கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மலர்ந்தும் மலராத காலை பொழுது. வேகமாக நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். கையின் உயர்த்தி கடிகாரதினைப் பார்த்தார். பரவாயில்லை, நேற்று இதே இடத்தில் வந்த நேரத்திலும் பார்க்க இரு நிமிடம் முன்னதாக வந்தது விட்டோமே என்று நினைத்துக் கொண்டார், காலை நடைப் பயிற்ச்சியில் இருந்த அந்த மனிதர். அவரை, மிக விரைவாக ஆபத்து நெருங்கிக் கொண்டிருகின்றது என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. ஆனால் தான் தற்போது மறைந்து இருக்கும் லண்டன் மாநகரில், தனக்கு ஆபத்து வர வாய்ப்பு இல்லை என நம்பிக் கொண்டிருந்தார் அவர். அவர் தனது நாட்டின் அமைச்சராக இருந்த போது, ஒரு பில்லியன் டொலர் பணத்தினை ஆட்டையைப் போட்டு விட்டு ஓடி வந்து விட்டார் என அவரது நாட்டின் அரசு குற்றம் சுமத்தி இருந்தது. அவரோ அதை மறுத்து இருந்தார். பிர…
-
- 25 replies
- 17k views
-
-
www.tamil.2.ag என் இனியவளே, நான் உன்னை ஒவ்வொரு பொழுதும் சிந்தித்த்துக்கொண்டே இருக்கிறேன். என் கண்களில் காணும் காட்ட்சிகள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. என் மனக்கண்களிலும். எம்மை மறப்பதற்கு யார் காரணம்? நானா? யார்? தெரிவித்துவிடு சரி செய்து முடியும் என்ற நம்பிக்கை என்னை தொந்தரவு செய்கிறது. பாவத்தை என்மேல் சுமத்துவியா? ஏங்குகிறது மனம். பாவத்தின் தண்டனையை அனுபவிக்க எனக்கொரு சந்தர்பம் தா. உன்னை மட்டும் நேசிக்காதோ என்காதே. என்னில் நான் இல்லை உன்னை கண்ட முதல். இப்பவும் நாமாகவே வாழ்கிறேன் நான். நீ எவவாறு என்று அறிய துடிகிறேன். என்ன செய்கிறாய், என்ன நினனகிறாய் என்பதை ஒவ்வொரு நிமிடமும் அன்று போல் இன்றும் மனத்திரையில் ஓடுகிறது. உன்னை குழந்தையாய் பாதுகாத்தேன் என்ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார் இளங்கோ-டிசே 'எழுதியதால் கடத்தப்பட்டு காணாமற்போனவர்களின் மனைவிகள், பிள்ளைகள் சார்பாக உங்களை இங்கு வரவேற்கின்றோம்' என ஒரு பெண்மணி, காலி இலக்கிய விழாவுக்கு வந்தவர்களுக்கு துண்டுப்பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தார். வசந்த அப்போதுதான் புகையிரத நிலையத்தில் இறங்கி பிரபல்யம் வாய்ந்த காலி கிரிக்கெட் மைதானத்தைத் தாண்டி நடந்து வந்துகொண்டிருந்தான். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அது வசந்த அவனது காதலியைச் சந்திக்கும் நாளாக இருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நயோமிக்கு கடல் மீது அளவற்ற விருப்பு இருந்தது. நீர்கொழும்பு, அறுகம்பே, ஹிக்கடுவ, பாசிக்குடா என கடற்கரைகளைத் தேடி அடிக்கடி வசந்தவும், நயோமியும் போய்க்கொண்டிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறு வயதிலிருந்து கதை கேட்க பிடிக்கும் கதை வாசிக்க பிடிக்காது . அப்படி கதை வாசிக்க