கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சவுக்கம் - உமா வரதராஜன் பிரான்சிஸ் என்னை அழைத்து வருமாறு ஒரு போலீஸ்காரனை அனுப்பியிருந்தார் . ”தையல் மெஷினில் ஏதாவது கோளாறா ?” என்று அவனைக் கேட்டேன் . ”அப்படி எதுவும் சொல்லவில்லை ” என வந்தவன் சொன்னான் .அவனுடைய சலனமற்ற முகத்தில் எதையும் என்னால் படித்தறிய முடியவில்லை .ஒரு வேளை மரணம் தன் கண்முன்னால் நின்று வெறிக்கூத்தாடிச் சென்ற திகைப்பிலிருந்து இப்போது வரை மீளாமல் அவன் பேதலித்துப் போயிருக்கலாம் .ஏதோ ஒரு தூணின் பின்னால் அல்லது மண்மூடைகளுக்குப் பின்னால் அல்லது பொலிஸ் நிலைய வளவினுள் நின்ற முறுக்கேறிய பெரிய மரங்களில் ஒன்றின் பின்னால் அல்லது கழிப்பறைக்குள் மறைந்து நின்று தன்னைத் தற்காத்துக் கொள்ள கண்டமேனிக்கு சுட்டுத் தள்ளியிருக்கலாம் . எல்லா ஓசைகளும் ,புழுதியும் அடங்கி…
-
- 0 replies
- 1.5k views
-
-
பட்டணம் தான் போகலாமடி..! சென்னையில் அடுக்கு மாடிகளாகும் மனைகள்... சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும் துடிப்பான இளைஞன். ஒருநாள் தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப் போகிறேன். 5 லட்சம் பணம் தாருங்களப்பா..” என்று தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு அவர்,”இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை! அதற்குள் என்ன அவசரம்?” என்றார். "இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம். பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது" என்றான். யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி, உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம்.திடீரென்று 5…
-
- 1 reply
- 1.5k views
-
-
வாழ நினைத்தால் .................. வாழ்கை என்று நினைக்கும் போது எம் முன்னே வா ........என்கிறது ,பின் வாழ் .......என்கிறது அதற்கும் பின் வாகை அதாவது வெற்றி வாகை சூடி நீயும் வாழு என்கிறது .என்ன அழகான தத்துவமுத்துக்கள் . அவனும் வாழ தான் நினைத்தான் . ராகவனுக்கு வயது நாற்பது .வைத்திய சாலைக்கே உரிய அந்த நெடி ...அவனுக்கு பழக்கமாகி இருந்தது, முழங்கால் சத்திர சிகிச்சைக்காக படுத்து இருந்தான், அவன் மனம் பலவாறு சிந்தித்தது .தனிமையும் அமைதியும் மனதின் ஆழத்தை ஆராய சிறந்த இடம் என்பார்கள். அன்பான மனைவியும் மகனும் வீடில் , அவள் வர மாலை ஐந்து மணியாகும். இவனுக்கு மறுபக்கத்தில் உள்ள கட்டிலில் நேற்று இரவு ஒரு விபத்து ,சம்பவதுக்காக் ஒருவனை அனுமதித்து …
-
- 6 replies
- 1.5k views
-
-
வாசித்ததில் பகிர விரும்பியது அரசியல் புத்தர்: த.அகிலன் (ஆனந்த விகடனுக்காக) புத்தர் ஒரு சுவாரஸ்யமான ஆள்தான். அவரை எனக்கு நல்லாப் பிடிக்கும். யசோதராவை நித்திரையாக்கிப்போட்டு, நைஸா பின் கதவு வழியா எஸ்கேப்பாகும்போது புத்தர் நினைச்சிருப்பார், 'இண்டையோட இந்த அரசியல் சனியனைத் துறக்கிறேன்' என்பதாய். ஆனால், விதி யாரைவிட்டது? புத்தர் அரசியலைவிட்டுப் பேரரசியலை உருவாக்கிவிட்டார். ஆனாலும் புத்தர் அறியார், அழகும் சாந்தமும் நிரம்பிய தனது உருவம் வெறும் எல்லைக் கல்லாகச் சுருங்கிவிட்டதை. இன்றைக்குப் புத்தர் சிலை என்பது இலங்கையில் எல்லைக் கல். விகாரை என்பது காவல் கொட்டில். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு கையாலாகாதவராக புத்தர் சிரித்துக்கொண்டு இருந்தாலும், நான் அவரைப் பெரிதும் வி…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஆறாயிரம் சதுர அடியில் அமைந்த தனது பிரமாண்ட பங்களாவின் போர்ட்டிகோவில் சாய்மர நாற்காலியில் அமர்ந்து இங்கிலீஷ் பேப்பரை வரி விடாமல் மேய்ந்துகொண்டிருந்தார் ராஜமன்னார். பக்கத்து காலி இடத்தில் புது பங்களா உருவாகிக் கொண்டிருந்தது. ஏழடி மட்டம் கட்டிடம் உயர்ந்திருக்க, லிண்டல் கான்க்ரீட் போட்டுக் கொண்டிருந்தார்கள். பணியாட்களின் சத்தம், மேஸ்திரியின் புலம்பல்... இதற்கு நடுவே சித்தாள்களின் பீடி புகை நாற்றம்... வாடை குமட்டியது ராஜமன்னாருக்கு. ‘கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் பொது இடத்தில் புகை பிடிக்கிறானே! கூப்பிட்டுக் கண்டித்துவிட வேண்டியதுதான்’ - தீர்மானத்தோடு அவர் எழுந்திருக்க, அப்போது அவர் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்ட்டிகோவில் வந்து நின்றது அரசு அலுவலக கார் ஒன்று. …
-
- 1 reply
- 1.5k views
-
-
பொன்மனசசெம்மல் எம்ஜிஆர் அவர்கள் லணடன் வாணெலியில். தமிழீழ மக்களின் நெஞ்சங்களை ஆக்கிரமித்க்குடிகொண்ட மக்கள் திலகத்தின் பேட்டி நன்றி சின்னக்குட்டி பேட்டியைக் கேட்க http://sinnakuddy1.blogspot.com/2010/01/mgr.html
-
- 0 replies
- 1.5k views
-
-
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு .... ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை பய…
-
- 1 reply
- 1.5k views
-
-
நிமிடக்கதை: நல்லா கதை விடுறாங்க! இன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது. அதற்குள் புடவை மாற்றி, முக டச்சப் செய்து, லேசாக வெள்ளை தெரிய ஆரம்பித்த முடி ஆரம்பங்களைக் கறுப்பு மை இட்டு மறைத்து... படப்படப்போடு கையும் படபடத்தது. "நந்தினி, அம்மா நந்தினி.... நெஞ்சு கரிக்குது, இருமல் நிக்காம வருது பார்...கொஞ்சம் சுக்கு வெல்லம் தட்டிப்போட்டு சுடு தண்ணீ எடுத்தா...." உள் அறையில் இருந்து கேட்டது குரல். அலங்காரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள். "என்ன நந்தினி...ரெடியா? மசமசன்னு சமையல் அறையிலே நிக்குற. நேர…
-
- 0 replies
- 1.5k views
-
-
நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ் போதனா வைத்தியசாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற அந்தக் காலை வேளை.. சாரண இயக்கத்தின் பணியின் நிமித்தம்.. நானும் அங்கு. அங்கே இருந்த ஒரு வாங்கில்.. அந்த அம்மா. கவலை தோய்ந்த முகம். முடி கலைந்து முகத்தில் படர்ந்திருக்கிறது. அழகான அந்த நெற்றில் இருந்த குங்குமப் பொட்டுக் கலைந்து வியர்வையில் கலந்து வழிந்து நெற்றியில் குங்குமக் கோடுகள். பார்க்க கவலையாக இருந்தது. என்ன தான் பிரச்சனை என்று கேட்பமே.. ஏதேனும் உதவி தேவைப்படுமோ என்று நினைத்து அணுகினேன் அந்த அம்மாவை. ஏம்மா.. இப்படி தனிய யோசிச்சிட்டு இருக்கிறீங்க. என்ன முகம் எல்லாம் வாடிப் போய் சோகமா இருக்கு. என்ன பிரச்சனை.. ஏதேனும் உதவி தேவையாம்மா.. என்று பேச்சுக் கொடுத்தது தான் தாமதம். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்…
-
- 7 replies
- 1.5k views
-
-
