Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. தங்கச்சி.. புள்ள.. என்னம்மா.. எங்க புள்ள போயிட்டு வாறா..?! உவர் எங்கட கணேஷ் மாமா பிரான்சில இருந்து வந்திருக்கிறார் எல்லோ.. அவர் வீட்ட தானம்மா போயிட்டு வாறன். ஏன் புள்ள சொல்லாமல் கொள்ளாமல் போனனி.. இப்படித்தானே புள்ள பள்ளிக்கூடம் போறன் என்றிட்டு சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்கு ஓடிப் போயிட்டா. அதுக்கு பிறகு முள்ளிவாய்க்கால்.. வன்னி காம்புகள் என்று அலைஞ்சு திரிஞ்சு.. தண்ணி சாப்பிடில்லாமல் கிடந்து.. கொப்பரும் கிபீர் அடியோட போய் சேர.. தனிக்கட்டையா எவ்வளவோ கஸ்டப்பட்டு.. உந்த வவுனியாவில நிக்கிற அறுவாங்களின்ர காலை கையைப் பிடிச்சு கெஞ்சிக் கூத்தாடி உன்னை எடுத்து வந்திருக்கிறன். ஓமம்மா. என்னை வெளில எடுக்க கணேஸ் மாமாவும் ஈபிடிபி ஆக்களுக்கு புளொட் ஆக்களுக்கு…

  2. Started by கோமகன்,

    மனுவேல் பொன்ராசாசாவிற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றோராம் வருடம் ஜனவரி மாதம் ‘கப்டன்’ பட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது. அந்தச் சம்பவம் பின்வருமாறு நிகழலாயிற்று: ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறாம் வருடம் ஜுன் மாதம் யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்கள் சிக்கியிருந்தார்கள். கோட்டைக்கான அனைத்து வழங்கல்களும் புலிகளால் துண்டிக்கப்பட்டன. சிறியரகக் ‘கிரேன்’களின் உதவியுடன் புலிகள் கோட்டை மதில்களில் ஏற முயன்றுகொண்டேயிருந்தார்கள். கடலிலிருந்து கோட்டைக்குள் படகில் செல்வதற்கான இரகசிய வழியொன்றுமிருந்தது. புலிகள் அந்த வழியால் சிறிய வள்ளங்களில் சென்று கோட்டைக்குள் புக முயன்றார்கள். புலிகளின் ஆட்லரிக…

    • 18 replies
    • 2.5k views
  3. ‎அந்த நகர மைய குறீயீடாக அமைந்திருக்கின்ற மணிக்கூட்டு கோபுரமடியில் இருந்து அந்த பிராந்தியத்தையே அலறவைத்து வந்தது ஒரு சத்தம்..சத்தம் என்றால் வெறும் சத்தமல்ல ஊரிலுள்ள கெட்டவார்த்தைகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்த மாதிரி அது. மிஞ்சினால் ஒன்றோ இரண்டோ மூன்றோ மூல தூசண வார்த்தைகள் இருந்திருக்கும் . அதை பல வடிவத்தில் மாற்றி பல வார்த்தை ஜாலங்களில் தொடர்ச்சியாக அந்த பிரதேசத்தையே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது. அந்த கல்லூரி வாசலினூடாக சந்தையில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு பையோடு ஏதோ யோசனையுடன் செல்லும் நடுத்தர வயது மனிதர் கூட இச்சத்தத்தின் அர்த்தத்தை மனதுக்குள் ரசித்து உதட்டில் சில கணம் புன்னகையை வைத்து எடுத்து விட்டு செல்லுகிறார்..நூலகம் நோக்கி செல்லும் பருவ பெண்கள் கூட ஒருவரை ஒருவர…

