கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
வருடக்கடைசி லீவு எடுத்தாகி விட்டது இந்த வருடம் எங்கையும் போகிற மாதிரி இல்லை வெளியே வெளிக்கிடவே மனம் இல்லை சரியான குளிர். என்ன செய்யலாமென யேசித்து. சரி சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக கடிதக்கூடையில் சேத்து வைத்திருக்கும் கடிதங்கள் பில்லுகள் வங்கி கடதாசிகள் எல்லாத்தையும் தரம்பிரித்து ஒழுங்காய் பைலில் போடலாமென முடிவு செய்து கடிதக் கூடையை எடுத்து நடுவீட்டில் கவிட்டு கொட்டிவிட்டு நடுவில் அமர்ந்தேன். ஊரிலைமுன்னைய காலத்திலை முக்கிய ஆவணம் எண்டால் காணி உறுதியும் கூப்பன் மட்டையும் மட்டுமதான்.பிறகு அடையாள அட்டையும் முக்கியமாய் போனது. ஆனால் இங்கை வெளிநாட்டிலை எதுக்கெடுத்தாலும் என்ன அலுவலுக்கு போனாலும் ஆவணங்கள்தான் முக்கியம்.அதுவும் பிரான்சிலை ஆகமேசம். ஒரு அலுவலுக்கு போறதெண்டால…
-
- 41 replies
- 5.4k views
-
-
வணக்கம் நண்பர்களே! பேசி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு அன்பான நன்றிகள். இதிலே என்னுடைய தாயகப் பயணம் பற்றிய அனுபவங்களையும் சமரச அரசியல் நோக்கிய என்னுடைய சிந்தனைகளையும் தொடராக எழுது விரும்புகிறேன். சமரச அரசியல் என்பது அடிமை அரசியல் அல்ல. அதே வேளை எதிர்ப்பு அரசியலும் இல்லை. விட்டுக் கொடுப்புக்களை செய்து பெறக்கூடியவற்றை பெற்றுக் கொண்டு தன்னை தக்க வைத்தபடி அடுத்த இலக்கு நோக்கி நகர்வதுதான். . இந்த் தொடரில் தாயகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நான் சந்தித்த மக்கள், கண்ட ஊர்கள் என்பவைகளோடு என்னை சமரச அரசியலின் பக்கம் சிந்திக்கச் செய்கின்ற காரணிகள் பற்றியும் பேச இருக்கிறேன். கட்டாயம் புலம்பெயர் நாடுகளில் நிலவுகின்ற அரசியல…
-
- 41 replies
- 5.1k views
-
-
அபிசேகம் நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விட்டது. யமனுடைய கோட்டை வாயில் வரை சென்று மீண்டு வந்தாயிற்று. இது சாத்தியமா? நடக்கக் கூடியது தானா? நான் காண்பது கனவா? என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டதில் இது நனவு தான் என்று தெரிகிறது. இனிமேல் தினம் தினம் தூக்கமற்ற நீண்ட இரவுகளாய் அம்மாவை நினைத்து கண்கலங்கி, இராப்பொழுதுகளைக் கழிக்கத் தேவையில்லை. சாப்பிடுவதற்கு வைத்திருக்கும் ஒரேயொரு தகரப் பாத்திரத்தையே இரவில் சிறுநீர் கழிக்கும் பாத்திரமாகப் பாவிக்கும் கொடுமை இனியில்லை. இன்றைக்கு யார் வருவார் எப்படியான சித்திரவதைகளைச் செய்யப் போகிறார்கள் என்ற ஏக்கம் இனியில்லை. நாட்டைக் காக்கப் புறப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சிங்கள அரசின் கைப்பிள்ளைகளாக மாறி தமிழர…
-
- 40 replies
- 5k views
-
-
