கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
சிகரத்தை எட்டிய சிறிய தவளை வெகு காலத்திற்கு முன்பு…சிறிய தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்பது தான் பந்தயத்தின் இலக்கு. இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அந்த பெரிய கோபுரத்தைச் சுற்றி மிகப்பெரும் கூட்டம் கூடி விட்டது. போட்டி ஆரம்பமாகி விட்டது. உண்மையிலேயே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்குக் கூட அந்த சிறிய தவளைகளால் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. கூட்டத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்….. “வழி மிகவும் கடினமானது” “இந்தச் சிறிய தவளைகளால் நிச்சயமாக உச்சியை அடைய முடியாது” “வெற்றிபெ…
-
- 4 replies
- 1.3k views
-
-
1977 ல் ஒருநாள் காலைமை எங்கடை வீட்டு கோலிலை இருந்து படிக்கின்றன் எண்டு அப்பாவுக்கு படம் காட்டிக்கொண்டிருந்தன் . எனக்கு அப்பாவிலை செரியான கோபம் . நான் தமிழிலை 85 மாக்ஸ் எடுத்தனான் . அவருக்கு நான் 95 மாக்ஸ் எடுக்கேலையெண்டு தென்னம்பாழையாலை தன்ரை கோபத்தை என்னிலை தீத்து போட்டார் . நான்தான் வகுப்பிலை கெட்டிக்காறன் . எலாப்பாடத்திலையும் 80க்கு மேலை எடுப்பன் . நல்லாய் விளையாடுவன் . நான்தான் உயரம் பாயிறதிலையும் சரி , குண்டு எறியிறதிலையும் சரி , உதைபந்து அடிக்கிறதிலையும் சரி முதல் ஆள் . இதாலை பெட்டையளிட்டை போட்டி ஆர் என்னோடை கூடப் பளகிறதெண்டு . இந்த குவாலிபிக்கேசன் எல்லாம் என்ரை அப்பரை குளித்திப்படுத்தேலை . என்னை தென்னம்பாழையாலை வகுந்து போட்டார் . அப்பர் அடிச்ச காயம் எனக்க…
-
- 29 replies
- 2.6k views
-
-
சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?" வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னைத் திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " என்றேன். சரி என்பது போலத் தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க…
-
- 16 replies
- 2k views
-
-
துரோகங்கள் - சிறுகதை அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம் இதற்கு முன்னர் பல முறை அந்த பங்களா கேட்டைத் தாண்டியபோது அவனை மீறி வந்த காய்ச்சல் உணர்வு இப்போது இல்லை. தோட்டத்தைத் தாண்டி பங்களா போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பெரிய காரைச் சுற்றிக்கொண்டு அவன் பங்களா வராண்டாவை அடைந்தான். “சார்... சார்...” என்று அழைத்தான். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆள் ஓடிவந்தான். நீலகண்டனைப் பார்த்து, “சின்ன அம்மாவைக் கூப்பிட்டீங்களா?” என்று தெலுங்கு மொழியில் கேட்டான். “இல்லை. பெரிய ஐயாவைப் பார்க்கணும்” என்றான். “பெரிய ஐயாவையா? சரி, சேர்ல உக்காருங்க. நான் சொல்லிட்டு வரேன்.” நீலகண்டன் வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். சி…