  4. அவன் ஓடி கொண்டிருந்தான். அவர்கள் துரத்தி கொண்டிருந்தார்கள். அதிகாலை மூன்று மணியை தாண்டி இருந்தது. வீதியில் ஆளரவமே இல்லாத அந்த வேளையில்.. இவர்களின் ஆடு புலி ஆட்டம். அவர்கள் மூன்று பிரிவாக வந்திருந்தார்கள். அவனும் சளைக்கவில்லை.. அவர்களுக்கு தண்ணி காட்டி ஓடி கொண்டே இருந்தான். தலைநகரில் அந்த வேளையில் அவர்களின் அலைபேசிகள் விட்டாமல் கத்தி கொண்டிருக்க... இவன் ஓடி கொண்டே இருந்தான். இவர்களிடம் உயிரோட பிடிபடக்கூடாது. இது மட்டும் தான் இப்போ அவன் நினைக்கும் ஒரே எண்ணம். இவனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. இவன் உடலை, ஆக குறைந்தது இவன் முகத்தையாவது சேதமில்லாமல் எடுக்கவேண்டும் இது அவர்களுக்கான ஒரே கட்டளை. என்னை வைத்து, என…

  5. மூன்று நகரங்களின் கதை – க.கலாமோகன் அப்பா இறந்துவிட்டார் யாழ்ப்பாணத்தில். காலையில்தான் தந்தி வந்தது. பாஸ் எடுத்து கொழும்பில் வந்து நிற்கும் உறவினர்களுடன் நான் உடனடியாகப் பேச வேண்டும் என்பதை தெரிவிக்கும் சிறு குறிப்பு: Contact Immediately. தந்தி கிடைக்குமுன் எழுதத் தொடங்கிய சிறுகதையின் பக்கங்கள் சில மேசையின் மீது அலங்கோலமாகக் கிடக்கின்றன. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு கீழேயிறங்கி சிகரெட் விற்பனை நிலையமொன்றில் நுழைந்து சில ரெலிகாட்களை (பொதுத் தொலைபேசி நிலையத்திலிருந்து பேசுவதற்காக உபயோகிக்கப்படும் கார்ட்கள்) வாங்கிய பின், தொலைபேசிக் கூடமொன்றிற்குள் போய் கொழும்பிற்கு அடிக்கின்றேன். “சாப்பிடப் போய்விட்டார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து எடுங்கள். அவ…

    • 18 replies
    • 2.5k views
  6. என் உள் மனது இன்றைக்கும் உச்சரிக்கும் ஓர் பெயர் நிவேதா.... எத்தனை புயல்கள், எத்தனை பூகம்பங்கள், எத்தனை ஆழிப்பேரலைகள் வாழ்வில் வந்து தாக்கிவிட்டுச் சென்ற போதும் எல்லாக் காயங்களையும் கொஞ்ச நேரமாவது ஆற்றிக்கொள்ளும் மருந்தாய் என் வாழ்வில் தென்றலாய் வந்து வருடிச்செல்லும் ஓர் பெயதான் நிவேதா.... ஆம் பாடசாலை செல்லும் வயதில் ஏற்பட்ட பருவக்காதல் தான். பலரும் சொல்வார்கள் பாடசாலை செல்லும் வயதில் ஏற்படுவது உண்மையான காதலல்ல அது ஓர் இனக் கவர்ச்சியென்று. அது இனக் கவர்ச்சியானால் ஏன் அது இன்றைக்கும் நீடிக்கிறது, அவள் பெயரின் நினைவு இன்றைக்கும் ஏன் என் நினைவை வருடிச் செல்கிறது, ஏன் என் நினைவைவிட்டு அகல மறுக்கிறது.... சரி.. சரி... வாருங்கள் என் வீட்டு அடுப்படியில் இருந்து அவள்…

  7. அவனுக்கு இன்று அரசாங்க முத்திரை இடப்பட்டு வந்த கடிதத்தை பார்த்ததிலிருந்து உப்பிடித்தான் இருக்கிறான்.வீட்டுக்கு அண்மையிலுள்ள சந்தியை இதற்க்குள் வந்து விட்டேன் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது,.இப்ப கொஞ்ச நேரம் முன் தான் அந்த டச்சு கிழவனிடம் விடைபெற்று வந்த மாதிரி இருந்தது, அவனை அறியாமால் வருபவர்கள் போவர்களுக்கு வழி விட்டு மற்றும் திரும்ப வேண்டி இடத்தில் திரும்பி நிற்க வேண்டிய இடத்தில் நின்று இவ்வளவு தூரத்தை நடந்து கடந்தது ஒரு நிமிடத்துக்குள் என்ற மாதிரி இருந்தது.அதற்கு காரணம் அவனுக்கு தெரியாததல்ல,, .எண்ணங்களோடு முட்டி மோதி சமாதனப்படுத்தி இருக்கும் பொழுது மறுபுறத்தில் தீடிரென்று கொழுந்து விட்டு எரியும் மனக்குமுறல்களை தணித்து ஆழ்மனத்தை அடக்குவதில் செலவழி…

