கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மங்கள இசை முழங்க புரோகிதர் தனது பணிகளை மும்மரமாக செய்து கொண்டிருந்தார் திருமண பந்தத்தில் இணையும் ஒரு உள்ளங்களுக்கு இறைவனிடம் அனுமதி கேட்டு.அவர் அனுமதி கொடுக்கும்படி புரோகிதருக்கு சொல்ல தம்பதிகளும் இணைந்துவிடுவார்கள் அந்த அக்கறையாக புரோகிதர் இருந்தார்.அத்துடன் தனது அன்பளிப்புகளையும் தயார்படுத்தி கொண்டு இருந்தார் வீட்டிற்கு எடுத்து செல்வதிற்கு. அலங்கரிக்கபட்ட மேசைகள் மற்றும் கதிரைகளும் மண்டபத்தின் அழகை இன்னும் மெருகூட்டிய வண்ணம இருந்தது.அந்த மேசைகள் அலங்கரிக்கபட்ட விததிற்கேற்ப அந்த மேசைகளின் மேல் பலகாரங்கள் மற்றும் குளிர்பானங்களும் பார்க்கும் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் அடுக்கபட்டிருந்தது. சுரேஷ் தனக்கு தெரிந்த நண்பர்களின் மேசைக்கு போய் அவர்களுக்கு சலாம் போட்ட…
-
- 22 replies
- 3.8k views
-
-
சட்டவிரோதக்குடியேற்றவாசியி
-
- 3 replies
- 1.2k views
-
-
சமிக்கை கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது. அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும்…
-
- 0 replies
- 264 views
-
-
அனிதாக்களின் காலனிகள்! நட்பு காதலாக மலரலாமா? பார்த்த உடனே வரும் காதலைக் காட்டிலும், பழகிப் பார்த்து வரும் காதல் நிலைக்கும்தானே என்பது பேசிப் பேசி தீர்த்தாலும், இன்றும் விவாதத்துக்கு உரியதாகவே இருக்கிறது. என்னைக் கேட்டால், தோழி காதலியாவது ஆகச் சிறந்த வரம் என்றுதான் சொல்வேன். ராஜா - ஜெனி காதல் அப்படிப்பட்டதுதான். மிகச் சிறந்த காதலர்களாக, தம்பதிகளாக அவர்கள் வாழ்வதை ரசித்துக்கொண்டே இருக்கலாம். எந்த மிகைத்தன்மையும் இல்லாமல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள். அவர்கள் வாழ்வதைப் பார்க்கும்போது நமக்கும் காதலிக்கத் தோன்றும். 'எப்போ பார்த்தாலும் அடுத்தவன் காதலைப் பத்தியே சொல்றியேப்பா. உன் …
-
- 0 replies
- 1.5k views
-
-
இமயம் நோக்கி மீண்டும்… மழைப்பாடல் எழுதிக்கொண்டிருந்தபோது ஆரம்பித்த எண்ணம். அர்ஜுனன் பிறந்ததாகச் சொல்லப்படும் புஷ்பவதியின் சமவெளிக்குச் செல்லவேண்டும் என்று. உடனே, இக்கணமே, கிளம்பிவிடவேண்டும் என மனம் எழுச்சிகொண்டது. ஆனால் உடனே செல்லமுடியாது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில்தான் அச்சமவெளிக்குச் செல்லமுடியும். அரங்கசாமிதான் துடிதுடித்தார். உடனே விமானப்பயணச்சீட்டு போட்டோம். ஆனால் இந்த ஜூலையில் பருவமழை தள்ளிவந்து இப்போது உக்கிரமாகப் பெய்துகொண்டிருக்கிறது. உத்தரகண்டின் பல இடங்கள் மூடப்பட்டுவிட்டன. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஆகவே புஷ்பவதிக்கரை உட்பட நாங்கள் திட்டமிட்ட இடங்களுக்குச் செல்லமுடியவில்லை. ஆனால் பயணத்துக்கான மனநிலை வந்துவிட்டது. கொஞ்சநாள் மலையேற்றத்துக்…
-
- 3 replies
- 816 views
-
-