-
- 0 replies
- 3.1k views
-
-
காபி - இள.சிவபாலன் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு லலிதா புரண்டு படுத்தாள். அதிகாலையின் வெளிச்சம், மூடப்பட்டிருந்த சன்னல் கதவுகளுக்கிடையே கசிந்து கொண்டிருந்தது. மெலிதாக போர்வையை விலக்கிப் பார்த்தாள். கணவன் அந்த கட்டில் முழுக்க அலங்கோலமாக படுத்துக் கிடந்தான். அவனிடமிருந்து நன்றாக விலகி அவள் ஓரமாகப் படுத்திருந்தாள். திரும்பவும் கதவு தட்டும் சத்தம். யாரும் திறப்பது போல் இல்லை. யாரும் எழுந்து விட்ட மாதிரியும் தெரியவில்லை. அவளுக்கு சுடச் சுட காபி குடிக்கவேண்டும் போலிருந்தது. இதே அவளது வீடாக இருந்தால் அப்பா காபி போட்டு கொண்டு வந்து அத்தனை வாஞ்சையுடன் அவளை எழுப்பியிருப்பார். திருமணம் முடிந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. நேற்றிரவுதான் அவளது வீட்டில் இருந்து கிளம்பி கணவனோடு …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஸ்மைலி – அனங்கன் கண்களை பத்துநிமிடத்திற்கு மேல் மூடிக்கொண்டிருக்க முடியவில்லை. எண்ணங்கள் அணுத்துகள்கள் என ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறுகின்றன. கண்களைத் திறந்தவுடன் ஏற்படும் ஆறுதல் சிறுதுநேரத்தில் நெடுஞ்சாலைகளில் வரிசையாக வரும் வாகனம் போன்ற எண்ணங்களால் கலைந்துவிடுகின்றது. தான் அந்த நெடுஞ்சாலையைக் கடக்க நினைப்பவள் போல தொடர் அர்த்தமற்ற எண்ண வரிசையை வெறித்துப்பார்த்துகொண்டிருந்தாள். எழுந்து மொபைலை எடுத்து செயலிக்குள் சென்று அவர்கள் உரையாடல்களை படிக்க ஆரம்பித்தாள். தன் முகங்களாகவும் அவன் முகங்களாகவும் மாறிப்போன இளிப்பான்களை பார்த்துகொண்டு செல்வது காலவெளியில் நிரந்தரமாக சிக்கிக்கொண்டதுபோல் இருந்தது. தான் பேசின சொற்களை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு, அதே…
-
- 0 replies
- 432 views
-
-
எங்கே குட்டியண்ணா வன்னி மண்ணில் எந்தக் கவலைகளும் இன்றி எதிர்காலம் பற்றிஎந்தவொரு சிந்தனைகளுமற்று துள்ளித்திரிந்த சிறுமிதான் சியாமளா ... சியாமளாவிற்கு இன்று வயது ஒன்பது இன்று அவளது குடும்பத்தில் யுத்தம் தாயாரை பலியெடுத்துவிட தந்தையோ வேறு திருமணம்செய்து கொண்டு பிள்ளைகளை கைவிட்டு சென்றது மட்டுமல்ல அவளது மூத்தசகோதரனோ மண்ணிற்காக போராடிய குற்றத்திற்காக இன்று தடுப்பு முகாமில் வாடுகின்றான். இவளது அடுத்த அண்ணன்தான் குட்டியண்ணா. சியாமளாவிற்கு குடும்பத்தில் மிகவும் பிடித்தஒரு உறவு இரண்டாவது குட்டியண்ணாதான்.அப்பா அம்மா இல்லாத குறையை குட்டியண்ணாவே போக்கினான். குட்டியண்ணா பாடசாலைக்கு சென்றாலென்ன கோவிலுக்கு சென்றாலென்ன. விழையாடச்சென்றாலென்ன குட்டியண்ணாவின் கைகளைப்பிடித்…
-
