கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
சுகுமாரனின் முகத்தில் அன்று மகிழ்ச்சி பரவியிருந்தது! அன்றைக்குத் தான் தனது முதலாவது சம்பளத்தை, அப்பா எப்போதும் செய்வது போலவே, அம்மாவின் கையில் கொடுத்திருந்தான். அம்மாவும் அப்படியே பணத்தை வாங்கி வைத்து விடவில்லை. அதைக் கொண்டு போய்ச் சாமிப் படத் தட்டில் வைத்து, அதில் இருநூறு ரூபாவை எடுத்து, அவனிடம் திருப்பிக் கொடுத்தா. அதை உடனடியாக வாங்கிக்கொள்ளாமல், சிறிது நேரம் சிந்தித்தான். அப்போது தான், வீரகேசரிப் பேப்பரில் இருந்து, தலையைத் தூக்கிப் பார்த்த அப்பா, அவனுக்கு இன்னுமொரு நூறைக் கொடுத்துவிடன் என்று கூறினார். அவனது கண்கள், பனித்தன. இவ்வளவுக்கும் அவனது மாதச் சம்பளம் அப்போது, எண்ணூறு ரூபாய்கள் மட்டுமே. அதில் நூறு ரூபாவைத் தனது, தங்கையிடம் கொடுத்தவன், அடுத்த நாளைக்கான கொழும…
-
- 18 replies
- 1.7k views
-
-
சாபத் நாளில் மட்டும் நடேசன் ( ஆஸ்திரேலியா ) அவுஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து வந்த பின்னர் உணவு விடுதி, தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழகம் முதலான சில இடங்களில் பலரோடு பணியாற்றியிருக்கின்றேன். இந்தப் பணிகள் மிருகவைத்தியராக என்னை நான் இந்த நாட்டில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக இடைக்காலத்தில் மேற்கொண்டவை. இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை கவனித்தவாறு எனது துறையில் படிப்பது என்பது, கடலில் தனியாக படகைச் செலுத்தியபடி வலைவீசி மீன்பிடிப்பது போன்றது. இலங்கையில் ஐந்து பேருக்கு மேலதிகாரியாகவும் கார், மோட்டார் சைக்கிள் என வைத்திருந்து விட்டு சமையலறையில்; வேலை செய்வது இலகுவானதாக இருக்கவில்லை. சப்பாத்தி வட்டமாக போடத் தெரியவில்லை என்று ஒரு பஞ்சாபி முதலாளியிடம் ஏச்சு …
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று நீங்கள் கேட்கப்போவது அளவெட்டியில் பிறந்த நான் மீண்டும் அளவெட்டிக்கு வந்த கதை. ஊடகங்களிலை உள்ள பிடிப்பிலை, நான் கேட்ட கேள்விகளாலை (சினிமா பற்றி மடியிலையிருந்துகொண்டு அம்மா, அப்பாட்டை நாடி தடவிக்கேட்ட கேள்விகள் இன்னொரு செட் இருக்குது அதை பின்னுக்கு இன்னொரு பந்தியிலை வடிவாச் சொல்லியிருக்கிறன்.) நிலைகுலைந்து போனவை எல்லாரும் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்திச்சினம். பெடியன் ஊடகங்களிலையெல்லோ மூளையை விடுறான். பெடியன்ரை படிப்பெல்லோ கெட்டுக் குட்டிச்சுவராகப்போகுது. இங்கையிருந்தா பெடி குறுக்கை எங்கையாகிலும் போயிடும். யாழ்ப்பாணத்திலை கொண்டுபோய் விட்டாத்தான் சரியென்று முடிவெடுத்திச்சினம். யாழ்ப்பாணம் என்றால் படிப்பு, படிப்பென்றால் யாழ்ப்பாணம் என்றிருந்த பொற்காலமது. இலங்கையின் பல …
-
- 5 replies
- 611 views
-
-
மசாஜ் ம. நவீன் மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக இருந்த மசாஜ் நிலையங்களைப் பார்ப்பதுண்டு. கடும் முதுகு வலியில் அதன் போஸ்டர்களும் அறிவிப்புகளும் மசாஜ் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டினாலும் கூச்சம் வந்து தடுத்துக் கொண்டிருந்தன. நான்கு மாதங்களுக்கு முன் திரு என்னை முதன…
-
- 1 reply
- 1.7k views
-
-
