கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
............................................................................... இன்னும் விடியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்துகொண்டிருக்கின்றன. சூரியனைத் துயிலெழுப்ப வேண்டுமே என்ற அங்கலாய்ப்பில் அடிக்கடி தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுச் சேவல், இருளரக்கன் அகலப் போகிறான் என்ற குதூகலத்தில் பாடிக் களிக்கும் புள்ளினங்கள், சாதகம் பண்ணுவதாகக் கூறிக்கொண்டு அக்கம் பக்கத்தாரின் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளும் முன்வீட்டுப் பென்சனியர் .... எல்லாம் வழமை போலத் தானிருக்கின்றன. "எழும்பித் தேத்தண்ணியைக் குடியுங்கோவன். விடிஞ்செல்லே போச்சுது" சாந்தியின் அதட்டலுடன் தான் எனக்கும் விடிகிறது. நான் கைப்பிடித்தவள் தான் சாந்தி. இன்னும் சரியாகச் ச…
-
- 18 replies
- 3.8k views
-
-
சிட்னி முருகன் கோயில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேர்,தீர்த்தம், பூங்காவனம் என இனிதே நடந்தேறி முடிவடைந்தது .ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடை பெறும் இத்திருவிழா இம்முறையும் மிகவும்நன்றாகவே நடை பெற்றது. .நானும் இடைகிடையே சென்று முருகனின் அருள் என்பக்கமும் கிடைக்க ஆவனசெய்தேன்.பேன்ஸ் கார் வாங்குவதற்கு என்பெருமான் முருகனின் கடைகண் பார்வை என் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவ்வருட திருவிழாவில் கூடிய கவனம் செலுத்தினேன். திருவிழா தொடங்க முதல், தாயையும் மகளையும் தற்செயலாக சந்திக்க வேண்டி ஏற்பட்டது.மகள் என்னொடு சினேக பூர்வமாக பழகுவாள்.எங்கே கண்டாலும் அங்கிள் எப்படியிருக்கிறீங்கள் என்று சுகம் விசாரித்துவிட்டுத்தான் செல்வாள் இங்கு பிறந்து வாழ்ந்து வருபவள்.தாயார் ஒரு சின்ன சி…
-
- 33 replies
- 3.8k views
-
-
இன்னமும் வலிக்கின்றது இந்தவருடம் எனது தாயார் ஊரிலிருந்து என்னிடம் வந்திருந்தார்.இதுதான் அவர் ஜரோப்பா வருவது முதற்தடைவை. பத்து ஆண்டுகளிற்குமுன்னர் இந்தியாவில் சந்தித்த பின்னர் மீண்டும் இப்பொழுதுதான் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தசந்தோசம். அதைவிட எனது மனைவி மகளையும் அவர் நேரில் சந்தித்த சந்தோசம்அவரிற்கு. தற்சமயம் நத்தார் பண்டிகை காலமாகையால் எனது நகரமெங்கும் அமைத்திருந்து மின்விளக்கு தோரணங்களை அம்மாவிற்கு காட்டலாமென நினைத்து அவரை காரில் ஏற்றிக்கொண்டு ""அம்மா அங்கை பாருங்கோ ஒரே நீலக்கலரிலை பல்ப்பு பூட்டியிருக்கிறாங்கள் வடிவாயிருக்கெல்லோ ?? இஞ்சாலை இந்த றோட்டை பாருங்கோ என்று காட்டியவாறே நகரத்தை சுற்றிவந்திருந்துகொண்டிரு
-
- 26 replies
- 3.8k views
-
-