  8. அன்று சாய்சுரேசுக்கு தூக்கமே வரவில்லை காரணம் தாத்தாவினதும் அம்மாவினதும் ஊருக்கு போற சந்தோசத்தில்.தாத்தாவும் அம்மாவும் அவர்களின் ஊரை பற்றி அதிகமாகவேசொல்லி இருந்தார்கள்.தாத்தா சொன்னவைகளை சாய் நினைத்து பார்கிறான்,தாத்தாவின் ஊர் கிணற்று தண்ணியை குடித்தால் இனிக்கும் அதில் குளித்தால் அரைவாசி வருத்தம் போய் விடும் என்று கூறியவை,கருத்தக் கொழும்பான் மாம்பழமும் புட்டும் சாப்பிட வேண்டும்,இங்கத்தய அப்பிள் அதுக்கு பிச்சை வாங்க வேண்டும்,வீட்டில் அடி வளவில் இருக்கிற பிலாபழம் பழுத்தால் வீட்டுகுள்ளேயே வாசம் வரும் என்று கூறியவை,கொழும்பு யாழ் ரயில் பயணத்தை பற்றி கூறியவை தாத்தாவின் வாகனத்தை கூறியவைகள் எல்லாம் அவனுக்கு தாத்தாவின் ஊரை பற்றி அதிக கற்பனைகளை உருவாக்கி விட்டது. …

    • 18 replies
    • 3.9k views
  9. Started by Manivasahan,

    ............................................................................... இன்னும் விடியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்துகொண்டிருக்கின்றன. சூரியனைத் துயிலெழுப்ப வேண்டுமே என்ற அங்கலாய்ப்பில் அடிக்கடி தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுச் சேவல், இருளரக்கன் அகலப் போகிறான் என்ற குதூகலத்தில் பாடிக் களிக்கும் புள்ளினங்கள், சாதகம் பண்ணுவதாகக் கூறிக்கொண்டு அக்கம் பக்கத்தாரின் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளும் முன்வீட்டுப் பென்சனியர் .... எல்லாம் வழமை போலத் தானிருக்கின்றன. "எழும்பித் தேத்தண்ணியைக் குடியுங்கோவன். விடிஞ்செல்லே போச்சுது" சாந்தியின் அதட்டலுடன் தான் எனக்கும் விடிகிறது. நான் கைப்பிடித்தவள் தான் சாந்தி. இன்னும் சரியாகச் ச…

    • 18 replies
    • 3.8k views
  10. ஆட்டிசம் வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்? ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப் பெற்றோரைப் போலவும் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு சிறிய வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கொண்டிருந்தவர்களுக்கு எப்போது தம்பிள்ளை தங்களைப் பார்த்துச் சிரிப்பாள், தூக்கச் சொல்லிச் சிணுங்குவாள, தவழ்ந்து வந்து செல்லக் குறும்புகள செய்து தங்களைச் சிரிக்க வைப்பாள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ந…

  11. முன் குறிப்பு: கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டு தொடரை படித்துப்பாருங்கள். http://www.ijigg.com/songs/V2AC4A0EP0 சிறு வயது முதல் ஈழத்தை விட்டு பிரிந்திருக்கும் என் தந்தை, தன் பிள்ளைகள் ஈழத்தையும்,தமிழையும் நேசிக்க வேண்டும் என்பதே தன் ஆசை என அடிக்கடி சொல்வார். அதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் மாவீரர்தின மாதத்தில் இருந்து தை வரை ஈழத்திற்கு அழைத்து சென்றுவிடுவார். மூன்று அண்ணன்களுடன் இங்கு வசிக்கும் எனக்கு, அங்கு சென்றால் எண்ணிலடங்கா அண்ணன்கள் கிடைப்பார்கள். அப்படியான என் ஈழத்தை நோக்கிய பயணத்தில் அழுகைகளும், சோகங்களும், வீரமரணங்களும், அவலச்சாவுகளும், வெடிகளும், இரத்தமும், இடம்பெயர்வுகளும் சற்றும் குறைவில்லாமலே இருந்தது. ஆனாலும் அத்தனை இழப்புக்களையும் தாங்கும் சக்தி அ…

