கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
'என் ஞாபகப்பதிவிலிருந்து - தியாகி திலீபன்' ஒரு பேப்பருக்காக சுதந்திரா எழுதிய பதிவு http://www.orupaper.com/issue55/pages_K__34.pdf
-
- 6 replies
- 2.3k views
-
-
லைலா Print this Page - ஷோபாசக்தி இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் போது எந்த இடத்திலாவது நீங்கள் ஒரு புன்னகையைச் செய்தால் இந்தக் கதைசொல்லியின் ஆன்மா வக்கிரத்தால் நிறைந்துள்ளதாக அர்த்தம். அல்லது புன்னகை செய்த உங்களது ஆன்மா அவ்வாறு சிதைந்து போயிருக்கலாம். ஒருவேளை நம்மிருவரது ஆன்மாக்களுமே வக்கரித்துப் போயிருக்கவும் கூடும். பிரான்ஸின் தற்போதைய அதிபர் நிக்கோலா சார்க்கோஸி நான்கு வருடங்களிற்கு முன்பு தனது தேர்தல் பிரச்சார உரையின்போது பாரிஸின் புறநகர்ப் பகுதியான ‘ஸெயின் துறுவா மூலி’ன் பெயரைக் குறிப்பிட்டு, தான் பதவிக்கு வந்தால் அந்தப் பகுதியைச் சுத்திகரிக்கப் போவதாகச் சொன்னார். அந்தப் பகுதியில்தான் நான் கடந்த பத்து வருடங்களாக இருக்கிறேன். உண்மையிலேயே …
-
- 60 replies
- 5.6k views
-
-
துபாய் ரிட்டர்ன் அதிகாலை வந்த குறுஞ்சேதி. “மச்சி இன்று துபாயிலிருந்து சென்னை வருகிறேன். மாலை 8 மணிக்கு வந்துருவேன்...” படித்தபின் அதற்கேற்றவாறு எல்லா வேலைகளையும் முன்னதாக முடித்துவிட்டு மதிய அலைச்சலுக்குப்பின் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு மாலை 6 மணிக்கு எழுந்து பார்க்கையில் 7 மிஸ்டு கால்கள். பெரும்பாலும் அறிமுகமில்லாத எண்களின் கால்களை எடுப்பதில்லை. சரமாரியான மார்க்கெட்டிங் கால்கள் தொந்தரவின் உச்சம். தெரிந்த எண்களுக்கு மட்டும் பதிலளித்து பேசிவிட்டு குமரகம் டீக்கடையில் தஞ்சம். நான்கு ரோடும் வெட்டிக்கொள்ளும் கார்னர் அது. ஹாரன் சத்தங்கள் நொடிக்கொரு முறை காதைப் பிளக்கும். இருந்தாலும் பீட்டர் அண்ணனின் ஸ்ட்ராங்கான இஞ்சி டீக்காக எதையும் பொறுத்துக் …
-
- 2 replies
- 958 views
-
-
இது கதையா? அல்லது கடிதமா என்பதற்கு அப்பால், பேசப்படும் பொருள், தற்போதைய ஈழத்து நிகழ்வுகள் தனிமனிதர்களிடம் ஏற்படுத்தும் உணர்வோட்டாங்கள் என்பவற்றை திறம்பட எழுத்தில் வடித்திருப்பதாக நான் கருதுகிறேன். ஈழத்தில் ஏற்படும் போரியல் மாற்றங்கள் ஏன் ஒருவரை மனதளவில் துவண்டுவிடச்செய்கிறன, ஏன் அதீத மகிழ்ச்சியில் திழைக்கச்செய்கிறன என்பதை தமிழ்நதி சொல்லியிருக்கிறார். அன்பு நித்திலா, நலம். போர்சூழ்ந்த இந்நேரத்தில் நீயும் அவ்விதம் இருப்பாயென்றே இன்னமும் நம்புகிறேன். “இப்போது எங்கே இருக்கிறாய்…?”என்ற கேள்வியுடன் தொடங்கி எனது நாடோடித்தன்மையைக் குறித்துப் பரிகசித்திருந்தாய். ‘நான் உன்னுடன் தான் இருக்கிறேன்’ என்று நாடகத்தன்மையுடன் பதிலளிக்கவே விருப்பம். அக்கணத்தில் பொங்கும் நெகி…
-
- 6 replies
- 1.7k views
-
-