இவன் அப்ப சின்னப் பொடியன். முக்கால் சைக்கிள் ஒன்றில பள்ளிக்கூடம், ரியூசன் போய் வந்து கொண்டிருந்தான். கூடப் படிச்ச தர்சினியில கொஞ்சம் விருப்பமிருந்தது. பள்ளிக்கூடம் போனால் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான். அந்த நேரம் சாமான் எல்லாம் ஆனை விலை குதிரை விலை. அரசாங்கம் கன சாமானுக்கு தடை போட்டிருந்தது. பற்றி, சோப் கண்ணுக்குத் தெரியாது. இவன் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டான் என்றால் அப்பு வளர்க்கிற மாடு மூசி மூசி மோப்பம் பிடிச்சுவந்து நக்கும்.. சோப் தட்டுப்பாடென்பதால பனங்காயிலதான் அப்ப உடுப்புத் தோய்க்கிறது. கலியாணவீடு, திருவிழாக்களுக்கு போடுறதெண்டு ஆசை ஆசையாக ஒரு நல்ல மஞ்சள் சேட் வைத்திருந்தான். ஒருநாள் தோய்த்துக் காயப் போட அதை மாடு சப்பிப் போட்டுது. அந்த சேட்டில்லாமல் போனத…
-
- 35 replies
- 3.8k views
-
-
அவன் ஓடி கொண்டிருந்தான். அவர்கள் துரத்தி கொண்டிருந்தார்கள். அதிகாலை மூன்று மணியை தாண்டி இருந்தது. வீதியில் ஆளரவமே இல்லாத அந்த வேளையில்.. இவர்களின் ஆடு புலி ஆட்டம். அவர்கள் மூன்று பிரிவாக வந்திருந்தார்கள். அவனும் சளைக்கவில்லை.. அவர்களுக்கு தண்ணி காட்டி ஓடி கொண்டே இருந்தான். தலைநகரில் அந்த வேளையில் அவர்களின் அலைபேசிகள் விட்டாமல் கத்தி கொண்டிருக்க... இவன் ஓடி கொண்டே இருந்தான். இவர்களிடம் உயிரோட பிடிபடக்கூடாது. இது மட்டும் தான் இப்போ அவன் நினைக்கும் ஒரே எண்ணம். இவனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. இவன் உடலை, ஆக குறைந்தது இவன் முகத்தையாவது சேதமில்லாமல் எடுக்கவேண்டும் இது அவர்களுக்கான ஒரே கட்டளை. என்னை வைத்து, என…
-
- 18 replies
- 3.7k views
-
-
ஊமை! – சிறுகதை ரமேஷுக்கு அன்று முதலிரவு. பால் செம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி பத்மாவை பாசத்தோடு அரவணைத்து தனது அருகில் உட்கார வைத்தான். தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தான். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்ப்பதாகவும், தனக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உண்டு என்றும், அப்பா ரயில்வேயில் வேலை பார்ப்பதாகவும், அம்மா கொஞ்சம் வாயாடியானாலும் அன்பாவனவர் என்றும் கூறினான். நீ குடும்பத்தில் மூத்த மருமகள் என்பதால் எல்லோரிடமும் அன்பாகவும் – பாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்து கொள்…
-
- 1 reply
- 3.7k views
-
-
எனக்கு ASIA வேணும் தலைப்பை மட்டும் படிச்சிட்டு நீங்களும் ஆளாளுக்கு எனக்கு அமெரிக்கா வேணும் ஜரோப்பா வேணும் ஆபிரிக்கா வேணும் எண்டு அடம் பிடிக்க கூடாது கதையை ஒழுங்கா படியுங்கோ. சைக்கிள் என்றால் கொஞ்சம் வயசான ஆக்களுக்கு உடைனை நினைவுக்கு வாறது றலி.றாம். கம்மர். பிறகு ஏசியா.லுமாலா.றொபின்சன். சிங்கர் . இப்பிடி பல ரகம் இருக்கு. என்னட்டையும் ஊரிலை 80 களிலை படிக்கிற காலத்திலை சைக்கிள் என்கிற பெயரிலை ஒரு சிங்கர் சைக்கிள் இருந்தது இது ஒரு இந்தியா தயாரிப்பு. 80களில் தான் யப்பான் தயாரிப்பான ஏசியா சைக்கிள் சில தொழில் நுட்ப மாற்றங்களுடன் பாரமற்ற இலகுவான ஒரு கலப்பு உலோகத்தால் செய்யபட்டு பின்பக்க வீல் சின்னதாகவும் அத்துடன் மற்றைய சைக்கிள் ரயர்களை விட காற்றின் உராய்வைகுறைக்க…
