான். …
-
- 8 replies
- 3.4k views
-
-
காலம் செய்த கோலம் . தாயகத்தில் இருந்து அதிகம் பேர் உள நாட்டுக் குழப்பங்களால் அகதிகளாக் வெளி நாடு சென்றனர். ராஜ சுந்தரம் குடும்பமும் விதி விலக்கல்ல . அவரும் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இரு மகன்களும் பள்ளியில் பயின்றனர. பிள்ளைகளின் தேவைகளை சமாளிக்க் முடியாமலும் வாடகைப்பணம் அதிகமானதாலும் இரண்டு வேலைக்கு சென்றார். ராஜ சுந்தரம். . பகலில் ஒரு கார் கம்பனியிலும் மாலை நேரங்களில் ஒரு உணவு விடுதியிலும். வேலை செய்து இரவு பத்து மணியாகும் வீடு வந்து சேர .அத்தோடு வெளி நாட்டு வாழ்வுக்கே உரிய கால நிலை மாற்றங்களும் அவருக்கு வாழ்வில் வெறுப்பை தந்தது. இருந்தாலும் மகன்களின் எதிர்கால் வாழ்வை எண்ணி சகித்து கொண்டார். ஒரு நாள் தாயகத்தில் உள்ள ஒரு மூத்த சகோதரி . தன…
-
- 15 replies
- 2.4k views
-
-
செஞ்சோலை -என் ஞாபகப்பதிவிலிருந்து ஒரு பேப்பரில் இருந்து சுதந்திரா http://www.orupaper.com/issue53/pages_K__Sec2_34.pdf http://www.orupaper.com/issue53/pages_K__Sec2_35.pdf
-
- 4 replies
- 1.8k views
-
-
ஐரோப்பா-1, அழியா ஊற்று - ஜெயமோகன் 2016 வரை நான் சென்ற நாடுகள் அனைத்துமே ‘புதிய’ உலகங்கள். இன்றைய நாகரீகம் உருவாகத் தொடங்கிய பின்னர் மனிதர்கள் குடியேறி சமைத்துக்கொண்டவை. நான் இந்திய எல்லையைக் கடந்து சென்ற முதல் அயல்நாடு கனடா. 2001 செப்டெம்பரில் அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் சென்றேன். முதல்வெளிநாடு என்பது எவருக்கும் எண்ண எண்ணக் கிளர்ச்சியூட்டும் நினைவு. இன்றும் நயாகராவும், மேப்பிள்காடும், டிம் ஹார்ட்டன் டீக்கடையில் அமர்ந்து பேசிய இலக்கியமும் நினைவில் இனிக்கின்றன. அதன்பின்னர் 2006 ல் சித்ரா ரமேஷ் முயற்சியால் சிங்கப்பூருக்கும் அங்கிருந்து மலேசியாவுக்கும் சென்றேன். 2009 ஏப்ரலில் ஆஸ்திரேலியாவுக்கு நோயல் நடேசன் அவர்களின் அழைப்பால் …
-
- 13 replies
- 5k views
-
-
லியோன் பேராலயம் டேவிட் அல்பாஹரி தமிழில்: சுகுமாரன் டேவிட் அல்பாஹரி (David Albahari - 1948) செர்பிய எழுத்தாளரான டேவிட் அல்பாஹரி கொஸாவோ பிரதேசத்தைச் சேர்ந்த யூத மரபில் பெஜ் நகரத்தில் பிறந்தார். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். யூகோஸ்லாவியாவிலிருந்து புலம்பெயர்ந்த யூதர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபாடுகொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். டேவிட் அல்பாஹரி செர்பிய மொழியில் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும் பத்துக்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலுள்ள முக்கிய நூல்களை செர்பிய மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது ஆறு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியா…
-
- 0 replies
- 489 views
-
-
'தனிமை' [ஒரே தலைப்பில் இரண்டாம் கதை] தனிமை என்பது, 'நான் தனித்து இருக்கிறேன் என்ற உணர்வு' என்று சொல்லலாம், உங்கள் பல சமூக தொடர்புகளின் அளவை இது சார்ந்தது அல்ல. நீங்க அந்த தொடர்புகளில் இருந்தாலும் மனது அதில் முழுதாக எடுபடாமல் தனித்து இருக்கலாம் என்பதே இதன் அர்த்தம்! நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, இலங்கை கடற்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில் எந்திரவியல் விரிவுரையாளராக பதவி பெற்று கொழும்பில் கடமையாற்ற தொடங்கிய நேரம் இது. நான் கொழும்பில் வேலை செய்யும் அண்ணாவின் குடும்பத்துடன் தங்கி இருந்து, வேலைக்கு போகத் தொடங்கினேன். கொழும்பு எனக்கு புதிது என்றாலும், அண்ணாவின் குடும்பம் …
-
- 0 replies
- 432 views
-
-
தொ(ல்)லைபேசி ஒரு பேப்பருக்காக விஞ்ஞான கண்டு பிடிப்புக்களில் இந்த தொலைபேசியின் கண்டுபிடிப்பும் ஒரு உன்னதமானதுதான். கைத்தொலைபேசியின் வரவிற்கு பின்னர் அதன் தொழில் நுட்பவளர்ச்சியும் மாற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் செல்கிறது.முன்பெல்லாம் ஊரில் ஒருவர் வீதியில் தன்பாட்டில் சிரித்து கதைச்சபடி நடந்து போனல் சந்தேகமே இல்லை அவருக்கு விசர் என்று எல்லோரும் முடிவு கட்டிடுவினம்.ஆனால் இன்று நிலைமை அப்பிடியில்லை காரணம் கைத்தொலைபேசி புளுதோத் என்கிற சின்ன கருவியை காதுக்குள்ளை வைச்சிட்டு எல்லாருமே தங்கடை பாட்டிலை கதைச்சபடிதான் போகினம். இப்ப யார் கதைக்காமல் தன்ரை பாட்டிலை கம்மெண்டு போகினமோ அவைதான்விசரர் எண்டு நினைக்கிற அளவுக்கு நிலைமை மாறி போச்சுது.அது மட்டுமி…
-
- 33 replies
- 5.9k views
-