- 8 replies
- 2.4k views
-
-
உப்பு மூட்டை க ளைத்து வீட்டுக்கு வந்த கதிரிடம் ஓடி வந்தாள் குழந்தை ஷாலினி. ‘‘அப்பா! உப்புமூட்டை..!’’ என ஆவலோடு அவனை நோக்கிக் கை உயர்த்தினாள். ‘‘அவ கிடக்கிறா விடுங்க! நாள் பூராவும் வேலை செஞ்சு களைப்பா வந்திருக்கீங்க. பாவம், நீங்க ஓய்வு எடுங்க’’ என்ற கமலா, ‘‘ஏய், நீ வாடி இங்கே! அப்பாவைத் தொல்லை பண்ணாதே!’’ என்று ஷாலினியை இழுக்க முயன்றாள். ‘‘பாவம், அதைத் தடுக்காதே கமலா! குழந்தைக்கு என்ன தெரியும்... அங்கே அந்தப் பாரம் பொழப்பு. இந்த பாரம் சுகம்!’’ எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
பி.ப 5 : 20 இலக்கு நகர்கிறது.... இண்டைக்கு விட்டால் இனி இந்த இலக்கை பிடிக்க முடியாது.. இந்த இரண்டு வசனமும் தான் மதனின் மனசில் விடாமல் ஒலித்து கொண்டிருந்தது. கொஞ்சம் வியர்த்து தான் போய் இருந்தான். அவன் ஒரு இயக்கி மட்டும் தான். அதை செய்ய வேண்டியவனுக்காக தான் இவ்வளவு காத்திருப்பும். வசந்தன் எங்கே.? ஒரு வேளை சுத்தி வளைப்புக்குள் மாட்டுப்பட்டிருப்பனோ.? இல்லை.. மனசை மாத்தி இருப்பானோ.? ச்சே ச்சே அப்படி இருக்காது அவன் என்னை விட உறுதியானவன் நிச்சயமா வருவான். தன்னை தானே கேள்வியும் கேட்டு சமாதானமும்படுத்தி கொண்டிருந்தான். நேரமாகிறது இலக்கு நகர தொடங்கிவிட்டது இன்னும் பத்து இருபது நிமிசத்திலே இந்த இடத்தை விட்டு போயிடும். அதுக்கு பிறகு இலக்கை நெருங்கவே…
-
- 20 replies
- 3.1k views
-
-
<span style='font-size:30pt;line-height:100%'><span style='color:blue'>காமம் அதில் காதல் இல்லை காதல் அதில் காமம் இல்லை</span> வீட்டின் முன்புறம் இருந்து பார்த்தால் மாடி வீடு போல தெரிந்தாலும் அங்கே இரண்டு அறைகள்தான் மீதமெல்லாம் மொட்டை மாடி அதில் ஒருபுறம் மாமரக்கிளை வளைந்து தண்ணீர் தொட்டிக்கு குடை பிடிப்பதுப்போல் இருக்கும்.வீட்டிற்க்கு உள்ளே ஒரு அறையில் இருந்து பார்த்தால் கீழே முன்புறம் தெருவே பளிச்சென தெரியும்.இப்போ இந்த வீட்டுக்கு என்னாச்சு?, அது தான் நான் தங்கியிருக்கும் வீடு. கீழே வீட்டுகாரர் அவர் மனைவி நான்கு வயது பையன் என்று சிறு குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும்.நான் வழக்கமாக விடியல் காலை 6.30 மணிக்கு எந்திருச்சு பக்கத்தில உள்ள டீக்கடை போக…
-
- 9 replies
- 5.8k views
-
-
அந்த மாதிரி பொம்பளை மனம் இறுக்கமாகவே இருந்தது. அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனைக்கும் அப்பா போன பிறகு அம்மாதான் எல்லாமாமுமாக இருந்து என்னைப் பார்த்து கொள்கிறாள். இருந்தும் கோபத்தின் கனலில் மனம் பின்னோக்கி சென்று எண்ணிப் பார்த்தது. எங்கள் தெருவில் வசித்து வந்த பவானி அம்மாள் இறந்து விட்டாள். அம்மாவை விட நான்கைந்து வயது இளையவளாக இருக்கக் கூடும்.