கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
Sunday, November 20, 2011 என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன்! “டேய் கீர்த்தி .. அந்த பொண்ணு தாண்டா .. உடன திரும்பாதடா .. பொறு” “யாரடா? அந்த தேர் முட்டி மூலையில நிக்குதே அதா?” “அவளே தாண்டா, கொல்றாடா!” “டேய் அது கஜன்ட ஆளுடா” “அண்ணியை பற்றி பிழையா சொல்லாத, அவ இல்லடா, பக்கத்தில, பச்சை சாரி” “யாரு, கனகாம்பர பூ ஜடை போட்டதா”<a href="http://lh4.ggpht.com/-YmxaeNF98eo/TshHrnc5YHI/AAAAAAAAAik/NFeGz35pehQ/s1600-h/Picture%252520022%25255B6%25255D.jpg"> “அவளே தாண்டா, என்னா பொண்ணுடா!” “கண்ணாடி போட்டிருக்காளே மச்சான்” “அது தான் இன்னும் கொல்லுதடா!” “என்கிட்ட சொல்லீட்ட இல்ல? இப்ப பாரு” முருகன் கிழக்கு வாசலால் வெளியே…
-
- 3 replies
- 1.7k views
-
-
மச்சம் - லக்ஷ்மி சரவணக்குமார். மச்சம் குறித்த முதல் அக்கறை அவனுக்கு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு திங்கள்கிழமை அதிகாலையில்தான். விடுமுறை முடிந்து அலுவலகம் கிளம்பவேண்டி முகச்சவரம் செய்ய கண்ணாடியைப் பார்த்தவனுக்கு நம்பவே முடியாத ஆச்சர்யம்,, சரியாக அவனது இடது கன்னத்தில் இதழ்களுக்கு மிக அருகில் சின்னதாய் ஒரு மச்சம். ஏதாவது அழுக்காயிருக்குமோ என ஒரு முறைக்கு இரண்டு முறை முகம் கழுவிப் பார்த்தும் அந்தக் கருப்பு அதே அழுத்தத்துடன் இருந்தபோதுதான் இது மச்சம் தானென நம்பவேண்டியதாகிப் போனது, அதெப்படி இருப்பத்தி ஆறு வயதிற்கு மேல் ஒரு மனிதனுக்கு புதிதாக மச்சம் வளர முடியும்… ஆச்சர்யந்தான். சில நிமிடங்கள் ரொம்பவே பெருமையாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நண்பர்கள் தனக்குத்…
-
- 3 replies
- 1.7k views
-
-
உயிர்க்கொல்லிப் பாம்பு - நோயல் நடேசன் கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும். வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன. வங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து செல்லப்படுவதை பலவருடங்களாக அறிந்தவர்கள் அவர்கள். ஏற்கன…
-
- 8 replies
- 1.7k views
-
-
நான் ரசித்த ஒரு அருமையான பதிவு..விண்வெளியின் அதிசயங்களை ஒரு எழுத்தாளனின் பார்வையில் எங்கள் கண்முன் கொண்டுவந்துதந்திருக்கிறார் இந்தக்கட்டுரையாளர்..எல்லைகளற்ற வானம்போலவே மனிதனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் ஏது...பிரபஞசத்தை பற்றி நான் கேட்டு வாசித்து படித்து அறிந்து கொண்டவைகளால் ஏற்பட்ட பிரமிப்பால் வானவியல் சம்பந்தமான பல அறிவியல் புத்தகங்களை தேடித்தேடி வாங்கி வாசித்துள்ளேன்..ஆனாலும் தமிழ்ச்சுவையோடு தீட்டப்பட்டுள்ள இந்தக்கட்டுரையை வாசித்து முடித்தபொழுது ஒரு தனி சுகம் இருந்தது... வாசித்து முடித்த பொழுது விண்வெளிக்கு ஒரு இலக்கியப் பயணம் போய் வந்தது போன்றதெரு உணர்வு...இதோ உங்களுக்கும் அவரின் அனுமதியுடன் அந்த அநுபவம் கிடைக்கட்டும்... ஒரு எல்லைகளற்ற பயணம்-கை.