Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. பாரதியின் செய்தியையும் கவித்துவத்தையும் வரும் தலைமுறைகளிடம் கொண்டுசெல்வது அவசியம். சமீபத்தில், ஒரு தமிழ்க் கவிஞரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை அலுவலகப் பயன்பாட்டுக்காக வாங்கிவந்தேன். கல்லூரியிலிருந்து களைத்து வந்த மகள் என் முன் வந்து உட்கார்ந்தாள். கவித்தொகுதியைக் கொடுத்து நான் வட்டமிட்டிருந்த கவிதை களையாவது படித்துக் கருத்துச் சொல்லும்படி கெஞ்சினேன். அட்டையையும் பின்னட்டையையும் பின்னட்டைக் குறிப்பையும் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். பிறகு புத்தகத்தைப் புரட்டினாள். இதென்ன எழுத்துரு, குழந்தைகள் புத்தகம் மாதிரி என்றாள் எரிச்சலுடன். என் கெஞ்சல் கொஞ்சமும் பலனளிக்கவில்லை. புத்தகம் மீண்டும் என் கைக்கு வந்துவிட்டது. இளம் தலைமுறையினரிடம் பாரதியைக் கொண்டு செல்வது எப்படி என்று …

  2. 'காந்தள்பூவும், சோழக்காடும்' : வளர்ந்து வரும் இலங்கை கலைஞர்கள் பற்றிய ஓர் ஆய்வு! அண்மையில் கடல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய இலங்கை பாடகர் ஆர்யன் தினேஷ் முதல் வளர்ந்து வரும் மேலும் பல உள்ளூர் தமிழ் இசைக்கலைஞர்கள் வரை அவர்களது தேடல்கள், முயற்சிகள், வளர்ச்சிப்படிகள் பற்றி அலசுகிறது இக்கட்டுரை. கல்யாண வீடுகள், கோவில் திருவிழாக்கள், தேனீர் கடைகள் என்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த இசையும்- பாடல்களும் கணனிகளுக்குள்ளும், ஐபோட்டுக்குள்ளும், எம்.பி.3 சுழலிகளுக்குள்ளும் சுருங்கிவிட்ட காலம் இது. புதிய பாடல்களின் வரவை அறிய வானொலிகளைச் சுற்றிக்கொண்டிருந்த நாட்கள் மலையேறிவிட்டன. போட்டிபோட்டுக் கொண்டு ‘முதலில் புதிய படங்களின் பாடல்களை உங்களுக்கு…

  3. எழுத்தாளர் பாலகுமாரன் நேர்காணல் - வித்தகன் நான் கவிதை எழுத ஆரம்பிச்சபோது என் வயது இருபது. கதை எழுத ஆரம்பிச்சபோது இருபத்தெட்டு. கவிதையிலிருந்து சிறுகதைக்கு மாறும்போது அது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை ஒரு சவாலாக நினைத்துத்தான் உழைத்தேன். இதோ நாற்பது ஆண்டுகள்ல 260 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இந்த ராட்சச வேகத்துக்குக் காரணம் நான் ஒரு ஒர்கஹாலிக். வேலை வெறியன். நல்லா ஒர்க் பண்றது ஒரு போதையான விஷயம். இடையறாது ஒர்க் பண்றதும் அப்படித்தான். அல்பமான விஷயங்களில் என்னால ஈடுபடவே முடியாது. உதாரணமா, எந்தப் பயனும் இல்லாம என்னால அரட்டை அடிக்கவே முடியாது. அதனால எனக்கு நண்பர்களும் கிடையாது.’ கர்ஜிக்கும் குரலில் கணீரென்று பேசிய பாலகுமாரன், ஆழத்துக்கான நேர்காணலின் ம…