காதலின் விலை எனக்கு ஒரு அண்ணாவும் அக்காவும் இருந்தார்கள்.அண்ணாதான் மூப்பு . அக்காவைவிட எனக்கு பத்து வயது குறைவு.அதனால் நான் வீட்டில் சின்னப்பிள்ளை.எனது அப்புவும் அம்மாவும் பெரிதாக படித்திருக்கவில்லை.எங்களையும் பெரிய படிப்பு படிக்கோணும் என்ற நினைப்பும் அவர்களிடம் இருக்கவில்லை.அப்பு தோட்டம் தான்.வருசத்தில ஒருக்கா வயலும் விதைக்கும்.வீட்டில பஞ்சம் இல்லை. ஆனால் அப்பு சரியான பிடிச்சிறாவி. அண்ணனுக்கும் அந்தக்குணம் தொத்தினதோ பிறப்பிலேயோ வந்ததோ தெரியவில்லை. அம்மா ஒரு பாவி. அப்புவுக்கு சரியான பயம். நான் விரும்பி கல்யாணம் கட்டினதால அப்புவும் அண்ணாவும் சேர்ந்து என்ர வீட்டுத்தொடர்பை அறுத்துப்போட்டாங்கள். என்ர மனுசிக்கும் தாய் மட்டும்தான் இருந்தது. அதுவும் தொண்ணூற்றி ஒன…
-
- 15 replies
- 1.5k views
-
-
போராளிக் கணவனோடு மகளையும் பிரிந்த அவலம் **பிரபாஅன்பு** அக்கா என்ன சொன்னாலும் ஓம் என்று கேட்டு மறுப்பு சொல்லாது கேட்டுக்கொண்டிருப்பவள்தான் நான்,போராட்டமும் அழிஞ்சு போச்சுது கட்டிய கணவனும் இல்லை. சிறு பிள்ளைகளோடு நான் கஸ்ரப்படுகிறேன் என்றுதான் அக்கா இப்படியொரு முடிவெடுத்தா என்பது புரிகிறது.ஆனால் பெண் பிள்ளைகள் இருவரை வைச்சிருக்கிற நான் இப்படிஒரு முடிவெடுத்தது சரியா..? பிழையா என்பதற்கு அப்பால் என் கணவனோடு நான்வாழ்ந்த நினைவுகள் இன்னும் ஈரம் உலராமலே பசுந்தளிராக இருக்கும்போது எப்படி இன்னொரு வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியும்..? உடலும் உள்ளமும் ஒருவனுக்கு என்று மட்டும் நினைத்து வாழ்பவள்தான் நான்,அதுவும் போராடப்போய் மண்ணின் விடிவிற்காக இலட்சியத்தோடு இறுத…
-
- 2 replies
- 1.5k views
-
-
கம்பமதயானை* ‘எத்தனையளவு உள்ளே போகிறேனோ அத்தனை பசுமை மலைகள்.’ டானடா சண்டூகா (ஜென் கவிதைகள்) – தமிழில்: ஷங்கரராமசுப்பிரமணியன் கண்ணுக்கெட்டிய உயரம் வரை மலையை இருள் சூழ்ந்திருந்தது. பெளர்ணமி நிலவின் வெளிச்சத்தைக் குடித்துக்கிறங்கிப்போயிருந்த மந்தமான இருள். வண்டாரி, பழையூ, செம்பட்டி, அத்திபட்டி ஊர்களிலிருந்து துணைக்கு வந்திருந்த ஆள்களுடன் செல்வராஜும் ஜோதியும் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். மஹாலிங்கத்தின் தரிசனத்துக்காகச் சாரை சாரையாக மக்கள் தாணிப்பாறை வழியாய் வந்துகொண்டிருந்தாலும் சாப்டூர் சுற்றின கிராமத்து மக்களுக்கு இன்னும் இதுதான் குறுக்குப் பாதை. தாணிப்பாறையிலிருந்து செல்வதைவிடவும் தூரம் குறைவுதான். ஆனால், ஏறி இறங்கக் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
டிப்ஸ் தர்மம்! வ ழக்கமாக புதன்கிழமையன்று எனக்கும், மேனேஜருக்கும் ஃபீல்ட் வொர்க் நாள் முழுவதும் இருக்கும். இந்த மேனேஜர் புதியவர். பத்து மணி சுமாருக்கு ஓட்டல் ஒன்றில் இரு வரும் டிபன் சாப்பிட்டோம். பில்லை வைத்த சர்வர் தலையைச் சொறிந்தான். வேறென்ன, டிப்ஸ் வேண்டுகோள்தான்! பர்ஸை எடுத்த என்னைத் தடுத்த மேனேஜர், ‘‘என்னப்பா... சம்பளம் வாங்கா மலா வேலை செய்யறே? போ, போ!’’ என மறுத்து விட்டார். எனக்குச் சங்கடமாக இருந்தது. இவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்கள் ஜஸ்ட் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் விஷயங்களில் இப்படிக் கடுமையாக நடந்துகொள்கிறார்களே என்றிருந்தது எனக்கு. இருந்தும் என்ன செய்வது... ஒன்றும் சொல்ல முடியாது. மேனேஜராச்சே! மதிய சாப்பாட்டுக்கு இன்னொரு ஓட்டல். சொல்லிவைத்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள். இவன் ஒருவன் எந்த வ…
