கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அந்த வீடு ....உறவினர்களின் கூட்டமாய் நிறைந்து காணப்பட்டது .....மாடியிலும் நடை பாதை ..வழிகளிலும் ஓரங்களிலும் மங்கல பொருட்களால் நிறைந்து இருந்தது. ..மதிமாறன் என்னும் மாறன் எப்போது உறங்கினான் என்று, அவனுக்கே தெரியாது. விடிந்தால் திருமணம் . உறவுகளும் ..பெரியவர்களுமாய் வீடு, நிறைந்து இருக்கிறது ....தன் தங்கைகளை எண்ணும் போது அவனுக்கு பெருமிதமாய் இருக்கிறது...தாயாய் தந்தையாய் வளர்த்தவன் அவன் அல்லவா.... அவனது குடும்பமும் ....மற்றவர்களை போல தாய் தந்தை ஆசைக்கு ஒரு தங்கை என்று அமைதியாக் தான் போய் கொண்டு இருந்தது. மூன்றாவதாய் ஒரு தங்கை வரு மட்டும். அவள் பிறந்த வீட்டிலேயே தாயார் ...காலமாகி விட்டார் . வைத்தியர்களின் கவன மின்மையோ .. தங்கை சுஜிதாவின் கெட்ட பலனோ ...மாறனு…
-
- 8 replies
- 2.2k views
-
-
அம்மா பசிக்குது... அந்த பிஞ்சு குழந்தையின் பசிக்கான அழுகை சாரதாவின் நெஞ்சை பிழிந்தது. இரண்டு நாளாக தானும் சாப்பிடாமல் பிள்ளைக்கு மட்டும் ஒரு நேரம் கஞ்சி கொடுத்த அந்த திருப்தியும் காணாமல் போய் இருந்தது. அவளிடம் ஒன்றும் இல்லை. சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தை கூட வித்து சாப்பிட்டாச்சு . இனி என்னதான் செய்வாள் அந்த குழந்தை அருணனின் அழுகையை நிறுத்த...? சர்வதேச அரசியலையும், மகிந்தவின் இனவாத போரையும், போராளிகளின் மனஉறுதி தளாராத வீரத்தையும் சொல்லி அருணனுக்கு புரியவைக்க முடியாது. காலையில் இருந்து இது எட்டாவது தடவை அவன் பசிக்காக அழுவது. அவன் அழும்போது இவளும்தான் அழுவாள் மனசுக்குள்ளே. பசிக்காக அழும் தனயனின் குரலை கேட்கவா ஆண்டவா, இன்னும் என் உயிரை எடுக்காமல்…
-
- 25 replies
- 5.3k views
-
-
1. அவளைக் காணவில்லை என்று தெரிந்தபோது நான் பெரிதாக முதலில் எடுத்துக்கொள்ளவில்லை. வகுப்பு முடிந்தவுடன் வழமையாகச் சந்திக்கும் இடத்தில் அவள் இல்லாதபோது வேறெதனும் வேலையாகப் போயிருப்பாள் -தாமதமாக வரலாம்- என்று காத்துக்கொண்டிருக்கத் தொடங்கினேன். கோடை காலத்தில் இந்த வளாகத்தைச் சுற்றி ஓடும் நதியிற்கு அதிக வனப்பு வந்துவிடுகின்றது. படிக்கும் நாங்கள் பல்வேறு தாய்மொழிகளைப் பேசிக்கொண்டு திரிவதுபோல நதியும் கலகலப்பாகப் பலமொழிகளைப் பேசிக்கொண்டு நகர்வது போலப்பட்டது. இயற்கைச் சூழலை இரசிக்கத்தொடங்கியதில் நான் எதற்காய் இங்கு வந்து காத்துக்கொண்டிருக்கின்றேன் என்பதும் மறந்துபோய்விட்டது. ஒருக்காய் முறிகண்டிப்பக்கம் ப…
-
- 10 replies
- 2.9k views
-
-
