எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
சம்பூர் மக்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டு நேற்றோடு ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. தங்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டி கட்டைப்பறிச்சான் அகதிமுகாமில் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபங்களை ஏந்தி ஊருக்குத் திரும்பும் கனவு நனவாக வேண்டுமென வேண்டினர். அத்துடன் 10 என்ற வடிவத்திலும் தீபத்தை ஏற்றினர். கடந்த 2006ஆம் ஆண்டில் சம்பூரை இலங்கை அரச படைகள் கைப்பற்றியபோது அந்தக் கிராம மக்கள் அகதி ஆனார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மூதூரில் உள்ள அகதி முகாஙகளில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாங்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் பெரும் துயரங்களுக்கு மத்தியி…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
இலங்கை: அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் இடம் பெயர்ந்த தமிழர்கள் வவுனியா, செட்டிக்குளத்தில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்கள், வேறு புதிய முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளனர். வன்னிப் பகுதியில் போரினால் இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதி சற்றும் இல்லாத கொட்டாரங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட சுகாதார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை எதுவும் இங்கு சரிவர இல்லை. இதுகுறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குறை கூறி வருகின்றன. இந்த நிலையில், வவுனியா மற்றும் செட்டிக்குளத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை வேறு புதிய முகாம்களுக்குக் கொண்டு செல்ல …
-
- 0 replies
- 1.1k views
-
-
பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் - கானா பிரபா அது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கடலை, கச்சான், இனிப்பு, ஐஸ்கிறீம் கடைகளும், பனை, தென்னை வழியே பிறக்கும் சுதேச உற்பத்திப் பொருட்களுமாகக் கோயிலைச் சூழவும் மூகாமிட்டிருக்கக், கோயில் முன்றலில் சங்கீதக் கச்சேரிகள், கதாப் பிரசங்களுமாகச் சாமம் தொடும் நிகழ்ச்சிகள். இதெல்லாம் அந்தக் கோயில் திருவிழாவுக்கான் தற்காலிக ஏற்பாடுகள். ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு நிரந்தரப் பொழுது போக்கு மையமாக அப்போது அமைந்தது பண்டிதர் சரணாலயம். நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குத் தட்டாதெருச் சந்தியாலோ, பலாலி வீதியாலோ பயணப்படும் போது எதிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
என் நேசத்துக்குரிய கரிகாலனே... உன்னிடம் சொல்வதற்கு சில சேதிகள் உண்டு. உன் மீதான எங்களின் ப்ரியம் உனக்கே ஆச்சரியமாய் இருக்கலாம். தேசங்கள் கடந்தும் தமிழால் ஒன்றானஉறவுகளின் இதயங்களில் உனக்கிருக்கும் தனித்துவமான இடம் குறித்து நீ புருவங்களை உயர்த்தலாம். கேள்... இங்கே ஒரு இனக்குழுவினர் தமக்கென்று உண்டாக்கிய தலைவர் மூன்று நாட்களில் நான்கு கட்சி மாறுகிறார்... இன்னொரு இனக்குழுவினரின் தலைவர்கள் தெற்கும் , கிழக்கும் , வடக்கும் என்று அடிபடுகிறார்கள். இன்னொரு குழுவின் தலைவர்கள் அவர்கள் மக்களின் ஊதியத்தைப் எற்றுக்கொடுக்க கூட குரல் கொடுக்க பின்நிற்கிறார்கள். பெரும்பான்மை குழுவொன்று தமக்காய் உண்டாக்கிய தலைமைகள், இல்லாத பகடிகளும் சில்லறை வேலைகளையும்…
-
- 5 replies
- 1.1k views
-
-