அறிவழகன் …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஊருக்குப் போனேன் - பாகம் 2 நயினைதீவை அடியாகக் கொண்ட அந்த இளைஞன், நான் வெளிநாட்டிலிருந்து வருகிறேன் எனப் புரிந்து கொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். பின்னர், கேள்விகள் தீர்ந்து போனதோ என்னவோ, 23 வயது நிரம்பிய அவ்விளைஞன் தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறினான். வறுமைப்பட்ட குடும்பம், பெண்சகோதரங்கள், அவர்களின் திருமணம், இயக்கத்தில் இறந்து போன தம்பி ... ஓ ! சபிக்கப்பட்டவர்களே. சபிக்கப்பட்டவர்களே ! எப்போதுதான் உங்கள் சிறுமைகளை விட்டொழிவீர்கள் ? எப்போதுதான் பெண்களுடன் பிறக்கும் ஆண்களுக்கு விடுதலையளிப்பீர்கள் ? எப்போதுதான் பெண்களைச் சீதனம் வாங்கி "வாழ்வு கொடுக்கும்" பண்டங்களாகக் கருதாது விடுவீர்கள் ? சீதனம் கொடுக்கச் சொத்துத் தேடப் பரதேசம் போனவர்களே, உங்களில் எத்தனை பேர் நீங்…
-
- 4 replies
- 1.7k views
-
-
கொட்டியா அவர்கள் அப்படி அவனைப் பிடித்து எழுப்பியபோது அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சியை விட அருவருப்பாய் இருந்தது எனத்தான் சொல்லவேண்டும். அதிர்ச்சி அருவருப்பு இரண்டும் திரண்டு கோபமாய்ப் பொங்கத் தொடங்கியபோது, அதை நேரடியாகக் காட்டமுடியாததற்கு அவர்களின் தோள்களில் தொங்கிய துப்பாக்கிகள் ஒரு காரணமாய் இருந்தது. சருவச்சட்டியைக் கவிழ்த்துப் போட்டாற்போல இரும்புக் கவசங்கள் அவர்களின் தலைகளில் தொங்கிக்கொண்டிருந்தன. இரு காதுகளையும் இணைத்து நாடியைச் சுற்றியோடிய கறுப்பு நாடா 'சருவச்சட்டி' தலையில் இருந்து விழாது தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தது. அந்தக் கறுப்பு நாடாவை அறுத்து, கழுத்தில் இறுக்கி அவர்களைக் கொன்றால் என்ன என்ற எண…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஆண்மை - எஸ்.பொன்னுத்துரை ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும…
-
- 2 replies
- 1.7k views
-
-
அவள். அவன். அப்புறம்..... அப்புறம் ............................................... என்ன ஒண்ணுமில்லை சரி ஒண்ணுமில்லையா ஆமா ஒண்ணுமில்லை சரி வைச்சிடறேன் வைக்கப் போறியா நீ தான் ஒண்ணுமில்லைன்னு சொல்றியே ஒண்ணுமில்லைன்னா ஒண்ணுமில்லைன்னு அர்த்தமா அதுக்கென்ன அர்த்தம் ஒண்ணுமில்லைன்னு (சிரிக்கிறாள்) நீ தானே என் பொன்வசந்தம் ஏன் ப்ளாப் ஆச்சுன்னு இப்ப தெரியுது என்ன தெரியுது? ஏன் நீயும் தானே படம் பார்த்தே நான் பார்த்தேன். எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா ஏன் ப்ளாப் ஆச்சு ம்ம்ம்ம்ம். நீ நூறு தடவை பார்க்கலை, அதனால. இல்ல நீ ப்ளாப்புக்கு காரணம் சொல்லு ஒண்ணுமில்லை என்னது இல்ல படத்துல ஒண்ணுமில்லைனு சொன்னேன். …
-
- 0 replies
- 1.7k views
-
-
வரகு மான்மியம் ஆசி கந்தராஜா 1 கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள். கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்! 'வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயரெண்டும் ஐயர் கேட்டவர்..., கோயில் விஷயமப்பா..., சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ...' மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு. விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்...? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அவுஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு! கோயில் கோபுரத்தின் உச்சியிலே, அதன் உயரத்துக்கும் அகலத்துக்கும் ஏற்றவ…
