கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அது ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டு புரட்டாதி மாதம் முதல் வாரமாயிருந்தது. கிளாலிக் கடல் நீரேரியின் கரையில், அவளைச் சுமந்து வந்த படகு தரை தட்டிய போது பின்னிரவாகியிருந்தது. ‘ஊ…ஊ’ வென்று இரைந்தபடி தேகத்தின் மயிர்க் கால்களையும் கடந்து ஊசியாக உள்ளிறங்கியது கனத்த குளிர் காற்று. அவள் அணிந்திருந்த மெலிதான நூல் சேலையின் முந்தானையால் தலையையும் உடம்பையும் இழுத்து மூடியிருந்தாள். எலும்புக்கு தோல் போர்த்தியது போன்றிருந்த அந்த உடம்பு ‘கிடு கிடு’ வென நடுங்கிக் கொண்டேயிருந்தது. குச்சிகளைப் போல நீண்டிருந்த கைகளால் படகின் விளிம்பை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். என்றுமில்லாதவாறு அவளது நெஞ்சுக் கூட்டுக்குள் இன்று ‘படக்.. படக்’ அதிகமாக அடித்துக் கொள்வது …
-
- 3 replies
- 1.3k views
-
-
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! (ஆனந்த விகடன் - 13.9.1964) "இதுதான் பாரதியார் குடியிருந்த வீதி!'' என்றார் புதுவை நண்பர். ''இந்த வீதிக்குப் பெயர்..?'' ''ஈசுவரன் கோயில் தெரு!'' கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த வீதி, கடற் கரையில் போய் முடிகிறது. ''பத்துப் பன்னிரண்டு வருஷ காலம் இந்தத் தெருவில்தான் குடியிருந்தார். அதோ தெரிகிறது பாருங்கள், இடது சாரியில் இருபதாம் நம்பர் வீடு... அதுதான் பாரதியார் குடியிருந்த வீடு!'' கவியரசர் வாழ்ந்த அந்த மாடி வீட்டையே சற்று நேரம் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பூட்டப்பட்ட கதவுகளுடன் பாழ்பட்டு நின்ற …
-
- 5 replies
- 1.1k views
-
-
புகலிட தேசமொன்றில்..... பெரியவர்: பிள்ளை எப்படி இருக்கிறாய்? அந்த அக்கா: நான் நல்லா இருக்கிறன்.. அங்கிள்.. பெரியவர்: முகத்தில சந்தோசத்தைக் காணேல்லையே.. அந்த அக்கா: இல்லையே நல்லாத் தானே இருக்கிறன். பெரியவர்: மனசில இருக்கிற சோகம் அப்படியே தெரியுது.. ஏன் பிள்ளை அதை மறைக்கிறா.. வெளிநாட்டுக்கு வந்தாச்சுத் தானே.. பிறகென்ன கவலை.. அந்த அக்கா: நான் மட்டும் வெளிநாட்டுக்கு வந்தாச்சு. அது எங்கட சொந்தங்களுக்கு சந்தோசம். ஆனால். எனக்கு..???! பெரியவர்: என்ன பிள்ளை ஆனால் என்று இழுக்கிறா.. என்ன சொல்ல வந்தியோ அதை மனந்திறந்து சொல்லு... அந்த அக்கா: என்னத்தை அங்கிள் சொல்லுறது.. முள்ளிவாய்க்காலுக்க என் கூடவே நின்ற ஆயிரம் ஆயிரம் மக்களும் போராளிகளும் தொலைத்…
-
- 0 replies
- 556 views
-
-
அரம்பை - ஷோபாசக்தி நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான். விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது. இம்முறை இந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் ஒப்புதலோடு நிறைவேறுவதற்கு எல்லா வாய்ப்புகளுமுள்ளன. ஆனால், இல…
-
- 1 reply
- 1k views
-
-
