கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
பிடிகயிறு - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் பிடிமாடாப் போச்சேடா தவுடா!'' - சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன். ''விடப்பா, நிண்டு விளையாடுச்சு. நல்லவேள, குத்தித் தூக்கத் தெரிஞ்சிச்சு அந்தப் பாளமேட்டுக்காரனை. எல்லக் கவுறு வந்ததும் தாவிப் பம்மிப் படுத்துட்டான் தாயளி. இல்லேண்டா அவென் கொடலு கொம்புல தொங்கிருக்கும்!'' அதை ஆமோதிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் ஓடிய களைப்பு, அவர்களின் முகங்களிலும் இடுப்புகளிலும் தெரிந்தன. கையை மாற்றி மாற்றி இடுப்பைப் பிடித்தவாறே அங்கிருந்த…
-
- 0 replies
- 2.9k views
-
-
வாங்கோ அண்ணா.. அழைக்கும் குரலைக் கேட்டு ஓர் அதிர்ச்சி.. என்ன அழகா தமிழ் கதைக்கிறான்.. தமிழ் ஸ்கூல் போறவரோ.. வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த தந்தையை பார்த்து எனது வினவல் எழுந்தது.. தமிழ் பள்ளிக்கூடம் போறனான்... ஞாயிற்றுக்கிழமைகளில. கேம்பிரிஷ் ஜீ சி ஈ தமிழ் சோதனை எடுத்து "ஏ" சித்தி வைச்சிருக்கிறன்..... தந்தையை பார்த்துக் கேட்ட கேள்விக்கு மகன் பதில் தந்தான். அப்ப.. வீட்டில தமிழ் தான் மகனோட கதைக்கிறனீங்களோ.. அப்பவும் அவனே குறுக்கிட்டு.. அப்பா அம்மாவோட தமிழ் தான். தங்கச்சிகளோட தான் ஆங்கிலம் கதைக்கிறனான். நான் லண்டனில பிறந்திருந்தாலும் வாழ்ந்தாலும்.. சின்னனில இருந்தே தமிழ் படிக்கிறன். அவனின் பதில்களை செவிகளூடே வாங்கிக் கொண்டு.. தந்தையை நோக்கியே எனது அடுத…
-
- 26 replies
- 2.9k views
-
-
வீடும் கதவும் - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: ம.செ.,நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு பெரியார் நகரில் பாவேந்தர் தெருமுனைக்கு வந்ததும், எத்தனையாவது வீடு என்ற குழப்பம் சகுந்தலாவுக்கு வந்தது. ஐந்தாவது வீடு என்ற நினைவு இருந்தது. `போன் போட்டுக் கேட்கலாமா?' என யோசித்தாள். போனை எடுத்தாள். அதற்குள், `அஞ்சாவது வீடுதான். வடக்குப் பார்த்த வீடு' என நினைவுக்குவந்த மாதிரி சொன்னாள். ஆனாலும் சந்தேகத்துடன் நடக்க ஆரம்பித்தாள். மேற்கில் இருந்து நடந்துவந்து ஐந்தாவது வீட்டின் முன்பாக நின்றாள். வீட்டின் தோற்றம், அவள் முன்னர் பார்த்ததற்கும் இப்போதைக்கும் பெரிய மாற்றத்துடன் இருந்தது; குழப்பத்தை உண்டாக்கிற்று. வீட்டின் எண்ணைப் பார்த்தாள். `80' என இருந்தது. வீ…
-
- 6 replies
- 2.9k views
-
-
