அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
பானைக் கரியைக் கறுப்பெனும் முதல்வர் விக்கினேஸ்வரன்! நம்ம மூதாதையர் ஒரு பழமொழி சொல்வர், ”பானைக் கரியைப் பார்த்து சட்டி கறுப்பு எண்டதாம்” என்று. எங்கடை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவின் இந்த வார கேள்வி பதிலைப் பார்த்ததும் எனக்கு சட்டென்று இந்தப் பழமொழிதான் மூளையில் பட்டது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா, ”மாட்டேன், மாட்டேன்”’ என்று கதற, சம்பந்தர் ஐயாவும் சுமந்திரன் ஐயாவும் விடாப்பிடியாய் குறை இழுவையாய் இழுத்துக்கொண்டுவந்து ”ஒபாமாவோடும் விளாடிமிர் புடினோடும் சரிநிகர் சமானமாகக் ஒரே மேசையில் அமரும் தகுதி பெற்றவர் இவரே!” எனத் தமிழ்மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டினர். பல தியாகங்களைச் செய்த மாவை ஐயா, இதிலும் தன்னிலும் மூத்த அரசியல்வா…
-
- 1 reply
- 684 views
-
-
கனடா தேர்தலில் சிதறிக்கப்படும் இலங்கைத் தமிழர் வாக்குக்கள் கனடாவில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற பகுதி ஸ்காபுறோ ஆகும். டொராண்டோ மாநகரத்தின் கிழக்குப் பகுதியான ஸ்காபுறோவில் அதிகளவு இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். ஸ்காபுறோ, மார்க்கம் ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டுமே கனடாவில் வாழ்கின்ற முக்கால்வாசி இலங்கைத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற நாடு கனடா. அதிலும் டொராண்டோ பெரும்பாகத்தில் தான் அதிகம் பேர் வாழ்கின்றார்கள். சுமார் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் பேர் டொராண்டோ பெரும்பாகத்தில் இருக்கின்றார்கள். அதிலும் மிக அதிகமானோர் வாழ்வது ஸ்காபுறோ ரூஜ் றிவர் பகுதியில் தான். கடந்த முறை பா…
-
- 1 reply
- 630 views
-
-
எல்லாவற்றிலும் வல்லவர்களின் அரசியல் என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 15 பெரும் இழுபறிகள், தேர்தல் தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான, ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நீடித்த விசாரணை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் தொடர்பான சர்ச்சைகள் என்பவற்றுக்குப் பிறகு, தேர்தல் ஆணைக்குழு 2020 நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி, புதன்கிழமை நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.இந்தத் தேர்தலில், அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 பேரும் 313 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 3,800 பேரும் என, மொத்தமாக 7,452 பேர், 196 ஆசனங்களுக்காகப் போட்டியிடுகிறார்கள். ஏறத்தாழ ஒரு நாடாளுமன்ற ஆசனத்துக்கு 38 பேர் போட்டியிடுகிறார்கள். பெரும்பான்மை இனத்தின் தேசிய அரசிய…
-
- 1 reply
- 606 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் எதிர்கொண்டுள்ள சவால்கள் உலகத்தில் மிகவும் பலம்வாய்ந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்க வல்லரசின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக்கட்சியின் டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். இவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார். அதாவது முழு உலகையும் வியப்பில் ஆழ்த்திய வண்ணமே டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதுடன் அடுத்த நான்கு வருடங்களுக்கு உலக வல்லரசு நாட்டை ஆளும் சந்தர்ப்பத்தை தனதாக்கிக்கொண்டுள்ளார். இந்தத் தேர்தலில் ஜனநாயகக்…
-
- 1 reply
- 732 views
-
-
மாற்றுத் தலைமைக்கான வாய்ப்புகளைத் தோற்கடிப்பது யார்? கோடைக் காலத்தில் எப்போதாவது ஒருநாள் சில மணித்துளிகள் பெய்யும் சிறுமழையை நம்பி, விவசாயம் செய்ய முடியுமா? அதுவும், வரட்சியின் உச்சத்தில் நிலம் வெடித்து வெம்மையை கக்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், சிறுமழையை நம்பி விவசாயத்துக்கான பெரும் ஏற்பாடுகளைச் செய்யும் தொழிலாளியை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? அந்த மழையின் ஈரம், நிலத்தில் அரையடி இறக்கும் முன்னரே, நிலத்தின் வெம்மையினால் கானலாக மாறி, காணாமற்போய்விடும். இப்படியான நிலையை எந்தவொரு மனிதனும் உணர்ந்து வைத்திருப்பான். அதுவும், வடக்கு- கிழக்கில் அந்த மண்ணோடும் அதன் வாசத்தோடும் வாழும் மக்களிடம், சிறுமழையை மாரி மழைபோல கருத வேண்டும் என்று கோருவதும…
