கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை... நீதிராஜா பெற்ற பஞ்ச பாண்டவரிகளில் 5 வது பெண் குட்டி கடைக்குட்டி , அன்புக்கு பஞ்சம் இல்லை .பெரிய பட்டண மத்தில் கந்தோர் வேலை. மூன்று மாதமொருமுறை வருவார் ...இனிப்பு , முறுக்கு பலவகை எல்லாம் ...கொண்டு ..என்னை தூங்கவைக்க பாட்டு பாடும் பப்பா.. நெஞ்கிலே தாலாட்டி நடிப்புடன் கதை சொல்லி .(.மூன்றாம்பிறையில் வந்தது போல் ..முந்தி ..ஒரு..காலத்திலேயே முருகமலை காட்டுiகுள்ளே தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது ...என்ன செய்திச்சு ...வா வா வாழ்ந்து வந்திச்சு..) தொடரும் ...பயணம் போகும் போது அழுவேன் ..பயண காசு ..தருவார் ..இப்படி எல்லாம் வாழ்ந்தேன் . புலப்பெயர்வில் ..காலம் போக ..ஒரு தடவை கேட்டன் ..பப்பா ..அந்த பாட்டு…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்ப…
-
- 4 replies
- 9.2k views
-
-
தீவிரவாதி -இளங்கோ இலங்கை இராணுவத்தின் ஒபரேஷன்-லிபரேஷன் தாக்குதல்இடைநிறுத்தப்பட்டதற்கும், இந்திய அமைதிப்படையோடுஇயக்கம் சண்டையைத் தொடங்குவதற்குமான இடையிலானமாதங்கள் சொற்பமே இருந்தபோதும், அந்தக் குறுகிய அமைதியைஎங்கள் ஊர் ஏதோ ஒருவகையில் வரவேற்கத்தான் செய்தது. ஊர்வைரவர் கோயில் திருவிழா விமர்சிகையாகக்கொண்டாடப்பட்டது. புளியமரத்தடியில் கிளித்தட்டும், பிள்ளையார் பேணியும் வயது வித்தியாசமின்றி குதூகலமாகவிளையாடப்பட்டது. இப்படி இன்னும் பலவற்றில், ஊர் தன்உயிர்ப்பை மீளவும் கண்டுகொள்ளத்துடித்தது. ஒருகாலத்தில் ஆடுகள் காவுகொடுக்கப்பட்டு வேள்விகள் நடந்தவைரவர் கோயிலில், இயக்கங்கள் பல்கிப்பெருகிக் காலத்தில்மார்க்ஸைப் படித்த ஏதோ ஒரு இயக்கம் வேள்விகளுக்கு இனி…
-
- 4 replies
- 2k views
-
-
கண்டி வீரன் ஷோபாசக்தி சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இத்தகைய சம்பவம் எங்களது போராட்ட வரலாற்றில் வெகு அபூர்வமாகவே நிகழ்ந்த ஒன்று. இயக்கங்களின் கைகளில் சிக்கியவர்கள் மீண்டதான நிகழ்வுகள் வெகு அரிதே. குறிப்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்பாக அத்தண்டனை விலக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். நான் கண்டி வீரனைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்தே இது எப்படி நடந்திருக்கக் கூடும் என யோசித்து வந்திருக்கிறேன். கண்டி வீரனின் …
-
- 4 replies
- 812 views
-
-
ஒரு சித்திரம் பேசுகிறது ............... சக்கர நாற்காலியில் இருந்து .........ஒரு சித்திரம் பேசுகிறது .....அண்மையில் ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்ற பின் என் மனப்பதிவு :.......... நான் பிறந்த நாடு என் மண், என் வீடு பழகிய நட்பு படித்த பாடசாலை, திசைமாறிய பள்ளிக்காதல் ,உறவுகள் .நட்புகள் ,யாவரும்ற ஒரு தன்னந்தனியனாக ஒரு சக்கர நாற்காலியில் , உணவுண்டு , உடையுண்டு , வங்கியில் மாத மாதம் பணம் வ்ரும் . புலம் பெயர் நாட்டில் தன்னந்தனியனாக ஒரு முதியோர் இல்லத்தில் , குளிக்க ,உதவி செய்ய , மருந்து தர என்று பணியாட்கள் , ஆனாலும் எதோ ஒன்று ...........இல்லவே இல்லை . என் சம்சாரமும் காlaமாகிவிட மகனும் தன் மனை வி , குடும்பம் வேலை பிள்ளைகள் , என்று அவனும் அவனது…
-
- 4 replies
- 1.3k views
-
-