மச்சான் சுமதி வீட்டு வாசலில நிக்கிறாடா.. என்ற தகவலோடு MB5 மோட்டார் சைக்கிளில் பறந்து வந்திருந்தான் ரங்கன். பதிலுக்கு.. பொறுடா மச்சான்.. இப்பவே வெளிக்கிட்டு வாறன்டா.. கொஞ்சம் வெயிட் பண்ணு என்று அறைக்குள் நம்பர் 11 ஐ கொழுவிக் கொண்டே சவுண்டு விட்டான் சங்கர். 1986 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத யாழ் நகரத்து குடிமக்கள் மாலை நேரங்களில் வீட்டு முற்றத்துக்கு தண்ணீர் தெளித்துவிட்டு வீட்டுக்கு முன் கேற்றடியில் காத்து வாங்கிறம் என்று சொல்லி கூடி நிற்பது வழமை. அதேபோல் அன்றும் சுமதி வீட்டின் முன்னும் பெண்கள் கூடி இருந்தனர். சுமதி வீட்டில் கண்டிப்பான தகப்பன், தாய் மற்றும் 3 இளம் பெண் பிள்ளைகள், அவர்களின் நண்பிகள் என்று எப்போதுமே இளம் பெண்களின் நடமாட்டம் அதிகம். சுமதிக்கு…
-
- 15 replies
- 2.9k views
-
-
காந்தாமணி – மதுமிதா பிரார்த்தனையிலும் காமத்திலும் தான் ஐம்புலன்களும் ஐக்கியமாகி ஒரு புள்ளியில் குவியும்னு சொல்வாங்க. அதில் படைப்புத் தொழிலான சினிமாவையும் சேர்த்துக்கிறேன். கண்களைச் சுருக்கிச் சிரிக்கிறார் மகேந்திரன். இயக்குநர் மகேந்திரனின் புகைப்படத்துடன் வெளிவந்த அவரின் பேட்டியைப் படித்துக்கொண்டிருந்த பிரபல வாரப்பத்திரிக்கையை மூடினேன். காந்தாமணியின் வார்த்தைகள் செவிகளில் எதிரொலித்தன. அம்மா காமங்கறதை தப்பா பாக்கிறீங்க. எல்லா அவயங்களும் மனமும் ஒண்ணு சேருற தருணமுல்ல. தியானமில்லீங்களா அது. நம்ம சமூகத்தில் எல்லாம் தப்பிதங்களா கற்பிக்கப்பட்டிருக்கு. எப்படி வாழணும்னு எல்லோரும் கத்துக்கணும். ஆனா, அதை யாரும் நமக்குச் சொல்லித் தர்றதில்லை. நாமளே தான் கத்துக்கணும்…
-
- 1 reply
- 2.9k views
-
-
" ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்" பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவள் இராணுவ போலீஸ்காரியின் அழைப்பைக்கேட்டு திரும்பினாள். “மிஸ்டர் குமார ஓயாவ பலன்ட அவிள்ள இன்னவா” ( திரு குமார உன்னை பார்க்க வந்தி…
-
- 6 replies
- 2.9k views
-
-
தங்கச்சி.. புள்ள.. என்னம்மா.. எங்க புள்ள போயிட்டு வாறா..?! உவர் எங்கட கணேஷ் மாமா பிரான்சில இருந்து வந்திருக்கிறார் எல்லோ.. அவர் வீட்ட தானம்மா போயிட்டு வாறன். ஏன் புள்ள சொல்லாமல் கொள்ளாமல் போனனி.. இப்படித்தானே புள்ள பள்ளிக்கூடம் போறன் என்றிட்டு சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்கு ஓடிப் போயிட்டா. அதுக்கு பிறகு முள்ளிவாய்க்கால்.. வன்னி காம்புகள் என்று அலைஞ்சு திரிஞ்சு.. தண்ணி சாப்பிடில்லாமல் கிடந்து.. கொப்பரும் கிபீர் அடியோட போய் சேர.. தனிக்கட்டையா எவ்வளவோ கஸ்டப்பட்டு.. உந்த வவுனியாவில நிக்கிற அறுவாங்களின்ர காலை கையைப் பிடிச்சு கெஞ்சிக் கூத்தாடி உன்னை எடுத்து வந்திருக்கிறன். ஓமம்மா. என்னை வெளில எடுக்க கணேஸ் மாமாவும் ஈபிடிபி ஆக்களுக்கு புளொட் ஆக்களுக்கு…
-
- 18 replies