ஒருநிமிடக் கதை : கடனே வேணாம்! ஒருக்களித்து மூடி இருந்த கதவை லேசாகத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. சத்தமில்லாமல் கதவைச் சாத்தினாள். உள்ளே பெரியவர் நிறுத்தி நிதானமாக மூச்சிழுத்துக் கொண்டிருந்தார். கண்கள் மூடியபடி இருக்க, அது தூக்கத்தையோ, மயக்கத்தையோ காட்டின. பக்கத்து ஸ்டூலில் அமர்ந்தபடி கதவை மறுபடியும் பார்த்து உறுதி செய்து கொண்டாள். கைப்பேசியை கைப்பையிலிருந்து எடுத்து ஆன் செய்தாள். டிடிங் என்று அது ஆன் ஆகிற ஓசை பொன்னுசாமியின் நாயனம் கேட்டது போல் ஒரு திகைப்பை ஏற்படுத்தியது. கதவை மறுபடியும் பார்த்தாள். யாரும் வரவில்லை …
-
- 0 replies
- 1.1k views
-
-
நட்சத்திரக் குழந்தைகள் - பி. எஸ். ராமையா (மணிக்கொடி எழுத்தாளர்) ’அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா உண்டோ?’ ‘உண்டு அம்மா!’ ‘அவர் யார் அப்பா?’ ‘சுவாமி.’ ‘சுவாமியா? அப்பா! அவர் கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார்?’ ‘ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப் போல வேறு யாருக்கும் அழகு இல்லை.’ ’சுவாமி கூட உன்னைப் போல நல்லவர்தானே?’ ‘ஆமாம்’ ‘ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப.... ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே. அவா அப்பா எப்படி இருப்பார்!’ ‘அவர் ரொம்ப நல்லவர். நம்மையெல்லாம் விடப் பெரியவர்.’ ‘அப்பா! நட்சத்திரம் எப்போ பிறக்கும்?’ ‘சாயங்காலத்தில்.’ ‘எப்படியப…
-
- 0 replies
- 2.4k views
-
-
அக்கினிச் சிறகுகள் அன்று காலையிலேயே விழிப்பு ஏற்பட்ட மதுசாவிற்கு தலை பாரமாய்க் கனத்தது. நெற்றிப் பொட்டு விண்விண் என்று வலித்தது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தவள் சற்றுக் கண்ணயரவும் அனுவின் அழுகுரல் கேட்கவும் சரியாக இருந்தது. குழந்தையை அள்ளி அணைத்து பாலூட்டி மறுபடியும் தொட்டிலில் கிடத்தியவள் கோப்பி ஒன்று சூடாகக் குடித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தாள். “கோப்பி குடிக்காட்டி என்ன செத்தா போயிருவன்” மனம் வெறுமையில் துடித்தது. குழந்தை அனுவைத் திரும்பிப் பார்த்த கண்கள் குளமாகியது. எத்தனை நாளைக்குத்தான் இந்த அவஸ்தை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கணவன் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற மோகன் தினமும் வேலைக்குப் போய்விட்டு விடிந்ததும் வந்து கட்டிலில் விழுந…
-
- 1 reply
- 3.7k views
-
-
மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா? குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா? ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது! இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்.. ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்கும…
-
- 0 replies
- 816 views
-
-