மண்டை மாக்கான் சுகுணா பிறந்தது 1998-ல் மார்ச் மாதத்தில் விடிகாலையில் என்று அவளே என்னிடம் சொன்னபோது கணக்கில் தகராறு நிரம்பிய நான் விரல்களில் ஒவ்வொன்றாய்த் தொட்டு மனக்கணக்கு போட்டேன். இப்போது 2017ல் இருக்கிறோம் அல்லவா! எப்படியோ கல்யாணம் கட்டிக் கொள்ளும் வயதில் சுகுணா இருக்கிறாள். இங்கே சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்திலோ அல்லது கோபி காவல் நிலையத்திலோ சுகுணாவும் முருகேசனும் மாலையும் கழுத்துமாக தஞ்சமடையும் வயதுதான். முருகேசன் என் பள்ளித் தோழன். கொளப்பளூர் நடுநிலைப்பள்ளியில் எட்டாவது வகுப்பு வரை என் பக்கத்திலேயே வகுப்பறையில் அமர்ந்து படித்தவன். மண்டை மாக்கான் என்றொரு பட்டப் பெயரும் பள்ளியில் அவனுக்கு இருந்ததாக ஞாபகம். மண்டை மாக்கான் என்ற பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கீதையடி நீயெனக்கு… (குறுநாவல்) மீண்டும் விலாசத்தை சரிபார்த்துக் கொண்டான் சந்திரன். சரிகைக் குஞ்சமெல்லாம் வைத்து அந்த அழைப்பிதழ் வெகு ஆடம்பரமாகவே அமைக்கப் பட்டிருந்தது. அவுஸ்திரேலிய தபால்காரருக்கு அழைப்பிதழ் விசித்திரமாகத் தெரியக்கூடும். அது தவறாமல் அந்த விலாசத்துக்கு போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவே, தெருவோரமுள்ள தபால்பெட்டி ஒன்றிலே போடாது, வடபழனி தபால் நிலயத்துக்கு அவன் வந்திருக்கிறான். அவுஸ்திரேலிய தொடர் மாடிக் குடியிருப்புகளின் முன்னால் வீதி ஓரமாக, தபால் பெட்டிகள் புறாக் கூண்டுகள் போன்று அமைந்திருக்கும். வீதியில் வலம் வரும் விடலைகள் அதன் மினுமினுப்பில் கவர்ந்து அழைப்பிதழை உருவி எடுக்கலாம். இதனால் பாதுகாப்பாக அதனை வேறொரு தடித்த தபாலுறையில் வைத்திருந்தான். த…
-
- 2 replies
- 1.2k views
-
-
காக்கைச் சிறகினிலே அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அருகில் போய் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை, இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா? அப்போது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர். சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு தினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிரு…
-
- 0 replies
- 900 views
-
-
அது ஒரு கற்பனை செய்து பார்க்க முடியாத பயண அனுபவம். அதுவும் இலங்கையில் பிறந்த தமிழன் அதுவும் புலம் பெயந்த நாடுகளில் ஒன்றில் இருந்து இலங்கைக்கு சமாதான காலத்தின் பின் யுத்தம் தொடங்கிய அந்த காலங்களில் செல்லும் போது புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்ககட்சிகளில் வெளிவரும் செய்திகளை படித்தபின் அடி வயிற்றில் புளியை கரைக்காதா என்ன ? விமான நிலையத்தில் கடத்தல்கள், அதுவும் தாண்டி கொழும்பு நகருக்குள் சென்றால் அங்கு கடத்தல் அல்லது காணாமல் போதல், அதுவும் தாண்டி நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு குறிப்பாக வடபகுதிக்கு போனால் உயிருக்கே உத்தவாதம் கிடையாது என்ற பாங்கான செய்திகளையே புலம் பெயர் ஊடகங்கள் அந்த நாட்களில் வெளியிட்ட வண்ணம் இருந்தன. ஆனால் ஆங்காங்கே இ…
