கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
சோபாசக்தி வர்றார்; சொம்பைத் தூக்கி உள்ள வை இந்திய பொதுவுடமை இயக்கத்தின் விடிவெள்ளி அன்புத்தோழர் சாரு மசூம்தார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு ஆவணங்களில் அதிலும் 1965ஆம் ஆண்டு 28 ஜனவரியில் “தற்போதைய சூழலில் நமது கடமைகள்“ என்ற தலைப்பில் எழுதப்பட்ட முதல் ஆவணத்தில் ஒரு பொதுவுடமை கட்சி கமுக்க (ரகசியம் அல்லது தலைமறைவு) கட்சியாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் அப்பொதுவுடமைக்கட்சியின் உறுப்பினர்கள் தலைமறைவு ஊழியர்களாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் குறித்து விளக்குவார். அதிலும் அவர் அதை “நமது அமைப்பின் முழக்கங்கள்“ என்ற தலைப்பின்கீழ் ஏழு முக்கிய குறிப்புகளாக வலியுறுத்துவார். நீண்டகால மக்கள் யுத்தமே இனிமேல் இந்த இருபது மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு பலனளி…
-
- 17 replies
- 2.2k views
-
-
சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?" வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னைத் திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " என்றேன். சரி என்பது போலத் தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க…
-
- 16 replies
- 2k views
-
-
இஞ்சாருங்கோ...இஞ்சாருங்கோ ஒருக்கா இதை வந்து பாருங்கோ என்று மனைவி கூப்பிட்டதால் ஏதோ அவசரவிடயமாகத்தான் கூப்பிடுகிறாள் என்று நினைத்தபடியே,என்னப்பா என்ன நடந்தது என்று அறைக்குள் ஒடினேன்.இஞ்சபாருங்கோ இவள் ரம்பா கலியாணம் கட்ட போறாளாம் பார்த்து கொண்டிருந்த இணையத்தளத்தை எனக்கு காட்டினாள். அட சீ இதுக்கு போய் இப்படி கத்துறீர்,நானும் ஏதொ அவசரமாக்கும் என்று ஒடிவந்தேன்,புறு புறுத்தபடியே இணையத்தை பார்த்தேன்.அவளும் பெண்தானே கலியாணம் கட்டுவதில் என்ன தப்பு .அவளுக்கும் உம்மைப்போல ஒரு ஆசை வந்திருக்கும் என்றபடியே அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன். பின் தொடர்ந்து வந்தவள் உங்களுக்கு இப்படியான நல்ல இணையங்களுக்கு போய் நல்ல செய்திகளை படிக்கத் தெரியாதே ? சும்மா வெடிகுண்டு ,துப்பாக்கி,மகிந்தா…
-
- 16 replies
- 3.6k views
-
-
ஈழத்தை நோக்கிய என் பயணங்களில் மறக்க முடியாதது இறுதியாக நான் என் மண்ணை தொட்டது 2005ஆம் ஆண்டு தான். எப்போதுமே ஆரம்பத்திற்கும் இறுதிக்கும் கிடைக்கும் கவனிப்பு அதிகம் தானே. முதல் பயணம் என்னை நானே அறிய முதல் நடந்தது. இறுதி பயணம் நானே என்னை மறக்கும் அளவிற்கு இன்று வரை கொண்டு சென்றுவிட்டது. பல காரணங்களில் ஒன்றை இப்பகுதியில் பார்க்கலாம். என் அப்பப்பாவின் நாட்டு பற்று தான் எங்கள் குடும்பமே தாய் நாட்டை நேசிக்க காரணமாக இருந்தது என்பது என் கருத்து. வெளிநாடுகளில் வாழ சந்தர்ப்பம் கிடைத்த போதும், வெளிநாட்டு வாழ்க்கை எப்படி என அறிந்த போதும்; “நீங்கெல்லாம் போய்ட்டு வாங்கோ, நான் என் மண்ணை விட்டு வர மாட்டேன்” என சொல்லி, இறுதிவரை தன் வார்த்தையை காப்பாற்றினார். ஊரில் இருந்த அப…
-
- 16 replies
- 3.7k views
-
-