-
- 1 reply
- 371 views
-
-
மோசமானவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பது ஏன்? என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியாக 316,544 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியவர் பிரசன்ன ரணதுங்க. ‘நல்லாட்சி அரசாங்கம்’ அமைந்த 2015 பொதுத் தேர்தலில் கூட, கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளாக 384,448 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தவர் பிரசன்ன ரணதுங்க. அன்று கம்பஹா மாவட்டத்தில் ஆளும் கட்சியாக அமைந்த ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் முதலிடம் பிடித்த ரஞ்சன் ராமநாயக்க பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் 216,463 தான்! இந்தப் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண முதலமைச்சராக இருந்தபோது, வணிகர் ஒருவரை மிரட்டிப…
-
- 1 reply
- 324 views
-
-
புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..? புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் தவிர்க்கப்பட்டிருக்குமா..? சிங்களவரின் படுகொலைகளுக்கு நினைவு தினங்கள் தீர்வு தருமா..? புலிகள் என்றொரு இயக்கம் தோன்றாமலும், போராட்டம் என்ற வடிவம் உருவாகாமலும் இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா..? புதுமாத்தளன் சோகங்களின் இரண்டாவது ஆண்டு நிகழ்வில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1956, 1958, 1978, 1983 என்று சிங்களவர்கள் நடத்திய கலவரங்கள் புலிகள் போராடாமல் இருந்தபோது வந்தவைதான். இதில் கலவரம் என்ற சொல் முக்கியமானது. நிதானமாக இருக்க முடியாத ஓர் இனம் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடும்.. எனவேதான் புலிகள்…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
என்ன செய்யப்போகிறது இந்தியா? பா. செயப்பிரகாசம் ஞாயிறு, 10 மார்ச் 2013 14:56 தயிரையும் தின்னுட்டு இழுகிட்டும் போகுமோ? 2009, மே 18-வரை இலங்கை நடத்திய சாட்சியமற்ற படுகொலைகள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை“ என்ற கதையாக ஒவ்வொன்றாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன. “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்“ எனும் தந்திரவலை விரித்து இராசபக்ஷேக்கள் கட்டு மீறி நடத்திய கொலை வியாபாரம், 2009 மே முடிய அமோக விற்பனையானது. இப்போது விற்பனை அவர்களின் கை மீறிப்போய், மனித உரிமைமீறல், போர்க்குற்றம் என்ற புள்ளிகளையும் தாண்டி இனப்படுகொலை…
-
- 1 reply
- 525 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கு கைகொடுப்பாரா ட்ரம்ப்? அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையின வாதத்தை முன்னிறுத்தி, டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றியை முன்னுதாரணமாகக் கொண்டு, அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்ள மஹிந்த ராஜபக் ஷ தரப்பு தயாராகி வருகின்ற நிலையில், அரசாங்கமோ நேரடியாக டொனால்ட் ட்ரம்புடன் கைகோர்ப்பதற்கான தயார்படுத்தல்களில் இறங்கியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளும் கூட்டம் ஒன்று அண்மையில் காலியில் நடைபெற்ற போது, உரையாற்றியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை விடு…
-
- 1 reply
- 424 views
-
-
இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் : ஒரு மீளாய்வு - மல்லியப்பு சந்தி திலகர் தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைமாற்றத்தளத்தை மீளாய்வு செய்து தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்களை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் ஆரம்பித்தல் வேண்டும். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலத்த போராட்டங்கள் விட்டுக்கொடுப்புகள் இழப்புகளுக்கு மத்தியில் தம்மை ‘மலையக மக்கள்’ எனும் பொது அங்கீகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இலங்கைத்தமிழர்கள் தமது பேராட்ட வியாபகத்தின் ஊடாக சர்தேச ரீதியாக தம்மை இலங்கைத் தமிழர்களாக உறுதிபட வெளிக்கொணர்ந்திருக்கும் நில…