-
- 90 replies
- 8.9k views
-
-
அவன் வெற்றிமனையை அடைந்த போது நேரம் பதினோரு மணியை தாண்டி இருந்தது. கொளுத்தும் வெய்யிலின் வெம்மையினால் வழிந்த வியர்வையினை துடைத்து கொண்டு அந்த கட்டட முனையை தாண்டும் போது தான் அவளைக் கண்டான். எங்கிருந்து வந்தாள் என்று தெரியவில்லை. அவன் எதிர் பார்க்கவும் இல்லை. அவனை கட்டி அணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள். "சிவா நேற்று அல்லவா வாறதாக சொன்னீர்கள். ஏன் இவ்வளவு தாமதம். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்ற எண்ணம் கூட இல்லாத அளவுக்கு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்". இவனை அவள் பேசவே விடவில்லை. "நாளைக்கு கல்யாணம் என்றீர்கள் ..இப்படியா தாமதமாக வாறது. நான் பயந்தே போய்விட்டேன் தெரியுமா" அவள் பேசி கொண்டே இருந்தாள். என்ன செய்வது என்றே புரியாமல் விழித்தான் கார்த்த…
-
- 15 replies
- 4.9k views
-
-
அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம். அம்மா அழுது கொண்டேயிருந்தாள். யுகங்களுக்கும் ஆறாத துரங்களும் வலிகளும் அம்மாவின் நெஞ்சுக்குளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. மூத்தவன் பற்றி இளையவன் பற்றி நடுவிலான் பற்றி அம்மா ஆயிரம் கதைகளைத் தனது ஞாகபச்சேமிப்பிலிருந்து மீட்டுக் கண்ணீரால் வெளியேற்றிக் கொண்டிருந்தாள். ஒண்டெண்டாலும் மிஞ்சியிருந்தா நான் எப்பன் நிம்மதியா இருந்தருப்பனெல்லோம்மா….? உழைக்கிற வயதுப்பிள்ளையளை சாகக்குடுத்திட்டு நானிப்ப தனிச்சுப் போனன் தாயே….! என்ரை சின்னப்பிள்ளையும் நானும் கடைசியானெண்டாலும் வருவனெண்டுதான் காத்திருந்தமம்மா….! என்ர குஞ்சு அவனும் வரேல்ல….! நானென்ன செய்வன் இந்தப்பிள்ளைக்கும் நஞ்சைக்குடுத்து நானும் சாவமெண்டு கூட ஒருத…
-
- 7 replies
- 4.2k views
-
-
எதிர்ப்பு "...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..." காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம். அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது. காகங்களின் கூடு மரத்தின் …
-
- 2 replies
- 2.4k views
-
-
சாந்தமு லேகா - சிறுகதை “ராத்திரி 10 மணிக்கு மேல கேட்டைப் பூட்டிருவோம். கரன்ட் பில் யூனிட்டுக்கு இவ்வளவு குடுக்கணும். வெஜிட்டேரியன்ஸ்க்கு மட்டும்தான் வீடு. சினிமாக்காரங்களுக்கு வீடு கிடையாது. அபார்ட்மென்ட்ல நாய் வளர்க்கக் கூடாது.” இதுபோன்ற எந்த கண்டிஷனும் இல்லாத வீடு சென்னையில் வாடகைக்குக் கிடப்பது கனவிலும் நடக்காத விஷயம். வீடு என்றால் ஃபிளாட். பல மாடிக் கட்டடத்தில் ஒரு ஃபிளாட். சின்மயா நகரிலுள்ள ‘சாந்தலேகா அபார்ட்மென்ட்ஸ்’க்குக் குடிவந்த புதிதில் ஷைலஜாவுக்கு இந்த சுதந்திரத்தை முதலில் நம்பவே முடியவில்லை. முகப்பில் வரையப்பட்டிருந்த வீணை ஓவியத்தைப் பார்த்ததுமே அவள் சௌந்தரிடம் சொல்லி விட்டாள். ‘எனக்கு இதைப் பார்க்கும் போதே நல்லதா தோணுது.’ நல்லதாகத்தான் நட…