- 2.9k views
- 1 follower
-
-
1. அவளைக் காணவில்லை என்று தெரிந்தபோது நான் பெரிதாக முதலில் எடுத்துக்கொள்ளவில்லை. வகுப்பு முடிந்தவுடன் வழமையாகச் சந்திக்கும் இடத்தில் அவள் இல்லாதபோது வேறெதனும் வேலையாகப் போயிருப்பாள் -தாமதமாக வரலாம்- என்று காத்துக்கொண்டிருக்கத் தொடங்கினேன். கோடை காலத்தில் இந்த வளாகத்தைச் சுற்றி ஓடும் நதியிற்கு அதிக வனப்பு வந்துவிடுகின்றது. படிக்கும் நாங்கள் பல்வேறு தாய்மொழிகளைப் பேசிக்கொண்டு திரிவதுபோல நதியும் கலகலப்பாகப் பலமொழிகளைப் பேசிக்கொண்டு நகர்வது போலப்பட்டது. இயற்கைச் சூழலை இரசிக்கத்தொடங்கியதில் நான் எதற்காய் இங்கு வந்து காத்துக்கொண்டிருக்கின்றேன் என்பதும் மறந்துபோய்விட்டது. ஒருக்காய் முறிகண்டிப்பக்கம் ப…
-
- 10 replies
- 2.9k views
-
-
சப்பறம் பாக்கலாம் ஒரு பேப்பரிற்காக கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார். ஆனால் அவருக்கு தண்ணியிலை கண்டம். நான் சொல்லுறது கடல் தண்ணி ஆத்து தண்ணியில்லை இது அடிக்கிற தண்ணி. இவர் காங்கேசன்…
-
- 13 replies
- 2.9k views
-
-
பாதிக் குழந்தை!… பித்தன். October 14, 2018 சிறப்புச் சிறுகதைகள் (15) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – காதர் மொகைதீன் மீரான் ஷா எழுதிய ‘பாதிக்குழந்தை’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். “உலகமெல்லாம் தேடினேன். ஒரு மனிதனைக் கூடக் காணவில்லை!” என்று யாராது சொன்னால், அவனைப் பைத்தியக்காரன் என்றோ, குருடன் என்றோதான் உலம் முடிவு கட்டும். ஆனால், மனிதனைப் போல் அலங்காரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள்தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் அதை யாரும மறுக்க மாட்டார்கள். நல்ல பாம்பு என்று சொல்வதனால் அதனிடம் விஷம் இல்லை என்று சொல்ல முடியுமா? அது பாம்பு, மனிதன் ஏன் படமெடுத…
-
- 6 replies
- 2.8k views
-
-
ஒரு பேபரிற்காக எழுதியது மறந்த நாள் ரெலிபோன் மணிஅடித்த சத்தத்தில் நல்ல நித்திரையில் இருந்த நான் திடுக்கிட்டு எழும்பி தட்டி தடவி ரெலிபோனை எடுத்து காதில்வைத்தபடி அனுங்கிய குரலில் கலோ என்றோன் மறு பக்கம் 'கலோ தம்பி 'அவ்வளவுதான் கட்டாகி விட்டது நேரத்தை பார்த்தேன் அதிகாலை 5 மணி ரெலிபோனில் நம்பரும் விழவில்லை இது ஊரிலை இருந்து அம்மான்ரை போனாத்தான் இருக்கும் நித்திரை தூக்கத்திலை சத்தமும் விழங்கேல்லை. பாதி தூக்கத்தில் கண்ணை திறக்காமலே யாரப்பா போனிலை என்றாள் மனிசி. யாழ்ப்பாணத்திலை இருந்து அம்மா போலை கட்டாயிட்டுது என்றேன். ம்...என்னபடி மற்றபக்கம் பிரண்டு படுத்து கொண்டாள்.திரும்ப போன் அடிக்கும் என பாதி தூக்கத்தில் கண்ணை மூடியபடி எதிர்பார்த்தேன். அடிக்கவில்ல…