    • 18 replies
    • 4.3k views
  12. வணக்கம் உறவுகளே.... யாழ்களத்தில் முன்னர் உண்மைசம்பவங்களை கதைகளாக்கியிருந்தேன் அது பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது.அதே போல் மீண்டும் யாழ்களத்தில் நடந்து முடிந்த கோர யுத்தத்தினால் அவலப்படும் எமது உறவுகளின் இன்றைய நிலைகளை அவர்களுடன் தொலைபேசிஊடாக நேரடி உரையாடல் மூலம் சொன்னவற்றை அப்படியே கதையாக்குகின்றேன்.உங்கள் வரவேற்பு தொடர்ந்து இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் தொர்கிறேன்.நன்றி வன்னிப்பெருநிலப்பரப்பில் தமிழீழ அரசு ஒன்று நடைமுறையிலிருந்த காலகட்டம். பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் குண்டுச்சத்தங்களும் ஓய்ந்து தமிழ் மக்கள் மனதில் மகிழ்ச்சியும் அதே நேரம் தமிழீழ அரசின் நிருவாகம் என்கிற ஒரு கட்டமைப்பின் அடுத்த பரிமாணத்தில் புகுந்து…

  13. கடந்த ஞாயிறு சிட்னியில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்றது. வீட்டை விட்டு போக முடியாத நிலை. போக முடியாத நிலை என்பதை விட, வெளியே செல்ல மனம் இல்லை என்பதே உண்மை. காரணம் ஈழத்தில் சென்றவாரம் காலமாகியிருந்த என்னுடைய மாமா தான். இருப்பினும் தமிழனாக பிறந்துவிட்டு, பொங்குதமிழுக்கு போகாமல் இருப்பது, சொந்த அடையாளத்தை இழப்பது போன்றதல்லவா. காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை பொங்குதமிழில் பங்கெடுக்க சென்றிருந்தேன். அந்த நான்கு மணி நேரங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அதிலும் எனக்கு, மாமாவின் மறைவும் மனதில் இருக்க போக, மிகவும் வேதனையான மணித்துளிகளாக அமைந்துவிட்டது. சென்றவாரத்திலிருந்து வீட்டில் மிகவும் சோகமான சூழல். துக்கம் விசாரிக்க வருபவர்களும், தூர தேசங்களிலிருந்து வரும் தொ…

    • 18 replies
    • 3.2k views
  14. காட்டாற்றங்கரை அத்தியாயம் 2 ------------------- வன்னிக்கு வருகிற போதெல்லாம் பாலனை யாருமே துயில் எழுப்ப வேண்டியதில்லை. அங்கு எல்லா இசைகளும் எண்ணற்ற இன்ப அழகுகளும் நிறைந்த அந்தக் காடு எப்பவும் கடிகாரங்களோடு அவனுக்காகக் காத்திருந்தது. போத்துக்கீசர் காலத்தில் இருந்தே காலம் காலமாய் ’கும்பிட்டு வாழ்கிலேன் நான்’ என்று நிமிர்கிற தமிழர்கள் புகல் என்று ஒன்றில் ராமேஸ்வரத்துக்கு அல்லது இந்த வன்னிக் காட்டுக்குத் தானே ஓடி வருகிறார்கள். நீண்ட பயணத்தின் உடற் சோர்வுடனும் வழியில் யானையிறவு கிழிநொச்சி மாங்குளம் என்று சோதனைச் சாவடிகளில் ஏறி இறங்கி சிங்கள் வசவுகளில் இழிவு பட்டு மன உழைச்சலுடனும் வருகிற பாலனைக் கணடதும் வரண்ட செம்புழுதியைத் துடைத்துக் கொண்ட…

