அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சீர் மங்கும் மேதினம் ` நாளை மே முதலாம் திகதி. மேதினி எங்கும் மேதினம் தொழிலாளர் திருநாள் அனுஷ்டிக்கப்படும் வேளை அது. எனினும் இம்முறை இலங்கையில் அது மே முதலாம் திகதிக்கு முதல் நாளான இன்று இடம்பெறுகின்றது. முன்னைய வருடங்களில் தசாப்தங்களில் கொண்டாடப்பட்டமைபோல எழுச்சியாக, மலர்ச்சியாக, உத்வேகத்தோடு இப்போதெல்லாம் மேதினம் அமைவதில்லை என்பது தெளிவு. உழைப்பாளர் வர்க்கத்தின் உழைப்பைப் போற்றி, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் எழுச்சிக் கோஷத்தோடு கொண்டாடப்படும் மேதினத்தின் சிறப்பும், தொனியும் காலம் செல்லச் செல்ல இப்போது மங்கி வருவது கண்கூடு. இதற்குக் காரணம் என்ன? உலக ஒழுங்கு மாறி வருவதே இதற்கு அடிப்படை. அது எங்ஙனம் என்பதை இந்த உழைப்பாளர் தினத்தில் அசைபோடுவது பொர…
-
- 1 reply
- 1.1k views
-
-
றோம், ( சின்ஹுவா ) இத்தாலிய பிரதமர் கியூசெப்பி கொன்ரேயின் அரசாங்கம் கடந்தவாரம் வீழ்ச்சிகண்டபோது அது பதவியில் 15 மாதங்களைப் பூர்த்திசெய்வதற்கு 11 நாட்கள் குறைவாக இருந்தன.அதன் அர்த்தம் இரண்டாவது உலகப்போருக்கு பின்னரான காலகட்டத்தில் இத்தாலியில் பதவியில் இருந்த ஒரு அரசாங்கத்தின் சராசரி காலநீட்சியை உண்மையில் அதிகரித்தது என்பதேயாகும். புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் போது இத்தாலி உலகப்போரின் முடிவுக்கு பின்னரான ( 74 வருடங்களுக்கும் சற்று கூடுதலான காலகட்டம் ) அதன் 69 வது அரசாங்கத்தைக் காணும். ஒரு அரசாங்கம் சராசரி 13 மாதங்களுக்கும் குறைவான காலமே பதவியில் இருந்திருக்கிறது. இது ஐரோப்பாவின் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாத ' சுழலும் கதவு ' போன்ற நிலைவரமாகும்.அதே 74 வருட கால…
-
- 1 reply
- 959 views
-
-
ஜெனீவாவுக்குப் போதல்: - நிலாந்தன் தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஓரு புதிய அம்சம் 'ஜெனீவாவுக்கு போதல்.' இது நீதி தேடிப் போகும்ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள். அரசியல் வாதிகள் போகிறார்கள் செயற்பாட்டாளர்கள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் போகிறார்கள்ஊடகவியலாளர்கள் போகிறார்கள் என். ஜி. ஓ. அலுவலர்கள் போகிறார்கள். இவர்;களோடு சில சமயங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தும் சி…
-
- 1 reply
- 369 views
-
-
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்கு பின்பான இலங்கை - இந்திய உறவு - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை-இந்திய உறவில் நெருக்கடி நிலவுவதற்கான புறச்சூழல் தென்படுவதாக தெரிகிறது. குறிப்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் 06.01.2021 இல் இலங்கையின் அழைப்பின் பேரில் வருகைதந்த போதே அத்தகைய சூழல் ஆரம்பித்துள்ளது எனலாம். ஆனாலும் முழுமையாக இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா முரண்பட்டுக் கொள்ளும் போக்கு எழவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மறுபக்கமாக குறிப்பிடுவதாயின் எதிர்காலத்தில் அத்தகைய நிலை தோன்றுவதை தடுக்க முடியாத போக்கு ஏற்படவும் வாய்புள்ளது. ஆனால் அதற்காக இரு தரப்பிலும் அரசாங்கள் அமைந்திருப்பதோடு பிராந்திய சர்வதேச சூழலும் வாய்ப்பானதாக அமைய வேண்டும். இக்க…
-
- 1 reply
- 625 views
- 1 follower
-
-