வாழ்வெனும் பெருங்கனவு! - சிறுகதை லைலா எக்ஸ், ஓவியங்கள்: ஸ்யாம் 1 அந்த அமைதியான மாலைப் பொழுதில் கழிவறைக்குள் தென்னை விளக்குமாற்றால் சரசரவெனக் கூட்டிக் கழுவும் சத்தம், பள்ளியின் வராந்தா முழுவதும் ஒலித்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கேட்ட சத்தம், முழுவதுமாக நின்றுபோன சற்றுநேரத்தில் வெறும் பக்கெட்டை ஒரு கையிலும், பொருள்கள் நிறைந்திருந்த பக்கெட்டை மற்றொரு கையிலும் எடுத்துக்கொண்டு, பள்ளியின் கழிவறையிலிருந்து வெளியே வந்தாள் வித்யா. அந்த பக்கெட்களிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட, அவள் நடந்துவந்த வராந்தாவில் சிந்தவில்லை. இத்தனைக்கும் அவள் கைகளிலிருந்த அழுத்தமான பிளாஸ்ட்டிக் பக்கெட்டின் விளிம்பு பிளந்துகொண்டிருந்தது. அதில் சிறிய விரிசல் ஒன்றும் இருந்தது. அதன் …
-
- 0 replies
- 2.3k views
-
-
இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி? ஆர். அபிலாஷ் நான் எழுத வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. நான் கடைபிடிக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை இது: இலக்கியவாதிகள் அல்லது வாசகர்களுடன் மது அருந்த மாட்டேன். அல்லது நான்குக்கு மேல் இலக்கியவாதிகள் குழுமியிருக்கும் அறைக்குள் மாட்டிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் இந்த இரு சந்தர்பங்களிலும் இலக்கியவாதிகளுக்கே பிரத்யேகமாக உள்ள வெறுப்பு ஒரு ஆவி போல் வெளியே வருவதை காண நேரிடும். இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை: நம் இலக்கியவாதிகளுக்குள் கண்மூடித்தன்மான வெறுப்பு பீறிடுகிறது. இந்த வெறுப்பை யார் மீது காட்டலாம் என அவகாசம் தேடிக் காத்திருப்பார்கள். பொதுவாக யாராவது சர்ச்சையில் மாட்டினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் வந்து அவர் ம…
-
- 5 replies
- 910 views
-
-
2 ஆண்டுகளில் 9 கொலைகள்! விஷ ஊசி வழக்கு! தொடரும்
-
- 1 reply
- 1.9k views
-
-
ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிருக்கிறது. கனவின் எழுச்சி மிக…
-
- 0 replies
- 1k views
-
-
உடைந்த போத்தல்கள் ஏனோ அவள் மனம் மீண்டும் மீண்டும் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பொன் கிரகணங்களை மெதுவாக வீசி வந்த சூரியன் தன் கைகளை தென்னம் கீற்றுகளுக்கிடையில் விட்டு அவள் கன்னத்தை தொட்டதைகூட அவளால் உணர முடியாமல் இருந்தது. அருகே கொட்டிலில் கட்டியிருந்த ஆடு கட்டையில் சுற்றி சுற்றி வர அதன் சின்னஞ்சிறு குட்டிகள் இரண்டும் " ம்...மே... ம்...மே..." என்று தங்கள் கிச்சுகுரலில் தாயை கூப்பிட்டபடி பின்னே ஓடின. இவளைக் கண்டதும் ஏதாவது தீனி போடுவாளோ என்ற நினைப்பில் தன் புதிய குஞ்சுகளை "கொக்... கொக்..." என அழைத்துக்கொண்டு ஓடி வந்த அடைக்கோழி (அதுதான் அதற்கு அவள் வைத்த பேர்)அவள், அதனைக் கவனிக்காத ஏமாற்றத்துடன் அவளை தலையை சரித்து ஒரு பார்வை பார்த்த பின்னர் தன் குஞ்சுகளுடன் மீண்ட…
-
- 6 replies
- 4.3k views
-
-
என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன். வரலாற்றில் வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும் என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால் இவற்றை எல்லாம் எழுத எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை. ஏனெனில் இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன். நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான். எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன். இனி…… புளியங்குளத்திலும் முகமாலையில…
-
- 27 replies
- 6.3k views