-
- 1 reply
- 1.7k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்த அதிரடிக் கருத்துக்கள் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை தோலுரித்து காட்டியுள்ளார் மனுஸ நாணயகார
-
- 1 reply
- 593 views
-
-
ட்ரம்ப் - கிம் சந்திப்பு வரலாற்று ஏடுகளில் புதியதொரு அத்தியாயம் சில விநாடிகள் நீடித்த கை குலுக்கல், தசாப்த கால வரலாற்றை மாற்றியெழுதும் ஆற்றல் கொண்டதென எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். இந்தக் கைகுலுக்கல் 14 செக்கன்கள் நீடித்தது. கைலாகு கொடுத்தவரில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். மற்றவர் வடகொரியத் தலைவர் கிம் யொங் உன். கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரின் செந்தோஸா தீவிலுள்ள கபெல்லா ஹோட்டலில் நிகழ்ந்த தருணம். அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையிலான ஆறரை தசாப்த கால வரலாற்றை மாற்றியெழுதியது. இவ்விரு நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்த முதல் சந்தர்ப்பம் என்…
-
- 1 reply
- 411 views
-
-
புலிகளும் எலிகளும் May 15, 2024 — கருணாகரன் — ஈழத் தமிழர்களின் “விடுதலைக்கான அரசியல்” இப்பொழுது வெறுமனே “தேர்தலுக்கான அரசியலாக” ச் சுருங்கி விட்டது. அப்படிச் சுருங்கியதன் விளைவுகளே இப்போது நடக்கும் தடுமாற்றங்களும் குத்துக் கரணங்களுமாகும். தேர்தலுக்கான அரசியல் என்பது தனியே தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாகக் கொண்டதாகத் தமிழ்த் தரப்பினரால் ஆக்கப்பட்டு விட்டது. இதை தமிழ் ஊடகவியலாளர்களும் அரசியற் பத்தியாளர்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரித்துச் செயற்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்தத் தரப்புகளும் தேர்தல் அரசியலில்தான் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பையும் பேணிக் கொள்கின்றன. (இதைப்பற்றி அடுத்த கட்டுரையொன்றில் விரிவாகப் பார்க்கலா…
-
- 1 reply
- 682 views
-
-
வெள்ளை வேன் சுமந்து சென்ற ப்ரியாவின் எதிர்பார்ப்பு : ப்ரியந்த லியனகே அவர் பூபாலசிங்கம் உதயகுமார். அவரது மனைவி ப்ரியா உதயகுமார். ‘தாய்’ எனும் கிரீடத்துக்கு உரிமை கொண்டாட அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தன. உதயகுமாரின் சாயலையொத்த அழகிய பிஞ்சுக் குழந்தையொன்றை உதயகுமாருக்குப் பரிசளிக்க அவர் கனவு கண்டார். அக் குழந்தையினதும் ப்ரியாவினதும் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே உதயகுமாரின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர்கள் நிறைய கனவுகள் கண்டார்கள். அவர்களது அழகிய அக் கனவுகள் மேல் ஷெல் மழை பொழிகையில் அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோட வேண்டியிருந்தது. எனினும், தமது பாதுகாப்புக்காகத் தப்பியோடுவதைக் கூட அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ஏனெனில், விடுதலைப…
-
- 1 reply
- 705 views
-
-
வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 12ம் திகதி) நடைபெறவிருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதன்மைக் கட்சிகளில் ஒன்றான கொன்சவேர்ட்டிவ் (பழமைவாதக்) கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இன்னமும் தெளிவாகச் சொல்வதானால் தமிழீழக் கோரிக்கையை பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான இக்கட்சி ஆதரிக்கிறது என்பதே இத்தகவல். இது பற்றி குழப்பமான தகவல்கள் வெளியாகிவருவதனால் அதனைத் தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. கடந்த மாத இறுதியில் கொன்சவேர்ட்டிவ் கட்சியினால் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் (https://assets-global.website-files.com/5da42e2cae7ebd3f8bde353c/5dda9249…
