எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் அணுகுமுறையை பார்க்கும் போது இன்றைய எமது அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தன்மையும் கபட நாடகங்களையும் என்னவென்பது? நக்குண்டார் நாவிழந்தார் என ரவிராஜ் அவர்கள் நினைவுகூர்கின்றார்.
-
- 2 replies
- 794 views
-
-
வரலாற்றை வரையும் தூரிகைகள் இரண்டு தசாப்த நிறைவில் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள் (2005 எழுதப்பட்ட வரலாறு ) விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம். வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டிய…
-
- 0 replies
- 1k views
-
-
புதிய ஆட்சியில் இந்திய அமெரிக்க ஆதரவு யார் பக்கம்?
-
- 3 replies
- 1.3k views
-
-
வீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020 வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக இன்று (12) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து இன்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கின்னஸ் சாதனை! யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் (றூபிக்ஸ் கியூப்) தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்தச் சிறுமி கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி கனடாவின் மிஸிஸாகா நகரில் கின்னஸ் சாதனை நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில், 55 நிமிடங்களில் 30 தடவைகள் 3×3 றூபிக்கின் கனசதுரத்தை ஒழுங்கு படுத்தி, 25 தடவைகள் என்றிருந்த முன்னைய சாதனையை முறியடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளார். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தி இவர் இந்த சாதனையை மேற்க…
-
- 10 replies
- 1.3k views
-
-
-
பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்…….! On Aug 2, 2020 சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக “ரோச்” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத் தெறித்து அவனிலேயே பட்டது. உறுமத்தொடங்கின துப்பாக்கிகள்; தாவிப்பாய்ந்தன எம் வீரன். தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். எதிரியின் காணிக்குள்ளேயே ஒரு கலைபாடு விடயம் என்னவென்றால், ஏற்கனவே இரு நாட்களாக அவனுக்குச் சீரான சாப்பாடு இல்லை கலைத்துச் சுட்ட பகைவனுக்குத் தப்ப அவன் இளைத்து இளைத்து ஓடினான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால் சோர்ந்து கொண்டே போனது; ஆனாலும் எங்கோ அவன் தீடிரென மறைந்து …
-
- 1 reply
- 1.5k views
-
-
தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.! Last updated Jul 27, 2020 சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது. (இந்த வகைச் சோகத்தை நேர சூசிவைத்து, சிங்கள தேசம் அடிக்கடி அனுபவிக்கின்றது என்பது வேறுவிடயம்!) தமிழீழத்தின் இதயப் பகுதியாக இருக்கும் மணலாற்றுக் கோட்டத்தின் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்களப்படை முகாம்களில் ஐந்தைப் புலிவீரர்கள் தாக்கி அழிக்க முற்பட்டபோது, எதிர்பாராத வகையில் இந்தச் சோக அதிர்ச்சியைத் தமிழினம் எதி…
-
- 1 reply
- 956 views
-
-
இன்றைய நெருக்கடிகளின் நடுவே சண்முகதாசன் பற்றிய நினைவுகள் - பிறந்ததின நூற்றாண்டு - ஜுலை 3, 2020 வீரகத்தி தனபாலசிங்கம் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் சரித்திரத்தை மாற்றுவதற்கு பெரும் ஆர்வத்துடன் அரசியல் வாழ்வை தொடங்கிய இடதுசாரி தலைவர்களில் பலர் இரு தசாப்த காலத்திற்குள்ளாகவே அதே சரித்திரத்தின் கைதிகளாக மாறினார்கள்.அமைச்சர் பதவிகளின் ஊடாக பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தை அனுபவிப்பதற்கும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகளின் மூலமாக மக்களின் வாக்குகளை இலகுவாக பெறுவதற்கும் சரித்திரம் காட்டிய குறுக்குவழிகளினால் கவர்ந்திழுக்கப்பட்ட அவர்கள் தொடர்ச்சியான வர்க்க சமரச நடவடிக்கைகளின் மூலமாக இடதுசாரி இயக்கத்தை சரணாகதிப் பாதையில் வழிநடத்திச் சீரழித்தார்கள். இலங்கையில் இடதுசா…
-
- 1 reply
- 760 views
-
-
