Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. மயூரி அவளின் பெயர். பெயரே இவ்வளவு அழக இருக்கே அவள் எப்படி இருப்பாள்.அவளை பார்த்தால் யாருக்கும் புடிக்கும்.அவள் பணகாற விட்டு பொண்ணாய் இருந்தலும் நல்ல குணம் உள்ள பொண்ணு. யாரும் உதவி என்று கேட்டாள் இல்லை என்னு சொல்லமல் பண்ணுவள் அவளின் அம்மா ஒரு ஆசிரியர் அப்பா ஒரு தொழில் வத்து பெரிய அளவில் ஆக்களை வத்து நடத்தி வருகுறார்.மீனாட்சி நம்மளுக்கு ஒரு பொண்ணு மட்டும்தான் நமக்கு அப்புறம் அவள் தனிக்க போறாள் என்று அவள் அப்பா கவலை பட்டார்.மீனாட்சி நம்ம பொண்ணை வெகு விரைவில் கல்யாணம் பண்ணி குடுக்கணும்..சரியுங்க அதுக்கு என்ன மாப்பிளை பார்த்து விட்டிர்களா? மீனாட்சி நம்மளட்ட வேலை செய்யுறனே ரவி அவனை நம்ம பொண்ணுக்கு கேட்பமா?. அவன் நல்ல பெடியன்ந்தான் ஆனாள் ரவி ஒம் என்று சொல்லணுமே. நான்…

  2. குமாரசாமியின் பகல் பொழுது பிரபஞ்சன் குமாரசாமி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து தெருவில் நின்றார். அவர் ஆச்சரியப்பட்டுப் போகும்படியாக இருந்தது, அந்தப் பகல் பதினொரு மணிப் பொழுது. தெருவில் அரக்கப்பரக்க அடித்துக் கொண்டு ஓடும் மனிதர்களைக் காணோம். எல்லோரும் அலுவலகக் கூண்டுக்குள் போய் முடங்கிக்கொண்டார்கள் போலும். அதிர்ஷ்டவசமாக வானம் மந்தாரமிட்டுக் கிடந்தது. மாலை நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் மட்டும் கிடைக்கும் தண்ணீர்க் காற்று அப்போது வந்து அவரைக் குளிப்பாட்டிற்று. உலகம் ரொம்பப் புதுசாய் இருந்தது குமாரசாமிக்கு. அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தையைப் போல. அடைக்கலசாமி நேற்று இறந்து விட்டாராம். சுமார் முப்பது வருஷங்களாகக் குமாரசாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வேலை பார…

  3. எப்போதாவது ஒரு நாள் நீ வந்து போகும் தருணங்களில் உன்னைப் பக்குவப்படுத்தி கட்டி வைத்து, என்னுள்ளே திணித்துக் கொள்ள முடியாத காதலனாக நான். மெதுவாய் என்னுள் நுழைந்து கொண்டு, மெல்லவும், விழுங்கவும் முடியாத உவர்ப்பு நிறை உணவின் சுவையினைத் தந்து விட்டுச் செல்கின்றாய் நீ. ஒவ்வோர் நாளிகையும் உனைப் பற்றியதான என் உருவமற்ற உணர்வுகளுக்கு உணர்ச்சியூட்டிச் செல்கின்றது.நிரூபனின் நாற்று மெதுவாய் மனதின் அடி வாராத்தில் நீ வந்து நிரந்தரமாய்த் தங்கி விட வேண்டும் எனும் ஆசையினால் என்னுடைய நாளாந்த கடமைகளை மறந்து உன் நாமத்தை உச்சரிப்பதோடு ஐக்கியமாகிவிட்டேன் நான். அவள் பற்றிய மொழிகளினை விட, அவளின் ஒவ்வோர் அசைவுகளிலும் தான் நான் என்னைப் பறி கொடுத்திருக்கிறேன். அவள் ஒரு அபிநயக்காரி. …