-
- 4 replies
- 1.7k views
-
-
புதிய நாற்றுக்கள். நல்ல வளமான நெல் வயல். பச்சைப் பசேலெனப் பயிர்கள் ஆடி அசைந்து அழகு காட்டிக்கொண்டிருந்தன. அவற்றக்கு நடுவே, இடைக்கிடை, அங்கொன்றும் இங்கோன்றுமாய்க் காணப்பட்ட நெற்சப்பி களையும் கோரைப் புற்களையும், இனங் கண்டு. பிடிங்கி, வரம்பில் போட்டுக் கொண்டிருந்தார் வயலின் சொந்தக்காரர். வரம்பில் கிடந்த நெற்சப்பியையும் கோரைப் புற்களையும் ஷஷஉனக்கேன் இந்த வேலை|| எனச் சூரியன் தன் கதிர்களால் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தான். வரம்பால் நடப்பவர்களும் அவற்றை ஏறி மிதித்தக் கொண்டு சென்றார்கள். `எங்களுக்குள்ளேயே எங்களுக்குத் தெரியாமல் ஓட்டி உறவாடி, உறிஞ்சி உடல் வளர்த்தார்கள்;. இனம் கண்டு கொண்டதால் இப்போ வரம்பிலே கிடந்து தண்ணியும் இல்லாமல் சாப்பாடும் இல்லாமல் வாடி வதங்குக…
-
- 12 replies
- 1.7k views
-
-
அன்று ஒரு நாள் ஒர் முந்திரிகை தோட்டத்தில் முந்திரிகை காய்த்தி குலுங்கியது.அங்கு ஒரு செம்மறி தோல் போர்த்த நரி வந்தது. மிகுதி நாளை எதிர்பாருங்கள்.
-
- 9 replies
- 1.7k views
-
-
மொழி உணர்ச்சி இல்லாதவனுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்பட செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். நன்றி: கொளத்தூர் மணி - பெரியாரும் தனித் தமிழ்நாடும்
-
- 1 reply
- 1.7k views
-
-
எழுதியவர் உமா வரதராஜன் இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்ட ஒப்பனை கூடிய கல்யாணப் பெண்ணாக நடுவே கோயில். சூழ நின்ற விருட்சங்களுடன் நிலாக்காலத்தில் இனி என்றைக்குமே பேசாது என்பது போல நின்றது அது, கோயிலை வளைத்துக் கடை வீதி, கரிமண் கிளறிக் கிளறி நடைபோடும் ஜனங்கள். ஒவ்வொரு கடையிலும் தேனடையை மொய்க்கும் ஈக்களாகிக் குழுமி நிற்கும் ஜனங்கள். எறும்புகளாகி முட்டியும், மோதியும் விலகிப் போகும் ஜனங்கள். ஜனங்கள். ஜனங்கள். எதிர்வெயிலை வாங்கி தம் முகம் நோக்கித் துப்பியெறிகின்றன அலுமினியப் பாத்திரங்கள். மெல்லிய கைகளைப் பற்றி வளையல் அணிவிப்பதில் காலத்தைக் கரைக்கிறார்கள் காப்புக்கடைப் பையன்கள். இந்த உச்சக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு விட்டனர் கச்சான் கொட்டை விற்பவர்களும், கடலை வண்டிக்க…
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
சீதாக்கா! வ.ந.கிரிதரன் -புகலிட அனுபவ சிறுகதை 1. இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ ஸ்ரீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச் சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான். "ஆம். நண்பனே. என்ன விடயம்" என்றேன். "நல்லதாகப் போய் விட்டது. நான் மான்ரியாலிருந்து வந்த பஸ் டிரைவர். என்னுடைய பஸ்ஸில் ஒரு ஸ்ரீலங்காத் தமிழ்ப் பெண்ணொருத்தி வந்திருக்கிறாள். அகதியாக வந்தவள். இங்கு அவளுக்கு ய…
-
- 2 replies
- 1.7k views
-
-