தமிழர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட, கருப்பு ஜுலை தினம் இன்று! உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள். ஈழத்தமிழர்களுக்கு வருடங்கள் வன்முறைகளால், மாதங்கள் படுகொலைகளின் எண்ணிக்கைகளாலும் ஆனவை. இத்தனை ஆண்டுகால ஈழத்தமிழர்களின் வாழ்வில், தமிழர்கள் கடந்து வந்த பாதையினை மீட்டிப்பார்த்தால், எல்லா மாதங்களுமே எதோவோர் வன்முறையினாலோ அல்லது வன்முறைகளினாலோ சூழப்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரிகிறது. இவையெல்லாவற்றையும் இலங்கையின் பெரும்பான்மை அரசு எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றியதோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் இதுபோன்ற துயர வரலாறுகள் அழிக்கப்படுவதற்கான…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஈழம் இன்றோ நேற்றோ தோன்றிய பெயரல்ல.! ஒருமுறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை இராணுவ சோதனைச்சவாடி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, எனது புத்தகப் பையில் இருந்த இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம் என்ற புத்தகத்தை ஒரு வெடிகுண்டைப் போல மீட்டெடுத்தனர் இராணுவத்தினர். அப் புத்தகத்தில் இருந்த ஈழம் என்ற சொல்லைக் கண்டே அவர்கள் பீதியுற்றனர். அந்தக் காலத்தில் தமிழீழம் என்ற சொல்லுடன் ஈழம் என்ற சொல்லும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியிலும் புழக்கத்தில் இருந்தது. விடுதலைப் புலிகளின் காலத்தில் மாத்திரமல்ல இன்றும் ஈழம் என்ற பெயர் மாத்திரமல்ல தமிழ் என்ற பெயரும்கூட சிங்கள தேசத்திற்கு ஒவ்வாமையாகத்தான் இருக்கின்றது. போருக்கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகளின் தாக்குதலின் எதிர்விளைவே கறுப்புஜூலை என்பது பொய்- அதற்கு முன்னரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமாகிவிட்டன- பேர்ள் July 23, 2020 பேர்ள்- இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவராணத்திற்கான மக்கள் கறுப்பு ஜுலையின் போது- அதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை நாங்கள் பதிவிடுகின்றோம். 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரம் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கான எதிர்விளைவே என்ற கட்டுக்கiதை தொடர்ந்து சொல்லப்பட்டுவருகின்றது. இது பொய் அரசாங்கத்தை சேர்ந்தவர்களின் வன்முறைகள் ஜூலை மாததத்துக்கு முன்னரே அதிகரித்து வந்தன.தமிழர்களை தங்கள் விருப்பம் போல கொலை செய்தனர். மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,அரசியல் செயற்பாட்டாளர்கள்,ப…
-
- 4 replies
- 964 views
-
-
யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான். 1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே …
-
- 1 reply
- 729 views
-
-
(மீள் பதிவு ) 1979 இல் அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தி தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் எந்தவொரு காரணமுமின்றி வகை தொகையின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதைகளுக்குட்படுத்தி துன்புறுத்திக் கொண்டிருந்தது அரசாங்கம். நான்காம் மாடி, வெலிக்கடை, பனாகொடை, போகம்பரை, நியூமகஸின் சிறைச்சாலைகளிலும் பூஸா தடுப்பு முகாமிலும் பெரும் சிறைச்சாலையை உருவாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் குட்டிமணி, 1981 ஏப்ரல் ஐந்தாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது…
-
- 1 reply
- 2.1k views
-
-
1972 களிலேயே தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் மாபெரும் திருப்பு முனையை, ஓர் புதிய சகாப்தத்தைப் படைத்தது, 1983 யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் இடம்பெற்ற 13 இராணுவவீரர் மீதான தாக்குதலாகும். இம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப்பு புலிகளின் பலர் (தலைவர் பிரபாகரன் தவிர) இன்று எம்முடன் இல்லை. போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, இத்தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களான செல்லக்கிளி, பொன்னம்மான், விக்ரர், கணேஸ், ரஞ்சன், ரெஜி, லிங்கம் ஆகியோரின் நினைவாக………. அன்று கிட்டண்ணா அவர்களால் “போராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக…” எழுதப்பட்ட கட்டுரையே இது. திருநெல்வேலித் தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களில் ஒருவரான கிட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். https://velupillaiprabhakaran.wordpress.com/category/தலைவரின்-சிந்தனைகள்/
-
- 2 replies
- 2.5k views
-
-
கறுப்பு ஜூலை; “காயாத இரத்தம்” July 21, 2020 தாயகன் இலங்கைத் தமிழர் வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள் . இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் இதயங்களை உறைய வைத்த கதறலும், கண்ணீரும் காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்? கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த தமிழினப் படுகொலை நடந்து எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் 37 ஆண்டுகள். வாகனங்களில் ச…
-
- 0 replies
- 1k views
-
-