வெளிக்கிட்டாலும் சட்டு பிட்டன்று கதையை சொல்லி முடித்து விட வேணும் . கதை சொல்லுறது என்று வெளிக்கிட்டு உந்த ஆலாபனை எல்லாம் செய்து வாறது எல்லாவற்றவையும் கேட்டு அதுக்குள்ளை கதையின் மையக்கரு எங்கை இருக்கு என்று தேடற பொறுமை இல்லாததால் கதை வாசிக்கிறதில் அதிகம் ஆவல் இல்லாமால் போச்சு. எங்கையாவது படம் காட்டி கார்ட்டூன் படம் காட்டி கதை சொன்னால் ரசிச்சு பார்ப்பது உண்டு . இப்படி எனது கதை இருக்கும் பொழுது .சும்மா நடந்து போற நேரங்களிலை என்னுடன் கதைத்து கதை சொல்ல வெளிக்கிட்டான் ஒருவன் .இவனை இவ்வளவு நாட்களாக காணலை யார் இவன் என்று கூட தெரியாது .தெரியாத ஆளான எனக்கு கதை சொல்ல வெளிக்கிடுறான் என்று யோசித்தத…
-
- 2 replies
- 1.2k views
-
-
“கந்தசாமி சொல்லுரத கேட்கிறது ஹரித? இந்த வீடு ஆர்மிக்கு தான் .. வீடு உண்ட பேர்ல இல்ல” கந்தசாமி தனியனாக ப்ளேன் டீ ஊத்திக்கொண்டிருக்கும்போது தான் செல்வராணியை நினைத்துப்பார்த்தார். இந்த நாச்சார் வீடு அவளின் சீதன உரித்தம் தான். இங்கே தான் 1982 இல் கந்தாசாமிக்கும் செல்வராணிக்கும் கலியாணம் நடந்தது. அப்போது எல்லாம் இரவில் தான் திருமணம்; முடிந்து மாப்பிள்ளை, பொம்பிளை முதலிரவு அறைக்குள் போனபின்பும் வெளியே நாற்சார் திண்ணையில் “தாள்” ஆட்டம் தண்ணியுடன் அனல் பறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் யாழ்ப்பாணத்து தூஷணங்கள் பற்றி பிஎச்டி செய்ய அமெரிக்கா போகலாம். கந்தசாமிக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அன்றைக்கும் அவர் தண்ணியை சாதுவாக போட்டுவிட்டு ஒரு “கை” விளையாடிவிட்டு தான் அறைக்குள…
-
- 5 replies
- 1.5k views
-
-
1995.. பல தமிழ் குடும்பங்களுக்கு ஒரு சபிக்கப்பட்ட வருடம்.... எங்கள் குடும்பமும் அதில் ஒன்று.. அன்றாடம் வேலிச்சண்டைகளையும்.. பங்குக்கிணற்றுச் சண்டைகளையுமே கண்டு வளர்ந்த பல வீர வீராங்கனைகளின் முற்றத்தில் குண்டு மழை... எனக்கு 14 வயது இருக்கும் என் நினைக்கிறேன்... எனது ஊர் சண்டிலிப்பாயில் ஒரு சனிக்கிழமை நாள் அதிகாலை 5 30 மணி..தூரத்தில் உலங்கு வானூர்தி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது...இடைய
-
- 10 replies
- 2.5k views
-
-
சுரேஸும், ரசிகாவும்ஒரு வாரமாக பேசவில்லை. சுரேஸ் அவளுடன் பேசுவதற்கு ஒருமுறை முயன்றும் அவள் முகம் கொடுக்காமல் போனதால், தனக்கே உரிய மிடுக்கில் அவனும் அதன் பின் அவளுடன் பேச முயலவில்லை. எப்போதும் மலரும் மகரந்தமும் போல் உல்லாவிய இவர்களின் புது நடத்தை இருவரின் நன்பர்களின் முகத்திலும் பல கேள்விகளை எழுப்பியது. சுரேஸின் நன்பர்கள் என்ன நடந்தது என்று குடைந்து கொண்டு இருந்தார்கள். சுரேஸோ "ஒண்டும் இல்லையடா சும்மா இருக்க பாப்பம்" என்று சினந்துகொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றான். ரசிக்காவும், சுரேஸும் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள். ரசிகா கொழும்பில் புறநகர் பகுதியில் …
