கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3076 topics in this forum
-
சிறுகதை எப்படி எழுத வேண்டும், அதன் கட்டமைப்பு பற்றி ஒரு வழிகாட்டலை தந்தால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்
-
- 1 reply
- 584 views
-
-
பொழுது விடிந்து நெடு நேரமாகியும் மலரினால் படுக்கையை விட்டு எழும்ப முடியாதபடி மனம்மிக சோர்வாக இருந்தது. சூரியக்கதிர்கள் பூமியைச் சூடாக்க ஆரம்பித்த வேளையது. அறையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தவள் மெல்ல பார்வைத் திருப்பி தனதருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்வையால் வருடினாள். தம்மை மறந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை பார்க்கையில் கணவன் நினைவு எழுந்து கண்களில் நீர் படலமிட்டது. மனம் விரும்பி வாழ்ந்தவனை இழந்து, வன்னியிலிருந்து தப்பிப் பிழைத்து பிள்ளைகளுடன் வந்தவளை ஊர் மட்டுமல்ல உறவுகளே ஒதுக்கித்தான் வைத்தன. பெற்றோரை மீறி தன் வாழ்வைத் தீர்மானித்தவள் என்ற காரணம் மட்டுமல்லாது, அtவளுடன் கதைத்தாலே தமக்கு ஆபத்து என்ற காரணமும் கற்பித்து அவளை ஒதுக்கியே வைத்தன…
-
- 7 replies
- 986 views
-
-
அன்பு அம்மா. வீட்டு அழைப்பு மணிச் சத்தத்தை கேட்டு வாசல் கதைவை திறந்த திறந்த நிவேதா வாசலில் நின்றிருந்த இருவரை பார்ததும் நீங்கள் யார் என்ன வேணும் என்றாள். இருவரில் ஒருவன் சிரித்தபடி நாங்கள் அன்பு அம்மாவை பாக்கவேணும் அவாவை எனக்குத்தெரியும் அவாவோடை கொஞ்சம் கதைக்கவேணும்.அதுதான் வந்தனாங்கள் என்றான். இருவரையும் மேலும் கீழுமாக பார்த்த நிவேதா இவங்கள் எதுக்கு இங்கை வந்திருக்கிறாங்கள் என்று மனதில் நினைத்தபடியே சரி வாங்கோ என்றவள் அவர்களை இருக்கச: சொல்லிவிட்டு அம்மா உங்களை ஆரோ தேடி வந்திருக்கினம் வந்து பாருங்கோ என்று தாயாரை அழைத்து விட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள். வரவேற்பறைக்கு வந்த அம்மா கண்ணாடியை சரிசெய்தபடி வந்தவர்களை பார்த்தவர் தம்பியயை யார் என்றதும…
-
- 28 replies
- 6.3k views
-
-
ஒரு நிமிடக்கதை: புது வீடு! “புது வீட்டுக்கு இப்ப குடி போக வேண்டாம்பா. அதை வாடகைக்கு விட்டு டுங்க. நம்ம எப்பவும் போல வாடகை வீட்டுலயே இருந்துக்கு வோம்!” வங்கிக்கடன் சக்திக்கு மீறிய தாக இருந்தாலும் வாங்கி, ஆசை, ஆசையாய் பார்த்து கட்டிய வீடு. மகள் திருமணம் நடக்கும்போது நாம் சொந்த வீட்டில்தான் குடி யிருக்கணும் என்று வைராக் கியத்துடன் எழுப்பப்பட்ட வீடு. அதற்கு இப்படி ஒரு முட்டுக் கட்டையைப் போடுவாள் மகள் ரமா என்று சுப்பிரமணி எதிர்பார்க்க வில்லை. “என்னம்மா பிரச்சினை? வீடு ஒதுக்குப்புறமாக இருக்கிறதே எப்படி ஆபிசுக்கு போயிட்டு வர்றதுன்னு யோசிக்கிறியா?” மகளிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டார். …