பள்ளிக்குப்; போவதற்காய் புறப்பட்டுச் சென்ற செந்தூரன் அன்றைக்கும் அழுது கொண்டே திரும்பி வந்து விட்டான். அன்று தான் வேலை விடயமாக வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பி வந்திருந்த தகப்பன் “ஏன் தம்பி பள்ளிக்கூடம் போகாமல் திரும்பிட்டாய். என்ன பிரச்சினை’’ என்று ஆச்சரியத்துடனும் கவலையுடனும் கேட்டார். “மூலைவீட்டிலை இருக்கிற அந்தக் கொழுத்த நாய் நான் பள்ளிக்கூடம் போகும் போது கத்திக் கத்திக் குலைக்குது அப்பா. இப்ப ஒரு கிழமையா நான் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுப் போறதும் திரும்பி வாறதுமா இருக்கிறன்" கவலையுடன் சொன்னான் செந்தூரன். சின்னப்பிள்ளைக்கு விளங்கும் விதமாகத் தகப்பன் சொன்னார் “தம்பி அந்த நாய் படிக்க இல்லை எல்லோ. அதாலை ஆக்கள் படிக்கப் போறதைப் பாத்தால் அந்த நாய்க்குப…
-
- 9 replies
- 2.9k views
-
-
தேங்காய்த் துண்டுகள் - டாக்டர் மு.வரதராசனார் "மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே" என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்ப…
-
- 4 replies
- 9.2k views
-
-
படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ............... என் வாழ்கை பயணத்தில் ஒரு நாள் ........உங்களையும் அழைத்து செல்கிறேன் . அரச படைகளின் ஆக்கிரமிப்புக்கு சற்று முந்திய காலம் ..நானும் என் மாமா மாமியும் ,மைத்துனி ,மச்சான் ,என் இரண்டு குழந்தைகளுமாக மன்னார் பகுதிக்கு அண்ண்மையில் உள்ள திரு தலத்துக்கு புனித யாத்திரை பயணமானோம் . அக்கால மினி வசு வண்டி ,கிட்ட தட்ட இருபத்தி ஐந்து பேர் கொள்ள கூடியது. யாழ் பட்டணத்தில் ஆரம்பமாகியது . நம் பயணம் . . கடைசி நேரத்தில் ஒரு முதியவர் ஓட வருகிறார் . சரி என்று அவரை முன் இருக்கையில் அமர்த்தி பயணம் புறப்பட " சளீர் " என்று ஒரு சத்தம் . எட்டி பார்த்த போது அப்போது பிரபலமான ஆணைகோட்டை நல்லெண்ணெய் போத்தல் . பயணம் புறப்பட்ட மாதிரி தான் . பின்னால…
-
- 15 replies
- 3.1k views
-
-
நான் 2005 சமாதான காலத்தில ஊருக்குப் போயிருந்தேன்...பயணம் முடிஞ்சு திரும்பி கொழும்புக்கு வரும் போது எனக்கு ரெயினில் போக வேண்டும் என ஆசையாயிருக்குது ரெயினில் போவோம் என்று அம்மாட்ட சொன்னேன்...அம்மா சொன்னா ரெயினில் போனால் நிறைய நேரம் செல்லும்,தனக்கு காலும் எலாது வான் புக் பண்ணி கொழும்புக்கு போவோம் என சொன்னார்...நான் இல்லை என்று அடம் பிடிச்சு ரெயினில் புக் பண்ணியாச்சு. நான் பயணக்கட்டுரை எழுதலேல்ல...அம்மா சொன்ன மாதிரி ரெயின் சரியான நேரம் எடுத்தது அத்தோடு நின்று,நின்று மெதுவாய்ப் போச்சுது...அம்மாவும்,தம்பியும் என்னைப் பேசி,பேசி வந்தார்கள் நான் காதில போட்டுக் கொள்ளேல்ல வடிவாய் எஞ்ஜோய் பண்ணிக் கொண்டு வாறன் ...சொல்ல மறந்து போனேன் நாங்கள் பயணம் செய்த பெட்டி பூரா முஸ்லீம் ஆட்கள…
-
- 36 replies
- 3.2k views
-
-