என் சிறுவயது பருவத்தில் இதே தெருவில்தான் வசித்து வந்தாள். குழந்தைகள் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் நானென்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் என் அம்மாவோ, இல்லை மற்ற குழந்தைகளின் அம்மாக்களோ அவளை எப்போதும் அருவெறுப்பாகவே பார்ப்பார்கள். அவள் எங்கள் தெருவில் வரும்போது எங்களுக்கு அதட்டல் விடப்படும். "ஏன்மா அந…
-
- 4 replies
- 6.9k views
-
-
புதிதாக வாங்கிய ·பியட் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நான் போய்க் கொண்டிருப்பது சசிதரின் வீட்டிற்கு. கார் வாங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. வேலைமெனக்கெட்டு அவன் வீட்டுக்கு போவதற்கான காரணம், நான் கார் வாங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரிய வேண்டுமென்று தான். அதனால் நண்பர்களை, எடிட்டர்களை, என் நலனில் அக்கறை கொண்டவர்களை எல்லோரையும் விட்டுவிட்டு முதல் முதலில் அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். ஏன் என்றால் அவன்தான் என்னுடைய முதல் எதிரி என்பதால். நாங்கள் இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொள்வோம். இலக்கியக் கூட்டங்ளில் சொற்பொழிவு ஆற்றுவோம். அவன் என்னைப் புகழ்ந்து பேசுவான். நான் அவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் உள்ளூர நான் அவனை வெறுத்துக் கொண்டிருந்ததேன். அவனும் என்னை வெறுக்…
-
- 5 replies
- 1.6k views
-
-
நான் அவனில்லை... (நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... ) இருட்டடி எண்டால் என்னெண்டு உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.இருட்டுக்க ஒளிச்சு நிண்டு ஆரிலை கோபமோ அவருக்கு,அடிக்கிறவன் ஆரெண்டு யோசிக்கிறதுக்கு ரைம் குடுக்காமல் அடிச்சிட்டு அடிக்கிறவன் எஸ்க்கேப் ஆகிறதுதான் இருட்டடி.இதில அடிக்கிறவன் யாரெண்டும் அடிவாங்குகிறவன் யாரெண்டும் பாத்துக்கொண்டு நிக்கிறவனுக்கு விளங்காது.ஒருதடைவை ஊரில நானும் உந்த இருட்டடியில இருந்து மயிரிழையில தப்பினனான்.அது சம்பவமல்ல...தரித்திரம்..சா இல்லை..சரித்திரம்... அதைத்தான் நான் இப்ப உங்களுக்குச் சொல்லப்போகிறன். சம்பவம் நடந்த அண்டு நல்ல அமாவாசை இருட்டு...நானும் என்ர நண்பனும…
-
- 33 replies
- 3.8k views
-
-
நாடு தொலைத்தவனின் பயணக் குறிப்புக்கள் அனுபவம் : அகிலன் நடராஜா உலகத்தின் திசையெங்கும் விரிந்த ஈழத்தவர்களின் அகதிப் பயணங்களில் மலேசியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. கனடா ஆகட்டும், லண்டன் ஆகட்டும், பிரான்ஸ் ஆகட்டும் பயண வழியில் மலேசியா ஒரு சத்திரம். அப்படித்தான் எனக்கும். பயணங்கள் பற்றி என்னிடமும் நிறையக் கனவுகள் இருந்தன. ஆனால் காலம்- நிலம், நீர், ஆகாயமென ஆபத்தான பயணமொன்றை என்னில் திணிக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை. நம்பிக்கைகளின் அழிவில் அது தனது வேலையைக் காட்டுகிறது. 2009 மார்ச் மாதத்தில் வலைஞர் மடத்தில் இராணுவம் புகுந்தபோது எல்லாம் முடிந்தது என்று தலையில் கைவைத்து உட்கார்ந்த அண்ணர் ஒருவரிடம், “ஏன், முள்ளிவாய்க்கால் இன்னமும் இருக்குத்தானே..” என்…