எனக்கு அப்போது ஏழு வயதிருக்கும். என்னவென்று சொல்லத்தெரியாத ஓர் கனமான, பீதி நிறைந்த அமைதிக்குள் மூழ்கிக்கிடந்தந்தது எனது தேசம். மேலே நீறு மூடிக்கிடந்தாலும் முழு வீச்சுடன் வெடித்தெரியத் தயாராகிக் கொண்ட்ருந்த விடுதலை வேட்கைத்தீயின் வெப்பம் அவ்வப்போது ஆங்காங்கே தலை காட்டி, உயிரின் ஆழம் வரை சிலிர்க்கச் செய்து விட்டு மறைந்தாலும், அதை இன்னதென்று கிரகித்துக் கொள்ளும் பரிபக்குவமோ அறிவாற்றலோ முதிர்ச்சி அடையாத வயது. ஆகவே தென்றலாகத்தன் வீசிக் கொண்டிருந்தது எனது பட்டாம் பூச்சிப் பருவம். அன்று பாடசாலை விடுமுறை நாள். வறுத்த அரிசிமாவுடன் தேங்காய்ப்பூவும் சேர்ந்து வேகும் வசனை, புதிதாய்ப்புலர்ந்த காலைப்பொழுதின் உற்சாகத்திற்கு உரம் கூட்டிக்கொண்டிருந்தது. அம்மா சுடவைத்துத் த…
-
- 16 replies
- 2.4k views
-
-
பொன் ஐங்கரநேசன் வேளாண் விஞ்ஞானி ஆவரங்கால். ஒட்டியிருந்த தகரத்தில் கைவைத்து தள்ளிக்கொண்டே படலையை திறந்தேன். முற்றத்தில் மாமி விளக்குமாற்றால் கூட்டிக்கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு செம்பரத்தை மரம் பூராக பல வகைகளில் பூக்கள் பூத்து தொங்கின. கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு இருந்தது. அருகில் நின்ற எலுமிச்சையின் கிளைகளில் ஆங்காங்க பொச்சுமட்டை சுற்றிக்கட்டப்பட்டிருந்த பதியத்தில் தண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. வாழைமரங்களில் ரோசா மல்லிகை என்று குத்தப்பட்டு குறுக்கும் மறுக்கும் நீட்டிக்கொண்டு இருந்தன. ஒன்றில் மஞ்சள் நிறத்தில் பூத்தும் இருந்தது. “அந்த வாழைத்தண்டில குத்தின ரோசா பூத்திருக்கு மாமி” மாமி நிமிரவில்லை. கூட்டின புழுதி நாசியில் அடித்தது. …
-
- 16 replies
- 1.9k views
-
-
எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான பலப் பரீட்சை என இன்னும் நினைக்கவில்லை தானே என்று அப்பொழுது திருப்தி பட்டுக் கொண்டான். .நாட்டை விட்டு ஓடி எவ்வளவு காலத்துக்கு பிறகு திரும்பி வந்து ஒரு சாரமும் சேட்டுடன் காசுவலாக மூன்று மைல் நீளப்பாட்டுக்கும் நாலு மைல் அகலப்பாட்டுக்கும் கால் போன போக்கில் பைத்தியக்காரன் போல் நடந்து திரிகிறான், அப்படி ஒரு ஆசை இருந்தது அதில் ஒரு சந்தோசம் இருக்கும் என நினைத்து அப்படியே நடந்தாலும் இன்னும் ஒரு தெரிந்தவன் படித்தவன் கூட அவன் கண்ணில் தென் படவில்லை ..அட எல்லாரும் …
-
- 16 replies
- 2.5k views
-
-
அடோ ப(B )ள்ளா ! கொய்தி தியன்னே. கியபங். (அட நாயே ..எங்கடா இருக்கு சொல்லுடா) அந்த சீருடை அணிந்த மிருகம், அவனை எட்டி வயிற்றில் உதைத்தது. எனக்கு தெரியாது. அவன் இதை ஐம்பத்து மூன்றாம் தடவை சொல்லுகிறான். தலையை நீரினுள் அமிழ்த்தி, முகத்தில் பெற்றோல் பை கட்டி, மூக்கிலே மிளகாய் தூள் தூவி, வாய்க்குள்ளே சுடுதண்ணி ஊத்தி, உடம்பிலே மின் பாய்ச்சி, தலைகீழாக கட்டி அடிச்சு, குறட்டினாலே நகம் புடுங்கி, கையிலே ஆணி அடிச்சு, ஆணுறுப்பை உயிர் போக அழுத்தி, கால்களை அமில வாளிக்குள் தோய்த்து, அந்த மிருகத்துக்கு தெரிந்த சித்திரவதை எல்லாம் பண்ணி பார்த்தாச்சு. இப்போ அவன் முதுகிலே மின்அழுத்தியை (Iron Box ) அழுத்தியபடி மீண்…