-
- 20 replies
- 3.7k views
- 1 follower
-
-
விசேட இ-மெயில்கள் உருவாக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவுக்கு செயல் வடிவம் கொடுக்க இந்த பதிவை எழுதுகின்றேன். எங்கள் முதலாவது இ-மெயில் ஆக என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, எமது யாழ்கள நண்பர் வானவில் எழுதிய “இங்கே எத்தினை பேருக்கு போரட்டம் பற்றி தெரியும்....? எனக்கு கூட போரட்டம் நடக்குது என்று தெரியும், ஆனால் யாழ் வந்தபிறகுதான் அதன் முக்கியதுவம், நாங்கள் அதற்க்கு எப்படி உதவுவது என்ற பல விடயங்களை அறிந்தேன், இதை பொறுத்தவரையில் யாழுக்கு வெற்றிதானே. முடிவுக்குப் போகமுதல் ஆரமபம் தெரிய வேண்டும். தற்போது யாழில் அது 100% வெற்றிகரமாகவே நடக்கின்றது. எத்தனை பேர் யாழ் வந்த பிறகு என்னைப் போல போரட்டத்தைப் பற்றி பலமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.” என்ற கூற்றுக…
-
- 16 replies
- 3.7k views
-
-
பங்குனி மாதம் என்றாலே எனக்கு கொஞ்சம் பயம் தான். பயம் மட்டுமல்ல படபடப்பு, வெறுப்பு, சோகம், தனிமை என அனைத்தும் ஒன்றாக வந்து கொல்லும். "பள்ளிக்கூடத்துக்கு போகாமல் ஊர் சுத்தி கொண்டு திரியுங்கோ" என அப்பாச்சி பேசும் போது; எனக்கும் புரியவில்லை. என்னை அழைத்து சென்ற அப்பாவுக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்த மாதம் தரவிருந்த பரிசு. பொதுவாக ஆண்டின் இறுதி மாதங்களில் ஊருக்கு செல்வது தான் வழக்கம். அப்பொழுது தானே எனக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்கும். அந்த வருடம் ஆண்டின் இறுதியில் அப்பாவிற்கு வேலையில் விடுமுறை கிடைக்காததால் பங்குனி மாதத்தில் சென்றோம். ஊரில் கொஞ்சம் போரின் கோரம் அதிகமாக இருந்ததால் அண்ணன்களும் தங்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் பங்கர் அருகே நாட்களை கழித்து கொண்டிருந்தார்…
-
- 20 replies
- 3.7k views
-
-
ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப் பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வீரப்புகழ் பாட, உறையூரை…
-
- 4 replies
- 3.7k views
-
-
வீட்டுப்பாடம் அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக்கத்தில் இயல்பாகத் திரும்பியது. அவளில்லாத வெற்றிடக் காட்சி முகத்திலறைந்தாற்போல் இருக்கவே ஒரு கணம் திடுக்கிட்டவன், தன்னிலை திரும்பி அந்த வெற்றிடத்தைப் பார்வையால் மெல்ல வருடிக் கொடுத்தான். அவனையறியாமல் ஒரு மெல்லிய பெருமூச்சு எழுந்தடங்கியது. “அவ இல்லாம இந்தக் குழந்தைகளை எப்படித்தான் சமாளிக்கப்போறேனோ!!” என்று தனக்குள் புலம்பியவன் குழந்தைகளின் அறையை நோக்கி நடந்தான். குழந்தைகளின் தூக்கம் கலைந்து விடக்கூடாதென்ற ஜாக்கிரதையுணர்வுடன் மெல்ல எட்டிப்பார்த்தவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது. மூத்தவள் பத்து வயதுத் தாரிணி பாதங்கள் மட்டும் வெளித்தெரிய தலை…