    • 2 replies
    • 3.4k views
  4. ’விடியாத இரவு ’ - நளினியின் தொடர். 27 செப்டம்பர் 2011 அன்பான சகோதர சகோதரிகளே! இந்தத் தொடரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். அன்பான சகோதர சகோதரிகளே! இந்தத் தொடரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். 21 ஆண்டுகளாக, சிறைக் கம்பிகளும், கான்கிரீட் சுவர்களுமே எனக்கு நண்பர்கள். வெளி உலகத்தை பார்த்தது கிடையாது. வெளி உலகம் எப்படி வாழ்கிறது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை தினந்தோறும் எனக்கு வரும் செய்தித் தாள்களை வைத்தே தெரிந்து கொள்கிறேன்.‘எனக்கு விடுதலை உண்டா, இல்லையா?’ என்பதே தெரியாமல் நான் தவித்துகொண்டிருந்தபோது, பேரிடியாக வந்தது, என் கணவர் முருகன் உள்ளிட்டோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி. இந்தச் …

  5. சிறுகதை சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 25 செப்டம்பர் 2025 * ஓவியம் - AI கூட்டங்கூட்டமாகநின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்னையே இப்பிடி உலுக்கியிருக்கெண்டால் லக்கியாவின்ர குடும்பத்துக்கு எப்பிடியிருக்கும்?’ உள்ளங்கை வியர்த்துக்கொட்டுகிறது. பாடசாலைக்குள் காலடி எடுத்துவைத்தபோது, என் சப்பாத்துக்கள் போட்ட சத்தத்தைவிட என் இதயம் அதிக சத்தத்தில் அலறுகின்றது. யார், யார் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பீதி கடந்துசெல்வோரை நிமிர்ந்து பார்க்கவிடாமல் என்னைத் தடுக்கிறது. “Instagram, twitter எண்டு எல்லாத்திலும் படம்போடுற, கருத்திடுற வேலை எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடு! ஆர் என்ன சொன்னாலும் சொல்லிப்போட்டுப் போகட்டும். பள்ளிக்கூடம் போறனா, வாறனா எண்ட…

  6. மம்முடு-கோமகன் பிரான்ஸ் இன்போ செய்தி : செவ்ரன் நகரில் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் இரண்டு கிலோ பிரவுன் சுகர் போதைவஸ்து வில்லைகள் கைப்பற்றப்பட்ட வேளையில் நடந்த மோதலில் ஒரு கறுப்பினத்தவர் உயிரிழந்ததாக செவ்ரன் மாநகரக் காவல்துறை தெரிவிப்பு. 07 மார்கழி 2018 000000000000000000000 கடந்த இரவு அம்மா வாட்ஸ் அப்-இல் எனது கலியாணத்துக்காக அபிப்பிராயம் சொல்லும்படி அனுப்பியிருந்த அந்த அப்பாவிப் பெண்ணை மறுப்புச் சொல்லி செய்தி அனுப்பினேன். அம்மா எனக்காகப் பார்த்த 10-ஆவது பெண் தான் இவள் பெயர் மது. நான் எதிர்பார்த்ததை விட நல்ல வடிவாகத்தான் மது இருந்தாள்.ஆனாலும் எனக்கு ஏனோ அவள் மீது பிடித்தம் வரவில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு நல்லது கெட்ட…

  7. என் தந்தை ஒரு போஜனப்பிரியர், அதனால் எனக்கு காதல் தோல்விகள் என்றால் உங்களுக்கு சிரிப்பாய்த்தான் இருக்கும். அந்தக்காலத்தில் எங்கள் ஊரில் ரெங்க விலாஸ் என்னும் உணவகம் இருந்தது. அங்கே சாம்பார் வடை பேமஸ். இரண்டு சாம்பார் வடை வாங்கினால் ஒரு லிட்டர் சாம்பாரை வாளியில் ஊற்றி தருவார்கள். வாரத்தில் மூன்று நாட்களாவது அந்த கடை சாம்பார் வேண்டும் என் தந்தைக்கு. அது வந்தவுடன் அவர் இட்லி சாப்பிட ஆரம்பிப்பார். துணைக்கு அப்பொழுது அரைத்த தேங்காய் சட்னி, இரவு மீதமான தக்காளி கார சட்னி, எப்பொழுதும் வீட்டில் இருக்கும் எண்ணெய் மிளகாய்ப் பொடி.இரவுகளில் ராஜு ஆப்பக்கடையிலோ, குதிரை மார்க் புரோட்டா ஸ்டாலிலோ வாங்கப்படும் வீச்சு புரோட்டா, வெங்காய கறி. நான் வாங்கி வந்த உடன் என் தாயார் ஆம்லேட் சுட ஆரம்பிப்…