-
- 16 replies
- 1.8k views
-
-
சற்றிங் சாலையில்.... காலை நேரம் பல்கலைக்கழக வாசலில் ஒரே கூட்டம். பஸ்ஸில் இருந்து இறங்கிய சங்கர் ஓட்டமும் நடையுமாய் அவசரமாய் போய்க் கொண்டிருந்தான். அவனை வாசலில் கண்டுவிட்டு ஓடி வந்த துசி " டேய் சங்கர் எங்க போறா... ஒப்படை (அசைன்மெண்ட்) கொடுக்கிறதுக்கோ, நில்லு நானும் வாறன்". அதுக்கு சங்கர்.. இல்லையடாப்பா, சின்னப் பிரச்சனை ஒன்று, என்ர நண்பிகள் அவசரமா வரச் சொல்லி போன் பண்ணிச்சினம் அதுதான் போறன். "இன்று ஒப்படைக்கு இறுதி நாள் எல்லோ.. சரி சரி நீங்கள் போய் அவைக்கு விலக்குப் பிடியுங்கோ.. நான் ஒப்படை கொடுக்கப்போறன்" சங்கர் பல்கலைக்கழகம் வந்த புதிதில் அப்பாவியாகத்தான் தெரிந்தான். பின்னர் நாட்கள் போகப்போக நண்பிகளோடு சுற்றுவதும் அவர்களோடு கடலை ( அரட்டை) போடுவதும் "காட்ஸ்" வி…
-
- 16 replies
- 2.4k views
-
-
தாயும் நீயே தந்தை நீயே .......... லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பலரோடு லதாங்க்கினி யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின் பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி கொடுத்த பின் எரியூட்ட பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து ஒரு விடுதிக் நிர்வாகி மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் த…
-
- 16 replies
- 5k views
-
-
குகனும்,மதனும் பாலர் பாடாசலை முதல் உயர்தரம் வரை ஒன்றாக படித்தவர்கள் மதன் இடையில் ஒருவருடம் கொழும்பில் படித்தவன்.இருவருக்கும் மருத்துவராக வேண்டும் என்ற நினைப்பு ஆனால் முயற்சி இல்லாமல் உயர்தரம் மூன்று முறை எடுத்தும் முயற்சி வெற்றி அளிக்கவில்லை.தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மதனிம் மாமன் கொழும்பு வரும்படியும் அங்கு ஜ.சி.எம்.ஏ செய்ய வரும் படி கடிதம் போட்டிருந்தார் மதனிற்கு அந்த யோசனை நல்லதாகபட்டது உடனே குகனையும் வரும்படி கேட்டான் குகன் மறுத்துவிட்டான் உயிரியல் பாடம் படித்துவிட்டு எனி முதலே இருந்து கணக்காளர் படிப்பு படிக்க என்னால் முடியாது என்று மறுத்துவிட்டான்.மச்சான் நீ வராவிட்டால் உன்னுடைய ரிசல்ட் சீட் கொப்பி ஒன்றும் தரும்படி கேட்டான் குகன் ஒன்ற…
-
- 16 replies
- 4k views
-
-
விசேட இ-மெயில்கள் உருவாக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவுக்கு செயல் வடிவம் கொடுக்க இந்த பதிவை எழுதுகின்றேன். எங்கள் முதலாவது இ-மெயில் ஆக என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, எமது யாழ்கள நண்பர் வானவில் எழுதிய “இங்கே எத்தினை பேருக்கு போரட்டம் பற்றி தெரியும்....? எனக்கு கூட போரட்டம் நடக்குது என்று தெரியும், ஆனால் யாழ் வந்தபிறகுதான் அதன் முக்கியதுவம், நாங்கள் அதற்க்கு எப்படி உதவுவது என்ற பல விடயங்களை அறிந்தேன், இதை பொறுத்தவரையில் யாழுக்கு வெற்றிதானே. முடிவுக்குப் போகமுதல் ஆரமபம் தெரிய வேண்டும். தற்போது யாழில் அது 100% வெற்றிகரமாகவே நடக்கின்றது. எத்தனை பேர் யாழ் வந்த பிறகு என்னைப் போல போரட்டத்தைப் பற்றி பலமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.” என்ற கூற்றுக…