''கொழும்பு என்பது அப்பொழுது எனக்குக் கொஞ்சம் பழகியிருந்தது. ஒரு வயசு அனுபவம்! ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை... அந்த "நாய் படாத பாடு" வேலைதான் இன்றுவரைக்கும் எந்தவேலையையும் இலகுவாக நினைத்துச் செய்யக்கூடிய மனவலிமையையும் சகிப்புத் தன்மையையும் எனக்குக் கொடுத்திருக்கின்றது என நினைக்கின்றேன்! அப்படியானதொரு வேலையுடன் நகர்ந்த அந்த நாட்களின் ஒரு மதியப்பொழுது... காலையில் சாப்பிடாமல் வேலைக்கு போனதால் பசி வயிற்றைக் கிள்ளியது. இருந்த பசிக்கு... உடனையே எதையாவது சாப்பிட்டுவிட வேண்டுமென்று தோன்றினாலும், இன்றைக்காவது வாய்க்கு ருசியா குத்தரிசிச் சோறு,நல்ல மீன் குழம்பு, பெரிய மீன் பொரியலோட ஒரு வெட்டு வெட்டோணும்.... என்ற ஆசையுடன் வெள்ளவத்தை ஸ்டேஷன் ரோட்டிலிருந்த யாழ் உணவகத்தினை நோக்கி…
-
- 12 replies
- 1.7k views
-
-
(2004, டிசம்பர் 26ம் தேதி... சுலபமாக மறக்கக் கூடிய நாளா! உயிர்கள் பல குடித்து கடல் தன் வயிறு நிரப்பிய சுனாமி சோக நாளாயிற்றே! அதன் பாதிப்பில் அப்போது எழுதிய சிறுகதை.) அது ஒரு ~சொக்கலேற்~ தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை. பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக வரும் கொக்கோக் கட்டிகளை அரைத்துப் பாணியாகவும் தூளாகவும் மாற்றும் பகுதி அவற்றுடன் விதம்விதமான அளவுகளிலே பல சுவையான பதார்த்தங்களை ~சொக்கலேற்~ வகைகளுக்கு ஏற்ப கலக்கும் பகுதி. அவ்வாறான கலவைகளை அவற்றுக்குரிய வடிவமைக்கும் இயந்திரங்களின் மூலம் உருவாக்கி குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டி தானாகவே அந்தந்த வர்ண கடதாசிகளா…
-
- 15 replies
- 1.7k views
-
-
அஸ்தமன வானில்....... இளவேனிற் காலத்து இதமான தென்றலின் தாலாட்டில் மேபிள் மரங்களெல்லாம் மெல்லச் சிலிர்த்துக் கொண்டன. பூங்காவின் வாங்கில் சாய்ந்து அமர்ந்திருந்த கற்பகத்தின் பார்வை அடிவானத்து அந்திச் சிவப்பில் லயித்துக்கிடந்தது. ஆங்காங்கு அருகருகே அமர்ந்திருந்த இளம்சோடிகள் தமக்குள் ஏதேதோ பேசிச் சல்லாபித்துக் கொண்டிருந்தனர். முதியவர் சிலர் தம்மால் முடிந்தளவு தூரம் நடந்துகொண்டிருந்தனர். பூச்சியங்களைத் தாண்டி புவியீர்ப்பு மையத்தைத் தொடும் குளிரில் விறைத்துக் கிடந்த உடல்கள் இங்கு சற்று தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டன. மழலைகள் புற்றரையில் பந்தை உருட்டுவதும் ஊஞ்சலில் ஆடி ஆடி அலுத்து மீண்டும் படிகளில் ஏறி ஏறி வழுக்குவதுமாக விளையாட்டில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தனர். சி…
-
- 6 replies
- 1.7k views
-
-
கதிரி எழுதியவர் மானிடப்பிரியன் "இப்பத்தான் வந்தனாங்கள். விசாவல்லோ தந்திற்றாங்கள். "அப்பா! இப்பதான் மனதுக்கு சந்தோசமாக இருக்கு. இதை எப்பவோ எடுத்திருக்கலாம். நீங்கள் பார்த்த வேலையால இவ்வளவு காலம்போச்சு. "அதுக்கு நாங்களென்ன செய்யிறது? அந்தாள் வெறியில பிறந்த திகதியை மாத்தி எழுதிப்போட்டுது. "அந்தாள் எழுதினால் உங்களுக்கு எங்க போச்சு? அறிவு திருப்பிக்கிருப்பிப் பார்க்கிறதில்லையே? ஏ. எல். படிச்ச அறிவாளி! "இதை எத்தனை தடவைகள் ரெலிபோனில சொல்லிப் பேசிப்போட்டியள்." அவள் செல்லமாகக் கடிந்து கொண்டாள். என்ன செய்யிறது? நான் உங்களைப்போல அறிவாளியில்லைத்தான். எல்லாத்திற்கும் அம்மா சொன்னமாதிரி காலநேரம் வரவேண்டும். பாட்டி இஞ்ச ரெலிபோன் பில் …