    • 18 replies
    • 3.3k views
  15. ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தை சுட்டிருந்தால்….திருப்பி அடிப்பேன்! – சீமான் சிறையில் எழுதிய தொடர் – பாகம் 01 * Wednesday, December 15, 2010, 5:41 ‘எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்! என கூட்டத்தில் உரையாற்றியிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையானார். அவர் சிறையிலிருந்தபோது எழுதிய அதிரடி அனல் கனல் தொடர். தொடரின் முதலாவது பாகம்: ”ஏனடா எரிக்கிறாய் என்றோ, ஏனடா அடிக்கிறாய் என்றோ எவனடா கேட்டீர் அவனை? அடியென அவனுக்குச் சாட்டை கொடுத்தவனும் சுடுவென தோட்டா கொடுத்தவனும் தடை…

  16. "வெடி தியபங் ,ஒக்கம கொட்டியா,காண்டா...." என்று 2ஆம் லெப்டினட் பண்டாவின் குரல் கேட்க அவனின் கட்டளையை மதித்து கீழ் பணிபுரியும் சிப்பாய்கள் துப்பாக்கியால் சாரமாரியாக் சுட்டார்கள்.மக்கள் பதட்டத்தால் நாலாபக்கமும் சிதறிஅடித்து கொண்டு ஒடினார்கள்.ஒடமுடியாதவர்கள் அந்த இடத்திலயே வீழ்ந்து மடிந்தார்கள். பண்டா தனது மேல் அதிகாரிக்கு 6 புலிகளை சுட்டு கொண்று விட்டதாக தகவல் அனுப்பினான்.அவனை பாராட்டிய மேல் அதிகாரி ,இறந்தவர்களின் உடம்பை பெற்றொல் ஊத்தி எரித்துவிடும்படி கட்டளை இட்டான். "மாத்தையா மே ஒக்கம நாக்கிய மினிசு பவ்"(இவர்கள் எல்லாம் வயசு போன கிழடுகள் பாவம்)ஒட முடியாமல் வீழ்ந்து செத்துபோட்டுதுகள் என்றான் ஒரு சிப்பாய்.2ஆம் லெப்டினட் பண்டாவுக்கு கோபம் வந்துவிட்டது,இவன்கள்தான் அந்த கொட்ட…

  17. சுகுமாரனின் முகத்தில் அன்று மகிழ்ச்சி பரவியிருந்தது! அன்றைக்குத் தான் தனது முதலாவது சம்பளத்தை, அப்பா எப்போதும் செய்வது போலவே, அம்மாவின் கையில் கொடுத்திருந்தான். அம்மாவும் அப்படியே பணத்தை வாங்கி வைத்து விடவில்லை. அதைக் கொண்டு போய்ச் சாமிப் படத் தட்டில் வைத்து, அதில் இருநூறு ரூபாவை எடுத்து, அவனிடம் திருப்பிக் கொடுத்தா. அதை உடனடியாக வாங்கிக்கொள்ளாமல், சிறிது நேரம் சிந்தித்தான். அப்போது தான், வீரகேசரிப் பேப்பரில் இருந்து, தலையைத் தூக்கிப் பார்த்த அப்பா, அவனுக்கு இன்னுமொரு நூறைக் கொடுத்துவிடன் என்று கூறினார். அவனது கண்கள், பனித்தன. இவ்வளவுக்கும் அவனது மாதச் சம்பளம் அப்போது, எண்ணூறு ரூபாய்கள் மட்டுமே. அதில் நூறு ரூபாவைத் தனது, தங்கையிடம் கொடுத்தவன், அடுத்த நாளைக்கான கொழும…

  18. ஒய்வு நாட்களில் கணனிக்கு முன்னால் இருந்து, இணையத்தளத்தில் செய்திகளை படிப்பதுதான் கனகரின் பொழுது போக்கு. அன்றும் அவர் கணனிக்கு முன்னால் இருந்து செய்திகளை மிகவும் ஆர்வத்துடன் படித்துக்கொண்டு இருக்கும் பொழுது, உள்ளே வந்த மனைவி கீதா , நான் நினைச்சன் நீங்கள் இதில் தான் இருப்பீங்கள் நினைத்தது சரிதான். அப்பா ஒரு கொம்புயுட்டர் மகள் ஒருகொம்புயுட்டரில் தட்டிக்கொண்டு இருங்கோ, நான் மட்டும் குசினிக்குள்ள இருந்து வெந்து போறன் என்று புறு புறுத்தபடியே கனகருக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். மனைவி கொஞ்சம் சுடாகத்தான் இருக்கிறா என்று அறிந்த கனகர், மனைவியை சமாதானப்படுத்த(ஜஸ் வைக்க)சமைக்க கஸ்டமாய் இருந்தால் வாரும் எல்லோரும் ரெஸ்ரொரன்டில் போய் சாப்பிடுவம் என்றார். நான் அடுத…