-
- 0 replies
- 795 views
-
-
இருண்ட நிலவு - நிலாதரன் அம்மா பசிக்குது பசிக்குது என்ற குழந்தைகளின், அழுகுரலை இனிமேலும் தாங்கமுடியாது. அது இதுவெண்டு சொல்லி இனியும் சமாளிக்கவும் முடியாது, கடைசியாக மிஞ்சியிருந்த இந்த தோட்டையாவது விற்று சமைக்க வேண்டும். குழந்தைகள் இரண்டையும் பக்கத்து வீட்டு சரஸ்வதியாச்சியோடு விட்டிட்டு கிளிநொச்சி நகருக்குள் வந்து சேர்ந்த போது எல்லாமே அவளுக்கு புதிதாகவும் சூனியமாகவும் இருந்தது. புதிதாக புனரமைக்கப்பட்ட நெடுவீதிகளும் ஆங்காங்கே எழுந்து நிற்கும் புத்தம்புதிய கட்டிடங்களும் புதிபுதிதாய் முளைத்திருக்கும் கடைகளும் அதன் அலங்காரங்களும் பீறேமாவை ஒரு கணம் திக்குமுக்காடச் செய்தது. என்ன தான் இருந்தாலும் கிளிநொச்சி முன்பிருந்த செழிப்பையும் அதன் அழகையும்இ இழந்து செயற்கைத்தனமாய் கா…
-
- 0 replies
- 771 views
-
-
நாட்டுக்கட்டை நாக்கமுத்து கரும்பு ஜோரா விளைஞ்சதில கையில கொஞ்சம் காசுகிடக்குது. வீட்டுக்கு ஒரு பிரிஜ்சுப் பெட்டி வாங்கினால் காத்தாயி குளிர்ந்துவிடுவாள் என்ற ஆசையில நாக்கமுத்து ரங்குப்பெட்டியில மடிச்சு வச்சிருந்த கரை வேட்டியையும் தோள்ள தலைவர் எம்.ஜீ.ஆர் படம்போட்ட துண்டையும் எடுத்துப் போட்டுக்கொண்டு பட்டணத்துக்கு பஸ் பிடித்துப் போய்ச் சேர்ந்தார். அங்கை இங்கை தேடி ஒருவழியா பெரியதொரு எலக்றிக்கல் சாமான் விற்பனை செய்யும் கடையைக் கண்டுபிடித்து எம்மாம் பெரிய கடை என முணுமுணுத்தக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். வெளியில சுட்டு எரிக்கிற வெய்யிலுக்குக் கடை ஜில்லென்று குளிரா இருக்கிறது. கடையையே இம்மாம் பெரிய பிரிஜ்ஜிற்கை வச்சிரு…
-
- 7 replies
- 3.5k views
-
-
(பள்ளிநாட்களில் துணைப்பாட நூலில் படித்த இந்தக் கதை மனதில் பதிந்துவிட்டது. என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.) 'தழும்புள்ள மனிதன் ' சாமர்செட் மாம் தமிழில்: வெ.சந்திரமோகன் பெரிய பிறைப் போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடிய பெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் செய்தது. கடுமையான காயம் ஒன்று தான் இந்தத் தழும்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு பட்டாக் கத்தி அல்லது செல்லின் ஒரு துண்டாக இருக்கக்கூடும். வட்டவடிவமான, பெருத்த, நல்ல சிரிப்புடன் கூடிய முகத்துக்கு அது பொருத்தமாயில்லை. சிறிய, கவனம் ஈர்க்காத தன்மைகளுடன் அவன் இருந்தான். கபடமில்லாத முகக் குறிப்பு. அவனது பெருத்த உடலுக்கு அந்த முகம் பொருந்தாமல் தோன்றியது. நல்ல வலு…
-
- 0 replies
- 976 views
-
-