-
- 14 replies
- 2.8k views
-
-
இமயமலை பஸ் டிக்கெட் - சிறுகதை சிறுகதை எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சின்னரேவூப்பட்டியைக் கடந்து கம்பத்துக்குப் போகும் பேருந்தின் சத்தத்தில் சங்கரன் கண் விழித்தான். ஆலமரத்தைத் தாண்டி ரோட்டு வளைவில் பேருந்து சென்றது, அதன் ஹெட்லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. சங்கரன் பிளாஸ்டிக் குடத்தில் இருந்த நீரை அள்ளி முகம் கழுவியபோது ஊரில் இருந்து கும்பலாக பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். கூடைகளைத் தங்களது கக்கத்தில் இடுக்கியபடி நடந்துவருவதை சங்கரன் பார்த்தான். கோழிக்கொண்டைப் பூக்களும் செவ்வந்தியும் தோட்டத்தில் மலர்ந்து விட்டது. பூ எடுக்க கூலியாட்கள் போகிறார்கள். அவர்களுக்குப் பின்பாக இரண்டு எருமைகள் அசைந்து அச…
-
- 0 replies
- 2.8k views
-
-
பட்ட மரமும் பாகல் கொடியும் கொல்லைப்புறத்து வீட்டுத் தோட்டம் புதுப்பொலிவுடன் பூத்துக் குலுங்கியது. அருகிருந்த கிணற்றுநீரை அள்ளிப் பருகிய கத்தரி, தக்காளி, வெண்டி, பச்சைமிளகாய் வகைக் காய்கறிச் செடிகொடிகள் யாவும், சுத்தமான பச்சையாடை கட்டிய சுந்தரிகளாய்ச் சுடர்ந்து மிளிர்ந்தன. பலவண்ணப் பூக்களும், பச்சையிளம் பிஞ்சுகளும், காலமறிந்து பழுக்கக் காத்திருக்கும் காய்களும் தாங்கிய தாவரங்கள் தத்தமது தாய்மையைப் பறைசாற்றியபடி! தேன் தேடும் வண்டுகளும், மகரந்தமணி பூசும் வண்ணத்துப் பூச்சிகளும், பழம் தின்னும் பசுங்கிளிகளும், காக்கை குருவிகளும் அத்தோட்டத்தின் காலைநேர அழைப்பில்லா விருந்தாளிகள்! கவனிப்பாரற்றுக் கிடந்த பின்வளவைக் காய்கறிக் களஞ்சியமாக்கியவன், இன்று தோட்டத்தின்…
-
- 0 replies
- 2.8k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே அண்மையில் சாந்தியின் ""சொல்லியழுதிட்டன்"" என்கிற கதையைப் படித்த பலரும் ஆண்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்த
-
- 16 replies
- 2.8k views
-
-
குமர்ப்பிள்ளை - சிறுகதை அ.முத்துலிங்கம் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி கீழ்க்காணும் சம்பவத்தைப் படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை; நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து, நான் நிறைய சம்பாதித்தேன். மனைவி போன பிறகு நான்கு பிள்ளைகளும் நான்கு நாடுகளில் தங்கிவிட்டார்கள். குளிர் கூடக்கூட பகல் குறையும் நாடு அது. என் பிறந்த ஊரில் மீதி வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு. போர் முடிந்ததும் யாழ்ப்பாணத்துக்குப் போய், நான் பிறந்து வளர்ந்த வீட்டைத் திருத்தி எடுத்துத் தங்கினேன். இருபது வருடங்களுக்குப் பிறகு என் சொந்த ஊரைப் பார்க்கிறேன். உடையாத ஒரு வீட்டைக்கூடக் காண முடியவில்லை. கோயில்க…