-
- 4 replies
- 3.7k views
-
-
அபிதா பெயருக்கு ஏற்ற போல அவளும் அழகிய பெண்..அபிதாவுக்கு ஒரே அண்ணன் வெளி நாட்டில் வேலையில் இருந்தான்.. அபிதா அம்மா அப்பாவோட ஊரில் இருந்தாள்.. அம்மா நான் பாடசலைக்கு போகுறேன்.. என்று சொல்லிய படி தன் தோழி வீடு நோக்கி நடக்க தொடங்கினாள் அபிதா... சுசிதா அபிதாவின் நண்பி இருவரும் ஒரே தெருவில் இருந்தார்கள்.. சிறு வயது முதல் இருவரும் நண்பிகள்.. அதை விட இருவரும் ஒரே பாடசாலையில் படித்தார்கள்... அபி நம்ம பாடசாலை பெடியன்கள் வாறாங்கள்.. அங்க பாரு... அபி அங்க பாரு செந்தில் வாறன்.. உன்னுடன் இப்ப பேசுறது இல்லையா? அப்படி இல்லை சுசி போன் பண்ணி பேசுவான்.. செந்தில் வேறு யாரும் இல்லை அவர்கள் வகுப்பில் படிக்கும் மாணவன்..சுசிதா யாருடனும் அதிகம் பேச மட்டாள்.. அபிதா …
-
- 5 replies
- 3.7k views
-
-
அக்கினிச் சிறகுகள் அன்று காலையிலேயே விழிப்பு ஏற்பட்ட மதுசாவிற்கு தலை பாரமாய்க் கனத்தது. நெற்றிப் பொட்டு விண்விண் என்று வலித்தது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தவள் சற்றுக் கண்ணயரவும் அனுவின் அழுகுரல் கேட்கவும் சரியாக இருந்தது. குழந்தையை அள்ளி அணைத்து பாலூட்டி மறுபடியும் தொட்டிலில் கிடத்தியவள் கோப்பி ஒன்று சூடாகக் குடித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தாள். “கோப்பி குடிக்காட்டி என்ன செத்தா போயிருவன்” மனம் வெறுமையில் துடித்தது. குழந்தை அனுவைத் திரும்பிப் பார்த்த கண்கள் குளமாகியது. எத்தனை நாளைக்குத்தான் இந்த அவஸ்தை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கணவன் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற மோகன் தினமும் வேலைக்குப் போய்விட்டு விடிந்ததும் வந்து கட்டிலில் விழுந…
-
- 1 reply
- 3.7k views
-
-
அப்பத்தான் அவன் ஏற வேண்டிய பஸ் பஸ் நிலையத்தை விட்டு கிளம்பியது. நகர்ந்து கொண்டிருந்தாலும் பின்னால் ஓடி தொங்கி புட்போர்ட்டில் ஏற முயன்றான். முடியவில்லை இவனுக்கு பேப்பே காட்டி விட்டு தூரத்தில் போய் கொண்டிருந்தது. அந்த டவுன் பஸ் நிலையத்தில்.. மற்ற இடங்களுக்கு போக வேண்டிய பிரிவுகளில் எல்லாம் கியூ நிரம்பி வழிந்தது. ஆக்களை இறக்கிய சுமைகளினால் ஆறுதல் எடுக்கும் பஸ்களுமாயும். சுமை தாங்க முடியாமால் http://sinnakuddy.blogspot.com/2007/08/blog-post_14.html
-
- 20 replies
- 3.7k views
-
-