ஒற்றையாட்சியைத் தமிழினம் ஒருபோதும் ஏற்றதில்லை - வி.ரி.தமிழ்மாறன் தேர்தலில் தோற்றிருந்தால் மண்ணுக்கடியில் சங்கமித்திருப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மண்ணில் நின்று (பொலனறுவையில்) விளம்பியுள்ளார். மண்ணுக்கடியில் போகவிருந்த எங்களில் பலரும் தற்போது தப்பித்து விட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள். ஆயினும் உரிமைக்கான குரலை உரத்து ஒலித்ததால் எங்கள் மீது திணிக்கப்பட்டிருந்த எல்லாவிதமான அச்சுறுத்தல்களும் முற்றாக நீங்கிவிட்டதாகக் கூறமுடியாது. வடக்கு கிழக்கில் குடிகொண்டிருக்கும் புலனாய்வுக் கட்டமைப்பு முற்றிலும் அகற்றப்படாத நிலையில் தான் நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்பதை மறக்கக் கூடாது. இராணுவக் கெடுபிடியிலிருந்து இன்னும் வ…
-
- 1 reply
- 497 views
-
-
இலங்கையின் இளைஞர்கள் மத்தியிலான 'நீல நிற' வேலைகள் மீதான தயக்கம் ஒரு பெரிய சமூக-பொருளாதார சவாலாகும், இது உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வேலையின்மை, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு இந்த மனநிலை நேரடியாகக் காரணமாக அமைகிறது. கல்வி முறை சீர்திருத்தம், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம், சமூக மதிப்பீடுகளில் மாற்றம் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் மூலம் இந்த மனநிலையை மாற்றியமைக்கலாம். மேம்பட்ட நாடுகள் உடல் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், இலங்கை இளைஞர்கள் தங்களின் மனநிலையை மாற்றிக்கொண்டு நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்க பங்களிக்க வேண்டும். இந்த மாற்றங்கள் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன், …
-
- 1 reply
- 347 views
- 1 follower
-
-
[size=4]ஆய்வாளர்கள் உதவுவார்கள் என நம்பும் ஆய்வுகூடத் தவளைகள் நாம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-09-21 09:48:59| யாழ்ப்பாணம்][/size] [size=1] [size=4]வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் இலங்கைக்கும் வடபகுதிக்கும் அடிக்கடி விஜயம் செய்கின்றனர். போருக்குப் பின்பாக, வெளிநாட்டு இராஜ தந் திரிகளின் இலங்கைக்கான விஜயமும் வடபகு திக்கான வருகையும் பல தடவைகள் இடம்பெற் றுள்ளன. [/size][/size] [size=1] [size=4]வெளிநாட்டு இராஜதந்திரிகளின் வருகையின் நோக்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ் வாதாரங்கள் பற்றி அறிந்துகொள்வது என்ப தாக இருந்தால், போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அவர்களால் எங்கள் நிலைமைகளை உணர முடியவில்ல…
-
- 1 reply
- 953 views
-
-
ஊர்கூடித் தேரிழுப்போம் கொரோனா வைரஸ் அச்சம், இலங்கையெங்கும் பரவியுள்ளது. அச்சத்துக்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால், இன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில், உண்மை குறைவாகவும் பொய் அதிகமாகவும் உள்ளன. எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்பதைப் பிரித்தறியும் வாய்பற்ற நிலையே தொடருகிறது. ஏராளமான தவறான தகவல்கள் குறிப்பாக, எமது அலைபேசிகளை நிறைக்கின்றன. இவை, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்குகின்றன. முதலாவது, கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்தும் தொற்றுக்கான தீர்வு குறித்தும் பரப்பப்படும் செய்திகள், அறிவியலுக்கு மு…
-
- 1 reply
- 986 views
-
-