-
- 0 replies
- 789 views
-
-
இஞ்சாருங்கோ...இஞ்சாருங்கோ ஒருக்கா இதை வந்து பாருங்கோ என்று மனைவி கூப்பிட்டதால் ஏதோ அவசரவிடயமாகத்தான் கூப்பிடுகிறாள் என்று நினைத்தபடியே,என்னப்பா என்ன நடந்தது என்று அறைக்குள் ஒடினேன்.இஞ்சபாருங்கோ இவள் ரம்பா கலியாணம் கட்ட போறாளாம் பார்த்து கொண்டிருந்த இணையத்தளத்தை எனக்கு காட்டினாள். அட சீ இதுக்கு போய் இப்படி கத்துறீர்,நானும் ஏதொ அவசரமாக்கும் என்று ஒடிவந்தேன்,புறு புறுத்தபடியே இணையத்தை பார்த்தேன்.அவளும் பெண்தானே கலியாணம் கட்டுவதில் என்ன தப்பு .அவளுக்கும் உம்மைப்போல ஒரு ஆசை வந்திருக்கும் என்றபடியே அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன். பின் தொடர்ந்து வந்தவள் உங்களுக்கு இப்படியான நல்ல இணையங்களுக்கு போய் நல்ல செய்திகளை படிக்கத் தெரியாதே ? சும்மா வெடிகுண்டு ,துப்பாக்கி,மகிந்தா…
-
- 16 replies
- 3.6k views
-
-
யாழ்களத்தில் களேபரம் இந்தப்பகுதியில் வரும் கதாபாத்திரங்கள் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிடுபவை அல்ல. சித்தரிக்கப்படும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.
-
- 282 replies
- 32.6k views
-
-
MSN இல் சாத்திரியும் சோழியனும் ... இந்தவார ஒரு பேப்பரில் வெளிவந்தது யெர்மனியில் வசிக்கும் எழுத்தாளர் நாடகநடிகர் வில்லிசை கலைஞர் இப்படி பல கலைத்துறையிலும் காலடி பதித்திருக்கும் சோழியன் என்கிற ராஜன் முருகவேல் அவர்களுடன் எம்.எஸ்.என். மெசஞ்சரில் நடந்த ஒரு உரையாடல் அதனை பதிந்துஉங்களிற்கும்போட்டி
-
- 33 replies
- 4.9k views
-
-
அர்த்தம் அற்ற பிழை அனோஜன் பாலகிருஷ்ணன் கயல்விழியை திருமணம் செய்து ஓராண்டுக்குள் அம்மாவாகிவிட்டாள். நண்பர்கள் ஆச்சரியமாக வாயைப் பிளந்தார்கள். சந்தைக்கு செல்லும் போது உறவினர்கள் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தார்கள். அம்மாதான் பெண்பார்த்து செய்துவைத்தாள்.கயலை முதன்முதலில் கோயிலில் காட்டினார்கள். இவளா என் மனைவி? எத்தனையோ பெண்களை வேலைபார்க்கும் இடதிலும்,யுனிவேர்சிட்டிளும்,ஃபேஸ்புக்கிலும் பழகி சில்மிஷம் புரிந்திருந்தாலும் இவள்தான் உன் மனைவியாகப் போகின்றவள் என்று சொல்லி அவளைக் காட்டும்போது நிச்சயம் ஒரு ஆண் தடுமாறுவான். அது எனக்கும் நடத்து, அடிவயிற்றில் ஒருவினோத உணர்வு, நெஞ்சில் எதோ சுரப்பது போன்று ஒரு உணர்வு. முதன்முதலில் நானம் ஒரு ஆணின்கண்களி…