நினைவுக் கற்களாகும் சுமைதாங்கிகள்… தமிழர்களிற்கே உரித்தான ஓர் கலாசாரம் அடிப்படை போக்குவரத்து வசதிகள் அற்ற காலத்தில் பாதசாரிகள் கொண்டு செல்லும் சுமையை தனித்து இறக்கி, களைப்பாறி தூக்கிச் செல்லவும், மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றான கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் என 2000ஆம் ஆண்டுகளிற்கும் முன்பு அமைக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் அதன் முக்கியத்துவமும் அறியாமல் குத்துக்கல்லுகளாக காட்சியளிக்கின்றன. இயந்திரப் போக்குவரத்திற்கு முன்பு மடம், கேணி, சுமைதாங்கி, ஆவுரஞ்சிக் கல் என்பன கூட்டுணைந்து அமைக்கப்பட்டன. இது 2 ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பு அறிமுகமானதாக வரலாற்றுப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் தெரிவிப்பதோடு, இவ்வாறு அமைக்கும் மரபு மாட்டு வண்டில் பயணங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
முகாம்களில் இருந்த தமிழர்களில் பெரும்பாலோர், சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்' என்கிறது இலங்கை அரசு. இவ்வாறு மீள் குடியேற்றப்பட்டு உள்ள ஈழ மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்கள் நேரில் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் ஒருவர். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவரைச் சந்தித்தபோது, தமிழ் மக்களின் தொடரும் துயரங்களை விவரித்தார். ''மன்னார் தொடக்கம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் மீள் குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்தோம். சில இடங்களைத் தவிர, எல்லா இடங்களிலும் சொந்தக் காணிகளில் மக்கள் குடியேற்றப்பட்டு உள்ளனர். தகரம், தார்ப்பாலின் துணி எனக் கிடைத்ததைவைத்து கூடாரம் அமைத்து இருக்கிறார…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சேஆகியோர்கள் பொய்யர்கள் என பாரதி எயார்டெல்நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய எயார்டெல் நிறுவனம் இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பித்தது. இவர்கள் வழங்கிய எழுத்துமூலமற்ற அதனைத்து உறுதிமொழிகளையும் மீறியுள்ளதாக எயார்டெல் நிறுவனம் இந்திய அரசாங்கத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் கைடயடக்க தொலைபேசி சேவைக்காக 20 பில்லியன் ரூபாவை பாரதி எயார்டெல் நிறுவனம் முதலீட்டு செய்துள்ளது. எந்த கையடக்க தொலைபேசி நிறுவனத்திற்கு விசேடமான கட்டணங்களை அறிவிட சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அரசாங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத் தமிழர்களின் தேசிய இயக்கம் சமூக சக்திகள் பற்றிய விவாதத்திற்கான முன்னோடிக் குறிப்புக்கள் உயிர்ப்பு சஞ்சிகையில் வந்த நீண்டதொரு கட்டுரையில் இருந்து......... http://www.noolaham.net/library/books/02/133/133.pdf
-
- 2 replies
- 1.1k views
-
-
தலைவனின் சிந்தனைகள் "...நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்..." இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி. பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான். நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது. மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
'சிறீலங்காவைப் புறக்கணி' - சிறீலங்காவின் பொருளாதாரத்தை முடக்கும் புலம்பெயர் இளையோர் ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் சிறீலங்காவைப் புறக்கணிக்கும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோ மாநகரின் ஜேன் (Jane) மற்றும் பிஞ் (Finch) சந்திப்பில் நடாத்தப்பட்ட இப் புறக்கணிப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தமிழீழ மக்களிள் மீது சிறீலங்கா அரசு தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான நடவடிக்கையாக முன்னெடுக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. 