பொறுப்புத் துறப்பு: கதையைப் படித்து மனவுளைச்சல் ஏற்பட்டால் இணைத்தவர் பொறுப்பில்லை. சடம் - ஜெயமோகன் olaichuvadiJanuary 1, 2022 “சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள். சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?” “அவரு மஹான்” என்றார் தரகு நாராயாணன். “சாமி தத்துவம் சொல்லுது” “மயிரு தத்துவம்… அள்ளையிலே ஒரு சவுட்டு சவுட்டினா அண்டி உருண்டு அண்ணாக்கிலே கேறி இருக்கும்… அப்ப பேச்ச நிப்பாட்டுவான்… ஏல நாம கேக்குத கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியுமாண…
-
- 4 replies
- 1.1k views
-
-
பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் தயக்கமாய், "ஹலோ" சொன்னாள். என் முகத்தில் அரும்பிய புன்னகையைத் தொடர்ந்து பேசத் துவங்கினாள். "என் பேர் உமா. ஆபிஸ்ல உங்களைப் பார்த்திருக்கேன். நீங்களும் எஸ்பிசி-லதானே வேலை செய்யறிங்க ?" "நானும் உங்களைப் பார்த்தேன். இன்னிக்குக் காலைலதானே ஜாயின் பண்ணினிங்க?" தலையாட்டினாள். "ஆமா. ஆனா எல்லாரும் என்னை பரம விரோதி மாதிரி பார்க்கறாங்க. ஏன்னு புரியலை." "நீங்க அமெரிக்காவுக்குப் புதுசு. அதுவும் L1 விசாவில் வந்திருக்கிங்க இல்லையா அதான்." " அதனால? " " பொதுவா இங்க ஒரு இந்தியனை இன்னொரு இந்தியன் விரோதி மாதிரிப் பார்ப்பான். அதிலும் L1 விசாவில் வந்திருக்கும் அவுட் ஸோர்சிங் ஆள்ன்னு தெரிஞ்சா பரம விரோதி மாதிரிப் பார்ப்பான்.…
-
- 4 replies
- 1.8k views
-
-
நினைவழியா நாட்கள் அந்த விடிகாலைப் பொழுதின் அமைதியைக் குலைத்தபடி விமானச் சத்தங்கள் காதைப் பிளந்தன. அதிகாலைப் பொழுதில் ஏற்பட்ட இந்த நிலையால் அரைத் தூக்கத்தில் எழுந்த எமக்கு என்ன செய்வது? எதை எடுப்பது? ஓடுவதா? அல்லது பங்கருக்குள் ஒளிவதா? எதையும் சிந்தித்துச் செயலாற்ற சந்தர்ப்பம் இதுவல்ல. கையிலகப்பட்ட ஒன்றிரண்டு உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீதிக்கு விரைந்தோம். வீதியெங்கும் மக்கள் தம் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருந்தனர். இடைக்கிடை குத்திட்ட விமானங்களிலிருந்து குண்டுமழை பொழியும் போது குப்புறப் படுத்து விழுந்து எழும்பி ஓடிக்கொண்டிருந்தோம். எப்படியோ பக்கத்துக் கிராமத்திலிருந்த ஓர் ஆலயத்தை அண்மித்து அதற்குள் அடைக்கலமாகிக் கொண்டோம். அன்றுமுதல் ஆலயம் அகதிமுகாமாகியது…
-
- 4 replies
- 1.8k views
-
-
வெண் நிலவுகள் பசுந்திரா சசி (U.K.) " பிச்சை எடுக்கிறதுக்காகவே பிள்ளையை பெறுவது , பிறகு - பேத்தி ,பேத்தி - எண்டு சொல்லித்திரியிறது 'பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! 'எண்டு சொல் வேண்டியது தானே...." என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண் – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை . சேற்றில் தோய்த்தெடுத்த கோலத்தில் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகான சிலை போல் ஒரு கையில் பிள்ளையும் மறு கையில் பிச்சைத்தட்டும் ஏந்திய படி இருக்கும் மகளையும் , மனம் கல்லாகி மரத்துப் போய் எதற்கும் பதிலோ இல்லை கேள்வியோ கேட்காத அவரையும் இப்படி ஊரார் எள்ளி நகை யாடுவது இன்று நேற்று அல்ல இரண்டு வருடத்திற்கு மேலாக நடக்கிறது . 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொ…
-
- 4 replies
- 980 views
-
-