அறை எண் 22 சோவென விழும் அருவியின் இரைச்சல் பொங்கியெழும் ஆனந்தத்தையும் தரவல்லதாக இருந்தது. நீண்ட நேரம் அதன் நீரலையில் ஆடியிருக்க வேண்டும். தலைமுடி பிடரியோடு ஒட்டியிருந்தது. ஆடைகள் ஈரமாக உடலைக் கவ்விக் கொண்டிருந்தன. ஈரத்தை உதறி முடிக்கும் முன் நீர்ச்சுழி மலை முகட்டின் எல்லை நோக்கி உந்தத் தொடங்கியது. மாபெரும் உந்தலால் திடீரென கீழே விழ... பள்ளம் பள்ளம்... விழுகையில் ஒரு கணம் மூச்சு நின்றுவிடுவது போல் ஒரு நெஞ்சடைப்பு. திடீரென சுவாசம் முட்டித் திரும்புகையில் ஒரு நீண்ட ஆற்றின் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள் சொப்னா. ஆற்றின் இரு மருங்கிலும் புதர்கள், நாணல்கள், கோரைப்புற்கள். நீரின் நடு நடுவே பாறைத்திட்டுக்கள். பாறைகளின் மேல் மோதிக் கொள்ளாம…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள். இவன் ஒருவன் எந்த வ…
-
- 5 replies
- 1.5k views
-
-
கன்னியம்மாள் - சிறுகதை க.வீரபாண்டியன் - ஓவியங்கள்: ஸ்யாம் “இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிச்சுக்கிறது என்னன்னா... நம்ம ஊரு முன்னாள் பெரசிடென்ட் பெரியசாமி, இன்னிக்குக் கோழிகூவுற நேரத்துல காலமானாரு... அன்னார் தகனம், இன்னிக்கி சாயங்காலம் 5 மணிக்கு நம்ம ஊரு கெழக்க இருக்கிற குடியானவுக சுடுகாட்டுல நடக்குமுங்கோ...ஓஓஓ...’’ பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்காலம் முடிந்து 15 வருடம் ஆகியிருந்தும், அதற்குப் பிறகு மூன்று பேர் அந்தப் பதவியை அலங்கரித்திருந்தாலும்கூட இன்றைக்கும் அதியங்குடி கிராமத்துக்காரர்களின் பிரசிடென்ட் பெரியசாமிதான். கன்னியம்மாள் மாதிரியான சிலருக்கு `பெரசன்ட்டு’. `பிரசிடென்ட் பெரியசாமி இறந்துவிட்டார்’ என்று பன்றிமலையில் பட்டு எதி…
-
- 0 replies
- 2.4k views
-
-
பாகம்-1 அதிகாலை 4.30 ற்கு அலாரம் அடிக்கிறது, பெரும் பிரயாசைப்பட்டுக் கண்களைத்திறக்க முயல்கிறான் தினேஸ். பிரிய மறுக்கும் காதலர்கள் போல் இமைகள் இன்னமும் அவனுடன் சண்டையிடுகின்றன. பிரித்தே ஆகவேண்டும் என்ற அவசியத்தை அலாரத்தின் அலறல் நினைவுபடுத்துகிறது. இனி அவனது நாள்ச்சக்கரம் சுற்றத்தொடங்கும்.மணித்தியாலங்கள் அவன் வியர்வையில் கரையத்தொடங்கும். சிறைப்பட்டிருக்கும் பற்பசையில் சிறு துளிக்கு விடுதலை கொடுத்து குளியலறைக்கு விரைகையில் மனம் அவனை முந்திக்கொண்டு வேலையிடத்திற்க்கு விரைகிறது. புலம்பெயர்ந்ததால் கண்டங்கள் மட்டுமா மாறிவிட்டன..? எங்கள் வாழ்க்கை முறையுமல்லவா மாறிவிட்டது. தொலைத்த எங்கள் தனித்துவங்களின் நினைவுகளை மட்டும் பத்திரமாக ஞாபகக்குழிகளில் சேமித்து வைத்திர…
-
- 43 replies
- 6.2k views
-
-
நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்…
-
- 4 replies
- 1.5k views
-
-
தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாக காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக் கிழமையை செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர். படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாக சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்கமாட்டார் என்றாலும் அப்படித்தன் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட்ராமன் துயிலெழும் மூகூர்த்தமும் சொல்லி வைத்தாற் போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது. பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வாரநாட்களில் சில மணித்துளிகள…
-
- 1 reply
- 903 views
-
-
பெரிசு சமய போட்டி வருகிறது அந்த கேள்வி கொத்தை கொண்டு வாங்கோ படிப்போம் .சுரேஸ் முத்தவளை பெரிசு என்றும் இளையவளை சிறிசு என்றும் செல்லமாய் அழைப்பான்.இவன் கேள்விகொத்து என்று சொன்னது என்னவென்று பெரியவளுக்கு விளங்க வில்லை .அவள் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . தமிழ் பேசுவாள் ஆனால் கேள்விகொத்துஎன்ற கடின சொற்கள் விளங்குவது கொஞ்சம் கடினம்.."வட் அப்பா கொத்தோ,வாரேன் "என ஒடி வந்தாள் எங்க கொத்து றொட்டி என்று அப்பாவின் கையை பார்த்தாள் .கொத்து ரோட்டி இல்லையம்மா சமய போட்டி க்கு சைவபாடசாலையில் கொடுத்த கேள்விகளை கொண்டுவாங்கோ படிக்கிறதற்க்கு.நான் விளையாடப்போறன் தங்கச்சியோட பிறகு படிப்போம் அப்பா என சினந்தாள்.நாளைக்கு போட்டி தேவாரம் படிக்கவேண்டும் ,சமய அறிவுத்திறனுக்கு படிக்…
-
- 37 replies
- 2.6k views
-
-
❤️ அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார். ரவீந்தர், அங்கு …
-
- 0 replies
- 582 views
-
-
எமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும் எனது அப்பா ஒருபோலீஸ் அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்றால் அது தவறு. அவர் மிக மிக கண்டிப்பானவர். அவரின் அப்பாவை விட மிக கண்டிப்பாக இருந்தார். நான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கோயே கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக்கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கமாயிருந்தது. அவரின் இந்த அறிவுப்பசி எனக்கு 14 - 15 வயதாகும் வரை தொடர்ந்தது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒருசொட்டுக் கண்ணீர் - சயந்தன் 02.12.2012 பனிகொட்டிய காலை தூரத்தில் எங்கேயோ ஆரம்பித்து எதிர்த்திசையில் மெதுவாக நகர்ந்த இடிமுழக்கமும் இரைந்துகொண்டேயிருந்த மழைச்சத்தமும் உண்மையா அல்லது வெறுமனே பிரம்மையா என்று உள்ளுணர்வை ஆராய்ந்தபடி தூக்கத்திற்கும் விழிப்பிற்குமிடையில் கிறங்கிக் கிடந்தான் ரொக்கெற். பிரம்மைதான். இப்படியொரு சோனாவாரிப் பேய்மழை இங்கே பெய்யச் சாத்தியமில்லை. அவன் மழையின் ஓசையைத் திரும்பவும் நினைவுபடுத்தினான். நரம்புகளில் சில்லிட்டது. அறையின் ஹீற்றரைச் சற்று அதிகரித்துப் பஞ்சுப்பொதி போலான போர்வையால் மூடிக்கொண்டால் கதகதப்பாயிருக்கும். எழும்பிச் செல்லத்தான் அலுப்பாயிருந்தது. விழிப்பு வந்துவிட்டதால் இனிஅலார்ம் கிணுகிணுக்கும். உடலை முறுக்கி வீசியதுபோல …