-
- 1 reply
- 2.8k views
-
-
கடன் - தமிழ்நதி ஓவியங்கள் : ரமணன் சுவரில் கல்லோடுகள் பதிக்கப்பட்ட ‘பேப்’ புகையிரத நிலையத்தை சத்தியன் ஏற்கெனவே தெரிவுசெய்துவிட்டான். அதுதான் இருப்பவற்றுள் அழகியது. அங்கு இறங்கி நின்று, அடுத்து வரும் இரும்பு வேதாளத்தின் முன்னால் பாய்ந்து சிதறத் திட்டமிட்டிருந்தான். விரைந்தோடி வரும் ரயிலின் முன் உடலை வீசியெறியும்போது எப்படி இருக்கும்? ஒருகணம் கூசி சிலிர்த்தன மயிர்க்கால்கள். இரத்தக்கூழாக அவன் தன்னைக் கண்டான். கூட்டம் கூடுகிறது; பிறகு கலைகிறது. ஆகக்கூடி ஒரு மணித்தியாலத்தில் மீண்டும் புகையிரதம் ஓடும். மனிதர்கள் அதனைப் பிடிக்க ஓடுவார்கள். குளியலறைக் கண்ணாடியில் தெரிந்த விழிகள், பித்தின் சாயல்கொண்டு மினுங்கின. ஒடுங்கிய கன்னங்களை மறைத்து வளர்ந்திருந்தது …
-
- 2 replies
- 2.8k views
-
-
ஃபாதியா - சிறுகதை சிவகுமார் முத்தய்யா - ஓவியங்கள்: ஸ்யாம் பாலக்காடு ரயில்வே நிலையத்தில் இறங்கி மூர்த்தி செல்லைப் பார்த்தான். பின்னிரவு மூன்று மணியைக் கடந்திருந்தது. பயணிகள் சிலர் அங்கங்கே இருக்கும் சிமென்ட் பெஞ்சுகளில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் குடும்பத்துடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஸ்டேசனை விட்டு இறங்கி எதிரேயிருந்த டீக்கடையில் ஒரு சாயா குடித்தான். மீண்டும் ஸ்டேசன் வந்து கடைசியில் இருந்த வடக்குப் பார்த்த இருக்கையில் அமர்ந்தான். குழப்பம், பதற்றம், பயம் மாறி மாறி ஆட்கொண்டன. முடிவு எடுக்க முடியாத ஒரு மனக் குலைவு. இவற்றையெல்லாம் தாண்டி ஃபாதியா ஒரு பறவையைப் போல தோளில் அமர்ந்தாள். மூர்த்தி வேங்கரையில் நின்று திரும்பி…
-
- 0 replies
- 2.8k views
-
-
[21] அஞ்சலி லண்டனுக்குப் போய் இரண்டு நாட்களுக்குமேல் ஆகியிருந்தது. அவளிடம் இருந்து போன் வருமென்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான். அந்த இரண்டு நாட்களை கடத்துவதற்கே அவன் பெரும்பாடுபட்டான். எங்கு பார்த்தாலும்... எதைப் பார்த்தாலும் அஞ்சலியின் ஞாபகம் வந்து, இவன் நெஞ்சை அடைத்தது. உண்மையிலேயே அஞ்சலியின் பிரிவு அவனை மிகவும் பாதித்திருந்தது. தன் பிஸ்னெஸிலும் கவனம் செலுத்தாமல் எதையோ பறிகொடுத்தவன் போலவே எப்பொழுதும் ஒரு சோகத்துடன் இருந்தவனைப் பார்த்து விமல் பெரிதும் கவலைப்பட்டான். 'இவனை இப்பிடியே விடக்கூடாது' என முடிவெடுத்தவன்... "நீ இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறாய்? நானும் கொஞ்ச நாளா உன்னை பாக்கிறன். வேலையையும் ஒழுங்காப் பாக்கிறேல. ஒரு மா…
-
- 9 replies
- 2.8k views