விரக்தியே வாழ்வாய்போன விதுசன் விதுசனிற்கு இப்பொழுது வயது 14 .கடந்த வருடம் வன்னியில் தன் 9 வயது தம்பியுடன் துள்ளித்திரிந்த பள்ளிமாணவன்தான் இவனும். வன்னியில் போரின் இறுக்கம் அதிகரித்த காலம் தைமாதம் ஒரு நாள்பொழுதில் எங்கிருந்தோ வந்து வீழ்ந்த செல் குண்டொன்று அவனது தாயாரை பலியெடுத்துப் போனது. தாயின் இழப்பு அவனது வாழ்வில் வீழ்ந்த முதலாவது இடி. தாயாரை இழந்தாலும் தந்தையின் அரவணைப்பில் தாயின் சேகத்திலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டு வந்தாலும் கொடிய யுத்தம் கூடவே துரத்தியது. வன்னியின் வழமான வாழ்ககைகைள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் இழந்துவிட்டு ஓடிய அத்தனை மக்களுடனும் விதுசனின் குடும்பமும் ஓடிக்கொண்டிருந்தது.விதுசனும் தந்தையின் கையை பிடித்தபடி மறுகையால் தம்பியை…
-
- 13 replies
- 2.7k views
-
-
ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள். இவன் ஒருவன் எந்த வ…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஓடிப்போன ஒட்டகம் இந்தப்பனிக் குளிருக்கு எவன் வீட்டிற்குள்ளையே அடைபட்டுக்கிடப்பான். என்ரை நாட்டிலைதான் நான் சுதந்திரமாகச் சுத்தலாம் என்று ஒரு துண்டுக் காகிதத்திலை எழுதி வைத்திட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி டுபாய்க்குக் கப்பல் ஏறின ஒட்டகம், கோடைகாலம் தொடங்க...... போனதுபோலவே சொல்லாமல் கொள்ளாமலுக்கு இரண்டு நாளுக்குமுதல் வந்து தன்ரை அறையுக்கை படுத்துக்கிடந்தது. சரி என்னதான் நடக்குது பார்ப்பம் என்று பேசாமலுக்கு இருந்தால் அது பாட்டுக்குத் திரும்பவும் தன்ரை குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டுது. அதுதான் அந்தக் கதையளை உங்களுக்குச் சொல்லுவமென்று வந்து உட்கார்ந்தால் வைத்தியரிடம் மருந்தெடுக்கப்போறதுக்கு நேரமாச்சுது. கோபியாதையுங்கோ போட்டுவந…
-
- 9 replies
- 1.7k views
-
-
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? மலையாள சமூக நல அமைப்பிடமிருந்து ஒரு செய்தி வருகிறது, அதாவது தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் துபாயிலுள்ள பிரபல அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார், அவரை தாயகத்திற்கு அனுப்ப வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நோயாளியினுடைய நிலையைத் தெரிந்துக் கொள்ள மருத்துவமனையில் அவரது வார்டில் சென்று விசாரிக்கும்போது அவர் பெயர் ராஜகோபால் எனவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் எனவும், தெரிய வந்தது. யாரும் வந்து பார்க்கவுமில்லை: மாரடைப்பு என யாரோ இங்கே சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள் எனவும், இப்போது மாரடைப்பு சரியாகிவிட்டது…
-
- 2 replies
- 1.2k views
-
-