  4. என் கவிதைகளை…. அம்மாவுக்கு காட்டுவதில்லை…!!! ஈழத்தின் கிளிநொச்சி – இரத்தினபுரத்தில் பிறந்தவர், கவிஞர், கட்டுரையாளர், பத்தி எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியளாளர் என பன்முகங்கள் கொண்டவர் தீபச்செல்வன். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப்போர், இனப்படுகொலைக்குப் பிறகு பௌத்த சிங்கள இனவெறி இராணுவம் அரங்கேறிய பல்வேறு நிகழ்வுகளைத் தம் உயிரையும் பொருட்படுத்தாது உலகறியச் செய்தவர். 2009 இல் யாழ் பல்கலையில் மாணவர் ஒன்றிய பொதுச்செயலாளராய் இருந்தபோதும் சரி, எழுத்துலகில் எழுத நுழைந்தபோதும் சரி தமக்குள் சமரசமில்லாமல் களபோராளிக்கு நிகராக தீவிரமாய் இயங்கியவர் – இயங்கி வருபவர். அந்தவகையில் இவரின் ‘பதுக்குக்குழியில் பிறந்த குழந்தை’ கவிதைத் தொகுப்பு அனைவரிடமும் ஒரு பெரிய அதிர்…

    • 1 reply
    • 852 views
  5. தனிநாயகம் அடிகளார் & நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கு கிருஷ்ண பிரபு லயோலா கல்லூரியும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு என்ற முழுநாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. அதனை முன்னிட்டுப் பல்வேறு அமர்வுகளில், தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழிக்கு ஆற்றிய அரும்பணிகளைக் குறிப்பிட்டுக் கல்விப்புலத்தில் இயங்கும் ஆய்வாளர்கள் பலர் கட்டுரைகள் வாசித்தார்கள். “தனது முப்பதாவது வயதில் தமிழ் படிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழ்மொழியின் செழுமைக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கும் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய தமிழ்ப்பணி முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் தனிநாயகம் அடிகளார் பணிகளைச் சுட்டும் ஆளுமைச் சித்தி…

  6. சுவிற்சர்லாந்தில் நடிகமணிக்கு ஒரு பெருவிழா! … அருந்தவராஜா .க காலம் அழைத்துச் சென்ற கலைஞர்களில் நடிகமணி வி.வி வைரமுத்து ஒருவரானாலும் காலகாலமாக மக்கள் மனங்களில் வாழ்ந்து நிறைந்திருக்கிறார். இலங்கையின் இசை நாடக வரலாற்றில் தனி ஆளுமை மிக்கவராகவும் பல்துறை கலை ஆற்றல் உள்ளவராகவும் விளங்கிய நடிகமணியவர்கள் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தை 3000 தடவைகளுக்கு மேலாகவும் பக்த நந்தனார் நாடகத்தை1000 தடவைகளுக்கு மேற்படவும் நடித்துப் பெருமை சேர்த்தார். இவற்றை விட மேலும் பல நாடகங்கள் பற்பல முறை மேடையேற்றங்கள் கண்டுள்ளன. இலங்கையில் ஒரு அரங்க நடிகனுக்கு இரசிகப்பட்டாளம் அதிகம் உருவாகியிருப்பதும் நாடக அரங்குக்கு பின்னரான கதைக் களங்கள் உருவாகியும் பின்னர் அவை …

    • 2 replies
    • 810 views
  7. கே.ஜே.யேசுதாஸ் கண்ணீரின் கானம் ஷாஜி “யேசுதாஸ் மிக அழகான குண்டுப் பெண் ஒருத்தியிடம் காதல் கொண்டிருந்தார். ஒரு கொடூரமானவன் அப்பெண்ணைக் கற்பழிக்க முயன்றான். அப்போது யேசுதாஸ் தனது வாளை எடுத்துச் சுழற்றி சண்டையிட்டு அவனைக் கொன்று விட்டார். நீ அவசியம் அந்த வாள் ‘ஃப்ளெயிட்டைப்’ பார்க்கவேண்டும்! என்னா ஒரு ஃப்ளெயிட்!வாள் சண்டையில் யேசுதாஸை அடிக்கவே முடியாது” தான் முதன் முதலாகப் பார்த்த சினிமாவின் கதையை வசீகரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் தங்கன். ஊரில் சில்லறை வேலைகளைப் பார்த்துத் திரிந்துகொண்டிருந்த பதினாறு வயதான அவன் பள்ளிக்கூடம் சென்றதில்லை. பத்து வயதான எனக்கு ஊர்க்கதைகளையும் பாலியல் அறிவையும் தங்கு தடையில்லாமல் வழங்கிக் கொண்டிருந்தவன். வயல்களில் சின்னச் சி…