-
- 16 replies
- 3.7k views
-
-
முருகா.... நீ ஏன் இப்படிக் கோவணத்துடன்...... இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரமணன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன…
-
- 16 replies
- 5k views
-
-
யாழ் இணைய நண்பர்களையும் உங்க்ளுக்கு பிடித்த ஆறு ப்ற்றி கூறி.. இந்த விளையாட்டை இங்கையும் தொடரும் படி இந்த சின்னக்குட்டி அன்புடன் கேட்டு கொள்ளுகி்றான் http://sinnakuddy.blogspot.com/2008/10/blog-post.html
-
- 16 replies
- 2.1k views
-
-
இனியெண்டாலும் ஒற்றுமையா நிண்டு.....! (குறிப்பு :- இவ்வாக்கம் சுயசரிதமில்லை. விடுதலைக்காக வாழ்ந்த ஒருவரின் நிலமையைப் புரிந்து கொள்ளாமல் கிடைக்கவிருந்த உதவியைத் தடுத்தாட்கொண்ட ஒரு குழுவின் போக்கினைப் பதியவும் , தனித்தே இயங்குகிற நேசக்கரம் அமைப்பினை எவரோ இயக்குவதாக பொய்யுரைக்கும் பொய்யர்களுக்கு உண்மையைப் புரிய வைக்கவுமே எழுதியுள்ளேன். ஸ்கைப்பிலும் தொலைபேசியிலும் சிலருக்குள் நடைபெறுகிற உரையாடல் பக்கசார்பற்ற உதவிகளையும் கேள்விக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பொய்யான நம்பிக்கைகளையும் விதைத்துவிடுகிறது. ஆயிரம் வார்த்தைகள் பேசி பெரிய தலைகளின் விமர்சனத்தை வாங்குவதிலும் பார்க்க பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களின் வாழ்வுக்கு உதவிபுரிகிற மனிதநேயர்களும் உண்மையைப் புரிந்…
-
- 16 replies
- 1.7k views
-
-
இந்த உலகத்தில் பைத்தியங்கள் அதிகரித்து கொண்டு செல்கின்றது காரணம் நாம் ஒவ்வொரு பொருளின் மீதும் பைத்தியமாக இருக்கிறோம் உதாரணம் பணம் , பொருள் , நகைநட்டுக்கள் அடுத்தவன் சொத்துக்கள் ( மண் , பொண் ) இன்னும் பல இதை உங்கள் கண்ணாடியை பார்த்து கேட்டால் தெரியும் .நாம் பைத்தியமா இல்லையா என்று. உன்மையில் பைத்தியம் இல்லாதவரை நீங்கள் பைத்தியாமா என்று சொன்னால் அவர் சிரிப்பார் அல்லது முறைப்பார் .அதுவே பைத்தியமே இல்லாத ஒருவரை பைத்தியகார அதாவது மனநல நிலையங்கள் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் கண்டு அவரை பைத்தியம் என்று சொன்னால் அவர் மனம் எவ்வளவு பாடு படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் அது போல எந்தன் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த உலகத்தில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான…
-
- 16 replies
- 5.1k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே அண்மையில் சாந்தியின் ""சொல்லியழுதிட்டன்"" என்கிற கதையைப் படித்த பலரும் ஆண்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்த
-
- 16 replies
- 2.8k views
-
-
யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி அக்கா...! அவ்வப்போது தொலைந்து போகிறவன் இடையிடை இப்படித்தான் அழைப்பான். கிட்டத்தட்ட 3மாதங்கள் தொடர்பறுந்து போனவன் நேற்று மீண்டும் அழைத்திருந்தான். எங்கைசாமீ ஒளிச்சிருந்தனீங்கள்...? ஒரு எஸ்எம்எஸ் கூடப்போட நேரம் கிடைக்கேல்லயோ ? நாய்க்கென்ன வேலை அது ஓடிக்கொண்டுதானேயக்கா இருக்கும்.... அப்ப நாய் வாழ்க்கை இன்னும் முடியேல்லெயெண்றீங்களோ...? அதெங்கக்கா முடியுறது....? எவ்வளவோ துயரங்களையும் வலிகளையும் மனசுமுட்டச் சுமந்து கொண்டிருந்தாலும் தொடர்பில் வருகிற நேரங்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டவன் போல கதைக்க ஆரம்பித்துவிடுவான். வளமையான சுகநல விசாரிப்புகள்....குடும்பம் குழந்தைகளில் ஆர…
-
- 16 replies
- 2.7k views
-
-
ஒரு நடுத்தர குடும்பத்தில் மூத்தவளாக பிறந்து சின்னனில் இருந்து வறுமையோடு வளர்ந்து,பெரிய பிள்ளையானதில் இருந்து மூத்த பொம்பிள்ளை பிள்ளைக்கு படிப்பு தேவையில்லை என்று சீக்கிரமாகவே கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும் என தாயால் சொல்லி வளர்க்கப் பட்டு அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தான் கட்டிக் கொடுக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்து...பதினெட்டு வயசானதும் எதிர்கால வாழ்க்கை பற்றிய அவளது விருப்பத்தை கொஞ்சம் கூட செவி மடுக்காமல்...நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் சோகேஸ் பொம்மையை அலங்கரிப்பது போல் அவளை அலங்கரித்து,ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்று படம்,படமாய் பிடித்து... விற்றனர் கடைசியில் அவளை கொஞ்சம் கூட அவளுக்கு பிடிக்காத வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு புலத்திற்கு வந்து நிம்மதியா…
-
- 16 replies
- 1.4k views
-
-
அப்பதான் டியூசன் முடித்து வெளியிலை வந்து கொண்டு இருந்தோம்... மாலை ஐந்து மணி ஆறு மணியில் இருந்து ஊரடங்கு நண்பர்கள் எல்லாரும் போகும் வழமையான பாதை... புறப்படும் போது எங்களை தாண்டி ஒரு ஜீப் வேகமாக போகிறது... மச்சான் ஆமியடா விலகி நில்லுங்கட எனும் நண்பனின் குரலுக்கு செவிசாய்த்து எல்லாரும் ஒதுங்கி நிக்கிறோம்.... அந்த மொட்டை ஜீப்பில் போவது எங்களுக்கு கொஞ்சம் பரீட்ச்சியமான முகம்... கப்ரன் ஆறுமுகம்... இந்திய இராணுவத்தின் நுணாவில் படை முகாமின் பொறுப்பதிகாரி... எங்களை திரும்பி பார்த்தது தெரிந்தது அதுக்குள் ஜீப் எங்களை தாண்டி போய் விட்டது... ஜீப்பின் பின்னால் நாங்கள் எங்களை தாண்டி கொஞ்ச தூரம்தான் ஜீப் போய் இருக்கும்... பெரியதாய் ஒரு வெடியோசை வீதியோரம் இருந்த மருத…
-
- 16 replies
- 2.2k views
-
-
வணக்கம்! நானும் தங்கையும் சேர்ந்து எனது "இல்வாழ்வு தந்த இயலாமை" என்ற கதையை "கானமும் கதையும்" ஆகச் சொல்கிறோம் கேட்டுப்பார்த்திட்டுச் சொல்லுங்கோ. கானமும் கதையும் I
-
- 16 replies
- 2.7k views
-
-
என் பிரியமான தோழிக்கு, நான் நலம். நீயும் நலமுடன் இருப்பாய் என்று நம்புகிறேன். குழந்தைகள் நலமாய் இருக்கிறார்கள். என்னுடன் குப்பை கொட்ட வந்தவளும் நலமாய் இருக்கிறாள். என்ன, உங்களை கட்டி எனனாத்தை கண்டேன் என்று இடைக்கிடை சொல்லி வெறுப்பேத்துகிறாள். இது உங்கள் பெண் குலத்துக்கே உரிய புராணம் என்று என்னால் புறக்கணிக்க முடியவில்லை. இன்று ஒரு படம் பார்த்தேன். அதன் பலன் தான் இந்த கடிதம். செரனின் போக்கிசம். நேரம் இருந்தால் நீயும் எடுத்து பார். நான் தனிமையில் இருந்த போது, நீ அனுப்பும் கடிதங்களும், இன்று என்ன கறி என்ற கிண்டலும், என் வருசங்களை நிமிடங்கள் ஆக்கின. அவற்றில் சிலவற்றை நான் இன்னமும் பொக்கிசமாய் வைத்திருக்கிறேன். சில வேளை எடுத்து மீண்டும் படிப்பது உண்டு. என்னை அறியாம…