30 வருடங்களிற்கு மேலான தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் பாரிய பொருளாதார இழப்பினை சிறீலங்கா அரசானது அடைந்துள்ளது. இப் பொருளாதார இழப்பினை சிறீலங்காவின் ஏற…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ மாவட்டங்கள் {1}யாழ்ப்பாணம்{சப்ததீவுகள் உட்பட} {2}மன்னார் {3}கிளிநொச்சி {4}வவுனியா {5}திருகோணமலை {6}மட்டக்களப்பு {7}அம்பாறை {8}புத்தளம் {9}முல்லைத்தீவு *தமிழீழ உட்கட்டுமான அமைப்புகள் வழங்கற் பிரிவு மருத்துவப் பிரிவுகொள்முதல் பிரிவு பரப்புரைப் பிரிவு தமிழீழப் பொறியியற்றுறை வெடிபொருள்தொழில்நுட்பப் பிரிவு கணிணி தொழில்நுட்பப்பிரிவு இலத்திரனியல்தொழில்நுட்பப் பிரிவு போர்கருவித்தொழிற்சாலை தமிழீழ இராணுவவிஞ்ஞானக் கல்லூரி விடுதலைப்புலிகளின்ஆங்கிலக் கல்லூரிதிரைப்பட, புத்தகமொழிபெயர்ப்புத் துறை புலனாய்வுத் துறை தமிழீழவிடுதகலைப்புலிகளின்அரசியற்றுறைதமிழீழ விளையாட்டுத்துறைதமிழீழக்கல்வி மேம்பாட்டுக்கழகம் தமிழீழக்கலை பண்பாட்டுக் கழகம் …
-
- 3 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை காரணம் காட்டி அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பல்கலைகழகம் அறிவித்த முனைவர் (Doctorate) பட்டத்தை வாங்க மறுத்த அமிதாப்பச்சன் இலங்கையில் தமிழ் இனமே அழிக்கப்பட்ட அம்மண்ணில் குத்தாட்டம் போட செல்வது ஏன்? விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளார் - சிங்கள ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் எனவும் அமிதாப் பச்சனிடம் புலி ஆதரவாளர்கள் கோரியுள்ளனர். …
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
சுற்றுலா சம்பந்தமான ஒரு களத்தில் ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்விக்கு சில வெளிநாட்டவர் சொன்ன பதில்கள் இந்தப் பக்கத்தில் உள்ளது. புலிகள் குறித்து எந்தவகையான பதிவுகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள். Unlike organisations in other parts of the world the Tamil Tigers (LTTE) have never targeted tourists To be honest the Ltte don t directly target civilians (unlike the London tube bombers) they target Government and military targets Read more
-
- 2 replies
- 1.1k views
-
-
வடக்கு வேலிக்கப்பால் வளர்ந்திருந்த பனைமரங்கள் காலையிலே கள்ளிறக்கி காவோலை விற்று… பாத்தியிலே போட்டு பனங்கிழங்கு விற்று… அந்தக் கறுப்பன்களால் அசைந்த எம்வாழ்க்கை……. சொந்த இடம் விட்டு சோறளித்த மண் விட்டு குந்த இடமின்றி கூடாரம் துணை கொண்டு சொந்தபந்தம் விட்டு தொலைதூரம் வந்து வெந்த புண்ணில் வேல்தாங்கி வெளியூரில் குடிபுகுந்தோம் அன்னை மடி காண ஆவலுடன் நானன்று பண்ணைப்பாலமதை தாண்டிப்பார்க்கையிலே என்னை வரவேற்க எதிரே ஓர் காவலரண் எங்கேயோ பார்த்ததாக என்னுள்ளே ஞாபகம் மஞ்சள் பெயின்ராலே மச்சான் போட்ட நம்பர் மங்கிப்போய்க் கிடந்தந்த மாற்றானின் அரணில் எங்களுக்கு வாழ்வளித்த எம்மண்ணின் பனைமரங்கள் எமனுக்கே காவலாய் இருக்குமென்று நினைத்ததில்லை எங்கடவூர்ப்பனைமரங்கள் எங்களைப்போலத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம். மா.ஜெயக்குமார். இத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேத…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்குமிடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து, பல்வேறுபட்ட நிகழ்வுகளின் மாற்றங்கள் ஈழத் தமிழர் வாழ்வில் ஏற்பட்டு போய்விட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நன்மைகளிலொன்றாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மறைந்த தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு தினக்கூட்டம் யாழ்ப்பாணம், வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ள சமயம் இந்நினைவுரையை வெளிப்படுத்துகின்றேன். மாமனிதர் குமார் பொன்னம்பலம் இந்த வேளையில் இருந்திருந்தால் இன்னும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களைத் தொடர்ந்தும் அங்கே அடைபட்டுக் கொண்டிருக்க அனுமதித்திருக்க மாட்டார். சிறைப்பட்ட இளைஞர்களுக்குத் தான் மாமனிதர் குமார் …