திருக்கோணேஸ்வரமும் எல்லாவல மேதானந்த தேரரரும் – சுரேஸ்குமார் சஞ்சுதா… July 19, 2020 திருக்கோணேஸ்வரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேர் வெளியிட்டுள்ள கருத்தானது எம்மவர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழர் வரலாறு தொடர்பாக அதிகார வர்க்கத்திலுள்ளவர்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் எவ்வகையானவை என்பதை உணர்த்தும் வண்ணமாகவே வேதனைக்குரிய இவ்விடயத்தை அங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. அத்துடன் தேரரின் கருத்தில் உள்ள ஆதாரமற்ற கருத்துக்களையும் அபத்தமான வாதங்களையும் எடுத்துக்காட்டி உண்மையை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வகையில் அவர…
-
- 0 replies
- 840 views
-
-
தமிழில் பற்று சீட்டு பெற.. 30 நிமிடங்கள் யாழில் காத்திருந்த இளைஞன்! யாழ்.பிரதான தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழ் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து, தமிழ் எழுதி வாங்கி சென்றுள்ளார். யாழ்.பிரதான தபாலகத்தில் நேற்று முந்தினம் புதன்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போக்குவரத்து குற்றம் ஒன்றுக்காக பொலிசாரினால் தண்டம் விதிக்கப்பட்ட நிலையில் அதற்கான குற்ற பணத்தினை தபாலகத்தில் செலுத்தியுள்ளார். அதன் போது தபாலக உத்தியோகஸ்தர் பற்று சீட்டை ஆங்கிலத்தில் எழுத முற்பட்ட போது, குறித்த இளைஞன் தனக்கு தமிழ் மொழியில் பற்று சீட்டில் எழுதி தாருங்கள் என கேட்டுள்ளார். அதன் போது உத்தியோகஸ்தர், நாம் ஆங்கிலத்தில் எழுதி கொடுப…
-
- 4 replies
- 772 views
-
-
சிங்களத்தின் தலையில் பேரடி கொடுத்த புலிகளின் ஓயாத அலைகள் – 01 Last updated Jul 17, 2020 ஓயாத அலைகள் – 01 முல்லை வெற்றிச் சமர் (ஆய்வு) யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது. ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், இதன் பெயரிற்கேற்ப பிற்பட்ட காலத்தில் ஓயாத அலைகள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வெற்றிகர வலிந்த தாக்குதல்களிற்கான முதற்படியாக …
-
- 2 replies
- 842 views
-
-
இன்று ஆடிப்பிறப்பு – ஈழ தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை.! கவிஞர் தீபச்செல்வன் ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை ஈழ தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது. சூ…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
பெருவெளி அகதிமுகாம் படுகொலை 15 யூலை 1986 On Jul 15, 2020 திருகோணமலை கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் பெருவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உளள்து. இக்கிராமம் மல்லிகைத்தீவு கிராமசபை எல்லைக்குட்பட்ட தமிழ் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசமாகும். 1985ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்தப் பாடசாலை தமிழ் மக்களின் அகதி முகாமாக இயங்கிவந்தது. கிராமசபை இயங்கி வந்த காலங்களில் மல்லிகைத்தீவு கிராமசபை பெரும்பான்மையான தமிழ்க் கிராமங்களையும், சில சிங்களக் கிராமங்களையும் உளள்டக்கியிருந்தது. அவற்றில் தெகிவத்தை, நீலாப்பொல போன்ற சிங்களக் கிராமங்களில் இருந்த மக்களில் பலர் ஊர்காவற்பட…
-
- 0 replies
- 685 views
-
-
75 ஆண்டுகால ‘பாரதி வாசிகசாலை’! இன்றைய துயர நிலை.! ஜூலை 15, 1945 ம் ஆண்டு எங்கள் ஊரின் வாசிகசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று 75 ஆண்டுகள் கடந்தும் இயக்கத்தில் உள்ளது. வாசிப்பு பழக்கம் என்பது இன்று வேறு வடிவம் பெற்றுள்ளது. முன்னோர்கள் காலத்தில் அதன் வடிவமும் தேவவையும் எவ்வாறு இருந்து பின்னைய காலங்களில் எவ்வாறான மாற்றம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் அறிவோம். குறிப்பாக இன்று நிலவும் இந்த உலகடங்கு நிலையில் பொது இடத்தில் சென்று வாசிப்பது என்பதோ அல்லது நூல்கள், புதினங்கள் வாசிப்பது என்பதோ உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. அன்றொருநாள் எங்கள் ஊரில் ஒருவருக்கு தந்தி வந்ததாம். அதனை வாங்கிப் பார்த்து தகவலை அறியமுடியாமல் அந்த தந்தி கொண்டுவந்த அஞ்சலக ஊழியரிடமே…
-
- 0 replies
- 626 views
-
-
தேரர்களும் இராணுவமும் கிழக்கின் தலைவிதியை மாற்றப்போகின்றனர் – விக்கினேஸ்வரன் காட்டம் கிழக்கின் தொல்பொருளியல் செயலணி எதற்காக ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்களை கவனிக்கும் போதே தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. தேரர்ககளினதும் இராணுவத்தினதும் உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை மாற்றப் போகின்றார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்க ஜனாதிபதி நியமித்துள்ள செயலணியில் அங்கம் வகிக்கும் எல்லாவல மேதானந்த தேரர் அண்மைக்காலமாக முன்வைத்து வருகின்ற கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற…
-
- 1 reply
- 586 views
-