அத்தான் இல்லையேல், நான் செத்தேன்!! பூவரசு சொந்தத்தில் கார், கொழும்பிற் காணி சோக்கான வீடு, வயல்,கேணி இந்தளவும் கொண்டு வரின் இக்கணமே வாணியின் பால் சிந்தை இழப்பான் தண்டபாணி - மகாகவி உருத்திரமூர்த்தி அறுவைதாசன் சகலதும் ஒடுங்கிப்போய் இருந்தான். அவனிற்கு வாயிலே சனி என்று மற்றவர்கள் சொல்வது உண்மை தானென்று நினைத்துக் கொண்டான். அவன்ரை மனிசி யாழினி ஒரு கலியாண வீட்டிற்கு போக வேணும் எண்டு சொன்னாள். அவனிற்கு கலியாண வீடுகளிற்கு போவதென்றால் வீடியோ கமெராவை கண்ட நித்தியானந்தா மாதிரி ஆகி விடுவான். நாலைந்து மணித்தியாலங்களிற்கு அய்யரின் அறுவையையும், கலியாண வீட்டுக்காரர்கள் அடிக்கிற ஆடம்பர க…
-
- 4 replies
- 1.2k views
-
-
சரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான். “வாங்க மிஸ்டர் சரவணன்! வாட்ஸ் யுவர் குவாலிஃபிகேஷன்?” “ப்ளீஸ் ஹேவ் எ லுக் சார்” சான்றிதழ்களோடு இருந்த கோப்பினை நீட்டினான். கோப்பினைப் புரட்டியவாறே, “குட். ஸ்போர்ட்ஸ்லயும் நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கு போலிருக்கே!” ”யெஸ் சார். ஐ ப்ளேட் ஃபார் ஃபோர்த் டிவிஷன் ஆல்சோ!” “ம்.. நீங்க ஒரு நல்ல கேண்டிடேட் தான். உங்களை கேள்வியெல்லாம் கேட்டு துன்புறுத்த விரும்பலை!” பலமுறை கேட்ட வாசகம். என்ன சொல்ல வருகிறார் என்று சரவணனுக்கு புரிந்துவிட்டது. “சாரி சரவணன்.…
-
- 4 replies
- 2.3k views
-
-
அம்மா எப்போ தூங்குவான்னு தெரியாது, காலைல எந்திரிச்சுப் பாத்தா சாமி படத்துக்கு முன்னாடி நின்னு கண்ண மூடிக்கிட்டு நிப்பா, வாய் மட்டும் முணுமுணுக்குறது தெரியும், சாமிக்கிட்ட என்ன வேண்டுவான்னு தெரியாது, அநேகமா ஊர்லயே சாமிக்கிட்ட அதிக நேரம் பேசுறது அம்மாவாத்தான் இருக்கும்...... கோயில் பூசாரி கூட சாமியவிட மத்தவங்ககிட்டத்தான் அதிக நேரம் பேசிப் பாத்திருக்கேன், கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல அம்மாவும் சாமிகிட்ட ஏதோ வேண்டிக்கிட்டேதான் இருக்கா, ஆனா, அவ வாழ்க்கைல வேண்டுறது எதுவும் நடந்த மாதிரித் தெரியல.... அம்மாவோட வாழ்க்கை ரொம்ப நீளமானது, அம்மாவோட கதைய சின்ன வயசுல கேக்குறப்பவெல்லாம், கண்ணு விரிச்சு படம் பாக்குற மாதிரி இருக்கும், வெள்ளக்காரங்கிட்ட கணக்கு எழுதுற வேல…
-
- 4 replies
- 1k views
-
-
பால்ய பொழுதொன்றில் - குலசிங்கம் வசீகரன் பருத்தித்துறை மருதடி வைரவர் கோயிலடியில் செழியன் நடந்தான். உயர்ந்து வளர்ந்திருந்த மருதமர நிழலில் வைரவர் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். மருதமர குளிர்மை வீதியின் வெம்மையை சற்றே தணித்தது. செருப்பைக் கழற்றிவிட்டு திருநீற்றை பூசி, நீர்த்தன்மை குறைந்திருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான். சூலத்தை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு குனிந்த தலை நிமிராமல் நடக்கத் தொடங்கினான். வகுப்புக்குத் தேவையான கொப்பிகள் தோளில் உள்ள துணிப்பைக்குள். சீ.எம். இட்யூஷ னில் மூன்று மணிக்கு வகுப்பு. நிமிர்ந்து பார்க்காமலேயே நடந்தாலும் தன…
-
- 4 replies
- 1.7k views
-
-
அன்று வெள்ளிகிழமை அலுவலகத்தில் கண்ணன்,ராதாகிருஷனன்,பழனியாண்
-
- 4 replies
- 1.5k views
-
-
ஒரு மனைவியின் கதை சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ட்ரியர் நகரம். பிரஷ்ய அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்தவரும் பரம்பரை பணக்காரருமான ஜான் லுத்விக் வோன் வெஸ்ட்பாலனுக்கும் கரோலின் ஹ்யூபெலுக்கும் 1814-ம் ஆண்டு பிறந்தார் ஜென்னி. அதே நகரில் நான்கு ஆண்டுகள் கழித்து, 1818-ம் ஆண்டு ஹென்ரிச் மார்க்ஸ் — ப்ரெஸ்பர்க் தம்பதிக்குப் பிறந்தார் கார்ல் மார்க்ஸ். ஜென்னியின் குடும்பமும் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும் ஜென்னியும் பள்ளித் தோழிகள். ஜென்னியின் தம்பியும் மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அரசியல், சமூகச் சிந்தனைகள், …