-
- 6 replies
- 1.4k views
-
-
வாசிப்பு பழக்கத்தை ...எங்கள் தலைமுறையிடம் வலுப்படுதியத்தில் முக்கிய பங்கு இந்த ராணி காமிக்ஸ் முக மூடி வீரர் மாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களுக்கு உண்டு 1990 களின் நடுப்பகுதிகளில் சிறுவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு பின்னால் ஒரு லைபிரரி இருக்கு அந்த குளத்தோடு சேர்ந்து...., அங்கு போய் படிக்கிறது இந்த புத்தங்களை தேடி ..... ஜேம்ஸ் பாண்ட்,தில்லான்,மாடஸ்டி பிளைசி,மாயாவி ,எல்லாம் அதில் தான் அறிமுகமானார்கள் ..இவளவு அழகாக ..ஒரே மாதிரி படங்கள் எப்படி வரையப்பட்டன என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம் .மாயாவியின் மகன் ரெக்ஸ் ..மனைவி டயானா ..ஈடன் கார்டன் ..அங்குள்ள விலங்குகள் ..மாயாவியின் பொக்கீச அறை எல்லாம் கருப்பு ..வெள்ளை படத்திலும் நிஜமான தோற்ற உணர்…
-
- 5 replies
- 1.7k views
-
-
நான் நீ மற்றும் கடல்! - சிறுகதை அனுராதா ஆனந்த் - ஓவியங்கள்: ஸ்யாம் நித்யா காரைத் திறந்து உள்ளே ஏற எத்தனிக்கும் போதுதான் சட்டெனக் கவனித்தாள். வேப்ப மரமெங்கும் மல்லிகைப் பூ மொட்டுகள் தெறித்துவிட்டதுபோல் கிடந்தன. நெற்றி சுருங்க ஆச்சர்ய மாய்ப் பார்த்தாள். அருகிலிருக்கும் பந்தலையும் தாண்டி மரத்திலேறி அதன் கிளையெங்கிலும் பெரிய பச்சைப்பாம்பைப் போல் சுற்றிக் கொண்டு மல்லிக்கொடி படர்ந்திருக் கிறது . அந்தக் காலை நேரத்தில் அது அவ்வளவு வாசனையை அந்தத் தெருவுக்கு வழங்கிக்கொண்டிருந்தது. அருகில் போய் கைக்கெட்டும் கொஞ்சம் மொட்டுகளைப் பறித்து மூக்கின் அருகில் வைத்து மனசு கொள்ளுமளவுக்கு அதன் வாசத்தை நுகர்ந்துகொண்டாள். பின் காருக்குள் நுழைந்து அந்த மொட…
-
- 0 replies
- 4.8k views
-
-
ஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று! சதாவிற்கு மிகவும் அதிகமாகக் கோபம் எட்டிப்பார்த்தது. வெளியில் காட்ட முடியாத இயலாமை, கார்க் கதவை ஒரு ஆர். டி. எக்ஸ் வெடியின் சத்தத்தோடு அடித்துச் சாத்துவதில் வெளிப்பட்டது. பின்ன ...கோபம் வருமா வராதா..? இந்த டிரைவர், அவர் கத்திக்கொண்டேதான் இருக்கிறார்.. இங்கே வேண்டாம் தள்ளிப்போ என்று.... கேட்காமல் காரை மிகச்சரியாக... இந்தத் தெரு குப்பை எடுக்கும் பையன். என்ன பேர்...ஆங்.குமார்... அவன் பக்கமாக நிறுத்தித் தொலைக்கிறான். டிரைவரிடம் சத்தம் போட முடியாது மாசக்கணக்கில் லீவ் போட்டுவிடுவான். அதான் வாயில்லா அந்த கார் கதவு, அடியை வாங்கிக்கொண்டது. சதாவு…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார். வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில், சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து... “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?…
-
- 0 replies
- 715 views
-
-