இன்று நமீபியா கிளம்புகிறேன்.ஆப்ரிக்காமீது எனக்குள்ள மோகம் அ.முத்துலிங்கத்தால் உருவானது. அவரது எழுத்துக்களில்வரும் ஆப்ரிக்கா ஒரு மெல்லிய வேடிக்கை கலந்த ஓர் உலகம். ஆப்ரிக்காவுக்கு இவ்வளவு சீக்கிரமாக ஒரு பயணம் சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை. நானும் இயக்குநர் மாதவன்குட்டியும் செல்கிறோம். சென்று வந்தபின் அந்த அனுபவத்தைக்கொண்டு மலையாளத்தில் ஒரு படத்துக்கான கதையை எழுதவேண்டும். குஞ்சாக்கோ கோபன் நடிக்க மாதவன்குட்டி இயக்குகிறார். கதாசிரியர்கள் நட்சத்திரங்களாக உணரவேண்டுமென்றால் தெலுங்கில் எழுதவேண்டும் என்பார்கள். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக உணரலாம். மதியம் பன்னிரண்டு மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து கிளம்பி மும்பை.அங்கிருந்து ஜொகன்னஸ்பர்க். அங்கிருந்…
-
- 14 replies
- 2.7k views
-
-
அவன் கே.ஜே.அசோக்குமார் அவனைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை எனப் பொதுப்படையாகச் சொல்லிவிடலாம். ஆனால் அவனைப் பற்றிச் சொல்ல அதிகமும் இருக்கவே செய்கிறது என எப்போதும் தோன்றும். அவனுக்கொன்று சில கொள்கைகள், செய்கைகள், பழக்கவழக்கங்கள் என்று தனித்து உண்டு. ஆனால் அவைகளை அவன் அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. என்னை அவனிடமிருந்து பிரிப்பது இந்த ஒரு விஷயம்தான் என அவ்வப்போது நினைத்து கொள்வேன். அவனை என்னிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதபடியான அன்யோன்யம் என்றாலும் சில விஷயங்களுக்காக அவன் என்னைவிட்டு விலகிச் செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்குப் புரியாத பல விஷயங்கள் அவனுக்குப் புரிவது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் எனக்குப் புரிந்த சில விஷயங்கள் அவனுக்குப் புரியாததும்,…
-
- 0 replies
- 862 views
-
-
மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை நரன் சிறுகதை: நரன், ஓவியங்கள்: செந்தில் பழனி, சிறு வயது முதலே பெரியாண்டவர் சைக்கிள் கடையில் வேலை செய்தான். அவன் கொஞ்சம் கெந்திக் கெந்தி நடப்பான். காலையில் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கடையின் சாவியை வாங்கிவந்து கடையைத் திறப்பது முதல் கடை முன் இருக்கும் மண்ணைச் சுத்தம் செய்து நீர் தெளித்து, முந்தைய நாளில் குறை வேலையாகவிட்ட சைக்கிள்களை மீண்டும் வெளியே எடுத்து வைப்பதுவரை எல்லாமே இவன்தான் செய்வான். காலை 8 மணிக்கு முன்பே, வேலை செய்வதற்கு ஏற்ப கடையைத் தயார்செய்துவிட வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் சில சைக்கிள்கள் காற்று நிரப்பிக்கொள்ள வரும். ஆண்களின் சைக்கிள் என்றால், அவர்களையே நிர…
-
- 0 replies
- 3.9k views
-
-
பெண் ஆசையால் நடந்த கொடூரம் ! | சூலூர் சுப்பாராவ் கொலை சம்பவம் | பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திவான் பகதூர் பட்டம் பெற்ற லட்சுமிநரசிம்ம அய்யரின் பேரன் சூலூர் சுப்பாராவ் பண திமிரு, பெண் ஆசையால் போட்டோகிராபர் குருசாமி பிள்ளையை கொன்றான். ரத்தினா பாய் மேல் ஆசைப்பட்ட சுப்பாராவ் அவருடைய அண்ணன் கையால் கொல்லப்பட்டான்.