  19. சில வருடங்களுக்கு முன்னர் யாழில் தான் நான் முதன் முதலில் கதை எழுத ஆரம்பித்தேன்...இப்பொழுது என்னுடைய சிறுகதைகளில் ஒன்று தாயகபறவைகள் இதழில் வெளியாகி உள்ளது... இந்த கதையும் யாழுக்கே சமர்ப்பணம்... தொடர்ந்து வாசிக்க....: http://thayakaparavaikal.com/stories.php

  20. "ஒரு பேஷண்ட் நர்ஸை லவ் பண்ணுறாரு. அவரு நர்ஸ் கிட்டே எப்படி ப்ரபோஸ் பண்ணுவாரு?" "சிஸ்டர் ஐ லவ் யூ" - இது எஸ்.எம்.எஸ்.களிலும், மேடை நாடகங்களிலும் பரிமாறிக் கொள்ளப்படும் ஒரு ஜோக். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு துரதிருஷ்டவசமான நிலை நான் பத்தாம் வகுப்பு படித்தபோது எனக்கு ஏற்பட்டது. பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்த்தாலே போதும், பசங்களின் உள்ளங்கள் பற்றிக் கொள்ளும். கயல் விழியாள். கொடி இடையாள். தாவணித் தென்றல். என் வகுப்பில் இருந்த 48 பேரில் குறைந்தபட்சம் 48 பேராவது அவளைக் காதலித்திருப்பார்கள். செம காம்பெடிஷன். வேறு பிகரை டாவடித்துக் கொண்டிருந்தவர்கள் கூட ஒரு கவுரவத்துக்கு இவளை காதலித்தார்கள். என் நண்பன் செந்திலும் (இவனால் தான் நான் குட்டிச்சுவரானேன்) நான…

    • 18 replies
    • 5.3k views
  21. மம்மி..... கதைப்புத்தகத்தில் கலந்திருந்த சுஜாதா நிமிர்ந்தாள் மம்மி நான் ஜெயிச்சுட்டேன் மம்மி கையில் கப்போடு கட்டிப்பிடித்த பாலாவை வாரியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். கண்கள் கலங்கின. என் செல்லக்குட்டி நீ எப்போதும் ஜெயிக்கணும்டா. படிப்பிலும் எந்த போட்டியாகினும் நீ வெற்றி பெறணும் என் செல்லத்தங்கம் என வாரியணைத்தாள். நான் பெரிய சம்பியனாகினால் என்ன மம்மி தருவீங்க என கண்கள் அகல விரித்து பாலா தாயை அன்போடு கேட்டான். எதுவானாலும் தருவேன்டா எனதன்பு செல்லமே என சுஜாதா வாஞ்சையுடன் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தாள் என்ன மம்மியோடு கொஞ்சல் என கேட்டுக்கொண்டே வந்த ரமேஷை கண்டதும் செல்லப்பைய்யன் பாலா தனது வெற்றியை தந்தயோடும் தாயோடும் சேர்த்து களித்தான். இருவரும் அவனை மாறி…

  22. Started by putthan,

    சுரேஸ் அவனது சினேகிதருடன் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவான்.சுரேஸும் அவனது சினேகிதர்களும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவனது பக்கத்து வீடு,முன்வீடு ,பின் வீடுகளில் இருந்த அவனது வயதை ஒத்த பெடியள்தான் அவனது கூட்டாளிமார்.ஐந்தாம் வகுப்பு மட்டும் அயலில் உள்ள பெட்டை பெடி எல்லாம் ஒன்றாக தான் அந்த புளிய மரத்தடியில் விளையாடினதுகள்.பிறகு பெட்டைகள் வாரதில்லை பெடியள் மட்டும் அந்த மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவாங்கள். புலத்தில இப்ப எங்கன்ட பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கின்ற பிராண்டட் கிரிக்கட் மட்டையோ அல்லது பந்து போன்றவை அந்த காலத்தில் சுரேஸுக்கோ அல்லது அவனது சினேகிதருக்கோ கிடைக்கவில்லை.விளையாட வேணும் என்ற ஆசை ஆனால் அதற்குறிய பொருட்கள்…