-
- 6 replies
- 2.5k views
-
-
வேலைப்பளு நிறைந்த 13 வாரங்களுக்குப் பிறகு இரண்டு நாட்கள் விடுமுறையில் ஓய்வெடுப்பதென முடிவு செய்தேன். விடுமுறையின் முதல்நாள் காலை சிற்றுண்டி முடித்ததும் அப்பாடாவென சோபாவில் வந்து உட்கார்ந்தேன். செய்தித்தாள்கள், மெலிதான் மின்விசிறி ஒலி. அமைதி நிலவும் பொழுது. ஓ! எத்தனை நாட்கள் ஆகின்றன...! என் ஐந்து வயது மகன் மெல்ல ஒரு திருடனைப் போல நுழைந்தான். “அப்பா” “என்னடா” “பாட்டி சொல்வது உண்மையா.... உன்னை இன்று தொந்தரவு செய்யக் கூடாதாமே?” “அ.. ஆமாம்.” நான் முடிவாகச் சொன்னேன். “இன்றைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்” “சரி. ரெஸ்ட் எடுங்கள்..” அவன் மெலிதாக “கங்கெரு மட்டும் எங்கே வாழும் என்பதை எனக்குச் சொல்லிவிட்டு உங்கள் இஷ்டம் போல ஓய்வெடுங்கள்” “கங்கெரு அல்…
-
- 0 replies
- 851 views
-
-
முள்ளில் ஒரு சேலை விமலி! என்ன பிள்ளை நீ செய்யுற வேலை? முதலிலே போய் அவரின்ரை காலிலே விழுந்து கும்பிடு மோனை. அப்பா இல்லாத இடத்திலே ஒரு தகப்பனுக்குத் தகப்பனாக இருந்து உன்னை வளர்த்து இப்படியொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தந்த மனுசன். ஓடி வந்து என்ரை காலிலே விழுகிறாய்! போ போ பிள்ளை. அம்மா இப்படித்தான் சொல்லுவாள் என்று விமலிக்குத் தெரியும். அப்படியிருந்தும் அம்மாவின் காலிலே தான் முதலில் விழுந்து கும்பிட்டாள். அவர் அவரென்று அம்மா சொல்வது அக்காளின் கணவனை. அவளின் அத்தானை. அத்தான்! அவர் அக்காளுக்கு மட்டும் அத்தானாக நடக்க நினைத்திருந்தால் வாய் குளிரக் கோடி முறை அத்தான் அத்தானென்று விமலி கூப்பிட்டிருப்பாள்.…
-
- 1 reply
- 1.5k views
-
-
மொட்டை மொட்டையடித்துக்கொண்டிருந்தேன். என் தலையை நானே. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துச் சென்றனர். பெரிதாய் அது குறித்து எனக்கு ஏதும் அக்கறையில்லை. எப்பவுமே அவர்களை மதிப்பதில்லை. தெருவில் நுழைந்ததுமே படைநோய் கண்டவனின் கைகளாய் மூளை சொறியத்துவங்கும். அநியாயத்திற்கு சுயநலமிகள். ஒரு குடம் தண்ணியைக் கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காதவன் (ஆனால் இவன் காவேரி பங்கீடு குறித்து நியாயவாதியாக பேசிக்கொண்டே இருப்பான்.) ஒருவன் சோற்றுக்கையால் காக்காவைக்கூட துரத்தாதவன். காக்கா எங்கு இருக்கென கேட்காதீங்க. ரொம்ப காலமாக சொல்லப்பட்டிருப்பதால் அவன் குறித்து இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. இன்னொருவன் இருக்கான். ஏதாவது நன்கொடை பொதுவிஷயம் என போனால் வீட்டினுள்ளே இருந்…
-
- 1 reply
- 4.4k views
-
-