-
- 0 replies
- 3.9k views
-
-
சாப்ட்வேர் சீதை வா.மு.கோமு திரைப்படங்களில் நாம் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுவதற்கு தகுந்தாற்போல புதுமணத் தம்பதிகள் நிஜவாழ்வில் நடந்து கொள்வதில்லை தான். குளித்து முடித்து, புது டிசைனில் சேலை அணிந்து, ஈரம்காயாத தலைமுடிக்கு துண்டு கட்டி கையில் காபி டம்ளரோடு வரும் நாயகி படுக்கையில் குப்புற விழுந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தும் நம்மைப் பார்த்தும் புன்னகை சிந்துவாள். காபி டம்ளரை பத்திரமாய் டேபிள் மீது வைத்துவிட்டு குளிக்க அனுப்ப கணவனை முதுகில் தட்டி, ‘எழுந்திருங்க கதிர், இன்னும் என்ன தூக்கம்?’ என்பாள். நாயகியின் குரல் கேட்டதும் பொய்யாய் தூங்கிக் கொண்டிருந்த கதிர் படுக்கையில் உருண்டு திரும்பி நாயகியை பாய்ந்து பிடித்து தன்னோடு இழுத்து கட்டிக் கொள்வான்.…
-
- 1 reply
- 893 views
-
-
சொக்கப்பானை - கோமகன் காலம் 1987. எமது தாயகத்து காற்று வெளியிலும் , வயல் வரப்புகளிலும், வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் எமது சனங்களின் கதறலின் கண்ணீரை துடைத்து சமாதானம் பேசுகின்றேன் என்று வந்த சமாதானப்புறாக்கள் தங்கள் முகங்களை மாற்றி ஆயுததாரிகளான ஓர் இரவின் இருட்டும் காலம் பிந்திய கார்த்திகை மாதத்து பனிப்புகாரும் அந்த ஊரில் மண்டியிருக்க. அவைகளை விரட்டும் பணியை கதிரவன் எடுத்துக்கொண்டிருந்தான். அது அவ்வளவு சுலபமாக அவனுக்கு இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனது கையே ஓங்கியிருந்தது. படுதோல்வியை தழுவிய இருட்டும்மண்டியிருந்த பனிப்புகாரும் மெதுமெதுவாக அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டிருந்தன. ராமசாமிக்குருக்களின் வீட்டு மா மரத்தில் குடியிருந்த பக்கத்து வீட்டு சேவல் ஒன்று தனது முதல…
-
- 1 reply
- 1.5k views
-
-
என்ட வாழ்க்கையில் நான் கண்ட,கேட்ட,நடந்த மறக்க முடியாத சம்பவங்களை தொடராக எழுதப் போறேன்.நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சம்பவம் 1: அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக நாங்கள் அந்த புது ஊருக்கு குடி பெயர்ந்தோம்.அப்பா முதலே அந்த ஊருக்கு வந்து வீடு எல்லாம் இருப்பதற்கு பார்த்து வைத்து விட்டு வந்த படியால் நாங்கள் நேரே அந்த வீட்டுக்கு குடி பெயர்ந்தோம்.அந்த வீடு நகரத்தின் மையத்தில் இருந்தது.முக்கியமான பாடசாலைகள்,அரச வைத்தியசாலை எல்லாம் பக்கத்தில் இருந்தது.நாங்கள் இருந்த வீதியில் அண்ணாமார் தங்கி படிக்கும் விடுதி இருந்தது.அந்த விடுதியின் இரு வீடுகள் தள்ளி ஒரு அம்மாவும் அவரது வயதிற்கு வந்த மகளும் இருந்தார்கள்[அந்த அக்கா…
-
- 40 replies
- 6.7k views
-
-
பாடசாலை நாட்கள் நமது வாழ்வின் அடித்தளமாக அமைகின்றன. நாம் பள்ளியில் கற்றுக்கொள்ளும் அறிவு மற்றும் திறன்கள் நமது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், பள்ளியில் நாம் உருவாக்கும் நட்புகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். நாம் கற்றுக்கொள்ளும் அறிவு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களையும் அங்கேதான் கற்றுக்கொள்கிறோம். பள்ளியில் நாம் வெற்றி, தோல்வி, போட்டி, ஒத்துழைப்பு போன்ற பல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். இந்தப் பாடங்கள் நம்மை வலுவான மனிதர்களாக மாற்றுகின்றன. பள்ளியில் நாம் நம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நண்பர்களை உருவாக்குகிறோம். இந்த நட்புகள் நமக்கு மிகுந்த ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. பள்ளிக்காலம் என்பது பொ…