-
-
நாட்டின் தலை நகரில் ஒரு பிரபல் மருத்துவமனை . அந்த மருத்துவ மனைக்குரிய தோற்று நீக்கி நெடி ......மருத்துவமனையின் நடை பாதையில் மனிதர்களின் நடமாட்டம். ..எல்லோரும் பரப்பரபாக் ஓடிக்கொண்டும் நடந்து கொண்டும் இருந்தனர் ....வைத்தியர்கள் .. தாதியர்கள். நோயாளர் காவு வண்டிகள். சக்கர நாற்காலியில் சிலர். ..நோயாளரைக் காண வரும் உறவுகள் பலர் . பார்வையாளர் நேரத்தில் வரும் சிலரை வேடிக்கை பார்த்த வண்ணம் அவர் இருந்தார். .ஞானரட்ணம் ஐயாவுக்கு மட்டும் யாரும் பார்க்க வருவதாயில்லை . அவரது நினைவலைகள் பின்னோக்கி சென்றன. அவர் தலை நகரில் ஆடை தைத்து கொடுக்கும் ஒரு நிறுவன் மேர்பார்வையாளராக் இருந்தார். காலக்கிரமத்தில் அவர்க்கும் திருமணம் நடந்தது . மனைவி இரு குழந்தைகள். இவர் விடுப்பு கிடைக்கும…
-
- 6 replies
- 2.8k views
-
-
இந்த பகுதியில் அநேக காணொளிகள் இருப்பதால் அவைகள் அனைத்தையும் இங்கு பதிவு செய்தல் சரியா என்று எனக்கு தெரியவில்லை.அதனால் என்னுடைய பிளாக்கரில் பதிந்துவிட்டு அதன் தொடுப்பை இங்கு பிரசுரிக்கிறேன் தவறென்றால் சுட்டிக்காட்டவும். KIDS Zone tamil and english videos:குழந்தைகள் பகுதி கதைகள் வீடியோ குழந்தைகள் கதைகள் வீடியோ-kids zone stories
-
- 1 reply
- 2.8k views
-
-
அந்த சிறு கிராமத்துக்கு ஆசிரியப்பணி நிமித்தம் மாற்றலாகி வந்து ஒரு வாரம் இருக்கும். வசுமதி தன் கைக் குழந்தை சுதாகரனோடு தன் தாயார் வீடு நோக்கி பட்டணத்துக்கான பஸ் வண்டியில் ஏறினாள். அது ஒரு இரு மணி நேர பயணம் சற்று கூடலாம் அல்லது நேரத்துக்கு போய் சேரலாம். சரியான் ஜன நெரிசல். ஒருவாறு இருக்க இடம் கிடைத்து டிக்கட் எடுத்து குழந்தையை மடியில் வைத்து நித்திரையாக்கி னாள். ஒரு மணி நேரத்துக்குபின பஸ் வண்டியின் தாலாட்டில் உறங்கிய நம் சின்ன வாண்டுபயல் எழுந்து விடான். அவள் புட்டியில் இருந்த கொதித்தாறிய நீரை பருக கொடுத்தார் அதை சப்பி குடித்தவனுக்கு அடங்க வில்லை. தாயின் அணைப்பு வேறு அவன் தாகத்தை தூண்டவே ..அடம்பிடித்து அழுதான். வண்டியில் இருந்தவர்கள் .... கொஞ்சம்காற்று வர…
-
- 7 replies
- 2.8k views
-
-
மாதா இந்த நாட்டில் அப்போது கடுமையானபனிக்காலமாகயிருந்தது. வெண்பனி விழுந்துதரையில் ஓரடி உயரத்திற்குப் பூப்போல குவிந்துகிடந்தது. அம்மா தூய பனிக்குள் தனதுகால்களை மிக மெதுவாகவும்எச்சரிக்கையாகவும் எடுத்து வைத்து வீதியின்ஓரமாக ஒரு முதிய வெண்ணிற வாத்துப் போலஅசைந்து நடந்துவருவதை தனது காருக்குள்இருந்தவாறே குற்றவாளிகவனித்துக்கொண்டிருந்தான். அப்போது மழைதூறத் தொடங்கிற்று. அம்மா தனது இரு கைகளையும் பக்கவாட்டில்ஆட்டியும் அசைத்தும் தனது உடலைச் சமன்செய்தவாறே வந்தார். முகத்தை வானத்தைநோக்கி அண்ணாந்து முகத்தில் மழைத்துளிகளை வாங்கிக்கொண்டார். அப்போதுபனியில் சறுக்கிக் கீழே முழந்தாள் மடியவிழுந்தார். அம்மா சட்டெனத் தனது வலதுகையைத் தரையிலே ஊன்றிக்கொண்டதால்முகம் அடிபடக் கீழே விழுவதிலிருந்துதப…