சகுனி கதையும் ..ஈழத்தோழர்கள் எடுக்கவேண்டிய நிலையும்... துரியோதனனின் தாய் காந்தாரி. அவள் காந்தார நாட்டு மன்னன் மகள். அவள் சகோத ரன் சகுனி. சகு னியை அறியாத வர் யாரும் இலர். பாண்டவர் களை சூதால் வென்று காட்டுக்கு அனுப்பிய அவனை அறியாதவர் யார்? துரியோதன னின் உடன்பிறந் தோர் மொத்தம் நூறு பேர். ஆதலால் அவர்கள் ஈரைம்பதியர் என்றும் நூற்றுவர் என்றும் பெயர் பெற்றனர். இதைப்போலவே சகுனியின் உடன்பிறந்த வரும் நூற்றுவரே. துரியோதனனுக்குத் தாய்மாமன்களாகிய நூற்றுவரும் ஏதோ ஒரு காரணத்தினால் அஸ்தினாபுரத்திலேயே தங்கியிருந்தனர். அரண்மனையில் எந்நேரமும் சகுனி சகோதரர்கள் இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பர். தாய்மாமன் முதலிய பெரியோர் யாராயிருப்பினும் மரியாதை செய்ய…
-
- 5 replies
- 1.9k views
-
-
நம்ம யாழ் கள சாத்திரியின் மாந்தீரிக யதார்த்தப் பாணியில் எழுதப்பட்ட சிறுகதை. டுபுக்கு டொட் கொம்முக்காக எழுதப்பட்டு, அவர்கள் அனுமதிக்காததால் எதுவரை நெற்றில் வெளிவந்தது. அகதிக்கொடி - சாத்திரி கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிரான்சில் இருந்து வந்த விமானம் இறங்கி ஓடு பாதையில் ஓடத் தொடங்கியிருந்தது ………………..மற்றைய பயணிகள் கவனத்தை இவர்கள் மீது திருப்பி விடாதபடி கடைசி வரிசையில் இருத்தப்பட்டிருந்த இருவர்களினதும் கைகளிலும் விலங்கிடப்பட்டு போர்வையால் மறைக்கப்பட்டிருந்தது.பத்து மணி நேரப் பயணம் இருவருமே ஒருவரோடொருவர் எதுவும் கதைக்கவில்லை ரமணனுக்கு அருகில் இருந்தவன் மீது வெறுப்பும் கோபமுமாக வந்தது . தனது திட்டம் தோற்றுப் போக அவனும் ஒரு காரணம் என்று நினைத்தான் . …
-
- 21 replies
- 4.9k views
-
-
அப்பாவின் சுதந்திரம் மாடியிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டேயிருந்தான் இவன். மூன்றாவது மாடியிலிருந்து தரைதளத்திற்கு அப்பா இறங்கி வந்து விட்டாரா என்பது வரை பார்ப்பது வழக்கம். படிகளில் தடுமாறி விடக்கூடாதே என்ற பயம். ""நானே போய்க்கிறேன்...எனக்கென்ன பயம்'' - சொல்லிக்கொண்டே இறங்கி விட்டார். எதற்கும் ஆள் துணை நிற்பதோ, முட்டுக் கொடுப்பதோ அப்பாவுக்குப் பிடிக்காது. தனித்து இயங்குவதில் ஓர் அதீத தைரியம். அதோடு யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என்கிற நல்லெண்ணம். அந்தக் காலனியில் வீடு பார்த்துக் குடியிருக்க வேண்டும் என்பது இவனது வெகுநாள் ஆசை. போகும் போதும் வரும்போதும் அந்தக் குடியிருப்புவாசிகள் …
-
- 0 replies
- 1k views
-
-
படிக்கப்படாத கடிதம் அலுவலக நேரம் முடிந்து விட்டதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமில்லை. ஆளுக்கு ஒரு சீட்டில் அமர்ந்திருக்க எனக்குக் காலியான இருக்கை ஒன்று கிடைத்தது. ""ரெண்டு ரூபாய் சில்லறையாகக் கொடுங்க'' என்றபடி கண்டக்டர் எச்சில் தொட்டு டிக்கெட்டுகளைக் கிழித்துக் கொடுத்தபடி வந்தார். முப்பது செகண்டு முன்னால் பஸ்ûஸக் கிளப்பி விட்டால் முதலாளியின் சொத்து திவால் ஆகிவிடும் என்ற ரேஞ்சில் சண்டையிட்டுக் கொள்ளும் தனியார் நிறுவன பஸ் கம்பெனி டிரைவர்களின் கூச்சலைக் கடந்து பேருந்து மெதுவாக நிலையத்தை விட்டு வெளியேறியது. கூட்ட நெரிசலை விலக்கி ஹென்றி வுல்சி சிக்னலை அடைவதற்குப் பத்து நிமிடம் ஆனத…