-
- 4 replies
- 1.5k views
-
-
இன்னொரு தடவை மனிதர்களுடன் வந்தால்….!!! வருகிறேன்....- Jeya Sellappah ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே “Bore” என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்... திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்? நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி list ஐ எடு.. ஓ… பிறந்த இடம்….. தவழ்ந்த இடம்…. அப்பா படித்த பள்ளிக்கூடம்… அம்மாவுக்கு அ…
-
- 4 replies
- 698 views
-
-
உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள் by ம.நவீன் விமான நிலையத்தில் ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கிய…
-
- 4 replies
- 2.4k views
-
-
இன்று காலையில் சம்பளமாக கிடைத்தது ஐந்து ரூபாய் காசு. கோவை காவல் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு காவல்துறை அதிகாரிகளுடன் நீதிக்காக பேசிய அந்த தருணத்தில், தன்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற உண்மை உரைத்த அந்த நொடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர் எனக்குள் ஏற்படுத்திய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல. சட்டப் போராட்டம் என்பது அவ்வளது எளிதானதல்ல. காவல்துறை அதிகாரமிக்கது. ஆளும் கட்சியின் ஆளுமையின் கீழ் உள்ளது. அது என்ன குற்றம் செய்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது சாதாரணமல்ல. ஜெய் பீம் படம் பார்த்திருப்பீர்கள். ஆளும் கட்சியின் அசுர பலத்துக்கு முன்னால் யாரால் என்ன செய்ய முடியும்? இது ஒரு வகை என்றால் சிவில் வழக்குகள் இருக்கிறதே …
-
-
- 4 replies
- 545 views
- 1 follower
-
-
தெரிந்த விடயம், நாம் எல்லோரும் நாளாந்தம் அனுபவிக்கும் ஒரு விடயமென்றாலும் அதை சுவைபட எழுதுவது என்பது எல்லோராலும் இயலுவதில்லை...அப்படி சுவைபட எழுதக்கூடியவராக இருந்தும் அத்தி பூத்தாற்போல் எப்பவாவது எழுதும் நண்பர் சாய் பிரசாத்தின் பதிவொன்று... __________________________________________________________________ பூவரச மரமும் சில பின்னிரவுகளும்.... யாழ்ப்பாணத்தின் புழுதி மண்டிய கிரவல் வீதிகளில் கழிந்தது என் பால்யம். கிரவல் வீதியும், அது சார்ந்த ஊரும் தேவதைக்கனவுகளின் மிச்சம்போல் இன்னும் நினைவிலிருக்கிறது. மருதங்குள வெளிகளில் நீந்தியும் ,கிட்டிப்புல்லு அடித்தும், விடிய விடிய கண்விழித்தும் கோஸ்டிபார்த்த நண்பர்கள் நினைவுகளில் மட்டும் எஞ்சியிருக்கிறார்கள…
-
- 4 replies
- 1k views
-
-
படித்ததில் பிடித்தது👌👌 ‘‘அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’ ‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’ ‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள். ‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார். பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார். …
-
- 4 replies
- 2.3k views
- 1 follower
-
-