சுய தண்டனை அவளை நான் இறுதியாகப் பார்த்து ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இருக்கலாம். எனது நினைவுகளில் நான் அவள் குறித்து பதித்து வைத்திருந்த கோலங்களையெல்லாம் கண்ணீர்கொண்டு அழித்து முழுவதுமாகத் துடைத்து வைத்திருந்தாள். வசீகரமான புன்னகை, கவிதைபாடும் கண்கள், மழலைகளின் மொழிபேசும் அவளது இனிமையான குரல் என்று எல்லாமுமே அவளிடமிருந்து முற்றாக மறைந்துபோயிருக்க என் முன்னே அவள் நின்றிருந்தாள். கண்கள் தொலைவில் இல்லாதவொன்றை வெறித்துப் பார்த்திருக்க எனது பேச்சைக் கேட்பதுபோல் ஏப்போதாவது ஓறிருமுரை தலையை மெதுவாக அசைப்பதுடன் எனது சம்பாஷணையில் அவளது பங்களிப்பு முற்றுப்பெற்றுவிடுகிறது. ஆறு வருடங்களுக்கு முன்னர் அவளிடமிருந்த ஆசைகள், நம்பிக்கைகள், எதிர்…
-
- 8 replies
- 977 views
-
-
அட நம்ம குருவியார் கவிதையில் தான் கொடி கட்டி பறக்கிறார் என்டால் கதையுமா............... ம்.ம். பாராட்டுக்;ள் குருவிகள் வேண்டுகோளிற்கிணங்க கருத்தை பிரித்து புதியபிரிவில் போடப்பட்டுள்ளது - யாழினி
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒருநிமிடக்கதை: நடிப்பு! ஏதோ ஒரு நேரத்தில் நாம் காட்டும் ரியாக்ஷன் நம் வாழ்க்கையையே முடிவு செய்துவிடுகிறது. இந்தப்பாடத்தை மிக நன்றாகப் படித்து டிஸ்டிங்ஷனுடன் பாஸ் செய்யுமளவிற்குத் தேர்ந்துவிட்டான் குமார். செய்து கொண்ட கல்யாணம் இதில் பெரும் பங்கு வகித்தது.ரொட்டியின் மிக அருமையான பதத்தில் தட்டில் போடப்படும் தோசையை இனம் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் தருணத்தில் அவனிடம் கேள்வி கேட்கப்படும். “என்னங்க... டிபன் பிடிச்சிருக்கா..” வேகமாகத் தலையை ஆட்டி மிக அற்புதமாக ”அமிர்தம்’’ என்று சொல்லி அது தோசையா ரொட்டியா என்ற எசகுபிசகான பதில் சொல்லி, கேள்வி கேட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்கையே (1) பாகம் 1 தூங்கி எழுஞ்சு கிளம்பி ரெடி ஆகவே மணி பன்னிரண்டு ஆச்சு. இன்று ஓய்வு நாள். அதனால் தாமதமாகவே எழுந்தேன். அக்கா காலைலயே இட்லி, பொங்கல்னு தலபுடலா ரெடி பண்ணி வச்சிருந்தா. என்ன எப்பவும் காய்ஞ்சு போன ப்ரெட் தானே இருக்கும். இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? அம்மா அளவுக்கு இல்லனாலும் ஓரளவுக்கு நல்லாவே சமைப்பா. அதனால தைரியமா சாப்பிடலாம். நான் சாப்பிட சாப்பிட “இன்னும் எடுத்துக்கோடா” என்று மேலும் ரெண்டு இட்லியை எடுத்து வைத்தாள் தட்டில். “போதும். இப்பவே இவ்வளோ சாப்டா அப்புறம் லஞ்ச் என்ன சாப்பிடுறது? வாயித்துல கொஞ்சமாச்சும் இடம் காலி இருக்கணும்” நான் தடுத்தேன். “டேய் அடி வாங்குவ. காலைலேயே எழுஞ்சு எல்லாம் ரெடி பண்ணிருக்கேன். நீதான் சாப்…
-
- 5 replies
- 5.8k views
-
-