எகேலுவின் கதை - சிறுகதை ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் சம்பவம் நடந்தது. சிறையில், வளர்ந்த தாடியை மழிக்கக் கூடாது என்பது அதிகாரிகள் தரும் கூடுதல் தண்டனை. ஆகவே, அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் ஃபிரெடரிக். ஏழை மக்களுக்கு மலிவு வீடுகள் கட்டித் தரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தார். ஜேர்மன்காரர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, அன்றாடம் செலவுக்கணக்கு எழுதி வைப்பது. இரண்டு, பீர் குடிப்பது. இரண்டாவது குறிக்கோள்தான் அவருடைய சிறைவாசத்துக்குக் காரணம். ஃபிரெடரிக் வேலைசெய்தது சோமாலிலாண்ட் எனும் நாட்டில். இது சோமாலியாவில் இருந்து தனியாகப் பிரிந்து, உலகத்தில் வேறு எந்த ந…
-
- 0 replies
- 4.8k views
-
-
நனி நாகரிகம் எளியவர்களிடமிருந்து மிக இயல்பாக போகிற போக்கில் நிதானமாகத் தெறித்து விழும் வார்த்தைகளில் இருக்கும் வலிமையை, தெளிவை, அதில் குறும்புடன் எட்டிப் பார்க்கும் அழகியலை உணர்ந்து ஒரு கணம் ஆடி அசந்து போயிருக்கிறீர்களா? தாம் சொல்வது எவ்வளவு பெரிய விஷயம் என்ற பிரக்ஞையோ அலட்டலோ அதிகப்பிரசங்கித்தனமோ இல்லாமல் ‘இவ்ளோதாங்க வாழ்க்கை…’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போகிறவர்களின் அருகில் போதி மரங்களே போன்சாய்களாக மாறிப் போகும் அதிசயத்தைக் காணப் பெற்றிருக்கிறீர்களா? …
-
- 8 replies
- 1.5k views
- 2 followers
-
-
"சாதனைகள் தூரத்திலில்லை" இன்று நவராத்திரி விழாவின் முதல் நாள். நான் எங்கள் சிறு குடிசையின் தூணை பிடித்துக்கொண்டு 'செல்வம், கல்வி, வீரம்' பற்றி என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். நான் இப்ப சாதாரண வகுப்பு மாணவன். என் அப்பாவும் அம்மாவும் பாலர் பாடசாலையுடன் தங்கள் படிப்பை நிற்பாட்டி விட்டார்கள். அப்பா ஒரு நாட்கூலி தொழிலாளி, கிடைக்கிற எந்த வேலையும் செய்வார். இல்லா விட்டால் குடும்பத்தை நடத்த முடியாது. அம்மா அப்பாவின் அந்த அந்த நாள் கூலியின் படி வாழ்க்கையை ஓட்டுவார், அதில் எப்படியும் ஒரு சிறு தொகை உண்டியலில், ஒரு அவசர தேவைக்கு என்று சேகரித்தும் வைப்பார். நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள்…
-
-
- 2 replies
- 677 views
- 1 follower
-
-
முதன்முதலாக அனொட்டமி.. செய்முறை வகுப்புக்காக பல்கலைக்கழகத்துக்குள் நுழைகிறான்.. கஜன்..! வரும் வழியில் என்னைக் கண்டிட்டு.. எப்படி மச்சான் போகுது வகுப்பு..... முதல் நாள் பதட்டத்தோடு கேள்வியாய் தொடுத்தான். ஒன்றும் பிரச்சனை இல்ல. எங்கட குறூப்போட இணைஞ்சுக்கோ.. என்று விட்டு போய்விட்டேன். கஜன் ஏதோ காரணங்களால் ஆரம்ப கால வகுப்புகளுக்கு வர முடியாது போக அன்றே தான் முதன்முதலாக செய்முறை வகுப்புக்கு வந்திருந்தான்... அது தான் அவ்வளவு பதட்டம். சிறிது நேரத்தில் எங்கட ஆய்வு கூட நுழைவாயிலில்... எக்ஸ்கியூஸ் மி என்ற குரலோடு.. கஜன் வந்து வாசலில் நின்று கொண்டு.. உள்ளே வர தயக்கத்தோடு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான்.. பிளீஸ் கம் இன்.. என்று எமது ஆசிரியர் அழைக்கவும் உள்நுழைந்த…