-
-
ஆறுமுகநாவலர் அருளிய குட்டிக் கதை சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் இருந்தான். அவன் தன் பல்லக்குச் சுமக்கிற ஆட்களை அழைத்து, "பசுமாட்டுக்கு நாள்தோறும் புல்லுவெட்டிக் கொண்டுவந்து போடுங்கள்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் பல்லக்கு மாத்திரம் சுமப்போம். வேறு வேலை செய்யமாட்டோம்" என்றார்கள். இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் பசுவின் கன்று வெளியில் ஓடிப்போயிற்று. அப்பொழுது வர்த்தகன் அந்தச் சிவிகையாட்களைப் பார்த்து, "கன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, அவர்கள் "நாங்கள் பல்லக்குச் சுமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிறவர்களோ" என்றார்கள். அப்பொழுது வர்த்தகன் அவர்களுக்குப் புத்தி வரும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, மத்தியான வேளையிலே பல்லக்குக் கொண்டு வரச் சொல்லி…
-
- 5 replies
- 1.6k views
-
-
அன்று வெள்ளிகிழமை அலுவலகத்தில் கண்ணன்,ராதாகிருஷனன்,பழனியாண்
-
- 4 replies
- 1.5k views
-
-
ப்ரியம் என்பது.. என்னைப் பொறுத்தவரை ப்ரியத்தை சொல்லாமலிருப்பது. அம்புட்டுதான்.. இளம் பிராயத்தில் ஏதேனுமொரு காரணத்துக்காக வீட்டில் பட்டினிப் போராட்டம் நடத்துவதுண்டு. உன் வயிறு.. உன் பசி.. என்று பேசாமல் போகாமல் அம்மா எப்போதும் என்னை சாப்பிடச் சொல்லி கெஞ்சியபடியே இருப்பாள். என் அம்மாவை பிளாக் மெயில் பண்ண வேண்டுமென்றால் உண்ணாவிரதம் இருந்தால் போதும். பலவாறாக கெஞ்சுவாள். நாம்தான் பெரிய கிரிமினல் ஆச்சே. எந்த கெஞ்சலுக்கும் எப்படிப்பட்ட கண்ணீருக்கும் மசிந்ததில்லையே.. நான் செத்தா நீ சாப்புடுவியாடா என்று கூட கெஞ்சுவாள். ம்ஹூம். சாப்பிட மாட்டேனே.. ஒரு முறையாவது எதற்காக நீ என்னை சாப்பிட வைக்க இத்தனை மெனக்கெடுகிறாய். ஒரு வேளை சாப்பிடாவிட்டால் நான் செத்தா போய்விடுவேன் என்று ஒர…
-
- 1 reply
- 1.3k views
-
-
சவுக்கம் - உமா வரதராஜன் பிரான்சிஸ் என்னை அழைத்து வருமாறு ஒரு போலீஸ்காரனை அனுப்பியிருந்தார் . ”தையல் மெஷினில் ஏதாவது கோளாறா ?” என்று அவனைக் கேட்டேன் . ”அப்படி எதுவும் சொல்லவில்லை ” என வந்தவன் சொன்னான் .அவனுடைய சலனமற்ற முகத்தில் எதையும் என்னால் படித்தறிய முடியவில்லை .ஒரு வேளை மரணம் தன் கண்முன்னால் நின்று வெறிக்கூத்தாடிச் சென்ற திகைப்பிலிருந்து இப்போது வரை மீளாமல் அவன் பேதலித்துப் போயிருக்கலாம் .ஏதோ ஒரு தூணின் பின்னால் அல்லது மண்மூடைகளுக்குப் பின்னால் அல்லது பொலிஸ் நிலைய வளவினுள் நின்ற முறுக்கேறிய பெரிய மரங்களில் ஒன்றின் பின்னால் அல்லது கழிப்பறைக்குள் மறைந்து நின்று தன்னைத் தற்காத்துக் கொள்ள கண்டமேனிக்கு சுட்டுத் தள்ளியிருக்கலாம் . எல்லா ஓசைகளும் ,புழுதியும் அடங்கி…
-
- 0 replies
- 1.5k views
-
-
உதிரம் - அனோஜன் பாலகிருஷ்ணன் *** “ஹாய் ஹரி, எல்லாம் நன்றாகச் செல்கிறதா?” “இப்போதைக்கு ஒன்றும் சிக்கலில்லை” என்றேன். கை குலுக்கிவிட்டு அவர் புன்னகைக்குப் புன்னகைத்தேன். முப்பது வயதுக்குள் இருக்கக்கூடிய ஒடிசலான உடல் தோற்றம் கொண்ட பெண்மணி. கோதுமை நிறம் கொண்ட தேகத்தில் மணிக்கட்டு வரை நீள்அங்கி அணிந்திருக்க கைகள் மட்டும் வெளித்தெரிந்தன. அவர் சாய்ந்து பார்த்த விதத்தில் ஒரு மனநல மருத்துவருக்கு உரிய தொழில் நேர்த்தியிருந்தது. பொன்னிறமான முடியை வாரிக் கொண்டையாக முடிந்திருந்தார். வெண்ணிற சட்டகங்கள் இடப்பட்ட மூக்குக்கண்ணாடி விளிம்பில் வெளிச்சம் பட்டு ஒளிர்ந்து துடித்தது. அந்த அறை நாலடிக்கு குறைவான அகலத்தில் இருந்தது. பழுப்பு நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்ட சுவரில், கடற்கர…