நினைத்தாலும் மறக்க முடியாதவை - அஜீவன் நடந்து வந்த பாதையை பெரும்பாலும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை நடந்து கொண்டிருப்பவனுக்கு அது தேவையில்லை ஆனால் நடக்க முடியாமல் போனாலோ இல்லை திரும்பி வர நேர்ந்தாலோ மட்டுமே அது குறித்து சிந்திக்கிறோம் புதிய ஒருவரை சந்திக்கும் போது அவருக்கு நம்மை அறிமுகம் செய்ய வேண்டி வருகிறது இல்லை பழைய சினேகிதங்களை சந்திக்கும் போது கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைத்து சிரிக்கவோ அல்லது அழவோ வேண்டிய நிலை ஏற்படுகிறது நல்ல நிகழ்வுகள் குறைவாகவே மனதில் பதிவாகிறது தாக்கங்களும் வேதனைகளும் மட்டும் மனித மனங்களின் போக்க முடியாத கறையாகி அல்லது வடுவாகி காயமாகி விடுகிறது வயதாகும் போ…
-
- 42 replies
- 11.1k views
-
-
“Bloody Indians...!” கத்திக்கொண்டே அவன் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ட்ரில்லரால் துளைக்க, கனகரத்தினம் மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். அவசர அவசரமாக தபால் பெட்டியில் போட்டிருந்த விளம்பர பத்திரிகைகளை எடுத்து சுருட்டிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நடக்கத்தொடங்கினார். கால்கள் நடுங்கின. அவன் அழைத்த தோரணையே மிரட்டலாக இருந்தது. “Hey Mister, Come here ..” ச்சே சனியனுக்கு நாற்பத்தைந்து தாண்டியிருக்குமா? நான்கு நாட்கள் ஷேவ் செய்யாத பிரவுன் தாடி. பியரும் சிகரட்டும் இன்னமும் நாசியில் அடித்தது. அவனும் அவனின்ட கலிசானும். நீலமும் பிரவுனுமாய் பெயிண்ட், மேலுக்கு பனியன் மட்டும். அதுவும் கிழிந்திருந்தது. பிச்சைக்காரன். கையில் டிரில்லர் மெசினை வைச்சுக்கொண்டு படம் காட்டி…
-
- 0 replies
- 1.4k views
-
-
குப்பைகளை தெருவோரம் எறிந்துவிட்டுபோவது, அதிலும் இப்போ குப்பை கட்டி எறிவதற்கு வசதியாக பிளாஸ்டிக் பைகள் தாரளமாக கிடைகின்றது......சாப்பாடு கட்டுவதிலிருந்து..(சொதி,சம்பல்..)...ஷாப்பிங் வரை எல்லாமே பிளாஸ்டிக் பைதான்...பல இடங்களில் குப்பைகளை கட்டி தண்ணீர் ஓடும் கானிட்குள் (Canal: இதை சுருக்கமாக “கான்” இப்படிதான் யாழ்ப்பாணத்தவர் கூறுவர்) எறிந்துவிட்டிருந்தார்கள், சில காலியாக இருக்கும் வளவுக்கு முன் குவிந்து கிடந்தது......காலியாக வளவு இருந்தால் (வளவின் சொந்தகாரர் வெளிநாட்டில் இருந்தால் பக்கதுவீட்டுகாரர்கள் அந்தவளவை குப்பைபோடும் இடமாக மாற்றிவிடுவார்கள் (இது என் சொந்த அனுபவமும் கூட)..... மாநகரசபை குப்பைகளை வெளியில் வைக்குமாறும்....பின் அவைகளை எடுத்துச்செல்லுவதாக கூறியும்.…
-
- 10 replies
- 8.3k views
-
-