    • 2 replies
    • 1.5k views
  8. [size=6]யாரோ ஒருவன்[/size] யோ.கர்ணன் நேற்று முழுவதும் அக்காவின் ஞாபகம் ஒரு காரிய நிழலாக மனதில் படர்ந்திருந்தது. அந்த அடர் திரையை விலக்கி ஒரு ஒளிக்கற்றைகூட மனத்திரையில் பதியவேயில்லை. மனதின் இருளில் வழிதெரியாத நினைவுகள் அல்லாடிக் கொண்டிருந்தன. அம்மாவின் முகமே இருண்டிருந்தது. யாருடனும் அவர் சரியாகக் கதைக்ககூடயில்லை. கடந்த சில மாதமாகத்தான் அவர் வாழ்வில் ஒளி கொண்டிருப்பதாக ஓயாத சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தவர், இன்று அனைத்தையும் இழந்துவிட்டார். அம்மா இவ்வளவு சீரியசாக இருக்கத் தேவையில்லையென்றுதான் எனக்குப்பட்டது. ஆனாலும் எதனையும் நான் சொல்லவில்லை. நீண்ட பிரிவின் பின் கடந்த சிலமாதமாகத்தான் அம்மாவுடன் சேர்ந்திருக்கிறேன். எதனையும் தனது விருப்பத்தின்படியே செய்து முட…

    • 2 replies
    • 1.2k views
  9. ஐஞ்சு சதத்துக்கு கடலைக் கொட்டையும் ஐநூறு பிறாங்குக்கு அன்ரி எயாக்கிறாவ் மிசைலும்........? ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- எங்கடை ஊரிலை ஒருத்தர். அம்பத்தைஞ்சு அறுவது வயதிருக்கும். பெரிய கமக்காரன். எந்த நேரமும் வாயிலை சுருட்டுக் கிடக்கும். அடிக்கடி நெருப்புப் பெட்டியைத் தட்டி அதை மூட்டிக் கொண்டிருப்பார். ஆனால் அதைத் தொடர்ந்து பத்தி முடிக்கிறேல்லை. விடிய வெள்ளாப்போட வாயில வைக்கிற சுருட்டு இரவு படுக்கைக்குப் போகும் வரைக்கும் வாயிலேயே கிடக்கும். அவர் பெரிய கமக்காரன் எண்டதோட ஆள் பெரிய பொயிலை வியாபாரியும், வீட்டில சுருட்டுக் கொட்டி…

  10. அம்மா நான் கோதை அல்ல அந்திவான் நாணச் சிவப்பேறப் புள்ளினங்கள் பாட்டிசைத்தன. கரைமோதும் அலைக்கரம் தன்னிருப்பைக் காட்டுவதற்காக இரைச்சலிட்டபடி நுரைத்துக் கொண்டிருந்தது. பந்தலில் படர்ந்த கொடியில் முல்லைகள் விரிவிற்காக விண்ணப்பம் எழுதின. தென்னங்கீற்றோடு மாருதம் சலசலத்துப் பேசி சமயத்தில் சண்டையும் போட்டது. ஒழுங்கையில் மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை வீட்டுக்குக் கலைத்தபடி மணியம் நடந்தார். முற்றத்து விலாட் மாமரத்தில் ஓடித்தாவித் திட்டி விளையாடும் அணில்களை ரசித்துப் புன்னகைத்தாள் அந்தப் பதினாறு வயது நிரம்பிய பருவமகள். சின்னச் சின்ன மஞ்சள் பூக்கள் தூவிய கறுப்புநிற அரைப்பாவாடையும், மஞ்சள் மேலாடையும், சற்றே தளர்த்திப் பின்னலிட்ட இரட்டைச்சடையும் கோதையின் வனப்பை உச்சத்திற்கு ஏற்றின. …