என்ட வாழ்க்கையில் நான் கண்ட,கேட்ட,நடந்த மறக்க முடியாத சம்பவங்களை தொடராக எழுதப் போறேன்.நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சம்பவம் 1: அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக நாங்கள் அந்த புது ஊருக்கு குடி பெயர்ந்தோம்.அப்பா முதலே அந்த ஊருக்கு வந்து வீடு எல்லாம் இருப்பதற்கு பார்த்து வைத்து விட்டு வந்த படியால் நாங்கள் நேரே அந்த வீட்டுக்கு குடி பெயர்ந்தோம்.அந்த வீடு நகரத்தின் மையத்தில் இருந்தது.முக்கியமான பாடசாலைகள்,அரச வைத்தியசாலை எல்லாம் பக்கத்தில் இருந்தது.நாங்கள் இருந்த வீதியில் அண்ணாமார் தங்கி படிக்கும் விடுதி இருந்தது.அந்த விடுதியின் இரு வீடுகள் தள்ளி ஒரு அம்மாவும் அவரது வயதிற்கு வந்த மகளும் இருந்தார்கள்[அந்த அக்கா…
-
- 40 replies
- 6.7k views
-
-
"அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று கூறிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் வித்தியா. அம்மா தான் இப்போது இல்லையே! பழக்கத்தில் சொல்லிவிட்டேன் என்று நினைத்து அண்ணியிடம் என்றாலும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று அவர்களின் அறையை நோக்கினாள். வழக்கம்போல் அது பூட்டித்தான் இருந்தது. அண்ணிக்கு இப்போதுதான் சாமம் மாதிரி இருக்கும் என்று நினைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள். வெளியில் போகும்போது "அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று சொல்லிப் பழகியவளுக்கு அன்று எதையோ இழந்தது மாதிரி இருந்தது. ஆம் வித்தியாவின் தாய் இறந்து 10 நாட்களுக்குப்பின் இன்று தான் முதல்முதலாக அலுவலகத்திற்கு புறப்படுகிறாள் வித்தியா. அம்மாவின் பிரிவை தாங்குவதற்கும், மனம் ஆறுதல் அடைவதற்கும் அவளுக்கு இன்னும் பல நாட்கள் தேவைப்பட…
-
- 40 replies
- 109k views
-
-
இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12) ஏன் அண்ணாவையும் புகழையும் கடத்தி வைத்திருக்கினம், என்ன பிரச்சனை? எனக்கு ஒன்றையும் மறைக்காமல் சொல்லுங்கோ.... இதுவரைக்கும் எவ்வளவோ பிரச்சனைகளையும் இன்னல்களையும் தாண்டி வந்துவிட்டோம் இனிமேலும் எங்களுக்கு பிரச்சனை என்றால் அதை தாங்கும் மன வலிமையையும் உண்டு .... சொல்லுங்கோ மச்சாள். வழமைபோல் காடையர்கள் அட்டூழியமும் அவர்களின் பணம் என்கின்ற பிணம் தின்னும் ஆசையும்தான் காரணம், ஒரு கோடிரூபா கேட்க்கின்றாங்கள் கொடுக்காவிட்டால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாம் அவங்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது !அவங்களிடம் அதை எதிர்பார்ப்பது தப்பு. ஆனால் எங்களுக்கு மச்சாள் அண்ணாவையும் புகழையும் முதலில் காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்யவேண்டும்,…
-
- 40 replies
- 5.9k views
-
-