    • 1 reply
    • 2.3k views
  8. முறிகண்டி பிள்ளையார் சிறிய ஆலயம் என்றாலும் - உன் மகத்துவம் பெரியது விநாயகனே வேற்று மதத்தவுறும் பயபக்தியுடன் வழிபட்ட சிறப்பான ஆலயம் அன்று அந்நிய ஆக்கிரமிப்பிலும் தலை நிமிர்ந்த பெருமைக்குரிய சந்நிதி பிரயாணம் செய்பவர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்த செல்ல கடவுள் காலம் காலமாக நீ சேர்த்த பணத்துக்கு இன்று வன்னித் திருப்பதியாக தங்க கோவிலுக்குள் குடி இருக்கலாம் - ஆனால் நீ பக்தரோடு பக்தராக இருந்தாய் இவ்வளவு பெருமை உள்ள உனக்கு இன்று சோதனைக் காலமா? அந்நிய சிறைக்குள் சிக்கி தவிக்கின்றாய் ஆக்கிரமிப்பாளர்களின் அழுங்குப் பிடி உன் கழுத்துக்குமா வேழ முகத்தானே பிள்ளையாரப்பா, நாங்கள் எங்களை காப்பாற்ற சொல்லவில்லை நீ உன்னையே காப்பாற்றி கொள் உன்ன…

    • 2 replies
    • 2.8k views
  9. பவளவிழா காணும் எஸ்பொ. ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளில் எஸ்.பொன்னுத்துரை (சண்முகம் பொன்னுத்துரை) என்னும் இயற்பெயர் கொண்ட எஸ்பொ அவர்கள் முக்கியமானவர். ஏறத்தாழ அறுபதாண்டுகாலத்தை தாண்டியது அவரது இலக்கிய வாழ்வு. 1932ல் யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்பொ, தனது பல்கலைக்கழக படிப்பை சென்னையில் முடித்தவர். இலங்கையில் மட்டக்களப்பில் ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் பணியாற்றிய எஸ்பொ, 1981ல் ஆபிரிக்காவில் நைஜீரிய நாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அத்துடன் இலங்கையில் இருந்தபோது கல்வி அமைச்சின் பாடவிதானக்குழுவிலும், இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் குழுவிலும் பங்கேற்றவர். தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் எஸ்பொ. சென்னையில் மித்ர என்னும் பதிப்பகத்தையும் இயக்கி வருகின்றார்…

    • 6 replies
    • 2.9k views
  10. கனடிய தமிழ் பாடகியும் , தமிழ் திரைப்பட உலகில் பாடகியாக அறிமுகமாகியுள்ள கீத்தியா வர்மன் உடன் ஒரு சந்திப்பு

    • 0 replies
    • 609 views
  11. - க.ஆ.கோகிலவாணி இதுவரை இலக்கியத்துறையில் நிகழ்த்தப்படாத சாதனையொன்று இலங்கையின் கிழக்கிலங்கையில் கடந்த சனிக்கிழமை(30) நிகழ்த்தப்பட்டது. தன்னை ஓர் எழுத்தாளன் என இந்த உலகமே அறிந்துகொள்ள வேண்டும் என்ற உத்வேகத்துடன் 12 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக எழுதி சானையை நிலைநாட்டியுள்ளார் எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜ். வித்தியாசமான சிந்தனையோட்டம்கொண்ட இக் கலைஞன், “கரன்சி இல்லாத உலகம்“ என்ற தொடரினை எழுதி, இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். நிமிடத்துக்கு 10 சொற்கள், மணித்தியாலத்துக்கு 6 பக்கங்கள் என தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் இவர் எழுதியுள்ளார். மொத்தமாக 77 பக்கங்களையும் 7,582 சொற்களையும் கொண்ட இவரது 'கரன்சி இல்லாத உலகம்' தொடரானது இன்று இலக்கியத்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது…

  12. சமாதானபல்கலைகழகம் கருத்தாக்கத்தின் தந்தையான சுவாமி பரால் கதை ஆங்கிலத்தில் படமாகிறது. இயக்குனர் ரூண சோகைம் இப்படத்தில் பராலாக நடிக்கிறேன். அதன் சில காட்ச்சிகள் இணைத்துள்ளேன். நோர்வே நாட்டுக்கு 1914 வந்து 1945 இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற 1945 மே 8ல் மரணமான பரால் எனப்படும் சுவாமி ஆனந்தாசாரியார் (Swami Sri Ananda Acharya 1881 - 1945) வங்க தேசத்தைச் சேர்ந்தவர்.