-
- 1 reply
- 660 views
-
-
ஆர்ப்பாட்ட இடமும் புலிகேசிச் சிந்தனைகளும் என்.கே. அஷோக்பரன் இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி என்றொரு, கற்பனை வரலாற்று, அரசியல் நையாண்டித் திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதில், மக்கள் கூட்டங்களிடையே தினம் தினம் நடக்கும் ஜாதிச்சண்டைகளுக்குத் தீர்வு தர விளையும் மன்னர் புலிகேசி, ‘வீணாக வீதிகளில் சண்டையிட்டு அரசாங்கச் சொத்துகளுக்குச் சேதத்தை விளைவிப்பதை விட, ஒரு மைதானம் அமைத்து, அதில் சண்டையிட்டு, அதற்கொரு வரியை விதித்தால், இந்த நாட்டுக்கு நிறைய வருமானம் வரும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம்’ என்று காரணம் சொல்லி, ஜாதிப் பிரிவினைகளால் உண்டாகும் சண்டைகள் இடம்பெறுவதற்கென்று ‘ஜாதிச்சண்டை மைதானம்’ என்று ஒன்றை அமைத்து, அத…
-
- 1 reply
- 541 views
-
-
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமாயிருந்த சுவிஸ் போதகர், நலமடைந்திருப்பதாகவம் கர்த்தரின் கிருபையினால்தான் தான் நலம் பெற்றிருப்பதாகவும் அண்மையில் அவர் பேசிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளன. இதில் இரண்டு நியாயங்களை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒன்று தனக்கு மருத்துவம் செய்த வைத்தியர்களுக்குகூட நன்றி சொல்ல மறுக்கின்ற கண்மூடித்தனமான மதவாதப்போக்கு. இரண்டாவது யாழ்ப்பாணத்தில் கொரோனாவை பரப்பி முடக்கியமை பற்றிய குற்றவுணர்வின்மை. கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் கருதப்பட்டது. இந்த நிலமையில் உள்ள இலங்கையின் ஐந்து மாவட்டங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற மாவட்டங்களுடன் யாழ்ப்பாணம…
-
- 1 reply
- 726 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசிற்கு ஏற்ற முறையில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை விரும்பும் இந்தியா - கொழும்புப் பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் பூச்சிய வரைபு தமிழர்கள் ஒற்றையாட்சியை ஏற்பதற்கான பரிந்துரைகள் காலிமுகத் திடலில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களில் சிங்கள மக்களுடன் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பங்குபற்றியதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் மாற்றங்கள் ஏற்படுமென ஜெனீவா மனித உரிமைச் சபையின் பூச்சிய வரைபில் (zero draft) நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இக் கருத்தின் ஊடாக, ஈழத்தமிழர்களுடைய பிரதான அரசியல் நியாயப்பாடுகள் புறம் தள்ளப்பட்டுள்ளன. ஆணையாளர் மிச்…
-
- 1 reply
- 251 views
-
-
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அடுத்த வார இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம், 31ம் திகதி வரையில் ஒரு வாரகாலம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ஐ,நா தகவல்கள் வெளிவந்தபோதும், தனது பயணத்தை அவர் முற்கூட்டியே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வார இறுதியில் அவர் இலங்கை வரவுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளியாகும் சிறீலங்கா அரச சார்பு ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேவர்’ தெரிவித்திருக்கின்றது. எனினும், இந்த வார இறுதியில் அவர் இலங்கை செல்வது தொடர்பாக ஐ.நா தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை செல்லும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை …
-
- 1 reply
- 764 views
-
-
-
- 1 reply
- 806 views
-
-
கேள்விக்குறியாகியுள்ள மக்களின் பாதுகாப்பு -என்.கண்ணன் ஊடகங்கள் கூறுவது போன்று வடக்கில் மோசமான நிலை இல்லை, என்ற அவரது கருத்து அபத்தமானது. ஏனென்றால், ஊடகங்கள் நடக்காத ஒன்றைச் செய்தியாக்கவில்லை. நடந்த சம்பவங்களை செய்தியாக்குகின்ற போது, ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்கள் இடம்பெறும் போது அல்லது அடுத்தடுத்து இத்தகைய சம்பவங்கள் தொடரும் போது, அதனை பாரதூரமாகவே மக்கள் பார்ப்பார்கள் என்பது வெளிப்படை. ஓரிரு சம்பவங்களை வைத்துக் கொண்டு ஊடகங்களால் ஒன்றையும் ஊதிப் பெருப்பித்து விட முடியாது. அதேவேளை, தொடர்ச்சியான சம்பவங்கள் நடக்கும் போது, அதனை ஒரு சமூகப் பிரச்சினையாக வெள…