-
- 5 replies
- 1.7k views
-
-
2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசத்தின் கரங்களுக்காகவும் இந்தியாவின் பாதுகாப்புக்காகவும் நாங்கள் வானொலிகளை திருப்பி கொண்டு, அடுக்கப்பட்டு கிடந்த துணிகளால் ஆன மண் மூடைகளுக்கு நடுவே கிடந்த அந்த பொழுது. அவற்றையும் தொலைத்து விட்டு வெறும் நிலமே பாதுகாப்பாக படுத்திருந்த அந்த பொழுதுகள் சர்வதேசமே எங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று. பல வல்லரசுகள் எம்மை ஒன்றிணைந்து அழித்தொழித்த நாட்களில் ஒன்று. நாங்கள் வழமையான சில பணிகளில் கிடக்கிறோம். வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. செல்லும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறி வைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்த ஒரு காலை பொழுது அது. இதில ஒன்றை வெட்டுங்க அவடத்தில ஒன்றை வெட்டுங்க ” I ”…
-
- 0 replies
- 1.7k views
-
-
சரவணன் மனசுல சுகந்தி சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம் நண்பர்களின் காதல் சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, 'என் வாழ்வில் எப்போதும் காதல் எனச் சிக்கி அவஸ்தைப்படக் கூடாது’ என, கல்லூரியில் படிக்கும்போதே முடிவுக்கு வந்திருந்தேன். நண்பர்கள் பலர் அந்தச் சமயத்தில் காதலில் விழுந்திருந்தாலும், எப்படியோ சின்னச் சின்னக் காரணங்களால் அது தோல்வியில் முடிந்திருந்தது. 'ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு’ என்பதுபோல பிரகாஷ் என்ற நண்பன் மட்டும், தன் கல்லூரிக் காதலில் வெற்றி பெற்று, திருப்பூரில் மருந்துக் கடை ஒன்றில் மனைவியோடு நிற்கிறான். நான் சரவணன். ஊத்துக்குளிவாசி. ஊத்துக்குளி என்றால், உங்களுக்கு வெண்ணெய்தான் ஞாபகம் வரும். சில திரைப்படப் பாடலாசிரியர்கள் 'ஊத்துக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
நான்தான் அடுத்த கணவன் அ. முத்துலிங்கம் பத்மப்ரியாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. என் உடம்பு முழுக்க இருதயமாகித் துடித்தது. உருண்டை உருண்டையான எழுத்து. நான் டெல்லி சிறையிலிருந்து மீண்டு கனடா திரும்பி ஒரு வருடம் ஆகியிருக்கும். எப்படியோ என்னுடைய முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறாள். இது எப்படிச் சாத்தியமானது? ஐயா, என்னால் நம்பவே முடியவில்லை. என்னை அப்படிப் பார்க்க வேண்டாம்... அப்படிப் பார்க்க வேண்டாம். நான் ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். நான் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சின்ன ஊர். 1990ஆம் வருடம் எனக்கு 18 வயது தொடங்கியபோது அப்பா என்னை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார். எங்கள் ஊர் ஏஜன்டைப் பிடித்துப் பணம் கொடுத்து என்னை எப்படியும் கனடாவுக்கு …
-
- 0 replies
- 1.7k views
-
-