    • 1 reply
    • 1.7k views
  13. அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.நிகழ்வுகளை விபரிக்கின்றது தமிழினி ஜெயக்குமாரனின் கவிதை. யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் கவிதை. கவிதையின் ஆரம்பம் நன்றாக வந்திருக்கின்றது. கவிதையின் முதல் பகுதியே முழுக்கவிதையினதும் கூறு பொருளை நிர்ணயித்து விடுகிறது. கவிதை 'போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுது கொண்டேயிருந்தது' என்று ஆரம்பமாகின்றது. அம்பகாமப்பெருங்காட்டில் யுத்தம் நடைபெறும் மழை பொழியும் இரவு. மழையை வானத்தாயின் அழுகையாக உவமையாக்கியிருக்கின்றார் கவிஞர். வானத்தாய் ஏன் அழுகின்றாள்? போருக்குத்தன் புதல்வர்களைத்தந்து விட்டதற்காகத்தான் அழுகின்றாள். யுத்தம் நடைபெறும் சமயம் கானகம் வெடியோசையால் அதிர்வுறுகின்றது. அவ்வதிர்வினால் ,மருண்ட யானைக்கூட்டங்கள் குடி பெ…

  14. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின் கீழ் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமி ஜெசிக்கா 2ம் பரிசை தட்டிச்சென்றார். இதில் பரிசாக கிடைத்த 1 கிலோ தங்கத்தை ஈழத்து அனாதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக மேடையிலேயே அறிவித்தார். இந்த சிறு வயதிலேயே இவருக்கு இருக்கும் நற்பண்புகளை கண்ட நடிகர் சூர்யா, அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், ஜோதிகா கொடுத்த பரிசுப்பொருட்களையும் ஜெசிக்காவிடம் கொடுத்துள்ளார். சூர்யாவுடனான சந்திப்பின் பிறகு ஜெசிக்கா ‘சூர்யாவை நேரில் சந்தித்த தருணத்தை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது’ என்று கூறியு…

    • 3 replies
    • 1.2k views
  15. ஒன்பது வருடங்களாக தொடர்ந்து 'ஊரோடு உறவாடி' சாதனை செய்த புலம்பெயர் தமிழர்! இன்றைய நவீன தொடர்பூடக உலகில் ஒரு வானொலி நிகழ்ச்சியை தொடர்ந்து ஒரு வருடம் நடாத்துவது என்பது பெரியதொரு சாதனையாகவே பார்க்கப்பட்டு வருகின்றது. ஆனால் IBC-தமிழ் வானொலியில் இரண்டு மணி நேரம் கொண்ட ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து 8 வருடங்களாக இடம்பெற்று வருவதென்பது மிகப் பெரியதொரு சாதனையாகவே பார்க்கப்பட்டாகவேண்டும். அதுவும் ஒரே அறிவிப்பாளரே இந்த நிகழ்ச்சியை இந்த 8 வருடங்களும் வெற்றிகரமாக நடாத்துவதென்பது தற்கால வானொலிக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை ஒன்றும் இலகுவான காரியம் கிடையாது. IBC-தமிழ் வானொலியில் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறும் இந்த நிகழ்ச்சியின் பெய…

  16. வணக்கம் உறவுகளே .............. உண்மையில் இந்தப்பதிவை இங்கே இணைத்து சில விடயங்கள தேடி அதனூடு பயணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள வளர்ந்து வரும் கலைஞ்சன் என்ற சிந்தனையில் இங்கே இணைக்கிறேன் . ஜெர்மனியில் வாழும் கலை சம்பந்தமான ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு இந்த லிங்கை எனக்கு அனுப்பி .........தமிழனின் மானத்தை இந்த இளஞ்சன் வித்து விட்டான் என்றார் ....... பார்த்தேன் ,,,,,,,,மொழி விளங்கவில்லை .ஆனால் எதோ படம் காட்டுகிறான் என்று மட்டும் புரிந்தது .....ஒரு கீபோட்டை வைத்து குரங்கு விளையாட்டு காட்டுகிறான் என்பதை மட்டும் இவனது இசை சம்பந்தமான செயல்பாட்டில் அறிந்து கொண்டேன் .பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் இப்படி இவன் கலையையும் ,எம் மானத்தையும் விற்று விட்டான் என…