ஜம்பது என்றால் அரை சதம் என கிரிக்கட் விளையாட்டில் சொல்லுவார்கள்.வாழ்க்கையில் 50 வயசை தாண்டினால் அரை கிழடுதான் ஆனால் மனம் ஒத்துக்கொள்ளாது.உண்மையிலயே அரைகிழடு என்று சொல்வதைவிட முக்கால் கிழடு என்றுதான் சொல்ல வேண்டும்.மனித வாழ்க்கையில் முழுசதம் போட்டவர்கள் மிக குறைவு.சராசரி மனித வாழ்க்கை 75 அல்லது 80 என்றுதான் சொல்லாம்.அதன் பின்பும் மனிதன் வாழ்ந்து முழுசதம் போட்டால் அது அவர்களுக்கு கிடைத்த போனஸ் அல்லது ஆறுதல் பரிசே ஆகும்.. நான் சிறுவனாக இருக்கும் பொழுது 40 வயதுக்கு மேற்பட்டோரை கண்டால் முதியவர்கள் என்ற எண்ணம் தான் தோ ன் றும்,அதே வயதை நான் அடைந்த பொழுது அன்று நான் நினைத்த வயதானோர்(கிழடுகள்)என்ற எண்ணம் வரவில்லை,அன்று இருந்த ஆசைகளும் எண்ணன்களும்தான் மனதில் வருகின்றது.உடலி…
-
- 40 replies
- 4.6k views
-
-
ஒவ்வொரு வருடமும் வெய்யில் அடிக்க தொடங்க தோட்டம் ,பேஸ்மன்ட்,கராஜ் இந்த மூன்றிலும் எப்படியும் ஒருக்கா கை வைத்தே தீர வேண்டும்.குளிர்காலத்தில் வேண்டாதவற்றை அள்ளி கட்டி கராஜுக்குள் தள்ளிவிட்டு பின்னர் வெயில் வர அதை ஒருக்கா போய் கிளறி சுத்தம் செய்வதே ஒவ்வொரு வருடமும் பெரிய வேலையாகி விட்டது.கடந்த ஞாயிறு நல்ல வெய்யில் அடிக்க மனுசியிட்ட நல்ல பெயர் எடுக்க அதிகாலையே எழும்பி கராஜில் கை வைத்துவிட்டேன். புல்லு வெட்டுறதை,சம்மர் டயர்களை,பார்பிக்கியு மெசினை வெளியில் எடுத்து சினோ வழிககிற மெசினை உள்ளுக்க தள்ளிகொண்டு நிற்கும் பொது மேல் தட்டில் (பரண்) கட்டி வைத்து வருடக்கணக்காக கிடக்கும்பெட்டிகளை பார்க்கின்றேன் .எல்லா பெட்டிகளிலும் உள்ளுக்குள் என்ன இருக்கு என்று பெயர் எழுதி தள்ளிவைத்திருக்…
-
- 40 replies
- 5k views
-
-
தீபாவளியை முன்னிட்டு டைகர்பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "காதல்காவியம்" ஜம்மு பேபியின் "அழகிய காதல் மகன்" *கதாநாயகன் - "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் பிரசாந்தன் *கதாநாயகி - அறிமுக நட்சத்திரம் "அழகிய மகள்" ப்ரியா (ஜரோப்பிய வருகை) *இவர்களுடன் அறிமுகம் சின்ன கலைவாணன் செந்தூரன் (அவுஸ்ரெலிய வருகை) அறிமுகம் சிரிபழகி அனுசா (ஜரோப்பிய வருகை) *கெளரவேடத்தில் அட்டகாசமான குணசித்திர நடிகர் நெடுக்ஸ் தாத்தா (திரைபடத்தில் கனகசுந்தரம்) (தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்நாற்சந்தியில் காண்பிக்கபடுகிறது) சுண்டல் அண்ணாவின் அட்டகாசமான நடிப்பில்!!! கண்களை மட்டும் அகல் விரித்து மூடிய திரைகுள் முகத்தை தேடி என்…
-
- 40 replies
- 14k views
-
-