  11. ஊருக்குள் நூறு பெண்.... மட்டுவில் ஞானக்குமாரன் அந்தப் பெண்களோடு பேசிய பின்னால் தான் அவருக்கு இப்படி ஒரு ஞானம் வந்திருக்கோணும். நெஞ்சு இறுக்கம் அடைவது போலவும் அடிமனதிலே சில பேர் சேர்ந்து சம்மட்டியால் அடிப்பது போலவும் ஒரு வலி. அவரிடம் கடைசியாக வந்த சுகன்யாவுக்கு 20 வயது தான் ஆகிறது. மூன்று வயதிலே ஒன்றும் இரண்டுவயதிலே இன்னொன்றுமாக இரண்டு குழந்தைகளை கையிலே கொடுத்துவிட்டு அவளது கணவன் போய்விட்டான். இங்கே நடக்கக் கூடிய வழமையான செயற்கைச் சாவிலே ஒன்றாக அவனது பெயரையும் காலம் இணைத்துக் கொண்டது. வறுமையோடு போராடும் பெற்றோர் ஒரு பக்கம் வெறுமையாகிப் போன வாழ்க்கை மறுபக்கமுமாகித் தவிக்கின்ற சுகன்யாவின் கதையைக் கேட்கக் கேட்க கவலையாகத் தான் இருந்தது. இதுவரையிலும் ஒரு பன்னிரண்ட…

    • 2 replies
    • 1.3k views
  12. ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான். அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான். அந்த பணக்காரனும் பே…

  13. மரணதண்டனை தீர்ப்பு ? சொல்லமறந்த கதைகள் – 17 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் நெருக்கடிகள் உக்கிரமடைந்தபின்பு ஏராளமான கொலைச்சம்பவங்கள் நடந்துவிட்டன. அரசியல் தலைவர்கள், இயக்க, மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள், மதகுருமார், அரச அதிபர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண அப்பாவிப்பொதுமக்கள்…. என்று அந்தப்பட்டியல் நீளும். இது ஒரு புறமிருக்க பாதாள உலகக்கோஷ்டிகளின் படுகொலைகளும் தொடர்ந்தன. ஆனால் இந்தப்படுகொலைகள் தொடர்பான நீதிவிசாரணைகள் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியான நீதிமன்ற விசாரணைகள், அவசரகால சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டபோதிலும் பத்திரிகைகளில் பத…

    • 2 replies
    • 1k views
  14. "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர…

  15. ஒரு நிமிடக் கதை - பயம் அமரனுக்கு தன் மகன் சிவா, திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருப்பது பெரும் கவலையாக இருந்தது. அமரன் ஒரு இதய நோயாளி. நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். தான் நன்றாக இருக்கும் போதே தன் மகனுக்கு திருமணம் செய்துபார்க்க விரும்பினார். அமரனின் நண்பர்கள் மூலம் பல நல்ல இடத்து சம்மந்தங்கள் கூடி வந்தது. ஆனால் சிவா எதையும் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உதாசினப்படுத்தினான். இது அமரனுக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுத்தது. தான் படும் வேதனையை மகன் புரிந்துக் கொள்ளவில்லையே என்று அமரன் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார். இதை அறியாத சிவா, தன்…

  16. சிறுகுறிப்பு: அதென்ன இதுக்குமட்டும் தலைப்பில ஒட்டகம் இல்லாமலுக்கு நம்ம தலையின்ரை பெயரை இப்படியா இருட்டடிப்புச் செய்கிறது என்று ஒட்டகத்தார் ரசிகர் வட்டத்தில பலரும் அன்பாய் கடிந்துகொண்டதில் பெயரைமட்டும் மாற்றியிருக்கிறன் மற்றும்படி மத்தியஸ்தம் நடந்தது நடந்தபடி அப்படியேதான் இருக்கு. ... படிக்காதவை தொடர்ந்து படியுங்கோ. படிச்சவை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ. ஒட்டகத்தைத் தேடிய காவல்துறை............உடன் ஒரு சில நாட்களில் சந்திக்கிறன். நாசமாப்போன நாணல் கயிறுவிடுறான் என்று திட்டுறது காதில விழுகிறது. இனியும் கதைச்சுக்கொண்டு நின்றால் வம்பாய்ப் போய்விடும். பிறகு சந்திப்பம்.............. பயத்தில் ஓட்டமுடன் நாணல் எனக்கும் ஒட்டகத்திற்கும் இடையில்.. …

    • 2 replies
    • 1.2k views
  17. Started by nunavilan,

    பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம் முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு. உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம், சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும், மேல், ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக் கொண்டே வந்து …