தூங்காத கண்ணென்று ஒன்று சிறுகதை: ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் அலுவலகத்தில் இருந்து இரவு வீட்டுக்கு வந்ததும் அம்மா ஆரம்பித்தாள்... ''எல்லாம் என் நேரம். நான் என்ன சொன்னாலும்...'' - அவள் மேற்கொண்டு சொன்ன எதையும் நான் காதில் வாங்கவே இல்லை. திருமணமான 30 வயதுப் பெண், கணவனுடன் சேர்ந்து வாழாமல் தனியே இருந்தால், அம்மாவின் புலம்பல்கள் எதுவாக இருக்கும் என உங்களுக்குத் தெரியும்தானே? இரவு உணவு சாப்பிட்டதும் அறைக்குத் திரும்பினேன். எட்வினின் நினைவு, கடந்த ஒரு வாரமாகவே மனதைப் போட்டுப் பிசைந்தது. இப்போது ஏன் அடிக்கடி அவன் ஞாபகம் வருகிறது... அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து? எங்கள் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கும் வேதா அக்கா வீட்டின் மொட்டைமா…
-
- 1 reply
- 3.7k views
-
-
தேர்பலி - சிறுகதை என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம் முதல் சாமம் கடந்த அகாலம். இருட்டு கட்டிய வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை. கல்தீப விளக்குகள் அணைந்துபோயிருந்தன. பின்வீதியில் எங்கோ குருட்டு ஆந்தைகள் சத்தமாகக் குடுகின. நெட்டையாண்டி, எட்டுவைத்து நடந்தான். வீட்டின் வெளி மதில் கதவு திறந்தே கிடந்தது. விளக்குமாடத்து அகல் ஒளி, கீழ்திசைக் காற்றுக்கு நடுங்கியவண்ணம் இருந்தது. கல்நிலவு வாசற்படியில் தலை வைத்துப் படுத்திருந்த கனகா, காலடி அரவம் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தாள். நெட்டையாண்டிக்கு முன்னே ஓடி, சமையல்கட்டுக்குள் கோரைப் பாயை விரித்துப் போட்டாள். பித்தளைச் சொம்பு நீரை நீட்டினாள். கை அலம்பிவிட்டு வந்த நெட்டையாண்டி, பாயில் சம்மணமிட்டு அமர்ந்தான். அகல் …
-
- 2 replies
- 3.7k views
-
-
தாய் மனம் - வனிதா "டேய் கணேசா... இன்னும் வேலைக்கு கிளம்பல? உனக்கு சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன், எடுத்துட்டு போடா. வேல முடிஞ்சதும் ஊர சுத்தாம வீடு வந்து சேரு. சரி... நான் கிளம்பறேன் நேரமாச்சு, கொஞ்சம் நேரமானாலும் அந்தம்மா கத்தும்." என்று அவசர அவசரமாக கிளம்பினாள் ரேவதி. "அம்மா..." "என்னடா..." "இன்னைக்கு தான் அண்ணனுக்கு கல்யாணம்... அண்ணன் துபாயில் இருந்து வந்திருக்குமில்லம்மா...." "நீ வேலைக்கு கிளம்பு. நேரமாச்சு" என்று சொல்லி வாசலுக்கு வந்தாள். செருப்பை போட போகும் போது தான் நினைவுக்கு வந்தது, நேற்றே அது அறுந்து போனது. "அட... இதை தெச்சு வாங்க நினைச்சேன், மறந்து போச்சு. செருப்பில்லாமலே நடக்க ஆரம்பித்தாள். நினைவுகள் பல மனதில் ஓடியது.…
-
- 2 replies
- 3.7k views
- 1 follower
-
-
துயர் வெளியில் தனித்தவள் (நெடுங்கதை) இனியெதுவும் இல்லையென்ற உண்மையும் இனி எதையும் எண்ண முடியாதென்ற வெறுமையும் உறைத்தது. மனவெளியெங்கும் பரவிக்கிடத்திய நம்பிக்கை துகள் துகள்களாய் சிதறித் தூரமாய் தனித்துச் சிதைகிறது. ஊவென்ற இரைச்சலோடு ஓடிவந்து தழுவும் காற்றும் ஓயாத எறிகணை மழைக்குள்ளும் எல்லாரையும் மிஞ்சிய நம்பிக்கையில் மேமாதத்து நாட்களை நம்பிக்கையோடு நம்பியவள். மனம் தளராமல் மன்னார் போய் கிளிநொச்சியின் தொடராய் முல்லைமண்ணில் எதிரி கால்பதித்த பின்னாலும் முள்ளிவாய்க்கால் மோட்சத்தின் மறைவிடமென்று காவலிருந்த கடைசிக்களம் போலிருந்தது இரவு. எப்படி….? ஏன்….? எதனால்…? எதுவும் பிடிபடவில்லை…..சூனியம் முற்றிய தெருக்களில் பிணங்கள் குவிவது போல நகர நகர அவர்கள் வெற்ற…