-
- 2 replies
- 925 views
-
-
சிலை சிலையாம் காரணமாம் - 1: கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை சுபாஷ் கபூரின் நியூயார்க் ஆர்ட் கேலரி சிலைகள் 2011 அக்டோபர் 30... பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் பன் னாட்டு விமான நிலையம். இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக, முதலா வது ஓடுதளத்தில் தன்னை ஆயத் தப்படுத்திக் கொண்டிருக்கிறது யுனை டெட் ஏர்லைன்ஸ் விமானம். அதில் பயணிக்கக் காத்திருக்கும் பயணி களுக்கு இமிக்ரேஷன் சடங்குகளை முடிப்பதற்காக அவசரகதியில் இயங் கிக் கொண்டிருக்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். ஆண்டுக்கணக்கில் கூண்டுக்குள் சிக்க வைக்கப் போகும் ஆபத்து தன்னை நெருங்கிக் கொண்டிருப்பது தெரியா மல், 60 வயது மதிக்க…
-
- 36 replies
- 11.3k views
-
-
நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒரு நிமிடக் கதை- ஏக்கம் உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். “ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!” என்று கெஞ்சினார். “என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்ற ஸ்வேதா தனக்காக காத்திருந்த மகளுக்கு சாப்பாடு ஊட்ட ஆ…
-
- 0 replies
- 1.3k views
-
-
(கிட்டத்தட்ட முடியக்காத்திருக்கிற எழுதிக்கொண்டிருக்கிற என் நாவலொன்றிலிருந்து சில குறிப்புக்கள் ) ஆபிரிக்கா ஒரு இருண்டகண்டமென்று தனபாலன் வாத்தி படிப்பித்தபோது அந்தக்கண்டத்திலேயே தானும் வந்து இருண்டுகிடக்க வேண்டுமென்று நிமலன் நினைச்சுக்கூடப் பாத்திருக்கமாட்டான். ஆபிரிக்காவில்த்தான் இருக்கிறது என அறிந்தேயிராத ஸ்நேகலில் அவன் வந்து விழுந்து ஒரு வருசமும் சொச்ச மாதங்களுமாகிவிட்டது. ஸ்நேகலை வெளிநாடு என்று இவன் ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டான். வெளிநாடென்றால் சிங்கப்பூர்மாதிரி இருக்கோணும், ஓம் இவன் சிங்கப்பூரிலும் ஆறுமாசம் அடைபட்டுக்கிடைந்த கதையும் உள்ளது. ஸ்நேகலில் வீடென்ற பெயரில் ஒரு மரக்கூட்டுக்கை நிமலனும் இன்னும் பதினாறு பேரும் அடைந்து கிடைந்தார்கள். உண்மையைச் சொ…
-
- 2 replies
- 959 views
-
-
கச்சாமி கண்டி நகரத்திலிருந்து வடமேற்காக நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்த புராதன புத்த விகாரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நானும் கெய்லாவும் வெளியே வந்தபோது எங்களையே பார்த்துக்கொண்டு இரண்டு பொலிஸ்காரர்கள் வீதியில் நிற்பதைக் கண்டேன். நானும் கெய்லாவும் செருப்புகளை அணிந்துகொண்டு வீதிக்கு வந்தபோது, வீதியில் சனங்களும் கூடிநின்று எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவொரு மிகச் சிறிய நகரம். புத்த விகாரையைச் சுற்றியே அந்த நகரம் அமைந்திருந்தது. விகாரையின் முன்னால் ஏழெட்டுக் கடைகள் இருந்தன. அந்தப் பொலிஸ்காரர்கள் இருவரும் ஏதோ காரியமாகத்தான் எங்களையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என எனது உள்ளுணர்வு சொல்லியது. வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே அனுமானிக்கும் எ…
-
- 8 replies
- 1.5k views
-
-