உடல் எனும் இயந்திரம். இந்த பிரபஞ்ச உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இயங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ?? பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுகிறது பாலுக்காக, தன் தேவைகளுக்காக. ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்கள் எதையோ நோக்கி ஓடுகிறார்கள். . குடும்ப தேவைகளுக்காக . அப்படி ஓடும் போது தன் சுகம், தூக்கம், பசி மறந்து இயற்கையின் சவால்களை சமாளித்தபடி. செல்ல வேண்டி இருக்கிறது. விரைவாக ஓட ஒரு வாகனம் அதற்கு பராமரிப்பு , ஆயில் மாற்றம் ரயர் மாற்றம் , பராமரிப்புக்கு விடுதல் (service ) என்பன செய்யும் மனிதன் தன்னைக் கவனிக்க மறந்து விடுகிறது..நம் உடல் எனும் இயந்திரம் சில(சிக்னல்களை )உடல் உபாதைகளை கொடுக்கிறது . அதைக் கவனித்து மருத்துவ பரிசோதனை செய்தால் பிழைத்த…
-
-
- 4 replies
- 815 views
- 1 follower
-
-
ஓஷோ சொன்ன குட்டிக்கதை ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன. அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும். ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது. …
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆழத்தில் ஆறாத ரணம். அந்த வானுயர்ந்த மாடிக்கட்டத்தில் வசிக்கும் ராஜி ,ஆறு மணி அலாரச்சதம் கேட்டு எழுந்து தேநீருக்காக கேத்தலை தட்டிவிடு , கணவன் ராகுலனை வேலைக்கு அனுப்பும் ஆயத்தங்களை தொடங்கினான். அவனும் பாத்ரூமில் முகம் கழுவும் சத்தம் கேட்டது .தேநீரை பருகியவாறே அவனும் ஆயத்தமானான் .இவள் காலை உணவுக்காக இரண்டு சான்விச் ,மதியம் ஒரு பிடி சாதம் மரக்கறியுடன்,ஏதும் பழவகை,போத்தலில் தணீர் என்று அவனை அனுப்பி வைத்தாள். பின் தான் தேனிரை முடித்தவாறு கண்மணிகளை எழுப்பி ,பாடசாலைக்கு தயார்படுத்தி நடந்து சென்று பாடசாலை வாயிலில் விட்டு வந்து வீட்டை ஒழுங்கு படுத்தியவாறே வானொலியை தட்டி விட்டாள். . அதில் .... "நித்தம் நித்தம் மாறு கின்ற எத்தனயோ ?நெஞ்சில் நினைத்த திலே நட…
-
- 4 replies
- 1.3k views
-
-
கிறிஸ்மஸ் பரிசு ................. யாழ் நகரத்தின் மையப் பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்து இருந்தது . அந்தக் கன்னியர் மடம். அங்கு இருபகுதிகளாக் பாடசாலையும் விடுதியுமாக பிரிக்க பட்டு பலகால்மாக இயங்கி வந்தது. இருப்பினும் சில ஆண்டு களுக்கு முன் படையினரின் அட்டகாசங்கள் குண்டு மழை போன்றவரால் சீர் குலைந்து . ஒரு சில மாதங்கள் தான் அது புனரமைக்க் பட அனுமதி பெற்று , ஆரம்பிக்க பட்டது . கடந்த கால் நடவடிக்கையில் குண்டுவீச்சுக்கும் கூரை சிதைவுகளுக்கும். கன்னியர் மடங்கள் தேவாலயங்களும்விதிவிலக்காகவில்லை. அந்த மடத்தில் , இப்போது தான் , சில புண்ணியவான்களின் நன் கொடையினாலும் தொண்டு ஸ்தாபனங்ளின் உதவியாலும் சிறுக சிறுக கட்ட பட்டு கொண்டு இருக்கிறது.அண்மையில் பல வ…
-
- 4 replies
- 2.2k views
-
-
மனசுக்குள் என்ன..?! "என்ர அப்பு ராசா. நீ யார் பெற்ற பிள்ளையோ தெரியாது மோனை, நல்லாய் இருப்பாய்." கொடுத்த சாப்பாட்டை கையில் வாங்கிய படி அந்த ஆச்சி தன்னை அறியாமலே எங்களைப் பாராட்டுறார். ஏன் ஆச்சி சாப்பிடாமல் இருக்கிறீங்கள். சாப்பிடுங்கோ. " கன காலமப்பு இப்படிச் சாப்பாடுகள் கண்டு.. நீ நல்லாய் இருப்பாய் மோனை" மீண்டும் மீண்டும் ஆச்சியின் வார்த்தைகள் எங்களைப் பாராட்டுவதிலையே குறியாய் இருக்குதே தவிர கொடுத்த உணவை கையால் தொட்டுக் கூடப் பார்க்க முயலவில்லை. இதை அவதானித்தப்படியே நான் சற்று அப்பால் நகர்ந்தேன். அப்படி என்ன தான் இருக்கு அந்த ஆச்சிக்கு எங்களில பாசம் காட்ட, மனதுக்குள் நானே எனக்குள் பேசி ஏக்கத்தை வளர்த்தப்படி மற்றவர்களுக்கும் சாப்பாடு பரிமாறினேன். அவை பரிமாறப…
-
- 4 replies
- 1.4k views
-