-
- 5 replies
- 1.5k views
-
-
அன்று வெள்ளிகிழமை அலுவலகத்தில் கண்ணன்,ராதாகிருஷனன்,பழனியாண்
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரபஞ்ச கானம் – மௌனி அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது. அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான். சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்நாடகத்திற்காக youtubeஇல் வந்த சில பின்னூட்டங்கள் 1.எமது கலைஞர்களின் வலியை சொல்லும் ஒரு அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் மன்மதன் பாஸ்கி மற்றும் சிறி சித்தப்பா.ஒவொரு ஈழத்து கலைஞனின் கஷ்டங்களையும் அற்புதமாக காட்டியுள்ளீர்கள்.வாழ்க உங்கள் கலைப்பணி .எனது சிறு கருத்து இசையில் கூடிய கவனம் செலுத்தி இருக்கலாம்.உண்மையான ஒரு விடயத்தை வழங்கியமைக்கு நன்றிகள் 2.அருமை பாஸ்கி! உங்களைப்போன்ற யதார்த்தமான கலைஞர்கள் எங்கள் சமூகத்துக்கு மிக மிக அவசியம். நகைச்சுவையாக அதேசமயம் சிந்திக்க வைக்கும் அற்புதமான படைப்பு. மனம் நிறைந்த வாழ்த்துகள்! தொழிநுட்பத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் மிக மிக அபாரமாக இருக்கும். எதிர்காலத்தில் கவனிக்கவும்! 3.ஸ்ரீ அண்ணா மிகவும் அருமையா …
-
- 2 replies
- 1.5k views
-
-
வார்த்தை தவறிவிட்டாய்.... அவரை யோகண்ணை என்றே அழைப்பேன். ஆனால் கற்பூர பக்ரரி யோகண்ணை என்ற பெயரில்தான் அவர் ஊரில் எல்லோராலும் அறியப் பட்டிருந்தார். ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் அவர் செய்த செயல் ஒன்று ஊரில் பலரை வியக்க வைத்திருந்தது. யோகண்ணை இளமையான காலத்தில் நண்பர்களுடன் கூத்தடித்திருக்கிறார். கும்மாளம் போட்டிருக்கிறார். சுருக்கமாகச் சொல்வதானால்இ சாதாரண இளைஞனுக்கு உள்ள அத்தனை சுபாவமும் கொண்டிருந்தார். யோகண்ணையின் நெருங்கிய நண்பனான பாலா சிங்களப் பகுதி ஒன்றில் அரச உத்தயோகத்தில் இருந்தார். ஒருநாள் ஒரு சிங்களப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். அவளை திருமணம் செய்வதாகச் சொல்லியே பாலா ஊருக்கு அழைத்து வந்திருந்தார். ஆனால் நடந்ததோ வேறு. அவளை நண்பர்களுக்கு விருந்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆசை ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்…
-
- 4 replies
- 1.5k views
-
-
வெந்த புண்ணில்... பிராங்போட் விமான நிலையத்தில், இலங்கையிலிருந்து புறப்பட்ட விமானம் தரை இறங்கிவிட்டதற்கான அறிவிப்பு மின்திரையில் எழுத்தில் ஒடீக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்த ஜெகன் 'எல்லாப் பரிசோதனையும் முடிந்து பயணிகள் வெளியேற ஒன்றரை மணித்தியாலங்களாவது செல்லும்' என்ற கணிப்பில், குட்டி போட்ட பூனைமாதிரி அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தான். இதனை அவதானித்த, விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் ஜெகனின் அடையாள அட்டையை வேண்டி, பரிசோதித்து, அதனைக் குறிப்பெடுத்த போது, ஜெகனுக்குப் பயம் ஏற்பட்டதுடன். அவனது இதயம் மேலும் படபடக்கத் தொடங்கியது. இந்நிலையில், சிறிது நேரம் செல்ல, பயணிகள் வெளியேறியபோது, தான் அழைத்துச் செல்ல வந்த ஆள் அதற்குள் வருகிறாரா என்று அவதானித்துக…
