துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
ஆரம்ப கால பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளரும் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான மனோ அண்ணாவின் துணைவியார் மனோ அண்ணி இன்று 13.03.2021 சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்து விட்டார் என்று அறியப்படுகிறது. பொது வாழ்வில் உள்ள தலைவர் ஒருவரின் துணைவிகளில் துணைவரின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாகவும் …
-
- 10 replies
- 704 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பலில் கப்பலின் கப்டன் வல்வெட்டித்துறையில் இன்று காலமானார். 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி புலம்பெயர் தேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டுவும் 09 போராளிகளும் தாயகம் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தியக் கடற்படை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்ய முற்பட்டது. அதன் போது போராளிகள் கப்பலை தகர்த்து தங்கள் உயிர்களை அழித்தனர். சம்பவத்தின் போது கப்பலின் கப்டனை கடலில் குதிக்குமாறு போராளிகள் கேட்டுக்கொண்டதால் அவர் கடலில் குதித்த நிலையில் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். …
-
- 12 replies
- 966 views
-
-
இரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது. தோழர் தா. பாண்டியன் 8-ஆம் வகுப்பு படிக்கும்போதே பேச்சுப்போட்டியில் இணைந்து சிறந்த பேச்சாளராக உருவானவர். தனது 15 வயதி…
-
- 1 reply
- 564 views
-
-
உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் ஊடகவியலாளர் மேரி கொல்வின்! உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் மேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவில் உங்கள் பெயர் என்றென்றும் நிலை…
-
- 0 replies
- 642 views
-
-
ஈழத்து மூத்த இலக்கிய சிகரம் டொமினிக் ஜீவா காலமானார்! ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளரும் மூத்த இலக்கியவாதியுமான டொமினிக் ஜீவா இன்று (28) மாலை தனது 94 வது வயதில் காலமானார். டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித…
-
- 25 replies
- 3.1k views
- 1 follower
-
-
வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது.! 2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போர் உச்சம் பெற்றிருந்த வேளையில் போரை நிறுத்தி பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு வலியுறுத்தி சென்னையில் உள்ள சாஸ்த்திரி பவன் முன்பாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருந்த 'வீரத் தமிழ்மகன்' முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்படுகிறது. ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்து சாவடைந்த முத்துக்குமாரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு சென்னை கொளத்தூரில் இவ் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது. வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெட…
-
- 7 replies
- 1k views
-
-
ஆண்டொன்று போனாலும் ஆறாது எம் துயரம் . நீள் துயில் நீங்கி நீ வருவாயோ ? மாறாது மாறாது மண்ணில் உள்ள காலம் வரை ஒரு நாளும் ஓயாது சுழன்று திரியும் பம்பரமே ஆழ் துயரில் உடன் பிறப்புக்களும் உறவுகளும் உன் மனையாள்- பெண் குழந்தைகளும் தவியாய் தவித்து நிற்க உறக்கத்தில் உன் உயிர் பறந்ததென்ன ? வேலைப்பளுவிலும் "அக்கா "என அலைபேசியில் அழைத்து அத்தாரும் மக்களும் சுகமா என்பாய் உன் குரல் கேளாது தவிக்கிறேன் ஊருக்கு சென்ற நீ வந்ததும் "அழைப்பேன்" என சொல்லி காய்ச்சலில் வந்து படுத்து கண கதியில் போனதேன்?. இளையவனாய் பிறந்த நீ ஏனையவர்க்கு முன்பே ஒரு வார்த்தை சொல்லாமல் கடுகதியாய் பறந்ததேன் யாவரையும் சிரிக்க வைத்து …
-
- 0 replies
- 558 views
-
-
ஈழத்தின் பிரபல திரைப்பட இயக்குனர் ந.கேசவராஜன் மாரடைப்பால் காலமானார்.! ஈழத்தின் பிரபல திரைப்பட இயக்குனரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பணியாளருமான ந.கேசவராஜன் இன்று அதிகாலை மாரடைப்பினால் காலமானார். இந்திய சினிமா மோகத்தினை உடைத்து, இலங்கைத் தமிழர்களின் பேச்சுவழக்குப் பாணியை திரைப்படத்தில் வெளிப்படுத்தி வெற்றிகண்ட இயக்குனர்களில் முதல் நிலையில் அவர் திகழ்ந்திருந்தார். திசைகள் வெளிக்கும், பிஞ்சுமனம், கடலோரக்காற்று, அம்மாநலமா போன்ற போர்க்கால பிரபல திரைப்படங்களை இயக்கியிருந்தவர். போருக்குப் பின்னரும் தொடர்ந்தும் திரைப்படத் துறையில் செயற்பட்ட அவர், பெருமளவான குறும்படங்களை இயக்கியதுடன் நடிகராகவும் நடித்…
-
- 3 replies
- 1.9k views
-
-