பிரபஞ்ச கானம் – மௌனி அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது. அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான். சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிபாரிசு ‘‘போப்பா, என்னை ரொம்ப ஏமாத்திட்டியே!’’ என்றபடியே வந்தார் நீண்ட நாள் நண்பர் சண்முகம்.‘‘என்னப்பா... வரும்போதே குறை சொல்லிக்கிட்டு வர்றே..?’’ என்றார் ரமணி.‘‘என் உறவினர் பையன் ஒருத்தனை சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு உன்கிட்ட அனுப்பினேன். பார்க்கலாம்னு சொல்லி அனுப்பிட்டியாமே. இதுதான் நீ எனக்குக் கொடுக்குற மரியாதையா?’’ - படபடத்தார் சண்முகம். ‘‘நீ அனுப்பின பையன் எம்.ஏ படிச்சவன், அழகா டிப் டாப்பா இருக்கான், நாகரிகமா டிரஸ் பண்றான். அதெல்லாம் சரி... ஆனா, எனக்கு ஒத்து வர மாட்டானே!’’‘‘எப்படிச் சொல்றே?’’‘‘இன்டர்வியூவுக்கு வந்தவன் நெத்தியில விபூதி, குங்குமம் எதுவும் இல்ல. என் அறை முழுக்க இருந்த படங்களைக் காட்டி, ‘இங்குள்ள சாமி படங்களைப் பத்தி என்ன நினைக்கிறே?’னு…
-
- 1 reply
- 1k views
-
-
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க..... ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்... அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்... வட்டியும் கட்ட மாட்டான்... பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்... கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்... இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல... இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல... சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல... பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்... இதெல்…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
காலப்பயணம் காதலை வாழ வைக்குமா? - சயின்ஸ் ஃபிக்ஷன் சிறுகதை #LetsLove இப்போது மட்டும் வாழ்வோம்! ஒரு படைப்பு தன்னைத்தானே படைத்துக் கொள்ளுமா? ஒரு கதை தன்னைத்தானே எழுதிக் கொள்ளுமா? ஒரு நிகழ்வு தன்னைத்தானே நிகழ்த்திக் கொள்ளுமா? பிரபஞ்ச இருள் சூழ, முப்பத்து முக்கோடி கோள்கள் சுழல, காலம் மட்டும் தன்னைத்தானே கடத்திக்கொண்டிருக்கிறது! காலந்தானே கடவுள்? அந்த அறையின் ஜன்னல் அரைகுறையாக மூடப்பட்டிருந்தது. வெளியே மண்டி கிடக்கும் இருள், அந்த ஜன்னல் வழியே வெளிச்சத்தைப் போலவே அந்த அறைக்குள் பரவியதா, இல்லை அந்த இருள் அந்த அறைக்குள் முன்னரே இருந்ததா என்பதெல்லாம் அறிவியலாளர…
-
- 0 replies
- 830 views
-
-
நான் ரசித்த ஒரு அருமையான பதிவு..விண்வெளியின் அதிசயங்களை ஒரு எழுத்தாளனின் பார்வையில் எங்கள் கண்முன் கொண்டுவந்துதந்திருக்கிறார் இந்தக்கட்டுரையாளர்..எல்லைகளற்ற வானம்போலவே மனிதனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் ஏது...பிரபஞசத்தை பற்றி நான் கேட்டு வாசித்து படித்து அறிந்து கொண்டவைகளால் ஏற்பட்ட பிரமிப்பால் வானவியல் சம்பந்தமான பல அறிவியல் புத்தகங்களை தேடித்தேடி வாங்கி வாசித்துள்ளேன்..ஆனாலும் தமிழ்ச்சுவையோடு தீட்டப்பட்டுள்ள இந்தக்கட்டுரையை வாசித்து முடித்தபொழுது ஒரு தனி சுகம் இருந்தது... வாசித்து முடித்த பொழுது விண்வெளிக்கு ஒரு இலக்கியப் பயணம் போய் வந்தது போன்றதெரு உணர்வு...இதோ உங்களுக்கும் அவரின் அனுமதியுடன் அந்த அநுபவம் கிடைக்கட்டும்... ஒரு எல்லைகளற்ற பயணம்-கை.அறிவழகன் …
-
- 0 replies
- 1.7k views
-