அப்போ எனக்கு பதினாலு வயசு தான் இருக்கும். வயசுக்கு ஏத்த மிடுக்கும், பருவ வளர்ச்சியும் என்னையும் ஒரு சினிமா கதாநாயகியுடன் ஒப்பிடும் அளவு மனபக்குவத்தை எனக்குள் வளர்த்து இருந்தது. பூப்படைதலுக்கு பின்னான பெண்களின் உணர்வுகளை எளிதில் மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது. என்ர முகவெட்டு கொஞ்சம் நடிகை கௌசல்யாவை ஒத்திருந்தமையால் நானும் அவவை போல முடி வெட்டை மாற்றி கொண்டேன். ரோட்டாலே போகும்போது பெடியங்கள் என்னை கௌசல்யா என்று கூப்பிடும்போது, அவங்களை பார்த்து முறைச்சாலும், மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோசம். வீட்டை வந்தவுடனே ஓடி சென்று கண்ணாடிக்கு முன்னாலே நிண்டு தலையை ஒரு கோணலாய் சாய்ச்சு, இடுப்பை வளைச்சு, கண்ணை சிமிட்டி, உதட்டை கடிச்சு எல்லாம் போஸ் குடுத்து பாப்பன். பெடியள் ரோட…
-
- 39 replies
- 4.7k views
-
-
பாடசாலை மாறி போயிருந்த காலம். அறிமுகங்களும் பலவகை கெடுபிடிகளுடன் பகிடி வதைகளும் அமர்க்களமாய் இருந்தநேரம். நான் போன போது அந்த சி வகுப்பு என்றால் ஒரு படி கீழே தான் இருந்தது. குளப்படியில பாடசாலையில் முதல் ரகம். ஏதாவது ரிப்போட் செய்யப்போனால் அதிபர் கூட எட்டடி தள்ளி நிற்பார். பயம் வரும் வகையில் இருந்தது படிப்பு விடயம். ஒரு நாளைக்கு ஒருவர் என்றாலும் தண்டிக்கப்பட்டு மைதானத்தில் வெய்யிலில் காயாத நாளில்லை. படிப்பிக்க வந்த புது வாத்திமாரெல்லாம் இந்த வகுப்புக்கு போகமாட்டோம் என ஒப்பாரி வைக்கத்தொடங்கிவிட்டனர். அதிலும் பெண் ஆசிரியைமாருக்கு விசேச கவனிப்பு. பொருளியல் பாடத்தில் சரக்கு வந்தடைடந்தது என்று அவர் சொன்னதற்காக போட்ட கூச்சலில் அந்த ஆசி…
-
- 39 replies
- 4.1k views
-
-
குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே இந்்தவார ஒரு பேப்பரிற்காக 83ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களிற்கு நடந்த அவலத்தை தமிழின வரலாற்றில் மறந்துவிட முடியாது அந்த கலவரத்தில் உறவுகளை உடைமைகளை இழந்து வடக்கு நோக்கி வந்த பல்லாயிரம் தமிழ்குடும்பங்களில் எங்கள் ஊரிலும் பல குடும்பங்கள் வந்து குடியேறினார்கள் அதில் ஊர்மண்ணின் வாசத்தை மறந்து பலவருடங்களாகிப்போன தமிழர்களும் அடங்குவர்.அப்படி வந்த தமிழ் குடும்பங்கள் பலர் உறவினர்வீடுகளில் தங்கினர் உறவினர்கள் இல்லாத அல்லது உறவினர்களுடன் தொடர்புகள் அற்ற பலகுடும்பங்களிற்கு ஊர் இளைஞர்கள் நாங்கள் தங்குமிட வசதிகள் மற்றும் உதவிகளை செய்து கொடுத்திருந்தோம். அப்படி அகதியாய் வந்திருந்த மாணவர்களிற்கு அவர்களது கல்வியை தொட…
-
- 39 replies
- 9.4k views
-
-