10 செகண்ட் கதைகள் பயம் திருடிய சிசிடிவி கேமராவை, தன் சொந்த வீட்டில் மாட்டினான் திருடன். - வேம்பார் மு.க.இப்ராஹிம் விளக்கம் 'புரளின்னா என்ன?' என்று கேட்ட பேரனுக்கு, 'வாட்ஸ்அப் மெசேஜ்' என்றார் தாத்தா. - வேம்பார் மு.க.இப்ராஹிம் திட்டம் கடும் பண நெருக்கடிக்கு ஆளான ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ., `அரசுக்கு எதிராக அறிக்கை விடலாமா?' என்று யோசித்துக்கொண்டு இருந்தார். - ரா.ராஜேஷ் ஷவர் `எவ்வளவு பெரிய ஷவர்' என்றது, மழையில் நனைந்த குழந்தை. - சங்கரி வெங்கட் வேலை `இங்கே, டாஸ்மாக்கை எல்லாம் அடிச்சு மூடுறாங்க, அங்கேயே வேலை தேடிக்கோ' என்று நண்பனுக்குத் தகவல் கொடுத்தான் பீகாரி. - கி.ரவிக்குமார் …
-
- 0 replies
- 1.7k views
-
-
சுகுமாரனின் முகத்தில் அன்று மகிழ்ச்சி பரவியிருந்தது! அன்றைக்குத் தான் தனது முதலாவது சம்பளத்தை, அப்பா எப்போதும் செய்வது போலவே, அம்மாவின் கையில் கொடுத்திருந்தான். அம்மாவும் அப்படியே பணத்தை வாங்கி வைத்து விடவில்லை. அதைக் கொண்டு போய்ச் சாமிப் படத் தட்டில் வைத்து, அதில் இருநூறு ரூபாவை எடுத்து, அவனிடம் திருப்பிக் கொடுத்தா. அதை உடனடியாக வாங்கிக்கொள்ளாமல், சிறிது நேரம் சிந்தித்தான். அப்போது தான், வீரகேசரிப் பேப்பரில் இருந்து, தலையைத் தூக்கிப் பார்த்த அப்பா, அவனுக்கு இன்னுமொரு நூறைக் கொடுத்துவிடன் என்று கூறினார். அவனது கண்கள், பனித்தன. இவ்வளவுக்கும் அவனது மாதச் சம்பளம் அப்போது, எண்ணூறு ரூபாய்கள் மட்டுமே. அதில் நூறு ரூபாவைத் தனது, தங்கையிடம் கொடுத்தவன், அடுத்த நாளைக்கான கொழும…
-
- 18 replies
- 1.7k views
-
-
உஷ்… ! இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது : கவிதா லட்சுமி – கருவறைக்கு வெளியே – நூலிலிருந்து-கவிதா லட்சுமி இந்த கண்ணாடி முன் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். தினமும் இப்படித்தான் பல நேரங்களில் நான் என்னைப் இப்படி நின்று நிதானமாக எந்த சலனமுமற்றுப் பார்ப்பதுண்டு. கண்ணாடியுள் விரியும் பெருவெளியின் வாடை, விறைத்த காற்று, மௌனத்தின் அலறல் என அனைத்தும் என்னால் மட்டுமே உணரக்கூடியது. வேண்டாம்! கண்ணாடியில் முகங்களை மட்டும் பார்க்கின்றவர்களுக்கான விம்பம் இல்லை இங்கு நான் காண்பது. அறையின் சாளரக் கண்ணாடி வழியே சூரியகதிர்கள் முகக்கண்ணாடியில் தெறித்து விழுந்துடைகின்றன. இந்தக் கண்ணாடி இருக்கும் அறையில் ஒரு கட்டிலும் பக்கத்தில் ஒரு மேசையும் இருக்கின்றது. அவை தவி…
-
- 0 replies
- 1.7k views
-
-
வளாகம் போன புதிது. புதிய இடம். புதிய போதனை மொழி-ஆங்கிலம். புதிய பாவனை மொழி-சிங்களம்.( கடை கண்ணிக்கு போறதெண்டால் சிங்களம் வேணும்). சிங்களவர்களாக ஆமிக்காறனை மாத்திரம் தெரிந்த எங்களுக்கு சிங்கள ஊரில் சிங்கள மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் அனுபவம். புதிய நண்பர்கள் நண்பிகள் என்று எல்லாமே புதிது. ஒரு மாதகாலத்தில் எல்லாம் ஓரளவு பழக்கத்தில் வரத் தொடங்கியிருந்தது. அன்றும் வழமை போல விரிவுரை சென்ற எமக்கு ஏதோ ஒரு இனம் புரியாத வேறுபாடு தெரிந்தது. நட்புடன் சிரிக்கும் எமது சிங்கள நண்பர்களின் முகம் இருண்டிருந்தது. வழக்கமான புன்னகை தொலைந்திருந்தது. பிறகுதான் தெரிந்தது காரணம். ஆனையிறவை புலிகள் பிடித்துவிட்டார்களாம். ஆயிரக்கணக்கில் ஆமி பலியாகிவிட்டதாம். எங்களுக்கு உள்ளுக்குள் …
-
- 7 replies
- 1.7k views
-