அவன் வெற்றிமனையை அடைந்த போது நேரம் பதினோரு மணியை தாண்டி இருந்தது. கொளுத்தும் வெய்யிலின் வெம்மையினால் வழிந்த வியர்வையினை துடைத்து கொண்டு அந்த கட்டட முனையை தாண்டும் போது தான் அவளைக் கண்டான். எங்கிருந்து வந்தாள் என்று தெரியவில்லை. அவன் எதிர் பார்க்கவும் இல்லை. அவனை கட்டி அணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள். "சிவா நேற்று அல்லவா வாறதாக சொன்னீர்கள். ஏன் இவ்வளவு தாமதம். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்ற எண்ணம் கூட இல்லாத அளவுக்கு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்". இவனை அவள் பேசவே விடவில்லை. "நாளைக்கு கல்யாணம் என்றீர்கள் ..இப்படியா தாமதமாக வாறது. நான் பயந்தே போய்விட்டேன் தெரியுமா" அவள் பேசி கொண்டே இருந்தாள். என்ன செய்வது என்றே புரியாமல் விழித்தான் கார்த்த…
-
- 15 replies
- 4.9k views
-
-
எங்கே குட்டியண்ணா வன்னி மண்ணில் எந்தக் கவலைகளும் இன்றி எதிர்காலம் பற்றிஎந்தவொரு சிந்தனைகளுமற்று துள்ளித்திரிந்த சிறுமிதான் சியாமளா ... சியாமளாவிற்கு இன்று வயது ஒன்பது இன்று அவளது குடும்பத்தில் யுத்தம் தாயாரை பலியெடுத்துவிட தந்தையோ வேறு திருமணம்செய்து கொண்டு பிள்ளைகளை கைவிட்டு சென்றது மட்டுமல்ல அவளது மூத்தசகோதரனோ மண்ணிற்காக போராடிய குற்றத்திற்காக இன்று தடுப்பு முகாமில் வாடுகின்றான். இவளது அடுத்த அண்ணன்தான் குட்டியண்ணா. சியாமளாவிற்கு குடும்பத்தில் மிகவும் பிடித்தஒரு உறவு இரண்டாவது குட்டியண்ணாதான்.அப்பா அம்மா இல்லாத குறையை குட்டியண்ணாவே போக்கினான். குட்டியண்ணா பாடசாலைக்கு சென்றாலென்ன கோவிலுக்கு சென்றாலென்ன. விழையாடச்சென்றாலென்ன குட்டியண்ணாவின் கைகளைப்பிடித்…
-
- 8 replies
- 2.4k views
-
-
அது மாசி மாசி மாதத்தின் ஆரம்ப நாட்கள் ... சுதந்திர தினத்தன்று புதுக்குடியிருப்பில் தனது கொடியினை ஏற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி நின்ற சிங்கள படைகளுக்கும் வீரதலைவனின் சொல் கேட்டு மக்களை காக்க நின்ற மானமா வீர்களுக்கும் இடையை கடும் சண்டை புதுக்குடியிருப்பை சூழ இடம்பெற்று கொண்டிருந்தது. வேவு தகவல்கள் மூலம் பகைவனின் எறிகணை சேமிப்பு இடம் பற்றிய தகவல் அறிந்த புலிகள் படையணி ,அதனை கைப்பற்றவும் எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவும் ஒரு வலிந்த தாக்குதலுக்கு திட்டமிட்டனர். அதில் ஒரு மகளிர் அணியில் பூங்கொடியும் இணைக்கபட்டாள். அன்று அவள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. கொடிய பகைவனுக்கு பதிலடி கொடுக்கும் அந்த தருணத்துக்காக அவள் ஏங்கிய பலன் அன்று அவளுக்கு கிடைத்திருந்தது. அ…
-
- 10 replies
- 2k views
-
-
வழமையை விட இந்தமுறை கூட நாட்கள் எடுத்துவிட்டது. எல்லாம் அந்த தர்மகத்தாவால வந்தது நானும் கொஞ்சம் உணர்சிவசப்படாமல் மற்றவர்களைபோல காலை கீலை பிடிச்சிருக்கலாமொ? இவ்வளவு காசையும்,சொத்துப்பத்தையும் வைத்துக்கொண்டு ஒரு புறம்போக்கு நிலத்தில அதுவும் தற்காலிகமாக ஒரு 20 குடிசைகளை போடுவமென்றால் குடிசை போட நட்டுவைத்த அத்தனை மரங்களையும் வெட்டி வைத்திருக்கின்றாங்கள் பாவிகள்.வந்த கோபத்தில தர்மகத்தாவின்ர தலையை போட்டிருக்க வேண்டும்.ஏதோ அவன் செய்த புண்ணியம் வாய்ப்பேச்சோட நிப்பாட்டியது.பாவம் எங்கட அகதிகள் தான் சரியாக பயந்து போச்சுதுகள்.இவன் வந்து உள்ளதையும் குழப்பிவிட்டு போகப்போறான் என்று.நாளைக்கு வேலைக்கும் அந்த தர்மகத்தாவை தேடித்தானே அவர்கள் போகவேண்டும்.எதோ கடைசியில் ஒரு பிரச்சனையுமில்லாம…