  17. என் சிலேட்டுப் பருவத்தில் ஓர் உறவினரைப் போலவே சினிமா வழியாக எனக்குப் பரிச்சயமானார் சிவாஜி கணேசன். தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து மைல்கல் தொலைவில் நன்னிலம் என்கிற ஊரைத் தொட்டுக்கொண்டு இருந்தது மணவாளம்பேட்டை. அங்கு இருந்த லட்சுமி டாக்கீஸில்தான் நான் முதன்முதலாக சிவாஜியை பாபுவாகப் பார்த்தேன். “டேய்… இன்னிக்கு உன்னை சினிமா கொட்டாய்க்கு அழைச்சுட்டுப் போறேன்’’ என்று காலையிலேயே அப்பா சொல்லிவிட்டார். மனசு குதி யாட்டம் போட ஆரம்பித்துவிட்டது. புத்தகங்களுக்கு லீவு கொடுத்து விட்டு, அப்பாவின் டைனமோ (லைட்) வைத்த சைக்கிளை எண்ணெயெல் லாம் போட்டு நறுவிசாகத் துடைத்து வைத்தேன். சைக்கிளில் லைட் இல்லாமல், அதிலும் டபுள்ஸ் போனால் போலீஸ் பிடிக்கிற சமயம…

  18. ஈழத்து கலைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகர்+இயக்குனர் மன்மதன் பாஸ்கி. இவரின் குறும்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவை. இவர் நம் ‘சினி உலகம்’ நேயர்களுக்காக பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ உங்களுக்காக.... 1)உங்களை பற்றியும், சினிமா துறைக்கு வந்ததை பற்றியும் சொல்லுங்கள்? முதலில் ஒரு பாடகராக தான் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். பின் படி படியாக ஒவ்வொறு துறையிலும் பயணிக்க ஆரம்பித்தேன். 96ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என் பயணம். பாரிஸில் இருக்கும் பொன்குமரன் என்பவர் தான் என்னை இந்த துறைக்கே அறிமுகப்படுத்தினார். நான் முதல் இயக்கிய குறும்படம் நதி. இக்குறும்படம் நிறைய இடங்களில் திரையிடப்பட்டது. 2)நீங்கள் எத்தனை குறும்படங்களை இயக்கிய இருக்கிறீர்கள…

  19. காடோடி, உலகின் மிகப் பெரிய ஆதிக் காடுகளில் ஒன்றான போர்னியோ காட்டின் அழிவை, காட்டழிப்பின் அரசியலை அழுத்தமான குரலில் சொல்லும் நாவல். இந்த நாவலைப் படித்து முடிப்பவர்கள் ஒரே ஒரு மரத்தை வெட்ட நினைத்தாலும், அவர்களுடைய மனசு வலிக்கும். இந்நாவலை எழுதியுள்ள நன்னிலத்தைச் சேர்ந்த சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்ட இவருடைய முதல் நாவல் இது. கவிதை மொழியும் கதைக்கான கூறுகளும் கூடிவந்த புதுமையான சூழலியல் எழுத்து இவருடையது. மூன்றாம் உலக நாடுகளில் கண்ணுக்குத் தெரியாமல் களவாடப்படும் மறைநீர் (Virtual water) போன்ற சூழலியல் கருத்தாக்கங்களை பரவலாக்கியவர். காட்டழிப்பைப் பற்…

  20. பத்திரிகையா?ர் நடேசனின் அஞ்சலி தினம் இன்று. இத்துடன் ஐபிசி வானொலி என்னிடம் பெற்ற செவ்வி இணைத்துள்ளேன். * நேர்கானலில் கிழக்கு மாகாணம் மற்றும் வன்னியை புரிந்துகொள்ளுவதே நடேசனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி என்ற கருத்தை வலியுறுத்துகிறேன். * மேலதிகமாக வடகிழக்கு முஸ்லிம் மக்களையும் வடகிழக்கில் புலம்பெயர்ந்து வாழும் மலையக மக்களையும் புரிந்துகொள்ளுவது பற்றியும் சொல்லியிருக்க வேண்டும். விரைவில் முழுமையான ஒரு பதிவை தருவேன்.