    • 18 replies
    • 1.6k views
  23. “காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்” சயிக்கிளில் முன்னால் பாரில் இருந்து எம்ஜிஆர் பாடிக்கொண்டு வாறார், நான் முக்கி முக்கி கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரி றோட்டில சயிக்கிளை உழக்குகின்றன். “டேய் கடைசி மேடு வரேக்கையாவது டபிள் பரல் போடடா “ “சொறி மச்சான், அதை கேட்டுவாங்கிப் போனால் அந்த கன்னி என்னவானாள்” எம்சியின் பாட்டு தொடருது. லண்டன் சிட்டியை தாண்டி TRAIN READING நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. எம்சியை பத்துவருடங்களுக்கு பின் சந்திக்க போய்கொண்டிருக்கின்றேன். எம்சிக்கு என்ன நடந்தது?. ஊரில என்னோட திரிந்தவர்களுக்குள் நேர்மை ,நீதி என்று எப்பவும் நிப்பவன் எம்சிதான்.வலிய வம்பிற்கு போக மாட்டன் வந்தால் விடமாட்டான்.இதனால் ஆனந்தன் என்ற அவனது பெயர் ஊரில் எம்ஜிஆர்…

    • 18 replies
    • 2.6k views
  24. கூப்பன் கடை...... (நினைவுகள் ) இஞ்ஞாருங்க மகள் சாப்பிடுகிறாள் இல்லை .ஒருக்கா என்னென்று கேளுங்கோவன் என்று என் மனைவி பத்மா சொல்ல சி மன்னிக்கவும் அஸ்வனா சொல்ல என் மனிசி பெயர்தான் பத்மா அவள் வெளி நாடு வந்த பிறகு அஸ்வனா என்று பெயரை மாற்றிக்கொண்டாள் .ஆனால் பாஸ்போட்டில் பத்ம அரசி தான் ஆனால் அது பழைய பெயராம் .ஆனால் நான் வாய்க்கு இனிமையாக பத்மா என்று கூப்பிட்டால் கூட ஒரு முறைப்பு முறைப்பாள் அதனால் வீட்டில் மட்டும் செல்லமாக அவளை பத்மா என்று கூப்பிடுவேன். ஏன் மகள் சாப்பாடு வேண்டாம் இல்லை அப்பா எனக்கு பசிக்கவில்லை என்றாள் மகள் அஸ்வினி.நானும் மனிசி என்ன செய்திருக்கிறாள் என்று பார்க்கபோனேன்.ஏனென்றால் இந்த ரீவில காட்டுற சமையல் குறிப்புக்களையும் விளம்பரங்களையும் பார்த்து ஏதாவது…

  25. நடுநிசி தாண்டியும் நித்திரை வராமால் தவித்தார் சுப்பர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் . அவரது அந்த பெயரை மட்டும் சொன்னாலே காணும் ஊரே முழங்காலில் நின்று மண்டியிட்டு மரியாதை செலுத்தும். அது எல்லாம் ஒரு காலத்தில். . நித்திரை இல்லாமால் தவிப்பதுக்கு வயோதிகமா அல்லது வேறு ஏதும் நீண்ட நாள் சுகபடாத வருத்தமா என பெரிய உடல் கூற்று ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை . என்ன என்றது மிக இலகு. இப்பவும் இடைக்கடை ஒலித்து ஓய்ந்து மீண்டும் ஒலிக்கும் மனித குரல்களின் கோரஸ் சத்தங்கள் தான் காதுகளில் தார் ஊற்றியமாதிரி அவரது நித்திரைக்கு பங்கம் விளைவித்து கொண்டு இருக்கிறது http://sinnakuddy.blogspot.com/2008/03/blog-post.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.