-
- 1 reply
- 822 views
-
-
என்னுடைய கடிகாரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் படையினன் மிகவும் இளமையாகவும் என்னை விட குள்ளமாகவும் இருந்தான். முகத்திலும் ஒரு அப்பாவித்தனம் தெரிந்தது. யுத்தத்தில் என்னவெல்லாம் செய்திருப்பான் என்பதை முகத்தை வைத்துக் கணிப்பது கடினமாக இருந்தது. „இதிலே ஓடுவது ஜேர்மனிய நேரமா' என்று அவன் என்னிடம் ஒரு புன்னகையோடு கேட்டான். அப்பொழுதுதான் கவனித்தேன். நான் இலங்கை நேரத்திற்கு கடிகாரத்தை மற்றாமல் விட்டிருந்தேன். ஆம் இது ஜேர்மன் நேரம்தான் என்று அவனுக்கு பதிலளித்தேன். அவன் மணிககூட்டை இன்னும் நெருக்கமாக வந்து பார்த்தான். புலம்பெயர்ந்தவர்களிடம் படையினர்கள் அன்பாகப் பேசி அன்பளிப்புகளை பெறுகின்ற செய்திகளை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். இவனும் அன்பாக வேறு இருக்கின்ற…
-
- 3 replies
- 761 views
-
-
[size=4]படுத்தவுடன், பத்து நிமிடத்தில் நித்திரைக்குப்போய் விடும், பழக்கமுள்ளவன் தான், சந்திரன். இப்போதெல்லாம், வெட்ட, வெட்டத் தழைக்கும், சூரபத்மனின் தலை தான் அவன் நினைவுக்கு வருகின்றது. வேறொன்றுமில்லை, இந்தக் கடனட்டை தான், அவனைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஏதாவது, செய்யாவிட்டால், அது பூதாகரமாகி, அவனையும் விழுங்கி விடக் கூடும், என்ற பயம் அவனை ஆட்கொண்டதில்,நித்திரை அவனிடமிருந்து நிரந்தரமாகத் தள்ளி நின்றது.[/size] [size=4]மனுசி கொஞ்சம் சந்தோசமாக இருந்த நேரம் பார்த்து,[/size] [size=4]என்னப்பா, நீர் ஒரு சீட்டுப் போட்டனீர் எல்லே! இப்ப அது முடியிற நேரம் வந்திருக்கும் தானே. அதை எடுத்து, இந்தக் கடனட்டையைக், கட்டி விடுவமே!.[/size] [size=4]கொட்டக் கூடிய கனிவு அவ்வளவையும், …
-
- 20 replies
- 2.2k views
-
-
தமிழில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்பது அருகிவிட்ட காலம். சிறுவர்களுக்கான கதை சொல்லிகள் புதிதாக இல்லை. வருபவர்களும் புதிதாகச் சொல்வதில்லை. கொரோனாக் காலத்தில் முகிழ்விட்ட ஒரு புதிய முயற்சிதான் இது. கேட்டுச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கேட்கவும் செய்யுங்கள். உங்கள் ஊக்கத்தின் திறனில் மலர் அடுத்த கதையை வெகு சீக்கிரம் சொல்வாள்.... http://www.4tamilmedia.com/videos/youtube-corner/17878-2020-04-07-21-48-23
-
- 1 reply
- 569 views
-
-
ஒரு நிமிடக் கதை: ஆத்திரம்! “இந்தாடா பிறந்த நாள் கேக். முந்நூறு ரூபாய்… மூணாவது படிக்கிற, உனக்கு இது தேவையா? நீ என்ன பெரிய மனுஷனா? உங்க டீச்சருக்கு பிறந்த நாள்னு உங்க வகுப்பில் உள்ள முப்பது பையன்களிடம் ஆளுக்கு ஒரு ரூபாயா முப்பது ரூபாய வசூல் பண்ணி வைச்சுக்கிட்டு கேக் வாங்கித் தாங்கன்னு அடம்பிடிக்கிறே. முப்பது ரூபாய்க்கு கேக் வாங்க முடியுமா? இதெல்லாம் யாரு ஏற்பாடு பண்ணச் சொன்னா?” கடுப்பாகக் கேட்டார் செல்லையா. “நாங்களாகத்தான் ஏற்பாடு செய்யுறோம். எங்க கமலா டீச்சருக்கு இன்னைக்கு பிறந்த நாள்னு அவங்களே சொன்னாங்க. ‘பிறந்த நாளுக்கு நீங்க எனக்கு என்ன பண்ணப்போறீங்க?’ன்னு வேற கேட்டாங்க. அதுதான் நா…
-
- 0 replies
- 498 views
-