-
- 29 replies
- 3.7k views
-
-
சுவடுகள் டேய் சுந்தர் ஓடாதே.. .இங்க வா'' பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்து, குரு இருந்த கம்பார்ட்மென்டுக்கு ஓடி வந்த சிறுவன். பின்னால் ஓடி வந்தவள் லதா மாதிரி இருந்தது. ஒன்பது பத்து வகுப்புகளில் உடன் படித்தவள். மூக்குத்தி மினுங்களோடு அத்தனை மாற்றம் இல்லாமல் அதே சிரிக்கும் முகம். கைக்கெட்டும் தூரத்தில் ஓடியவனைப் பிடித்து நிறுத்தி அவளிடம் ஒப்படைத்தபடியே, ""நீங்க... நீ... லதாதானே...?'' என்றான் குரு. ""ஆமா..நீங்க...?'' ""ஓ... டென்த் பி செக்ஷன்...'' ""குரு.. குருமூர்த்தியா... சுத்தமா அடையாளம் தெரியாம இப்படி குண்டு போட்டிருக்கீங்க...'' என்றவாறு தாவத் தயாராய் இருந்த மகனை இழுத்துப…
-
- 1 reply
- 3.7k views
-
-
ஒரு நிமிடக் கதை: ஐம்பதாயிரம் ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... “அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...!” அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, “யாரடி அந்த ரமேஷ்?” என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள். “அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..’’ தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா. சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ‘‘அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்ட…
-
- 1 reply
- 3.7k views
-
-
ஈழத்தை நோக்கிய என் பயணங்களில் மறக்க முடியாதது இறுதியாக நான் என் மண்ணை தொட்டது 2005ஆம் ஆண்டு தான். எப்போதுமே ஆரம்பத்திற்கும் இறுதிக்கும் கிடைக்கும் கவனிப்பு அதிகம் தானே. முதல் பயணம் என்னை நானே அறிய முதல் நடந்தது. இறுதி பயணம் நானே என்னை மறக்கும் அளவிற்கு இன்று வரை கொண்டு சென்றுவிட்டது. பல காரணங்களில் ஒன்றை இப்பகுதியில் பார்க்கலாம். என் அப்பப்பாவின் நாட்டு பற்று தான் எங்கள் குடும்பமே தாய் நாட்டை நேசிக்க காரணமாக இருந்தது என்பது என் கருத்து. வெளிநாடுகளில் வாழ சந்தர்ப்பம் கிடைத்த போதும், வெளிநாட்டு வாழ்க்கை எப்படி என அறிந்த போதும்; “நீங்கெல்லாம் போய்ட்டு வாங்கோ, நான் என் மண்ணை விட்டு வர மாட்டேன்” என சொல்லி, இறுதிவரை தன் வார்த்தையை காப்பாற்றினார். ஊரில் இருந்த அப…
-
- 16 replies
- 3.7k views
-
-
http://www.youtube.com/watch?v=2DAVIb9yzO0 ஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04.10 அன்று ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர் . சிறீக்குமார் நெறிப்படுத்த நிகழ்ச்சிகள் நடந்தேறியது .காட்லி பழைய மாணவர் குடும்பத்தினர் அரங்கம் நிறைந்த பார்வையாளராக காணப்பட்டனர் . இதில் குறிப்பிட வேண்டி ய அம்சம் எதுவெனில் காட்லி பழைய மாணவர்களின் புதிய தலை முறையினர் அதிகமான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களின் பாரட்டையும் கரகோசத்தையும் பெற்றது. நானும் இந்த கல்லூரியில் மழைக்கு ஒதுங்கி இருக்கிறேன் ..அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பகுதியினரை இந்த வீடியோ மூலம் நீங்கள் காணாலாம்