  18. இறுதி வணக்கம் - சயந்தன் நான் பார்த்த கணத்தில், வளவன் தன் காலின் கீழே, பச்சைநிற ஈரலிப்பான முதுகில் கருமை நிறப் புள்ளிகளைக் கொண்ட தவளையின் மீது, கையில் ஏந்தியிருந்த உடைந்த கொங்கிறீட் கல்லை நசுக் என்று போட்டான். புளிச் என்ற சத்தம் கேட்டது போலிருந்தது. நான் ஒருவித அசூசையான உணர்வில் ஆட்பட்டு கண்களை மூடி பற்களைக் கடித்தேன். வளவனுக்கு ஆறு வயதும் முழுதாக நிரம்பியிருக்கவில்லை. அவன் எனக்கு மருமகன் முறை, அக்காவின் மகன். பற்றிப்பிடித்திருந்த கை தளர்ந்தால் எந்நேரமும் இடுப்பில் வழியத் தயாராயிருந்த ஒரு தொளதொளத்த காற்சட்டையை மட்டும் அணிந்திருந்தான். உருண்டையான முகத்தில், அலட்சியமான பெரிய கண்களோடு காலையிலிருந்து அவன் வளவு முழுவதும் திரிகிறான். நான் அவனுக்குப் பின்னாலேயே அலைகின்றேன். …

    • 2 replies
    • 1.5k views
  19. நாம் வாழும் உலகுக்கு அடியில் வெகு ஆழத்தில் உள்ள இன்னொரு உலகம், குரூரத்தால், வலியால், சிறுமையால் எழுதப்பட்டது இது, மானுடம் என்ற மகத்தான சொல்லின் நிழல், ஒரு கோணத்தில் நமது நமது அனைத்து செயல்பாடுகளையும் மௌனமாக அடிக்கோடிடும் கருமை. சரளமும் நுட்பமும் கொண்ட மொழியில் நேரடியாகச் சொல்லப்படும் இந்நாவல் , நம் வாழ்வு குறித்தும் நம் பண்பாடு குறித்தும் மிக அந்தரங்கமாக நாம் எழுப்பிக்கொள்ளச் சாத்தியமான எல்லா வினாக்களையும் நைச்சியமாகத் தூண்டக்கூடியது. இதை படிக்கும் நாம் தான் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? என நிச்சயம் உணரவைக்கும். தப்பித் தவறி இந்த இழி நிலை நமக்கு வந்திருந்தால்? நம் உறவினருக்கோ, நண்பருக்கோ ஏற்பட்டிருந்தால்? ஐயகோ!!!! ஏழாம் உலகம்- ஜெயமோகன் த…

  20. கடலில் இருந்து வீசிய உப்புக்காற்று உடலுக்கு இதமாகவும் மனசுக்கு சுகமாகவும் இருந்தது. கடற்காற்றை அளைந்தபடி வண்டி பாலத்தின்மீது சென்றது. ஆயத்தடியில் நிறுத்தும்படி குரல் கொடுத்தேன். என்னுடைய பத்தொன்பது வயது மகனும் கூடவே இறங்கிக் கொண்டான். மகளும் மனைவியும் வண்டியிலே வீடு நோக்கிய பயணத்தை தொடர்ந்தார்கள். கைதடியையும் கோப்பாயையும் இணைக்கும் பாலத்தின் கைதடி அந்தலைக்குப் பெயர் ‘ஆயம்’. கடலின் கைதடிக் கரையோரமாக கோடைகாலத்தில் பெருமளவு உப்பு விளைந்திருக்கும். இந்த உப்பினை அறுவடைசெய்தோரிடம் அந்தக் காலத்தில் வரி அறவிடப்பட்டதாம். அந்தக்காலம் என்பது ஆங்கிலேயர் ஆண்டகாலம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை ‘ஆயத்தீர்வை’ என அழைக்கப்பட்டதாகவும், அது வ…

  21. புலரியில் மறைந்த மஞ்சள் கடல் – ப.தெய்வீகன் மயானத்துக்குப் பின்னாலிருந்த மஞ்சள்நிற கடுகு வயலிலிருந்து வந்த காற்று கருங்கல் மதிலின் மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்தது. அந்தியின் சூரியக்கதிர்களில் அசைந்துகொண்டிருந்த பெருமரங்களில் மோதியது. படர்ந்துநின்ற கொரம்பியா மரங்கள் சின்னதொரு ஆட்டத்தோடு அசைவை நிறுத்திக்கொண்டன. கல்லறைகளுக்கு அருகில் வரிசையாக நின்ற எப்கரிஸ் பூக்கள் தங்கள் இதழ்களை தரையில் சொரிந்தன. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சித்திர வட்டக்கற்களுக்கு கீழே பிறப்பும் இறப்பும் இரங்கற் கவிதைகளும் பதித்த கல்லறைகளின் மீது சில இலைகள் பறந்துசென்று விழுந்தன. நான் அந்த மயானத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்த கல்குடிசைக்கு முன்னால் வேலைக் களைப்போடு அமர்ந்திருந்திருந்து எச்சிலில் மு…