2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?- ப.சிதம்பரம் “அனைத்து ஆண்களும் பெண்களும் கதாபாத்திரங்களே, அவர்கள் வருவதற்கும் போவதற்கும் தனித்தனி வழிகள்; கலைஞன் ஒருவனே - வேடங்களோ பல!” - வில்லியம் ஷேக்ஸ்பியர் இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவி ஏற்றிருப்பார். தனிக் கட்சியின் பெரும்பான்மை வலிமையுடன் இதுவரை ஆண்ட ‘யதேச்சதிகாரர் மோடி’ விடைபெற்றுக்கொள்வார்; பெரும்பான்மைக்குக் கூடுதலாக வெறும் 20 எம்.பி.க்களை மட்டுமே பெற்ற ‘பல கட்சி கூட்டணி அரசின் பிரதமர் (அடங்கி நடக்க வேண்டிய) மோடி’ ஆகப் பதவியேற்பார். இது அவருக்குப் புதிய அனுபவமாக இருக்கும். சென்ற 15 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் இப…
-
- 1 reply
- 354 views
-
-
கருத்துக்களத்தில் சட்டத்தரணி தவராசா மற்றும் துரை ராஜசிங்கம்
-
- 1 reply
- 508 views
-
-
சிறீலங்காவின் யாழ் பிராந்தியத்திற்கான கட்டளை தளபதியுடன் கடந்த 21ஆம் திகதி யாழ் பல்கலைச் சமூகம் சந்திப்பொன்றை நடத்தியது யாவரும் அறிந்ததே. இக் கலந்துரையாடலில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைகழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு யாழ். மாவட்ட கட்டளை தளபதி அரும்பாடுபடுகின்றார் என்பது இதனூடாக அறியலாம். அரும்பாடு பட்டாவது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என இவர் நினைப்பது பகல் கனவாக அமையும். யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மாவீரர் தினத்தை கொண்டாட முனைந்தார்கள் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்படார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர்கள் விடுதலைப் புலிகளின…
-
- 1 reply
- 753 views
-
-
ஒபாமாவின் இரண்டாவது தவணையில் இலங்கை எத்தகைய முக்கியத்துவத்தை பெறக்கூடும்? - யதீந்திரா ஜோன் கெரி வெளிவிவகாரச் செயலராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் மிக உயர்ந்த இரண்டு பதவிநிலைகளான பாதுகாப்புச் செயலர் மற்றும் மத்திய புலனாய்வு முகவரகத்தின் (CIA) பணிப்பாளர் ஆகியவற்றுக்கான புதிய பெயர்களை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அறிவித்திருக்கின்றார். இதனடிப்படையில், புதிய பாதுகாப்புச் செயலராக சக் ஹெகல் (Chuck Hagel) மற்றும் சி.ஐ.ஏயின் பணிப்பாளராக ஜோன் பிரனன் (John Brennan) ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். முன்னாள் அமெரிக்க செனட்டரான ஹெகல், அமெரிக்க வட்டாரங்களில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர் என்னும் விமர்சனத்தை பெற்றிருப்பவர். சில விமர்சனங்களுக்கு மத்தியிலேயே இவரது பெ…
-
- 1 reply
- 746 views
-
-
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் இலங்கை விஜயமும், அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் புது டெல்லிப் பயணமும், அரசியல் தளத்தில் பல உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. 13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில், தென்னிலங்கையில் உருவாகும் கடுமையான நிலைப்பாடு குறித்து இருவரும் விவாதித்துள்ளார்கள். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக , 13 இல் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்கிற செய்தி பசிலிடம் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கை, இந்தியத் தரப்பிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த விடயத்தில் இந்தியாவானது கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது போலொரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் மற்றும்…
-
- 1 reply
- 397 views
-
-