-
- 22 replies
- 3.7k views
-
-
பகிடிவதை விதுஷன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மூன்று விசேட சித்தியும், ஒரு திறமைச் சித்தியும் பெற்று சித்தியடைந்த மாணவன். கல்முனையில் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவன். தந்தையை இளமையிலேயே இயற்கைக்குப் பலி கொடுத்தவன். வயதுடைய தாயையும், தனக்குக் கீழ் இரு தங்கைகளையும் கொண்டவன். இவ்வளவு காலமும் தாய் தயிர் காய்ச்சி விற்றும், அரிசி குற்றி விற்றும், விதுவை ஆளாக்கி விட்டாள். அவனும் விடுமுறைகளில் சிறுசிறு வேலைக்குச் சென்று பணம் தேடினான். ஆனால், இனி? அவனது எதிர்காலப் படிப்பு கேள்விக் குறியாகி விட்டது. தாய்க் கிழவி ஓயாத இருமலுடன் மூலைக்குள்ளே முடங்கி விட்டாள். இதுவரை இவர்களை எட்டிப்பார்க்காத சொந்தங்கள் விதுஷன் பல்கலைக்கழகம் செல்லவிருப்பதை…
-
- 13 replies
- 3.7k views
-
-
எமோஜி - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம் வாட்ஸ்அப் சிணுங்கலில் விழித்துக்கொண்டு எழுந்தேன். மதுவைச் சந்தித்த நொடியிலிருந்து இன்றுவரை என் அத்தனை நாள்களும் அவளின் செய்தியில்தான் விடிகின்றன. இது இன்று நேற்று அல்ல... குறுஞ்செய்தி காலத்திலிருந்தே இப்படித்தான். “ I am not feeling well, இன்னிக்கு லீவு, don’t call me.” உடனே பதில் அனுப்பினேன். “You are not feeling well, OR your feelings are not well?” எனக்குத் தெரியும், பதில் வராது என்று. வரவில்லை. பல் துலக்கிக் குளித்து, சீருடை உடுத்தி, கிளம்பும் வரை 40, 50 முறை மொபைலைப் பார்த்திருப்பேன். பதில் வரவில்லை. ஆனால், நீல வண்ணத்தில் டிக் மார்க்குகள். உதாசீனம் செய்கிறாள் என எட…
-
- 0 replies
- 3.7k views
-
-
தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்! எம்.ஏ.சுசீலா மதுரையிலுள்ள பாத்திமாக் கல்லூரியில் 36 ஆண்டுக் காலம் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் இடையில் இரு ஆண்டுகள் துணை முதல்வராகவும் பணியாற்றியவர். சிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு என்னும் இருதளங்களிலும் இயங்கி வருபவர். இவரது முதல் சிறுகதையான ’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம், 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டியில் முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து 80 க்கும் மேற்பட்ட இவரதுசிறுகதைகளும், கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரது சில கதைகள், ஆங்கிலம், மலையாளம், கன்னடம்…
-
- 8 replies
- 3.7k views
-