-
- 7 replies
- 2.8k views
-
-
நிழலாடும் நினைவுகள் ஒரு மே மாத நினைவு எண்பதுகளின் ஆரம்பம் ஊரில் தமிழ் இளையதலைமுறையினர் இலங்கை அரசிற்கெதிராக வன்முறை போராட்டங்களை ஆரம்பித்திருந்த நேரம் வட கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொலிசார் மற்றும் அரசாங்கத்திற்கு வால்பிடிக்கிறவை மீது தாக்குதல்களும் நடக்க தொடங்கியிருந்தது. ஆனாலும் எனக்கு அந்த காலகட்டத்தில் இந்த பேராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை அது மட்டுமல்ல எனது ஊரில் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட தெரிந்த ஒரு சில இளைஞரை காவல் துறை அடிக்கடி தேடிதிரிந்ததால் அவர்களுடன் பேசவோ பழகவோ கூடாது என்கிற எனது வீட்டு காரரின் கண்டிப்பு வேறை சும்மா கோயிலடியிலை கொஞ்சநேரம் சினேகிதங்களோடை மாலையிலை போய் கதைசிட்டு வாறதுக்கே எனக…
-
- 16 replies
- 2.8k views
-
-
அழகான மாடி கட்டிடம் அதை சூழ மாமரங்கள்,தென்னை மரங்கள் என்று ஒரே சோலை வனம் தான்.ரோஜா மலர்,அலரி மலர்கள் செவ்வரத்தம் மலர்கள் பல வித வண்ணங்களிள் பூத்து குலுங்கும் இதற்கு சொந்தகாரர் ஒரு வெள்ளைகார சாமியார் அவருடன் ஆங்கிலம் தெரிந்த ஜயரும் வசித்து வந்தார்கள். சுரேஷின் தந்தை அந்த ஊரில் வேலை மாற்றலாகி வந்தவுடன் அந்த மாடி வீட்டிற்கு அருகாமையில் வீடு வாடகைக்கு எடுத்து கொண்டார்.சுரேஷ் சிறு பையன் அப்பொழுது.வீட்டிற்கு குடிபெயர்ந்த அடுத்த நாள் மாடிவீட்டில் ஒரே மக்கள் கூட்டம் அலை மோதுவதை கண்டவனுக்கு அங்கு செல்ல வேண்டும் போல தோன்றவே பெற்றோருடன் அனுமதி பெற்று கூட்டத்துடன் கூட்டமா சென்றான்.வெளியே மதிய உணவிற்காக ஏழைகள் காத்து கொண்டிருந்தார்கள் உள்ளே உயர் குடி மக்கள் உணவருந்தி கொண்டிருந்தா…
-
- 14 replies
- 2.8k views
-
-
ஒரு நிமிடக் கதை தங்கக் கோடாலி! தங்கக் கோடாலி! ஏ ழை விறகுவெட்டி ஒருவன் காட்டுக்குச் சென்று, ஒரு மரத்தை வெட்டிக்கொண்டு இருந்தபோது, அவன் கையிலிருந்த கோடாலி கை நழுவிப் பக்கத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது. ‘‘கடவுளே! இனி நான் பிழைப்புக்கு என்ன செய்வேன்? என் கோடாலி எனக்குத் திரும்பக் கிடைக்கும்படி செய் யுங்கள்’’ என்று கண்ணீர் மல்க வேண்டினான். ஒரு தேவதை அவன் முன் தோன்றி, ‘‘கவலைப் படாதே! நான் எடுத்துத் தருகிறேன்’’ என்று அந்தக் கிணற்றில் மூழ்கி, ஒரு தங்கக் கோடாலியுடன் வெளியே வந்து, அவனிடம் நீ…
-
- 3 replies
- 2.8k views
-