-
- 11 replies
- 1.5k views
-
-
ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ! எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும். அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்? ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன். உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வாழலாம். எப்பவாவது அதைப்பற்றி யோசிச்சனிங்களே? இன்றைக்கு நேற்றே! முதன்முதலா அரும்பின மீசையைத் தினத்துக்கும் நூறுவாட்டி கண்ணாட…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஸ்டீயரிங் வீல் சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அந்தப் பாதை, வண்டிக்குப் பழகிப்போன ஒன்று. அவள் ஸ்டீயரிங் வீலில் கையை வைத்திருக்கக்கூடத் தேவை இல்லை என்று தோன்றும். தினமும் காலை 7 மணிக்கு அவள் அமர்ந்து, காரேஜ் பொத்தானை அமுக்கி அது திறந்துகொண்டதும், வண்டி சிலிர்த்துக்கொண்டு தன்னிச்சையாகக் கிளம்புவதுபோல இருக்கும். வேடிக்கை... அதற்கும் ஓர் ஆன்மா உண்டு; உணர்வு நிலை உண்டு என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அவள் சோர்ந்திருந்தால், அது வண்டியையும் தொற்றிக்கொள்ளும். லேசில் கிளம்பாது. ஆனால் கிளம்பிவிட்டால், பாதி வழியில் என்றும் நின்றது இல்லை. சரியாக அவள் வீட்டை அடையும் வரை காத்திருக்கும். பிறகு ஆளைவிடு என்பதுபோல பெர…
-
- 1 reply
- 1.5k views
-
-
அனிதாக்களின் காலனிகள்! நட்பு காதலாக மலரலாமா? பார்த்த உடனே வரும் காதலைக் காட்டிலும், பழகிப் பார்த்து வரும் காதல் நிலைக்கும்தானே என்பது பேசிப் பேசி தீர்த்தாலும், இன்றும் விவாதத்துக்கு உரியதாகவே இருக்கிறது. என்னைக் கேட்டால், தோழி காதலியாவது ஆகச் சிறந்த வரம் என்றுதான் சொல்வேன். ராஜா - ஜெனி காதல் அப்படிப்பட்டதுதான். மிகச் சிறந்த காதலர்களாக, தம்பதிகளாக அவர்கள் வாழ்வதை ரசித்துக்கொண்டே இருக்கலாம். எந்த மிகைத்தன்மையும் இல்லாமல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள். அவர்கள் வாழ்வதைப் பார்க்கும்போது நமக்கும் காதலிக்கத் தோன்றும். 'எப்போ பார்த்தாலும் அடுத்தவன் காதலைப் பத்தியே சொல்றியேப்பா. உன் …
-
- 0 replies
- 1.5k views
-
-
தேவதையைத் தரிசித்த மனிதன் ஜீ.முருகன், ஓவியங்கள்: செந்தில் “அவரின் இறுதித் திரைப்படமாக ‘ரயில்’ இருந்திருக்கலாம்” என அவன் சொன்னான். இத்தகவல் எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி ஒரு படத்தைக் குறித்து அவருடைய பேட்டிகளிலோ, அவரோடு பணியாற்றிய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களின் பேட்டிகளிலோ, கட்டுரைகளிலோ, வேறு வகைகளிலோகூட, படித்ததாகவோ கேள்விப்பட்டதாகவோ ஞாபகம் இல்லை. ஜெர்மன் கலைஞரான இ.டி.எ.ஆஃமேனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு ‘ஆஃப்மேனியானா’ என்ற படத்துக்குத் திரைக்கதை எழுதியும் அவரால் இயக்க முடியாமல் போனது தெரியும். ஆனால் இது? முழு அளவு இஞ்சித் தேநீர் நிரம்பிய கோப்பையை, காலி கோப்பை ஒன்றால் தாங்கிப் பிடித்துச் சுவைத்தபடி, அவன் அந்…
-
- 0 replies
- 1.5k views
-