-
- 16 replies
- 2k views
-
-
அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும். ஒரு பேப்பரிற்காக நினைவுப்பதிவு சாத்திரி இலங்கைத்தீவில் தமிழர்களிற்கு தீர்வும் சமாதானமும் வாங்கித் தருவதாக சொல்லியபடி இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் வந்திறங்கி தமிழர்களின் அமைதியை பறித்து அவலங்களை மட்டுமே கொடுத்து இருபத்தி முன்று ஆண்டுகள் .ஆகிவிட்டது 10.10 1987 ம் ஆண்டுஆண்டு யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவத்தின் மராட்டிய பட்டாலியன் (First Battalion of Maharatta Light Infantry)யாழ் பிரந்திய பத்திரிகைளான ஈழமுரசு முரசொலி ஈழநாடு பத்திகை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்த்ததிலிருந்து யுத்தத்தை தொடங்கி விட்டிருந்தனர்.அதைனைத் தொடர்ந்து புலிகளும் வேறு தெரிவுகள் எதுவும் இன்றி இந்திய இராணுவத்துடன் மோதிப்பார்…
-
- 16 replies
- 2.8k views
-
-
[size=4]அவன் ஒரு அகதி.அவன் தற்போது வசிக்கும் நாட்டில் அவனுக்கு [/size] [size=4]எந்த உறவினரும் இல்லை.அவன் சமாதான காலத்தில் இந்த நாட்டுக்கு [/size] [size=4]பலத்த சிரமப்பட்டு வந்திருந்தான். அவனின் சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் [/size] [size=4]உள்ள கிராமம்.அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான்.அவன் ஜெயசுக்குறு [/size] [size=4]எதிர்ச் சமரில் வீரச்சாவு அடைந்தான்.தந்தை சிறுவயதில் இறந்துவிட தாய்தான் [/size] [size=4]இவனையும் அண்ணனனையும் சிரமப்பட்டு வளர்த்தாள். [/size] [size=4]தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு வன்னிக்கு இடப்பெயர்ந்து [/size] [size=4]மல்லாவியில் உள்ள உயிலங்குளத்தில் சிறு கொட்டில் போட்டு [/size] [size=4]வசித்தார்கள்.அவனது அண்ணனின் வித்துடல் ஆலங்குள துயுலுமில்லத்தில்[/size…
-
- 16 replies
- 1.9k views
-
-
ஒரு பேப்பரிற்காக சாத்திரி வழைமை போல நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பவும் கதை அவித்துவிடப்போறன் இது எங்கடை ஊர் கோயில் தருமகத்தாவை பற்றினது. ஊரிலை சிலருடைய தனிப்பட்ட கோயில்களை தவிர பொதுவான கோயில்களை நிருவாகம் செய்ய ஒரு சபை இருக்கிறது வழைமை அதுபோலை எங்கடை ஊர்கோயிலையும் நிருவாகிக்க ஒரு தருமகத்தா சபை இருந்தது. அதிலை ஜந்து பேர் அங்கம் வகிப்பினம் ஒருத்தர் தலைவராயிருப்பார். அதுக்கடுத்ததாய் அவைக்கு உதவி சபை எண்டு ஒண்டும் இருக்கும் அதிலை பத்துப்பேர் அங்கத்தவராயிருப்பினம். எங்கடை நாடு சனநாயகத்தை பெரிதாய் மதிக்கிற நாடு எண்டதாலை (சந்தியமாய் நான் மகிந்தாவின்ரை ஆளில்லை) எங்கடை ஊர் கோயில் நிருவாகமும் சனநாயக முறைப்படி இரண்டு வருசத்துக்கொரு தடைவை தேர்தல் வைச்சு எங்கடை ஊர்…
-
- 16 replies
- 2.7k views
-