-
- 0 replies
- 833 views
-
-
அனாதையாய் போன ஆதிரையும் ஆதவனும் காணாமல் போனார்கள் என எண்ணிய பலர் உயிருடன் உள்ளது போல அவர்களும் இருப்பார்கள் என்றே நம்பினேன். மீண்டும் காணவிரும்புகிறவர்களுள் அவளும் ஒருத்தி. பெண்களின் வெளியீடுகளில் அவளது எழுத்துக்கள் மிகுந்த ஆழுமை செலுத்தியிருக்கின்றன. அவளது சமூகம் சார்ந்த எழுத்துக்களும் கருத்துக்களும் ஊர்பார்க்கப்போன புலம்பெயர்ந்தோர் பலருக்கு அறிமுகமானவை. இலக்கியப்பரப்பில் உச்சரிக்கப்பட்ட சிறந்த பெயர்களுள் அவளது பெயரும் ஒன்று. தடுப்பிலிருந்து வெளியில் வருகின்ற தெரிந்த யாவரிடமும் அவளைப்பற்றிய எனது விசாரணை தொடர்ந்து கொண்டுதானிருந்தது. அண்மையில் ஒருதோழியின் தொடர்பு கிடைத்த நேரம் அவளிடம் விசாரித்தேன். நான் தேடியவள் சரணடைய வந்தவழியில் இறந்துவிட்டாதாகச்…
-
- 11 replies
- 2.2k views
-
-
புத்தகம் ………………….. உங்கட மகனை நான் அனுப்புகிறேன். அவற்ர புத்தகத்தையும், 50000 ரூபா காசை அட்வான்சாகவும் தாங்கோ. ஓம் தம்பி சொன்ன மாதிரி செய்யிறன். எம்மவரின் புலம்பெயர்வு காலத்தில் சாதாரணமாகப் பேசப்பட்ட வசனங்களில் ஒன்று. ஏஜென்ஸிமாருக்கும் எமக்குமான உரையாடல்களில் இச் சொற்கள் சர்வசாதாரணமாகவே வரும் அது என்ன புத்தகம். பாடப்புத்தகம், பாஸ்போட் ( கடவுச் சீட்டு -Passport ), மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகம். ஆகியவை எம்மால் புத்தகமென கூறப்படும் புத்தகங்களாகும். எம்மவருக்கும் புத்தகம் எனப்படும் பாஸ்போட்டுக்கும் இரத்தமும் சதையுமான உறவு ஒன்று உள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக நாம் வெகு சுதந்திரமாக இந்தியாவுக்குப் போய் வந்த ஒரு காலம் இருந்தது. 1974 ஆம் ஆண்டு எனது…
-
- 3 replies
- 1.5k views
-
-
ரெயில் நிலையம் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்த தருணத்தில் இருந்து மற்றவர்கள் எல்லாம் இறந்தவர்களாகவே அவனிற்குப் பட்டனர். பிரேதப் பெட்டிகளில் இருந்து மக்கள் வெளிக்கிளம்பி நடந்து திரிவதாக அவனிற்குத் தோன்றியது. தன்னைப் பற்றிய சிந்தனைகள் அறவே அவன் மனதில் இறந்துபோயிருந்தன. எவரது அங்கீகாரமும் எந்த விதத்திலும் அவனிற்குத் தேவைப்படவில்லை. கடிகாரம் நேரம் முதலிய கோட்பாடுகள் அவனுள் மறக்கப்பட்டிருந்தன. அவனது மனம் திட்டமிடுவதை அறவே கை விட்டிருந்தது. வேலை, வருமானம், செலவுகள் போன்ற சின்ன விடயங்கள் மிகச் சின்ன விடயங்களாகிப் பின் அறவே தொலைந்து போயிருந்தன. புகையிர நிலையத்திற்குள் பேய்களாகத் தெரிந்தவர்களோடு முட்டிமோதி விலகி தண்டவாளத்தை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். …
-
- 14 replies
- 2k views
-
-