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார் சென்னை, புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா. இவருக்கு 93 வயது. ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் சாந்தா. அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். டாக்டர் ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
மரண அறிவித்தல் பிறப்பு06 FEB 1959 இறப்பு09JAN 2021 திரு அசோகன் இராசையா உரிமையாளர்- PEARTREE RESTAURANT வயது 61 ஊரெழு(பிறந்த இடம்) கனடா Tribute NowSenCardha ரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம\ யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் இராசையா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகலிங்கம்(Master) பர்வதபத்தினி இராசையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாதுசிகாமணிபிள்ளை குணலஷ்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,, …
-
- 18 replies
- 2k views
- 1 follower
-
-
ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான வாசுதேவர்-நேரு கொரோனாவால் கனடாவில் உயிரிழப்பு.! ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த வாசுதேவர்-நேரு கொரோனாத் தொற்று காரணமாக கனடாவில் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த வாசுதேவர்-நேரு அவர்கள் ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டவர்களில் முக்கியமான முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தார். புலம் பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும் மூத்த எழுத்தாளருமான தொ.பரமசிவன் காலமானார்.! தமிழர் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன். திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். தமிழ் ஆய்வுலகில் பண்பாட்டு ஆய்வுகளில் தனது ஆய்வுத்திறந்தால் புதிய பார்வைகளைத் திறந்தவர். ஆய்வாளர் தொ.பரமசிவன், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தமிழ் ஆய்வுலகில் தொ.ப என்று அழைக்கப்படும் ஆய்வாளர் தொ.பரமசிவன், அறியப்படாத தமிழகம், அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர், இத…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப கால பொறுப்பாளர் சிறீ காலம் ஆகினார்! தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைய தளபதி கிட்டு அவர்களால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பளராக விளங்கிய சிறீ காலம் ஆகினார். 1984ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலைக் கழக உதவி விரிவுரையாளரான அப்பையா சிறீதரன் (சிறீ) களம் பல கண்ட போராளியாக மட்டுமன்றி ஒரு அரசியல் போராளியாகவும் விளங்கியவர். 1985ஆம் ஆண்டு யாழ் குடாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப காலப் பொறுப்பாளராக விளங்கிய சிறீ, பின்னர் பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்து அங்கு தமிழ…
-
- 20 replies
- 2.2k views
-
-
பாதிப்புற்ற பெண்கள் சார்ந்து ஒலித்த குரல் - விஜயராணி வணக்கம்…. பாருங்கோ…. என்னத்தைச் சொன்னாலும் பாருங்கோ, உங்கடை விசாலாட்சிப்பாட்டியின்ர கதையைப்போல ஒருத்தரும் சொல்லேலாது. இந்தக்குடுகுடு வயதிலையும் அந்தப்பாட்டி கதைக்கிற கதையளைக் கேட்டால் பாருங்கோ…. வயதுப்பிள்ளைகளுக்கும் ஒரு நப்பாசை தோன்றுது. என்ன இருந்தாலும் திங்கட்கிழமை எண்டால் பாட்டியின்ர நினைவு தன்னால வருகுது. அதனால சில திங்கட்கிழமையில அவவுக்கு தொண்டை கட்டிப்போறதோ இல்லை… வேற ஏதேன் கோளாறோ தெரியாது. இவ வரவே மாட்டா….. பாவம் கிழவிக்கு என்னாச்சும் நேந்து போச்சோ எண்டு ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை எண்ணிக்கை எத்தனை எண்டு உங்களுக்குத்தெரியுமே…? அதனாலை…
-
- 0 replies
- 566 views
-
-
தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்… December 1, 20208:02 pm வட தமிழீழம் , யாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பத்மநாதன் அவர்கள் காலமானார் உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காய் பெரும்பங்கு செய்தவர் .இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றன.இவர் மாவீரர் கப்டன் கெனடி/பாவாணனின் தந்தையும் ஆவார் https://www.meenagam.com/தமிழீழ-விளையாட்டுத்துறை/
-
- 7 replies
- 1.4k views
-
-
அம்மா காலமானார் என்று விசுகு முகநூலில் தகவல் போட்டுள்ளார். விசுகுவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். எமது தாயார் இன்று காலை 3 மணிக்கு இயற்கை மரணம் எய்தினார் . உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும். மேலும் தகவல்கள் பின்னர் அறியத்தருகின்றோம். Sri Parasu Kalamathi Selvam Gandhi Bala Janakan Balan
-
- 69 replies
- 7.2k views
- 6 followers
-
-