கால்கள் பேசினால்..!! கதிரவன் மெத்த மெத்தாக சினத்தை தணிக்கும் அந்த பொழுதினில்..பல காலடி சப்தங்கள்..ஒவ்வொரு கால்களும் ஏதோவோர் எதிர்பார்பில் சென்று கொண்டிருக்க..ஒவ்வொரு கால்களை போலவே இந்த கால்களும் பயணிக்கிறது அந்த பொழுதினில்.. அன்றைய பொழுதின் சுமையை இறக்கிய சந்தோசத்தில் அந்த கால்கள் சற்று அதிகமாகவே ஆரவாரமிட்ட வண்ணம் சென்று கொண்டிருக்க..எதிர்பாராத விதமாக இன்னொரு கால் இந்த காலுடன் எதிர்பாராத தருணத்தில் மோதி விடுகிறது ..மனங்கள் மட்டுமா ஊடல் கொள்ள வேண்டும் ஏன் கால்கள் கொள்ள கூடாதா.? ம்ம்..மோதிய கால் கன்னி(யின்) கால்கள் இந்த கால் பட்டவுடனே அந்த முரட்டுகால் மிதுவானது..கன்னி காலின் நாணம் தனை புரிந்த முரட்டுகால் மெதுவாக புன்னகைத்தது..கன்னி கால் மெதுவாக…
-
- 38 replies
- 4.5k views
-
-
உயர்ந்து பரந்து விரிந்து காட்சியளித்த அந்த பிரமாண்டமான கட்டிடத்தை எனது கார் நெருங்கியது. நெருங்க நெருங்க என் மனமும் நொறுங்க ஆரம்பித்தது.வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டு 200 மீற்றர் தூரத்தில் காட்சியளித்த அந்த வெள்ளைக்கட்டிடத்தின் நுழை வாயிலை அண்மித்தேன்...உள்ளே கடமையில் இருந்தவர்கள் கதவினைத்திறப்பதற்காக பொத்தானை அழுத்தியதும் அந்தக்கண்ணாடி கதவு மெதுவாக திறந்து கொண்டது.மெதுவாக எனது கால்களை உள்ளே வைத்து பதட்டத்துடன் உள்ளே சென்றேன்.கடமையில் உள்ளவர்கள் விபரத்தை கேட்டார்கள்.கூறினேன். அவர்கள் கையில் வைத்திருந்த பத்திரத்தில் பெயரைத்தேடி குறிப்பிட்டபின் எனது கடவுச்சீட்டை வாங்கினர். அதன் பின் என்னிடம் உள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு சிறிய அலுமாரி…
-
- 38 replies
- 3.1k views
-
-
வணக்கம் கள உறவுகளே!!! இந்தப்பகுதியுடன் நெருடியநெருஞ்சியை நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . இவ்வளவுகாலமும் எனது இம்சைகளை தாங்கி ஆக்கமும் ஊக்கமும் தந்த கள உறவுகளுக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன் . இந்தப் பயணக்கட்டுரையை எழுதத் தயங்கி நின்ற பொழுது விசுகண்ணைதான் என்னைத் தட்டிகொடுத்தார் ,ஊக்கமும் தந்தார் . அவருக்கு நான் நன்றி என்று சொல்லி எமது நெருக்கத்தைத் தள்ளி வைக்க விரும்பவில்லை . என்றுமே எனது வளர்ச்சி உங்கள் கைகளிலேயே உள்ளது . வழமை போலவே உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் ******************************************************************************************************************************* …
-
- 38 replies
- 5.5k views
-
-
பிப்பிலிப் பேய் இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி கதையின் காலம் 1984 ஆஆஆஆஆஆஆஆஆஆ..............ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஜயோ.........வழைமையாய் இரவு பத்துமணிக்கு பிறகு கேட்கும் அந்த பெண்ணின் அலறல் அன்றைக்கும் கேட்டது. மருதடி பிள்ளையார் கோயில் தேர் முட்டியில் அரட்டையடித்துக்கொண்டிருந்த அந்த ஆறு பேரும் ஆளையாள் பார்த்துக்கொண்டார்கள். டேய் பேய் கத்துதடா நேரமும் பத்தரையாகிது வாங்கோடா போவம் என்று லேசாய் நடுக்கியபடி சொன்னான் இருள் அழகன்.(சிவா). டேய் அது பேயில்லை மகேந்திரத்தாரின்ரை இரண்டாவது பெட்டை தேவரதிக்கு விசர் பிடிச்சிட்டுதாம். அவள்தான் கத்துறாள். சீரணி மலையாள சாத்திரியிட்டை தொடங்கி மட்டக்கிளப்புவரை கொண்டு போய் பேயோட்டி பாத்திட்டினமாம். ஒண்டும் சரிவரேல்லை …