-
- 0 replies
- 2.4k views
-
-
எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! இந்திரா பார்த்தசாரதி வா சல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா? டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்... ‘‘இவ்வளவு பெரிய அட்டாக்... நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!’’ தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன். உலகத்தில் நடப்பன அனைத்த…
-
- 0 replies
- 941 views
-
-
பிரான்சிலிருந்து டென்மார்க் பயணம். அத்தானின் ஒரு வருட துவசம் என்பதால் பொருட்களையும் வாங்கி அவசரமாக புறப்படுகின்றோம். இரவு ஓட்டம் பலகாரச்சூடு சமையல் என ஆட்கள் தேவை என்பதால் யேர்மனி சென்று அங்கிருக்கம் அக்காவையும் எற்றிக்கொண்டு பயணம் தொடங்குகிறது..... நான் தான் வாகனத்தை ஓட்டுகின்றேன். ஒரு 20 கிலோமீற்றர் (அக்காவீட்டிலிருந்து) போயிருப்பேன்.. வாகனம் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.. நான் இறுதி வரிசையில் (வேகப்பாதை) ஓடிக்கொண்டிருக்கின்றேன். திடீரென எனது பாதை முடிவடைவதற்கான பதாதை ஒன்று கண்ணில் தெரிகிறது. பாதை முடிவடைகிறது என்று தெரிகின்றதே தவிர அது எத்தனை மீற்றரில்முடிவடைகிறது என்பதை வாசிக்கமுடியவில்லை. முன்னால் பார்க்கின…
-
- 30 replies
- 3.2k views
-
-
நிமிடக்கதை: நல்லா கதை விடுறாங்க! இன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது. அதற்குள் புடவை மாற்றி, முக டச்சப் செய்து, லேசாக வெள்ளை தெரிய ஆரம்பித்த முடி ஆரம்பங்களைக் கறுப்பு மை இட்டு மறைத்து... படப்படப்போடு கையும் படபடத்தது. "நந்தினி, அம்மா நந்தினி.... நெஞ்சு கரிக்குது, இருமல் நிக்காம வருது பார்...கொஞ்சம் சுக்கு வெல்லம் தட்டிப்போட்டு சுடு தண்ணீ எடுத்தா...." உள் அறையில் இருந்து கேட்டது குரல். அலங்காரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள். "என்ன நந்தினி...ரெடியா? மசமசன்னு சமையல் அறையிலே நிக்குற. நேர…
-
- 0 replies
- 1.5k views
-
-
இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்ப…
-
- 10 replies
- 2.1k views
- 1 follower
-
-
துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன் 1 இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன், எல்லா TV காரரும் தங்களின்ர தலைப்புச் செய்தியில பிரபாகரனின்ர சடலத்தையும், மூளையையும் தகட்டையும், பிஸ்டலையும் பல்வேறு கோணங்களில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி குறைந்தது ஐந்து பத்து நிமிடங்கள் நீடித்தது. இதற்கு அடுத்ததாக, பிரபாகரனது மகன் சாள்ஸ் அன்ரனியினது உடலைக் காண்பித்தார்கள். மூன்றாவதாக பிரபாகரனது மகள் துவாரகா என ஒரு உடலைக் காண்பித்தார்கள். இவ்வளவு சங்கதிகளையும் எங்கட தமிழ் ஆக்கள் TV-யில பார்த்துக்கொண்டிருக்கினம் - என்ன செய்யிறதென தெரியாத பதகளிப்புடன். கொஞ்சப் பேருக்கு சந்த…
-
- 8 replies
- 3.3k views
-
-