-
- 5 replies
- 1.2k views
-
-
கொம்பியூட்டர் படிக்க போன விசுகு....... அது 1995 இல். ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று. அப்போ இரண்டு நேர வேலை. ஆனால் தெரிந்து கொள்ளணும். இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு. 1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.) வகுப்பும் தொடங்கியாச்சு. கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Print…
-
- 31 replies
- 5.4k views
-
-
மற்றுமொரு பழைய கதையைத் தேடிப்பிடிச்சு இணைத்திருக்கிறன் கிட்டத்தட்ட 7- 8 வருடங்களுக்கு முன் எழுதினது. படிச்சுப் பார்த்திட்டு பிடிச்சிருந்தால் சொல்லுங்கோ பிடிக்காட்டிலும் எட்டி உதைச்சுப்போடாதையுங்கோ கிழவன் பாவம் படக்கூடாத இடங்களிலை பட்டு இசகுபிசகாகிவிடும். பக்குவமாச் சொல்லுங்கோ கேட்கிறன். கொம்பியூட்டர் விற்பனைக்கு இது கொஞ்சம் விவகாரமான விசயம்தான் ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன். என்ரை அவகொஞ்ச நாளா ‘இஞ்சாருங்கோ எங்களுக்கு முந்தி வந்ததுகளெல்லாம் சொந்தவீடு, சிட்டிசன்சிப் எண்டு ஒரு பந்தாவோட இருக்குதுகள். முந்தநாள் வந்ததுகள்கூட இன்ரநெற், ஈமெயில் எண்டு பீத்திக்கொண்டு திரியுதுகள். ஒரு சபை சந்திக்குப்ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ! எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும். அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்? ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன். உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வாழலாம். எப்பவாவது அதைப்பற்றி யோசிச்சனிங்களே? இன்றைக்கு நேற்றே! முதன்முதலா அரும்பின மீசையைத் தினத்துக்கும் நூறுவாட்டி கண்ணாட…
-
- 6 replies
- 1.5k views
-
-
கோட்லஸ் மாமி சந்தைக்குபோட்டு வீடடை வரேக்கை நேரம்போனதால மொபைல் மாமி வீட்டுவழியால போகவேண்டியதாப்போயிற்று. மாமி வெயில் எறிச்சபடியா வீட்டுமுத்தத்தில இருக்கிற சினன பூந்தோட்டத்தில நின்றா. நான் வந்தது வேறை கார் என்றாலும் யாரிது எஙகடை ஆள் என்று கட்டாயம் பாத்து இருப்பா. அவை வீட்டு வாசல்ல ஒரு ஸபீட் பிறேக் இருக்கு. அதால சிலோ பண்ணவேண்டியதாப்போச்சு. இப்பவே லோக்கல்ல இருக்கிற சொந்தங்களுக்கு ஏன் தெரிந்தவர்களுக்கும் என்னைக்கண்ட செய்தி போயிருக்கும். மாமி எப்பவும் கோட்லஸ் போனோடை தான் இருப்பா. ஒன்று மாறி ஒன்று என்று இங்கை இருக்கிற ஆக்களுக்கு போன் பண்ணி கதைத்துக்கொண்டு இருப்பா. அதோடை வெளிநாட்டுக்கும் காட்ல போன்பண்ணி கதைச்சு இங்கத்தையான் செய்திகளை அங்க தொகுத்து…