-
- 38 replies
- 3.5k views
-
-
புகழ்பெற்ற விஞ்ஞான புனைகதை ஆசிரியர் Sir Arthur C Clarke உடனான சில எண்ணப் பகிர்வுகள்! அனைவருக்கும் வணக்கம், இன்று/நாளை 16.12.2008 அன்று இந்த வருடம் மறைந்த உலகப்புகழ் பெற்ற விஞ்ஞான புனைகதை ஆசிரியர் மதிப்புக்குரிய Sir Arthur C Clarke அவர்களின் 91வது பிறந்தநாள். நான் சிறீ லங்காவில இருந்தபோது Sir Arthur C Clarke அவர்களுடன் வாழ்வியல், விஞ்ஞானம் சம்மந்தமாக எனது பல சிந்தனைகளை பகிர்ந்து இருந்தன். 1997ம் ஆண்டில இருந்து ஒவ்வொருவருடமும் அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவது. கடைசியாக சென்றவருடம் அவரது 90வது பிறந்ததினத்திற்கு ஒரு Teddy bearம் பூச்செண்டும் வாங்கி அனுப்பி இருந்தன். நன்றி கூறி பதில் அனுப்பி இருந்தார். அதுவே அவருடனான எனது கடைசி எண்ணப்பர…
-
- 37 replies
- 5.4k views
-
-
அலை மகள். அன்றைய பூரணை நிலவு அள்ளியெறிந்து கெண்டிருந்த வெள்ளொளியில் மெல்லலைகள் வீசிக்கொண்டிருந்த முல்லைக்கடலின் ஓருபகுதி கைகளையும் கால்களையும் அகலப்பரப்பி அண்ணாந்து படுத்திருந்தபடி ஆயிரமாயிரமாய் மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களையும் பூரணையின் பூரணநிலை பூரித்துப் போயிருந்தாள் அலைமகள். ஆகாயத்தை பார்த்தபடியே கடலில் கைகால்களை விரித்து மிதப்பதென்றால் அவளிற்கு அளவற்ற ஆசை. கரையில் நின்றிருந்த பயிற்சியாளர் இரண்டாவது தடைவையும் விசிலடித்து கையில் சிறிய சிவப்பு வெளிச்சத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டார் அவள் அசைவதாய் தெரியவில்லை. கையிலிருந்த நடைபேசியில்(வோக்கி)தூரத்தே காவலிற்கு நின்ற கடற்புலிகளின் படகோடு தொடர்பு கொண்டதையடுத்து படகு அவளை நோக்கி வந்துகொண்…
-
- 37 replies
- 3.5k views
-
-
கலியாண ஆசை எனக்கு கலியாண ஆசை வந்துவிட்டது. என்ன செய்வது? யாரிடம் போய் இதைச் சொல்வது? எப்படி பெண் தேடுவது என்று யோசிச்சுக் கொண்டிருந்த பொழுதுகளில், ஒருமுறை ஈஸ்ட்ஹாம் தமிழ் கடையில் சாமான் வாங்க சென்றிருந்த சமயம் ஒரு பெரியவர் கேட்டார். தம்பி நீர் உந்த பெற்றேல் ஷட் ல் வேலை செய்யிற ரூபன் தானே எண்டார். ஓம் ஓம் என்றேன். ஆளே சுத்தமா மாறிப் போயிட்டிர் சக்கை பிளாக்காய் கணக்குக்கு உடம்பை வளர்த்து விட்டிருக்கு என்று சொன்னவர் இப்படிப்போனா எங்கே எப்ப கலியாணம் நடக்கிறது என்றபடியே நகர்ந்தார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பெரியவர் மீது கோபம் கோபமாய் வந்தது. Punching bag ல் என் ஆத்திரம் தீருமட்டும அடிக்கனும் போல இருந்தது. சும்மா சொல…