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ வேண்டும். அடிமை விலங்கை அறுத்தெறிய வேண்டும் என்ற உன்னதமான இலட்சியத்துடன் நடத்தப்பட்ட தியாக வேள்வியொன்று ஈனத்தனமானவர்களின் ஒட்டு மொத்த முயற்சியால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள
-
- 0 replies
- 1.1k views
-
-
தாயுமாய் சுமைதாங்கியுமாய் நின்றவர்: பாலா அண்ணா நினைவுகளில் ஒரு துளிப் பதிவு! - சர்வே 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடுப்பகுதி என நினைக்கிறேன். பாலா அண்ணாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று வருகிறது. 'எப்படி இருக்கிறாயடாப்பா' என்று சுகம் விசாரித்த பின்னர் மிகச் சாதாரணமாகச் சொன்னார். "பாலா அண்ணா கெதியா மேலே போகப் போறார்" எனக்குத் திக்கென்றது. என்னைச் சுதாகரித்துக் கொள்ள முடிவதற்கு முன்னர் பாலா அண்ணா தொடர்ந்தார் "எனக்குப் புற்று நோய் முத்திட்டுது. உடம்லெ;லாம் புற்றுக்கள் பரவியிட்டுதாம். கன நாளைக்குத் தாக்குப் பிடிக்கிறது கஸ்டம் எண்டு டொக்டேர்ஸ் சொல்லிப் போட்டினம். இப்ப எனக்கு சாவைப் பத்தியில்லை நோவைப் பத்தித்தான் கவலையாயிருக்கு" எனக்கூறிச் சிரித்தார் பாலா அ…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழீழ மக்களிற்கு அளப்பரிய சேவையாற்றிய மருத்துவர் அருள் காலமானார் 226 Views முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்டவரும் தமிழீழ மருத்துவப்பிரிவில் மருத்துவராக முள்ளிவாய்க்கால் இறுதிக்காலம் வரை திறம்படச் செயற்பட்டவரும் தமிழீழ நிர்வாகசேவை வவுனியா மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்த திரு.ஐதீந்திரா(அருள்/றோசான்) அவர்கள் காலமாகியுள்ளார். அவருக்கு இலக்கு செய்தி நிறுவனம் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், மருத்துவர் அருள் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. https://www.ilakku.org/?p=47506
-
- 7 replies
- 1.1k views
-
-
தாயகத்தின் தந்தை நவம்பர் 13, 2020/தேசக்காற்று/தியாகிகள், உணர்வின் அலைகள்/0 கருத்து குறிப்பு: தாயகத் தந்தை எனும் இக்காவியத்திற்காக கானக வாழ்வின்போது விடுதலைப் போராட்டத்திற்கும், தேசியத் தலைவர் அவர்களிற்கும், போராளிகளுக்கும் உறுதுணையாக் இருந்த லெப். கேணல் நவம் அவர்களின் தந்தையின் அன்றைய கானக வாழ்வில் போராளிகளுடன் இருக்கும் நிழலாடும் நினைவுகளை இணைக்கின்றோம். ஐயா – வரலாற்றில் பதிவுபெற தவறக்கூடாத பெரிய மனிதர். வரலாற்றில் பதிவு பெறுவதால் பெருமை பெறுவோர் பலர். சிலரை பதிவாக்கிக் கொள்ளுவதால் வரலாறே பெருமை கொள்ளும். அந்தச் சிலரில் ஐயாவும் ஒருவர். இளமையில் இருந்தே உழைத்துப் பழகிய ஐயா இன்றும் அறுபதைத்தாண்டி விட்ட இன்றும் உழைக்கிறார். வன்னி நில…
-
- 0 replies
- 1.1k views
-
-
பதினைந்து நிமிடங்களில், இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரமும் நிர்க்கதியும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிற படைப்பு 'தவிப்பு'. தமிழ்வேந்தனின் படைப்புலகம் தமிழ் மக்களின் அக்கறை சார்ந்து விரிந்திருக்கிறது. ஒளிப்பதி வும் குறும்படமும் அமைந் திருக்கிற விதம் கச்சிதம். பிரசாரம் இல்லாமல், வேதனையின் கீற்றுகள் வெளிப் படும்படியாக இருப்பது இயக்குநரின் திறமை! இயக்கம்: வீ.மு.தமிழ்வேந்தன 9டி, பல்லவன் குடியிருப்பு, துரைப்பாக்கம், சென்னை97. http://tamilthesiyam.blogspot.com/2009/03/...-post_7505.html
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறைகூவுவோம் புறக்கணிப்போம் !! புறக்கணிப்போம் !!சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறை கூவுவோம்.எம் இனத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எமது சொந்தங்களை இனப்படுகொலை திட்டமிட்ட இனப்படு கொலை செய்தும் பாலியல் வல்லுறவுச் செய்தும் இன்று வரை தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்தக் கொடுங்கோல் சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தைப் புலம் பெயர் தமிழ் மக்களும் தமிழக, மலேசியா, சிங்கப்பூர் ம…
-
- 1 reply
- 1.1k views
-