கிழக்கில் உதிக்காத சூரியன் என்ற இக்கதையில் கர்ணனால் எழுதப்பட்டுள்ள கடாபியண்ணா தலைவருக்கு நிகரான இயல்பும் தலைமையையும் தான் வளர்த்த போராளிகளையும் தனது உயிரைவிட மேலாக நேசித்த உன்னதமானவர். இந்தக் கடாபியண்ணா பற்றி பலரிடம் கேட்டிருந்தேன் எழுதுமாறு. இன்னும் யாரும் அந்த மனிதன் பற்றி அதிகம் எழுத முடியவில்லை. ஆயினும் அவரது வாழ்வு பற்றிய ஒருபகுதியை கர்ணன் எழுதியிருப்பதால் இங்கு இணைக்கிறேன். [size=5]கிழக்கில் உதிக்காத சூரியன் (தளபதி கடாபியின் வாழ்வைப் பதிந்துள்ள கதையிது)[/size] யோ.கர்ணன் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான…
-
- 5 replies
- 1.2k views
-
-
மீள்.... வாழ்த்து --- ரிஷபன் சற்று ஒடிசலான கையெழுத்தில், மாதவி கிருஷ்ணன் என்று எழுதிய வாழ்த்து தபாலில் வந்திருந்தது. எங்கள் திருமண நாளைப் பத்து வருடமாய் ஞாபகம் வைத்திருக்கிற ஜீவன். அலுவலகத்திலிருந்து திரும்பியவனிடம் புவனா காபியையும் வாழ்த்தையும் கொடுத்தாள். "காலைல தபால்ல வந்திச்சு." "வேற போஸ்ட்…?" என்றேன். "இல்ல." அலுப்பில், காபிக்கு முதல் உரிமை கொடுத்தேன். குடித்த சுறுசுறுப்பில் வாழ்த்தைப் பிரித்தேன். ‘அன்புடன்… மாதவி கிருஷ்ணன்!’ "மறக்காம அனுப்புறா!" என்றேன் வியப்புடன். "அவங்களுக்கு எப்ப மேரேஜ் டே?" இது புவனாவின் கேள்வி. "ஞாபகம் இல்ல. ஜூன்லயா… ப்ச்… தெரியல!" பத்தாவது வாழ்த்து இது. வருடம் முழுவதும் வேறு …
-
- 0 replies
- 599 views
-
-
சிறுகதை - விடிவெள்ளி ப்ரியதர்ஷினி கணேசன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி “யேட்டியேஏஏய்…. பாத்து சூதானமா கொத்து… நாத்துல பட்டா நஞ்சு போய்டும்” - வேகமாக ஓடிவந்த தையமுத்து மூச்சிரைக்கக் கத்தினாள். “யக்கோவ்… நீ வெசனப்படாத… நானு பார்த்துக்குறேன். நீ இப்டி இரைக்க இரைக்க ஓடியாந்தினா பேச்சி அய்த்தான் எங்களைத்தான் வையும். புள்ளையை மடில வச்சுக்கிட்டு நீ அடங்க மாட்றியே” - அதட்டினாள் வள்ளிக்கண்ணு. “அடிப் போடி கூறுகெட்டவளே… பச்சையும் புள்ளையும் எனக்கு ஒண்ணுதான்… நீ ஒழுங்கா பாத்துக் கொத்து” - களைக்கொத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு கதிர்க் கூட்டத்துக்குள் நுழைந்தாள் தையமுத்து. வாகாகக் கொத்தியைப் பிடித்துக் களையெடுக்கும் தையமுத்துவை அபூர்வமாகப் பார்ப்பதுபோல …
-
- 0 replies
- 3.4k views
-
-
இல்லாள்: ஜேகே சாவு வீடுகளில் பிரேதம் எடுக்கும்போது எழுகின்ற ஒப்பாரி ஒலியைப்போல மழை வீரிட்டுக் கொட்டிக்கொண்டிருந்தது. கிளிநொச்சி நிலையத்திலிருந்து ரயில் மறுபடியும் புறப்பட்டது. மிருதுளா தன் செல்பேசியிலிருந்த பயண வழிகாட்டியைத் திரும்பவும் எடுத்துப் பார்த்தாள். கொடிகாமம் கழிந்தால் அடுத்தது யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வந்து சேர்ந்துவிடும். அவள் தன் கைப்பையினுள் கடவுச்சீட்டு, கடனட்டை, இலங்கை ரூபாய்கள் எல்லாமே பத்திரமாக இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக்கொண்டாள். யாழ்ப்பாணத்தில் ரயில் எத்தனை நிமிடங்கள் தரித்து நிற்கும் என்பதை ஊகிக்கமுடியவில்லை. முதலில் அந்த நிலையத்தை அவள் தவறவிடாமலிருப்பது முக்கியம். இந்த மழையில் அதன் பெயர்ப்பலகை மறைந்துபோகலாம். ரயிலினுள்ளே…