லண்டனில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணி முன்னாள் போராளி உயிரிழப்பு.! இலண்டன் லூசியம் பகுதியில் வாழ்ந்துவந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணி போராளியான தமிழன்பு என்று அழைக்கப்பட்ட பா சுபாசினி அவர்கள் உடல் நலக்குறைவால் சாவடைந்துள்ளார். தமிழீழ தேச விடுதலைப்போரில் கிளாலிப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் தனது காலை இழந்த இவர் பின்னர் கணனிப்பிரிவுடன் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . அத்துடன் போரின் கொடூர பக்க விளைவுகளால் மிகவும் கடுமையான வலிகளை சுமந்தபடி லண்டனில் வாழ்ந்து வந்த ஒரு பிள்ளையின் தாயான இவர் அன்று (22/11/2020) மரணமானார். https://newsthamil.com/லண்டனில்-தமிழீழ-விடுதலைப/
-
- 11 replies
- 1.3k views
-
-
தமிழ்நாட்டின் முன்னோடி பதிப்பாளர்களில் ஒருவரான 'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா தொற்றிலிருந்து அவர் விடுபட்ட நிலையிலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் உயிரிழந்தார். சென்னை லயோலா கல்லூரியில் படித்த அவர் ஆரம்பத்தில் விளம்பரத் துறையில் பணியாற்றினார். பிறகு, தமிழில் தரமான தயாரிப்பில் - தொழில்நுட்ப ரீதியாகவும் மொழி ரீதியாகவும் - புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் 1974ஆம் ஆண்டில் நண்பர்களோடு இணைந்து 'க்ரியா' பதிப்பகத்தைத் துவங்கினார். சுந்தர ர…
-
- 8 replies
- 1.7k views
-
-
அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி :: 50 ஆண்டுகளாக தமிழுக்கு உழைத்த ரஷ்ய தமிழறிஞர் மரணம்.! ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோவில் கொரோனாவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. இவர் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்தார். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி காலமானார். அவர் உயிரிழந்த தகவலை சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாசார மையத்தின் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் ச…
-
- 5 replies
- 877 views
- 1 follower
-
-
ஜெர்மனியை சேர்ந்த எழுத்தாளரும் யாழ் கருத்து களத்தில் சோழியான் என்ற பெயரில் எழுதுபவருமான ராஜன் அண்ணாவின் இறப்பு அதிர்ச்சி தருகிறது RIP தகவல் சபேசன் ஜெர்மனி
-
- 120 replies
- 16.4k views
- 4 followers
-
-
https://neethar.encl.lk/notice/11-11-2020/ இலங்கை அரசு 1990ம் ஆண்டு நடந்த உயர்தர பரீட்சையில் பல வடக்கு மாணவர்கள் நல்ல புள்ளிகள் எடுத்து சித்தியடைய; பலர் மெறிட்டில் பொறியியல் பல்கலைக்கு உள் வாங்கும் நிலை உருவானது. இதனால் பல்கைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grant Commission) தில்லுமுல்லு செய்து வெட்டு புள்ளியை உயர்த்தி குறைந்தளவு மாணவர்களையே எடுத்தது. இதனை அறிந்த W.S செந்தில்நாதன் மற்றும் சில வழக்கறிஞ்ர்கள் சேர்ந்து UGC ஏதிராக ஒரு பாதிக்கப்பட்ட மாணவனை வைத்து (அவர் இப்ப கனடாவில், ரகுவிற்கு தெரியும்)வழக்குபோட்டு வெற்றி பெற்றார்கள். அத்துடன் இவரின் கஸ்தூரியர் வீதியில் இருந்த இவரின் வீட்டில் தான் புலிகளின் முகாம் அமைந்திருந்தது, இவரின் மகன் தலை…
-
- 0 replies
- 581 views
-
-
ஈழத்தின் பிரபல எழுத்தாளர் ‘மா.பா.சி.’ காலமானார்.! ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான ‘மா.பா.சி.’ என அழைக்கப்படும் மா.பாலசிங்கம் இன்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 81. கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்த நிலையிலிருந்த அவர் இன்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது இறுதிக்கிரியைகள் குறித்து விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் https://vanakkamlondon.com/world/srilanka/2020/11/89556/
-
- 0 replies
- 622 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் உயிரிழப்பு 28 Views காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயார் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் பத்மாவதி (வயது 70) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். இவரது மகன் மாகாலிங்கம் உசாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து மீண்டு வந்தவர். பின்னர் இவர் தாயகத்தில் இடம்பெற்ற அனைத்து போராட்டங்களிலும் தனது மகனை தேடி நீதி கேட்டு கலந்து கொண்டார். இந்த நிலையிலே இவர் நேற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். காணாம…
-
- 2 replies
- 694 views
-
-
-
எம் தலைவரை ஆதரிச்ச காரணத்துக்கா 17மாதம் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர் 2002ம் ஆண்டு , எல்லாரும் அன்போடு மாமா என்று அழைக்கும் மாமா எம்மோடு இல்லை என்று நினைக்கும் போது கண்ணீர் ஆறா ஓடுது 😢😓 , மாமாவுக்கு ஆழ்ந்த இரங்கல் மாமாவின் ஆத்மா சாதி அடைய கடவுளை பிராத்திப்போம் 🙏🙏🙏
-
- 26 replies
- 3.6k views
-