ரங்கநாதனுக்கு 1 லட்சம் பணம் தேவைப்பட்டது. என்ன செய்யலாம்? அந்தக் காலமாக இருந்தால் ஒவ்வொருவரிடமும் சென்று பணம் கேட்கவேண்டும். இல்லா விட்டால் நகையையோ, நிலத்தையோ, வீட்டையோ அடகு வைத்துப் பணம் பெற்றுக்கொள்ளலாம். இப்பொழுது ஒரு டயல் செய்தால் போதும். வீட்டிற்கே வந்து காசோலை கொடுத்து விட்டுச் செல்கிறார்கள். இந்தப் பணம் கடன். தனிநபர் கடன். திருப்பி வட்டியுடன் செலுத்த வேண்டும். இன்னொரு ரங்கநாதன் இருக்கிறார். ரங்கநாதன் & கம்பெனி. அவருக்கும் பணம் தேவைப்பட்டது. ஆனால் திருப்பிச் செலுத்தும் கடனாக இல்லாமல் திருப்பிச் செலுத்தாத வகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். பணம் என்ன கூரையில் இருந்தா கொட்டும்? ஆனால் ஒரு நிறுவனத்திற்குத் திருப்பிச் செலுத்த அவசியமில்லாத வகையில் பணம…
-
- 1 reply
- 3.4k views
-
-
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக ,திட்டமிடப்பட்ட வகையில் பல்கலைகழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலானது , தொடரும் இனவழிப்பு அவலங்களின் மற்றுமோர் வடிவம், கட ந்த வருடம் அக்டோபர் மாதம் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் பத்திற்கும் மேற்பட்டோரால் தலையில் தாக்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இம்முறையும் இரு வேறு பீடங்களை சேர்ந்த மாணவர் ஒன்றியத் தலைவர்கள் இருவர், ஏனைய ஜந்து மாணவர்களும் கைது செய்யப்பட்டுளார்கள் .இவர்கள் அனைவரும் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளில் முன் நின்று செயற்பட்டிருக்கிறார்கள்.இவர்களின் பெயர் விபரங்கள் பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களோடு இருப்பவர்களாலேயே காவ…
-
- 1 reply
- 982 views
-
-
றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனைத் தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். அவளின் முன்பாகவே ரிஸானாவின் உயிர் பிரிந்தது. மூதூர் றிஷானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. இதுதொடர்பில் சாதக பாதக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. றிஷானாவை மீட்பதில் இலங்கை அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இறுதிக் கட்டத்தில் காத்திரமான பங்களிப்புக்களை அரசு மேற்கொள்ளவில்லை என்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சூழ் நிலையில், இலங்கையின் முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் நடந்து கொண்ட அசிரத்த…
-
- 1 reply
- 725 views
-
-
தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எந்தவொரு தீர்வையும் ஏற்கோம் கடந்த காலத்தைப்போல் ஏமாறவும் மாட்டோம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இன்றைய ஆட்சியாளர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடைய அனுசரணையுடன் பெற்றே தீருவோம். எவ்வகை சூழ்நிலையிலும் கடந்த காலங்கள் போல் நாம் ஏமாறப்போவதுமில்லை. இதேவேளை தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எந்தவொரு அரசியல் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். சமகால அரசியல் போக்கு குறித்தும் அரசியல் தீர்வின் முன்னேற்றம் குறித்தும் பொது மக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் கட்சியின் உ…
-
- 1 reply
- 320 views
-
-
ஆறுமாதத்தில் நடந்த அதிரடி மாற்றம்! இடையில் நடந்தது என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பின் வினோத அணுகுமுறைகள் ஏற்படுத்தும் பாரதூரமான அரசியல் விளைவுகளை மக்களே முகம் கொடுக்க நேர்கிறது.
-
- 1 reply
- 692 views
-
-
-
- 1 reply
- 953 views
-
-
யாழ்ப்பாணம்-துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயர்மாற்றம் தொடர்பான எதுசரி எதுபிழை?