-
- 7 replies
- 906 views
-
-
தர்மம்! செய்தித்தாளைப் படித்து முடித்ததும், குளிப்பதற்காக கிளம்பினார், அருணாசலம். அப்போது, மொபைல் போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தார்; நண்பர், கதிரேசனிடமிருந்து அழைப்பு! ''கதிரேசா... ஏதாவது அவசர விஷயமா... மணி, 11:00 ஆகப் போகுது... குளிச்சுட்டு வந்து பேசட்டுமா...'' என்றார். 'சரி' என்று அவர் கூறியதும், குளியல் அறைக்குள் நுழைந்தார், அருணாசலம். அருணாசலமும், கதிரேசனும் நண்பர்கள். தங்கள் கடமைகளை எல்லாம் முடித்து, பணி ஓய்வு பெற்று, அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள். குளித்து முடித்து, நெற்றியில் திருநீறு இட்டு வந்தவர், பின், மொபைல் போனை எடுத்து நண்பர் கதிரேசனை அழைத…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பேரம் காரிலிருந்தபடியே நடமாடும் காய்கற…
-
- 1 reply
- 4.2k views
-
-
புத்தரின் தொப்பி ஜீ.முருகன் இப்போது கனவுகள் அதிகம் வருகின்றன. நிம்மதியான தூக்கம் என்பது அரிதாகி விட்டது. இதற்கு நான் புதிதாக வாங்கியிருக்கும் கட்டில்தான் காரணம் என்றால் நீங்க நம்பமாட்டீர்கள். இடது பக்கம் சாய்ந்து படுத்தால் நல்ல கனவுகளும், வலது பக்கம் சாய்ந்து படுத்தால் கெட்ட கனவுகளும் வருகின்றன என்றால் மொத்தமாகவே நம்பமாட்டீர்கள். தயவு செய்து நீங்கள் நம்பவேண்டும். நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவுகள் தொடங்கிவிடுகின்றன. கனவுகளின் விபரீதமான கணத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால் பத்து நிமிடம்தான் தூங்கியிருப்பது தெரிகிறது. ஆனால் பத்து மணி நேரம் நிகழக்கூடிய சம்பவங்களைக் கொண்டதாக இருக்கின்றன கனவுகள். சில கனவுகள் பன…
-
- 1 reply
- 1.2k views
-
-
எதிரி ஓய்வு நிலையிலிருந்த உலகம் மெல்ல மெல்லச் சோம்பல் முறித்துச் செயற்பட ஆரம்பிக்கும் காலை நேரம். சூரியனும் தன் பொற் கிரணங்களை அள்ளி வீசத் தொடங்கி விட்டான். அவசர உலகத்தின் வேகத்திலே மனிதனை விஞ்சிவிட வேண்டுமே என்ற ஆவேசத்துடன் பறவைகள் தம் உறக்கம் கலைத்து இரை தேடக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. வெள்ளைச் சிறகு கட்டிய பள்ளிக் குழந்தைகள், தம் தோட்டத்தைப் பார்க்கச் செல்லும் கமக்காரர்கள், சந்தை வியாபாரிகள், அலுவலக ஊழியர்கள்... என வீதிகள் சுறுசுறுப்படையத் தொடங்கி விட்டன. வழமையாக வசுமதி வீட்டில் பொழுது புலர்வதில் சற்றுச் சுணக்கந்தான். அவர்களுக்கென்ன? கடைகளைக் கவனிக்கக் கணக்கப்பிள்ளைமார், பொருட்களை வாங்குவதற்கும் வீட்டு அலுவல்களைக் கவனிப்பதற்கும் ஏகப்பட்ட வேலையாட்கள், சமையல்…