  22. தாய் மனம் - வனிதா "டேய் கணேசா... இன்னும் வேலைக்கு கிளம்பல? உனக்கு சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன், எடுத்துட்டு போடா. வேல முடிஞ்சதும் ஊர சுத்தாம வீடு வந்து சேரு. சரி... நான் கிளம்பறேன் நேரமாச்சு, கொஞ்சம் நேரமானாலும் அந்தம்மா கத்தும்." என்று அவசர அவசரமாக கிளம்பினாள் ரேவதி. "அம்மா..." "என்னடா..." "இன்னைக்கு தான் அண்ணனுக்கு கல்யாணம்... அண்ணன் துபாயில் இருந்து வந்திருக்குமில்லம்மா...." "நீ வேலைக்கு கிளம்பு. நேரமாச்சு" என்று சொல்லி வாசலுக்கு வந்தாள். செருப்பை போட போகும் போது தான் நினைவுக்கு வந்தது, நேற்றே அது அறுந்து போனது. "அட... இதை தெச்சு வாங்க நினைச்சேன், மறந்து போச்சு. செருப்பில்லாமலே நடக்க ஆரம்பித்தாள். நினைவுகள் பல மனதில் ஓடியது.…

  23. வான்கோழி நடனம் - ரஸவாதி அவுஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட கார் ஓடும் தூரத்தில் “ரறல்கன்” நகரம் இருக்கின்றது. நகரம் என்று சொல்ல முடியாது. அதி அற்புத கிராமம். அங்கேதான் அந்த எழுத்தாளர் தனது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் இறந்தபொழுது மனைவி அவருடன் இருக்கவில்லை. அவர் ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்பதாக இலங்கை போய் விட்டார். அவரின் இறப்பைப் பரிசோதித்த வைத்தியர்கள் ‘இயற்கை மரணம்’ – அடல்ற் டெத் என்று வாக்குமூலம் சொன்னார்கள். அவருக்கு ஏகப்பட்ட வருத்தங்களும் மனவருத்தங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் அவரது மனைவி தனது கணவனின் இறப்பில் சந்தேகம் இருக்கின்றது என்று இலங்கையில் இருந்தபடி தெரிவித்தார…

  24. வாடைக்காற்று வாடைக்காற்று நாவல் .pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பிணை அழுத்தி வாசியுங்கள். (இணைப்பு தரவேற்றம் செய்ய சிறிது நேரம் எடுக்கும்) http://noolaham.net/project/167/16603/16603.pdf நந்திக்கடல் நந்திக்கடல் நாவல் .pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பிணை அழுத்தி வாசியுங்கள். (இணைப்பு தரவேற்றம் செய்ய சிறிது நேரம் எடுக்கும்) http://noolaham.net/project/172/17152/17152.pdf

    • 2 replies
    • 1.5k views
  25. நமலி போல் வாழேல் - சிறுகதை விநாயக முருகன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி வீட்டுக்கு வெளியே வரும்போது, தெருவில் பட்டாசுக்குப்பைகள் மிதந்துகொண்டி ருந்தன. மழையிலும் மக்கள் தீபாவளியை எப்படியோ கொண்டாடியி ருந்தார்கள். மீண்டும் ஒரு பெருமழை வரும் என்று தோன்றியது. கவலையுடன் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன், ஏதோ சத்தம் கேட்டு அங்கு நின்றிருந்த காரைத் திரும்பிப் பார்த்தேன். முதலில் பார்க்கும்போது, காருக்குக் கீழே துணிமூட்டை போலத்தான் தெரிந்தது. என்னைப் பார்த்து விருட்டென அது வெளியே வந்ததும்தான் நாய் என்று உணர்ந்தேன். பயத்தில் அனிச்சையாக எனது கால்கள் பின்னால் நகர, படிக்கட்டில் ஏறி நின்றுகொண்டேன். அவ்வளவு பெரிய உயரத்தை எப்படிக் குறுக்கி, அந்த காருக்கு அடியில் …

    • 2 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.