-
- 5 replies
- 3.2k views
-
-
வணக்கம் உறவுகளே.... யாழ்களத்தில் முன்னர் உண்மைசம்பவங்களை கதைகளாக்கியிருந்தேன் அது பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது.அதே போல் மீண்டும் யாழ்களத்தில் நடந்து முடிந்த கோர யுத்தத்தினால் அவலப்படும் எமது உறவுகளின் இன்றைய நிலைகளை அவர்களுடன் தொலைபேசிஊடாக நேரடி உரையாடல் மூலம் சொன்னவற்றை அப்படியே கதையாக்குகின்றேன்.உங்கள் வரவேற்பு தொடர்ந்து இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் தொர்கிறேன்.நன்றி வன்னிப்பெருநிலப்பரப்பில் தமிழீழ அரசு ஒன்று நடைமுறையிலிருந்த காலகட்டம். பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் குண்டுச்சத்தங்களும் ஓய்ந்து தமிழ் மக்கள் மனதில் மகிழ்ச்சியும் அதே நேரம் தமிழீழ அரசின் நிருவாகம் என்கிற ஒரு கட்டமைப்பின் அடுத்த பரிமாணத்தில் புகுந்து…
-
- 18 replies
- 9.9k views
-
-
அந்த திரைபடம் திரையில் சும்மா தன் பாட்டில் ஓடி கொண்டிருந்தது. அந்த தியேட்டரில் அதிகம் கூட்டமில்லை அது ஒரு இலங்கை படம் .வேறு எங்கையோ அரைத்த மாவை அரைத்ததை எடுத்து மேலும் அரைத்து கொண்டிருந்தது .அதிகம் கூட்டமில்லை அதுவும் வந்தவர்கள் வெளியில் எரியும் வெய்யிலின் புழுக்கத்தை தணிக்க ஒதுங்கி இடம் தேடித்தான் இங்கு வந்தவர்கள் மாதிரி மூலைக்கு மூலைக்கு தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள் ,அவர்களுடன் அங்கு இருவர் திரையை வெறித்து பார்த்த படி படம் பார்த்து கொண்டிருந்தனர் ..அதில் ஒருவன் திரையை பார்த்து ரசிப்பது போல் இருந்தான் .மற்றவன் படத்தை வெறுத்து திரையை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டிருந்தான் படத்தை ரசித்து பார்த்த அந்த உயரமானவன் திரையில் கதாநாயகன் கதாநாயகிக்கு ஏதோ நாடகத்தனமா…
-
- 2 replies
- 1.1k views
-
-
"வெடி தியபங் ,ஒக்கம கொட்டியா,காண்டா...." என்று 2ஆம் லெப்டினட் பண்டாவின் குரல் கேட்க அவனின் கட்டளையை மதித்து கீழ் பணிபுரியும் சிப்பாய்கள் துப்பாக்கியால் சாரமாரியாக் சுட்டார்கள்.மக்கள் பதட்டத்தால் நாலாபக்கமும் சிதறிஅடித்து கொண்டு ஒடினார்கள்.ஒடமுடியாதவர்கள் அந்த இடத்திலயே வீழ்ந்து மடிந்தார்கள். பண்டா தனது மேல் அதிகாரிக்கு 6 புலிகளை சுட்டு கொண்று விட்டதாக தகவல் அனுப்பினான்.அவனை பாராட்டிய மேல் அதிகாரி ,இறந்தவர்களின் உடம்பை பெற்றொல் ஊத்தி எரித்துவிடும்படி கட்டளை இட்டான். "மாத்தையா மே ஒக்கம நாக்கிய மினிசு பவ்"(இவர்கள் எல்லாம் வயசு போன கிழடுகள் பாவம்)ஒட முடியாமல் வீழ்ந்து செத்துபோட்டுதுகள் என்றான் ஒரு சிப்பாய்.2ஆம் லெப்டினட் பண்டாவுக்கு கோபம் வந்துவிட்டது,இவன்கள்தான் அந்த கொட்ட…
-
- 18 replies