-
- 6 replies
- 1.8k views
-
-
[size=1][/size] [size=4]கந்தையர், வழக்கத்தை விடக் கொஞ்சம் 'பிசியாக' இருந்தார்.[/size] [size=4]'வதனா விலாசின்' மேலே கட்டப்பட்டிருந்த, ஒரு விதமான மாடியிலிருந்து, தற்காலிக படிகளைத் தூக்கிவைத்து, அதன் வழியே ஒரு விதமான,தனக்கேயுரித்தான லாவகத்துடன் கீழே இறங்கியவர், படிகளை எடுத்துச் மறைவான சுவரொன்றில், சாத்தியதும், மேலேயொரு, மாடி இருப்பதற்கான, எந்த வித அடையாளமும், அங்கு காணப் படவில்லை![/size] [size=4]மள மளவென்று, காலைக்கடன்களை முடித்தவர், மீன்கடைக்குப் போன பெடியன், வந்திட்டானா என்று கடைக்கண்ணால் பார்த்து உறுதிப் படுத்திய பின்பு, முன்னாலிருந்த கடைக்குப் போய், ஒரு மல்லிகைப் பூமாலையை, வாங்கிக் கொண்டு வந்து, ஒரேயடியாகப், புத்தர், பிள்ளையார், முருகன்,லட்சுமி, அரபிக்கில் எழுதப…
-
- 24 replies
- 2.2k views
-
-
மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம்- சந்திரபோஸ் சுதாகர் மழைக்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றத்தொடங்கியிருந்த ஒரு பிற்பகல் நேரத்தில் அவனை அவர்கள் கைது செய்தார்கள். சனநடமாட்டம் அதிகமாயிருந்த கடைத்தொகுதியின் மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் புழுக்களைப் போல மிகமிக அற்பத்தனமாக அந்த நிகழ்வு நடந்தது. கண்களின் மீது இருளடைந்த தெருக்கள் ஊர்ந்தன. மனசிலிருந்த ஓவியங்கள் சிதைந்து போயிற்று. குருதியும் தசையும் மண்டிய புதிய ஓவியங்கள் அவனுள்; தொங்கின. மழை தூறத்தொடங்கிவிட்டது. கடைத்தொகுதியின் இரண்டு பக்க வாயில்களையும் ஒரு வித கட்டளைக்கு கீழிப்படிகின்றவர்களைப் போல அல்லது அவர்கள் தாங்களே அவற்றைப் பிறப்பித்தவர்கள் போல தங்களால் அட…
-
- 0 replies
- 732 views
-
-
காலையில் எழுந்தவுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பூங்காவில் நடப்பதுதான் முதல் வேலை.இப்படி மனுசன் நடக்கும் பொழுது மனுசனின் மனம் ஒரு இடத்தில் நிக்காமல் எந்த நேரமும் அலைபாய்ந்தபடியே இருந்தது.இப்பகொஞ்ச காலமாக தலைவராக வேண்டும் என்ற ஆசை மனதைப்போட்டு குழப்பி கொன்டே இருந்தது. இந்த ஆசை அவருக்கு வர ஒரு காரணம் அவரின்ட மனிசிதான்,ஒரு நாள் ஒருநிகழ்ச்சிக்கு போன பொழுது,அங்கு தலைவர் பேசின பேச்சை பார்த்துபோட்டு கனகரின்ட மனிசி,"இஞ்சாருங்கோ அந்த மனுசனுக்கு உங்களை விட 5வயசு கூட இருக்கும் பார்க்க தெறியவில்லை,மேடையில் மூச்சு வாங்காமல் நல்லாய் கதைக்கிறார் பார்த்திங்களோ " என்று எப்ப மனிசி கமலா சொல்லிச்சோ அன்றில் இருந்து அவருக்கு எதாவது சங்கத்தில் தலைவராக வேண்டும் என்று தீர்மானிதுக்கொன்டார்.கம…
-
- 12 replies
- 1.9k views
-
-