-
- 37 replies
- 4.8k views
-
-
பெரிசு சமய போட்டி வருகிறது அந்த கேள்வி கொத்தை கொண்டு வாங்கோ படிப்போம் .சுரேஸ் முத்தவளை பெரிசு என்றும் இளையவளை சிறிசு என்றும் செல்லமாய் அழைப்பான்.இவன் கேள்விகொத்து என்று சொன்னது என்னவென்று பெரியவளுக்கு விளங்க வில்லை .அவள் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . தமிழ் பேசுவாள் ஆனால் கேள்விகொத்துஎன்ற கடின சொற்கள் விளங்குவது கொஞ்சம் கடினம்.."வட் அப்பா கொத்தோ,வாரேன் "என ஒடி வந்தாள் எங்க கொத்து றொட்டி என்று அப்பாவின் கையை பார்த்தாள் .கொத்து ரோட்டி இல்லையம்மா சமய போட்டி க்கு சைவபாடசாலையில் கொடுத்த கேள்விகளை கொண்டுவாங்கோ படிக்கிறதற்க்கு.நான் விளையாடப்போறன் தங்கச்சியோட பிறகு படிப்போம் அப்பா என சினந்தாள்.நாளைக்கு போட்டி தேவாரம் படிக்கவேண்டும் ,சமய அறிவுத்திறனுக்கு படிக்…
-
- 37 replies
- 2.6k views
-
-
இனியாவின் தவிப்பு ...... (பாகம் 6 ) (மறுநாள் காலை) தாயார் : இனியா ..... இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மாச்சி ..... அம்மா அப்பா என்னை ஆசிர்வதியுங்கோ ..... எங்கள் ஆசிர்வாதம் எப்போதுமே உங்களுக்கு உண்டு .... (இனியாவை கட்டித்தழுவிய படி கூறினார்கள்) நாங்கள் எல்லோரும் கோவிலுக்கு போவோம் வெளிக்கிடுங்கள் கெதியாக அபிஷேகத்துக்கு முன் போகவேணும் ''இனியா தளயத்தளைய நடை பயின்று பூமியை தட்டி எழுப்பும் விதத்தில் அவளின் சேலையும் அவள் தோட்டத்தில் உள்ள தேன்வண்டுகளை கொட்டி கூப்பிடும் அளவுக்கு அவள் தலையில் மல்லிகை பூவும் முகத்தில் புன்னகை என்னும் பூக்கள் வடிய சிந்து பாடும் நடையோடு மனதில் அலைபோல் கற்பனைகளை சுமந்து அவள் மனதுக்குள் ஒரு சுயம்பரமே நடத்துகின்…
-
- 37 replies
- 5.3k views
-
-
விடை கொடு விடை கொடு மண்ணே... வாகனம் ஓடும் சத்தம், காற்று வீசும் ஓசை, வண்டிக்குள் எம் மூச்சுக்காற்று இவை தவிர அந்தச் சூனியப் பிரதேசத்தில் வேறு சத்தமில்லை. சாம்பல் பூத்த வானம் சலனம் தீர்ந்து சயனித்திருந்தது. வெந்து கிடந்தது மண்; வேகம் இழந்து வீசியது காற்று. கருகிக் கிடந்தன மரங்கள். குவிந்து கிடந்தன எரியூட்டப்பட்ட வாகனங்கள். மூச்சடங்கிக் கிடந்தது முல்லை நிலப்பரப்பு. மொட்டையாய் நின்றன கற்பகத்தருக்கள். கோலமிழந்து கிடந்தன வாழ்வின் எச்சங்கள். கூரை இழந்து நின்றன குடியிருந்த கோயில்கள். விதவைக் கோலம் பூண்டிருந்தன தெருக்கள். இறுதிக்கட்ட போரின் பின் தொலைக்காட்சிகளிலும் கணனிகளிலும் பார்த்து மனம் கனத்த கொடுமையான நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் மனக்கண்ணில் ஒருகணம் நிழற்படமாய் விரிய மனதை …
-
- 37 replies
- 6.2k views