- 2.7k views
-
-
அது ஒரு கற்பனை செய்து பார்க்க முடியாத பயண அனுபவம். அதுவும் இலங்கையில் பிறந்த தமிழன் அதுவும் புலம் பெயந்த நாடுகளில் ஒன்றில் இருந்து இலங்கைக்கு சமாதான காலத்தின் பின் யுத்தம் தொடங்கிய அந்த காலங்களில் செல்லும் போது புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்ககட்சிகளில் வெளிவரும் செய்திகளை படித்தபின் அடி வயிற்றில் புளியை கரைக்காதா என்ன ? விமான நிலையத்தில் கடத்தல்கள், அதுவும் தாண்டி கொழும்பு நகருக்குள் சென்றால் அங்கு கடத்தல் அல்லது காணாமல் போதல், அதுவும் தாண்டி நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு குறிப்பாக வடபகுதிக்கு போனால் உயிருக்கே உத்தவாதம் கிடையாது என்ற பாங்கான செய்திகளையே புலம் பெயர் ஊடகங்கள் அந்த நாட்களில் வெளியிட்ட வண்ணம் இருந்தன. ஆனால் ஆங்காங்கே இ…
-
- 90 replies
- 8.9k views
-
-
பகுதி (1) (படபடப்பாக திருமதி அருந்ததி வீட்டினுள் நுழைகிறார்.) அருந்ததி: என்ன வேலை.. என்ன வேலை.. (தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அரண், சத்தத்தை குறைக்கிறான்.) அரண்: இன்றைக்கு நேரத்துக்கு வந்திட்டீங்கள்.. உடம்புக்கு ஏதாலும் சுகமில்லையே? அருந்ததி: தொடங்கியாச்சா.. இந்த விசாரணைக்கொன்றும் குறைச்சலில்லை.. நேரத்துக்கு வந்தாலும் விசாரணை.. பிந்தி வந்தாலும் விசாரணை.. மனுசி என்ன பாடுபட்டுப்போட்டு வாறாள் என்ற கவலை இல்லை.. வீட்டில இருந்து ரீவிய பாக்கிறதும், அதில போற சீரியல்ல வாறவங்களைப் பாத்து அழுறதும்தானே உம்மடை வேலை.. வேறை என்ன வேலை இங்கை...? அரண்: ஏன் என்னோடை கோபிக்கிறீங்கள்.. நான் இப்ப என்ன செய்யேலை எண்டு எரிஞ்சு விழூறியள்..? அருந்ததி…
-
- 23 replies
- 2.9k views
-
-
அலாரச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தேன். அசதியுடன் எழுந்து நேரத்தைப் பார்த்தேன். மணி ஐந்தரை என்றது கடிகாரம். எழும்ப மனமில்லை. எரிச்சலாய் உணர்ந்தேன். உலகமே இருட்டுப் போர்வைக்குள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. எப்படியும் எழும்பித்தானாக வேண்டும். வேறு வழியில்லை. மெதுவாக எழுந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைக்கு விழுந்தடித்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடத்தேவையில்லை. அண்ணாவுடன் வாகனத்தில் செல்லலாம். சற்றே நிம்மதியாக உணர்ந்தேன். அப்படியே பல் தேய்த்து முகம் கழுவி தயாரானபோதும், அண்ணா எழுந்திருக்கவில்லை. நேரம் போய்விட்டது. இனி அண்ணாவை எழுப்ப வேண்டியதுதான். ஏனோ தெரியவில்லை..!! வழமைக்கு மாறாக, இன்று அண்ணாவை எழுப்புவது அவ்வளவு சுலபமாயில்லை. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு …
-
- 15 replies
- 2.1k views
-
-