F இயக்கம் நான் இந்தக் கதைக்கு முதலில் ‘X இயக்கம்’ என்றுதான் பெயரிட்டிருந்தேன். இந்தக் கதை இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகளைப் பற்றியது. இவர்கள் இருவருமே பல வருடங்களிற்கு முன்பே அரசியல் அகதிகளாக அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இருவரும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களா போன்ற எந்த விபரமும் எனக்குத் தெரியாது. கதையின் எந்த இடத்திலும் இவர்கள் எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என வாசகர்கள் ஊகம் செய்யப் பிடிகொடுக்காதவாறு கதையை நகர்த்திச் செல்வதும் அதைக் கதை முடிந்த பின்பும் காப்பாற்றுவதும் இந்தக் கதையைப் பொறுத்தவரையில் முக்கியமான உத்திகள். எனவே அறியப்படாத ஒன்றை குறிப்பதற்க…
-
- 9 replies
- 1.5k views
-
-
இந்த பகுதியில் அநேக காணொளிகள் இருப்பதால் அவைகள் அனைத்தையும் இங்கு பதிவு செய்தல் சரியா என்று எனக்கு தெரியவில்லை.அதனால் என்னுடைய பிளாக்கரில் பதிந்துவிட்டு அதன் தொடுப்பை இங்கு பிரசுரிக்கிறேன் தவறென்றால் சுட்டிக்காட்டவும். KIDS Zone tamil and english videos:குழந்தைகள் பகுதி கதைகள் வீடியோ குழந்தைகள் கதைகள் வீடியோ-kids zone stories
-
- 1 reply
- 2.8k views
-
-
கூப்பன் கடை...... (நினைவுகள் ) இஞ்ஞாருங்க மகள் சாப்பிடுகிறாள் இல்லை .ஒருக்கா என்னென்று கேளுங்கோவன் என்று என் மனைவி பத்மா சொல்ல சி மன்னிக்கவும் அஸ்வனா சொல்ல என் மனிசி பெயர்தான் பத்மா அவள் வெளி நாடு வந்த பிறகு அஸ்வனா என்று பெயரை மாற்றிக்கொண்டாள் .ஆனால் பாஸ்போட்டில் பத்ம அரசி தான் ஆனால் அது பழைய பெயராம் .ஆனால் நான் வாய்க்கு இனிமையாக பத்மா என்று கூப்பிட்டால் கூட ஒரு முறைப்பு முறைப்பாள் அதனால் வீட்டில் மட்டும் செல்லமாக அவளை பத்மா என்று கூப்பிடுவேன். ஏன் மகள் சாப்பாடு வேண்டாம் இல்லை அப்பா எனக்கு பசிக்கவில்லை என்றாள் மகள் அஸ்வினி.நானும் மனிசி என்ன செய்திருக்கிறாள் என்று பார்க்கபோனேன்.ஏனென்றால் இந்த ரீவில காட்டுற சமையல் குறிப்புக்களையும் விளம்பரங்களையும் பார்த்து ஏதாவது…
-
- 17 replies
- 2.5k views
-
-
சுவடுகள் டேய் சுந்தர் ஓடாதே.. .இங்க வா'' பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்து, குரு இருந்த கம்பார்ட்மென்டுக்கு ஓடி வந்த சிறுவன். பின்னால் ஓடி வந்தவள் லதா மாதிரி இருந்தது. ஒன்பது பத்து வகுப்புகளில் உடன் படித்தவள். மூக்குத்தி மினுங்களோடு அத்தனை மாற்றம் இல்லாமல் அதே சிரிக்கும் முகம். கைக்கெட்டும் தூரத்தில் ஓடியவனைப் பிடித்து நிறுத்தி அவளிடம் ஒப்படைத்தபடியே, ""நீங்க... நீ... லதாதானே...?'' என்றான் குரு. ""ஆமா..நீங்க...?'' ""ஓ... டென்த் பி செக்ஷன்...'' ""குரு.. குருமூர்த்தியா... சுத்தமா அடையாளம் தெரியாம இப்படி குண்டு போட்டிருக்கீங்க...'' என்றவாறு தாவத் தயாராய் இருந்த மகனை இழுத்துப…
-
- 1 reply
- 3.7k views
-