"தலை தீபாவளி" எனக்கு திருமணம் செப்டம்பர் நாலாம் திகதி நடந்தது, என் மனையாள், என் பாடசாலையிலேயே என்னைவிட இரண்டு ஆண்டு குறைய படித்த மாணவி. ஆகவே அவரை நன்றாக எனக்கு முதலிலேயே தெரியும் . அதே போல அவருக்கும் என்னையும் என் போக்கையும் மிக நன்றாகத் தெரியும் . 'சமயமா ? மானிடமா?' என்ற விவாத போட்டியில் நாம் எதிர் எதிர் அணிக்கு தலைமை தங்கி உள்ளோம். என்றாலும் இது பெற்றோர் முடிவு எடுத்த ஒன்று. அவள் மிகவும் சமயத்திலும் அதன் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை உள்ளவள். நான் எதிலும், அது பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வந்தாலும், எடுத்தவுடன் நம்பிக்கை கொள்ளுவதில்லை, அலசி ஆராய்ந்தே, அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் மட்டுமே, ஏற்றுக் கொள்வேன். குறிப்பாக தமி…
-
- 0 replies
- 597 views
-
-
"வேதனை தீரவில்லை" "வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான்" என்று பாடிச் சென்றாள் மூதாட்டி அவ்வையார். ஆனால் பிடித்த முயலுக்கு மூன்று கால் என இலங்கை அரசாங்கம் இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பாவிக்க வேண்டும் என்று திடீரென மறுமலர்ச்சி என்று கூறி இரசாயனப் பசளை இறக்குமதிக்கு முற்றாக ஜூன் 2021 இல் தடை விதித்தது. இதை அடுத்து அங்கு இரசாயன உரம், கிருமி நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. அதே நேரத்தில் சேதனப்பசளையும் போதிய அளவு இருக்கவில்லை. விவசாயிகளுக்கு அதன் உபயோகமும் பயிற்றுவிக்கப் படவில்லை. அந்த இக்கட்டமான காலத்தில் தான் ந…
-
- 0 replies
- 591 views
-
-
கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள். எம்.கே.முருகானந்தன் என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை. இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதை…
-
- 2 replies
- 1.4k views
-
-
மகாவலி – சாரங்கன் நித்திரையில் மனைவி கேவி கேவி அழும் சத்தம் கேட்டு “இஞ்சேரும் இஞ்சேரும்” என்று மனைவி திலகவதியின் தோளை தட்டி எழுப்பினார் ராஜதுரை “இவன் தம்பி சுபன் கூப்பிட்டமாதிரி கிடந்தது ” “அது கனவு சும்மா படும் ” மனைவியை படுக்கவைத்தாலும் ராசதுரையருக்கு நித்திரை வரவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு வந்தவர்களுக்கு புது இடமும் அதன் சூழலும் மகள் மருமகன் பேரப்பிள்ளைகள் என்ற உறவுகளாலும் மனதில் இருந்து ஓரளவு மறந்திருந்த அந்த மகாவலி போனவாரம் அவர்கள் சென்றிருந்த ஒரு உறவினரின் கலியாண வீட்டு நிகழ்வு ஒன்றில் மீண்டும் கிளறப்பட்டுவிட்டது . “நீங்கள் சுபனின் பெற்றோர் தானே” உங்களை எனக்கு தெரியும் நான் சுபனின் நண்பன் என்று தன்னை அ…
-
- 6 replies
- 2.2k views
-
-