இஞ்சாருங்கோ...இஞ்சாருங்கோ ஒருக்கா இதை வந்து பாருங்கோ என்று மனைவி கூப்பிட்டதால் ஏதோ அவசரவிடயமாகத்தான் கூப்பிடுகிறாள் என்று நினைத்தபடியே,என்னப்பா என்ன நடந்தது என்று அறைக்குள் ஒடினேன்.இஞ்சபாருங்கோ இவள் ரம்பா கலியாணம் கட்ட போறாளாம் பார்த்து கொண்டிருந்த இணையத்தளத்தை எனக்கு காட்டினாள். அட சீ இதுக்கு போய் இப்படி கத்துறீர்,நானும் ஏதொ அவசரமாக்கும் என்று ஒடிவந்தேன்,புறு புறுத்தபடியே இணையத்தை பார்த்தேன்.அவளும் பெண்தானே கலியாணம் கட்டுவதில் என்ன தப்பு .அவளுக்கும் உம்மைப்போல ஒரு ஆசை வந்திருக்கும் என்றபடியே அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன். பின் தொடர்ந்து வந்தவள் உங்களுக்கு இப்படியான நல்ல இணையங்களுக்கு போய் நல்ல செய்திகளை படிக்கத் தெரியாதே ? சும்மா வெடிகுண்டு ,துப்பாக்கி,மகிந்தா…
-
- 16 replies
- 3.6k views
-
-
அந்த நகர மைய குறீயீடாக அமைந்திருக்கின்ற மணிக்கூட்டு கோபுரமடியில் இருந்து அந்த பிராந்தியத்தையே அலறவைத்து வந்தது ஒரு சத்தம்..சத்தம் என்றால் வெறும் சத்தமல்ல ஊரிலுள்ள கெட்டவார்த்தைகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்த மாதிரி அது. மிஞ்சினால் ஒன்றோ இரண்டோ மூன்றோ மூல தூசண வார்த்தைகள் இருந்திருக்கும் . அதை பல வடிவத்தில் மாற்றி பல வார்த்தை ஜாலங்களில் தொடர்ச்சியாக அந்த பிரதேசத்தையே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது. அந்த கல்லூரி வாசலினூடாக சந்தையில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு பையோடு ஏதோ யோசனையுடன் செல்லும் நடுத்தர வயது மனிதர் கூட இச்சத்தத்தின் அர்த்தத்தை மனதுக்குள் ரசித்து உதட்டில் சில கணம் புன்னகையை வைத்து எடுத்து விட்டு செல்லுகிறார்..நூலகம் நோக்கி செல்லும் பருவ பெண்கள் கூட ஒருவரை ஒருவர…
-
- 18 replies
- 3.1k views
-
-
ஈசாப் கதைகள் என்ற நூலில் இருந்து .... கழுதை வீரம் பூனைக்கு யார் மணி கட்டுவது? என்ற குட்டிக்கதைகள்.
-
- 2 replies
- 5.6k views
-
-
வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது தான். இன்பம் வரும்போது துள்ளிக்குதிக்கும் மனசு துன்பத்தில் துவண்டு தான் போகிறது துன்பத்தையும் ஏற்று சகித்து வாழ் பழகினால் வாழ்கை ஒரு கின்னஸ் பதிவு ஆகி விடுகிறது. இதோ ஒரு சாதனைப் பெண்ணின் கதை. தாய் தந்தையர்களுக்கு செல்லப் பெண்ணாக வளர்ந்தவள் தான் மஞ்சு என்னும் மஞ்சுளா ஆசைக்கு ஒரு அண்ணா. ..அவள் வளர்ந்து மணப்பருவம் அடையும் காலத்தில் ....மாதவனுக்கு வாழ்க்கைபட்டு ..வெளி நாட்டு ஆசை கொண்டு ...கனடாவுக்கு வந்து சேர்ந்தாள். காலபோக்கில் இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானாள். கணவன் ஒரு தனியார் கம்பனியில் உதவி முகாமையாளராக பணி புரிந்தான் ....வீடில் குழந்தைகளை கவனிக்க வேண்டு மென்பதாலும் மாதவன் விரும்பாததாலும் அவள் வேலைக்கு போவதில்லை. ஒரு கோடை வ…
-
- 19 replies
- 5.5k views
-