-
- 11 replies
- 3.6k views
-
-
தாலி ஆலையடி பிள்ளையார் கோவில், கோவில் வீதி உட்பட எங்கும் சனங்கள். எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றனர் ஒரு சிலரைத்தவிர. சுமார் ஒரு ஐந்தயிரத்திற்க்கு மேற்பட்டவர்கள் அந்த ஆலையடி பிள்ளியாரிலும் அதை சுற்றியும் தங்கியிருக்கின்றனர். எல்லோரும் தங்களை மறந்து தூங்கிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சிறு மணல் கூட விழமுடியாத அளவிற்க்கு ஒருவரையொருவர் உரசிக்கொண்டு தூங்குகின்றனர். தூங்கிக்கொண்டிருந்த செல்லம்மா ஏதோ நினைப்பு வந்தவளாக கண்ணை முழிக்கின்றாள். மங்கிய நிலவு வெளிச்சத்தில் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றது. தலைக்கு வைத்திருந்த கைபையிற்க்குள் தன் கையை வைத்து துளவி தனது மூக்குக் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டு குந்தியிருக்கின்றாள். குந்தியிருந்து செல்வியை பார்க்கிறாள் அவள…
-
- 6 replies
- 1.9k views
-
-
இறைச்சி வாங்க வழக்கமாக போகும் தமிழ் கடைக்கு போனேன்.கல்லாவில் நின்ற முதலாளி என்னை சிரித்து வரவேற்றதுடன் அப்போது கடையால் வெளியேறிக்கொண்டிருக்கும் வயது போன ஒரு மனுசியை பார்க்குமாறு கண்ணால் ஜாடை காட்டினார்.கையில் ஒரு பையுடன் போய்கொண்டிருந்த ஒரு அம்மாவை .இடைக்கிடை இதே கடையில் பார்த்ததாக ஞ்பகம். "என்ன விடயம் என்று" முதலாளியைக் கேட்டேன் . "மீனோ இறைச்சியோ போய் சொல்லிப்போட்டுவாரும் ஒரு அலுவல் காட்டுகின்றேன் " என்றார். திரும்பி வர செக்குரிட்டி கமரா எடுத்த படத்தை ரீவைன் பண்ணி போட்டுக்காட்டினார். அந்த மனுசி வந்து ஆறு இராசவள்ளிக் கிழங்குகளை மேசையில் வைக்க முதலாளி எடுத்து நிறுத்து பின்னர் இரண்டு கிழங்கை வெளியே எடுத்து மீண்டும் நிறுத்து காசையும் வாங்கிக்கொண்டு விட,மனுசி…
-
- 11 replies
- 2.4k views
-
-
"துரோகம்" நான் கொழும்பில் பொறியியலாளராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த காலம் அது. எனக்கு உதவி பொறியியலாளராக, வெற்றிநாயகன் என்ற ஒருவன் பதவி பெற்று, என்னுடன் நல்ல நண்பனாகவும் பழகத் தொடங்கினான். எமது நட்பு பலமாக, நாம் எம் தனிப் பட்ட விடயங்களையும் எமக்கிடையில் பகிரத் தொடங்கினோம். இருவரும் அப்பொழுது திருமணம் ஆகாத வாலிபர்கள். ஆகவே பெண் நண்பியை பற்றியும் தாராளமாக கதைப்போம். எமக்கிடையில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஒரு முறை, விடுதலையில் ஊர் போய், திரும்பிய வெற்றிநாயகன், முதல் முதல் தன் காதல் அனுபவத்தை, அன்று மாலை இருவரும் பொது விடுதியில் [pub] சந்தித்த பொழுது சொல்ல தொடங்கினான். தான் ஒரு முறை தன் கிராமத்தில், ஒட்டப்பயிற்சி செ…
-
- 0 replies
- 665 views
-