-
- 1 reply
- 614 views
-
-
சாய்ந்தமருது நகர சபை: எதிர்பாராத எதிர்வினை மொஹமட் பாதுஷா ஜனநாயக ரீதியிலான பெரும் போராட்டங்கள், முயற்சிகளுக்குப் பிறகு, சாய்ந்தமருதுக்கான நகர சபைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, அப்பிரதேச மக்கள் கோரிவந்த தனியான உள்ளூராட்சி சபையைத் தருவதாக ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலாகப் பல ஆட்சியாளர்கள் கூறிவந்தாலும், ராஜபக்ஷ ஆட்சியிலேயே காலம் கனிந்திருக்கின்றது என்று, எண்ணிக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத எதிர்வினைகள் தோற்றம்பெற்று மேலெழுந்துள்ளன. கடந்த சில நாள்களாக, இது தொடர்பில் எதிர்பாராத விதமாக மேலெழுந்துள்ள விமர்சனங்கள், எதிர்வினைகள் நல்ல சகுணங்களாகத் தெரிந்திருக்கவில்லை. இவ்வாறிருக்கையில், சிங்கள வாக்குகளையும் இனவாதத்தை…
-
- 1 reply
- 684 views
-
-
மலையக மக்களைத் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்காத முத்தையா முரளிதரனை மையப்படுத்திவரும் தமிழின எதிர்ப்பு அரசியலை முறியடிக்க அருட்தந்தை சக்திவேல் வேண்டுகோள் கொலை அரசின் அரசியலுக்கு பலியாகவேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கோரிக்கை ஒரு விளையாட்டு வீரனாகப் பரிணமித்து தற்போது இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஆட்சிபுரியும் கொலை அரசாங்கம் சார்ந்த அரசியலுக்குத் தானும் பலியாகி தனது தம்பியையும் ராஜபக்சவின் கட்சி அரசியலில் ஈடுபடுத்தியிருப்பவர் தான் முத்தையா முரளிதரன். இவர் ஆட்சியாளர்களின் கைப்பொம்மை. தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் 800 படத்தின் அரசியல் நோக்கம் தமிழ் மக்…
-
- 1 reply
- 556 views
-
-
246 . Views . இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக (அமைச்சரவை) – இருந்தபோது, இராணுவத்திற்கு மிகப்பிடித்தமான நபராக இருந்தார். இராணுவம் இழைக்கும் அத்தனை அநீதிக்கும் தான் பொறுப்பு எடுத்துக் கொள்வது போன்ற உறுதிப்பாட்டை வழங்கி எந்த பாரதூரமான செயலுக்கும் அஞ்ச வேண்டாம் என்று அவர் வழங்கிய அனுமதியே அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இறுதி யுத்தகாலத்தின் போது அவர் இராணுவத்திற்கு வழங்கிய உரையில் குறிப்பிட்ட “தமிழ் ஆண்கள் அனைவரும் கடலுக்கு; தமிழ் பெண்கள் அனைவரும் உங்களுக்கு…” என்ற கூற்று மிகப் பிரபல்யமானதாக இருந்தது. தமிழர்கள் உளவியல் கோட்டாபய ராஜபக்ச மீது அச்சமும், வெறுப்பும் கொண்டிருந்தார்கள். அவருக்கு தமிழர்களின் உயிர் பொருட்டாக ஒருபோதும் இரு…
-
- 1 reply
- 657 views
-
-
விக்னேஸ்வரனின் பின்னால் அணிதிரள கூட்டமைப்பின் கட்சிகள் தயாரா? யதீந்திரா படம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP, Stratfor சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் தொடர்பிலும் பின்னர், அதற்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதுமே மேற்படி சூடான தமிழ் அரசியலுக்குக் காரணம். இவ்வாறான வாதப்பிரதிவாதங்களால் தமிழ் மக்கள் அடையப்போகும் நன்மை என்ன என்பதற்கு …
-
- 1 reply
- 1.6k views
-
-
பேரரசுகள் தேடிவரும் ஒரு நாட்டைவிட்டு, மூளைசாலிகளின் வெளியேறம் தொடர்கிறது! -நிலாந்தன்!- இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும்,நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன கூறியுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியா…
-
- 1 reply
- 833 views
-