    • 0 replies
    • 626 views
  21. மோகன் ஆட்ஸ் வல்வையின் ஒரு சகாப்தம்…..! 1970 களில் வல்வெட்டித்துறையில் கையெழுத்துச் சஞ்சிகையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதில் தனது ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் வல்வை சனசமுக சேவா நிலையத்தின் வெளியீடாக சுப்பிரமணியம் சக்திவடிவேல் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட “அலை ஒளி” கையெழுத்துச் சஞ்சிகையும்இஅதன்பின்னர் அப்போதைய செயற் குழுவின் ஒத்துழைப்பின்மை காரணமாக அதனை நிறுத்தவேண்டிய கட்டாயத்திற்குள்ளான நிலையில் திரு.சு.சக்திவடிவேல் அவர்கள் தனது சொந்த முயற்சியினால் “அருவி” என்ற அழகிய பல வர்ண கையெழுத்துச் சஞ்சிகையை உருவாக்கி வாசகர்களை ஊக்குவிப் பதற்காக அதனை கணபதி படிப்பக நிர்வாகிகளின் ஆதரவினால்இ தொடர்ச்சியாக சுமார் இரண்டு வருடங்கள் வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தில் வாசகர்…

    • 3 replies
    • 1.8k views
  22. ஷோபாசக்தி பதில்கள் ஈஸ், துபாய் கேள்வி : உங்களுக்கும் சாருவுக்கும் என்ன பிரச்சனை? பதில் : ஏன் வந்து தீர்த்து வைக்கப்போகிறீர்களா? வேலையைப் பாருங்க பாஸ். கேள்வி : நீங்கள் ஒரு அகதியாக ஆனதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்த அடையாளத்தை விரும்புகிறீர்களா? பதில் : இது கேள்வி! இந்தக் கேள்விக்கு ஏற்கனவே சில பத்திரிகைகளில் பதிலளித்துள்ளேன் எனினும் சற்று விரிவாக இப்போது சொல்லிவிடுகிறேன். 1983ல் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியான வன்முறைகளைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் அகதிகளாக மேற்கிற்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். அப்போது நான் அவ்வாறு அகதிகளாகப் போகிறவர்களைப் பழித்துக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். "நாங்கள் தமிழீழத்திற்காக இரத்தம் ச…

    • 19 replies
    • 5.3k views
  23. புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ப்பெண் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியநுக்கு சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது. Saturday, 01 October 2011 08:54 அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் சட்ட வல்லுனர்கள் அமைப்பும் பெண் சட்ட வல்லுநர்கள் சங்கமும் இணைந்து வழங்கும் வருடத்தின் சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியன் என்ற தமிழர்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இவர் 2009 ஆம் ஆண்டில் சிறந்த சட்ட சேவைக்கான ஜஸ்டிஸ் விருது வென்ற முதல் தமிழ் பெண் எனும் பெருமையையும் பெற்றமை குறிப்பி…

  24. ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று எழுபதுகளில் இலங்கையில் இருந்து ஒலித்த தமிழ் பொப்பிசை பாடல்கள் அந்த நாட்டின் கடல்களைக் கடந்தும் அந்த சின்னத் தீவை திரும்பிப் பார்க்க வைத்தவை. துள்ளல் இசை என்றால் இலங்கை இசைதான் என்ற அளவுக்கு அவை பலரையும் ஈர்த்திருந்தன. ஆனால், மேற்கத்தை பாணி இசையாக கருதப்படும் பொப் இசையை மையமாகக் கொண்ட இப்படியான பாடல்கள் மாத்திரந்தான் இலங்கை தமிழர்களின் இசையின் அடையாளம் என்று சொல்லிவிட முடியாது. அங்கு வாழும் தமிழர்களின் இசை முயற்சிகள் என்பன அவற்றையும் கடந்து அவர்களின் வாழ்வின் பல அம்சங்களோடும் கலந்தவை. அவர்களின் தெய்வ வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்ட சடங்குப் பாடல்கள் அவற்றில் ஓரளவுக்கு மூத்தவை, அதேவேளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.