தாழ்ப்பாள்களின் அவசியம் அ.முத்துலிங்கம் அம்மாவுக்குக் கனடாவில் நம்ப முடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்குப் பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்குப் பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்குப் பூட்டு இருந்தது. பெட்டகத்துக்குப் பூட்டு. வாசல் கதவுக்குப் பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாகப் பூட்டு மயம். ஆனால் கனடாவில் குளிர்சாதனப் பெட்டிக்குக்கூடப் பூட்டு இல்லாதது மன்னிக்க முடியாத குற்றமாக அம்மாவுக்குப் பட்டது. எல்லாக் குளிர்சாதனப் பெட்டிகளும் பூட்டோடு வரும் என்றுதான் அவர் நினைத்தார். கொழும்பில் இருந்தபோது அவர் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே வர…
-
- 1 reply
- 980 views
-
-
சிப்பமாய் கட்டின புகையிலை எல்லாம் லொறில ஏத்தியாச்சோ.. விடிய 6 மணிக்கெல்லாம் சரக்கு கிளிநொச்சிக்கு போக ரெடியாக இருக்க வேணும்... எல்லாரும் எழும்புங்கோடாப்பா.. முதலாளி வந்து சத்தம் போடப் போறார்.. கந்தர் அண்ணை புறுபுறுத்துக் கொண்டே படுக்கையை சுருட்டி ஒரு ஓரமா போட்டிட்டு.. கை கால் முகம் கழுவ குழாயடிக்குப் போனவர்.. கால்ல ஏதோ தடக்குப்பட.. குனிஞ்சு பார்த்திட்டு..என்ன இழவடாப்பா இது..இவன் குறுக்கால இதுக்க கிடக்கிறான்.. கும்பகர்ணன் போல..! எழும்படா எருமை.. எழும்பி முகத்தைக் கழுவு.. நேரம் ஆகுது.. என்று திட்டிக்கொண்டே.. அந்த தெருவோர தண்ணீர் குழாயடியில் வழிந்து கொண்டிருந்த தண்ணியை கையில தேக்கி வாங்கி.. கை கால்.. முகம் கழுவ ஆயத்தமானார். யாழ் ஆரியகுளம் பக்கமா.. சிங்கள ஆமிக்காரன்…
-
- 2 replies
- 647 views
-
-
[17] போனை வைத்துவிட்டு உட்கார்ந்தவனின் நெஞ்சம்.... இப்பொழுது மிகவும் கலங்க ஆரம்பித்தது. அவளுக்கு வீஸா கிடைத்ததை அறிந்ததும்... இன்னும் சில நாட்களில் அஞ்சலி தன்னை விட்டு தூரமாக பிரிந்து செல்லப் போகின்றாள் என்பதனை அவனால் தாங்கிக்கொள்ள இயலாமல் எண்ணங்கள் அல்லாடியது. "போக வேண்டாம் என்று சொல்லுவமோ..." என்றுகூட ஒருகணம் யோசித்துவிட்டு, "இல்லையில்லை... அவள் படிக்கட்டும்....! என்ர சின்னத்தனமான ஆசைக்காக அவளின்ர படிப்பைக் குழப்பக் கூடாது" என முடிவெடுத்தவனால்... அவளின் பிரிவினைத் தாங்கும் மனநிலைக்கு இலகுவில் வர முடியாமல்.... தவித்தான். அவனிற்கு அப்போது தேவைப்பட்டது 'தனிமை' ஒன்றுதான். சற்று நேரத்துக்கு எங்கேயாவதுபோய் தனிமையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டும்ப…
-
- 56 replies
- 11.8k views
-
-
தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுதில் தமிழய்யா அந்த வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். கைக்கிளை, பெருந்திணை, பசலை என்று எங்களுக்கு புரியாத ஏதேதோ வார்த்தைகளை அடிக்கடி அவர் உச்சரித்துக் கொண்டிருக்க, என் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலின் வாய் “ஆ”வென்று பிளந்து கிடந்தது. இரண்டு “ஈ”க்கள் அவன் வாய்க்குள் அடிக்கடி புகுந்து ஓட்டப் பந்தயம் நடத்தி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களை திறந்துகொண்டே தூங்க செந்திலிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். அடிக்கடி தலைவன், தலைவி என்றும் அய்யா சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் கலைஞர் தான், தலைவி என்றால் அது புரட்சித்தலைவி மட்டுமே. அவர் சொன்ன தலைவன், தலைவி சங்க இலக்கியத்தில் வரு…
-
- 3 replies
- 1.9k views
-
-
நந்தியாவட்டை பர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது. வயதான காலத்தில் பாட்டிக்கென்று என்ன இருந்து விடப் போகிறது? உடல் நலம் பேணுவதில் ஏதாவது உதவி கேட்பாளாயிருக்கும். “என்ன பாட்டி? இப்படித் தொந்தரவு குடுக்குற ஆளாயிருந்தா, நீ அத்தையோட வீட்லயே இருந்துக்க. இங்க வராத. இப்ப என்ன வேணும் உனக்கு?” “தங்கம், டேய்… இராசா, உங்க தாத்தன் நெனப்பைக் கூட்டியாறப் பொறந்த ஆளுடா நீ. பாட்டிக்குக் கண்ணு ரெண்டும் எதோ மசமசன்னு இருக்குடா. விஜயம்மா வீட்டுக்குப் போயி நாஞ்சொன்னேன்னு சொல்லு, நந்தியாவட்டைப் பூ பறிக்க விடுவாங்க. கொஞ்சம் நிறையவே பறிச்சுட்டு வாடா!” பாட்டிக்காகப் பூப்பறிக்க விஜயம்மா வீட்டுக்குப் போனான்.…
-
- 4 replies
- 914 views
-
-
ஈடுகள் ஐநூறு ரூபாய்க்குப் பக்கமான தொகையை அவர் நீட்டினார். அவன் வாங்கி கொண்டான். ஒரு பரம்பரைச் சொத்தின் மிச்சம் அது! எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய போது அவனைப் பெற்றவள் புதியவாடகை வீட்டின் மோட்டு வளையில் பார்வையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஒரு வகை பயம் கலந்த மௌனத்துடன் ஐநூற்றுச் சொச்சத்தை அவன் அவள் முன்னால் வைத்தான். அவள் அதைத் தொடவேயில்லை. மாறாக விழிகளில் கண்ணீர் கொப்பளிப்புடன் அவனைப் பார்த்தாள். "தயவு செஞ்சு அப்படிப் பார்க்காதம்மா... நான் இப்ப முன்ன மாதிரி இல்ல. மாறினவன்..." - அதைக் கேட்ட அவள் வாய் விட்டுச் சிரிக்க விரும்பி பின் தோற்று மெலிய சிரித்து ஆழ ஒரு பெருமூச்சை …
-
- 1 reply
- 775 views
-
-
இத்தாலிய சியாமா செட்டி குண்டு வீச்சு விமானங்கள் குத்தியடிச்சு குண்டு போட்ட காலமெல்லாம்.. போய் ரஷ்சிய மிக்-27 லேசர் வழி பாதை காட்ட உயர இருந்தபடி குண்டு வீசும் காலமெல்லாம் கண்ட அந்தக் கவிஞனின் ரங்குப்பெட்டியும் முள்ளிவாய்க்கால் மணல்களிடை அநாதை பிணங்களோடு பிணமாய்க் கிடந்திருக்க வேண்டும். அதற்குச் சாட்சியாய் இரத்தக் கறைகளோடு கறள் கட்டி இருந்தது அது. காலில் தட்டுப்பட்டதற்காய் அதன் கவனம் என்னைக் கவர... திறந்து பார்த்தேன்.. செக் குடியரசின் மல்ரி பரல்கள் வீசிய எரிகுண்டுகளின் கந்தக வாசம் மூக்கை எரித்தது. இத்தாலிய தயாரிப்பில் ராஜீவின் ஊழலில் கிடைத்த போர்பஸ் பீரங்கிகள் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் வெடித்துத் தள்ளிய எறிகணைகளின் சிதறல்கள் பட்டு ஏற்பட்டிருந்த துவாரங்கள் வழி ம…
-
- 9 replies
- 1.6k views
-