-
- 1 reply
- 417 views
-
-
நடந்து முடிந்த நாட்டின் 7வது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் பல செய்திகளை உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளது. நாட்டின் இனமத பேதங்கள் வேண்டாம், நீதியான சுதந்திரமான நல்லாட்சி வேண்டும், சிறுபான்மையினரை ஒதுக்கக்கூடாது, உண்மையான ஜனநாயகம் வேண்டும் போன்ற பல செய்திகளை உரத்துச் சொல்லியுள்ளது. நிற்க இத்தேர்தலில் தமிழர்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகம் வாழும் வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் மேலும் பல செய்திகளைச் சொல்லியுள்ளது. இம்முறை தமிழ்மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தமையே இச்செய்திக்குக் காரணமாகும். 2005ல் மஹிந்த வெல்லவும் 2015ல் மஹிந்த தோற்கவும் காரணம் வடக்கு கிழக்கு மாகாணமே. அதிலும் தமிழ் மக்களே எனலாம். ஆம் 2005ல் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாமென விடுதலைப் புலிகள் கூறியமையினால் மஹிந…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜனாதிபதி தேர்தலை, தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் – ஏன் பயன்படுத்த வேண்டும்? - யதீந்திரா அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்திற்கு பின்னர், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். யார் பிரதான வேட்பாளர்கள் என்னும் தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. எனினும் அவற்றை ஊகிப்பது கடினமான காரியமல்ல. ரணில் விக்கிரமசிங்கவே பிரதான வேட்பாளராக இருப்பார். அவரை எதிர்த்து எவர் நிறுத்தப்படுவார் என்பதை இப்போதைக்கு ஊகிப்பது கடினம். ஒன்றில் ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகளை தோற்கடிக்க வேண்டுமென்னும் வியூகமொன்று, உள்ளுக்குள்ளும் வெளியிலும் வகுக்கப்படுமாக இருந்தால் மட்டும்தான், ஒரு பலமான பொது வேட்பாளரை நாம் காண முடியும். இல்லாவிட்டால்…
-
- 1 reply
- 734 views
-
-
சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் ; இரண்டு பிரேத பரிசோதனைகள் - நிலாந்தன் சாந்தன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர். பொதுவாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஆயுள் தண்டனை எனப்படுவது விடுமுறை நாட்களைக் கழித்து பார்த்தால் 15 ஆண்டுகள். சிறை, சிறப்பு முகாம் போன்ற இடங்களில் சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தது 33 ஆண்டுகள். அப்படிப்பார்த்தால் அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை முடித்துவிட்டார். அதற்கு பின்னரும் அவர் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சட்டச் செயற்பாட்டாளர்கள் தமிழக அரசைக் குற்றஞ்சாட்டுகின்றார்கள். இந்த விடயத்தில் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. இந்திய மண்ணில் பாரதூரமான குற்றச் செயல்களுக்…
-
-
- 1 reply
- 471 views
-
-
அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை – நிலாந்தன். adminOctober 20, 2024 வியட்நாமின் தந்தை என்று அழைக்கப்படும் கோசிமினின் வாக்கியம் ஒன்று உண்டு”மக்களிடம் செல்லுங்கள். மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள். மக்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்று. மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தயார்? கடந்த பல தசாப்தங்களில் தமிழ்கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட விடயங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன? அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை? எல்லாப் பழியையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மீது சுமத்திவிட்டு தமிழ…
-
- 1 reply
- 340 views
-