-
- 11 replies
- 2.2k views
-
-
அப்பா மன்னாரில் இருந்த தன் வேலையிடத்தில் இருந்து ஒரு வார கால லீவோட யாழ்ப்பாணத்தில் இருந்த.. எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். வரும் போது.. வழமை போலவே.. இந்த முறை.. கருவாடு.. பாலைப்பழம்.. இதரை வாழைப்பழம்.. அப்பிள்.. ஜாம்.. பிஸ்கட்.. என்று எல்லாம் வாங்கி வந்திருந்தாரு. அதோட ஒரு சுமாரான அளவு காட்போட் பெட்டி.. அங்கும் இங்கும்.. சில தூவரங்களோட..! அப்பா.. இதென்ன கோழிக்குஞ்சா.. சத்தமே வரேல்ல...??! நான்.. பெட்டியின் தோற்றத்தை பார்த்திட்டு.. கேட்டன்.. திறந்து பார்... அப்பா கட்டளையிட.. ஆவலோடு.. பெட்டியை திறக்க முயன்றன். ஆனால் முடியல்ல..... விடு நானே திறந்து விடுறன். பெட்டியை திறக்க முடியாமல் நான் திணறுவதை பார்த்திட்டு அப்பாவே வந்த களைப்பு தீர முதல்.. திறந்துவிட்ட…
-
- 15 replies
- 1.6k views
-
-
A/L படிக்கிற நேரத்திலும் ஒரு பெண்ணை வன் சைட் லவ் பண்ணினேன். நான் லவ் பண்ணுறது அவளுக்குத் தெரியும். அதனால் என்னுடன் பேசும்போது ஒரு இடைவெளி விட்டே பேசுவாள். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ப்ரொபோஸ் பண்ணினேன். அவள் என்னை ஒரு நண்பனாக மட்டுமே பார்ப்பதாகக் கூறி என்னை ரிஜெக்ட் பண்ணிவிட்டாள். "இதெல்லாம் காரணம் இல்ல, உண்மையான காரணம் சொல்லு?" என்று நான் நச்சரிக்கவும் என்னுடைய தொடர்பு எல்லாத்தையும் துண்டித்து விட்டாள். காலம் உருண்டோடியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவளை ஃபேஸ்புக்ல பார்த்தேன். ரிக்குவெஸ்ட் கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிவிட்டாள். இப்போது அவளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதைக் கண்டேன். போஸ்ட்களுக்கு ரியாக்சன் போடுவது மட்டுமே …
-
- 1 reply
- 1.2k views
-
-
அன்றொரு நாள்... சண்டிலிப்பாயில் இருந்த காலம்... கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில படிச்சனான் ..ஆறு தலை முறை வீடு..வீட்டில இருந்து பள்ளிக்கூடம் 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும்...இடையில வயல் வெளி.. வீட்டில இருந்து பள்ளிக்கூடம் வெளிக்கிட்டம் என்றால்... அப்பிடியே பின்னால பையைக் கொழுவிக்கொன்டு சைக்கிள்ளை கந்தரோடை வயல் வெளியைத் தாண்டி காற்று தள்ள தள்ள ஓடுறது ஒரு சுகம்தான்...வீட்டில இருந்து வரேக்கை.... வலப்புறவயலில கண்ணகை அம்மன் கோவில்.. இடப்புற வயலில அளவெட்டி மாரி அம்மன் கோவில், நடுவில தவறனை ஒண்டு வேறை... கார்த்திகை, மார்கழியில.. வழுக்கை ஆற்றின் படுக்கயில இரண்டு பக்கமும் வயல் பச்சைப்பசேல் எண்டு இருக்கும்.. மார்கழி,தை மாதம் எண்டா அதால நடந்து வரும் எங்கடை மட்டங்களுக்க…
-
- 26 replies
- 4.9k views
-