நெடுநல்வாடை வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்றுகோ ளழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள் புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி இருங்களி பரந்த ஈர வெண்மணற் செவ்வரி நாரைய டெவ்வாயுங் கவரக் கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப் பெய…
-
- 3 replies
- 3.8k views
-
-
எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும் துளியும் பொருந்திப் போகவில்லை. படுக்கை விரிப்பின் மறுமுனையில் கிடந்த எனது இடுப்புவாரைக் கையிலிடுத்து வினோதமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பவளின் கவனத்தைக் கோரவே அக்கேள்வியைக் கேட்டிருந்தேன். “என்ன கேட்டீர்கள்?” ஏற்கனவே சிவந்திருந்த கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்திருந்தது. “ஒன்றுமில்லை.. என்னவோ குறிப்பற்று சொன்னேன்”. அறைக்குள் நான் நுழைந்ததிலிருந்து அவளது பார்வையில் அத்தனை ஆழம் இருக்கவில்லை. சிமிட்டாத இமைகள் அவள் அந்தப் பேச்சை அப்படியே விடப்போவதில்லை என்பதாகவோ மேற்கொண்டு என்னிடம் எதுவுமே பேசப்போவதில்லை என்பதாகவோ எதையோ அறிவித்தன…
-
- 4 replies
- 1.6k views
-
-
“வேந்தர் விலாடிமிர் வீழ்ந்தார்! வேந்தர் வேலன் வாழ்க!!” இராணியை அந்த இடத்துக்கு கொண்டு வந்தவுடன், வேந்தர் விலாடிமிரின் பதினைந்து வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் என்று வேலனுக்குத் தெரியும். மேற்கண்ட வரிகளை நாளைய நாளிதழ்கள் அலறும். இந்த நாளுக்குத் தான் கடந்த ஐந்து வருடங்களாக போராடிவந்தான். பன்னிரண்டு சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் வேலனின் வாழ்க்கைக் கனவை நனவாக்கிவிட்டது. விலாடிமிர் கைகுலுக்கியபோது வேலன் மகிழ்ச்சி மேகங்களில் மிதந்தான். ஆனால் விலாடிமிர் அவனிடம் கூறிய வார்த்தைகள் அவனைத் தரைக்கு கொண்டு வந்தன. “Bad day” என்றார் விலாடிமிர். “How about tonight?” உலகத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் செய்தி நிருபர்களுக்கும் பேட்டி அளிக்கும்போதுகூட விலாடிமிரின் …
-
- 0 replies
- 1.1k views
-
-
அமைதிக்குப் பெயர்தான் சாந்தி.... 'சாந்தி எழும்பு பிள்ளை' றோட்டில ஒரே சனநடமாட்டமாக் கிடக்கு. என்ன பிரச்சினையோ தெரியாது.' என்றபடி படலையைத் திறந்து தெருவை நோட்டமிட்டாள் மலர். 'என்னக்கா என்ன பிரச்சினை?' என்று பக்கத்து வீட்டு மனோகரியை கேட்டாள். 'என்னவோ தெரியாது. எல்லோரும் வெளிக்கிட்டுப் போகினம். ஆமி இறங்கீற்றுதெண்டு கதைக்கினம். உண்மையோ தெரியாது' என்றபடி மனோகரியும் தன் வீட்டு படலையை பூட்டினாள். வீதியில் செல்பவர்கள் பதட்டத்துடனும் அவசரத்துடனும் ஓடிச்செல்வதனைக் காணக்கூடியதாய் இருந்தது. மலரின் மனதுக்குள் நிறையக் குழப்பங்கள். கணவன் மாணிக்கத்தை நினைக்க என்ன செய்வதென்று தெரியால் திகைத்தாள். இப்படி ஒவ்வொரு முறையும் ஒடிப்போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த சந்தர்ப்பங…
-
- 5 replies
- 1.6k views
-