-
-
ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் என்று ரீவிக்குள்ளே நின்று நெஞ்சை முன்னுக்குத் தள்ளித்தள்ளிக் கத்திய இளம்பெடியனை எங்கேயோ கண்டதாக அகதித்தஞ்ச விசாரணை தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் விரலைத் தலையில் தேய்ச்சுக்கொண்டே யோசித்தார். இளம்பெடியன் சேட்டில் புலியை வைத்திருந்தான். தொப்பியில் புலியை வைத்திருந்தான். மிதமான குளிரைத்தாங்கும் சால்வையிலும் புலிதான் படுத்திருந்தது. கன்னங்களில் கறுத்தக் கோடிழுத்திருந்தவனும் குஞ்சுத் தாடியும் சொக்கிலேற்றுக்கும் குங்குமக் கலருக்கும் இடைப்பட்டை கலரில் தலைமயிரின் முன்பக்கத்தைக் கொஞ்சம் வைத்திருந்தவனுமாகிய இளம்பெடியனை குமாரசூரியர் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமாவென்று திரும்பவுமொருக்காத் தேய்ச்சார். கிட்டத்தட்ட பதின்மூண்டு பதின்நாலு வருச அவர…
-
- 37 replies
- 4.2k views
-
-
வருடத்தில் ஐந்தாறு தடவையாவது வேள்வி,பங்கிறைச்சி,அடிச்ச ஆடு, என எங்கள் வீட்டில் கதை அடிபடும்.சிறு வயதில் இதைப்பற்றி அதிகம் விளக்கமில்லை .சனிக்கிழமைகளில்தான் இந்த அடிச்ச ஆடு,வேள்வி விளையாட்டு எல்லாம் நடைபெறுவது வழக்கம். கொழும்பிலிருந்து சொந்தக்காரர் வந்தால் அநேகமாக பங்கிறைச்சி வீட்டில் இருக்கும். இந்த பங்கிறைச்சி வியாபாரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான் ஈடுபடுவார்கள்.ஒரு ஆட்டை வாங்கி கொலை(அடிச்ச) செய்து பங்கு போட்டு விக்கும் பொழுது ஒரளவு பணம் சம்பாதிக்ககூடியதாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரளவு வசதியானவர்கள் பங்கிறைச்சியை ருசிப்பார்கள். எங்கள் வீட்டுக்கு பங்கிறைச்சியை வழங்குபவர் ஒரு சலவை தொழிலாளியாவார்.அவர் பரம்பரையாக எங்களுடைய பரம்பரையினருக்கு பங்கிறைச்…
-
- 37 replies
- 4.9k views
-
-
அறிமுகம் அனைவருக்கும் வணக்கம்! "போர் உலா" என்ற நூலை எழுதிய மாவீரன் கப்டன் மலரவனுக்கு(லியோ) (காசிலிங்கம் விஜிந்தன், யாழ்ப்பாணம்) இந்த செல்வன் தொடர்கதையை கண்ணீர்க் காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன். கதையில் ஏதாவது குற்றங்கள், குறைகள், இலக்கணம் மற்றும் எழுத்துப்பிழைகள், மற்றும் வேறு ஏதாவது தவறுகள் இருந்தால் அடியேனை பொறுத்து அருளும்படி மாண்புமிகு வாசகர் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி! அன்புடன், கலைஞன் குறிப்பு 01: இங்கு வரும் பல பாத்திரங்களிற்கு யாழ்கள உறவுகளின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெயரிலும் ஒரு பாத்திரம் இங்கு உருவாக்கப்படுவதை நீங்கள் விரும்பினால் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி அங்கு உங்கள் விருப்பத்தை எழுதிவிடு…
-
- 37 replies
- 9.1k views
-